01.09.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த மேன்மையான சங்கமயுகத்தில் நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆக வேண்டும். இலக்ஷ்மியும், நாராயணனுமே அதி மேன்மையான மனிதர்கள் ஆவார்கள்.

கேள்வி:
தந்தையுடன் குழந்தைகளாகிய நீங்கள் மேற்கொள்ளும் மறைமுகமான பணி என்ன?

பதில்:
ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தினதும், தேவ இராச்சியத்தினதும் ஸ்தாபனையாகும். நீங்கள் ஒரு முறைமுகமான வழியில் தந்தையுடன் இப்பணியை மேற்கொள்கிறீர்கள். தந்தையே, முட்காட்டை மலர்த் தோட்டமாக மாற்றுகின்ற, தோட்டத்தின் அதிபதி ஆவார். அந்த மலர்த் தோட்டத்தில் துன்பத்தை விளைவிக்கின்ற பயங்கரமானவை எவையும் கிடையாது.

பாடல்:
இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்துவிட்டது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் நிச்சயமாக ஒரு சரீரத்தின் மூலம் விளங்கப்படுத்த வேண்டும். ஓர் ஆத்மாவால் ஒரு சரீரமின்றி எப்பணியையும் செய்ய முடியாது. ஒருமுறை மாத்திரமே, இந்த மேன்மையான சங்கமயுகத்தில் ஆன்மீகத் தந்தை ஒரு சரீரத்தைப் பெறுகிறார். இச்சங்கமயுகம், அதிமேன்மையான யுகம் எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இச்சங்கமயுகத்தின் பின்னர் சத்தியயுகம் வருகிறது. சத்தியயுகமும் ஓர் அதிமேன்மையான யுகம் என அழைக்கப்படுகிறது. தந்தை வந்து அந்த அதிமேன்மையான யுகத்தை ஸ்தாபிக்கிறார். அவர் சங்கமயுகத்தில் வருகிறார். ஆகவே, இந்த யுகமே அதிமேன்மையான யுகம் என அழைக்கப்படுகிறது. இங்கேயே அவர் குழந்தைகளாகிய உங்களை அதிமேன்மையானவர்கள் ஆக்குகிறார். பின்னர் நீங்கள் அதிமேன்மையான புதிய உலகத்திற்குச் சென்றிருப்பீர்கள். “அதிமேன்மையானது” என்றால் அதிமேலான மனிதர்கள் என்று அர்த்தம். அவர்கள் இராதையும் கிருஷ்ணரும் அல்லது இலக்ஷ்மியும் நாராயணனும் ஆவார்கள். உங்களிடம் மாத்திரம் இந்த ஞானம் உள்ளது. அவர்கள் நிச்சயமாகச் சுவர்க்க அதிபதிகள் என்பதை ஏனைய சமயத்து மக்களும் ஒப்புக்கொள்வார்கள். பாரதம் பெருமளவுக்குப் புகழப்படுகிறது. எவ்வாறாயினும், பாரத மக்கள் இதை அறிய மாட்டார்கள். இன்ன, இன்னார் சுவர்க்கவாசி ஆகினார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சுவர்க்கம் என்றால் என்ன என்பதை அவர்கள் அறிந்து கொள்வதில்லை. இன்ன, இன்னார் சுவர்க்கத்துக்குச் சென்றுவிட்டார் என அவர்கள் கூறுகிறார்கள். அதாவது அவர் முன்னர் நரகத்தில் இருந்தார் என்பதே அதன் அர்த்தமாகும். தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கும் பொழுதே, சுவர்க்கம் உருவாகும். புதிய உலகம் மாத்திரமே இவ்வாறு அழைக்கப்படுகிறது. சுவர்க்கம், நரகம் எனும் இரு விடயங்கள் உள்ளன. சுவர்க்கம் நூறாயிரக்கணக்கான வருடங்களாக உள்ளது என மக்கள் கூறுகிறார்கள். நேற்று அது சுவர்க்கமாக இருந்தது எனவும், அது அவர்களுடைய (இலக்ஷ்மி நாராயணன்) இராச்சியமாக இருந்தது எனவும், நீங்கள் மீண்டும் ஒருமுறை தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: இனிய, அன்பிற்கினிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை அற்றிருப்பதால், நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். கலியுகத்தில் இன்னமும் 40,000 வருடங்கள் எஞ்சியுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் நிச்சயமாகக் கலியுகவாசிகள் என அழைக்கப்படுவார்கள். இவ்வுலகம் பழையது. மனிதர்கள் காரிருளில் இருக்கிறார்கள். இறுதியில், நெருப்பு எரியும் பொழுது, இவை அனைத்தும் முடிவடையும். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, உங்களுக்கு அன்பான புத்திகள் உள்ளன. உங்களுடைய புத்தி எவ்வளவுக்கு அன்பானதோ, அந்தளவுக்கு நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். அதிகாலையில் எழுந்து, அதிகளவு அன்புடன் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் அன்புக் கண்ணீரையும் சிந்தலாம். இது ஏனெனில் நீண்ட காலத்தின் பின்னரே தந்தை வந்து உங்களைச் சந்தித்துள்ளார். பாபா, நீங்கள் வந்து எங்களைத் துன்பத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள். நாங்கள் நச்சுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததுடன், தொடர்ந்தும் மிகவும் சந்தோஷம் அற்றவர்கள் ஆகினோம். இப்பொழுது ஆழ்நரகமே உள்ளது. இப்பொழுது பாபா உங்களுக்கு முழுச் சக்கரத்தின் இரகசியங்களையும் கூறியுள்ளார். அவர் வந்து ஆத்ம உலகம் என்றால் என்ன என்பதையும் உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். முன்னர், நீங்கள் இதை அறிந்திருக்கவில்லை. இவ்வுலகம் முட்காடு என அழைக்கப்படுகிறது. சுவர்க்கம் பூந்தோட்டமாகிய, அல்லாவின் தோட்டம் என அழைக்கப்படுகிறது. தந்தை பூந்தோட்டத்தின் பிரபு எனவும் அழைக்கப்படுகிறார். மலர்களாகிய உங்களை மீண்டும் முட்களாக ஆக்கியவர் யார்? இராவணனே. பாரதம் ஒரு பூந்தோட்டமாக இருந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அது இப்பொழுது ஒரு முட்காடாகும். மிருகங்கள், தேள்கள் போன்றவை ஒரு காட்டில் வசிக்கின்றன. சத்தியயுகத்தில் பயங்கரமான மிருகங்கள் இருக்க மாட்டாது. ஸ்ரீகிருஷ்ணர் ஒரு பாம்பினால் தீண்டப்பட்டார் எனவும், இது நடந்தது, அது நடந்தது எனவும் அத்தகைய பல்வேறு விடயங்களை அவர்கள் இதிகாசங்களில் எழுதி உள்ளார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைத் துவாபர யுகத்தில் சித்தரித்துள்ளார்கள். பக்தி முற்றிலும், இந்த ஞானத்தில் இருந்து வேறுபட்டது எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஒரு தந்தை மாத்திரமே ஞானக்கடல் ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஞானக்கடல்கள் அல்லர். இல்லை. ஒரேயொரு ஞானக்கடலே, தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஞானத்தின் மூலம் மாத்திரமே மனிதர்கள் சற்கதியைப் பெறுகிறார்கள். சற்கதிக்கான இரு இடங்கள் உள்ளன: முக்தி தாமம் மற்றும் ஜீவன்முக்தி தாமம். இப்பொழுது ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், இது மறைமுகமானது. ஆதி, சனாதன, தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிப்பதற்குத் தந்தையே வருகிறார். ஏனைய அனைவரும் தங்கள் சொந்த மனித ஆடைகளில் வருகிறார்கள். தந்தைக்குத் தனக்கெனச் சொந்தமாக ஓர் ஆடை கிடையாது. இதனாலேயே, அவர் தந்தையான, அசரீரிக் கடவுள் என அழைக்கப்படுகிறார். ஏனைய அனைவரும் பௌதீகமானவர்கள் ஆவர். அவர் அசரீரியான ஆத்மாக்களின் தந்தையான, அசரீரிக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் அங்கு வசிக்கிறீர்கள், தந்தையும் அங்கு வசிக்கிறார். எவ்வாறாயினும், அவர் மறைமுகமானவர். தந்தையே வந்து ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கிறார். ஆத்ம உலகில் துன்பம் இருக்காது. தந்தை கூறுகிறார்: உங்கள் நன்மை ஒரு விடயத்திலேயே தங்கியுள்ளது: அது தந்தையின் நினைவு ஆகும். மன்மனாபவ! அவ்வளவுதான்! ஒருவர் தந்தையின் குழந்தையாகிய பின்னர், அந்தக் குழந்தை ஓர் ஆஸ்தியைப் பெறுவார் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. அல்பாவை நினைவு செய்வது என்றால் சத்தியயுகத்துப் புதிய உலகமாகிய ஓர் ஆஸ்தியைப் பெறுவதாகும். இத்தூய்மையற்ற உலகம் நிச்சயமாக அழிய வேண்டும். நாங்கள் நிச்சயமாக அமரத்துவ தாமத்துக்குச் செல்ல வேண்டும். அமரத்துவப் பிரபு பார்வதிகளான உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகிறார். பல்வேறு மக்களும் யாத்திரை செய்கிறார்கள். பலர் அமர்நாத்துக்குச் செல்கிறார்கள். அங்கு எதுவும் இல்லை. அவை அனைத்தும் ஏமாற்றுதல் ஆகும். அங்கு ஒரு தானியம் அளவுக்குக் கூட உண்மை கிடையாது. பாடப்பட்டுள்ளது: சரீரம் பொய், மாயை பொய், முழு உலகமும் பொய். அதற்கென ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். இங்கு பொய்மை மாத்திரமே உள்ளது. இதுவும் இந்த ஞானத்திற்கான ஒரு விடயமாகும். ஒரு கண்ணாடியைக் கண்ணாடி என அழைப்பது ஒரு பொய் ஆகாது. பக்திமார்க்கத்தில் அவர்கள் தந்தையைப் பற்றிப் பொய்களைக் கூறுகிறார்கள். ஒரேயொரு தந்தையே சத்தியத்தைப் பேசுகிறார். இப்பொழுது பாபா வந்துள்ளார் எனவும், சத்தியநாராயணன் ஆகுகின்ற உண்மைக் கதையை அவர் உங்களுக்குக் கூறுகிறார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். செயற்கை வைரங்களும், முத்துக்களும் கூட இருக்கின்றன. இந்நாட்களில் செயற்கையான பொருட்களின் பகட்டும் அதிகளவு உள்ளது. உண்மையானவற்றை விட அவை அதிகளவு பிரகாசமாக உள்ளன. இச்செயற்கைக் கற்கள் முன்னர் இங்கே இருக்கவில்லை. அவை அண்மையிலேயே வெளிநாட்டிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டன. செயற்கையானவையும், உண்மையானவையும் ஒன்றாகக் கலக்கப்படும் போது, உங்களால் அவற்றை வேறுபடுத்திக் காட்ட முடியாது. அவற்றை இனங்காணக் கூடியதாகக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செயற்கை முத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், உங்களால் அவற்றை வேறுபடுத்திக் காட்ட முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது எச்சந்தேகங்களும் இல்லை. சந்தேகங்களை உடையவர்கள் மீண்டும் திரும்ப வருவதில்லை. பலர் கண்காட்சிகளுக்கு வருகிறார்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது பெரிய கடைகளைத் திறவுங்கள். உங்களுடையதே ஒரேயொரு உண்மையான கடையாகும். நீங்கள் உண்மையான கடையைத் திறக்கிறீர்கள். முக்கிய பிரமுகர்கள் செல்கின்ற, மிகப் பெரிய கடைகள் மிகப் பெரிய சந்நியாசிகளிடம் உள்ளன. நீங்களும் பெரிய நிலையங்களைத் திறக்க முடியும். பக்தி மார்க்கத்தின் விரிவாக்கம், முழுமையாகவே இந்த ஞானத்தில் இருந்து வேறுபட்டது. பக்தி தொன்றுதொட்ட காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது எனக் கூறப்படுவதில்லை. இல்லை. இந்த ஞானத்தின் மூலம் விடுதலை அல்லது பகல் ஏற்படுகிறது. அங்கு, நீங்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்களாக, உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள் என்பதைக் கூட மனிதர்கள் அறியார்கள். அங்கு சூரியவம்சமும், சந்திர வம்சமும் மாத்திரம் இருந்தன. அங்கு ஏனைய சமயங்கள் இருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். நாங்கள் எமது எல்லையற்ற தந்தையைச் சந்திக்க வருகின்ற, சங்கமயுகத்தின் இந்த நாளும் இறுதியில் வந்துவிட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? எங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கோருவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். இறுதியில் அந்த நாளும் வந்துவிட்டது என நீங்கள் சத்தியயுகத்தில் கூறுவதில்லை. இங்கு, பெருமளவு தானியத்தைப் பெறவும், ஏனைய விடயங்களுக்காகவும் மக்கள் திட்டங்களைத் தீட்டுகிறார்கள். தாங்களே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர்கள் என அவர்கள் நம்புகிறார்கள். மாணவர்களுக்கு இளரத்தம் உள்ளதெனவும், அவர்கள் பெருமளவில் உதவுவார்கள் எனவும் அவர்கள் நம்புகிறார்கள். இதனாலேயே, அரசாங்கம் அவர்களை இட்டுக் கடுமையான உழைக்கிறது. எவ்வாறாயினும், மாணவர்களே, பின்னர் கற்கள் போன்றவற்றை வீசுபவர்கள் ஆகுகிறார்கள். மாணவர்களே குழப்பங்களை விளைவிப்பதில் முன்னோடிகளாக உள்ளார்கள். அவர்கள் மிகவும் திறமைசாலிகள், அவர்கள் இளம் இரத்தம் என்று அழைக்கப்படுகிறார்கள். இளம் இரத்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்களுடையது இரத்த சம்பந்தம், உங்களுடையதோ இப்பொழுது ஆன்மீக சம்பந்தம் ஆகும். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களுடைய இரு மாதக் குழந்தை ஆவேன். சில குழந்தைகள் தங்களுடைய ஆன்மீகப் பிறந்ததினத்தைக் கொண்டாடுகிறார்கள். இறை பிறந்ததினமே கொண்டாடப்பட வேண்டும். உங்கள் லௌகீகப் பிறந்ததினம் இரத்துச் செய்யப்பட வேண்டும். நாங்கள் பிராமணர்களுக்கு மாத்திரம் உணவூட்டுவோம். இதுவே கொண்டாடப்பட வேண்டும். அதுவோ ஒரு தூய்மையற்ற பிறவியாகும், இதுவோ உங்களுடைய இறை பிறவியாகும். இதில் பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு உள்ளது. எவ்வாறாயினும், நம்பிக்கை உள்ளபொழுதே, இது நடைபெறுகிறது. உங்களுடைய இறை பிறந்த தினத்தைக் கொண்டாடுவதாகவும், பின்னர் உங்கள் தூய்மையற்ற பிறவிக்கு மீண்டும் செல்வதாகவும் இருக்கக்கூடாது. அதுவும் நடைபெறுகிறது. அவர்கள் தொடர்ந்தும் தங்களுடைய இறை பிறந்த தினத்தைக் கொண்டாடிய போதிலும் பின்னர் காணமற் போய் விட்டார்கள். இந்நாட்களில், அவர்கள் தங்களுடைய திருமண ஆண்டு விழாக்களையும் கொண்டாடுகிறார்கள். திருமணங்கள் மங்களகரமான வைபவங்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களைச் சீரழிவிற்குள் இட்டுச் சென்ற தினங்களையும் கொண்டாடுகிறார்கள். இது ஓர் அற்புதம், இல்லையா? தந்தை இங்கே அமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் பிராமணர்களுடன் உங்களுடைய இறை பிறந்த தினத்தை மாத்திரம் கொண்டாட வேண்டும். நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம். நாங்கள் ஒரு பிறந்ததினத்தைக் கொண்டாடும் பொழுது, நாங்கள் சிவபாபாவை மாத்திரம் நினைவு செய்கிறோம். தங்கள் புத்தியில் நம்பிக்கை உடைய குழந்தைகளே, தங்கள் பிறந்ததினங்களைக் கொண்டாட வேண்டும். அதனால், அவர்கள் தங்களுடைய தூய்மையற்ற பிறவிகளை மறக்கிறார்கள். பாபா இந்த ஆலோசனையையும் கொடுக்கிறார். புத்தியில் உறுதியான நம்பிக்கை உள்ள பொழுது, மாத்திரமே இது கொடுக்கப்படுகிறது. நாங்கள் வேறு எவருக்குமன்றி, பாபாவுக்கே உரியவர்கள், அவ்வளவுதான்! பின்னர், இறுதியில், நாங்கள் எங்களுடைய இலக்கை அடைவோம். நீங்கள் தந்தையின் நினைவில் மரணித்தால், நீங்கள் எடுக்கின்ற மறுபிறவியும் அதற்கேற்ப இருக்கும். இல்லாவிட்டால், இறுதியில் தங்கள் மனைவியை நினைவு செய்பவர்கள்… இதுவும் கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இறுதியில் உங்கள் வாயில் கங்கைநீர் இருக்கட்டும்’ என்று கூறப்படுகின்றது. இவ்விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. தந்தை உங்களுக்குக் கூறுகிறார்: உங்கள் சரீரத்தை நீங்கும் பொழுதும், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். தந்தையையும், சக்கரத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இப்பொழுது தொடர்ச்சியாக முயற்சி செய்வதால் நிச்சயமாக இறுதியில் நீங்கள் அந்நினைவைக் கொண்டிருப்பீர்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். ஏனெனில் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சரீரமற்றவராக வீடு திரும்ப வேண்டும். இங்கு, உங்கள் பாகங்களை நடிக்கும் பொழுது, நீங்கள் சதோபிரதானில் இருந்து தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும். இந்நேரத்தில், ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை அற்றிருக்கிறீர்கள். ஆகவே, உங்களால் எப்படித் தூய சரீரங்களைப் பெற முடியும்? பாபா உங்களுக்குப் பல உதாரணங்களைக் கொடுத்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் ஒரு நகைவியாபாரி. நகையில் தூய்மையின்மை கலக்கப்படுவதில்லை. அது தங்கத்திலேயே கலக்கப்படுகிறது. நீங்கள் 24 கரட் தங்கத்தை 22 கரட் தங்கமாக்க விரும்பினால், அதில் வெள்ளியைக் கலக்கிறீர்கள். இப்பொழுது தங்கம் கிடையாது. அவர்கள் அதை அனைவரிடம் இருந்தும் தொடர்ந்தும் எடுக்கிறார்கள். அவர்கள் இந்நாட்களில் உருவாக்குகின்ற, வங்கிப் பணத்தாள்களைப் பாருங்கள். போதுமானளவு கடதாசிகள்கூட இல்லை. இது கல்பம் கல்பமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அனைவரும் முற்றாகவே விசாரணை செய்யப்படுகிறார்கள். மக்களின் வங்கிப் பெட்டகங்கள் போன்றவற்றைத் திறந்து காட்டும்படி அவர்களிடம் கேட்கப்படுகிறது. முழுப் பரிசோதனை ஒன்று செய்யப்படுகிறது. ‘சிலரின் செல்வம் புதைந்துவிடும், ஏனையோரின் செல்வம் அரசாங்கத்தால் கொள்ளை அடிக்கப்படும். பயங்கரமான தீயும் பரவும்’ எனக் கூறப்பட்டுள்ளது. அவை அனைத்தும் நடைபெற உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே நீங்கள் எதிர்காலத்துக்காக உங்கள் பைகளையும் பொதிகளையும் தயார் செய்கிறீர்கள். ஏனைய மக்கள் அதை அறிய மாட்டார்கள். நீங்கள் மாத்திரமே 21 பிறவிகளுக்கான ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். உங்கள் பணத்தின் மூலமே பாரதம் சுவர்க்கமாக ஆக்கப்படுகிறது. நீங்களே பின்னர் அங்கு வசிப்பீர்கள். உங்கள் சொந்த முயற்சிகளின் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் இராச்சியத் திலகத்தைக் கோருகிறீர்கள். ஏழைகளின் பிரபுவாகிய, பாபா, உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்கு வந்துவிட்டார். எவ்வாறாயினும், நீங்கள் கற்கின்ற அளவுக்கேற்பவே நீங்கள் இவ்வாறு ஆகுகிறீர்கள். அது கருணையின் அல்லது ஆசீர்வாதங்களின் மூலம் நடைபெறுவதில்லை. கற்பிப்பது ஓர் ஆசிரியரின் கடமையாகும். அது கருணைக்குரிய ஒரு விடயமல்ல. ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் இருந்து சம்பளத்தைப் பெறுகிறார்கள். ஆகவே, அவர்கள் நிச்சயமாகக் கற்பிப்பார்கள். நீங்கள் அத்தகையதொரு பெரிய வெகுமதியைப் பெறுகிறீர்கள். நீங்கள் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகிறீர்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்களில் ஒரு தாமரைச் சின்னத்தைக் காண்பிக்கிறார்கள். எதிர்காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆகுவதற்கே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் மிகவும் சந்தோஷம் உடையவர்களாகவும், செல்வந்தர்களாகவும், அமரர்களாகவும் ஆகுகிறீர்கள். நீங்கள் மரணத்தையே வெற்றி கொள்கிறீர்கள். மனிதர்களால் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. உங்கள் ஆயுட்காலம் முடிவடையும் பொழுது, நீங்கள் அமரர்கள் ஆகுகிறீர்கள். பாண்டவர்களைப் பெரியவர்களாகவும், உயரமானவர்களாகவும் காண்பிக்கின்ற உருவங்களை அவர்கள் உருவாக்கி உள்ளார்கள். பாண்டவர்கள் மிகவும் உயரமானவர்களாக இருந்தார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். நீங்களே அப்பாண்டவர்களே ஆவீர்கள். பகலுக்கும், இரவுக்குமான வேறுபாடு உள்ளது. மக்கள் அவ்வளவு உயரமானவர்கள் அல்லர். அவர்கள் ஆறடி உயரமானவர்கள் மாத்திரம் ஆவர். பக்தி மார்க்கத்தில் முதலில் சிவபாபாவுக்கான பக்தியே உள்ளது. அவர்களால் அவருடைய ஒரு பெரிய உருவத்தை உருவாக்க முடியாது. முதலில், சிவபாபாவின் கலப்படமற்ற வழிபாடே இருக்கிறது. பின்னர் அவர்கள் தேவர்களின் சிலையைச் செதுக்கி, அவர்களின் மிகப் பெரிய சிலைகளைச் செய்கிறார்கள். அவர்கள் பாண்டவர்களின் பெரிய உருவங்களைச் செய்கிறார்கள். வழிபடுவதற்காக, அவர்கள் அச்சிலைகளைச் செய்கிறார்கள். பன்னிரு மாதங்களுக்கு ஒருமுறை இலக்ஷமியின் வழிபாடு நடைபெறுகிறது. ஜெகதாம்பாவின் வழிபாடு (உலகத் தாய்) ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. பாபாவும் விளங்கப்படுத்தி உள்ளார்: நீங்கள் இரட்டை வழிபாட்டுக்கு உரியவர்கள். நான் ஓர் ஆத்மாவாக அல்லது லிங்கமாக (நீள்கோள வடிவம்) வழிபடப்படுகிறேன். நீங்கள் சாலிகிராம் ரூபத்திலும், தேவர்களாகவும் வழிபடப்படுகிறீர்கள். அவர்கள் உருத்திர யாகத்தை நடத்தும் பொழுது, பல சாலிகிராம்களை உருவாக்குகிறார்கள். ஆகவே, யார் மகத்தானவர்கள்? இதனாலேயே, பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு “நமஸ்தே” கூறுகிறார். அவர் உங்களை அத்தகையதொரு மேன்மையான அந்தஸ்தை அடையச் செய்கிறார்! பாபா, உங்களுக்கு அத்தகைய ஆழமான விடயங்களைக் கூறுகிறார். ஆகவே, குழந்தைகளாகிய உங்களுக்குள் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும்! எங்களை இறைவன், இறைவிகள் ஆக்குவதற்குக் கடவுள் எங்களுக்குக் கற்பிக்கிறார். நாங்கள் அவருக்கு அதிகளவு நன்றி சொல்ல வேண்டும்! தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதால், உங்களுக்கு நல்ல கனவுகள் வருவதுடன், நீங்கள் காட்சிகளையும் காண்பீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய இறை, ஆன்மீகப் பிறந்ததினத்தைக் கொண்டாடி, உங்கள் ஆன்மீகத் தொடர்பைப் பேணுங்கள், இரத்த சம்பந்தத்தை அல்ல. உங்கள் பௌதீகமான, தூய்மையற்ற பிறந்ததினத்தை இரத்துச் செய்யுங்கள். அது நினைவு செய்யப்படவும் கூடாது.

2. எதிர்காலத்துக்காக உங்கள் பிரயாணப் பொதிகளைத் தயார் செய்யுங்கள். பாரதத்துக்குச் சேவை செய்யவும், அதைச் சுவர்க்கமாக மாற்றவும் உங்கள் செல்வத்தை ஒரு தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். உங்கள் சொந்த முயற்சிகளின் மூலம் உங்களுக்கு நீங்களே இராச்சியத் திலகத்தை இடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அன்புடனும் ஒத்துழைப்புடனும் யக்யத்துடன் ஒத்துழைக்கின்ற ஓர் இலகு யோகி ஆகுவீர்களாக.

பாப்தாதா குழந்தைகளின் அன்பை விரும்புகிறார். யக்யத்துடன் அன்பாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் (சகயோக்) இருப்பவர்கள், இயல்பாகவே இலகு யோகிகள் (சகஜ் யோகி) ஆகுவார்கள். ஒத்துழைப்பதே இலகுவான யோகம் ஆகும். இதயங்களை வென்றவரான தந்தை, இதயத்தின் அன்பையும் இதயபூர்வமான ஒத்துழைப்பையும் விரும்புகிறார். சிறிய இதயங்களைக் கொண்டவர்கள், சிறியதொரு பேரத்தைச் செய்வதில் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் பெரிய இதயங்களைக் கொண்டவர்கள், எல்லையற்ற பேரத்தைச் செய்கிறார்கள். அன்பிற்கே பெறுமதி உள்ளது, அந்தப் பொருளுக்கு அல்ல. இதனாலேயே, குசேலரின் கைப்பிடி அளவிலான அரிசி நினைவுகூரப்படுகிறது. பொதுவாக, ஒருவர் எவ்வளவுதான் கொடுத்தாலும் அதில் அன்பு இல்லாவிட்டால், அது சேமிக்கப்பட மாட்டாது. அன்புடன் சிறிதளவேனும் சேமிக்கப்பட்டால், அது பலமில்லியன்கள் ஆகுகிறது.

சுலோகம்:
உங்களின் நேரமும் சக்தியும் வீணாக்கப்படாமல் இருப்பதற்கு, செயல்பட முன்னர் சிந்தியுங்கள்.

அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.

பாப்தாதா குழந்தைகளான உங்களுக்கு விசேடமான சமிக்கைகளை வழங்குகிறார்: குழந்தைகளே, இப்போது உங்களின் அன்பு எரிமலை ஆகட்டும். தீயதை அழிக்கும் ஒருவராகி (ஜ்வாலாமுகி) இந்த அன்பெனும் பெருந்தீயில் உங்களின் உறவுகள் மற்றும் தொடர்புகளைப் பற்றி உங்களின் மனதில் இன்னமும் எஞ்சியுள்ள கர்மக்கணக்குகள் எவற்றையும் எரித்துவிடுங்கள்.