01.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையே ஞானம் நிறைந்தவர். ஜனிஜனன்ஹார், (ஒவ்வொருவரின் இதயத்திலும் இருப்பதை அறிந்தவர்) என்று அவரை அழைப்பது அவரின் தவறான புகழ்ச்சியாகும். தந்தை உங்களைத் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக மாற்றுவதற்கே வருகின்றார்.
கேள்வி:
தந்தையின் புகழுடன், வேறு எவருக்கு அதிகளவு புகழ் இருக்கின்றது? அந்தப் புகழ் என்ன?பதில்:
1) தந்தையின் புகழுடன், பாரதமும் பெருமளவு புகழப்படுகின்றது. பாரதமே அழிவற்ற தேசம். பாரதம் மாத்திரமே சுவர்க்கம் ஆகுகின்றது. தந்தை பாரத மக்களைச் செல்வந்தர்களாகவும், சந்தோஷம் ஆனவர்களாகவும் தூய்மை ஆனவர்களாகவும் ஆக்குகின்றார்.
2) கீதையின் எல்லையற்ற புகழும் உள்ளது. அதுவே அனைத்துச் சமயநூல்களினதும் தாயாக, இரத்தினமாக இருக்கின்றது.
3) வாழும் ஞான கங்கைகளான உங்களுக்கும் பெருமளவு புகழ் உள்ளது. நீங்கள் நேரடியாகவே ஞானக்கடலில் இருந்து வெளிப்பட்டுள்ளீர்கள்.ஓம் சாந்தி.
“ஓம் சாந்தி” என்பதன் அர்த்தத்தைப் புதிய குழந்தைகளும், பழைய குழந்தைகளும் புரிந்து கொள்கின்றார்கள். நாங்கள் அனைவரும் ஆத்மாக்கள் என்றும், நாங்கள் பரமாத்மாவாகிய, பரமதந்தையின் குழந்தைகள் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பரமாத்மாவே அதிமேலானவரும், அதிகம் நேசிக்கப்படுபவரும் ஆவார். அவர் அனைவரினதும் அன்பிற்கினியவர். ஞானத்தினதும், பக்தியினதும் முக்கியத்துவம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஞானம் என்றால் சத்திய, திரேதா யுகங்களாகிய பகல் எனவும், பக்தி என்றால் துவாபர, கலியுகங்களாகிய இரவும் ஆகும். இவை அனைத்தும் பாரதத்தையே குறிக்கின்றது. பாரத மக்களாகிய நீங்களே, முதலில் கீழிறங்கி வருபவர்கள். 84 பிறவிகளுக்கான சக்கரம் பாரத மக்களாகிய உங்களுக்கானது. பாரதம் அழியாத பூமி. பாரத தேசமே சுவர்க்கம் ஆகுகின்றது; வேறு எந்தத் தேசமும் சுவர்க்கம் ஆகுவதில்லை. புதிய உலகமாகிய சத்தியயுகத்தில் பாரதம் மாத்திரமே இருக்கும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பாரதம் மாத்திரமே சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. பின்னர் பாரதவாசிகள் 84 பிறவிகள் எடுக்கும்பொழுது, நரகவாசிகள் ஆகுகின்றார்கள். நரகவாசிகளில் இருந்து பின்னர் அவர்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றனர். தற்பொழுது அனைவரும் நரகவாசிகளே. பாரதம் மாத்திரமே மீதமாக இருக்கும். ஏனைய அனைத்துத் தேசங்களும் அழிக்கப்படும். பாரத தேசத்தின் புகழ் அளவற்றது. பாரதத்திலேயே தந்தை வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இதுவே கீதையின் யுகமாகிய, அதிமேன்மையான சங்கமயுகமாகும். பாரதம் மாத்திரமே அதிமேன்மையான தேசமாக ஆகவுள்ளது. தற்பொழுது, ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இல்லை. அந்த இராச்சியமோ அல்லது அந்த யுகமோ இல்லை. கடவுள் மாத்திரமே உலக சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கடவுள் அந்தர்யாமி(ஒவ்வொருவருக்கு உள்ளேயும் என்ன உள்ளது என்பதை அறிந்தவர்), அத்துடன் ஒவ்வொருவரின் இதயத்திலும் என்ன உள்ளது என்பதையும் அறிந்தவர் எனக் கூறுவதன் மூலம் பாரத மக்கள் பெரிய தவறைச் செய்துள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: ஒவ்வொருவருக்கு உள்ளேயும் என்ன உள்ளது என்பது எனக்குத் தெரியாது. எனது பணி தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதே ஆகும். பலரும் கூறுகின்றார்கள்: சிவபாபா, நீங்கள் அந்தர்யாமி. பாபா கூறுகின்றார்: நான் அவ்வாறானவர் அல்ல. ஒவ்வொருவரின் இதயத்திலும் என்ன உள்ளது என எனக்குத் தெரியாது. நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கே வருகின்றேன். நீங்கள் என்னைத் தூய்மையற்ற உலகிலேயே வரவழைக்கின்றீர்கள். பழைய உலகம் புதியதாக ஆக்கப்படும் பொழுது, ஒருமுறை மாத்திரமே நான் வருகிறேன். மக்களுக்கு எப்பொழுது பழைய உலகம் புதிதாக ஆகுகின்றது என்றோ, அல்லது எப்பொழுது புதிய உலகம் பழையது ஆகுகின்றது என்றோ தெரியாது. சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்வதால், அனைத்தும் நிச்சயமாகப் புதியதிலிருந்து பழையதாக மாறுகின்றன. மனிதர்களும் இவ்வாறே ஆகுகின்றார்கள். ஒரு சிறுகுழந்தை முதலில் சதோபிரதானாக இருந்து பின்னர் அவர் இளைஞராகி, பின்னர் வயோதிபர் ஆகுகின்றார். அதாவது, அவர் ரஜோ, தமோ ஸ்திதிகளின் ஊடாகச் செல்கின்றார். ஒருவரது சரீரம் முதுமை அடையும் பொழுது, ஆத்மா அச் சரீரத்தை விட்டு நீங்கி இன்னொரு சரீரத்தில் மீண்டும் ஒரு குழந்தையாகப் பிரவேசிக்கின்றார். புதிய உலகில் பாரதம் எவ்வளவு மேன்மையாக இருந்தது எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாரதத்தின் புகழ்ச்சி அளவற்றது, பாரதத்தைப் போல் சந்தோஷமாகவும், செல்வம் நிறைந்ததாகவும், தூய்மையாகவும், எந்த ஒரு நாடும் இருந்ததில்லை. தந்தை இப்பொழுது அதை மீண்டும் சதோபிரதான் ஆக்குவதற்கு வந்துள்ளார்; சதோபிரதான் உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. யார் திரிமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சங்கரரை உருவாக்கினார்? சிவபாபாவே அதிமேலானவர். மக்கள் திரிமூர்த்தி பிரம்மாவைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. உண்மையில் அவர்கள் திரிமூர்த்தி சிவன் என்றே கூறவேண்டும், திரிமூர்த்தி பிரம்மா என்றல்ல. அவர்கள் தேவர்கள் அனைவரிலும் அதிமகத்துவமான தேவர் பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள் சங்கரரே அதிமேலானவர் என நம்புகிறார்கள். ஆகையினால், அவர்கள் திரிமூர்த்தி சங்கரர் எனக் கூறவேண்டும். அவர்கள் ஏன் “திரிமூர்த்தி பிரம்மா” எனக் கூறுகின்றார்கள்? சிவனே படைப்பவர். பரமாத்மாவாகிய பரமதந்தை, பிரம்மாவின் மூலம் பிராமணர்களைப் படைக்கின்றார் என நினைவு கூரப்படுகின்றது. பக்தி மார்க்கத்தில் மக்கள் ஞானம் நிறைந்த தந்தையை ‘ஜனிஜனன்ஹார்’ (ஒவ்வொருவரின் இதயத்திலும் இருப்பதை அறிந்தவர்) என அழைக்கின்றார்கள். அந்தப் புகழ் அர்த்தமற்றது. நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரே பிராமணர்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார். ஏன்? அவரே தந்தையும், பரம ஆசிரியரும் ஆவார். அவர் உலக வரலாறையும், புவியியலையும், எவ்வாறு நீங்கள் சக்கரத்தைச் சுற்றிச் செல்கின்றீர்கள் என்பதையும் விளங்கப்படுத்துகின்றார். அவர் மாத்திரமே ஞானம் நிறைந்தவர். அவர் ஜனிஜனன்ஹார் என்பதல்ல. அது ஒரு தவறாகும். நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கி, 21 பிறவிகளுக்கு அவர்களின் இராச்சியப் பாக்கியத்தைக் கொடுப்பதற்கே வருகின்றேன். சந்நியாசிகளும், ஹத்தயோகிகளும் அறிந்திராத, பக்திமார்க்கத்தின் சந்தோஷம் தற்காலிகமானது. அவர்கள் பிரம்ம தத்துவத்தை நினைவு செய்கிறார்கள். பிரம்ம தத்துவம் கடவுளல்ல. அசரீரியான சிவன் மாத்திரமே கடவுள் அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். ஆத்மாக்கள் அனைவரினதும் வசிப்பிடமும் இனிய வீடாகிய, பிரம்மாண்டம் ஆகும். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்களுடைய பாகங்களை நடிப்பதற்காக அங்கிருந்து இங்கு வருகின்றோம். ஆத்மா கூறுகின்றார்: நான் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு, இரண்டாவது, மூன்றாவது சரீரத்தையும் எடுக்கிறேன். பாரதமக்கள் மாத்திரமே 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். பெருமளவு பக்தி செய்துள்ளவர்கள், அதிகளவில் இந்த ஞானத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழ்ந்தாலும், ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் ஒரேயொரு பரமாத்மாவான, அன்பிற்கினியவரின் காதலிகள். நீங்கள் அவரைப் பக்தி மார்க்கத்தின் ஆரம்பத்தில் இருந்தே நினைவு செய்கின்றீர்கள். ஆத்மாக்கள் தந்தையை நினைவு செய்கின்றார்கள். இது துன்ப பூமி. ஆத்மாக்களாகிய நாங்கள் ஆரம்பத்தில் அமைதி தாமவாசிகளே. பின்னர் நாங்கள் சந்தோஷ தாமத்துக்குச் சென்று, 84 பிறவிகளை எடுக்கின்றோம். “ஹம்ஸோ, சோஹம்” (எவ்வாறு இருந்தேனோ அவ்வாறு ஆகுவேன்) என்பதன் அர்த்தமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த மக்கள் ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா என்றும், பரமாத்மா ஒவ்வோர் ஆத்மாவிலும் உள்ளார் என்றும் கூறுகின்றார்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தி உள்ளார்: நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள், பின்னர் சத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவும் ஆகினீர்கள். நாங்கள் மீண்டும் தேவர்கள் ஆகுவதற்காக, இப்போது பிராமணர்களாகி உள்ளோம். இதுவே இதன் உண்மையான அர்த்தம். மற்றைய விளக்கம் முற்றிலும் தவறானது. சத்திய யுகத்தில் ஒரு தேவ தர்மம் மாத்திரமே இருந்தது; அது பிரிவினையற்ற இராச்சியமாக இருந்தது. பின்னர் ஏனைய மதங்கள் ஆரம்பித்த பொழுது, அது பிரிவினைக்கு உட்பட்டது. துவாபரயுகம் ஆரம்பமாகிய பொழுது இராவணனின் அசுர இராச்சியமும் ஆரம்பமாகியது. சத்தியயுகத்தில் இராவண இராச்சியம் இல்லை என்பதால் அங்கு ஐந்து விகாரங்களும் இல்லை. அந்த உலகம் முற்றிலும் விகாரமற்றது. நீங்கள் இறை மாணவர்கள். அந்த ஒரேயொருவரே தந்தை. நீங்கள் அவருடைய மாணவர்கள் என்பதால், அவர் ஆசிரியரும் ஆவார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குச் சற்கதியை அளித்து, சுவர்க்கத்துக்கு அனுப்புகின்றார். ஆகவே, அவர் மூவரும் ஆவார்: தந்தை, ஆசிரியர், சற்குரு. நீங்கள் அவரது குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். ஆகவே, உங்களுக்குள் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். ஏனைய மக்கள் எதையுமே அறியார்கள். இது இராவணனின் இராச்சியம் என்பதால் அந்த மக்கள் எதையுமே அறிய மாட்டார்கள். மக்கள் இராவணனின் கொடும்பாவியை ஒவ்வொரு வருடமும் எரிக்கின்றார்கள். ஆனால், அவர்களுக்கு இராவணன் யார் என்று தெரியாது. இராவணனே பாரதத்தின் மாபெரும் எதிரி எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த ஞானமானது ஞானம் நிறைந்த தந்தையால் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே கொடுக்கப்படுகின்றது. அந்தத் தந்தை மாத்திரமே ஞானக்கடலும், பேரானந்தக் கடலும் ஆவார். முகில்களாகிய நீங்கள் ஞானக் கடலினால் நிரப்பப்படுகின்றீர்கள், பின்னர் நீங்கள் சென்று ஞான மழையைப் பொழிவீர்கள். நீங்களே ஞான கங்கைகள், நீங்களே புகழப்படுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களைத் தூய்மை ஆக்குவதற்கே வந்துள்ளேன். இந்த ஒரு பிறவியில் தூய்மை ஆகுங்கள், என்னை நினைவுசெய்யுங்கள், அப்பொழுது நீங்கள் தமோபிரதானில் இருந்து, சதோபிரதான் ஆகுவீர்கள். நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். இயலுமானவரை உங்கள் நினைவை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய வாயினால் “சிவபாபா, சிவபாபா” எனக் கூற வேண்டியதில்லை. ஒரு காதலி தனது அன்பிற்கினியவரை நினைவு செய்கிறாள். அவர்கள் ஒருவரையொருவர், ஒருமுறை பார்த்தாலும், அவர்களின் புத்திகள் ஒருவரையொருவர் மாத்திரமே நினைவு செய்கின்றன. பக்தி மார்க்கத்தில், ஒருவர் குறிப்பிட்ட தேவரை நினைவுசெய்து, அவரைப் பூஜிக்கையில், அவரது காட்சியைக் காண்கின்றார். அது ஒரு தற்காலிகமான காலத்துக்கானது. பக்தி செய்கையில் அவர்கள் தொடர்ந்தும் கீழே இறங்குகின்றார்கள். இப்பொழுது உங்கள் முன்னால் மரணம் நிற்கின்றது. விரக்திக் கூக்குரலுக்குப் பின், வெற்றி முழக்கம் ஏற்படும். பாரதத்தில் இரத்த ஆறு பாய வேண்டும். உள்நாட்டு யுத்தத்துக்கான அடையாளங்கள் இப்பொழுது புலப்படுகின்றன. அனைத்தும் தமோபிரதானாகி விட்டது. நீங்கள் இப்பொழுது சதோபிரதான் ஆகுகின்றீர்கள். சென்ற கல்பத்தில் தேவர்கள் ஆகியவர்கள் தந்தையிடமிருந்து அதே ஆஸ்தியைக் கோருவார்கள். குறைந்தளவு பக்தி செய்தவர்கள், குறைவாகவே இந்த ஞானத்தை எடுப்பார்கள். அவர்களும் பிரஜைகளிடையே வரிசைக்கிரமமாக அந்தஸ்தைக் கோருவார்கள். நல்ல முயற்சியாளர்கள், ஸ்ரீமத்தைப் பின்பற்றி, நல்லதோர் அந்தஸ்தைக் கோருகிறார்கள். உங்களுக்கு நல்ல பண்புகள் தேவை. உங்களுடன் 21 பிறவிகளுக்கு நீடிக்கும் அளவிற்குத் தெய்வீகக் குணங்களை மிக நன்றாகக் கிரகியுங்கள். இப்பொழுது அனைவரும் அசுர குணங்களைக் கொண்டுள்ளார்கள். இது தூய்மையற்ற, அசுர உலகமாகும். உலகின் வரலாறும், புவியியலும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நினைவு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் நிஜத்தங்கம் ஆகுவீர்கள். சத்திய யுகமே தங்க யுகம் ஆகும். அது தூய தங்கமாகும், பின்னர் வெள்ளியுகத்தில் வெள்ளியின் கலப்படம் இருக்கின்றது; கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. இப்பொழுது எந்தக் கலைகளும் மீதமாக இல்லை. உலகம் அத்தகைய நிலையை அடைகின்ற பொழுதே தந்தை வருகின்றார். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இராவண இராச்சியத்திலுள்ள அனைவரும் மிகவும் விவேகம் இல்லாதவர்கள் ஆகிவிட்டார்கள். இந்த எல்லையற்ற நாடகத்தில் அவர்கள் நடிகர்களாக இருந்த பொழுதிலும், நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றி அறியார்கள். நீங்களும் நடிகர்களே, நீங்கள் உங்களுடைய பாகங்களை நடிப்பதற்காகவே இங்கே வந்துள்ளீர்கள் என அறிவீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் நடிகர்கள் என்று அறிந்திருந்தாலும், இந்த நாடகம் பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லை. ஆகவே எல்லையற்ற தந்தை கூறுவார்: நீங்கள் மிகவும் விவேகமற்றவர்கள் ஆகிவிட்டீர்கள்.நான் இப்பொழுது உங்களை வைரங்களைப் போல் விவேகமானவர்கள் ஆக்குகின்றேன். பின்னர் இராவணன் உங்களைச் சிப்பிகள் போன்று ஆக்குகின்றான். நான் மாத்திரமே வந்து உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்கின்றேன். பின்னர் இந்தத் தூய்மையற்ற உலகம் அழிக்கப்படும். நான் அனைவரையும் நுளம்புக்கூட்டம் போன்று திரும்ப அழைத்துச் செல்வேன். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்களின் முன்னால் உள்ளன. நீங்கள் அவர்களைப் போலாக வேண்டும். அப்பொழுது மாத்திரமே நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவீர்கள். பிரம்மா குமாரர்கள், பிரம்மா குமாரிகளாகிய நீங்கள் இந்த முயற்சியைச் செய்கின்றீர்கள். மக்களின் புத்தி தமோபிரதானாக ஆகிவிட்டன. அதனால், பிரம்மா குமாரர்களும், பிரம்மா குமாரிகளுமான உங்களிற் பலர் இருப்பதால், நிச்சயமாக பிரஜாபிதா பிரம்மாவும் இருக்கவேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. பிராமணர்களே உச்சிக்குடுமிகள்; பின்னர் அவர்கள் தேவர்கள் ஆகுகின்றனர். அவர்கள் பிராமணர்களாகிய உங்களையும், சிவனையும் படங்களிலிருந்து அகற்றி விட்டார்கள். பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதுடன் நல்ல பண்புகளையும் கிரகியுங்கள்.2. ஒரேயொரு அன்பிற்கினியவரை மாத்திரம் நினைவுசெய்கின்ற, உண்மையான காதலிகள் ஆகுங்கள். தொடர்ந்தும் உங்கள் நினைவுசெய்யும் பயிற்சியை இயன்றளவு அதிகரித்துக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு கருவி என்ற விழிப்புணர்வினால் டபிள் லைற்றாகி, மாயையின் வாயில்களை மூடுவீர்களாக.தங்களைக் கருவிகளாகக் கருதி சதா முன்னேறுபவர்கள் இயல்பாகவே இலேசான மற்றும் ஒளியான ஸ்திதியை அனுபவம் செய்கிறார்கள். ‘கரன்கரவன்ஹார் என்னைத் தூண்டுகிறார், நான் ஒரு கருவி’ என்ற இந்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள். நீங்கள் வெற்றியை அனுபவம் செய்வீர்கள். ‘நான்’ என்ற உணர்வைக் கொண்டிருப்பதெனில் மாயையின் வாயில்களைத் திறத்தல் என்று அர்த்தம். உங்களை ஒரு கருவியாகக் கருதுதல் என்றால் மாயையின் வாயில்களை மூடுதல் என்று அர்த்தம். உங்களை ஒரு கருவியாகக் கருதுவதன் மூலம் நீங்கள் மாயையை வென்றவர் ஆகுவதுடன் இலேசாகவும் ஒளியாகவும் ஆகுகிறீர்கள். இத்துடன்கூடவே, நீங்கள் வெற்றியும் பெறுகிறீர்கள். இந்த விழிப்புணர்வானது நீங்கள் முதலாம் இலக்கத்தைப் பெறுவதற்கு அடிப்படை ஆகுகிறது.
சுலோகம்:
திரிகாலதரிசியாக இருந்தவண்ணம் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். நீங்கள் இலகுவாக வெற்றி பெறுவீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வால் சதா வெற்றி பெறுபவராக இருங்கள்.
சிவசக்தி என்பதன் அர்த்தம், தந்தையுடன் ஒன்றிணைந்து இருப்பதேயாகும். தந்தையும் நானும்: இருவரும் ஒன்றாக இருப்பதே சிவசக்தி எனப்படுகிறது. இணைந்து இருப்பவர்களை எவராலும் பிரிக்க முடியாது. நீங்கள் ஒன்றிணைந்து இருப்பதற்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதை நினைவில் வைத்திருங்கள். முன்னர், நீங்கள் தேடிக் கொண்டிருந்தீர்கள். இப்போது நீங்கள் அவருடன் இருப்பவர்கள். சதா இந்த போதையுடன் இருங்கள்.
மாதேஷ்வரியின் மேன்மையான வாசகங்கள்
1) மனித ஆத்மாக்கள் தங்கள் முழுமையான வருமானத்திற்கேற்ப தங்கள் எதிர்கால வெகுமதியை அனுபவம் செய்கின்றார்கள்.
பாருங்கள், பலர் தங்களின் கடந்த பிறவிகளின் நல்ல வருமானத்தின் காரணமாகவே இந்நேரத்தில் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளதாக எண்ணுகின்றார்கள். எவ்வாறாயினும், அது அவ்வாறல்ல. நாங்கள் எங்களுடைய கடந்த பிறவிகளின் நல்ல பலனைப் பெற்றுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம். கல்ப விருட்சம் தொடர்ந்தும் சுழன்று, சதோவிலிருந்து ரஜோவிற்கும், தமோவிற்கும் மாறுகின்றது. ஆனால் நாடகத்திற்கேற்ப, முயற்சி செய்வதால் ஒரு வெகுமதியை உருவாக்குவதற்கும் ஓர் எல்லை உள்ளது. இதனாலேயே சத்தியயுகத்தில் சிலர் அரசர்களும் அரசிகளும், சிலர் வேலையாட்களும், ஏனையோர் பிரஜைகளின் அந்தஸ்தையும் கொண்டுள்ளனர். அங்கே பிரிவினை இல்லை, பொறாமை இல்லை, அங்கேயுள்ள பிரஜைகளும் சந்தோஷமாக உள்ளனர் என்பதே இந்த முயற்சியின் வெகுமதியாகும். ஒரு தாயும் தந்தையும் தங்கள் குழந்தைகளைப் பராமரிப்பது போல் அரசரும் அரசியும் தமது மக்களைப் பராமரிப்பார்கள். அங்கே ஏழைகள், செல்வந்தர்கள் அனைவரும் திருப்தியாக இருக்கின்றனர். இந்த ஒரு பிறவியில் நீங்கள் செய்கின்ற முயற்சியால், 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். இந்த வருமானம் அழிவற்றது. இந்த அழிவற்ற வருமானத்தில் இருந்தும், அழிவற்ற ஞானத்தில் இருந்தும் நீங்கள் ஓர் அழிவற்ற அந்தஸ்தைப் பெறுவீர்கள். நாங்கள் இப்பொழுது சத்தியயுக உலகிற்குச் செல்கின்றோம். இது நடிக்கப்படுகின்ற, ஒரு நடைமுறை ரீதியான நாடகம் ஆகும். இங்கே இது மந்திர வித்தைக்கான ஒரு கேள்வி அல்ல.
2) குருவினதும், சமயநூல்களினதும் வழிகாட்டல்கள், கடவுளின் வழிகாட்டல்கள் அல்ல.
கடவுள் கூறுகின்றார்: குழந்தைகளே, அந்தக் குருமார்களினதும் சமயநூல்களினதும் வழிகாட்டல்கள் எனது வழிகாட்டல்கள் அல்ல. அவர்கள் எனது பெயரில் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்கள். ஆனால் உண்மையில் எனது வழிகாட்டல்களை நான் அறிவேன். நான் வந்து என்னைச் சந்திப்பதைப் பற்றி உங்களுக்குக் கூறுகின்றேன். அதற்கு முன்னர் எவரும் எனது முகவரியை அறிந்திருக்கவில்லை. கீதையில் “கடவுளின் வழிகாட்டல்கள்” பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், மனிதர்களே கீதையை எழுதினார்கள். கடவுளே ஞானக்கடல். கடவுள் பேசிய மேன்மையான வாசகங்களின் ஞாபகார்த்தமே கீதை ஆகும். கடவுள் மேன்மையான வாசகங்களைச் சம்ஸ்கிருதத்திலேயே பேசினார் எனவும், அதனைக் கற்காமல் எங்களால் கடவுளைச் சந்திக்க முடியாது எனவும் கல்விமான்களும், பண்டிதர்களும், ஆசிரியர்களும் கூறுகின்றார்கள். அவர்கள் மேலும் அதிகமாகக் கிரியைகளின் கர்மத்தில் எங்களைச் சிக்க வைத்தனர். வேதங்களையும், சமயநூல்களையும் கற்ற பின்னர் நாங்கள் ஏணியில் ஏறியிருந்தால், பின்னர் நாங்கள் அதேயளவிற்குக் கீழே இறங்கி வர வேண்டும். அதாவது, நாங்கள் அவற்றை எல்லாம் மறக்க வேண்டும். எங்கள் புத்தியின் யோகத்தை ஒரேயொரு கடவுளுடன் இணைக்க வேண்டும். ஏனெனில் கடவுள் தெளிவாகக் கூறுகின்றார்: நீங்கள் அந்தக் கிரியைகளின் கர்மத்தால் அல்லது வேதங்களாலும், சமயநூல்களாலும் என்னைக் கண்டடைய முடியாது. துருவனும் பிரகலாதனும் மீராவும் (சமயநூல்களில் குறிப்பிடப்படுகின்ற பக்தர்கள்) எந்தச் சமயநூல்களைக் கற்றார்கள்? இங்கே நீங்கள் கற்றுள்ள அனைத்தையும் கூட மறக்க வேண்டும். உதாரணமாக, அர்ஜுனர் கற்றார், அவர் அவை அனைத்தையும் மறந்து விட வேண்டியிருந்தது. கடவுளின் தெளிவான மேன்மையான வாசகங்கள்: ஒவ்வொரு மூச்சிலும் என்னை நினைவுசெய்யுங்கள். இதற்காக எதனையும் செய்ய வேண்டிய தேவையில்லை. நீங்கள் இந்த ஞானத்தைப் பெறும் வரையில், அது பக்தி மார்க்கமாக இருக்கின்றது. எவ்வாறாயினும், இந்த ஞான தீபம் ஏற்றப்படும் பொழுது, கிரியைகளின் கர்மம் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்கள் ஆகுகின்றீர்கள். அந்தப் பௌதீக விடயங்கள் அனைத்தையும் செய்யும்பொழுது, நீங்கள் உங்களுடைய சரீரத்தை விட்டு நீங்கினால், என்ன நன்மையைப் பெறுவீர்கள்? ஒரு வெகுமதியை நீங்கள் உருவாக்கவும் இல்லை, கர்ம பந்தனங்களின் கர்மக் கணக்குகளில் இருந்து விடுதலை பெறவும் இல்லை. பொய் சொல்லாமல் இருத்தல், திருடாமை, எவருக்கும் துன்பம் கொடுக்காமை என்பன நல்ல செயற்பாடுகள் என மக்கள் எண்ணுகின்றார்கள். எவ்வாறாயினும், இங்கே நீங்கள் உங்களைக் கர்ம பந்தனங்கள் அனைத்தில் இருந்தும் சதா காலத்திற்குமாக விடுவித்து, பாவச் செயல்களின் வேர்களையும் அகற்ற வேண்டும். நல்ல செயல்களின் விருட்சம் வெளிப்படும் வகையில் அத்தகைய நல்ல விதைகளை விதைப்பதற்கு இப்பொழுது நாங்கள் விரும்புகின்றோம். எனவே மனித வாழ்வின் பணியை அறிந்து, மேன்மையான கர்மத்தைச் செய்யுங்கள். அச்சா.