01.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, மற்றவர்களைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்தி, உங்களுக்கு நன்மை செய்யுங்கள். தங்கத்தைப் போலாகி, மற்றவர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்.
கேள்வி:
சரீரமற்றவர்கள் ஆகுவதற்குச் சதா முயற்சி செய்பவர்களின் பிரதான அறிகுறிகள் எவை?பதில்:
அவர்கள் தங்களின் பௌதீகப் புலன்களைப் பலவந்தமாகக் கட்டுப்படுத்துவதில்லை. ஏனென்றால் அவர்களின் பௌதீகப் புலன்கள் இயல்பாகவே குளிர்ச்சி அடைகின்றன. ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள் என்ற இயல்பான விழிப்புணர்வு அவர்களிடம் இருக்கின்றது. அவர்கள் தொடர்ந்தும் சரீர உணர்வைத் துறப்பதால், பெயர், ரூபத்தின் போதை எதுவுமே முடிவடைகின்றது. அவர்கள் பிறரைப் பற்றிச் சிந்திப்பதில்லை.பாடல்:
நீங்களே அன்புக் கடல், நாங்கள் ஒரு துளிக்காக ஏங்குகிறோம்.ஓம் சாந்தி.
அவர் அன்புக்கடல் மாத்திரமல்ல, அவர் ஞானக்கடலும் ஆவார். ஞானமும், அறியாமையும் இருக்கின்றன. ஞானம் பகலும், அறியாமை இரவும் ஆகும். “ஞானம்” என்ற வார்த்தை சிறந்தது, ஆனால் “அறியாமை” என்ற வார்த்தை தீயதாகும். அரைக்கல்பத்திற்கு ஞானத்திற்கான வெகுமதியும், அரைக்கல்பத்திற்கு அறியாமைக்கான வெகுமதியும் உள்ளன. அறியாமையின் வெகுமதி துன்பமும், ஞானத்தின் வெகுமதி சந்தோஷமும் ஆகும். இவ்விடயங்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவானவை. ஞானமாகிய பகலும், அறியாமையாகிய இரவும் உள்ளன. ஞானம் என்றால் என்ன என்றோ, அறியாமை என்றால் என்ன என்றோ எவருக்கும் தெரியாது. இவை எல்லையற்ற விடயங்களாகும். ஞானம் என்றால் என்ன, பக்தி என்றால் என்ன என்று நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றீர்கள். ஞானத்தின் மூலம் நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகும்பொழுது, வழிபாட்டின் சம்பிரதாயங்களைப் பற்றி அறிந்து கொள்கிறீர்கள். ஆலயங்கள் போன்றன அனைத்தும் ஞாபகார்த்தங்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களின் வாழ்க்கை வரலாறு என்ன என்பதும் உங்களுக்குத் தெரியும். தாங்கள் வழிபடுபவர்களின் வாழ்க்கை வரலாறு என்ன என்பது வழிபடுபவர்களுக்கே தெரியாது. வழிபடுதல் பக்தி என அழைக்கப்படுகின்றது. பக்தர்களுக்குப் பக்தியின் பலனைக் கொடுப்பதற்கு, கடவுள் தனது பக்தர்களைச் சந்திக்க வேண்டும். கடவுள் வந்து, பூஜிப்பவர்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் சத்தியயுகத்தில் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும், கலியுகத்தில் பூஜிப்பவர்களாகவும் இருக்கின்றீர்கள். இன்று நீங்கள் என்னவாக இருக்கின்றீர்கள் என்பதும், நாளை என்னவாக ஆகுவீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். விநாசம் நிச்சயமாக இடம்பெறும். அது எந்நேரத்திலும் இடம்பெற முடியும்; அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பல இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறவுள்ளன என நினைவுகூரப்பட்டுள்ளது. நீங்கள் எழுத வேண்டும்: உள்நாட்டு யுத்தங்களும், இயற்கை அனர்த்தங்களும் இறை அனர்த்தங்கள் என அழைக்கப்பட மாட்டாது; அவை நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. இயற்கை அனர்த்தங்களும் இருக்கும். அவை விநாசத்தில் உதவும். அடைமழையும், பஞ்சம் போன்றனவும் இருக்கும். பூகம்பங்களும் ஏற்படும். இவ்விடயங்கள் யாவற்றினாலுமே விநாசம் ஏற்படும். இவை யாவும் நிச்சயமாக இடம்பெறும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். வேறு எவ்வாறு சத்தியயுகத்தில் வெகு சில மனிதர்கள் இருப்பார்கள்? விநாசம் நிச்சயமாகத் திடீரென இடம்பெறுகின்றது. இந்த அழுக்கான ஆடைகள் அனைத்தும் பாரிய எல்லையற்ற இயந்திரத்தில் சலவை செய்யப்படும் என்பதைக் குழந்தைகளான நீங்கள் மிகவும் நன்றாகப் புரிந்துகொள்கின்றீர்கள். கடவுள் அழுக்கான ஆடைகளைச் சலவை செய்கின்றார் எனக் கூறப்;படுகின்றது. அது பௌதீக ஆடைகளைப் பற்றிய கேள்வி அல்ல, ஆனால், அது சரீரங்களையே குறிக்கின்றது. யோக சக்தி மூலமே ஆத்மாக்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இந்நேரத்தில் ஐந்து விகாரங்களும் தமோபிரதானாக உள்ளதால், உருவாக்கப்பட்ட சரீரங்களும் அவ்வாறே உள்ளன. தூய்மையாக்குபவரான தந்தை வந்து, உங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். ஏனைய அனைவரும் அழிக்கப்படுவார்கள். நீங்கள் எவ்வாறு தூய்மை ஆகுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு மிகவும் இலகுவான பாதை காட்டப்பட்டுள்ளது. மனிதர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. பக்திமார்க்கத்தில், எங்கெல்லாம் யாகம் வளர்க்கின்றார்களோ, அங்கெல்லாம் சென்று அவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: நீங்கள் வழிபடுபவரின் வாழ்க்கை வரலாற்றைப் புரிந்து கொள்வதனால், நீங்களும் தேவர்கள் ஆகலாம். அவர்கள் எவ்வாறு ஜீவன்முக்தி அடைந்தார்கள் என்பதை நீங்களும் வந்து புரிந்துகொண்டால், உங்களாலும் ஜீவன்முக்தி அடைய முடியும். நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளங்கப்படுத்தும் பொழுது, அவர்களால் மிகத்தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். நீங்களும் தந்தையிடமிருந்து அவர்களது வாழ்க்கை வரலாற்றை இப்பொழுது செவிமடுக்கின்றீர்கள். குழந்தைகளான நீங்கள் அதிகளவு புரிந்துணர்வைப் பெற்றிருக்கிறீர்கள். பரமாத்மாவான பரமதந்தையின் வாழ்க்கை வரலாறு எவருக்குமே தெரியாது. அவரைச் சர்வவியாபகர் என்று கூறுவதனால் அவருக்கு ஒரு வாழ்க்கை வரலாறு இருக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது பரமாத்மாவாகிய பரமதந்தையின் வாழ்க்கை வரலாறு தெரியும், அதாவது, உங்களுக்கு ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியும். தந்தை வந்து, தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற இந்த நேரமே ஆரம்பம் என அழைக்கப்படுகின்றது. பின்னர் இடையில் பக்தியின் பாகம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் இந்நேரத்தில் வந்து, ஸ்தாபனையை மேற்கொள்கிறேன்; நான் அதனை நடைபெறத் தூண்டுகின்றேன். நானே கரன்கரவன்ஹார் (தானும் செய்து, பிறரையும் செய்விப்பவர்) தூண்டுதல் கொடுத்தல் என்றால், நீங்களே செய்தல் என்று அர்த்தமல்ல. பாபா வந்து, இவரின் அங்கங்களின் மூலம் அதை மேற்கொள்கின்றார். இதில் தூண்டுதல் என்ற கேள்விக்கு இடமில்லை. கரன்கரவன்ஹார் நிச்சயமாக நேரடியாக வந்து, இவரின் மூலம் தொழிற்படுவார். தூண்டுதல் மூலம் எதையுமே பெற முடியாது. ஓர் ஆத்மாவினால் சரீரம் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது. கடவுள் தூண்டுதல் மூலம் அனைத்தையும் செய்கின்றார் எனப் பலர் கூறுகின்றார்கள். “பாபா, எனது கணவருக்குத் தூண்டுதல் கொடுத்து, அவரது புத்தியைச் சரிப்படுத்துங்கள்!” தந்தை கூறுகின்றார்: இதில் தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. அவ்வாறாயின், சிவஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகின்றது? அனைத்தும் தூண்டுதல் மூலம் நிறைவேற்றப்படும் எனில், அவர் ஏன் வர வேண்டும்? முதலில், அவர்களுக்குக் கடவுள் யார் என்பது தெரியாது. அனைத்தும் கடவுளின் தூண்டுதலினாலே நடைபெறுகின்றது என அவர்கள்; கூறுகின்றார்கள். அசரீரியானவரால் எவ்வாறு தூண்டுதலின் மூலம் எதனையும் செய்ய முடியும்? அவர் கரன்கரவன்ஹார் ஆவார். அவர் வந்து எங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றார். அவர் பௌதீக அங்கங்களின் மூலம் முரளியைக் கூறுகின்றார். பௌதீக அங்கங்களின் ஆதாரத்தை எடுக்காமல், அவரால் எவ்வாறு முரளியை வாசிக்க (இசைக்க) முடியும்? அவரே ஞானக்கடல் ஆவார்;. ஆகவே, அவர் ஞானத்தைப் பேசுவதற்கு வாய் ஒன்று தேவை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவீர்கள். நீங்கள் ஞானம் முழுவதையும் பெற்றுள்ளீர்கள். ஞானமின்றி சற்கதி கிடைக்காது என மக்கள் நம்புகின்றார்கள். யாரால் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும்? இந்த ஞான மார்க்கத்திற்கும், அறியாமைப் பாதைக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள்! அவர்களும் விஞ்ஞானத்தைப் (விக்கியான்) பற்றியும் பேசுகின்றார்கள். அறியாமை என்பது இருளாகும். எவ்வாறாயினும், இந்த ஞானமும் (கியான்), விஞ்ஞானமும் (விக்கியான்) முக்தியும் ஜீவன்முக்தியும் என எங்களால் கூற முடியும். நீங்கள் இப்பொழுது தூய்மை ஆகுவதற்கான இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகின்றீர்கள். இதனைக் கேட்கின்றவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் அதிசயிப்பார்கள். ஆத்மாக்கள் இந்த ஞானத்தைப் பெறுவதனால், நிச்சயமாக அந்தச் சம்ஸ்காரங்களைத் தங்களுடன் எடுத்;துச் செல்வார்கள். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதால், இந்த ஞானம் இருக்க வேண்டும், ஆனால்;, இம் முயற்சி ஒரு வெகுமதியைப் பெறுவதற்கே என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஒரு வெகுமதியைப் பெற்றதன் பின்னர் இந்த ஞானத்திற்கான தேவை என்ன இருக்கும்? சத்தியயுகமே குழந்தைகளாகிய உங்களுக்கான வெகுமதியாகும். இவ்விடயங்களைக் கேட்கும் பொழுது, நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்கள். இந்த ஞானம் ஏன் தொன்றுதொட்ட காலம் முதல் தொடரவில்லை? தந்தை கூறுகின்றார்: இந்த ஞானம் மறைந்து விடுகின்றது. பகல் ஆகியதும் அறியாமை இருக்காது, ஆகவே இந்த ஞானத்திற்கான அவசியமும் ஏற்படாது. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட்டு, விளங்கப்படுத்தப்படல் வேண்டும். எவராலும் இதனை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியாது. பாரதத்தில் மாத்திரமே சிவபாபா வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக ஒரு பரிசைக் கொண்டு வருகின்றார். பக்தியின் பின்னர், சற்கதி கிடைக்கின்றது. இவ் விநாசம் நிச்சயமாக இடம்பெறும். அதன் அறிகுறிகளும் இருக்கின்றன. ஒரு சிறு தீப்பொறியினால் எவ்வாறு முழுக் கட்டடமும் இரண்டே மணித்தியாலங்களில் முழுமையாக எரிந்து போனது என்பதைப் பற்றி நீங்கள் தொடர்ந்தும் கேட்கின்றீர்கள். இது ஒன்றும் புதியதல்ல! விநாசம் நிச்சயமாக இடம்பெற வேண்டும். சத்தியயுகத்தில் மேன்மையான மனிதர்கள் வெகுசிலர் மாத்திரமே இருப்பார்கள். மேன்மையானவர்கள் ஆகுவதற்கு அதிகளவு முயற்சி தேவை. மாயை உங்கள் மூக்கிலேயே உங்களைப் பிடித்துக் கொள்கின்றாள். இவ்வாறு வீழ்ந்து விடுபவர்கள் மிகவும் மோசமாகத் தாக்கப்படுகின்றார்கள். இதற்குக் காலம் எடுக்கின்றது. காம விகாரமே மிக அதிகச் சேதத்தை விளைவிக்கின்றது. இதனாலேயே காமமே கொடிய எதிரி என்று கூறப்படுகின்றது. இதுவே உங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகின்றது. விகாரத்தினாலேயே சச்சரவுகள் ஏற்படுகின்றன. உங்களை நீங்கள் விரும்பியவாறு இருக்க அவர்கள் அனுமதிக்காமல், விகாரத்தில் ஈடுபடும்படி பலவந்தப்படுத்தினால், நீங்கள் நிச்சயமாகக் கூறவேண்டும்: இதனை விடப் பாத்திரம் கழுவி உழைப்பது மேல். நான் வீடு கூட்டித் துடைப்பேன், ஆனால் குறைந்தபட்சம் நான் தூய்மையாக இருப்பேன். இதற்குப் பெருமளவு தைரியம் தேவைப்படுகின்றது. ஒருவர் தந்தையிடம் அடைக்கலம் பெறும்பொழுது, மாயையும் யுத்தம் புரிய ஆரம்பிக்கின்றாள். ஐந்து விகாரங்களின் நோயானது மேலும் தீவிரமாகப் பரவுகின்றது. முதலில் உங்கள் புத்தி உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் மரணித்து வாழ்கின்றீர்கள். இங்கிருந்து நங்கூரமானது உயர்த்தப்பட்டு விட்டது. நீங்கள் கலியுகம் என்ற விகாரமான கரையை விட்டு அப்பால் சென்று விட்டீர்கள். 'நாங்கள் இப்பொழுது ஒரு யாத்திரையில் இருக்கின்றோம், நாங்கள் சரீரமற்றவர்களாகி வீட்டிற்குத் திரும்புகின்றோம்". ஆத்மாக்களான உங்களிடம் இந்த ஞானம் உள்ளது: 'நாங்கள் இச் சரீரங்களை விடுத்து, இன்னொன்றை எடுப்போம். நாங்கள் வீட்டில் எங்கள் குடும்பங்களுடன் வாழும்பொழுது, தாமரையைப் போல் தூய்மையாக இருப்பதுடன், நினைவு யாத்திரையிலும் இருக்கின்றோம். இது ஓர் இடுகாடு என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நாங்கள் சந்தோஷப் பூமிக்குச் செல்கின்றோம். உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கக்கூடிய வழிகளையே பாபா உங்களுக்குக் காட்டுகின்றார். தூய்மை ஆகும்பொருட்டு, நாங்கள் யோகத்தில் நிலைத்திருக்கின்றோம். நினைவின் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பின்னர் ஆத்மாக்களான நீங்கள், உங்களுடைய சரீரங்களை நீக்குவீர்கள். இந்த யாத்திரை மிகவும் அற்புதமானது! தந்தையையும், உங்கள் இராச்சியத்தையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் மிகவும் இலகுவான விடயத்தை நினைவுசெய்ய முடியாதவர்களாக இருக்கின்றீர்கள். அல்பாவை நினைவு செய்யுங்கள், அவ்வளவே! எனினும் மாயை உங்களை இந்தளவையேனும் நினைவு செய்ய அனுமதிப்பதில்லை. இதற்கு முயற்சி தேவை. எங்கள் பாபா வந்து விட்டார் என்ற ஞானத்தையே ஆத்மாக்களாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்களே கற்கின்றனர். ஓர் ஆத்மா ஒரு சரீரத்துடன் பிறக்கின்றார். ஆத்மாக்கள் சகோதரர்களே ஆவார்கள். நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும்பொழுது, பல்வேறு உறவினர்கள் ஏற்படுகின்றார்கள். இங்கே, நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். நீங்கள் சகோதரர்களும், அத்துடன் சகோதர, சகோதரிகளும் ஆவீர்கள். இது இல்லறப் பாதையாகும். இருவருக்கும் ஆஸ்தி ஒன்று தேவை. ஆத்மாக்களே முயற்சி செய்கின்றனர். உங்களை ஓர் ஆத்மா என்று கருதுவது மாத்திரமே உங்கள் ஒவ்வொருவருக்குமான முயற்சி ஆகும். சரீர உணர்வு எதுவும் இருக்கக்கூடாது. உங்களுக்குச் சரீரமே இல்லாவிடின், உங்களால் எவ்வாறு விகாரத்தில் ஈடுபட முடியும்? நான் ஓர் ஆத்மா, நான் தந்தையிடம் செல்ல வேண்டும். சரீரம் என்ற உணர்வானது இருக்கவே கூடாது. நீங்கள் எவ்வளவிற்கு அதிகமாக யோகி ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் பௌதீகப் புலன்கள் சாந்தம் அடையும். நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும்பொழுது, உங்கள் பௌதீகப் புலன்கள் விஷமத்தை விளைவிக்கின்றன. தான் எதையோ பெற்றுக் கொள்கிறார் என ஆத்மா அறிந்து கொள்வதால், சரீரத்திலிருந்து தொடர்ந்தும் பற்றற்றவராக இருப்பார். அப்பொழுது பௌதீகப் புலன்களும் சாந்தமடையும். சந்நியாசிகள் தங்கள் பௌதீகப் புலன்களை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்துகின்றார்கள். அது ஹத்தயோகம் ஆகும். நீங்கள் அனைத்தையும் யோகத்தாலேயே செய்ய வேண்டும். உங்கள் புலன்களை யோகசக்தியால் கட்டுப்படுத்த முடியாதா? நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக உங்கள் புலன்களும் சாந்தமடையும். நீங்கள் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். பேறும் மிகவும் மகத்தானது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் யோக சக்தியால் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். உங்கள் பௌதீகப் புலன்களை வெற்றி கொள்வதனாலேயே பாரதத்தின் யோகம் மிகவும் பிரபல்யமாக உள்ளது. நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாகவும், தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாகவும் மாறுகின்றீர்கள். பிரஜைகளும் சுவர்க்கவாசிகளே. நீங்கள் யோக சக்தியின் மூலமே சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள், பௌதீகப் பலத்தால் உங்களால் அவ்வாறாக முடியாது. பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது என்றில்லை. குமாரிகளுக்கு முயற்சி எதுவும் இல்லாததைப் போலுள்ளது; அவர்கள் விடுபட்டிருக்கின்றார்கள். நீங்கள் விகாரத்தில் ஒரு தடவை ஈடுபட்டதும், பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. தொடர்ந்தும் ஒரு குமாரியாக இருப்பது நல்லது. இல்லாவிடின் நீங்கள் “ஆதர்குமாரி” (அரைக் குமாரி) என்ற பெயரையே பெறுகிறீர்கள். நீங்கள் ஏன் தம்பதியராக வேண்டும்? அதிலும் பெயருக்கும், ரூபத்திற்குமான பெருமளவு போதை இருக்கின்றது. அதுவும் முட்டாள்தனம் ஆகும். தம்பதியினரான பின்னர் தூய்மையாக இருப்பதற்குப் பெருமளவு தைரியம் தேவைப்படுகின்றது. ஞானம் பற்றிய முழுமையான ஞானோதயம் இருக்க வேண்டும். பலர் தைரியசாலிகளாக இருக்கின்றார்கள், ஆனால் ஒருமுறை தீயினது சிறிதளவு தாக்கம் ஏற்பட்டதும், அனைத்தும் முடிந்து விடுகின்றன. இதனாலே பாபா கூறுகின்றார்: ஒரு குமாரியாக இருப்பதே சிறந்தது. “ஆதர்-குமாரி” ஆகவேண்டும் என்ற எண்ணத்தைக் கூட ஏன் கொண்டிருக்கின்றீர்கள்? குமாரிகளின் பெயர் புகழப்படுகின்றது. அவர்கள் பிறப்பிலிருந்தே கன்னிகளாக இருக்கின்றார்கள். கன்னிகளாக இருப்பது சிறந்தது. அதில் சக்தி இருக்கின்றது. அப்பொழுது வேறு எவருமே நினைவு செய்யப்பட மாட்டார்கள். உங்களுக்குத் தைரியம் இருப்பின், நீங்கள் அதைச் செய்து காட்டலாம். எப்படியாயினும், அதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் இருவர் இருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு குமாரியாக இருக்கும்பொழுது, ஒருவராக இருக்கின்றீர்கள். நீங்கள் இருவராக ஆகும்பொழுது, முரண்பாடுகள் எழுகின்றன. சாத்தியமான வரையில், ஒரு குமாரியாக இருப்பதே சிறந்தது. ஒரு குமாரியால் வெளியில் சேவைக்குச் செல்லவும் முடியும். நீங்கள் பந்தனத்தில் ஒருமுறை கட்டுண்டீர்களாயின், அந்தப் பந்தனம் அதிகரிக்கும். உங்கள் புத்தி சிக்கிக் கொள்ளும் வகையானதொரு பொறியை நீங்கள் ஏன் உங்களுக்கு உருவாக்க வேண்டும்? அத்தகைய பொறியில் அகப்படுவது நல்லதல்ல. குமாரிகளுக்கு இது மிகவும் சிறந்தது. குமாரிகள் பாபாவின் பெயரைப் புகழடையச் செய்துள்ளனர். கன்னையா (குமாரிகளின் கிருஷ்ணர்) என்ற பெயர் நினைவுகூரப்படுகின்றது. ஒரு குமாரியாக இருப்பது மிகவும் சிறந்தது. இது அவர்களுக்கு மிகவும் சுலபமானதாகும். மாணவ வாழ்க்கை தூய வாழ்க்கையாகும். புத்தியும் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றது. குமாரர்களும் பீஷ்ம பிதாமகரைப் போலாக வேண்டும். நீங்கள் கடந்த கல்பத்திலும் இவ்வாறு ஆகினீர்கள், இதனாலேயே, தில்வாலா ஆலயத்தில் ஞாபகார்த்தம் இருக்கின்றது. தந்தை குழந்தைகளான உங்களுக்குக் கட்டளை இடுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள்! ஏனைய அனைத்தையும் துறந்து, உங்களுக்கு நன்மை செய்யுங்கள். தந்தையை நினைவு செய்வதிலேயே நன்மை இருக்கின்றது. குழந்தைகளான நீங்கள் தவறு செய்யும்;பொழுது வீழ்கின்றீர்கள். மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காதீர்கள், உங்களுக்கு நன்மை அளியுங்கள். வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவே வேண்டாம்! தங்கத்தைப் போலாகி, இந்தப் பாதையை மற்றவர்களுக்கும் காட்டுங்கள். சதோபிரதான் ஆகுவதற்கு ஒரேயொரு வழியே இருக்கின்றது. நீங்கள் தூய்மை ஆகாமல், உங்களால் முக்தி தாமத்திற்குச் செல்ல முடியாது. ஒரேயொரு வழியே உள்ளது, பின்னர் உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். அரட்டையடிப்பதை விட்டுவிடுங்கள். இல்லாவிடின், உங்களுக்கே நீங்கள் ஓர் இழப்பை ஏற்படுத்துகின்றீர்கள். தந்தை உங்களைச் சபிப்பதில்லை, ஆனால் நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாத பொழுது, உங்களுக்கு நீங்களே ஒரு சாபத்தை இடுகின்றீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நம்பிக்கையுடைய புத்தியைக் கொண்டவராகி, உயிருடன் இருக்கும்பொழுதே உங்கள் நங்கூரத்தை இப்பழைய உலகிலிருந்து அப்பால் நகர்த்துங்கள். தந்தையின் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி, உங்களுக்கு நன்மை செய்யுங்கள்.2. மற்றவர்களைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, உங்கள் புத்தியைத் தங்கத்தைப் போல் தூய்மை ஆக்குங்கள். அரட்டை அடிப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். யோக சக்தியால் உங்கள் பௌதீக அங்கங்களைக் குளிர்ச்சியானவையாகவும், சாந்தமானவையாகவும் ஆக்குங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களின் வெற்றிக்கும் சித்திக்கும் உத்தரவாதம் இருக்கும் வகையில் உங்களின் புத்தியை அத்தகைய நம்பிக்கையால் நிரப்பி, அதனால் சதா கவலையற்றவராக இருப்பீர்களாக.தந்தையின் மீதும் தமது சொந்தப் பாகங்களின் மீதும் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வினாடியும் 100 சதவீதம் நம்பிக்கையைத் தமது புத்திகளில் சதா கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு வெற்றிக்கும் சித்திக்கும் உத்தரவாதம் உள்ளது. வெற்றிக்கான உத்தரவாதத்தைக் கொண்டிருப்பதனால், அவர்கள் சதா கவலையற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் முகங்களில் எந்தவிதக் கவலையின் அறிகுறிகளும் தென்பட மாட்டாது. தமது பணி அல்லது எண்ணம் ஏற்கனவே நிறைவேறி விட்டது என்ற நம்பிக்கை அவர்களிடம் எப்போதும் இருக்கும். அவர்கள் எந்தவொரு சூழ்நிலைக்கும் எந்தவிதமான கேள்விகளையும் ஒருபோதும் கொண்டிருக்க மாட்டார்கள்.
சுலோகம்:
எதையாவது விவரிப்பதில் அல்லது கேட்பதில் நோக்கங்களையும் உணர்வுகளையும் மாற்றுவது என்றால், சூழலைப் பாழாக்குவதாகும்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
சம்பூரணமான தூய்மையைப் பொறுத்தவரை, வீணான எண்ணங்களும் தூய்மை இன்மைக்கான விதைகள் ஆகுகின்றன. குழந்தைகளான உங்களில் பெரும்பாலானோர் இன்னமும் வீணான எண்ணங்களின் சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கிறீர்கள். வீணான எண்ணங்களுக்கான அடிப்படை, உங்களை மன்மனாபவ ஆகுவதற்கு அனுமதிக்காத உங்களின் மனம் ஆகும். ஆகவே, ஸ்ரீமத்தின் கடிவாளங்களை இறுக்கி, அதனால் வீணான எண்ணங்களின் தூய்மை இன்மை அனைத்தையும் முடித்துவிடுங்கள்.