30.01.25

இன்றைய சிந்தனைக்கு......

நேர்மை மற்றும் தைரியம் என்ற நற்பண்புகள் வெற்றியைக் கொண்டு வருகின்றன.

சிந்திக்க வேண்டிய கருத்து: தைரியமுள்ள ஒருவர் சவால்களால் தடுக்கபடுவதில்லை, ஆனால் வெற்றியை நோக்கி நகர்ந்து செல்கின்றார். தைரியத்துடன் நேர்மை என்னும் நற்பண்பு இணைந்திருக்கும்போது ஒருவரால் சீரான, நேர்மையான மற்றும் உண்மையான முயற்சியை மேற்கொள்ள முடிகின்றது. எனவே வெற்றி என்பது முறையான முயற்சிகளினால் வருவதோடு அத்தகைய நபரில் பணிவுதன்மையும் வெளிப்படையாக இருக்கிறது.

அனுபவம்: நான் தைரியமாக இருக்கும் அதே நேரத்தில் என் வெற்றிக்காக என் முயற்சிகளில் நான் நேர்மையாக இருக்கும்போது நான் ஒருபொழுதும் ஆணவம் கொள்ள முடியாது. நான் அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் நல்ல விருப்பத்தை பெற முடிவதோடு  குறிப்பாக கடவுளின் பாதுகாப்பு மற்றும் உதவியும் பெறுகின்றேன். நான் செய்கின்ற அனைத்தும் என்னை வெற்றியை நோக்கி இட்டுசெல்கின்றது.