01.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, “அன்பான, அன்பற்ற” என்ற வார்த்தைகள் இல்லறப் பாதைக்கே உரியவை. இப்பொழுது உங்கள் அன்பானது ஒரேயொரு தந்தையின் மீதே உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் நினைவில் சதா நிலைத்திருக்கின்றீர்கள்.

கேள்வி:
நினைவு யாத்திரைக்கு நீங்கள் கொடுக்கும் மற்றைய பெயர் என்ன?

பதில்:
நினைவு யாத்திரை என்பது அன்பு யாத்திரையாகும். அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள், எவராவது ஒருவரின் பெயர் மற்றும் ரூபத்தில் சிக்கிக் கொள்ளுதல் என்ற துர்நாற்றத்தையே கொண்டிருக்கிறார்கள். அவர்களின் புத்தி தமோபிரதான் ஆகுகின்றது. ஒரேயொரு தந்தையை மாத்திரம் நேசிப்பவர்கள் இந்த ஞானத்தைத் தொடர்ந்தும் தானம் செய்வார்கள். அவர்கள் வேறு எந்தவொரு சரீரதாரிகள் மீதும் அன்பைக் கொண்டிருக்க மாட்டார்கள்.

பாடல்:
இந்த நேரம் கடந்து செல்கின்றது…..

ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளுக்கே விளங்கப்படுத்துகின்றார். இது இப்பொழுது நினைவு யாத்திரை என்றும்;, அன்பு யாத்திரை என்றும் அழைக்கப்பட முடியும். மக்கள் அந்த யாத்திரைகளுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் ஒரு படைப்பிடம் யாத்திரை செல்கின்றார்கள். பல்வகையான படைப்புக்கள் இருக்கின்றன. எவருக்குமே படைப்பவரைத் தெரியாது. உங்களுக்கோ இப்பொழுது தந்தையாகிய படைப்பவரைத் தெரியும். நீங்கள் ஒருபோதுமே அந்தத் தந்தையை நினைவு செய்வதை நிறுத்;திவிடக் கூடாது. நீங்கள் நினைவு யாத்திரையைக் கண்டுகொண்டீர்கள். அது நினைவு யாத்திரை என்று அல்லது அன்பு யாத்திரை என்று அழைக்கப்பட முடியும். அதிகளவு அன்பினைக் கொண்டிருப்பவர்களே, இந்த யாத்திரையில் மிக நன்றாக நிலைத்திருப்பார்கள். இந்த யாத்திரையில் நீங்கள் எவ்வளவிற்கு அதிகமாக அன்புடன் நிலைத்திருக்கின்றீர்களோ, அவ்வளவிற்கு அதிகமாக நீங்கள் தொடர்ந்தும் தூய்மையானவர் ஆகுவீர்கள். கடவுள் சிவன் பேசுகின்றார்: சிலர் விநாச வேளையில் அன்பான புத்தியையும், வேறும் சிலர் விநாச வேளையில் அன்பற்ற புத்தியையும் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இது இப்பொழுது விநாச நேரம் என்பதை அறிவீர்கள். கீதையின் அதே அத்தியாயமே இப்பொழுது நடிக்கப்படுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணரின் கீதைக்கும் திரிமூர்த்தி சிவனின் கீதைக்கும் இடையான வேறுபாட்டை பாபாவே உங்களுக்குக் காட்டுகின்றார். இப்பொழுது, கீதையின் கடவுள் யார்? அவை பரமாத்மா, பரமதந்தையாகிய சிவனின் வாசகங்கள் ஆகும். “சிவன்” என்ற வார்த்தை மாத்திரம் எழுதப்படக்கூடாது. ஏனெனில் பலரும் “சிவன்” என்ற பெயரைக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, நீங்கள் “பரமாத்மாவாகிய, பரமதந்தை” என எழுதும் போது அவர் பரமனாகக் காணப்படுகின்றார். வேறு எவருமே தன்னைப் “பரம தந்தை” என அழைக்க மாட்டார்கள். சந்நியாசிகள் தங்களைச் “சிவோஹம்” (நானே சிவன்) எனக் கூறுகின்றார்கள். அவர்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாது. அவர்களுக்குத் தந்தையைத் தெரியவும் மாட்டாது. அவர்களுக்குத் தந்தை மீது அன்பில்லை. “அன்பான, அன்பற்ற” என்ற வார்த்தைகள் இல்லறப் பாதைக்கே பொருந்துகிறது. சில குழந்தைகளின் புத்தியானது தந்தைமீது அன்பு கொண்டதாக இருக்கின்றது, ஏனையோரோ அன்பற்ற புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் மத்தியிலும் இது அவ்வாறே உள்ளது. தந்தைமீது அன்பைக் கொண்டவர்கள் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் தந்தை மீது அன்றி, வேறு எவரிலும் அன்பைக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் சிவபாபாவிற்கு “பாபா, நான் உங்கள் உதவியாளர், உங்களுடையவர் மாத்திரமே” எனக் கூறுகின்றார்கள். இதில் பிரம்மா என்ற கேள்விக்கே இடமில்லை. சிவபாபாவை நேசிக்கின்ற ஆத்மாக்கள் நிச்சயமாகவே அவரின் உதவியாளர்கள் ஆகுவார்கள். அவர்கள் தொடர்ந்தும் சிவபாபாவுடனே சேவையையும் செய்வார்கள். அவர்கள் அன்பைக் கொண்டிராத போது, அன்பற்றவர்கள் ஆகுகிறார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். ஓர் அன்பற்ற புத்தியானது விநாசத்திற்கு இட்டுச் செல்லப்படுகின்றது. தந்தையை நேசிப்பவர்கள் நிச்சயமாக அவரின் உதவியாளர்கள் ஆகுவார்கள். அவர்கள் அன்பைக் கொண்டிருக்கும் அளவுக்கேற்ப, சேவையிலும் உதவுவார்கள். ஏனையோர் நினைவைக் கொண்டிராததால், அன்பைக் கொண்டிருப்பதில்லை, அப்பொழுது அவர்கள் சரீரதாரிகள் மீது அன்பைக் கொண்டிருக்கின்றார்கள். மற்றவர்கள் தங்களை நினைவுசெய்ய வேண்டும் என்பதற்காக ஒருவருக்கொருவர் ஞாபகார்த்தப் பொருட்களைக் கொடுக்கின்றார்கள். அவர்கள் நிச்சயம் நினைவு செய்யப்படுகின்றார்கள். தந்தையும் இப்பொழுது உங்கள் இராச்சியத்தை நீங்கள் அடைவதற்காகக் குழந்தைகளாகிய உங்களுக்கு அழிவற்ற ஞான இரத்தினங்களைப் பரிசாகக் கொடுக்கின்றார். நீங்களே அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தானம் செய்கின்றீர்கள், ஆகவே நீங்கள் அன்பான புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். தந்தை அனைவருக்கும் நன்மை செய்யவே வந்திருக்கின்றார். ஆகவே நீங்கள் அவரது உதவியாளர்களாகவும் ஆக வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அத்தகைய அன்பான புத்தியைக் கொண்டவர்களே வெற்றியாளர்கள் ஆவார்கள். நினைவைக் கொண்டிருக்காதவர்கள் அன்பான புத்தியைக் கொண்டிருப்பதில்லை. நீங்கள் தந்தை மீது அன்பைக் கொண்டிருந்தால், அவரை நினைவு செய்வீர்கள், உங்கள் பாவங்களும் அழிக்கப்படும். நீங்கள் மற்றவர்களும் நன்மை அடைவதற்குப் பாதையையும் காட்டுவீர்கள். பிராமணக் குழந்தைகளாகிய உங்கள் மத்தியிலும் நீங்கள் அன்பானவர்களா அல்லது அன்பற்றவர்களா என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. நீங்கள் தந்தையை மேலும் அதிகமாக நினைவு செய்தால், உங்களுக்குத் தந்தை மீது அன்பிருக்கின்றது என்பதே அர்த்தமாகும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை நினைவு செய்யுங்கள்! எனது உதவியாளர்கள் ஆகுங்கள்! படைப்புக்கள் படைப்பவராகிய, ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். வேறு எந்தப் படைப்பும் நினைவு செய்யப்படக்கூடாது. உலகில் உள்ள எவருக்குமே படைப்பவர் யார் எனத் தெரியாது, அவர்கள் அவரை நினைவு செய்வதுவும் இல்லை. சந்நியாசிகள் பிரம்ம தத்துவத்தை நினைவு செய்கின்றார்கள், ஆனால் அதுவும் ஒரு படைப்பே. ஒரேயொருவரே அனைவரையும் படைப்பவர் ஆவார். உங்கள் கண்களால் நீங்கள் காணக்கூடிய எதுவும் படைப்பின் ஒரு பாகமேயாகும். உங்களால் தந்தையாகிய படைப்பவரைப் பார்க்க முடியாது. பிரம்மா, விஷ்ணு சங்கரருக்கு உருவங்கள் இருப்பினும், அவர்களும் படைப்பின் ஒரு பாகமே. பாபா உங்களுக்கு உருவாக்கும்படி கூறியுள்ள படங்களின் உச்சியில் நீங்கள் “பரமாத்மாவாகிய பரமதந்தை, திரிமூர்த்தி கடவுள் சிவன் பேசுகின்றார்” என எழுத வேண்டும். ஒருவர் தன்னைக் கடவுள் என அழைக்க முடிந்தாலும், அவரால் தன்னைப் பரமதந்தை என அழைக்க முடியாது. உங்கள் புத்தியின் யோகம் சிவபாபாவுடனே இணைக்கப்பட்டுள்ளதே அன்றி, சரீரத்துடன் அல்ல. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: உங்களை ஒரு சரீரமற்ற ஆத்மா எனக் கருதித் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் அன்பானவர்களா அல்லது அன்பற்றவர்களா என்பதிலேயே நீங்கள் செய்யும் அனைத்துச் சேவையும் தங்கியுள்ளது. நீங்கள் ஆழமான அன்பைக் கொண்டிருக்கும் போது நீங்கள் தந்தையின் சேவையை மிக நன்றாகச் செய்கின்றீர்கள். அப்பொழுது நீங்கள் வெற்றியாளர்கள் என அழைக்கப்படுவீர்கள். அன்பில்லாத பொழுது நீங்கள் எவ்விதமான சேவையையும் செய்ய மாட்டீர்கள். அப்பொழுது உங்கள் அந்தஸ்தும் குறைக்கப்படுகின்றது. குறைந்த அந்தஸ்து என்றால் நீங்கள் உங்கள் உயர்ந்த அந்தஸ்தை அழிக்கின்றீர்கள் என அர்த்தமாகும். உண்மையில் அனைத்தும் அழிக்கப்படும். ஆனால் இது குறிப்பாக அன்பானவர்களாக இருப்பவர்களுக்கும் அன்பற்றவர்களுக்குமே பொருந்துகின்றது. ஒரேயொருவர் மாத்திரமே தந்தையாகிய படைப்பவர். அவருக்கே கூறப்படுகின்றது: பரமாத்மாவாகிய சிவனுக்கு வந்தனங்கள். சிவனது பிறந்தநாள் (ஜெயந்தி) கொண்டாடப்படுகின்றது. நீங்கள் ஒருபொழுதுமே சங்கரரின் பிறந்தநாள் என்று கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். பிரஜாபிதா பிரம்மா என்ற பெயரும் பிரபல்யமானதே. விஷ்ணுவின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாளே கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீகிருஷ்ணருக்கும் விஷ்ணுவிற்கும் இடையிலான வித்தியாசம் வேறு எவருக்கும் தெரியாது. மனிதர்கள் விநாச நேரத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, உங்கள் மத்தியிலும் அன்பான, அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள் இருக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் இந்த ஆன்மீக வியாபாரமானது மிகச் சிறந்தது. இரவுபகலாக உங்களை இச் சேவையில் ஈடுபடுத்துங்கள். மாலை ஆறு மணி முதல் ஏழு மணிவரையான நேரம் சிறந்தது எனக் கூறப்படுகின்றது. ஆன்மீக ஒன்றுகூடல்களும் காலையிலும் மாலையிலும் நடாத்தப்படுகின்றன. இரவில் சூழல் தீயதாகுகின்றது. இரவில் ஆத்மாக்கள் மௌனத்திற்குள் செல்கின்றார்கள். அது உறக்கம் என அழைக்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் அதிகாலையில் விழித்தெழுகின்றார்கள். கூறப்பட்டுள்ளது: ஓ மனமே, அதிகாலை வேளையில் இராமரை நினைவுசெய். தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்! சிவபாபா ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கும் பொழுதே அவரால் கூற முடியும்: “என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்”. நீங்கள் எவ்வளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்கள் என்றும், எவ்வளவு ஆன்மீக சேவையைச் செய்கின்றீர்கள் என்பதுவும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அனைவருக்கும் இந்த அறிமுகத்தைக் கொடுங்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்களால் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக முடியும். கலப்படமானது அகற்றப்படும். ஓர் அன்பான புத்தியைக் கொண்டிருப்பதிலும் சதவீதம் உள்ளது. உங்களுக்குத் தந்தை மீது அன்பு இல்லாவிடின், நிச்சயமாக உங்கள் சொந்தச் சரீரம் அல்லது நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்கள் மீதே அன்பு இருக்கும். தந்தை மீது அன்பைக் கொண்டிருந்தால், நீங்கள் சேவையில் ஈடுபட்டிருப்பீர்கள். தந்தை மீது அன்பில்லாவிடின், நீங்கள் உங்களைச் சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள மாட்டீர்கள். ஒருவருக்கு அல்பாவினதும் பீற்றாவினதும் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. அவர்கள் அவரை நினைவுசெய்து, “ஓ கடவுளே! ஓ பரமாத்மாவே!” என்று கூறுகின்றார்கள், ஆனால் அவர்களுக்கு அவரை அறவே தெரியாது. நீங்கள் நிச்சயமாக ஒவ்வொரு படத்தின் உச்சியிலும் “பரமதந்தை, திரிமூர்த்தி கடவுள் சிவன் பேசுகின்றார்” என எழுத வேண்டும். அப்பொழுது எவராலும் எதையுமே கூற முடியாது என்று உங்களுக்கு பாபா விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் மரக்கன்றுகளை நாட்டுகின்றீர்கள். அனைவரும் வந்து தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைக் பெற்றுக் கொள்ளும் வகையில், அனைவருக்கும் இந்தப் பாதையைக் காட்டுங்கள். அவர்களுக்குத் தந்தையைத் தெரியாததால் அவர்கள் அன்பான புத்தியைக் கொண்டிருப்பதில்லை. பாவங்கள் தொடர்ந்தும் அதிகரித்ததால், மக்கள் முற்றாகவே தமோபிரதான் ஆகிவிட்டார்கள். பெருமளவு நினைவைக் கொண்டிருப்பவர்களே தந்தை மீது அன்பைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே சத்திய யுகத்துப் புத்தியைக் கொண்டிருப்பவர்கள். உங்கள் புத்தி வேறு திசைகளில் அலைந்து திரியுமாயின், நீங்கள் தமோபிரதானாகவே இருப்பீர்கள். நீங்கள் பாபாவின் முன்னால் அமர்ந்திருந்தாலும், நீங்கள் நினைவைக் கொண்டிருக்காவிடின், நீங்கள் ஓர் அன்பான புத்தியைக் கொண்டவர்கள் என்று அழைக்கப்பட மாட்டீர்கள். அன்பான புத்தியின் அடையாளம் நினைவாகும். அத்தகைய ஆத்மாக்கள் இந்த ஞானத்தைக் கிரகிப்பதுடன், மற்றவர்களுக்கு இவ்வாறு கூறுவதனால், மற்றவர்களிலும் கருணையைக் கொண்டிருப்பார்கள்: தந்தையை நினைவு செய்தால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இதனை எவருக்கும் விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. தனது குழந்தைகளுக்கு மாத்திரமே தந்தை சுவர்க்கம் என்ற இராச்சிய ஆஸ்தியைக் கொடுக்கின்றார். சிவபாபா நிச்சயமாக இங்கு வந்திருக்க வேண்டும். இதனாலேயே சிவனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது. கிருஷ்ணர், இராமர் போன்ற அனைவரும் இங்கிருந்து சென்று விட்டார்கள். அதனாலேயே அவர்களின் பிறந்தநாட்கள் கொண்டாடப்படுகின்றன. சிவபாபா வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுப்பதால், அவர்கள் சிவபாபாவையும் நினைவு செய்கின்றார்கள். புதியவர்கள் எவராலும் இதனைப் புரிந்துகொள்ளவே முடியாது. எவ்வாறு கடவுள் வந்து ஆஸ்தியைக் கொடுக்கிறார்? அவர்கள் முற்றாகவே கல்லுப்புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நினைவு செய்வதற்கான புத்திசாலித்தனத்தைக்; கூடக் கொண்டிருப்பதில்லை. தந்தையே கூறுகின்றார்: நீங்கள் அரைக் சக்கரத்திற்கு எனது காதலிகளாகவே இருந்தீர்கள். நான் இப்பொழுது வந்துள்ளேன். நீங்கள் பக்தி மார்க்கத்தில் அதிகளவு அலைந்து திரிந்தீர்கள், ஆனால் நீங்கள் எவருமே கடவுளைக் கண்டடையவில்லை. தந்தை பாரதத்திற்கு வந்து முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையைக் காட்டினார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். ஸ்ரீகிருஷ்ணர் இப் பாதையைக் காட்டுவதில்லை. எவ்வாறு கடவுளை நேசிப்பது எனத் தந்தை வந்து, பாரத மக்களுக்குக் கற்பிக்கின்றார். சிவன் தனது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்ற பாரதத்தில் மாத்திரமே வருகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்குக் கடவுளே அதிமேலானவர் என்பது தெரியும். அவரது பெயரே சிவன். இதனாலேயே சிவனின் பிறந்தநாள் வைரத்தைப் போன்று பெறுமதிமிக்கது என நீங்கள் எழுதுகின்றீர்கள். ஏனைய பிறந்த நாட்கள் அனைத்தும் சிப்பியைப் போன்று பெறுமதி அற்றவை. நீங்கள் இதனை எழுதும்பொழுது, சிலர் குழப்பம் அடைகின்றார்கள். ஆகவே, “கடவுள் சிவன் பேசுகின்றார்” என நீங்கள் ஒவ்வொரு படத்திலும் எழுதும் போது, நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். சில குழந்தைகள் மிகச்சரியாகப் புரிந்து கொள்ளாததால் குழப்பம் அடைந்தவர்களாக இருக்கின்றார்கள். மாயையின் கிரகணம் முதலில் புத்தியையே தாக்குகின்றது. அது தந்தையிடமிருந்து உங்கள் புத்தி யோகத்தைத் துண்டிக்கின்றது. இதன் மூலம் அவர்கள் உச்சியில் இருந்து அடிக்கு வீழ்கின்றார்கள். புத்தியின் யோகம் சரீரதாரிகளில் சிக்குண்டு விடுகின்றது. அத்தகையதோர் ஆத்மா, தந்தை மீது அன்பற்றவர் ஆகுகின்றார் என்பதே அர்த்தம். நீங்கள் அத்தகைய ஒரேயொரு தனித்துவமான, சரீரமற்ற தந்தைமீது அன்பினைக் கொண்டிருக்க வேண்டும். சரீரதாரிகளை நேசிப்பது என்பது சேதத்தை ஏற்படுத்துவதாகும். உங்கள் புத்தியின் யோகம் துண்டிக்கப்பட்டால் நீங்கள் கீழே வீழ்கின்றீர்கள். இது ஓர் அநாதியான, ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட ஒரு நாடகமாகும். இருப்பினும் இது விளங்கப்படுத்தப்பட வேண்டும். எவராவது ஒருவரது புத்தி அன்பற்றதாக இருக்கும் பொழுது, இன்னுமொருவரின் பெயர், ரூபத்தில் சிக்கிக் கொள்ளுதல் என்ற துர்நாற்றம் உள்ளது என்பதையே அது காட்டுகின்றது. இல்லாவிடின், அந்த ஆத்மா சேவையில் ஈடுபட்டிருப்பார். பாபா நேற்று பிரதான விடயம் என்ன என்பதை மிகத்தெளிவாக விளங்கப்படுத்தினார்: கீதையின் கடவுள் யார்? இதன் மூலமே நீங்கள் வெற்றியாளர் ஆகுகிறீர்கள். நீங்கள் அவர்களிடம் வினவுங்கள்: கீதையின் கடவுள் யார்? சிவனா அல்லது ஸ்ரீ கிருஷ்ணரா? யார் சந்தோஷத்தைக் கொடுப்பவர்? சிவனே சந்தோஷத்தைக் கொடுப்பவர். ஆகவே நீங்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். அவரே புகழப்படுகின்றார். இப்பொழுது, கீதையின் கடவுள் யார் என்பதில் உங்கள் வாக்குகளை எங்களுக்குக் கொடுங்கள். சிவனுக்கு வாக்குகளை அளிப்பவர்கள் அன்பான புத்தியைக் கொண்டவர்கள் எனப்படுவார்கள். இதுவே மாபெரும் தேர்தல் ஆகும். நாள் முழுவதும் ஞானக்கடலைக் கடைகின்றவர்களின் புத்தியில் இந்த யுக்திகள் அனைத்தும் பிரவேசிக்கும். சில குழந்தைகள் முன்னேறுகையில் முகம் கோணுகின்றார்கள். ஒரு கணம், அவர்கள் அன்பைக் கொண்டிருக்கின்றார்கள். மறுகணமே, அவர்களின் அன்பு துண்டிக்கப்படுகின்றது. அவர்கள் முகம் கோணுகின்றார்கள். அவர்கள் குழப்பமடையும் போது நினைவு செய்வதையும் நிறுத்தி விடுகின்றார்கள். அவர்கள் ஒரு கடிதத்தைக் கூட எழுதுவதில்லை. அவர்கள் அன்பற்றவர்கள் என்பதே அதன் அர்த்தம். ஆகவே, பாபாவும் அவர்களுக்கு ஆறு முதல் எட்டு மாதங்களுக்குக் கடிதம் எழுத மாட்டார். பாபாவே மகாமரணம் ஆவார். தர்மராஜூம் அவருடனேயே இருக்கின்றார். உங்களுக்குத் தந்தையை நினைவு செய்வதற்கு நேரமில்லை எனில் நீங்கள் என்ன அந்தஸ்தை அடைவீர்கள்? உங்கள் அந்தஸ்தானது அழிக்கப்படும். ஆரம்பத்திலும் உங்கள் அந்தஸ்துக்களைப் பற்றி பாபா மிகவும் சாதுரியமான முறையில் உங்களுக்குக் கூறினார். அக்குழந்தைகள் இப்பொழுது இங்கில்லை. மாலை மீண்டும் ஒருமுறை உருவாக்கப்பட வேண்டியிருந்தது. சேவை செய்பவர்களையே பாபாவும் தொடர்ந்தும் புகழ்வார். சக்கரவர்த்திகள் ஆகப் போகின்றவர்கள் தங்கள் சகபாடிகளும் தங்களைப் போல் ஆகவேண்டும், தங்களைப் போல் ஆட்சி செய்யத் தக்கவர்களாக வேண்டும் என்றே கூறுவார்கள். ஓர் அரசர் அன்னதாத்தா (உணவை அளிப்பவர்) ஆகவும் தாயும் தந்தையுமாகவும் இருக்கிறார். இங்குள்ள அன்னை ஜெகதாம்பாள் என அழைக்கப்படுகின்றார். அவரிடமிருந்தே நீங்கள் எல்லையற்ற பொக்கிஷங்களைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். நீங்கள் முயற்சி செய்வதனால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற வேண்டும். நாளுக்கு நாள், ஒவ்வொருவரும் எவ்வாறு ஆகுவார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் கண்டுகொள்வீர்கள். நீங்கள் சேவை செய்யும்பொழுதே தந்தை உங்களை நினைவு செய்வார். நீங்கள் சேவை செய்யாவிடின், தந்தை ஏன் உங்களை நினைவுசெய்ய வேண்டும்? அன்பான புத்தியைக் கொண்ட குழந்தைகளையே தந்தை நினைவு செய்கின்றார். எவராவது ஒருவர் கொடுத்தவற்றை நீங்கள் அணிந்தால், நீங்கள் நிச்சயமாக அவரையே நினைவு செய்வீர்கள் எனவும் பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து நீங்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் பொழுது நீங்கள் சிவபாபாவை மாத்திரமே நினைவு செய்வீர்கள். பாபாவும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார். நிச்சயமாக நினைவு இருக்கின்றது. ஆகவே, நீங்கள் வேறு எவராலும் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள எதனையுமே வைத்திருக்கக்கூடாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தனித்துவமான, சரீரமற்ற தந்தை மீது இதயபூர்வமான உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். மாயையின் கிரகணங்கள் எதுவும் உங்கள் புத்தியைத் தாக்காதவாறு எப்பொழுதும் கவனத்தைச் செலுத்துங்கள்.

2. ஒருபொழுதும் தந்தையுடன் முகம் கோணாதீர்கள். சேவை செய்பவராகி உங்கள் எதிர்காலத்தை மேன்மையானதாக ஆக்குங்கள். மற்றவர்களால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சுத்தத்திற்கான வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் தடைகளில் இருந்து விடுபட்ட சதா வெற்றியாளராகிக் கோட்டையைப் பலம்வாய்ந்தது ஆக்குவீர்களாக.

இந்தக் கோட்டையில் உள்ள ஒவ்வோர் ஆத்மாவும் வெற்றியாளராகவும் தடைகளில் இருந்து விடுபட்டும் இருப்பதற்கு, ஒரே குறிப்பிட்ட வேளைகளில் எங்கும் யோகா நிகழ்ச்சிகளை நடத்துங்கள். நீங்கள் சேவை செய்வதை அதிகரிக்கும் அளவிற்கு மாயையும் உங்களைத் தனக்கு உரியவள் ஆக்குவதற்கு முயற்சி செய்வாள் என்றாலும் எவராலும் இந்தப் பந்தனத்தை வெட்டிவிட முடியாது. ஆகவே, எந்தவொரு பணியை ஆரம்பிக்க முன்னரும் நீங்கள் சுத்தப்படுத்துவதைப் போன்று, மேன்மையான ஆத்மாக்களான உங்கள் எல்லோருக்கும் வெற்றியாளராக இருக்கும் ஒரே தூய எண்ணம் இருக்க வேண்டும். சுத்தம் என்ற இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தக் கோட்டை பலம் வாய்ந்தது ஆகிவிடும்.

சுலோகம்:
யுக்தியுக்தான, மிகச்சரியான சேவை செய்வதன் உடனடி மற்றும் நடைமுறைப் பலன், சந்தோஷமே ஆகும்.

அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

பிராமணக் குடும்பத்தின் முதலாம் இலக்கக் கலாச்சாரம், சத்தியமும் நல்ல பண்புகளும் ஆகும். இந்த பிராமணக் கலாச்சாரம் ஒவ்வொருவரின் முகத்திலும் அவர்களின் நடத்தையிலும் புலப்பட வேண்டும். ஒவ்வொரு பிராமணரும் மற்றவர்களுடன் பழகும்போது புன்னகை செய்ய வேண்டும். ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், உங்களின் பிராமணக் கலாச்சாரத்தை ஒருபோதும் கைவிடாதீர்கள். அப்போது இலகுவாக இறைவனை வெளிப்படுத்துவதற்கு நீங்கள் ஒரு கருவி ஆகுவீர்கள்.