31.08.25
இன்றைய சிந்தனைக்கு......
தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது:
கற்றுக்கொள்வது என்றால் நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
பெரும்பாலும், தினந்தோறும் நாம் இருக்கும் சூழ்நிலைகளில் நாம் செயல்படுத்த வேண்டிய முக்கியமான பாடங்கள் இருக்கின்றன. ஆனால் சில சமயங்களில், நாம் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதை காண்கின்றோம். நாம் புரிந்துகொண்ட போதும், அந்த அனுபவத்திலிருந்து உண்மையான மாற்றத்தை நம்மால் கொண்டுவர இயலவில்லை.
செயல்முறை:
நான் தவற்றை உணர்ந்த உடனே, அதை பற்றி சில நிமிடங்கள் சிந்தித்து பார்ப்பது அவசியமாகும். இன்று, அண்மையில் நடந்த சூழ்நிலைகளை பற்றி சிந்தித்து பார்ப்பதோடு, ஏன் அவை நடந்தது என்றும், அவற்றிலிருந்து நான் என்ன புரிந்துகொண்டேன் என்றும், எதிர்காலத்தில் எது என்னை மீண்டும் அத்தவற்றை செய்வதிலிருந்து தடுக்கும் என்பதை பற்றியும் எனக்குள் நான் கேட்பேன். இந்த ஆய்வு உண்மையான மாற்றத்தை கொண்டுவருவதற்கு எனக்கு உதவி செய்யும்.