01.02.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய உங்களின் ஆதி தர்மம் அமைதியாகும். ஆத்மாக்களின் உலகம் அமைதி தாமமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதி சொரூபங்கள் ஆவீர்கள். ஆதலால் நீங்கள் அமைதி வேண்டும் என்று கேட்க முடியாது.

கேள்வி:
உங்கள் யோக சக்தி என்ன அற்புதங்களைப் புரிகின்றது?

பதில்:
உங்களில் வெகு சில குழந்தைகளே யோக சக்தியினால் இந்த முழு மலையையும் தூய்மையாக்கி, ஒரு தங்கமலையை ஸ்தாபிக்கிறீர்கள். பஞ்ச பூதங்களும் கூட சதோபிரதானாகி மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும். சடப்பொருள் சதோபிரதானாக இருக்கும்போது, உங்கள் சரீரமும் சதோபிரதானாக இருக்கும். அங்குள்ள பழங்கள் மிகவும் பெரிதாகவும் சுவையாகவும் இருக்கும்.

ஓம் சாந்தி.
நீங்கள் ‘ஓம்சாந்தி’ என்று கூறும்போது, அதிகளவு சந்தோஷம் இருக்கவேண்டும். உண்மையில் ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதி சொரூபங்கள் ஆவீர்கள். ஆத்மாக்களாகிய உங்களின் ஆதி தர்மம் அமைதியே. அமைதி உங்கள் கழுத்து மாலையாகும் என்றே சந்நியாசிகள் அமைதியையிட்டுக் கூறுகின்றார்கள். அமைதியை நீங்கள் ஏன் வெளியில் தேடுகின்றீர்கள்? ஆத்மாக்கள், தாமே அமைதி சொரூபங்கள் ஆவார்கள். ஆத்மாக்கள் தமது பாகத்தை நடிப்பதற்காக சரீரத்தில் பிரவேசிக்க வேண்டும். ஆத்மாக்கள் எப்பொழுதும் அமைதியில் நிலைத்திருந்தால், அவர்களால் எவ்வாறு செயல்களைச் செய்ய முடியும்? செயல்கள் செய்யப்பட வேண்டும். ஆம். மௌன தாமத்தில், ஆத்மாக்கள் மௌனமாகவே இருக்கின்றார்கள். அங்கு சரீரங்கள் இருப்பதில்லை. தாம் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்பதையும், அவர்கள் மௌனதாம வாசிகள் என்பதையும், சந்நியாசிகள் எவருமே புரிந்து கொள்ளவில்லை. மௌனதாமமே உங்கள் வீடு என குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பின்னர் நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் சென்று உங்கள் பாகத்தை நடிப்பீர்கள். பின்னரே, துன்ப பூமியில் இராவணனின் இராச்சியம் நிலவுகின்றது. இதுவே 84 பிறவிகளின் கதையாகும். கடவுள் அர்ச்சுனனுடன் பேசுகின்றார்: உங்கள் சொந்தப் பிறவிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. அவர் ஏன் ஒருவருடன் மாத்திரம் பேசுகின்றார்? ஏனெனில், ஒருவருக்கே உத்தரவாதம் உள்ளது. இராதைக்கும் கிருஷ்ணருக்கும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருப்பதால் அவர்களுடன் அவர் பேசுகின்றார். குழந்தைகள் அனைவரும் 84 பிறவிகளையும் எடுப்பதில்லை என்பதைத் தந்தையும் அறிவார், குழந்தைகளாகிய நீங்களும் அறிவீர்கள். சிலர் இடையிலும், சிலர் இறுதியிலும் வருகின்றார்கள், ஆனால், இவரைப் பொறுத்தவரை இது உறுதியாகும். ஓ குழந்தையே! என்று பாபா இவரிடம் கூறுகின்றார்: ஆகையால் இவரே அர்ச்சுனன் ஆவார். அவர் இந்த இரதத்தில் அமர்ந்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு பிறப்பு எடுப்பீர்கள் என்பதை, நீங்களாகவே புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எச்சேவையையும் செய்யாதிருந்தால், உங்களால் எவ்வாறு புதிய உலகான சத்தியயுகத்தின் ஆரம்பத்தில் வரமுடியும்? இல்லாவிட்டால் அது உங்கள் பாக்கியத்தில் இல்லை. இறுதியில் பிறப்பு எடுப்பவர்கள், வீடு பழையதாகிய பின்னரே வருகிறார்கள். நான் இவருக்காகவே பேசுகின்றேன். ஏனெனில் இவருடையது உறுதியானது. மம்மாவும் பாபாவும் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பதை உங்களாலும் புரிந்துகொள்ள முடியும். குமார்க்காவும் ஜனக்கும் உள்ளார்கள். அத்தகைய மகாராத்திகள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். சேவை செய்யாதவர்கள் நிச்சயமாக சில பிறவிகளின் பின்பே வருகின்றார்கள். அவர்கள் சித்தி அடையாமல், தாமதமாகியே வருகின்றார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். பாடசாலையிலும் அவர்கள் தமது இலக்குக்கான கோடுவரை ஓடிய பின்னர் திரும்பி வருகின்றார்கள். அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஓட்டப்போட்டியிலும், கால் அங்குல வித்தியாசம் இருப்பினும் முந்தியவரே வெற்றி ஈட்டுகின்றார். இதுவும் ஓரு குதிரை ஓட்டப்பந்தயமாகும். இதுவே அஷ்வ பந்தயமாகும். அஷ்வ என்றால் குதிரை. இந்த இரதமும் குதிரை என்றே அழைக்கப்படுகின்றது. தக்ஷபிரஜாபிதா, யாகம் ஒன்றை உருவாக்கி, அந்த யாகத்தில் ஒரு குதிரையைப் பலியிட்டார் என்று கூறப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தக்ஷபிரஜாபிதா இருக்கவும் இல்லை, அவர் யாகம் எதையும் உருவாக்கவும் இல்லை. பக்தி மார்க்கத்தில் பல பொய்யான புத்தங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை கதைகள் என்றே கூறப்பட்டுள்ளன. அவர்கள் பல கதைகளை செவிமடுத்துக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் நீங்களோ கற்கின்றீர்கள். கல்வியைக் கதை என்று கூற முடியாது. நீங்கள் கற்கின்ற பாடசாலையிலும் ஓர் இலக்கும் இலட்சியமும் உள்ளது. அக் கல்வியின் மூலம் உங்களுக்கு ஒரு தொழில் கிடைக்கின்றது. அதில் ஏதோ ஒன்றைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிகளவு ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். இதற்கு முயற்சி தேவை. தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிய முடியும். நீங்கள் அவரை விசேடமாக நினைவு செய்ய வேண்டும். எவ்வாறாயினும் நான் சிவபாபாவின் குழந்தைதானே, நான் ஏன் அவரை நினைவு செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. இல்லை. உங்களை அவரின் மாணவர் என நீங்கள் கருதும் அதேவேளை அவரை நினைவு செய்யவும் வேண்டும். சிவபாபா ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார். இதனையும் நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். சிவபாபா மாத்திரமே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்குக் கற்பிக்கும் ஒரேயொரு ஆசிரியர் ஆவார். இதுகூட உங்களுக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவருமே, தந்தையின் நினைவில் எவ்வளவு நேரம் இருக்கின்றீர்கள் என்பதை இதயபூர்வமாக வினவ வேண்டும். நீங்கள் அதிகளவு நேரத்தை வெளி விடயங்களில் கழிக்கின்றீர்கள். இந்த நினைவே பிரதானமானது. பாரதத்தின் இந்த யோகத்திற்கு அதிக புகழ் உள்ளது. ஆனால் பாரதத்தின் இந்த யோகத்தை யாரால் கற்பிக்க முடியும்? எவருக்கும் இது தெரியாது. அவர்கள் கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்வதனால் ஒரு பாவமேனும் அழியமாட்டாது. ஏனெனில் அவர் பஞ்சபூதங்களினால் ஆக்கப்பட்ட சரீரத்தை உடையவர். அவரை நினைவு செய்வது என்றால் களிமண்ணை நினைவு செய்வது என்று அர்த்தமாகும். நீங்கள் பஞ்சபூதங்களை நினைவு செய்கின்றீர்கள் என்பதே அதன் அர்த்தம். சிவபாபா சரீரமற்றவர் என்பதால் அவர் கூறுகின்றார்: சரீரமற்றவர் ஆகுங்கள்! உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் அழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே! ஆகையால் அவர் ஒரேயொருவரே ஆவார். கீதையின் கடவுள் யார் என்று அவர்களிடம் சாதூரியமாகக் கேளுங்கள். படைப்பவர் ஒரேயொரு கடவுளே ஆவார். மக்கள் தம்மைக் கடவுள் என்று அழைத்துக் கொண்டாலும், அனைவருமே தமது குழந்தைகள் என்று அவர்கள் என்றுமே கூறுவதில்லை. ‘நான் கடவுள், அதுவே உங்களுக்கும் பொருந்தும்’ என்றோ அல்லது கடவுள் சர்வவியாபி என்றோ அவர்கள் கூறுகின்றார்கள். ‘நானும் கடவுள், நீங்களும் கடவுள், பார்க்கும் இடமெல்லாம் நான் உங்களையே பார்க்கின்றேன். நீங்கள் கற்களிலும்கூட இருக்கின்றீர்கள்’ என்று அவர்கள் கூறுகின்றார்கள். வெறுமனே, இதனை அவர்கள் கூறுகின்றார்கள். தமது குழந்தைகள் என அவர்கள் உங்களைக் கூறுவதில்லை. தந்தை மாத்திரமே கூறுகின்றார்: ஓ எனது அன்பிற்கினிய, ஆன்மீகக் குழந்தைகளே. வேறு எவருமே இவ்வாறு கூறுவதில்லை. பரலோகத் தந்தை மாத்திரமே இவ்வாறு கூறமுடியும். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை உங்களுக்கு வேறு எவராலுமே கூற முடியாது. ஏணிப்படத்தில் காட்டப்பட்டுள்ள 84 பிறவிகளின் இரகசியங்களை அசரீரியான தந்தையைத் தவிர வேறு எவராலும் விளங்கப்படுத்த முடியாது. அவருக்குப் பல பெயர்கள் உள்ள போதிலும், அவரின் உண்மையான பெயர் சிவன் ஆகும். பல மொழிகள் உள்ளதால், அவர்கள் தத்தமது மொழிகளில் அவருக்குப் பெயரிட்டுள்ளனர். உதாரணத்திற்கு பம்பாயில் அவரை பபுல்நாத் (முட்களின் பிரபு) என்று அழைக்கின்றார்கள். எவ்வாறாயினும் அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. அவரே முட்களை மலர்களாக மாற்றுபவர் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாரதத்தில் சிவபாபாவிற்கு 1000 பெயர்கள் வரை கொடுக்கப்பட்டிருக்கலாம். எனினும் அவற்றின் அர்த்தம் எவருக்கும் தெரியாது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். இதிலும் அவர் தாய்மாரை முன்னிலையில் வைத்துள்ளார். தந்தை வந்ததால், பெண்களுக்கு அதிகளவு மரியாதை கொடுக்கப்படுகின்றது. தந்தை, தாய்மாரின் புகழை அதிகரித்துள்ளார். நீங்கள் சிவசக்தி சேனையாவீர்கள். உங்களுக்கு மாத்திரமே சிவபாபாவைத் தெரியும். ஒரேயொருவர் மாத்திரமே சத்தியம் என்று அழைக்கப்படுகின்றார். சத்தியப்படகு அசைந்தாலும், அது ஒருபோதும் மூழ்காது என்று நினைவு கூரப்பட்டுள்ளது. ஆகையால் நீங்களே உண்மையானவர்களும், புதிய உலகைப் படைப்பவர்களும் ஆவீர்கள். பொய்யான விடயங்கள் அனைத்தும் அழிய உள்ளன. நீங்கள் இங்கே ஆட்சி செய்யப் போவதில்லை. உங்கள் அடுத்த பிறவியில் நீங்கள் இங்கு வந்து ஆட்சி செய்வீர்கள். இவ் விடயங்கள் மிகவும் மறைமுகமானவை, அவற்றை நீங்கள் மாத்திரமே புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் பாபாவை சந்தித்திருக்காது விட்டால் உங்களுக்கு எதுவும் புரிந்திருக்க மாட்டாது. இதனை நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். இவரே யுத்தகளத்தில் உங்களை உஷாராக்குகின்ற யுதிஷ்ரன் ஆவார். இது வன்முறையற்ற யுத்தம். ஒருவரோடு ஒருவர் சண்டை இடுவதே வன்முறை என்று மக்கள் நினைக்கின்றார்கள். தந்தை கூறுகிறார்: காம வாளை பயன்படுத்துதலே முதன்மையான, பிரதானமான வன்முறையாகும். ஆகையாலேயே காமம் உங்களின் கொடிய எதிரி எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நீங்கள் வெற்றி கொள்ள வேண்டும். பிரதானமாக நீங்கள் வெற்றி கொள்ள வேண்டியது காமவிகாரத்தை ஆகும். தூய்மை அற்றவராக இருத்தல் என்றால் விகாரம் நிறைந்தவர் என்று அர்த்தமாகும். தூய்மை அற்றவர்கள் விகாரம் நிறைந்தவர்கள் என்றே அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் விகாரத்தில் ஈடுபடுகின்றவர்கள். கோபப்படுகின்ற ஒருவரை விகாரம் நிறைந்தவர் என நீங்கள் கூறுவதில்லை. கோபப்படுகின்ற ஒருவர் கோபக்காரர் ஆவார், பேராசை உடையவர் பேராசைக்காரர் ஆவார். தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள், அதாவது, பேராசையிலிருந்து விடுபட்டவர்களும், பற்றிலிருந்து விடுபட்டவர்களும் விகாரத்திலிருந்தும் விடுபட்டவர்கள் எனப்படுகின்றார்கள். அவர்கள் ஒருபோதும் விகாரத்தில் ஈடுபடுவதில்லை. விகாரம் இல்லாமல் எப்படிக் குழந்தைகளை உருவாக்க முடியும் என அவர்கள் குழந்தைகளாகிய உங்களிடம் வினவும் பொழுது, அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் தேவர்களை விகாரம் அற்றவர்கள் எனக் கருதுகின்றீர்கள். அத்துடன் அது விகாரமற்ற உலகமாகும். துவாபரயுகமும், கலியுகமுமே விகாரம் நிறைந்த உலகமாகும். உங்களை விகாரமானவர்கள் என்றும் தேவர்களை விகாரமற்றவர்கள் என்றும் நீங்கள் அழைக்கின்றீர்கள். நீங்கள் விகாரம் நிறைந்தவர்களாகவும், இப்பொழுது அவர்களைப் போன்று விகாரம் அற்றவர்களாகவும் ஆகுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இலக்ஷ்மியும் நாராயணனும் யோகசக்தியினால் தமது அந்தஸ்தைப் பெற்றார்கள். அவர்கள் மீண்டும் அதனைப் பெறுகின்றார்கள். நாங்கள் தேவர்கள் என்பதால் எங்கள் இராச்சியத்தை நாங்கள் ஒரு கல்பத்தின் முன்னரும் பெற்றோம். பின்னர் நாங்கள் அதனை இழந்ததுடன், மீண்டும் ஒருமுறை அதனை நாங்கள் பெறுகின்றோம். உங்கள் புத்தி இதனைக் கடைந்தாலே நீங்கள் மிகவும்; சந்தோஷத்துடன் இருப்பீர்கள். எவ்வாறாயினும் மாயை இந்த விழிப்புணர்விலிருந்து உங்களை மறக்கச் செய்கின்றாள். உங்களால் சதா நினைவில் நிலைத்திருக்க முடிவதில்லை என்பதை பாபா அறிவார். குழந்தைகளாகிய நீங்கள் ஆட்ட அசைக்க முடியாதவர்களாக நினைவில் நிலைத்திருந்தால், நீங்கள் விரைவில் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைந்து, ஆத்மாக்களாகிய உங்களால் வீடு திரும்ப முடியும், ஆனால் அது முடியாது! இவரே முதலில் செல்ல வேண்டும். சிவபாபாவின் திருமண ஊர்வலம் இருக்கும். தாய்மார்கள் திருமணத்திற்கு சிட்டிவிளக்குகளை எடுத்துச் செல்வதுண்டு. அந்த விளக்கு சிவபாபாவான மணவாளனை குறிக்கின்றது. அவரே அணையாத விளக்கு. அவர் இப்பொழுது ஒளிகள் ஆகிய எங்களை ஏற்றி வைத்துள்ளார். இந்நேரத்தின் விடயங்களையே பக்தி மார்க்கத்தில் அவர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள். உங்கள் சுவாலையை நீங்கள் யோகசக்தியினால் உருவாக்குகின்றீர்கள். நீங்கள் யோகத்தின் மூலம் தூய்மையாகவும், ஞானத்தின் மூலம் செல்வந்தராகவும் ஆகுகின்றீர்கள். இக் கல்வியே உங்கள் மூலாதாரமாகும். யோக சக்தியினால் விசேடமாக பாரதத்தையும், பொதுவாக முழு உலகையும் நீங்கள் தூய்மை ஆக்குகின்றீர்கள். இதில் குமாரிகளினால் மிகவும் நல்ல உதவியாளர்கள் ஆக முடியும். இந்த சேவையைச் செய்வதன் மூலம், நீங்கள் மிகவும் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வைரம் போன்றதாக்க வேண்டுமே அன்றி, அதிலும் குறைவானதாக அல்ல. ‘தாயையும் தந்தையையும் பின்பற்றுங்கள்’ என்று கூறப்படுகின்றது. தாயையும், தந்தையையும் விசேடமான சகோதர சகோதரிகளையும் பாருங்கள். உங்களுக்கு இரு தந்தையர் உள்ளனர் என்று குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சிகளில் விளங்கப்படுத்தலாம்: உங்கள் லௌகீகத் தந்தையும், பரலோகத் தந்தையும். இவர்களில் யார் உயர்ந்தவர்? எல்லையற்ற தந்தையே நிச்சயமாக உயர்ந்தவர் ஆவார். அவரிடமிருந்தே நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அவரே இப்பொழுது உங்களின் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். கடவுள் பேசுகின்றார்: நான் இப்பொழுது உங்களுக்கு இராஐயோகம் கற்பிக்கிறேன், பின்னர் அடுத்த பிறவியில் நீங்கள் உலக அதிபதிகள் ஆகின்றீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் தந்தை பாரதத்தில் பிரவேசித்து பாரதத்தை மிகவும் செல்வம் நிறைந்தது ஆக்குகின்றார். நீங்கள் இக் கல்வியின் மூலம் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஏனைய கல்வியினால் நீங்கள் பெறுவது என்ன? இங்கே நீங்கள் 21 பிறவிகளுக்கு வைரங்கள் ஆகுகின்றீர்கள். இக் கல்விக்கும் ஏனைய கல்விகளுக்கும் இடையில் இரவிற்கும் பகலிற்குமான வேறுபாடு உள்ளது. இங்கே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஒருவரே. ஆகையால் தந்தையின் மூலம் நீங்கள் ஓர் ஆஸ்தியையும், ஆசிரியரின் மூலம் ஓர் ஆஸ்தியையும், குருவின் மூலம் ஓர் ஆஸ்தியையும் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் சொந்த சரீரம் உட்பட அனைத்தையும் மறந்துவிடுங்கள். நீங்கள் மரணிக்கும்போது, உங்களுக்கு முழு உலகமும் மரணிக்கின்றது. நீங்கள் தந்தையினால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். ஆகையால் வேறு எவரை நீங்கள் நினைவு செய்ய முடியும்? பிறரைப் பார்க்கும் போது, பார்த்தும் பார்க்காது இருக்க வேண்டும். உங்கள் பாகத்தை நடிக்கவே நீங்கள் வந்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்றும் உங்கள் பாகத்தை நடிக்க மீண்டும் நீங்கள் கீழே வரவேண்டும் என்றும் உங்கள் புத்தி புரிந்து கொண்டுள்ளது. இதனை உங்கள் புத்தியில் நீங்கள் வைத்திருந்தாலே, நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். உங்கள் சரீர உணர்வை நீங்கள் விட்டு விட வேண்டும். இப் பழைய விடயங்களை நீங்கள் இங்கேயே விட்டு விட வேண்டும். ஏனெனில், நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது நாடகம் ஒரு முடிவிற்கு வருகின்றது. பழைய உலகம் எரியூட்டப்படப் போகின்றது. குருடர்களும் குருடர்களின் குழந்தைகளும் அறியாமை என்ற உறக்கத்தில் உறங்குகின்றார்கள். இது மக்களின் வழக்கமான உறக்கம் அல்ல. இது அறியாமை என்ற உறக்கம். நீங்கள் இதிலிருந்து அவர்களை விழித்தெழச் செய்ய வேண்டும். சத்தியயுகமான பகலே ஞானம். கலியுகமான இருளே இரவு. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு பெண் திருமணம் செய்யும் போது தனது பெற்றோரையும், தனது புகுந்த வீட்டாரையும் நினைவு செய்கின்றாள். இப்பொழுது அவர்கள் மறக்கப்படல் வேண்டும். சிலர் தம்பதியினராக இருந்த போதும், ஞான வாளை தமக்கிடையில் வைத்திருப்பதன் மூலம், காமத்திலிருந்து தாம் விலகியிருப்பதை சந்நியாசிகளுக்கு எடுத்துக் காட்டுகின்ற தம்பதியினராக உள்ளனர். தந்தையின் கட்டளை: தூய்மையாக இருங்கள்! ரமேஷையும் உஷாவையும் பாருங்கள். அவர்களுக்கு இடையில் என்றுமே தூய்மையின்மை இருந்ததே இல்லை. ஏனெனில் 21 பிறவிகளுக்கான இராச்சியத்தை இழந்து விடுவோம், அதாவது, தாம் கடனாளிகள் ஆகிவிடுவோம் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. இதில் சித்தி அடையாதவர்களும் உள்ளனர். பெயரளவில் இடம்பெறுகின்ற திருமணமும் உள்ளது. தூய்மையாக இருப்பதன் மூலம் உங்களால் உயரந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஒரு பிறவியில் மாத்திரமே நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். நீங்கள் யோகசக்தியைப் பெறும்போது, உங்கள் புலன் அங்கங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியும். யோக சக்தியினால், நீங்கள் முழு உலகையும் தூய்மை ஆக்குகின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களில் மிகச் சிலரே யோக சக்தியினால் முழு மலையை அகற்றி, தங்க மலையை ஸ்தாபனை செய்கின்றீர்கள். இவை எதனையும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கோவர்த்தன மலையைச் சுற்றி வருகின்றார்கள். தந்தையே முழு உலகையும் சத்தியயுகமாக ஆக்குகின்றார். இமாலயம் தங்கம் ஆகும் என்றில்லை. அங்கு தங்கச் சுரங்கங்கள் நிரம்பி இருக்கும். பஞ்சபூதங்கள் சதோபிரதானாக இருப்பதால் அவை நல்ல பலனைக் கொடுக்கும். ஏனெனில் சடப்பொருள் சதோபிரதான் ஆகும்போது, உங்கள் சரீரமும் சதோபிரதான் ஆகும். அங்குள்ள பழங்கள் மிகவும் பெரிதாகவும், சுவையாகவும் இருக்கும். அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். உங்களை ஆத்மாவாகக் கருதி, தந்தையை நீங்கள் நினைவு செய்யும்பொழுது, உங்களால் விகாரத்தில் இருந்து விடுபட முடியும். நீங்கள் சரீர உணர்வு உடையவராகும் பொழுதே காமத்தின் மீது ஆசை ஏற்படும். யோகிகள் என்றுமே விகாரத்தில் ஈடுபடுவதில்லை. உங்களுக்கு ஞானத்தின் சக்தி இருந்தாலும், நீங்கள் யோகிகளாக இல்லாதிருந்தால் வீழ்ந்து விடுவீர்கள். முயற்சியா அல்லது வெகுமதியா சிறந்தது என்று உங்களிடம் வினவினால் நீங்கள் முயற்சியே சிறந்தது என்று கூறுவீர்கள். அதே போன்று, இதில் யோகமே சிறந்தது. யோகத்தின் மூலமே நீங்கள் தூய்மையற்றவரில் இருந்து தூய்மையாக முடியும். நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் கற்கின்றீர்கள் என்று குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். மனிதர்களுடன் கற்பதால் உங்களால் எதைப் பெறமுடியும்? உங்களால் மாதத்திற்கு எவ்வளவு சம்பளம் பெறமுடியும்? இங்கு நீங்கள் கிரகிக்கின்ற இரத்தினங்கள் ஒவ்வொன்றும் நூறாயிரம் ரூபாய்களுக்குச் சமமாகும். அங்கே, பணம் என்றும் எண்ணப்பட மாட்டாது. அங்கு அளவற்ற செல்வம் உள்ளது. ஒவ்வொருவரும் தத்தமக்கென பண்ணை போன்றவற்றை வைத்திருப்பார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுதே நான் உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிக்கின்றேன். அதுவே இலக்கும் இலட்சியமும் ஆகும். முயற்சி செய்வதன் மூலம், நீங்கள் மேன்மையானவர் ஆக வேண்டும். உங்கள் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறு தமது வெகுமதியை பெற்றனர்? அவர்களின் வெகுமதியை நீங்கள் புரிந்து கொண்டிருப்பதைவிட, வேறு என்ன உங்களுக்கு வேண்டும்? தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வந்து, பாரத மக்களை சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றார். ஆகையால், நீங்கள் எவருக்காவது பாதையைக் காட்டாது உணவு உண்ணுவதில்லை என்றளவிற்கு குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்வதில் உற்சாகம் இருக்க வேண்டும். அத்தகைய ஆர்வமும் உற்சாகமும் இருக்கும்போதே, உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியும் அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இறைசேவை செய்வதன் மூலம் 21 பிறவிகளுக்கு உங்கள் வாழ்க்கையை வைரம் போல ஆக்க வேண்டும். தாயையும் தந்தையையும், விசேடமான சகோதர சகோதரிகளை மாத்திரமே பின்பற்ற வேண்டும்.

2. உங்கள் ஸ்திதியை கர்மாதீத் ஆக்குவதற்கு உங்கள் சொந்த சரீரம் உட்பட அனைத்தையும் மறந்து விடுங்கள். உங்கள் நினைவை, அசைக்க முடியாததாகவும் நிலையானதாகவும் ஆக்க வேண்டும். நீங்கள் பேராசையிலிருந்தும் பற்றிலிருந்தும் விடுபட்டவர் ஆகுவதுடன் தேவர்களைப் போல விகாரம் அற்றவர்களாகவும் ஆக வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்ரர் அருள்பவராகி, பெரும் துன்பத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு ஒரு விநாடியில் முக்தியையும் சத்கதியையும் அருள்வீர்களாக.

நீங்கள் ஒவ்வொரு பருவகாலத்தின் போதும் இங்கே பௌதீகமாக ஆயத்தங்களைச் செய்வதுடன், சேவாதாரிகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் இங்கே கொண்டு வருகிறீர்கள். அதனால் எந்தவிதமான சிரமங்களும் இருக்காது. அத்துடன் காலமும் வீணாகாது. அதேபோல், ஆத்மாக்கள் எல்லோருக்கும் முக்தியையும் சத்கதியையும் வழங்குவதற்கான இறுதிப் பருவகாலம் இப்போது வருகிறது. துயரப்படும் ஆத்மாக்களை வரிசையில் காக்க வைப்பதன் மூலம் மேலும் வேதனைப்பட வைக்காதீர்கள். அவர்கள் தொடர்ந்தும் வந்து, எடுத்துக் கொள்ளட்டும். இதற்கு எப்பொழுமே ஆயத்தமாக இருங்கள். இப்போது, முயற்சி செய்யும் வாழ்க்கைக்கு அப்பால், அருள்பவர் என்ற ஸ்திதியில் நிலைத்திருங்கள். ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு வினாடியும் ஒரு மாஸ்ரர் அருள்பவராகித் தொடர்ந்து முன்னேறுங்கள்.

சுலோகம்:
பிரபுவை உங்களின் புத்தியில் வைத்திருங்கள், உங்களின் சகல பேறுகளும் ‘ஆம், எனது பிரபுவே’ எனக் கூறும்.

ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.

ஒற்றுமையுடன்கூடவே, ஏகாந்தத்தில் அன்பு அடையவர் ஆகுங்கள். ஏகாந்தத்தில் அன்பு கொண்ட ஒருவர் தனது புத்தியின் யோகத்தை ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்து, ஒரேயொருவரிடம் மட்டும் அன்பு வைத்திருப்பார். ஒரேயொருவரிடம் மட்டும் அன்பு வைத்திருப்பதால், இத்தகையதோர் ஆத்மாவால் ஒரேயொருவரின் அன்பில் நிலைத்திருக்க முடியும். ஏகாந்தத்தின் மீது அன்பு வைப்பதெனில், வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொருவரின் மீது அன்பு வைப்பதாகும். ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளையும் வைத்திருந்து, சகல இனிமையையும் சுவைப்பதன் மூலம் உங்களால் ஏகாந்தத்தின் மீது அன்புள்ளவர் ஆகமுடியும்.