01.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். இப்பயிற்சியின் மூலம் மாத்திரமே நீங்கள் தூய, புண்ணியாத்மாக்கள் ஆக முடியும்.

பாடல்:
குழந்தைகளாகிய உங்களுக்கு எந்தவொரு விடயத்தைப் பற்றிய ஞானம் இருப்பதால், எப்பொழுதும் முக மலர்ச்சியுடன் இருக்கின்றீர்கள்?

பதில்:
உருவாக்கப்பட்டுள்ள இந்நாடகம் அற்புதமானது என்ற ஞானத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஒவ்வொரு நடிகரின் அழிவற்ற பாகமும் அதனுள் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாகத்தை நடிக்கிறார். இதனாலேயே நீங்கள் சதா முகமலர்ச்சியுடன் இருக்கிறீர்கள்.

கேள்வி:
வேறு எவரிடமும் இல்லாத எந்த ஒரு கலை தந்தையிடம் உள்ளது?

பதில்:
தந்தை எப்பொழுதும் ஆத்ம உணர்வுடையவர் ஆதலால், அவரிடம் மாத்திரமே உங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்குகின்ற கலை இருக்கிறது. அவரே பரம் ஆவார். எந்த ஒரு மனிதரும் இக்கலையைக் கொண்டிருக்க முடியாது.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளுக்கு, அதாவது, ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் உங்களை ஆத்மாக்கள் எனக் கருத வேண்டும், இல்லையா? தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: எல்லாவற்றிக்கும் முதலில் நீங்கள் ஆத்மாக்கள், சரீரங்கள் அல்ல என்பதைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் உங்களை ஆத்மாக்கள் எனக் கருதும் பொழுது மாத்திரமே நீங்கள் பரமதந்தையை நினைவுசெய்வீர்கள். உங்களை நீங்கள் ஆத்மாக்கள் எனக் கருதாது விட்டால், நிச்சயமாக லௌகீக உறவினர்கள், வியாபாரம் போன்றவை மாத்திரமே நினைவுசெய்யப்படும். இதனாலேயே நீங்கள் முதலில், நான் ஓர் ஆத்மா என்ற பயிற்சியைக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது ஆன்மீகத் தந்தையின் நினைவு இருக்கும். தந்தை உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: உங்களைச் சரீரங்கள் எனக் கருதாதீர்கள். தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தை முழுச் சக்கரத்திலும் ஒருமுறை மாத்திரமே கொடுக்கின்றார். பின்னர் நீங்கள் இவ் விளக்கத்தை மீண்டும் 5000 வருடங்களுக்குப் பின்னரே பெறுவீர்கள். நீங்கள் உங்களை ஆத்மாக்கள் எனக் கருதினால், தந்தையையும் நினைவுசெய்வீர்கள். அரைச்சக்கரமாக நீங்கள் உங்களைச் சரீரங்கள் எனக் கருதியுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது உங்களை ஆத்மாக்கள் எனக் கருத வேண்டும். நீங்கள் ஆத்மாக்களாக இருப்பதைப் போன்று, நானும் ஓர் ஆத்மாவே. எனினும் நானே பரம் ஆவேன். நான் ஓர் ஆத்மா என்பதால், நான் சரீரதாரிகள் எவரையும் நினைவுசெய்வதில்லை. இந்த தாதா ஒரு சரீரதாரி, ஆனால் அத்தந்தையோ அசரீரியானவர். இப் பிரஜாபிதா பிரம்மா ஒரு சரீரதாரி ஆவார். சிவபாபாவின் உண்மையான பெயர் சிவன் என்பதாகும். அவரும் ஆத்மாவே எனினும், அவர் அதிமேலானவர், அதாவது, அவர் பரமாத்மா ஆவார். நான் இந்நேரத்தில் மாத்திரம் வந்து, இச்சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். அவர் ஒருபொழுதும் சரீர உணர்வுடையவராக முடியாது. சரீரதாரிகளான மனிதர்களே சரீர உணர்வுடையவர்கள் ஆகுபவர்கள். அவர் எப்பொழுதும் அசரீரியானவர். அவர் வந்து, இப்பயிற்சியைக் கொண்டிருக்கும் வகையில் உங்களைத் தூண்ட வேண்டும். அவர் கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். அமர்ந்திருந்து, பாடத்தைக் கற்றிடுங்கள். “நான் ஓர் ஆத்மா”, ‘நான் ஓர் ஆத்மா”, ஆத்மாவாகிய நான் சிவபாபாவின் குழந்தை. அனைத்திற்கும் பயிற்சி தேவைப்படுகிறது. தந்தை உங்களுக்கு எதனையும் புதிதாக விளங்கப்படுத்தவில்லை. நீங்கள் உங்களை ஆத்மாக்கள் என உறுதியாகக் கருதும்பொழுது, நீங்கள் தந்தையின் உறுதியான நினைவையும் கொண்டிருப்பீர்கள். சரீர உணர்வு இருந்தால், உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாதிருக்கும். அரைச் சக்கரமாக உங்களுக்குச் சரீர அகங்காரம் இருக்கின்றது. இப்பொழுது நான் உங்களை ஆத்மாக்களாகக் கருதுமாறு உங்களுக்குக் கற்பிக்கின்றேன். சத்திய யுகத்தில், உங்களை ஆத்மாக்களாகக் கருதும்வகையில், எவரும் உங்களுக்குக் கற்பிக்க மாட்டார்கள்;. சரீரங்களுக்கே எப்பொழுதும் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இல்லாவிட்டால் நீங்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு அழைப்பீர்கள்? இங்கே நீங்கள் தந்தையிடமிருந்து பெற்ற ஆஸ்தி அங்கே ஒரு வெகுமதியாகப் பெறப்படுகின்றது. இருப்பினும், நீங்கள் ஒருவரையொருவர் உங்கள் பெயர்களினாலேயே அழைப்பீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் என்ற பெயரும் ஒரு சரீரத்தின் பெயரே ஆகும். பெயர்கள் இல்லாமல் செயற்பாடுகள் தொடர முடியாது. ‘உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்’ என்று எவரும் அங்கு கூற மாட்டார்கள். அங்கு, அனைவரும் ஆத்ம உணர்வில் இருக்கின்றார்கள். பெருமளவு பாவம் சேர்ந்துள்ளதால், ‘இப்பயிற்சியைச் செய்யுங்கள்’ என நீங்கள் இந்நேரத்தில் தூண்டப்படுகிறீர்கள். இந்நேரத்தில் சிறிதுசிறிதாகப் பாவங்கள் படிப்படியாகச் சேர்க்கப்பட்டன. நீங்கள் இப்பொழுது முழுமையாகப் பாவாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். அரைக் கல்பமாக நீங்கள் செய்தவை அனைத்தும் முடிவடைய வேண்டும். படிப்படியாக அது தொடர்ந்தும் குறைவடையும். சத்திய யுகத்தில், நீங்கள் சதோபிரதானாக இருக்கின்றீர்கள். திரேதா யுகத்தில் நீங்கள் சதோ ஆகுகின்றீர்கள். இப்பொழுதே நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவுசெய்வதன் மூலம் மாத்திரமே நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இந்நேரத்தில் தந்தை உங்களுக்கு ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கான கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். இவ்வாறான கற்பித்தல்களை நீங்கள் சத்திய யுகத்தில் பெறுவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் சொந்தப் பெயர்களுடனேயே தொடர்ந்தும் முன்னேறுகிறார்கள். இங்கு நீங்கள் ஒவ்வொருவரும் யோக சக்தியினால் பாவாத்மாவிலிருந்து, தூய, புண்ணியாத்மா ஆகவேண்டும். சத்திய யுகத்தில் இந்த ஞானத்திற்கு அவசியமுமில்லை. அத்துடன், இக்கற்பித்தல்களை நீங்கள் அங்கு எடுத்துச் செல்லவும் மாட்டீர்கள். அங்கு நீங்கள் இந்த ஞானத்தையோ அல்லது யோகத்தையோ எடுத்துச் செல்வதும் இல்லை. இந்நேரத்தில் மாத்திரமே நீங்கள் பாவங்களிலிருந்து தூய்மையானவராக வேண்டும். சந்திரனின் கலைகள் ஒரு கீற்றாகும்வரை தேய்வதைப் போன்று, உங்கள் கலைகளும் படிப்படியாகக் குறைவடைகின்றன. எனவே இதனையிட்டுக் குழப்பமடைய வேண்டாம். உங்களுக்கு ஏதும் புரியாமல் இருந்தால், அதனை வினவ முடியும். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் ஆத்மாக்கள் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். முதலில் நீங்;கள் சதோபிரதானாக இருந்தீர்கள், பின்னர், நாளுக்கு நாள், உங்கள் கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்தன. நீங்கள் ஆத்மாக்கள் என்பதை உறுதியாக்கிக் கொள்ளாது விட்டால், நீங்கள் தந்தையை மறந்து விடுகிறீர்கள். இதுவே முதலாவதும், முதன்மையானதுமான விடயமாகும். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதால், நீங்கள் தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்வீர்கள். உங்கள் ஆஸ்தியை நினைவுசெய்யும்பொழுது, நீங்கள் தூய்மையாக இருப்பதுடன், தெய்வீகக் குணங்களையும் கொண்டிருப்பீர்கள். நீங்கள் உங்கள் இலக்கையும், இலட்சியத்தையும் உங்கள் முன்னிலையில் வைத்திருக்கிறீர்கள். இது கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்ற, இறை பல்கலைக்கழகம் ஆகும். அவரால் மாத்திரமே உங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்க முடியும். இந்தத் திறமை வேறு எவரிடத்திலும் இல்லை. ஒரேயொரு தந்தையே இதனை உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த தாதாவும் முயற்சி செய்கின்றார். ஒரு சரீரத்தின் மூலம் ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டிய வகையில் தந்தை ஒருபொழுதும் ஒரு சரீரத்தைப் பெறுவதில்லை. இந்நேரத்தில் அவர் உங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்குவதற்கே வருகின்றார். ‘பொறுப்பைத் தன் தலையிலே கொண்டிருப்பவரால் எவ்வாறு சௌகரியமாக உறங்க முடியும்’ என்றொரு கூற்று உள்ளது. அதிகளவு வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஓய்வு நேரம் இருப்பதில்லை. நேரம் இருப்பவர்களே முயற்சி செய்வதற்காக பாபாவின் முன்னிலையில் வருகின்றார்கள். புதியவர்கள் சிலரும் வருகின்றார்கள், இந்த ஞானம் மிகவும் நல்லது என்று அவர்கள் உணர்கின்றார்கள். “உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்” என்ற இவ்வார்த்தைகள் கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, தந்தை இதனை விளங்கப்படுத்துகின்றார். அவர் எவரையும் குறை கூறுவதில்லை. நீங்கள் தூய்மையானவரிலிருந்து, தூய்மையற்றவராக வேண்டும் என்பதும், உங்களைத் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குவதற்கு, தான் வரவேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். இதில் எவரையும் அவதூறு செய்வது என்ற கேள்விக்கு இடமில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தை மிகத்தெளிவாகப் புரிந்துகொள்கின்றீர்கள். வேறு எவருக்கும் கடவுளை அறவே தெரியாது. இதனாலேயே அவர்கள் அநாதைகள் என்றும், நாஸ்திகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களை மிகவும் விவேகிகள் ஆக்குகின்றார். அவர் ஓர் ஆசிரியராக, எவ்வாறு இந்த உலகச் சக்கரம் தொடர்கிறது என உங்களுக்குக் கற்பிக்கின்றார். இவ்வாறான கற்பித்தல்களை நீங்கள் பெறும்பொழுது, சீர்திருத்தப்படுகின்றீர்கள். சிவாலயமாக இருந்த பாரதம் இப்பொழுது ஒரு விலைமாதர் இல்லமாகி விட்டது. இதில் அவதூறு செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. இது தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற, ஒரு நாடகம் ஆகும். நீங்கள் எவ்வாறு தேவர்களிலிருந்து அசுரர்களாக மாறினீர்கள் என்பதை அவர் உங்களுக்குக் கூறுகின்றார், ஆனால் நீங்கள் ஏன் அவ்வாறு ஆகினீர்கள் என அவர் உங்களை வினவுவதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுப்பதற்கே வந்துள்ளார். அவர் உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்ற ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பதற்காகவும் வந்துள்ளார். இதனை மனிதர்கள் மாத்திரம் அறிவார்கள். இப்பொழுது நீங்கள் இதனை அறிந்து கொண்டதுடன், தேவர்களாகவும் ஆகுகின்றீர்கள். இது மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான ஒரு கல்வியாகும். தந்தை மாத்திரமே இங்கமர்ந்திருந்து, இதனைக் கற்பிக்கின்றார். இங்கு அனைவரும் மனிதர்களே. தேவர்கள் இவ்வுலகில் பாதம் பதிக்க மாட்டார்கள் என்பதால், அவர்களால் ஆசிரியர்களாகி, உங்களுக்குக் கற்பிக்க முடியாது. எவ்வாறு உங்களுக்குக் கற்பிக்கின்ற தந்தை இங்கு உங்களுக்குக் கற்பிப்பதற்கு வருகின்றார் எனப் பாருங்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை ஓர் இரதத்தைப் பெறுகின்றார் என்பது நினைவுகூரப்படுகின்றது. அதனை அவர்கள் முழுமையாக எழுதுவதில்லை. அவர் எந்த இரதத்தைப் பெறுகிறார் என்பதையும் அவர்கள் விளங்கப்படுத்துவதில்லை. எவரும் திரிமூர்த்தியின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வதில்லை. பரமதந்தை என்றால் பரமாத்மா என அர்த்தம் ஆகும். தான் யார் என்ற தனது சொந்த அறிமுகத்தை அவர் கொடுக்கின்றார். இதில் அகங்காரம் என்ற கேள்விக்கே இடமில்லை. இதனைப் புரிந்து கொள்ளாததால், மக்கள் கூறுகின்றார்கள்: அவருக்கு அகங்காரம் உள்ளது. இந்தப் பிரம்மா, தன்னைக் கடவுள் என்று கூறுவதில்லை. இவை தந்தையின் மேன்மையான வாசகங்கள் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். ஒரேயொருவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. இவரை தாதா என அழைக்கிறார்கள். இவரே “பாக்கிய இரதம்” ஆவார். பிராமணர்கள் தேவைப்படுவதால், அவருக்கு பிரம்மா எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரஜாபிதா பிரம்மாவே ஆதிதேவர். அவர் மக்களின் தந்தையாவார். அம் மக்கள் யார்? பிரஜாபிதா பிரம்மா ஒரு சரீரதாரி, எனவே அவரே அனைவரையும் தத்தெடுத்திருக்க வேண்டும், இல்லையா? சிவபாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நான் எவரையும் தத்தெடுப்பதில்லை. எனினும் ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் எப்பொழுதும் எனது குழந்தைகளே. நான் உங்களை எனது குழந்தைகள் ஆக்குவதில்லை. நான் ஆத்மாக்களாகிய உங்களின் அநாதியான தந்தை ஆவேன். தந்தை மிகத்தெளிவாக விளங்கப்படுத்தினாலும், அவர் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். நீங்கள் பழைய உலகம் முழுவதையும் துறக்கிறீர்கள். இவ்வுலகிலிருந்து அனைவரும் வீடு திரும்புவார்கள் என்பதை உங்கள் புத்தி அறிந்துள்ளது. நீங்கள் துறவறத்தை மேற்கொண்டு காட்டிற்குள் சென்று விட வேண்டும் என்றில்லை. நாங்கள் முழு உலகையும் துறந்து, எங்கள் வீட்டிற்குச் செல்வோம். இதனாலேயே ஒரேயொரு தந்தையைத் தவிர, வேறு எதனையும் நினைவுசெய்யக்கூடாது. ஒருவர் 60 வயதை அடையும்பொழுது, அவர் சத்தத்திற்கு அப்பால் செல்வதற்கு, அதாவது, ஓய்வு ஸ்திதிக்குச் செல்வதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். ஓய்வு ஸ்திதிக்குள் செல்ல வேண்டும் என்ற கேள்வி இந்நேரத்தையே குறிக்கிறது. பக்தி மார்க்கத்தில், ஓய்வு ஸ்திதியைப் பற்றி எவருக்குமே தெரியாது. “ஓய்வு ஸ்திதி” என்பதன் அர்த்தத்தை அவர்களால் விளங்கப்படுத்த முடியாது. “சத்தத்திற்கு அப்பால்” என்பது அசரீரி உலகைக் குறிக்கிறது. ஆத்மாக்கள் அனைவரும் அங்கேயே வசிக்கின்றார்கள், எனவே இது அனைவருடைய ஓய்வு ஸ்திதியுமாகும். அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். சமயநூல்களில், அவர்கள் ஆத்மா, நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கின்ற ஒரு நட்சத்திரம் எனக் காட்டியுள்ளார்கள். ஆத்மா பெருவிரல் வடிவமுடையவர் எனச் சிலர் எண்ணுகிறார்கள், அவர்கள் பெருவிரல் வடிவத்தை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை நினைவுசெய்யவோ அல்லது பூஜிக்கவோ முடியும்? எனவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகும்போது, நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகுகிறீர்கள். பக்தி மார்க்கம் ஆரம்பிக்கும்போது, அது பக்தியின் பிரிவு என அழைக்கப்படுகிறது. ஞானத்தின் பிரிவு வேறுபட்டது. பகலும் இரவும் ஒரேநேரத்தில் இருக்க முடியாததைப் போன்று, ஞானம், பக்தி இரண்டும் ஒரேநேரத்தில் இருக்க முடியாது. பகல் சந்தோஷத்தைக் குறிக்கின்றது, இரவு துன்பத்தை, அதாவது, பக்தியைக் குறிக்கின்றது. ‘பிரஜாபிதா பிரம்மாவின் பகலும், இரவும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, நிச்சயமாக மக்களும், பிரம்மாவும் ஒரேநேரத்திலேயே இருக்கிறார்கள், இல்லையா? நீங்கள் அரைச் சக்கரத்திற்குச் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள் என்பதைப் பிராமணர்களாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பின்னர் அரைச் சக்கரத்திற்குத் துன்பம் உள்ளது. இது உங்கள் புத்தியினால் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். தந்தையை அனைவராலும் நினைவுசெய்ய முடியாது என்பதை நீங்களும் அறிவீர்கள். இருப்பினும், தந்தையே உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை நினைவுசெய்தால், நீங்கள் தூய்மையாகுவீர்கள். அனைவருக்கும் இச் செய்தி கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் சேவை செய்ய வேண்டும். சேவை செய்யாதவர்கள் மலர்கள் அல்ல. பூந்தோட்டத்தின் அதிபதி பூந்தோட்டத்திற்குள் செல்லும்பொழுது, அவர் தன் முன்னிலையில் சேவை செய்பவர்களும், பலருக்கு நன்மை அளிப்பவர்களுமாகிய மலர்களையே பார்க்க விரும்புகின்றார். சரீர உணர்வுடையவர்கள் தாங்கள் மலர்கள் அல்ல என்பதைத் தாங்களாகவே புரிந்துகொள்ள முடியும். பாபாவின் முன்னிலையில் மிகச்சிறந்த மலர்களே அமர்ந்திருக்கிறார்கள். எனவே, தந்தையின் பார்வை அவர்கள் மீதே விழுகின்றது. அப்பொழுது மிகச்சிறந்த (ஞான) நடனம் ஆடப்படுகின்றது (நடனமாடும் பெண்ணின் உதாரணம் உள்ளது). ஒரு பாடசாலையில், யார் முதலாம், இரண்டாம், மூன்றாம் இலக்கங்களைப் பெறுவார்கள் என ஆசிரியர்கள் அறிவார்கள். தந்தையின் கவனமும் சேவை செய்பவர்கள் மீதே ஈர்க்கப்படுகின்றது. அவர்களே அவரது இதயத்தில் இடம்பிடிப்பவர்கள். அவச்சேவை செய்பவர்கள் அவர் இதயத்தில் இடம்பிடிக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்ற முதலாவதும், முதன்மையானதுமான விடயம்: நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள், அப்பொழுது மாத்திரமே, தந்தையின் நினைவு இருக்கும், சரீர உணர்விலிருந்தால் உங்களால் தந்தையின் நினைவைக் கொண்டிருக்க முடியாது. அப்பொழுது உங்கள் புத்தி லௌகீக உறவினர்கள் அல்லது உங்கள் வியாபாரம் போன்றவற்றின் மீதே ஈர்க்கப்படும். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகும்பொழுது, நீங்கள் பரலோகத் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள். நீங்கள் பெருமளவு அன்புடன் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். உங்களை ஓர் ஆத்மா என்று கருதுவதற்கு முயற்சி தேவையாகும். நீங்கள் ஏகாந்தத்தில் இருப்பது அவசியம், ஏனெனில் சூளையில் ஏழு நாட்கள் இருப்பது என்ற பாடம் மிகவும் கடினமானது. எவருமே நினைவு செய்யப்படக்கூடாது. உங்களால் எவருக்கும் ஒரு கடிதமேனும் எழுத முடியாது. இதுவே ஆரம்பத்தில் உங்கள் பத்தியாக இருந்தது. அனைவரையும் இங்கு தங்க வைக்க முடியாது. இதனாலேயே கூறப்பட்டுள்ளது: வீட்டில் வாழும் பொழுதும் இதனைப் பயிற்சி செய்யுங்கள். பக்தர்களும் வழிபாடு போன்றவற்றை மேற்கொள்வதற்கு, ஒரு இடத்தை வேறாக அமைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்த இடத்தில் அமர்ந்திருந்து, ஒரு மாலையை உருட்டுகிறார்கள். ஆகவே, இந்த நினைவு யாத்திரைக்கும் ஏகாந்தம் தேவைப்படுகின்றது. நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். இதில் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியே இல்லை. இந்த நினைவை நீங்கள் பயிற்சி செய்வதற்கு நேரம் தேவைப்படுகிறது. ஒரு லௌகீகத் தந்தை எல்லைக்குட்பட்ட படைப்பவரும், ஆனால் அந்த ஒரேயொருவரோ எல்லையற்ற படைப்பவரும் ஆவார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரஜாபிதா பிரம்மாவும் எல்லையற்றவர். அவர் குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கின்றார். சிவபாபா எவரையும் தத்தெடுப்பதில்லை. நீங்கள் எப்பொழுதும் அவரது குழந்தைகளே. நீங்களே சிவபாபாவின் அநாதியான குழந்தைகள் என ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள். பிரம்மா உங்களைத் தத்தெடுத்துள்ளார். ஒவ்வொரு விடயமும் மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தினமும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, எங்களால் உங்களை நினைவுசெய்ய முடியவில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் இதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். இதற்காக நேரம் எதனையும் ஒதுக்க முடியாத அத்தகைய சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தமது புத்தியில் அதிகளவு வேலையை கொண்டிருக்கும்போது, எவ்வாறு அவர்களால் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க முடியும்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்தால், நீங்கள் தூய்மையாகுவீர்கள் என்பதே பிரதான விடயமாகும்: நான் ஓர் ஆத்மா, நான் சிவபாபாவின் குழந்தை. இதுவே 'மன்மனாபவ'. இதற்கு முயற்சி தேவையாகும். ஆசீர்வாதங்கள் பெறுவது போன்ற கேள்வியே கிடையாது. இல்லை. இது ஒரு கல்வியாகும். இதில் ஆசீர்வாதங்களோ அல்லது கருணையோ இருக்க முடியாது. நான் எப்பொழுதாவது எனது கரத்தை உங்கள் மீது வைத்துள்ளேனா? நீங்கள் உங்கள் ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். “நீங்கள் அமரத்துவமானவர்கள் ஆகுவீர்களாக!”, “நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்களாக!” என்ற ஆசீர்வாதங்களில் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது. நீங்கள் முழு ஆயுளையும் கொண்டிருப்பீர்கள். அங்கே ஒருபொழுதும் அகால மரணம் ஏற்படுவதில்லை. சாதுக்கள் அல்லது புனிதர்கள் எவராலுமே உங்களுக்கு இந்த ஆஸ்தியைக் கொடுக்க முடியாது. அவர்கள் கூறுகின்றார்கள்: உங்களுக்கு ஒரு புத்திரன் கிடைப்பதாக! எனவே, அந்த ஆசீர்வாதத்தினால் தங்களுக்கு ஒரு புத்திரன் கிடைத்துள்ளான் என மக்கள் எண்ணுகின்றார்கள். குழந்தை இல்லாதவர்கள் சென்று, அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஆகுகின்றார்கள். ஞானம் ஒருமுறை மாத்திரமே பெறப்படுகின்றது. இது கலப்படமற்ற ஞானம், அதன் வெகுமதி அரைச் சக்கரத்திற்கு நீடிக்கின்றது. பின்னர் அறியாமை உள்ளது. பக்தி அறியாமை எனக் கூறப்படுகிறது. அனைத்தும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பொழுது இது உங்கள் ஓய்வு ஸ்திதியாகும். ஆகவே, உங்கள் புத்தியிலிருந்து அனைத்தையும் விலக்கி, ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து பயிற்சி செய்யுங்கள்: ‘நான் ஓர் ஆத்மா, நான் ஓர் ஆத்மா’.

2. சேவாதாரியாக இருக்கின்ற ஒரு மலர் ஆகுங்கள். சரீர உணர்வின் ஆதிக்கத்தினால் அவச்சேவை ஆகும்வகையில் அத்தகைய செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். பலருக்கு நன்மையை ஏற்படுத்தும் கருவி ஆகுங்கள். நிச்சயமாக நினைவிற்கு, நேரம் ஒதுக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இறைவனின் தூய்மைக்கான ஞானத்தில் உள்ள புதுமையைக் கிரகிப்பதன் மூலம் முற்றுமுழுதாகப் பற்றிலிருந்து விடுபடுவீர்களாக.

தூய்மையே இந்த இறை ஞானத்தின் புதுமையாகும். நீங்கள் ஆன்மீகப் போதையுடன் நெருப்பும், பஞ்சும் தீப்பிடிக்காமல் ஒன்றாக இருக்க முடியும் எனச் சொல்கிறீர்கள். நீங்கள் உலகிற்கே சவால் விடுத்து, தூய்மை ஆகாமல் உங்களால் ஒரு யோகி ஆத்மாவாகவோ அல்லது ஞானி ஆத்மாவாகவோ ஆக முடியாது எனச் சொல்கிறீர்கள். ஆகவே, தூய்மை என்றால் சம்பூரணமாகப் பற்றிலிருந்து விடுபட்டிருப்பதாகும். எந்தவொரு நபரின் மீதோ அல்லது பொருளின் மீதோ எப்பற்றும் இருக்கக்கூடாது. இத்தகைய தூய்மையால் மட்டுமே உங்களால் தூய்மையாக்கும் சேவையைச் செய்ய முடியும்.

சுலோகம்:
தூய்மை என்பது உங்களின் வாழ்க்கையின் பிரதானமான அத்திவாரம் ஆகும். நீங்கள் இறந்தாலும், உங்களின் தர்மத்தைக் கைவிடக்கூடாது.