01.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே ஞானமழை பொழிந்து அனைத்தையும் பசுமை ஆக்குபவர்கள். நீங்கள் இந்த ஞானத்தைக் கிரகித்து, மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டவேண்டும்.
கேள்வி:
மழையைப் பொழியாத முகில்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?பதில்:
அவர்கள் சோம்பேறி முகில்கள் ஆவார்கள். மழையைப் பொழிபவர்களே சுறுசுறுப்பான முகில்களாவர். அவர்கள் ஞானத்தைக் கிரகித்திருந்தால் அவர்களால் அதை ஏனையோர்மீது பொழியாமல் இருக்கமுடியாது. ஞானத்தைக் கிரகிக்காது, மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டாதவர்கள் ஒட்டிய வயிற்றைக் கொண்டவர்கள் போன்றவர்கள். அவர்கள் ஏழைகள், அவர்கள் பிரஜைகளாகவே ஆகுவார்கள்.கேள்வி:
இந்த நினைவு யாத்திரையில் நீங்கள் செய்யவேண்டிய பிரதான முயற்சி என்ன?பதில்:
உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையை புள்ளி வடிவிலே நினைவு செய்வதாகும். தந்தையை மிகச்சரியாக அவராகவும், அவருடைய உண்மையான வடிவத்திலும் நினைவு செய்வதற்கே முயற்சி தேவை.பாடல்:
அன்புக்குரியவருடன் இருப்பவர்கள் மீதே, ஞானமழை பொழிகின்றது…ஓம் சாந்தி.
முகில்கள் கடலின் மேலாகவே இருக்கின்றன, முகில்களின் தந்தை கடல் ஆவார். கடலுடன் இருக்கின்ற முகில்களுக்கு மாத்திரமே மழை பொழியப்படுகின்றது. அந்த முகில்கள் தங்களை நீரினால் நிரப்பி பின்னர் பொழிகின்றன. நீங்களும் உங்களை நிரப்பிக்கொள்வதற்காகவே கடலிடம் வந்துள்ளீர்கள். கடலின் குழந்தைகளாகிய நீங்கள் எப்படியும் முகில்களே, இதனாலேயே உங்களால் இந்த இனிய நீரை ஈர்த்துக்கொள்ள முடிகிறது. பலவகையான முகில்கள் இருக்கின்றன. சில முகில்கள் மிக அதிகமாக மழை பொழிந்து, வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன, அதேநேரம் சில முகில்கள் மிக அரிதாகவே பொழிகின்றன. நீங்களும் வரிசைக்கிரமம் ஆனவர்களே. மிக நன்றாகப் பொழிபவர்கள் நினைவு கூரப்படுகின்றனர். பெருமளவு மழை பொழியும்பொழுது, மக்கள் சந்தோஷப்படுகின்றனர். இங்கும் பெருமளவு பொழிபவர்கள் புகழப்படுகின்றார்கள். ஞானமழை பொழியாதவர்கள், சோம்பேறி இதயம் உடையவர்கள் ஆகுகின்றார்கள். அவர்களால் தங்களின் வயிற்றை நிரப்ப முடிவதில்லை. அவர்களால் இந்த ஞானத்தை நன்றாகக் கிரகிக்க முடியாததால் அவர்களுடைய வயிறு ஒட்டிப் போய்விடுகிறது. பஞ்சம் ஏற்படும்போது, மக்களின் வயிறு ஒட்டிப்போகும். இங்கும்கூட, நீங்கள் இந்த ஞானத்தைக் கிரகித்து, அதை மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டாதுவிடின், உங்களுடைய வயிறு ஒட்டிப்போய்விடும். இப்பொழுது பெருமளவு ஞானமழை பொழிபவர்கள் அரசன், அரசி ஆகுவார்கள், மற்றவர்கள் ஏழைகள் ஆகுவர். ஏழைகளின் வயிறு ஒட்டிப்போகும். ஆகையினால் குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகிக்க வேண்டும். ஆத்மா, பரமாத்மாவைப் பற்றிய ஞானம் மிக இலகுவானது! முன்னர் உங்களிடம் ஆத்மா, பரமாத்மா பற்றிய ஞானம் இருக்கவில்லை. எனவே உங்கள் வயிறு ஒட்டியிருந்தது என நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மா, பரமாத்மா பற்றியதே பிரதான விடயமாகும். ஆத்மா என்றால் என்ன என்று மக்கள் அறியமாட்டார்கள். எனவே அவர்கள் பரமாத்மாவைப் பற்றி எவ்வாறு அறிவார்கள்? பல கல்விமான்களும் பண்டிதர்களும் இருந்தபோதிலும், அவர்கள் ஆத்மாவைப் பற்றி அறியமாட்டார்கள். மறுபடியும் தொடர்கின்ற, 84 பிறவிகளின் அழியாத பாகத்தால் நிரப்பப்பட்ட அழியாத ஆத்மாக்கள் நீங்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், எனவே அவர்களுடைய பாகமும் அழிவற்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறு சகல பாகங்களையும் நடிக்கின்றீர்கள் என எவருமே அறியமாட்டார்கள். ஆத்மாவே பரமாத்மா என்று மக்கள் இயல்பாகவே கூறுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைத்து ஞானத்தையும் கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் இந்த நாடகத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்று கூறுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது அனைத்து ஞானத்தையும் பெற்றுள்ளீர்கள். தந்தையினால் உருவாக்கப்பட்ட ஞான யாகத்தில் இப் பழைய உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்பட இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: உங்கள் சொந்த சரீரம் உட்பட அனைத்தையும் மறந்துவிடுங்கள். உங்களை ஆத்மாவாகக் கருதுங்கள். தந்தையையும், உங்கள் இனிய வீடான அமைதி தாமத்தையும் நினைவு செய்யுங்கள். இது துன்ப உலகமாகும். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக உங்களால் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இப்பொழுது ஞானத்தால் நிறைந்துள்ளீர்கள். ஆனால் நினைவில் இருப்பதிலேயே உங்கள் முயற்சி தங்கியுள்ளது. பல பிறவிகளின் சரீர உணர்வை முடித்து, ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு பெருமளவு முயற்சி தேவை. இதைப்பற்றிப் பேசுவது இலகுவாக இருப்பினும், உங்களை ஆத்மாவாகக் கருதி புள்ளி வடிவமாகத் தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி தேவை. தந்தை கூறுகிறார்: நான் யார், எப்படிப்பட்டவர் என அரிதாகவே எவரும் நினைவு செய்கின்றார்கள். தந்தை எவ்வாறோ அவரது குழந்தைகளும் அவ்வாறேயாவர். நீங்கள் உங்களை உள்ளவாறே அறிந்து கொண்டால், தந்தையையும் அவராகவே அறிந்து கொள்வீர்கள். ஒரு தந்தை மாத்திரமே கற்பிக்கின்றார், ஆனால் பலர் கற்கின்றீர்கள் என நீங்கள் அறிவீர்கள். தந்தை எவ்வாறு இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். எவ்வாறாயினும், அந்தப் புராணங்கள் போன்றவை பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள் ஆகும். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே நாங்கள் இதைக் கூறவேண்டியுள்ளது, ஆனால் இங்கே எதையும் வெறுப்பதென்ற கேள்வியில்லை. பிரம்மாவின் பகலும், இரவும் புராணங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் மக்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. பகலும், இரவும் அரை, அரைவாசியாக உள்ளன. இது ஏணிப்படத்தில் மிக இலகுவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் மிகவும் சக்திவாய்ந்தவர், அவர் வேண்டியதை அவரால் செய்யமுடியும் என்று மக்கள் நம்புகிறார்கள், ஆனால் தந்தை கூறுகிறார்: நானும் இந்த நாடக பந்தனத்தில் கட்டுண்டுள்ளேன். பாரதம் தொடர்ந்தும் பல கஷ்டங்களைக் கொண்டிருந்தது. எனவே நான் இங்கே மீண்டும், மீண்டும் வரமுடியுமா? எனது பாகத்திற்கும் ஓர் எல்லையுண்டு. முழுமையான துன்பம் இருக்கும்போது மாத்திரமே எனது சொந்த நேரத்திற்கேற்ப நான் வருகிறேன். இதில் ஒரு செக்கன்கூட வித்தியாசம் இருக்கமுடியாது. ஒவ்வொருவரின் பாகமும் நாடகத்தில் மிகச்சரியாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது அதியுயர்ந்த தந்தையின் மறு அவதாரமாகும். பின்னர் குறைந்த சக்தியுடையவர்கள் வரிசைக்கிரமமாக தொடர்ந்து கீழே வருவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள், அதன் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அந்த சக்தியின் முழு வலிமையையும் பெறுகின்றீர்கள். நீங்கள் முயற்சி செய்வதன் மூலம், தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகின்றீர்கள். இது மற்றவர்களின் பாகத்தில் இல்லை. பிரதான விடயம் நாடகமாகும். நீங்கள் இப்பொழுது பெறுபவை நாடகத்தைப் பற்றிய ஞானமாகும். மற்றையவை அனைத்தும் ஸ்தூலமானவை, ஏனெனில் நீங்கள் அவை அனைத்தையும் உங்கள் பௌதீகக் கண்களால் பார்க்கமுடியும். பாபாவே உலகின் அதிசயம் ஆவார், அவர் வைகுந்தம் என்று அழைக்கப்படுகின்ற சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அவரைப் பற்றி அதிக புகழ்ச்சி உள்ளது. தந்தையையும் அவரது படைப்பையும் பற்றி அதிக புகழ்ச்சி உள்ளது. கடவுளே அதி மேலானவர். தந்தை எவ்வாறு மேலான சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார் என எவருமே அறியமாட்டார்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதை வரிசைக்கிரமமாகப் புரிந்துகொண்டு, நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப அந்தஸ்தைக் கோரிக் கொள்கின்றீர்கள். நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், நாடகத்திற்கேற்பவே அதைச் செய்கின்றீர்கள். முயற்சி செய்யாமல் நீங்கள் எதையும் பெறமுடியாது. நீங்கள் செயல்கள் செய்யாது ஒரு கணமேனும் இருக்கமுடியாது. ஹத்தயோகிகள் சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சியைச் செய்கின்றார்கள். அது அவர்கள் இறந்துவிட்டது போன்றிருக்கும். அவர்கள் தமது குகைகளில், அவர்களின் மீது மண் படியத்தக்கதாக அப்படியே இருப்பார்கள். அவற்றின் மீது தண்ணீர் விழும்போது, புற்கள் வளர ஆரம்பிக்கும். ஆனால் அதில் என்ன நன்மை உள்ளது? எத்தனை நாட்களுக்குத்தான் அவர்களால் அப்படி இருக்கமுடியும்? அவர்கள் நிச்சயமாகச் செயல்கள் செய்தாக வேண்டும். எவருமே செயல்களைத் துறந்தவர்கள் ஆகமுடியாது. அவர்கள் தமக்கு உணவு போன்றவற்றைத் தயாரிக்காததனால் தாங்கள் செயல்களைத் துறந்தவர்கள் என்று கூறுகின்றனர். இதுவும்கூட நாடகத்தில் அவர்களின் பாகமாகும். சந்நியாசப் பாதைக்கு உரியவர்கள் இருந்திருக்காவிடின், பாரதத்தின் நிலைமை என்னவாகியிருக்கும்? பாரதம் முதற்தரமான தூய்மையானதாக இருந்தது. தந்தை அரைக் கல்பத்திற்கு நீடிக்கக்கூடிய தூய்மையை முதலில் உருவாக்குகின்றார். சத்திய யுகத்தில் நிச்சயமாக ஒரு தர்மமும் ஓர் இராச்சியமும் இருந்தன. அந்த தேவதர்மம் இப்பொழுது மீண்டும் ஒரு தடவை ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் மக்களை விழித்தெழச் செய்யக்கூடிய நல்ல சுலோகங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்: வந்து, உங்களுடைய தேவ இராச்சிய பாக்கியத்தை மீண்டும் கோரிக் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் இதை மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் “அவலட்சணமானவரும், அழகானவரும்” என்று கூறப்படுகின்றார் என்றும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இந்நாட்களில் பலருக்கு அவ்வாறான பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணருடன் போட்டியிடுகிறார்கள். எவ்வாறு தூய்மையற்ற அரசர்கள், தூய அரசர்களின் சிலைகளின் முன்னால் சென்று தலை வணங்குகிறார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்களே பின்னர் பூஜிப்பவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இப்பொழுது முழுக் கல்பமுமே உங்கள் புத்தியில் உள்ளது. இந்த அளவாவது நீங்கள் நினைவு செய்தால், உங்கள் ஸ்திதி மிக நன்றாக இருக்கும். எவ்வாறாயினும், மாயை உங்களை நினைவு செய்ய அனுமதிப்பதில்லை. அவள் உங்களை மறக்கச் செய்கின்றாள். உங்களுடைய ஸ்திதி சதா மலர்ச்சியாக இருந்தால், நீங்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள். இலக்ஷ்மி, நாராயணன் படத்தைப் பார்க்கும்பொழுது மக்கள் பெருமளவு சந்தோஷம் அடைகின்றார்கள். அவர்கள் ராதை, ஸ்ரீ கிருஷ்ணரின் படத்தையோ அல்லது ஸ்ரீ ராமர் போன்றவர்களின் படங்களையோ பார்க்கும்போது அந்தளவு சந்தோஷம் அடைவதில்லை. ஏனெனில் சமய நூல்களிலே ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி பல குழப்பமான விடயங்களை எழுதியுள்ளார்கள். இந்த பாபாவே ஸ்ரீ நாராயணன் ஆகுகின்றார். இலக்ஷ்மி, நாராயணன் படங்களைப் பார்க்கும்பொழுது பாபா பெருமளவு சந்தோஷம் அடைவார். நீங்கள் சென்று இளவரசர் ஆகுவதற்கு முன்னர் எவ்வளவு காலம் இந்தப் பழைய சரீரத்தில் இருப்பீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே உங்களின் இலக்கும், இலட்சியமுமாகும். நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள். உங்களுக்குள்ளே சந்தோஷம் பொங்கியெழ வேண்டும். எந்தளவிற்கு நீங்கள் கற்கின்றீர்களோ, அதற்கேற்ப உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக் கொள்வீர்கள். நீங்கள் கற்காவிட்டால் என்ன அந்தஸ்தைக் கோரிக் கொள்வீர்கள்? உலகச் சக்கரவர்த்தியின் அந்தஸ்தையும், செல்வந்தப் பிரஜைகளின் அந்தஸ்தையும், வேலைக்காரர்களின் அந்தஸ்தையும பாருங்கள். ஒரு பாடம் மாத்திரமே இருக்கின்றது: அது மன்மனாபவ, மதியாஜிபவ ஆகும். அது அல்பாவும் பீற்றாவும், ஞானமும் யோகமும் ஆகும். இந்த பாபா பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருந்தார். அவர் அல்லாவைக் கண்டதால் அனைத்தையும் கொடுத்துவிட்டார். அவர் அவ்வாறான பெரிய அதிர்ஷ்டலாபச் சீட்டை வென்றார். அவருக்கு வேறு என்ன தேவை? எனவே குழந்தைகளாகிய நீங்களும் ஏன் உள்ளார்ந்தமாக இந்த சந்தோஷத்தைக் கொண்டிருக்கக் கூடாது? இதனாலேயே தந்தை கூறுகிறார்: அவ்வாறான ஒளிஉட்புகவிடும் படங்களை ஒவ்வொருவருக்காவும் உருவாக்குங்கள். அவற்றைப் பார்ப்பதன் மூலம் குழந்தைகள் சந்தோஷம் அடைவார்கள். சிவபாபா இந்த ஆஸ்தியை பிரம்மா மூலம் எங்களுக்குக் கொடுக்கின்றார். மனிதர்கள் எதனையும் அறியமாட்டார்கள். அவர்கள் முற்றிலும் சீரழிந்த புத்தியைக் கொண்டுள்ளனர். நீங்கள் இப்போது சீரழிந்த புத்தியைக் கொண்டவர்களிலிருந்து தூய, சுத்தமான புத்தியைக் கொண்டவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் வேறு எதையுமே கற்கவேண்டிய அவசியமில்லாது, அனைத்தையுமே அறிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இக்கல்வியின் மூலம் உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இதனாலேயே தந்தை ஞானம் நிறைந்தவர் எனக் கூறப்படுகின்றார். ஒவ்வொருவரின் இதயத்திலும் இருப்பதை அவர் அறிவார் என மக்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும் தந்தை ஞானத்தைக் கொடுக்கின்றார். ஒவ்வொருவரும் எவ்வளவு கற்கின்றார்கள் என ஓர் ஆசிரியரால் புரிந்துகொள்ள முடியும். அவர் முழுநாளும் ஒவ்வொருவரின் புத்தியிலும் என்ன இருக்கின்றது என்று அவதானிப்பதில்லை. இந்த ஞானம் அற்புதமானது! தந்தை ஞானக்கடல் என்றும், அமைதிக்கடல் என்றும், சந்தோஷக்கடல் என்றும், அழைக்கப்படுகின்றார். இப்பொழுது நீங்கள் மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பட்டங்களை அங்கே கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாகவும், 16 கலைகள் நிறைந்தவர்களாகவும், அனைத்து தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்களாகவும் ஆகுவீர்கள். இதுவே மனிதரின் அதியுயர்ந்த நிலையாகும். தற்பொழுது இறை அந்தஸ்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இதைப் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்கு அதை விளங்கப்படுத்த வேண்டும். இலக்ஷ்மி, நாராயணன் படத்தைப் பார்க்கும்போது நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்யவேண்டும். இப்பொழுது நாங்கள் அவர்களைப் போன்று உலக அதிபதிகள் ஆகுகின்றோம். ஞானத்தின் மூலமே நீங்கள் அனைத்து தெய்வீகக் குணங்களையும் பெறுகின்றீர்கள். உங்களுடைய இலக்கையும், குறிக்கோளையும் பாhக்கும்போது நீங்கள் புத்துணர்ச்சி அடைகின்றீர்கள். ஆகையினால் தந்தை கூறுகிறார்: ஒவ்வொருவரும் இலக்ஷ்மி, நாராயணன் படத்தை வைத்திருக்க வேண்டும். இந்தப் படம் உங்கள் இதயத்தில் அன்பை அதிகரிக்கும். நீங்கள் மரண பூமியில் உங்களுடைய இறுதிப் பிறவியில் இருக்கின்றீர்கள் என்றும், அமரத்துவ பூமியில் நீங்கள் அவர்களைப் போன்று ஆகுவீர்கள் என்றும் உங்கள் இதயத்தில் இருக்கவேண்டும். இது உங்களுக்கும் பொருந்தும். ஆத்மாக்களே பரமாத்மா என்பது இல்லை: இல்லை. இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் இருக்கவேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது, நாங்கள் எவரிடமும் எதையுமே கேட்பதில்லை என்று அவர்களிடம் கூறுங்கள். பிரஜாபிதாவின் பல குழந்தைகள் இருக்கின்றார்கள். நாங்கள் எங்கள் மனம், சரீரம், செல்வத்தினால் சேவை செய்கின்றோம். பிராமணர்களாகிய நாங்கள் இந்த யக்ஞத்தை எங்கள் சொந்த வருமானத்தில் நடாத்துகின்றோம். நாங்கள் சூத்திரர்களின் பணத்தைப் பயன்படுத்த முடியாது. எண்ணற்ற குழந்தைகள் இருக்கின்றார்கள். நாங்கள் எங்கள் சரீரம், மனம், செல்வத்தை சேவைக்காக எந்தளவிற்கு அர்ப்பணிக்கின்றோமோ, அதற்கேற்ப ஓர் அந்தஸ்தைப் பெறுவோம் என்பதை நாங்கள் அறிவோம். பாபா விதைகளை விதைத்ததனால் நாராயணன் ஆகுகின்றார் என நீங்கள் அறிவீர்கள். பணம் இங்கே எதற்குமே பயன்படப் போவதில்லை, எனவே நான் ஏன் இந்த சேவைக்கு அதனைப் பயன்படுத்தக்கூடாது? அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள் பட்டினியால் இறந்தார்களா? அவர்கள் நன்றாகப் பராமரிக்கப்பட்டார்கள். இந்த பாபாவும் மிக நன்றாகப் பராமரிக்கப்படுகின்றார். இவர் முழு உலகையும் சுவர்க்கமாக்குகின்ற சிவபாபாவின் இரதமாவார். அவர் அழகான பயணியாவார். பரமாத்மா அனைவரையும் அழகானவர்கள் ஆக்குவதற்காக இங்கு வந்துள்ளார். அவர் உங்களை அவலட்சணம் ஆனவர்களிலிருந்து, அழகானவர்கள் ஆக்குகின்றார். அவர் அத்தகைய அழகான மணவாளன் ஆவார். அவர் வந்து அனைவரையும் அழகானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் உங்களை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து அவரை நினைவு செய்யவேண்டும். எவ்வாறு நீங்கள் ஆத்மாவைப் பார்க்காது புரிந்து கொள்கின்றீர்களோ, அவ்வாறே பரமாத்மாவையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். புள்ளி வடிவான ஆத்மாக்களும், பரமாத்மாவும் தோற்றத்தில் ஒரே மாதிரியானவர்களே, மீதி அனைத்தும் ஞானமாகும். இவை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்களாகும். குழந்தைகளாகிய நீங்கள் இக்கருத்துக்களை உங்கள் புத்தியில் குறித்து வைத்திருக்க வேண்டும். உங்களுடைய புத்தி இந்த ஞானத்தை நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகக் கிரகிக்கின்றது. வைத்தியர்களால் மருந்துகள் போன்றவற்றை நினைவில் வைத்திருக்க முடிகின்றது. அவர்கள் அந்த நேரத்தில் புத்தகங்களில் தகவல்களைத் தேட ஆரம்பிப்பார்கள் என்று இல்லை. வைத்தியர்களுக்கும் கருத்துக்கள் இருக்கின்றன, வக்கீல்களுக்கும் கருத்துக்கள் இருக்கின்றன. உங்களிடமும் இந்த ஞானக் கருத்துக்கள் உள்ளன. நீங்கள் விளங்கப்படுத்தக்கூடிய தலைப்புக்கள் பல உள்ளன. எந்த ஒரு கருத்தும் யாருக்காவது நன்மை பயக்கும். சிலர் ஒரு கருத்தின் அம்பினால் தைக்கப்படுவர். மற்றவர்கள் வேறொரு கருத்தினால் தைக்கப்படுவர். பல கருத்துக்கள் உள்ளன. இந்தக் கருத்துக்களை மிக நன்றாகக் கிரகித்தவர்களால் மிக நன்றாகச் சேவை செய்யமுடியும். அரைச் சக்கரமாக நீங்கள் கடும் நோயாளியாக இருந்தீர்கள். ஆத்மாக்கள் தூய்மை ௮ற்றவர்கள் ஆகிவிட்டார்கள். எனவே அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் உங்களுக்கு மருந்து கொடுக்கின்றார். அவர் நோய்வாய்ப்படாத, சத்திரசிகிச்சை நிபுணராகவே எப்பொழுதும் இருக்கின்றார். ஏனைய அனைவரும் நோயாளிகள் ஆகுகின்றார்கள். அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் இந்த யுகத்தில் ஒருமுறை மாத்திரமே வந்து “மன்மனாபவ” என்ற ஊசியை உங்களுக்குப் போடுகிறார். இது மிக இலகுவானது. எப்பொழுதும் இந்தப் படத்தை உங்கள் பையில் வைத்திருங்கள். பாபா முன்னர் நாராயணனைப் பூஜிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் படத்திலிருந்து இலக்ஷ்மியின் ரூபத்தை அகற்றிவிட்டு நாராயணனின் ரூபத்தை மாத்திரம் வைத்திருந்தார். தான் பூஜித்தவராகவே இப்பொழுது அவர் ஆகுகின்றார் என்பதை அவர் புரிந்துகொண்டார். அவர் இலக்ஷ்மிக்கு விடுதலை கொடுத்தார். அவர் இலக்ஷ்மியாக ஆகப்போவதில்லை என்பது நிச்சயம். அவர் படத்திலே நாராயணனின் காலை இலக்ஷ்மி பிடித்துவிடுவதை விரும்பவில்லை. மனிதர்கள் இதைப் பார்த்தால், தங்கள் காலையும் பிடித்துவிடுமாறு மனைவிமாரைக் கேட்பார்கள். அங்கே நாராயணனின் காலை இலக்ஷ்மி பிடித்துவிடமாட்டார். இந்தப் பழக்கவழக்கங்கள் அங்கே இருக்கமாட்டாது. இந்த வழக்கம் இராவண இராச்சியத்துக்கு உரியதாகும். முழு ஞானமும் இப்படத்தில் உள்ளது. மேலே திரிமூர்த்தி இருக்கின்றார்கள். இந்த ஞானத்தை முழுநாளும் நினைவு செய்வதில் பெருமளவு அதிசயம் உள்ளது. இப்பொழுது பாரதம் சுவர்க்கமாகின்றது. இது மிக நல்ல விளக்கமாகும். இருந்தும் இது ஏன் மனிதர்களின் புத்தியில் பதிவதில்லை என்பது அறியப்படாமல் உள்ளது. தீச்சுவாலை முழு வலிமையுடன் வெளிவரும்போது வைக்கோற்போர் தீயிடப்படும். இராவண இராச்சியம் நிச்சயமாக அழிக்கப்படும். இந்த யக்ஞத்திற்கு தூய பிராமணர்கள் தேவை. முழு உலகிற்கும் தூய்மையைக் கொண்டுவருகின்ற மிகப்பெரிய யக்ஞம் இதுவாகும். அந்த பிராமணர்கள் தங்களை பிரம்மாவின் குழந்தைகள் என்று கூறியபோதிலும், அவர்கள் விகாரத்தின் மூலம் பிறந்தவர்களாவர். பிரம்மாவின் குழந்தைகள் தூய வாய்வழித் தோன்றல்கள் ஆவர். ஆகையினால் இதை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய புத்தியைச் சுத்தமாக்கி இந்த அற்புதமான ஞானத்தைக் கிரகித்து, தந்தையைப் போன்று மாஸ்டர் ஞானக்கடல் ஆகுங்கள். இந்த ஞானத்தின் மூலம் அனைத்து தெய்வீகக் குணங்களையும் உங்களுக்குள் கிரகித்துக்கொள்ளுங்கள்.2. பாபா எவ்வாறு தனது சரீரம், மனம், செல்வத்தை அர்ப்பணித்து அவற்றை சேவைக்குப் பயன்படுத்தினாரோ, அவ்வாறே நீங்களும் தந்தையைப் போன்று கடவுளின் சேவையில் அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். சதா புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு, உங்களுடைய இலக்கினதும், இலட்சியத்தினதும் படத்தை உங்களுடன் வைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சந்தோஷ இதயத்தைக் கொண்டவராகி, உங்களின் ஸ்திரமான, நிலையான ஸ்திதியால் ஒரேயொரு தந்தையை சதா பின்பற்றுவீர்களாக.குழந்தைகளான உங்களுக்கு, தந்தை பிரம்மாவின் வாழ்க்கை மிகச்சரியானதொரு கணணி ஆகும். தற்காலத்தில் மக்கள் தமது கேள்விகள் அனைத்தையும் ஒரு கணணியில் கேட்டு, அதற்கான பதிலைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதேபோல், எந்தவொரு கேள்வி எழும்போதும், ஏன்? அல்லது என்ன? என்ற கேள்விகளைக் கேட்பதற்குப் பதிலாக, தந்தை பிரம்மாவின் வாழ்க்கை என்ற கணணியைப் பாருங்கள். ‘ஏன்? என்ன?’ என்ற கேள்விகள் ‘இந்த முறையில்’ என மாற்றம் அடையும். கேள்விகளால் நிறைந்திருப்பதற்குப் பதிலாக, நீங்கள் சந்தோஷ இதயத்தைக் கொண்டிருப்பவர் ஆகுவீர்கள். சந்தோஷமான இதயத்தைக் கொண்டிருப்பதென்றால், உங்களின் நிலையான, ஸ்திரமான ஸ்திதியால் தந்தையைப் பின்பற்றுதல் என்று அர்த்தம்.
சுலோகம்:
உங்களின் ஆத்ம உணர்வு சக்தியால், சதா ஆரோக்கியமாக இருப்பதை அனுபவம் செய்யுங்கள்.விசேட குறிப்பு: பிராமணக் குழந்தைகள் எல்லோரும் ஜனவரி 1 இலிருந்து 31 வரை, அகநோக்கெனும் குகையில் யோகா தபஸ்யா செய்யும்போது, உங்களின் சக்திவாய்ந்த மனதால் உலகிற்கு சகாஷ் வழங்கிய வண்ணம் சேவை செய்யுங்கள். இந்த இலட்சியத்துடன் இந்த மாத செய்திக்கடிதத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அவ்யக்த சமிக்கைகள், மாதம் முழுவதும் முரளியின் முடிவிலும் எழுதப்படும். இந்தக் கருத்துக்களைக் குறிப்பாகக் கடையும்போது, உங்களின் மனதால் சேவை செய்வதில் அனுபவசாலி ஆகுங்கள்.
உங்களின் சக்திவாய்ந்த மனங்களால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
அமைதித் தூதுவர்களான குழந்தைகளான நீங்கள், எங்கே இருந்தாலும் நடக்கும்போதும் அசையும்போதும் உங்களை அமைதித் தூதுவர்களாகக் கருத வேண்டும். அமைதி சொரூபங்களாகவும் சக்திவாய்ந்த ரூபத்தில் ஸ்திரமாகவும் இருப்பவர்கள், மற்றவர்களுக்குத் தொடர்ந்து அமைதியினதும் சக்தியினதும் சகாஷை வழங்குவார்கள்.