01.07.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது இந்த முழு ஞானத்தினதும் சாராம்சத்தை உங்கள் புத்தியில் கொண்டிருக்கின்றீர்கள், எனவே உங்களுக்குப் படங்கள் எதுவும் தேவையில்லை. தந்தையை நினைவு செய்து, ஏனையோரும் அவரை நினைவு செய்வதற்கு அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள்.

கேள்வி:
இறுதி நேரத்தில் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில், என்ன ஞானம் இருக்கும்?

பதில்:
அந்த நேரத்தில், உங்கள் புத்தியில் நீங்கள் வீட்டிற்குத் திரும்புகிறீர்கள் என்ற ஞானம் மாத்திரமே இருக்கும். பின்னர் அங்கிருந்து, நீங்கள் கீழிறங்கிச் சக்கரத்திற்குள் வருவீர்கள். நீங்கள் படிப்படியாக ஏணியில் கீழிறங்கி வருவீர்கள், பின்னர் தந்தை வந்து உங்கள் ஸ்திதியை ஏறும் ஸ்திதியாக ஆக்குவார். முதலில் நீங்கள் சூரிய வம்சத்திற்கு உரியவராகவும், பின்னர் சந்திர வம்சத்தவராகவும் ஆகுவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் படங்களுக்கான தேவையில்லை.

ஓம் சாந்தி.
குழந்தைகளே, நீங்கள் இங்கே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்களா? நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தின் ஞானத்தை உங்கள் புத்தியில் கொண்டிருக்கின்றீர்கள், அதாவது, நீங்கள் வேறுபட்ட உங்களின் பல பிறவிகளின் ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். பல்வகை ரூபத்தினது படமும் இருக்கின்றது. எவ்வாறு நீங்கள் 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள் என்ற ஞானமும் குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது. முதலில் நீங்கள் அசரீரி உலகிலிருந்து தேவ தர்மத்திற்குள் வந்தீர்கள். இந்த ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது, எனவே படங்களுக்குக்கான தேவை எதுவும் இல்லை. நாங்கள் ரூபங்கள் போன்றவற்றை நினைவு செய்யத் தேவையில்லை. இறுதியில், அசரீரி உலகவாசியான நீங்கள் ஓர் ஆத்மா என்பதையும், உங்களுடைய பாகத்தை நீங்கள் இங்கே நடிக்கின்றீர்கள் என்பதையும் மாத்திரம் நீங்கள் நினைவு செய்வீர்கள். நீங்கள் இதை மறந்துவிடக் கூடாது. மனித உலகச் சக்கரத்தின் இந்த விடயங்கள் மிகவும் இலகுவானவை. இதில் படங்களுக்கான எந்தத் தேவையும் இல்லை, ஏனெனில் அந்தப்படங்கள் போன்றவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. இந்த ஞான மார்க்கத்தில் கல்வி உள்ளது. இந்த ஞான மார்க்கத்தில் அந்தப் படங்களுக்கான எந்தத் தேவையும் இல்லை அந்தப்படங்கள் திருத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, அவர்கள் கீதையின் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் எனக் கூறுகிறார்கள், ஆனால் நாங்கள் அது சிவன் எனக் கூறுகின்றோம். இதுவும் புத்தியினால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். நாங்கள் 84 பிறவிச்சக்கரத்தைச் சுற்றி வந்த ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. நாங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். நாங்கள் தூய்மையாகிப் பின்னர் சக்கரத்தை மீண்டும் சுற்றி வர ஆரம்பிப்போம். இதுவே நீங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டிய ஞானத்தின் சாரமாகும். எவ்வாறு தந்தையின் புத்தியில் உலகின் வரலாற்றினதும், புவியியலினதும் ஞானமும், எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரம் சுழல்கின்றது என்ற ஞானமும் உள்ளதோ, அவ்வாறே நீங்களும் எவ்வாறு முதலில் சூரிய வம்சத்திற்கும் பின்னர் சந்திரவம்சத்திற்கும் செல்கின்றீர்கள் என்ற ஞானம் உங்களிடம் உள்ளது. எனவே படங்களுக்கான தேவையில்லை. அவை ஏனைய மனிதர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. இந்த ஞான மார்க்கத்தில் தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! நான்கு கரங்களுடனான உருவமும் இராவணனின் உருவம் போன்றவையும் உள்ளன. அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே அவை காட்டப்பட வேண்டும். உங்கள் புத்தியில் மிகச்சரியான ஞானம் உள்ளது. நீங்கள் படங்கள் இல்லாமலும் விளங்கப்படுத்தலாம். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை உங்கள் புத்தியில் கொண்டுள்ளீர்கள். படங்களுடன் விளங்கப்படுத்துவது இலகுவானது, ஆனால் உண்மையில் அவற்றுக்கான தேவையில்லை. நீங்கள் முதலில் சூரிய வம்சத்திற்கும் பின்னர் சந்திர வம்சத்திற்கும் உரியவர்களாக இருந்தீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளது. அங்கே அதிகளவு சந்தோஷம் உள்ளது. அது சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இது படங்களைப் பயன்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. இறுதியில், நீங்கள் இந்த ஞானத்தையே புத்தியில் கொண்டிருப்பீர்கள்: நாங்கள் இப்பொழுது வீடு திரும்புகிறோம், பின்னர் நாங்கள் சக்கரத்தினுள் மீண்டும் வருவோம். நீங்கள் ஏணிப்படத்தை பயன்படுத்தி மக்களுக்கு விளக்குகிறீர்கள், அப்பொழுது அவர்களுக்கு அதை விளங்கிக் கொள்வது இலகுவாக இருக்கும். நீங்கள் எவ்வாறு ஏணியில் கீழிறங்கினீர்கள் என்ற ஞானத்தையும் உங்கள் புத்தியில் கொண்டுள்ளீர்கள். பின்னர் தந்தை வந்து உங்கள் ஸ்திதியை ஏறும் ஸ்திதியாக ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் இந்தப் படங்களின் சாரத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். சக்கரத்தின் படமும் உள்ளது. இந்தச்சக்கரம் 5000 வருடங்களைக் கொண்டது என நீங்கள் விளங்கப்படுத்தலாம். அது நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்தால், சனத்தொகை அதிகளவு அதிகரித்து இருக்கும். கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து வந்ததிலிருந்து 2000 ஆண்டுகள் எனக் காட்டப்பட்டுள்ளது. அதில் மனிதர்கள் பலர் இருக்கின்றார்கள். 5000 வருடங்களில் பெருமளவு மனிதர்கள் இருப்பார்கள். நீங்கள் முழுக் கணக்கையும் காட்டுகின்றீர்கள். சத்தியயுகத்தில் அவர்கள் தூய்மையாக இருப்பதால், வெகுசில மக்கள் மாத்திரமே அங்கே இருப்பார்கள். இப்பொழுது அதிகளவு மக்கள் உள்ளார்கள். சத்தியயுகத்தின் காலஎல்லை நூ}றாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்திருப்பின் அந்தச் சனத்தொகை எண்ணற்றதாகவே இருந்திருக்கும். கிறிஸ்தவர்களின் சனத்தொகை, இந்துக்களின் சனத்தொகையிலும் பார்க்க அதிகமானது என அவர்கள் கணக்கிட்டுள்ளார்கள். பலர் கிறிஸ்தவர்கள் ஆகியுள்ளார்கள். சிறந்த விவேகமான குழந்தைகளால் படங்கள் இல்லாமல் இவற்றை விளங்கப்படுத்த முடியும். தற்பொழுது எவ்வளவு மனிதர்கள் இருக்கின்றார்கள் எனவும், எவ்வாறு புதிய உலகில் வெகுசில மனிதர்களே இருப்பார்கள் எனவும் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இப்பொழுது இது அதிகளவு மனிதர்களைக் கொண்ட பழைய உலகமாகும். பின்னர் புதிய உலகம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படும்? புதிய உலகை ஸ்தாபிப்பவர் யார்? தந்தை மாத்திரமே இதை விளங்கப்படுத்துகின்றார். அவர் மாத்திரமே ஞானக்கடலாவார். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் 84 பிறவிச் சக்கரத்தை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது நரகத்திலிருந்து சுவர்க்கத்திற்குச் செல்கின்றோம். ஆகையினால் உள்ளார்த்தமாக அந்தச் சந்தோஷம் உங்களுக்குள் இருக்க வேண்டும், இல்லையா? சத்தியயுகத்தில் துன்பம் என்ற கேள்வியே இல்லை. நீங்கள் முயற்சி செய்து அடைவதற்கு அங்கே எந்தக் குறையும் இருக்காது. இங்கே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். எனக்கு இந்த இயந்திரம் வேண்டும். எனக்கு அந்தப் பொருட்கள் வேண்டும் என நீங்கள் கூறுகின்றீர்கள். இங்கே எப்படி மகாராஜாக்களிடம் சகலவிதமான சௌகரியங்களின் சந்தோஷம் இருக்கிறதோ, அப்படியே சகலவிதமான சௌகரியத்தின் சந்தோஷம் அங்கேயும் இருக்கும். ஏழைகளிடம் சகல வசதிகளின் சந்தோஷம் இருப்பதில்லை. எவ்வாறாயினும் இது கலியுகம். ஆகையினால், சகல விதமான நோய்கள் போன்றவை இருக்கின்றன. நீங்கள் இப்பொழுது அந்தப் புதிய உலகிற்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள். சுவர்க்கமும், நரகமும் இங்கேயே இருக்கின்றன. சூட்சும உலகில் உள்ள வேடிக்கையும், விளையாட்டும் உங்களுக்கு நேரத்தைப் போக்குவதற்கே ஆகும். அந்தச் சகல வேடிக்கையும், விளையாட்டும் நீங்கள் கர்மாதீத நிலை அடையும்வரை நேரத்தைப் போக்குவதற்காகவே ஆகும். நீங்கள் கர்மாதீத நிலையை அடைந்ததும், அவ்வளவு தான். ஆத்மாவாகிய நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை முடித்து இப்பொழுது வீட்டிற்குச் செல்கிறேன் என்பதை மாத்திரமே நீங்கள் நினைவு செய்வீர்கள். பின்னர் நீங்கள் சதோபிரதான் உலகிற்கு வந்து உங்கள் சதோபிரதான் பாகத்தை நடிப்பீர்கள். நீங்கள் இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் கொண்டுள்ளீர்கள். ஆகையினால், படங்கள் போன்றவற்றுக்கான தேவை இல்லை. ஒரு சட்டத்தரணி அதிகளவு கற்று ஒரு சட்டத்தரணி ஆகுகின்றார். அதன்பின்னர் அவர் கற்ற பாடங்கள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும். அதன் பலனாக அவர் வெகுமதியைச் சம்பாதிப்பார். நீங்களும் கற்று அங்கே சென்று ஆட்சிசெய்வீர்கள். அங்கே இந்த ஞானத்திற்கான தேவை இருக்காது. இந்தப் படங்களில் எது சரி, எதுபிழை என்ற விழிப்புணர்வு இப்போது உங்கள் புத்திகளில் உள்ளது. இலக்ஷ்மி, நாராயணன் யார் எனவும் விஷ்ணு யார் எனவும் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். விஷ்ணுவின் படத்தைப் பார்க்கின்ற பொழுது மக்கள் குழப்பம் அடைகின்றார்கள். ஒருவரை அறிந்து கொள்ளாமல் பூஜிப்பது அறிவற்ற செயல். அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. எவ்வாறு அவர்கள் விஷ்ணுவை அறிந்து கொள்ளவில்லையோ, அவ்வாறே இலக்ஷ்மி, நாராயணனையும் அறிய மாட்டார்கள். அவர்கள் பிரம்மா, விஷ்ணு, சங்கரரையும் அறிய மாட்டார்கள். பிரம்மா இங்கே இருந்தார், அவர் தூய்மை அடைந்ததும் அவரது சரீரத்தை நீக்கி விட்டு அங்கே சென்றார். இந்தப் பழைய உலகில் விருப்பமின்மை உள்ளது. இங்குள்ள கர்மபந்தனங்கள் துன்பத்தைக் கொடுக்கின்றன. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: வீடு திரும்புங்கள்! அங்கே துன்பத்தின் பெயரோ, சுவடோ இருக்க மாட்டாது. முதலில் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தீர்கள். பின்னர் உங்கள் இராச்சித்திற்குச் செல்கின்றீர்கள். தந்தை இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களைத் தூய்மை ஆக்குவதற்காகவே வந்துள்ளார். இந்த நேரத்தில் மனிதர்களின் உணவும் பானமும் மிகவும் அழுக்கானது! அவர்கள் தொடர்ந்தும் எதை உண்கின்றார்கள் எனப் பாருங்கள்! அங்கேயுள்ள தேவர்கள் அவ்வாறான அழுக்கான உணவை உண்ண மாட்டார்கள். பக்தி மார்க்கம் எவ்வாறானது எனப்பாருங்கள். அவர்கள் மனிதர்களையும் பலியிடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. பழைய உலகம் நிச்சயமாக மீண்டும் புதியதாக வேண்டும். நீங்கள் இப்பொழுது சதோபிரதான் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். உங்களுடைய புத்திகள் இதைப் புரிந்து கொள்கின்றது, இல்லையா? இங்கே படங்கள் ஏதும் இல்லாதிருந்தால், அதுவும் மிக நல்லதே. இல்லையேல் மனிதர்கள் பலவிதமான கேள்விகளைக் கேட்கின்றனர். 84 பிறவிகளின் சக்கரத்தை தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். நாங்கள் சூரிய வம்சத்தவராகவும், பின்னர் சந்திர வம்சத்தவராகவும் பின்னர் வைசிய வம்சத்தவராகவும் ஆகுகின்றோம். நாங்கள் ஒவ்வொரு வம்சத்திலும் பல பிறவிகளை எடுக்கின்றோம். இதை உங்கள் புத்திகளில் வைத்திருங்கள். குழந்தைகளாகிய நீங்கள் சூட்சும உலகின் இரகசியத்தைப் புரிந்துள்ளீர்கள். நீங்கள் திரான்சில் சூட்சும உலகிற்குச் செல்கின்றீர்கள், ஆனால் அதில் யோகமோ, இந்த ஞானமோ இல்லை. அது ஒரு வழக்கமாகும். எவ்வாறு ஓர் ஆத்மா வரவழைக்கப்படுகின்றார், அந்த ஆத்மா எப்போது, எப்படி வருகின்றார், அவர் இங்கே இருந்தபோது தந்தை கூறுவதைக் கேட்காததற்காக எவ்வாறு அழுது வருந்துகின்றார் என்றெல்லாம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு இவை அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது. அப்பொழுது நீங்கள் கவனயீனமாக இல்லாமல் முயற்சி செய்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்காது தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதில் எப்பொழுதும் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுது மாயையினால் உங்களைத் தவறு இழைக்கச் செய்ய முடியாது. பாபாவும் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே நேரத்தை வீணாக்காதீர்கள்! பலருக்கும் இந்தப் பாதையைக் காட்டுவதற்கு முயற்சி செய்யுங்கள். மகாதானி ஆகுங்கள்! தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! இங்கே வருகின்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதுடன் 84 பிறவிகளின் சக்கரத்தைப் பற்றியும் கூறுங்கள். எவ்வாறு உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் இடம் பெறுகின்றது, எவ்வாறு சக்கரம் சுழல்கின்றது போன்ற இந்த ஞானம் உங்கள் புத்தியில் இரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த அழுக்கான உலகிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளீர்கள் என்ற சந்தோஷத்தில் இருக்க வேண்டும். சுவர்க்கம், நரகம் இரண்டும் இங்கேயே ஒன்றாக உள்ளன என மனிதர்கள் நம்புகின்றார்கள். பெருமளவு செல்வத்தைக் கொண்டிருப்பவர்கள், தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக நம்புகின்றார்கள். அவர்களிற் சிலர் நல்ல செயல்களைச் செய்துள்ளார்கள். ஆகையினால் சந்தோஷத்தைப் பெற்றுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது மிக நல்ல செயல்களைச் செய்கின்றீர்கள். எனவே நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். அந்த மக்கள் ஒரு பிறவிக்குத் தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக நம்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்களுடைய சந்தோஷம் தற்காலிகமானது. உங்களுடைய சந்தோஷம் 21 பிறவிகளுக்கு நீடிக்கிறது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: அனைவருக்கும் தொடர்ந்தும் இந்தப் பாதையைக் காட்டுங்கள். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதால் மட்டுமே நீங்கள் நோயிலிருந்து விடுபட்டு உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். சுவர்க்கத்தில் ஓர் இராச்சியம் இருந்தது, அதையும் நினைவு செய்யுங்கள். அந்த இராச்சியம் இருந்தது, ஆனால் அது இப்பொழுது இல்லை. இது பாரதத்திற்கு மாத்திரமே பொருந்தும். ஏனைய அனைத்தும் பக்கக் கதைகள். இறுதியில் அனைவரும் வீடு திரும்புவார்கள். பின்னர் நாங்கள் அந்தப் புதிய உலகிற்குச் செல்வோம். இதை விளங்கப்படுத்துவதற்குப் படங்கள் தேவையில்லை. அசரீரி உலகம், சூட்சும உலகம் போன்றவற்றின் படங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களே, அந்தப் படங்களை உருவாக்கினார்கள் என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் அவற்றைத் திருத்தி அமைக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் நாஸ்திகர்கள் என அவர்கள் கூறுவார்கள். இதனாலேயே நாங்கள் அவற்றைச் சரியான திருத்தத்துடன் உருவாக்குகின்றோம். உண்மையில் பிரம்மா மூலம் ஸ்தாபனையும், சங்கரர் மூலம் விநாசமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. உண்மையில் எவருமே எதையும் செய்வதில்லை. விஞ்ஞானிகள் தங்கள் சொந்தப் புத்தியினால் அனைத்தையும் உருவாக்குகின்றார்கள். மேலும் குண்டுகளை உற்பத்தி செய்ய வேண்டாம் எனச் சிலர் எவ்வளவு கூறிய போதிலும், அதிகளவு குண்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றைக் கடலில் போடுவதற்கு முடிவு செய்யும் போதே, அவர்கள் அதை உற்பத்தி செய்வதை நிறுத்துவார்கள். அந்தக் குண்டுகளை இன்னமும் வைத்திருப்பதால், மற்றவர்கள் மேலும் பல குண்டுகளை உற்பத்தி செய்வார்கள். உலகம் இப்பொழுது நிச்சயமாக அழிக்கப்படும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். யுத்தம் நிச்சயமாக இடம்பெறும். விநாசம் இடம்பெற்று நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தைக் கோரிக்கொள்வீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது அனைவருக்கும் நன்மை செய்பவர் ஆகுங்கள். தந்தை குழந்தைகளாகிய உங்கள் பாக்கியத்தை மேன்மை ஆக்குவதற்கு உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உங்களிடம் உள்ளவற்றை பிரபுவின் பெயரால் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். சில மக்களின் செல்வம் நிலத்தின் கீழே புதைக்கப்படும், சிலரின் செல்வம் அரசாங்கத்தால் கொள்ளை அடிக்கப்படும். பிரபுவே கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் பணத்தை இங்கே ஆன்மீகப் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்த வைத்தியசாலையைத் திறப்பதற்குப் பயன்படுத்துங்கள், பலர் நன்மை அடைவார்கள். பிரபுவின் பெயரால் பயன்படுத்துங்கள், அதன் பிரதிபலனை 21 பிறவிகளுக்குப் பெறுவீர்கள். இந்த உலகம் அழிக்கப்பட உள்ளது. ஆகையினால் இயன்றளவிற்கு அனைத்தையும் பிரபுவின் பெயரால் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். சிவபாபாவே பிரபு ஆவார். பக்தி மார்க்கத்திலும் நீங்கள் பிரபுவின் பெயரால் தானம் செய்தீர்கள். நீங்கள் இப்பொழுது இதை நேரடியாகவே செய்கின்றீர்கள். கடவுளின் பெயரால் பெரிய பல்கலைக் கழகங்களைத் திறவுங்கள். பலர் நன்மை அடைவார்கள். நீங்கள் உங்கள் இராச்சிய பாக்கியத்தை 21 பிறவிகளுக்குக் கோரிக் கொள்வீர்கள். இல்லையெனில் அந்தச் செல்வமும் செழிப்பும் அழிக்கப்படும். பக்தி மார்க்கத்தில் அவை அழிக்கப்படுவதில்லை. இப்பொழுது அனைத்துமே அழிக்கப்படும். இப்பொழுது அதைப் பயன்படுத்துங்கள், நீங்கள் அதன் பிரதிபலனைப் பெறுவீர்கள். பிரபுவின் பெயரால் அனைவருக்கும் நன்மையைக் கொண்டு வாருங்கள், நீங்கள் 21 பிறவிகளுக்கு ஆஸ்தியைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்களுடைய பாக்கியத்தில் அதைக் கொண்டுள்ளவர்கள் இந்த முறையில் தொடர்ந்தும் செலவு செய்வார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இவருடைய (பாபாவின்) பாகம் அவ்வாறானது. அவர் சக்திவாய்ந்த போதையைக் கொண்டிருந்தார்: பாபா எனக்கு அரசுரிமையைக் கொடுக்கின்றார். ஆகையினால் நான் இந்தக் கழுதைத் தனமானவற்றை வைத்திருந்து என்ன செய்யப் போகிறேன்? நீங்கள் அனைவரும் அரசுரிமையைப் பெறுவதற்காக இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். ஆகையினால், அவரைப் பின்பற்றுங்கள்! அவர் எவ்வாறு அனைத்தையும் துறந்தார் என நீங்கள் அறிவீர்கள். அவர் அந்த அரசுரிமையைப் பெறப் போகின்றேன் என்று பெருமளவு போதையைக் கொண்டிருந்தார். முதற் பங்காளி அல்லாவைக் கண்டு கொண்டார். அதனால் அவர் தனது இராச்சியத்தை (வியாபாரத்தை) தனது வியாபாரப் பங்காளியிடம் கொடுத்து விட்டார். அவரிடம் ஓர் இராச்சியம் இருந்தது, அவர் எதிலும் குறைந்திருக்கவில்லை! அவருடைய வியாபாரம் மிகவும் செழிப்பாக இருந்தது. நீங்கள் இப்பொழுது உங்கள் அரசுரிமையைப் பெற உள்ளீர்கள். ஆகையினால் பலருக்கு நன்மை கொண்டு வாருங்கள். ஒரு பத்தி உருவாக்கப்பட்டது. சிலர் முற்றாக பதனிடப்பட்டு தயாராக வெளியே வந்தார்கள், ஆனால் ஏனையோர் பலவீனமாக இருந்தனர். அரசாங்கத்தால் செய்யப்படுகின்ற கடதாசி வங்கி நோட்டுகள் சரியாக வரவில்லை என்றால், அவை அனைத்தும் எரிக்கப்படும். முன்னைய காலத்தில் வெள்ளிக்காசுகள் வழக்கத்தில் இருந்தன. அங்கே நிறைய தங்கமும், வெள்ளியும் இருந்தன. இப்பொழுது என்ன நடைபெறுகிறது எனப்பாருங்கள்! சிலருடைய செல்வம் அரசாங்கத்தால் கொள்ளை இடப்படுகின்றன. ஏனையவர்களினுடைய செல்வம் திருடர்களினால் கொள்ளை இடப்படுகின்றன. எவ்வளவு கொள்ளைகளும், திருட்டுகளும் உள்ளன எனப்பாருங்கள்! பஞ்சமும் ஏற்படும். இது இராவண இராச்சியம். சத்தியயுகம், இராம இராச்சியம் என அழைக்கப்படும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அதிமேன்மையானவர்கள் ஆக்கப்பட்டீர்கள். எனவே எவ்வாறு இந்தளவிற்கு ஏழைகள் ஆகினீர்கள்? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிகளவில் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆகையினால் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நாளுக்கு நாள் உங்கள் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் யாத்திரையில் நீங்கள் நெருக்கமாக வருகின்ற அளவிற்கு, பெருமளவு சந்தோஷத்தை நீங்கள் உணர்வீர்கள். அமைதிதாமமும், சந்தோஷதாமமும் உங்கள் சற்று முன்னிலையிலேயே உள்ளன என நீங்கள் அறிவீர்கள். உங்களால் வைகுந்தத்தின் மரங்களையும் பார்க்க முடியும். அவ்வளவு தான்! நாங்கள் இப்பொழுது மிகவும் அண்மித்து விட்டோம். அச்சா

இனிமையிலும், இனிமையான அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் நேரத்தைப் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். மாயை உங்களைக் கவனயீனம் ஆக்காமல் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு மகாதானியாகி, பலருக்குப் பாதையைக் காட்டும் சேவையில் மும்முரமாக ஈடுபட்டு இருங்கள்.

2. உங்கள் பாக்கியத்தை மேன்மை ஆக்குவதற்கு, உங்களிடம் உள்ள அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பிரபுவின் பெயரால் பயன்படுத்துங்கள். ஓர் ஆன்மீகப் பல்கலைக் கழகத்தைத் திறவுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தூய, மேன்மையான செயல்களைச் செய்து, அதனால் அதிமேலான தந்தையை வெளிப்படுத்துவீர்களாக.

எப்படி நீங்கள் தூய, புண்ணியச் செயல்களைச் செய்வதற்கு எப்போதும் உங்களின் வலது கையைப் பயன்படுத்துகிறீர்களோ, அதேபோல், சதா தூய, மேன்மையான செயல்களைச் செய்கின்ற வலது கரமான குழந்தைகள் ஆகுங்கள். உங்களின் ஒவ்வொரு செயலும் அதிமேலான தந்தையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஏனென்றால், உங்களின் நடைமுறைச் செயலே உங்களின் எண்ணங்கள், வார்த்தைகளின் சத்தியத்தை வெளிப்படுத்துகின்றன. உங்களின் செயலைப் பார்க்கின்ற எவராலும் அதனூடாக ஓர் அனுபவத்தைப் பெற முடியும். எனவே, உங்களின் ஆன்மீக திருஷ்டியாலும் உங்களின் ஆன்மீக முகத்தின் சந்தோஷத்தாலும் தந்தையை வெளிப்படுத்துங்கள். இதுவும் கர்மா ஆகவே இருக்கும்.

சுலோகம்:
உங்களின் கண்களில் தூய்மையின் பிரகாசத்தையும் உங்களின் உதடுகளில் தூய்மையின் புன்னகையையும் கொண்டிருப்பதே ஆன்மீகத்தின் அர்த்தம் ஆகும்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியை சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.

தற்காலத்தில், சூரிய சக்தி சேமிக்கப்பட்டு, பல பணிகளைச் செய்து முடிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், எண்ணங்களின் சக்தியை உங்களுக்குள் சேமியுங்கள். உங்களால் மற்றவர்களைச் சக்தியால் நிரப்பி, அவர்களின் பணியை வெற்றிபெறச் செய்ய முடியும். தைரியம் எதுவும் இல்லாமல் இருப்பவர்களை உங்களின் வார்த்தைகளாலும் உங்களின் மேன்மையான எண்ணங்களின் சூட்சுமமான சக்தியாலும் தைரியசாலிகள் ஆக்குங்கள். இதுவே தற்போதைய நேரத்தின் தேவையாக உள்ளது.