01.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே. நீங்கள் அனைவரும் ஆன்மீகச் சகோதரர்கள். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் ஆன்மீக அன்பைக் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் ஆத்மாக்கள் மீது அன்பு கொண்டிருக்க வேண்டுமே அன்றி அவர்களின் சரீரத்தின் மீது அல்ல.

பாடல்:
தந்தை தனது வீட்டைப்பற்றிய எந்த அற்புதமான விடயத்தை விளங்கப்படுத்தியுள்ளார்?

பதில்:
எனது வீட்டுக்கு வருகின்ற ஆத்மாக்கள் அனைவரும் நிச்சயிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் வரிசைக்கிரமமாகத் தத்தமது பிரிவுகளில் உள்ளார்கள். ஆத்மாக்கள் அங்கிருந்து இடம்பெயர்வதில்லை. அங்கே சகல சமயத்தைச் சேர்ந்த ஆத்மாக்கள் அனைவரும் எனக்கு அருகில் உள்ளார்கள். ஆத்மாக்கள் தங்களது பாகத்தை நடிப்பதற்காகத் தங்களது சொந்த நேரத்தில் வரிசைக்கிரமமாகக் கீழிறங்குகிறார்கள். சக்கரத்தின் இக்காலத்தில் மாத்திரம் ஒரே ஒரு முறையே நீங்கள் இந்த அற்புதமான ஞானத்தைப் பெறுகிறீர்கள். இந்த ஞானத்தை வேறு எவராலும் கொடுக்க முடியாது.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்களாகிய எங்களின் தந்தையே எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதையும், தானே ஆத்மாக்களின் தந்தை என அவர் கருதுகின்றார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உணர்வு வேறு எவரிடமும் இல்லை. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள் என வேறு எவரும் உங்களிடம் ஒருபொழுதும் கூறவும் முடியாது. தந்தை இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்த ஞானத்தின் உங்கள் வெகுமதியை புதிய உலகில், உங்கள் முயற்சிக்கேற்ப, நீங்கள் வரிசைக் கிரமமாகப் பெறுவீர்கள். இவ்வுலகம் மாற்றியமைக்கப்படப் போகின்றதென்றும், அதனைத் தந்தையே மாற்றியமைக்கப் போகிறார் என்பதையும் அனைவராலும் நினைவு செய்ய முடியும் என்றில்லை. இங்கே, நீங்கள் அவரின் முன்னால் நேரடியாகவே அமர்ந்துள்ளீர்கள், ஆனால் நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றதும், உங்கள் வியாபாரம் போன்றவற்றில் நாள் முழுவதும் மும்மரமாகி விடுவீர்கள். தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, நீங்கள் எங்கிருந்தாலும் என்னை நினைவு செய்யுங்கள்! ஒரு குமாரிக்குத் தனது கணவராக வரப்போகிறவர் யார் என்று அவளுக்குத் தெரியாது. ஆனாலும் அவள் அவரது புகைப்படத்தைப் பார்த்ததும் அந்த நினைவு நிலைத்து விடுகிறது. அவர்கள் எங்கிருந்தாலும், ஒருவரையொருவர் நினைவு செய்கிறார்கள். அது லௌகீக அன்பு என அழைக்கப்படுகிறது, ஆனால் இதுவோ ஆன்மீக அன்பாகும். நீங்கள் யார் மீது ஆன்மீக அன்பைக் கொண்டிருக்கிறீர்கள்? குழந்தைகள், ஆன்மீகத் தந்தை மீது அன்பு கொண்டுள்ளதுடன், குழந்தைகளும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டுள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவர் மீது ஒருவர் அதிகளவு அன்பு கொண்டிருக்க வேண்டும். அதாவது ஆத்மாக்கள், ஆத்மாக்கள் மீது அன்பு கொண்டிருக்க வேண்டும். இந்நேரத்திலேயே குழந்தைகளாகிய நீங்கள் இந்தக் கற்பித்தல்களைப் பெறுகிறீர்கள். உலக மக்களுக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் அனைவரும் சகோதரர்கள். நீங்கள் ஒரே ஒரு தந்தையின் குழந்தைகள் எனவே நிச்சயமாக நீங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டிருக்க வேண்டும். இதுவே ஆன்மீக அன்பு என அழைக்கப்படுகிறது. நாகத்திட்டத்திற்கேற்ப ஆன்மீகத் தந்தை அதிமங்களகரமான இந்தச் சங்கமயுகத்தில் மாத்திரம் வந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு நேரடியாகவே விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தை இங்கு வந்துள்ளார் என்பதைப் புரிந்துள்ளீர்கள். அவர் குழந்தைகளாகிய உங்களை அழகானவர் ஆக்குகின்றார். அவர் உங்களைத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்கி, மீண்டும் தன்னுடன் உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அவர் உங்கள் கையைப் பிடித்து, உங்களை அழைத்துச் செல்வார் என்றில்லை. ஆத்மாக்கள் அனைவரும் வெட்டுக்கிளிகளின் கூட்டம் போன்று ஒன்றாகப் பறந்து செல்வார்கள். அவற்றிற்கும் ஒரு வழிகாட்டி உள்ளார், அந்த ஒரு வழிகாட்டியுடன் வேறு வழிகாட்டிகளும் உள்ளன. அவை முன்னால் செல்லும். முழுக்கூட்டமும் ஒன்றாகப் பறந்து செல்லும்போது, அவை பெரும் சப்தத்தை எழுப்புகின்றன. சூரிய வெளிச்சத்தை மறைத்து விடும் அளவிற்குக் கூட அக்கூட்டம் மிகப் பெரிதாகவிருக்கும். ஆத்மாக்களாகிய உங்களின் கூட்டமும் மிகப் பெரியதே, அவர்களை உங்களால் எண்ண முடியாது. அவர்கள் சனத்தொகைக் கணக்கெடுப்பை நடத்திய போதும், இங்குள்ள மனிதர்களின் எண்ணிக்கையை அவர்களால் கணக்கிட முடியாது. அதுவும் மிகச் சரியாகக் கணக்கிடப்படுவதில்லை. எத்;தனை ஆத்மாக்கள் உள்ளனர் என்று உங்களால் கணக்கிட முடியாது. சத்தியயுகத்தில் எத்தனை மனிதர்கள் இருப்பார்கள் என்பதை ஓரளவு மதிப்பிடலாம், ஏனெனில் அந்த நேரத்தில் பாரதம் மாத்திரமே உள்ளது. நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. ஆத்மா சரீரத்தில் இருக்கும் போது, அதாவது ஒரு மனிதனாக இருக்கும் போது, சந்தோஷமும், துன்பமும் இணைந்தே அனுபவம் செய்யப்படுகின்றன. ஓர் ஆத்மாவே பரமாத்மா என்றும், ஆத்மா ஒருபோதும் துன்பத்தை அனுபவம் செய்வதில்லை என்றும், ஆத்மா செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை என்றும் நம்புகின்ற பலர் உள்ளனர். இந்த விடயத்தையிட்டு பல குழந்தைகள் குழப்பமடைவதால் அவர்கள் நினைக்கின்றார்கள்: எங்களை ஓர் ஆத்மா என எங்களால் கருத முடியும் ஆனால் தந்தையை எங்கே நினைவு செய்வது? தந்தை பரந்தாமவாசி என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை தனது அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். நீங்கள் எங்கு நடந்து திரிந்தாலும் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை பரந்தாமத்தில் வசிப்பவர். ஆத்மாக்களாகிய நீங்களும் அங்கேயே வசித்தீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் பாகத்தை நடிப்பதற்காக கீழே இறங்கி வந்தீர்கள். இப்பொழுதே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் தேவர்களாக இருந்த போது, இன்ன இன்ன சமயத்தைச் சேர்ந்த யார் மேலே இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கவில்லை. எவ்வாறு ஆத்மாக்கள் மேலிருந்து வந்து, ஒரு சரீரத்தை ஏற்று தங்கள் பாகத்தை நடிக்கிறார்கள் என்றும் நீங்கள் நினைக்கவில்லை. தந்தை பரந்தாமத்தில் வசிக்கிறார் என்றும், அவர் மேலிருந்து இங்கு வந்து ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. அவர் எந்த சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார்? அவர் தனது முகவரியைக் கூறுகின்றார். நீங்கள் சிவபாபா, மேஃபா பரந்தாமம் என்று எழுதினால், உங்கள் கடிதம் பரந்தாமத்தைச் சென்றடையாது. இதனாலேயே நீங்கள் ‘சிவபாபாவிற்கு, மேஃபா பிரம்மா’ என எழுதுகின்றீர்கள். பின்னர் நீங்கள் இந்த இடத்தின் முகவரியை எழுதுங்கள். ஏனெனில் தந்தை இங்கு வருகிறார் என்பதுவும், அவர் இந்த இரதத்தினுள் பிரவேசிக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உண்மையில் ஆத்மாக்களாகிய நீங்கள் மேலேயே இருந்தீர்கள். நீங்கள் சகோதரர்கள். ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா, இது அவருடைய பெயர் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். நீங்கள் ஆத்மாவைப் பார்க்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் சரீர உணர்வுடையவராகுகின்றார்கள். தந்தை உங்களை ஆத்ம உணர்வுடையவராக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறேன். நான் இந்த பழைய புலன்களைத் தத்தெடுத்துக் கொள்கிறேன். அதில் வாய் மிக முக்கியமானதாகும். கண்களும் இருக்கின்றன. ஞான அமிர்தம் வாய் மூலமாகவே கொடுக்கப்படுகின்றன. ஞாபகார்த்தமாக, பசுவின் வாய் உள்ளது. அதாவது அது ஒரு தாயின் வாயைக் குறிக்கிறது. இந்த மூத்த தாயின் மூலமாக நான் உங்களைத் தத்தெடுக்கின்றேன். யார் உங்களைத் தத்தெடுக்கிறார்? சிவபாபா! அவர் இங்கே உள்ளார். இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். மனித வர்க்கத்தின் தந்தையான பிரம்மா மூலம் நான் உங்களைத் தத்தெடுத்துள்ளேன். ஆகவே, இவரும் உங்கள் தாய் ஆவார். நினைவு கூரப்பட்டுள்ளது: தாயும், தந்தையும் நீங்களே, நாங்களே உங்கள் குழந்தைகள். எனவே அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். அவரைத் தாய் என அழைக்க முடியாது. அவர் மாத்திரமே தந்தையாவார். நீங்கள் தந்தையிடமிருந்தே உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீரகள். பின்னர் உங்களுக்கு ஒரு தாய் தேவைப்படுகிறார். அவர் இங்கு வருகின்றார். தந்தை மேலேயே வசிக்கிறார் என்பதையும், ஆத்மாக்களாகிய நாங்களும் மேலேயே வசித்தோம் என்பதையும், நாங்கள் பின்னர் கீழிறங்கி வந்து எங்கள் பாகத்தை நடிக்கிறோம் என்பதையும், நாங்கள் இப்போது அறிகின்றோம். உலக மக்கள் இவை எதனையும் அறிய மாட்டார்கள். அவர்கள் கடவுள் கற்களிலும், கூழாங்கற்களிலும் உள்ளார் எனக் கூறுகின்றார்கள். அவர் எல்லையற்றவர் என்பதே அதன் அர்த்தமாகும். அதனை காரிருள் என்றழைப்பார்கள். கூற்று ஒன்றுள்ளது: ஞான சூரியன் எழும் போது, அறியாமை இருள் அகன்றுவிடும். இது இராவண இராச்சியம் என்பதால், இருள் சூழ்ந்துள்ளது என்ற ஞானத்தை இப்பொழுது நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இராவண இராச்சியம் அங்கு இல்லை. அதனாலேயே அங்கு எவ்வித விகாரமோ அல்லது சரீர உணர்வோ இருப்பதில்லை. அங்கு, நீங்கள் ஆத்ம உணர்வில் இருப்பீர்கள். அங்கு, ஆத்மாக்களாகிய நீங்கள் எப்போது குழந்தையாக இருப்பீர்கள் என்பதையும், எப்போது இளமையடைவீர்கள் என்பதையும் அறிவீர்கள். பின்னர் உங்கள் சரீரம் முதுமையடையும்போது, அதனைத் துறந்து விட்டு, நீங்கள் வேறொன்றை எடுப்பீர்கள் என்ற விழிப்புணர்வு உங்களிடம் இருக்கிறது. அங்கு இன்னார் மரணித்து விட்டார் என நீங்கள் கூற மாட்டீர்கள். அது, அமரத்துவ உலகமாகும். ஆத்மாக்கள் சந்தோஷத்துடன் தங்கள் சரீரத்தை விட்டு நீங்கி, வேறொன்றை எடுப்பார்கள். அந்தச் சரீரத்தின் ஆயுட்காலம் இப்பொழுது முடிவடைந்து விட்டதென்றும், அதனால் அவர்கள் அச்சரீரத்தை நீக்கி விட்டு வேறொன்றை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இதனாலேயே, சந்தியாசிகள் பாம்பின் உதாரணத்தைக் கொடுக்கிறார்கள். உண்மையில், இந்த உதாரணம் முதலில் தந்தையாலே கொடுக்கப்பட்டது. பின்னர் அது சந்நியாசிகளினால் கொடுக்கப்படுகிறது. எனவே தந்தை கூறுகின்றார்: நான் கொடுக்கின்ற ஞானம் மறைந்து விடுகிறது. தந்தை பயன்படுத்திய வார்த்தைகளும் படங்களும் பின்னரும் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை ஒரு சாக்கு மாவில் ஒரு துளி உப்பு சேர்ந்துள்ளதைப் போன்றதாகும். ஆகையால் தந்தை இங்கமர்ந்திருந்து, எவ்வாறு ஒரு பாம்பு, தனது தோலை நீக்கி ஒரு புதிய தோலை எடுக்கின்றது என்பதை விளங்கப்படுத்துகின்றார். ஒரு பாம்பு தனது சரீரத்தை விட்டு நீங்கி, அடுத்த சரீரத்திற்குள் பிரவேசிக்கின்றது என நீங்கள் கூறமாட்டீர்கள். தோலை மாற்றுகின்ற ஓர் உதாரணம் ஒரு பாம்பிற்கே பொருந்தும். அந்தப் பாம்பின் தோலும் கண்ணுக்கு புலப்படக் கூடியது. நீங்கள், உங்கள் ஆடையைக் களைவது போன்று, ஒரு பாம்பின் புதிய தோல் வளர்ந்ததும், அது தன் பழைய தோலை நீக்கி விடுகிறது. ஆனால், பாம்பு உயிருடனேயே இருக்கும். அது அமரத்துவமானது என்றில்லை. இரண்டு அல்லது மூன்று முறை தோலை நீக்கிய பின் அது மரணிக்கின்றது. அங்கே நீங்களும் சரியான நேரத்தில் உங்கள் சரீரத்தை நீக்கி விட்டு, வேறொன்றை எடுப்பீர்கள். பின்னர் நீங்கள் ஒரு கருப்பையினுள் பிரவேசிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கே அது யோக சக்திக்குரிய விடயமாகும். நீங்கள், யோக சக்தியின் மூலம் பிறப்பு எடுப்பீர்கள். இதனாலேயே நீங்கள் அமரத்துவமானவர் என்று அழைக்கப்படுகிறீர்கள். ஆத்மா கூறுகிறார்: நான் இப்பொழுது முதிர்ச்சியடைந்து விட்டேன். அதாவது எனது சரீரம் முதுமையடைந்து விட்டது. எவ்வாறு நீங்கள் சென்று, மீண்டும் ஒரு சிறு குழந்தை ஆகுவீர்கள் என்ற காட்சியைக் காண்பீர்கள். ஓர் ஆத்மா இயல்பாகவே தனது சரீரத்தை விட்டு, விரைந்து சென்று ஒரு குழந்தையில் பிரவேசிக்கின்றார். அந்தக் கருப்பையை ஒரு சிறை என அழைப்பதில்லை. அது ஒரு மாளிகை என்றே அழைக்கப்படுகின்றது. அங்கு நீங்கள் தண்டனை எதனையும் அனுபவிக்கக்கூடிய எப் பாவமும் செய்வதில்லை. கருப்பை எனும் மாளிகையில் நீங்கள் சௌகரியமாக வாழ்வீர்கள். அங்கு துன்பமோ அல்லது தூய்மையற்றவற்றை உண்பதன் மூலம், நோய் வாய்ப்படுவது என்ற கேள்விக்கு இடமில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இவ்வுலகம் இப்பொழுது மாற்றப்பட்டு, நீங்கள் நிர்வாணா தாமத்திற்கு மீண்டும் செல்லவுள்ளீர்கள். இவ்வுலகம் பழையதிலிருந்து புதியதாக மாறப் போகின்றது. அனைத்தும் மாற்றமடையும். ஒரு மரத்திலிருந்தே ஒரு விதை தோன்றுகின்றது. அந்த விதை நாட்டப்படும்பொழுது மரம் பல பழங்களைக் கொடுக்கும். ஒரு விதை மூலம் பல விதைகள் தோன்றுகின்றன. சத்திய யுகத்தில், யோக சக்தியின் மூலம், ஒரு நேரத்தில்; ஒரு குழந்தை மாத்திரம் பிறக்கும். இங்கே, காமத்தின் மூலம் ஒரே நேரத்தில் 5 அல்லது 6 குழந்தைகள் பிறக்கின்றார்கள். சத்திய யுகத்திற்கும், கலி யுகத்திற்குமிடையில் எவ்வளவு பெரிய வித்தியாசம் உள்ளது என்பதைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறு புதிய உலகம் பழைய உலகமாகிறது என்பதையும், எவ்வாறு ஆத்மா 84 பிறவிகளையும் தனக்குள் கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் விளங்கப்படுத்துகின்றார். ஒவ்வொரு ஆத்மாவும் தங்களுக்குரிய பாகத்தை நடித்து, பின்னர் அனைவரும் வீடு திரும்பியதும், ஒவ்வொருவரும் தத்தமது இடத்திற்கு செல்வார்கள். அவர்கள் தங்கள் இடங்களை மாற்றுவதில்லை. ஒவ்வொரு ஆத்மாவும் தனது சொந்தப் இடத்திற்கும், தனது சொந்தச் சமயத்திற்கும் வரிசைக் கிரமாக மீண்டும் செல்ல வேண்டும். பின்னர் வரிசைக்கிரமாகவே கீழிறங்கவும் வேண்டும். இதனாலேயே பரந்தாமத்தின் ஒரு சிறிய மாதிரியைச் செய்துள்ளார்கள். ஒவ்வொரு சமயத்திற்கும் அதற்கென சொந்த பகுதி உண்டு. தேவ தர்மமே முதலாவதாகும், அதன் பின்னர் வரிசைக்கிரமமாக ஏனையவர்கள் கீழிறங்குவார்கள். நீங்கள் அங்கு சென்று வரிசைக்கிரமமாக வசிப்பீர்கள். வரிசைக்கிரமமாக நீங்கள் சித்தி எய்துகிறீர்கள். எனவே நீங்கள் பெற்ற புள்ளிகளுக்கேற்ப உங்கள் பதவியைப் பெறுவீர்கள். தந்தையின் இக்கல்வி சக்கரத்தி;ல் ஒரு முறை மாத்திரம் இடம்பெறுகிறது. ஆத்மாக்களாகிய உங்களின் வம்சாவளி விருட்சம் மிகவும் சிறியதாகும். இங்கே நீங்கள் ஒரு பாரிய விருட்சத்தைக் கொண்டுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகக் காட்சிகளைக் கண்டு பின்னர் இங்கே அமர்ந்திருந்து இப்படங்களை உருவாக்குகிறீர்கள். ஆத்மாக்கள் மிகவும் சின்னஞ்சிறியவர்கள், ஆனால், அவர்களின் சரீரங்கள் மிகவும் பெரியது. ஆத்மாக்கள் அனைவரும் அங்கு சென்று அமர்வார்கள். அவர்கள் அனைவரும் சென்று மிக நெருக்கமாக, ஒருமித்து ஒரு சிறு இடத்தில் இருப்பார்கள். ஆனால், மனித விருட்சம் மிகவும் பெரியது. மனிதர்களுக்கு நடமாடித்திரிவதற்கும், விளையாடுவதற்கும், கற்பதற்கும், வேலை செய்வதற்கும் இடங்கள் தேவையாகும். அனைத்தையும் செய்வதற்கு அவர்களுக்கு ஓர் இடம் தேவை. அசரீரி உலகில் உள்ள ஆத்;மாக்கள் மிகச் சிறிய இடத்தையே கொண்டிருப்பார்கள். இதனாலேயே, படங்களில் இதனைச் சித்தரிக்கின்றார்கள். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சரீரங்களைத் துறந்த பின்னர் வீடு திரும்ப வேண்டும். எவ்வாறு நீங்களும் ஏனைய சமயத்தவர்களும் அங்கு வசிக்கிறீர்கள் என்றும், எவ்வாறு நீங்கள் தங்தையிடமிருந்து பிரிந்திருந்தீர்கள் என்பதுவும் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இப்பொழுது உள்ளது. தந்தை ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு முறையே வந்து இவை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஏனைய அனைத்து கல்விகளும் லௌகீகமானதாகும். அவற்றை ஆன்மீகக் கல்வி என அழைக்க முடியாது. இப்பொழுது உங்களுக்கு ~~நான் ஒரு ஆத்மா|| என்பது தெரியும். ~~நான்|| என்றால் ஆத்மா என்பதும், ~~எனது|| என்றால் ~~இது எனது சரீரம்|| என்பதும் உங்களுக்குத் தெரியும். மனிதர்களுக்கு இது தெரியாது. அவர்களின் உறவுமுறை எப்பொழுதும் சரீரம் சார்ந்த உறவாகும். சத்தியயுகத்திலும் உங்கள் உறவுமுறைகள் சரீரம் சார்ந்தவையே. ஆயினும், அங்கே நீ;ங்கள் ஆத்ம உணர்வில் இருப்பீர்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்றும், உங்கள் சரீரம் முதுமை அடைந்து விட்டதால், ஆத்மா அந்தச் சரீரத்தை நீக்கிவிட்டு இன்னொன்றை எடுக்கிறார் என்ற உணர்வு உங்களுக்கு இருக்கும். இதையிட்டு எவ்வித குழப்பமும் அடையவேண்டிய அவசியமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் இராச்சியத்தைத் தந்தையிடமிருந்து பெற வேண்டும். நிச்சயமாக அவர் எல்லையற்ற தந்தையாவார். மக்கள் ஞானத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வரை பல கேள்விகளைத் தொடர்ந்தும் வினவுவார்கள். பிராமணர்களாகிய நீங்கள் ஞானத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில், பிராமணர்களாகிய உங்களின் ஆலயம் அஜ்மீரில் உள்ளது. ~~புஸ்கரணி|| பிராமணர்கள் என்று ஒரு வகையான பிராமணர்களும் “சர்சித்” என்று மற்றுமொரு வகையினரும் உள்ளார்கள். பிரம்மாவின் ஆலயத்தைப் பார்ப்பதற்காகவே மக்கள் அஸ்மீருக்குச் செல்கிறார்கள். அங்கு பிரம்மா நீண்ட தாடியுடன் அமர்ந்திருப்பதைச் சித்தரித்துள்ளனர். அவரை மனிதவடிவிலேயே சித்தரித்துள்ளனர். பிராமணர்களாகிய நீங்களும் மனிதவடிவிலேயே இருக்கிறீர்கள். பிராமணர்கள் தேவர்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். பிரம்மாவின் குழந்தைகளாகிய நீங்களே உண்மையான பிராமணர்கள் ஆவீர்கள். அம்மக்கள் பிரம்மாவின் குழந்தைகள் அல்லர். அவர்கள் தாமதித்து வருவதால் இதனை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதுவே உங்களின் பல்வேறு வடிவமான சிலையாகும். இவை அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இந்த ஞானத்தை மிகத் தெளிவாக நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்த முடியும். நாங்கள் ஆத்மாக்கள், நாங்களே தந்தையின் குழந்தைகள். இதனை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, உங்கள் நம்பிக்கையை உறுதியாக்குங்கள். இது மிகச் சரியானதொரு விடயமாகும். பரமாத்மா ஒருவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். அவரை அனைவரும் நினைவு செய்கிறார்கள். “ஓ கடவுளே” என்ற வார்த்தை நிச்சயமாக மனிதர்களின் உதட்டிலிருந்தே வெளிவந்திருக்க வேண்டும். எனினும், தந்தை வந்து, தான் யார் என்பதை விளங்கப்படுத்தும் வரை எவருமே யார் கடவுள் என்பதை அறிந்திருக்கவில்லை. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: உலக அதிபதிகளான இலக்ஷ்மியும் நாராயணனும் இதனை அறியவி;ல்லையென்றால், எவ்வாறு அந்த ரிஷிகளும் முனிவர்களும் அறிந்திருக்க முடியும்? இப்பொழுது நீங்கள் இதனைத் தந்தையிடமிருந்தே அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஆஸ்திகர்கள். ஏனெனில் உங்களுக்கு படைப்பவரையும் அவருடைய படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் தெரியும். சிலர் இதனை மிகத்தெளிவாகவும், சிலர் குறைவாகவும் புரிந்து கொள்கிறார்கள். தந்தை வந்து தனிப்பட்ட முறையில் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அப்போது சிலர் மிக நன்றாகக் கிரகின்றார்கள், சிலர் குறைவாகக் கிரகிக்கின்றார்கள்;. தந்தை நேரடியாகவே வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். அப்போது சிலர் இதனை மிக நன்றாகக் கிரகிக்கின்றார்கள். ஏனையோர் இதனைக் குறைந்தளவில் கிரகிக்கின்றார்கள். இக்கல்வி மிகவும் எளிமையானதும், மேன்மையானதும் ஆகும். நீங்கள் கடல் முழுவதையும் மை ஆக்கினாலும், அதன் முடிவை அடைய முடியாதளவிற்கு தந்தையிடம் அதிகளவு ஞானம் உள்ளது. இதனைத் தந்தை இலகுவான முறையில் விளங்கப்படுத்துகின்றார். தந்தை யார் என்பதை நீங்கள் அறிந்து சுயதர்ஷன சக்கரத்தைச் சுழற்றுபவர் ஆகவேண்டும். அவ்வளவே அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இலகுவாக சதா நினைவில் நிலைத்திருக்க வேண்டுமாயின், நீங்கள் நடந்து திரியும் போதெல்லாம் எப்பொழுதும் சிந்தியுங்கள்: நான் ஓர் ஆத்மா, ஆத்மாவாகிய நான் பரந்தாமவாசியாவேன், என்னுடைய பாகத்தை நடிப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். தந்தையும் பரந்தாமத்திலேயே வசிக்கின்றார். அவர் பிரம்மாவின் சரீரத்திற்குள் பிரவேசிக்கின்றார்.

2. ஆத்;மாக்கள் ஆன்மீகத் தந்தை மீது அன்பு கொண்டிருப்பதைப் போன்றே, ஒருவரோடொருவர் ஆன்மீக அன்புடன் வாழுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஆத்மாக்கள் மீதே அன்பு கொண்டிருக்க வேண்டும். சரீரங்களின் மீதல்ல. ஆத்ம உணர்வைப் பயிற்சி செய்வதற்கு முழு முயற்சி எடுங்கள்.

ஆசீர்வாதம்:
எல்லைக்கு உட்பட்ட ஆசைகளில் இருந்தும் விடுபட்டிருப்பதன் மூலம், சதா சந்தோஷமாகவும் சகல கேள்விகளுக்கு அப்பாலும் இருப்பீர்களாக.

எல்லைக்கு உட்பட்ட ஆசைகளில் இருந்து விடுபட்டிருக்கின்ற குழந்தைகள். தமது முகங்களில் சந்தோஷ பிரகாசத்தை கொண்டிருக்கின்றார்கள். சந்தோஷமாக இருப்பவர்கள் என்றுமே தமது இதயங்களில் எந்தக் கேள்வியையும் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் சுயநலமற்றவராக இருப்பதுடன், அவர்கள் ஏனைய அனைவரையும் குற்றமற்றவர்களாகவே அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் எதற்குமே பிறர் மீது குற்றம் சுமத்துவதில்லை. எந்தவொரு சூழ்நிலை உருவாகினாலும், அது உங்கள் கர்மகணக்கை தீர்ப்பதற்காக உங்கள் முன்னிலையில் ஓர் ஆத்மா தொடர்ந்தும் வந்து கொண்டிருந்தாலென்ன அல்லது உங்கள் சரீரத்தின் கர்ம வேதனை தொடர்ந்தும் உங்கள் முன்னிலையில் வந்தாலென்ன, நீங்கள் திருப்தியாகவே இருப்பதால் நீங்கள் சதா சந்தோஷமாக இருக்கிறீர்கள்.

சுலோகம்:
கவனயீனமான வழியில் அல்லாது, கவனமாக உங்களுடைய விரயங்கள் அனைத்தையும் சோதியுங்கள்.