31.07.24

இன்றைய சிந்தனைக்கு

பகிர்ந்துகொள்வது

பகிர்ந்து கொள்வதற்கான உள்ளார்ந்த உணர்வு என்பது  தொடர்ந்து சந்தோஷத்துடன் இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலும், நாம்  நம்முடைய தேவைகள் மற்றும் ஆசைகளில் சிக்கிக்கொள்கின்றோம். நாம் சுயநலமிக்கவர்களாக ஆகி, ஸ்தூல பொருள்களின் மீது கவனம் செலுத்துபவர்களாக ஆகி விடுகின்றோம். நம்மிடம் இருப்பது அதிகரிப்பதற்கு ஏற்ப, நம்முடைய தேவைகள் அதிகரிக்கின்றன. நம்மிடம் இருப்பதை நாம் பாராட்டுவதில்லை, மேலும் நம்முடைய எதிர்ப்பார்புகள் பூர்த்தியாகாதபோது, நாம் ஏமாற்றமடைகின்றோம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதால் ஏற்படும் சந்தோஷத்தை நாம் மறந்துவிடுகின்றோம்.

செயல்முறை:

என்னால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடிய வளங்கள் அதிகமாக இருக்கின்றன. கொடுப்பதனால் ஏற்படும் சந்தோஷத்தை நான் அதிகமாக உணரும்போது, என்னால் என்னுடைய ஸ்தூல பொருள்கள் மற்றும் உள்ளார்ந்த வளங்களை அதிகமாக பகிர்ந்துகொள்ள முடிகின்றது. அதன்பின், எனக்குள் இருக்கும் புதுமையான பொக்கிஷங்களை கண்டுபிடித்து, அவற்றை நான் எனக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் பயன்படுத்த முடியும். இது தொடர்ந்து எனக்கு திருப்தியையும், மற்றவர்களிடமிருந்து நல்லாசிகளையும் பெற்றுக் கொடுக்கிறது.