01.06.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையின் ஸ்ரீமத்: இப் பழைய உலகிலிருந்து உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள். ஜீவன்முக்தியைப் பெற்றுக் கொள்வதற்கு தெய்வீகப் பண்புகளைக் கிரகித்துக் கொள்ளுங்கள்.
கேள்வி:
வேறு எவராலும் அன்றி தந்தையால் மாத்திரமே உங்களுக்குக் கற்பிக்கப்படுகின்ற பண்புகள் எவை?பதில்:
தூய்மையாகி ஏனையோரையும் தூய்மை ஆக்குவதாகும், இவையே மகத்துவமான தெய்வீகப் பண்புகளாகும். உங்கள் குடும்பங்களுடன் வீட்டில் வாழும் போதும் தூய்மையாக இருங்கள். ஒரே ஒரு தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த கற்பித்தல்களைக் கொடுக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் புத்திகளில் இருந்து இப் பழைய உலகை அகற்றுகிறீர்கள். தூய்மையை நீங்கள் கிரகிக்கும் போது ஏனைய அனைத்துப் பண்புகளும் இயல்பாகவே வந்;தடையும் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.பாடல்:
இன்றைய மக்களாகிய நாங்கள் இருளிலேயே உள்ளோம்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலின் ஒருவரியைச் செவிமடுத்தீர்கள். முழு உலகிலும் பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் ஒரு புறத்திலும், மறு புறத்தில் இந்த ஞான மார்க்கத்திலுள்ள குழந்தைகளாகிய நீங்களும் உள்ளீர்கள். அவர்கள் தொடர்ந்தும் பக்தி ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாகிய நீங்கள் பக்தி ஏணியில் இருந்து கீழிறங்கி இந்த ஞான ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கிறீர்கள். அரைச் சக்கரத்திற்கு பக்தி ஏணியில் ஏற வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பக்தியும் முதலில் கலப்படம் அற்றதாகவே இருந்து பின்னர் அது கலப்படமாகியது. மக்கள் மூட நம்பிக்கைகளில் முற்றாக அகப்பட்டிருக்கின்றனர். அவர்கள் எதையும் புரிந்து கொள்வது இல்லை! அவர்கள் பாடுகிறார்கள்: நாங்கள் இருளில் உள்ளோம். சற்குரு இல்லாததால் முழுமையான இருள் காணப்படுகிறது. இங்கு பல குருமார்கள் இருக்கிறார்கள். யார் உண்மையான குரு? சாதுக்கள், புனிதர்கள், மகாத்மாக்கள். பக்தர்கள் ஆன்மீக முயற்சியைச் செய்கின்றனர், அதாவது கடவுளை நினைவு செய்கின்றார்கள். அவர்கள் வேதங்கள், சமய நூல்கள் உபநிடதங்கள் போன்றவற்றைக் கற்கின்றனர். அப்படி இருந்தும் கடவுள் வரும் போதே அவரால் எங்களுக்கு சற்கதியை அருள முடியும் என அவர்கள் கூறுகின்றனர். சற்கதியை அருள்பவரையே தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இனிமேலும் காரிருளில் இல்லை. நீங்கள் இந்த ஞான ஒளியினுள் வந்துவிட்டீர்கள். உங்களுக்குத் தூய்மையாக்குபவராகிய தந்தையைத் தெரியும், ஆதலால் நீங்கள் அவரை நினைவு செய்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவிற்குத் தந்தையை நினைவு செய்து இந்த ஞானத்தையும் கிரகிக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அறியாமை என்ற இருள் உங்களிடம் இருந்து அகற்றப்படுகிறது. ஒரேயொரு தந்தையே உங்களை ஒளியினுள் கொண்டு வருகின்றார். சற்குரு இந்த ஞானத் தைலத்தைக் கொடுக்கிறார். இது பௌதீகமான கண்களின் அலங்காரம் அல்ல, ஆனால் இந்த ஞானக் கருத்துக்கள். இந்த ஞானத்துடன் சேர்ந்து யோகமும் இருக்கிறது. பக்தியைக் கற்பிக்கின்ற மக்களிடத்திலும் நிச்சயமாக யோகம் இருக்கிறது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களது புத்தியின் யோகம் பரமாத்மாவாகிய அசரீரியான பரம தந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் மத்தியில் அது வரிசைக்கிரமமே ஆகும். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எந்த மனிதராலும் சர்வ சக்திவானான பரமாத்மாவாகிய பரமதந்தையுடன் யோகத்தைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் தந்தையுடனும் முக்தி தாமத்துடனும் ஜீவன் முக்தி தாமத்துடனும் யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஜீவன் முக்திக்கு மிகச் சிறந்த தெய்வீகப் பண்புகள் தேவைப்படுகின்றன. இந்த நேரத்தில் அனைவரும் அசுரப் பண்புகளையே கொண்டிருக்கின்றனர். பரமாத்மாவாகிய பரம தந்தையின் தெய்வீகக் குணங்களும் நினைவு கூரப்படுகின்றன. அவரே ஞானக்கடலும் பேரானந்தக் கடலும் உணர்வுள்ளவரும் சத்தியமானவரும் மனித உலக விருட்சத்தின் விதையும் ஆவார். அவர் எப்போதும் தூய்மைக்கடலாகவே உள்ளார். அவரது அந்தஸ்து அழிவற்றது. எந்த மனிதராலும் இந்த அழிவற்ற அந்தஸ்தைப் பெற முடியாது. நீங்கள் இப்பொழுது இந்த ஞானக்கடலாகவும் தூய்மைக் கடலாகவும் ஆகுகின்ற போதிலும், ஒரு எல்லைக்கு உட்பட்ட முறையிலேயே இவ்வாறு ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: நான் எல்லையற்றவன். என்னால் உங்களை எல்லையற்றவர்கள் ஆக்க முடியாது. என்னால் அவ்வாறு செய்ய முடிந்தால், உலக நாடகம் எவ்வாறு தொடரும்? நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை அனுபவம் செய்வீர்கள்? நீங்கள் எப்பொழுதுமே ஒரேமாதிரி இருக்க முடியாது. நான் உங்களை எல்லைக்கு உட்பட்ட முறையிலேயே இவ்வாறு ஆக்குகிறேன். நீங்கள் 21 பிறவிகளுக்கு இவ்வாறு ஆகுகின்றீர்கள். “21 வம்சங்கள்” என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்போதுமாக நீங்கள் ஆகுவதற்கு நாடகத்திலும் சட்டம் இல்லை. நான் எப்போதும் தூய்மையானவன். நான் பரந்தாமத்தில் வசிக்கிறேன். நான் எப்பொழுதும் ஞானத்தையும் தூய்மையையும் கொண்டிருக்கிறேன். நீங்கள் இதை மறந்துவிடுகிறீர்கள், ஆகவே தந்தை இந்நேரத்தில் வந்து, காரிருளில் இருந்து குழந்தைகளாகிய உங்களை அகற்றி, இந்த ஞானத்தாலும் யோகத்தாலும் உங்களை தூய்மை ஆக்குகிறார். வேறு எவராலும் கூற முடியாது: நான் பரந்தாமத்தில் இருந்து வந்துள்ளேன். இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள்! எனது மேன்மையான வாசகங்களை வேறு எவராலும் பிரதி செய்ய முடியாது. நான் குழந்தைகளாகிய உங்களை 21 பிறவிகளுக்கு அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குவதற்காகவே வருகின்றேன். ஆகவே, நீங்கள் அவ்வாறு ஆக வேண்டும். முன்னைய சக்கரத்தில் இவ்வாறு ஆகியவர்களே அவ்வாறு ஆகுவார்கள். பல குழந்தைகள் தூய்மை ஆகுவார்கள் என்றும் பலர் அஜாமிலைப் போல் பாவாத்மாக்கள் ஆகுவார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பலர் அழுக்கானவர்களாகவும் தூய்மை அற்றவர்களாகவும் ஆகுகின்றனர். தந்தையே வந்து அழுக்கடைந்த தூய்மையற்ற ஆடைகளைக் கழுவ வேண்டும். ஆத்மாக்களே அழுக்கானவர்கள் ஆகுகின்றார்கள். ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: மாயை உங்களை மிகவும் அழுக்காக்கி விட்டாள்! இது இந்த ஒரு பிறப்பிற்கான விடயம் அல்ல, ஆனால் பிறவி பிறவிகளாக இடம்பெற்ற விடயமாகும். ஆத்மாவைக் கழுவுவதற்காக நான் இப்பொழுது உங்களுக்கு லக்ஸ் (இலட்சியம்) சவர்க்காரத்தைக் கொடுக்கிறேன். என்னை நினைவு செய்யுங்கள், இந்த யோகத்தின் மூலம் அணைக்கப்பட்டுள்ள உங்களது ஆத்மா ஒளியேற்றப்படும். அது உங்கள் தந்தையாகிய என்னை நீங்கள் எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. பாபா உங்களுக்கு நினைவூட்டுகிறார்: நான் உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்பினேன். பின்னர் மாயை உங்களை அழுக்காக்கினாள். நான் இப்பொழுது உங்களை மீண்டும் ஒருமுறை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குவதற்காகவே வந்துள்ளேன். நான் பிரம்மாவின் சரீரத்தின் மூலமாக உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கிறேன். பாபா ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகிறார்: ஓ! குழந்தைகளே, பௌதீகத் தந்தையை மறந்து விடுங்கள்! உங்களது சரீரத்தையும் சரீர உறவுகளையும் மறந்து தந்தையாகிய என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், அப்போது ஆத்மாவாகிய நீங்கள் தொடர்ந்தும் சுத்தம் ஆக்கப்படுவீர்கள். பின்னர் நீங்கள் எதிர்காலத்தில் புதிய சரீரங்களைப் பெற்றுக் கொள்வீர்கள். பஞ்சதத்துவங்கள் போன்றவையும் புதிதாகவும் சதோபிரதானாகவும் ஆகுகின்றன. பாபா கூறுகிறார்: இப்பொழுது தொடர்ந்தும் இந்தப் பழைய உலகை மறந்திடுங்கள்! என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் என்னிடம் வந்து பின்னர் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். இந்த உலகம் பழையது. அவர்கள் புது டெல்கி, பழைய டெல்கி எனப் பேசுவது போன்று ஒருவர் புதியதொன்றை உருவாக்கினால் அதற்குப் புதிய பெயர் வழங்கப்படுகிறது. எவ்வாறாயினும் உலகம் இன்னமும் பழையதே ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்களது புத்தியின் யோகத்தை இந்தப் பழைய உலகிலிருந்து முற்றாக அகற்ற வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் நிர்வாண தாமமாகிய எங்கள் இனிய வீட்டிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்லும். மனிதர்கள் ஏனைய பலரையும் நினைவு செய்கின்றனர். சிலர் ஒரு குருவையோ அல்லது வேறு ஒருவரையோ நினைவு செய்ய, ஏனையோர் ஸ்ரீகிருஷ்ணர் போன்றோரை நினைவு செய்கின்றனர். எவ்வாறாயினும் ஸ்ரீகிருஷ்ணர் போன்றோர் எங்கு சென்றனர்? எவருக்கும் தெரியாது. அனைவரும் மறுபிறவி எடுக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இவ் வழமை உலக ஆரம்பத்தில் இருந்து தொடர்கின்றது. சத்தியயுகத்தில் தேவர்கள் இருந்தார்கள். எனவே மறுபிறவி நிச்சயமாக அந்த நேரத்திலிருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும். முதலில் முதலாவது தூய மனிதராகிய ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறார், அவர் அதிகளவு புகழைக் கொண்டிருக்கிறார். இலக்ஷ்மியும் நாராயணனும் அந்தளவிற்குப் புகழப்படவில்லை. ஏனெனில் குழந்தைகள் தூய்மையானவர்களும் சதோபிரதானும் ஆவார்கள். இதனாலேயே குழந்தைகளின் புகழ் பாடப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணருக்;கு அதிகளவு புகழ் உள்ளது. ஆனால் ஸ்ரீகிருஷ்ணரின் பூமி எங்குள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வைகுந்தத்தை சுவர்க்கமாக எண்ணிப் பேசுகிறார்கள். ஆகவே பின்னர் ஏன் அவர்கள் அவர் துவாபர யுகத்தில் இருந்ததாகக் கூறுகின்றனர். ஒருவர், இன்னொரு பெயரிலோ, ரூபத்திலோ, தேசத்திலோ இருக்க முடியாது. அதே பெயர், ரூபம் இன்னொரு பிறவியில் இருக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்திலேயே இருந்தார். ஜெகதம்பாவும் ஜெகத்பிதாவுமே சென்று இலக்ஷ்மி நாராயணனாக ஆகுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். சத்திய யுகம் ஸ்ரீகிருஷ்ணரின் பூமி என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது இது அசுரனாகிய கம்சனின் உலகமாகும். அப் பெயர்கள் அனைத்தும் அசுரத்தனமானவை. அங்கே அது தேவ சமுதாயம், ஆனால் இங்கு இது அசுரர்களின் சமுதாயம் ஆகும். தந்தை சங்கமயுகத்தில் இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: தந்தையே படைப்பவர் ஆவார். அவர் மனித உலக விருட்சத்தின் விதை என்று அழைக்கப்படுகிறார். ஆகவே அவர் நிச்சயமாக ஒரு புதிய மனித உலகைப் படைக்கின்றார். நீங்கள் பாடுகிறீர்கள்: பாபா, நீங்களே தூய்மையாக்குபவர்! இந்த தூய்மையற்ற உலகை வந்து தூய்மை ஆக்குங்கள்! புதிய உலகைப் படைத்து பழைய உலகை அழித்துவிடுங்கள்! அவர் உண்மையில் பிரம்மாவின் மூலம் புதிய உலகைப் படைத்து சங்கரின் மூலம் பழைய உலகை அழிக்கிறார். வேறு எவருக்கும் இவ் விடயங்கள் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருக்கிறீர்கள். பாபா அழுக்கான ஆடைகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடிகிறது. சில கிழிந்து விடுகின்றன, சில துண்டு துண்டாகி விடுகின்றன. அஜாமிலைப் போல் சிலர் மிகவும் அசுத்தமானவர்களும் மகாபாவிகளும் ஆவர், அவர்களால் எதையுமே கிரகிக்க முடியாதிருக்கும். தந்தை அவ்வாறான நல்ல விடயங்களைக் கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான, அதியன்பிற்கினிய குழந்தைகளே, உங்கள் அதி அன்பிற்கினிய தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்! அதி அன்பிற்கினிய சந்தோஷ பூமியை நினைவு செய்யுங்கள்! இந்நேரத்தில் மட்டுமே உங்களுக்கும் இவ் விடயங்கள் தெரியும். உலகிலுள்ள வேறு எவருக்கும் இது தெரியாது. இது ஆழ்ந்த துன்பம் நிறைந்த உலகமாகும். மக்கள் விரக்தியில் கூக்குரலிடுவதுடன் தொடர்ந்தும் ஒருவரை ஒருவர் கொலை செய்துவிட்டுப் பின்னர் கூறுகின்றனர்: கடவுளே, என்னைக் காப்பாற்றுங்கள்! அந்த வார்த்தைகள் நிச்சயமாக அவர்களது உதடுகளில் இருந்து வெளியாகின்றன. தந்தையே விடுதலையளிப்பவர். தந்தை குறிப்பாக குழந்தைகளாகிய உங்களையும் பொதுவாக உலகத்தவர்களையும் சந்தோஷதாமத்திற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்கள் மத்தியில் இந்தப் போதை வரிசைக்கிரமமாகவே உள்ளது. இந்தக் கல்வி குறைந்ததல்ல. பாபா யாருக்குக் கற்பிக்கின்றார் எனப் பாருங்கள்! அவர் அஜாமிலைப் போல் இருக்கின்ற பாவாத்மாக்களுக்கு கற்பித்து அவர்களை சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றார். அனைவரும் தமோப்பிரதானாக உள்ளனர். அவர் அவர்களை சதோபிரதான் உலகிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது: இங்கு தெய்வீகக் குணங்களைக் கிரகித்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களது இலக்கையும் குறிக்கோளையும் இங்கே உங்களது புத்தியில் கொண்டிருக்கிறீர்கள். வேறு எவராலும் இந்த தூய்மையின் பண்புகளைக் கற்பிக்க முடியாது. சந்நியாசிகள் மக்களை அவர்களது குடும்பங்களையும் வீடுகளையும் துறக்கச் செய்கிறார்கள். இங்கு தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் துறக்கத் தேவையில்லை. நீங்கள் இந்தப் பழைய உலகையே துறக்க வேண்டும். அந்தத் துறவறம் எல்லைக்கு உட்பட்டது. ஆனால் இந்தத் துறவறம் எல்லையற்றது. அந்த சந்நியாசிகள் அதிகளவு மரியாதையைப் பெறுகின்றனர். சாதுக்களின் சமுதாயம் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் கொடுக்கிறது. தாய்மார்களாகிய நீங்கள் மேலும் முன்னேறிச் செல்கையில், அந்த சந்நியாசிகளுமே உங்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்குவார்கள். தாய்மார்களாகிய நீங்கள் இல்லாமல் அவர்களால் ஈடேற முடியாது. ஏனெனில் நீங்களே அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறீர்கள். எவரது பாதங்களிலும் வீழ்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆம், எவராவது “நமஸ்தே” அல்லது “ராமா, ராமா” எனக் கூறினால், நீங்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும். பாபாவும் கூறுகிறார்: குழந்தைகளே, நமஸ்தே! நான் குழந்தைகளாகிய உங்களை என்னைவிட அதி மேன்மையானவர்கள் ஆக்குகிறேன். நான் உங்களை பிரம்மாந்தத்தின் அதிபதிகளாகவும் உலக அதிபதிகளாகவும் ஆக்கிப் பின்னர் நான் ஓய்விற்குச் செல்கிறேன். எவ்வாறாயினும், நீங்கள் ஸ்ரீமத்தையும் பின்பற்றுவதுடன் இந்தப் பழைய உலகிலிருந்து உங்கள் முகங்களையும் திருப்பிக் கொள்ள வேண்டும். இராமா, இராவணன், சீதையின் பொம்மை ஒன்று உள்ளது. சீதை இராவணனிற்கு முதுகைக் காட்டியவாறு தனது முகத்தை இராமரை நோக்கித் திருப்புகிறார். சுவர்க்க உலகைக் கையில் ஏந்தியவாறு நரகத்தைக் காலால் உதைப்பது போன்ற ஸ்ரீகிருஷ்ணரின் படமும் உள்ளது. தந்தை உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், அரிதாகவே வியாபாரிகள் தங்கள் பழைய சரீரம், மனம், செல்வத்தைத் தந்தையிடம் கொடுத்து, அதற்குப் பதிலாகப் புதிதாக அனைத்தையும் கோரிக் கொள்கின்ற வியாபாரத்தைச் செய்கின்றனர். இது மிகச் சிறந்த முதற்தரமான காப்புறுதி ஆகும். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும் போது, நீங்கள் தூய சரீரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். பின்னர் நீங்கள் சுவர்க்கத்தில் ஆட்சி புரிவீர்கள். இதனாலேயே அவர் வியாபாரி என்றும் மந்திரவாதி என்றும் அழைக்கப்படுகிறார். தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவது கடவுளின் மந்திர வித்தையே ஆகும். தந்தை கூறுகிறார்: நரக வாசிகளைச் சுவர்க்க வாசிகளாக மாற்றுங்கள். இது அத்தகைய முதற் தரமான மந்திர வித்தை ஆகும்! இதன் மூலம் பெருமளவு பேறுகள் பெறப்படுகின்றன. தந்தை கூறுகின்றார்: அரசருக்கெல்லாம் அரசர் ஆகுங்கள். தந்தையைப் பின்பற்றுங்கள். தந்தை இங்கு அமர்ந்து இருக்கின்றார். இவர் ஒரு அரை (அதர்) குமார் ஆவார். மம்மா ஒரு குமாரி ஆவார். ஆகவே நீங்கள் பின்பற்ற வேண்டும். நீங்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெற இருக்கின்றீர்கள். சகோதர சகோதரிகளான நீங்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். பொதுவாக உலக முறையில் சகோதரிகள் ஆஸ்தியைப் பெறுவதில்லை, ஆனால் சகோதரர்கள் பெறுவார்கள். இங்கு நீங்கள் எல்லோரும் அதைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் எல்லோரும் ஆத்மாக்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எல்லோரும் என்னிடம் வர வேண்டி இருக்கின்றது. அப்போது சகோதர சகோதரிகள் என்ற உறவுமுறை முடிவடைந்து விடும். அங்கே நிர்வாண தாமம் உள்ளது, அங்கு தந்தையும் குழந்தைகளும் என்ற முறை மாத்திரமே இருக்கும். இதானாலேயே ”நாங்கள் எல்லோரும் சகோதரர்கள்” எனக் கூறப்படுகின்றது. அவர்கள் கூறுவது போல் கடவுள் சர்வவியாபியாக இருந்தால் அது “தந்தைத்துவம்” ஆகவே இருந்திருக்க வேண்டும். சர்வவியாபி என்ற கருத்து பெருமளவு இழப்பை ஏற்படுத்தி உள்ளது! இப்பொழுது குழந்தைகள் ஆகிய நீங்கள் தந்தையின் நினைவைக் கொண்டிருக்கிறீர்கள். தந்தையை நினைவு செய்வதில் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. இதற்காக நீங்கள் விசேடமாக வழிநடத்தப்படுகின்ற தியானத்தில் அமர்ந்து இருக்க வேண்டும் என்று இல்லை. உங்களுக்கு இலக்குத் தரப்பட்டுள்ளது. இங்கே, நீங்கள் சும்மா அமர்ந்து இருந்து முரளியை கூற வேண்டியது மட்டுமே. நீங்கள் தொடர்ந்து யோகத்தில் நிலைத்து இருக்க வேண்டும். முரளியைச் செவிமடுத்த பின்னர் நீங்கள் நடக்கும் போதும் உலாவும் போதும் நினைவில் நிலைத்து இருக்க வேண்டும். நாங்கள் யாத்திரை சென்று கொண்டு இருக்கின்றோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நினைவில் நிலைத்திருங்கள். நீங்கள் எட்டு மணித்தியாலம் வேலை செய்வதற்கான அனுமதியுள்ளது. ஆனால் நீங்கள் இதற்கென நேரத்தை ஒதுக்க வேண்டும். பிரதானமான விடயம் தூய்மை ஆகும். இது முட்காடு என்று உங்களுக்கு தெரியும். அவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்ந்து குத்திக் கொண்டு இருப்பார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஸ்ரீமத்தை பின்பற்றுங்கள். சிவபாபா உங்களுடன் பேசுகின்றார். அத்துடன் பிரம்மாபாபாவும் உங்களுடன் பேசுகின்றார். ஆனால் உங்களுக்கு தெரியும். சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றும் நீங்கள் மாணவர்கள் என்றும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் கூறுகின்றீர்கள்: அவர் உங்கள் தந்தையும், ஆசிரியரும் அத்துடன் சற்குருவும் ஆவார். உங்களை என்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்றேன். வேறு எவரும் இந்த உத்தரவாதத்தைத் தரமாட்டார்கள். தந்தை ஒருவர் மாத்திரமே இதை கூறுகின்றார். இறைதந்தை சந்தோஷத்தைத் கொடுக்கின்ற தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். அந்தத் தந்தையை எவருக்கும் தெரியாது. அவர்கள் தந்தையை அறிந்து இருந்தால் தந்தையின் சொத்தையும் அறிந்து இருப்பார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. எப்பொழுதும் உங்கள் இலக்கையும் குறிக்கோளையும் உங்கள் முன்னால் வைத்திருப்பதுடன் சதா தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். சதோபிரதான் உலகத்திற்கு செல்வதற்கு தூய பண்புகளைக் கொண்டிருங்கள். உங்கள் புத்தி எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருக்க வேண்டும்.2. உங்கள் அதி அன்பிற்கினிய தந்தையையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள். இந்தத் துன்ப பூமியிலிருந்து உங்கள் புத்தியின் யோகத்தை அகற்றி விடுங்கள்.
ஆசீர்வாதம்:
அனைவரின் நற்குணங்களைப் பார்ப்பதுடன் அனைவரையும் திருப்திப்படுத்துகின்ற ஆவலுடன் நீங்கள் உங்களின் உற்சாகத்தில் சதா ஸ்திரமாக இருக்கும் நற்குணங்களின் சொரூபம் ஆகுவீர்களாக.சதா ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பதற்கு, உங்களுடன் தொடர்பில் வருகின்ற அனைவரையும் திருப்திப்படுத்தும் ஆவலைக் கொண்டிருங்கள். நீங்கள் யாரைப் பார்த்தாலும், ஒவ்வொரு கணமும் அவர்களிடம் இருந்து தொடர்ந்தும் நற்குணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அனைவரின் நற்குணங்களின் சக்தியைப் பெறுவதன் மூலம், உங்களுக்குள் எல்லா வேளையும் உற்சாகம் காணப்படும். பல்வேறு வடிவங்களையும் வெவ்வேறு சூழ்நிலைகளையும் பார்க்கும்போது அல்லது அவற்றைப் பற்றிக் கேட்கும்போது உங்களின் உற்சாகம் குறைகிறது. எவ்வாறாயினும், நற்குணங்களைப் பார்க்கும் ஆவல் உங்களுக்குள் இருக்குமாயின், உங்களின் உற்சாகம் நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்கும். அதன்பின்னர், அனைவரின் நற்குணங்களையும் பார்ப்பதனால் நீங்கள் நற்குணங்களின் சொரூபம் ஆகுவீர்கள்.
சுலோகம்:
எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்திற்கான அத்திவாரம் பலம் வாய்ந்ததாக இருக்குமாயின், ஒரு விநாடியில் சரீரமற்றவர் ஆகுவது இலகுவாக இருக்கும்.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
உங்களின் முகத்தை சதா மலர்ச்சியாக ஆக்குவதே சங்கமயுகத்தின் மிகப்பெரிய பரிசாகும். உங்களின் முகத்தில் ஒருபோதும் துயரத்தின் ரேகைகள் இருப்பதற்கு அனுமதிக்காதீர்கள். ஒரு பூரண சந்திரன் மிகவும் அழகாக இருக்கும். அதேபோல், உங்களின் முகமும் சதா மலர்ந்து இருக்க வேண்டும். உங்களின் முகம் அதிகளவில் ஜொலிக்க வேண்டும், அதனால் மற்றவர்களால் தமது ரூபத்தை உங்களின் முகத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கும். இதற்கு, உங்களின் சுபாவத்தை எளிமையானதாகவும் சகித்துக் கொள்ளக் கூடியதாகவும் ஆக்குங்கள்.