30.06.24

இன்றைய சிந்தனைக்கு

நம்பிக்கை:

கவலையிலிருந்து விடுபட்டு இருப்பது, என்பது சரியான தீர்வுகளை காண்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் ஒரு பிரச்சனையை சந்திக்கும்போது, கவலைப்படுவது மிகவும் இயற்கையான ஒன்று. ஆனால், இக்கவலையானது, அதிக அளவிலான எதிர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது. நம்மால் தீர்வும் காண முடியவில்லை, அதே சமயம் கவலைப்படுவதையும் நிறுத்த முடியவில்லை. எதிர்மறை எண்ணங்களினால் நிறைந்திருக்கும், கவலையான மனதால், எப்பொழுதும் சரியான தீர்வை கண்டுபிடிக்க முடியாது.

செயல்முறை:

தீர்வை கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி, மனதை கவலையிலிருந்து விடுபட்டு வைத்திருப்பதாகும். இதை செய்வதற்கு, என்னிடம் ஒரு தீர்வு உள்ளது என்றும் அதை நான் கண்டுபிடிப்பேன் என்றும் நம்பிக்கை கொள்வது அவசியம்.