30.07.24

இன்றைய சிந்தனைக்கு

நம்பிக்கை

நம்பிக்கை இருக்குமிடத்தில், வெற்றி நிச்சயம்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம் மீது நமக்கு நம்பிக்கை இல்லாதபோது, நம் மீது, மற்றவர்கள் மீது அல்லது சூழ்நிலைகள் மீதுசந்தேகங்கள் அல்லது கேள்விகள் நம்மை தாக்குகின்றன. இந்த சந்தேகம், நம்முடைய எண்ணங்கள் என்ற மிக முக்கியமான வளத்தை இழக்க வைக்கிறது. நம்மால் நன்றாக சிந்தித்து சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. மேலும் நாம் எதிர்மறையான உணர்வுகளை வளர்த்துக்கொள்கின்றோம்.

செயல்முறை:

எனக்கு நம்பிக்கை இருக்கும்போது, என்னை நான் அதிர்ஷ்டசாலியாக பார்க்கின்றேன். அதனால், நான் மற்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பை பெறுகின்றேன். என்னால் வாழ்க்கையில் எளிமையான விஷயங்களை பார்த்து பாராட்ட முடிவதால், இது மேற்கொண்டு பயணத்தை தொடர எனக்கு தைரியம் கொடுக்கிறது. அதன்பிறகு, அங்கு எந்த கவலையும் இல்லாததால், என்னை சுற்றி மாறுகின்ற எதனாலும் நான் பாதிப்படைவதில்லை. பிறகு, என்னுடைய எண்ணங்கள் நேர்மறையாக இருக்கின்றன.