01.10.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒவ்வோர் இரவும் உங்கள் அட்டவணையைப் பார்ப்பதுடன், ஒரு நாட்குறிப்பேட்டையும் வைத்திருந்தால், நீங்கள் இழப்பு ஏற்படாதிருப்பதில் அக்கறை கொண்டிருப்பீர்கள்.
கேள்வி:
தந்தையின் எவ்விடயங்கள் முன்னைய கல்பத்தின் பாக்கியசாலிக் குழந்தைகளை உடனடியாகவே தொடுகின்றன?பதில்:
பாபா ஒவ்வொரு நாளும் நினைவு செய்வதற்கான வழிகளைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார். பாக்கியசாலிக் குழந்தைகள் மாத்திரமே இதனால் தொடப்படுகின்றார்கள். அவர்கள் உடனடியாகவே அவற்றைப் பயிற்சியில் இடுவார்கள். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, தோட்டத்திற்குச் சென்று சற்று நேரம் ஏகாந்தத்தில் அமர்ந்திருங்கள். பாபாவோடு இனிமையாகப் பேசுவதுடன், உங்கள் அட்டவணையையும் வைத்திருந்தால் நீங்கள் தொடர்ந்தும் முன்னேறுவீர்கள்.ஓம் சாந்தி.
இராணுவத்தினர் முதலில் எச்சரிக்கப்படுகின்றார்கள்: கவனம் செலுத்துங்கள்! தந்தையும் குழந்தைகளாகிய உங்களை எச்சரித்து வினவுகின்றார்: நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையுடன், தந்தையை நினைவு செய்கின்றீர்களா? இந்த நேரத்தில் மாத்திரமே தந்தை இந்த ஞானத்தைக் உங்களுக்குக் கொடுக்கின்றார் எனக் குழந்தைகளாகிய உங்களிடம் கூறப்பட்டுள்ளது. தந்தை மாத்திரமே உங்களுக்குக் கற்பிக்கின்றார். கடவுள் பேசுகின்றார். பிரதான விடயம்: கடவுள் யார்? உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? இதுவே நீங்கள் முதலில் புரிந்துகொண்டு, நம்பிக்கை கொண்டிருக்க வேண்டிய விடயமாகும். பின்னர் நீங்கள் அதீந்திரிய சுகத்திலும் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டு விட்டீர்கள் என்பதால் ஆத்மாக்களாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருப்பதை அனுபவம் செய்ய வேண்டும். தந்தை ஒருமுறை மாத்திரமே உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்கு, வந்து உங்களைச் சந்திக்கின்றார். எந்த ஆஸ்தியை? அவர் 5000 வருடங்களுக்கு முன்னரும் செய்ததைப் போன்று மிகச்சரியாக முழு உலக இராச்சியம் என்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தை வந்து விட்டார் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருங்கள். அவர் எங்களுக்கு மீண்டும் ஒருமுறை இலகு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார்; அவர் இதனைக் கற்பிக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு எதுவும் கற்பிக்கப்படுவதில்லை. அவர்களின் உதடுகளில் இருந்து இயல்பாகவே ‘மம்மா, பாபா’ என்ற வார்த்தைகள் வெளிப்படுகின்றன. ஏனெனில் அவர்கள் அவ்வார்த்தைகளைச் செவிமடுக்கின்றார்கள். இவர் ஆன்மீகத் தந்தை ஆவார். இந்த ஆத்மாவிற்கு உள்ளார்ந்த, மறைமுகமான போதை உள்ளது. ஆத்மாக்களே கற்க வேண்டும். பரமாத்மாவான பரமதந்தையே ஞானம் நிறைந்தவர். அவர் எதனையும் கற்றதில்லை; அவருக்கு ஏற்கனவே இந்த ஞானம் உள்ளது. எதைப் பற்றிய இந்த ஞானம்? ஆத்மாக்களாகிய நீங்கள் இதனைப் புரிந்து கொள்கிறீர்கள். பாபாவிடம் முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இந்த ஞானம் உள்ளது. ஒரேயொரு தர்மத்தின் ஸ்தாபனையும், எண்ணற்ற சமயங்களின் அழிவும் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதை அவர் அறிவார். இதனாலேயே அவர் ஜனிஜனன்ஹார் (அனைத்தும் அறிந்தவர்) என அழைக்கப்படுகின்றார். ஜனிஜனன்ஹார் என்பதன் அர்த்தம் என்ன? எவரும் இதனைச் சற்றேனும் அறியாமல் இருக்கிறார்கள். நீங்கள் கட்டாயமாகப் பின்வரும் சுலோகத்தை எழுத வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: ஒரு மனிதர் என்ற ரீதியில் நீங்கள், படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அல்லது அதன் கால எல்லையையோ அல்லது அது மீண்டும் மீண்டும் இடம் பெறுவதையோ அறியாதிருந்தால் என்னவென்று கூறுவது? ‘மீண்டும் மீண்டும் இடம்பெறுதல்’ என்ற வார்த்தையும் மிகவும் முக்கியமானது. திருத்தங்கள் தொடர்ந்தும் இடம்பெற வேண்டும். ‘கீதையின் கடவுள் யார்?’ என்ற படம் முதற்தரமானது. இதுவே முழு உலகிலும் முதன்மையான தவறாகும். பரமாத்மாவான பரமதந்தையை அறியாததால், ஒவ்வொருவருமே கடவுளின் வடிவம் என அவர்கள் கூறுகின்றார்கள். ‘நீங்கள் யாருடைய குழந்தை?’ என ஒரு சிறு குழந்தையிடம் நீங்கள் வினவினால், அவர் ‘இன்னாருடைய குழந்தை’ எனப் பதிலளிப்பார். அதன்பின்னர், அவரிடம் ‘அந்த இன்னார் யாருடைய குழந்தை?’ என நீங்கள் வினவினால், ‘இன்னார் இன்னாருடையவர்’ என அவர் பதிலளிப்பார். பின்னர் இறுதியில் ‘அவர் எனது குழந்தை!’ என அவர் கூறுவார். அவ்வாறே, கடவுளை மக்கள் அறியாததால், ‘நானே கடவுள்’ என அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் அவரை அதிகளவு வழிபடும்பொழுதும், அவரை அறியார்கள். ‘பிரம்மாவின் இரவு’ நினைவுகூரப்பட்டுள்ளது. ஆகையால், அது நிச்சயமாகப் பிராமணர்களினது இரவாகவும் இருக்கும். இவ்விடயங்கள் அனைத்தும் கிரகிக்கப்பட வேண்டும். யோகத்தில் இருப்பவர்களாலேயே இவ்விடயங்களைக் கிரகிக்க முடியும். நினைவும் ஒரு சக்தி என்றே கூறப்படுகின்றது. இந்த ஞானம் உங்கள் வருமானத்திற்கான வழியாகும். நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் பாவங்களை அழிப்பதற்குரிய சக்தியை நீங்கள் பெறுகின்றீர்கள். உங்கள் புத்தியின் யோகத்தை நீங்கள் தந்தையுடன் இணைக்க வேண்டும். வேறு எந்த நேரத்திலும் அல்லாது, இந்த நேரத்தில் மாத்திரமே தந்தை இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தையை அன்றி வேறு எவராலும் இதனைக் கொடுக்க முடியாது. ஏனைய அனைத்தும், சமயநூலாகவோ அல்லது பக்திமார்க்கத்தின் கிரியைகளாகவோ உள்ளன. அதனை ஞானம் என அழைக்க முடியாது. ஒரேயொரு தந்தையிடம் மாத்திரமே ஆன்மீக ஞானம் உள்ளது. அவர் அதனைப் பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே கொடுக்கின்றார். வேறு எவரிடமும் இந்த ஆன்மீக ஞானம் இல்லை. உலகில் பல சமயங்கள், பிரிவுகள், உப பிரிவுகள் உள்ளன. பல்வேறு அபிப்பிராயங்களும் உள்ளன. இவை அனைத்தையும் விளங்கப்படுத்துவதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டும். பல புயல்கள் உருவாகுகின்றன. ‘எனது படகை அக்கரைக்கு எடுத்துச் செல்லுங்கள்!’ எனப் பாடப்பட்டுள்ளது. அனைவரது படகுகளும் அக்கரையை அடைய முடியும் என்றில்லை. சில படகுகள் மூழ்கிவிடும். சில தண்ணீரில் மிதக்கும். இரண்டு மூன்று வருடங்களின் பின்னரும், மூழ்கிய சில படகுகளுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி எவருக்கும் எதுவும் தெரிவதில்லை. சில படகுகள் முற்றாக நொறுங்கித் துண்டுகளாகி விடுகின்றன. சில படகுகள் ஒரே இடத்திலேயே நிற்கின்றன. இதற்குப் பெருமளவு முயற்சி தேவையாகும். செயற்கையான யோகத்தைச் செய்கின்ற பலரும் வெளிப்பட்டுள்ளார்கள். பல யோக ஆச்சிரமங்கள் உள்ளன. வேறெந்த ஆன்மீக யோக ஆச்சிரமமும் இருக்க முடியாது. தந்தை மாத்திரமே வந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஆன்மீக யோகம் கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: இது மிகவும் இலகுவான யோகம். இதனைப் போன்று இலகுவானது எதுவும் இல்லை. ஓர் ஆத்மா சரீரத்திற்குள் பிரவேசித்து, தனது பாகத்தை நடிக்கின்றார். அதிகபட்சம் 84 பிறவிகளே உள்ளன. ஏனையோருக்குக் பிறவிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குழந்தைகளாகிய உங்களில் சிலரின் புத்தியில் இவ்விடயங்கள் புகுகின்றன. பெரும் சிரமத்துடனேயே உங்கள் புத்தியால் இதனைக் கிரகிக்க முடிகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்ற முதலாவது விடயம்: நீங்கள் எங்கே சென்றாலும், முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்குப் பல வழிகளை உருவாக்குங்கள். அவர்களுக்கு இந்த நம்பிக்கை இருந்தால் மாத்திரமே, தந்தையே சத்தியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். தந்தை நிச்சயமாக உண்மையை மாத்திரமே உங்களுக்குக் கூறுவார். அதனை நீங்கள் சந்தேகிக்கக் கூடாது. நினைவு செய்வதற்கே முயற்சி தேவையாகும், இதிலேயே மாயையிடமிருந்து எதிர்ப்பு உண்டாகுகின்றது. அவள் மீண்டும் மீண்டும் நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதை மறக்கச் செய்கின்றாள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்கள் அட்டவணையை எழுதுங்கள்! அப்பொழுதே யார் நினைவில் இருக்கின்றார்கள் என்பதையும், எவ்வளவு நேரம் நினைவில் இருக்கின்றார்கள் என்பதையும் பாபா பார்ப்பார். உங்களில் கால் பங்கினர் கூட அட்டவணையை எழுதுவதில்லை. சிலர் தாம் முழு நாளும் நினைவில் இருந்ததாகக் கூறுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: அது மிகவும் சிரமமானது. பந்தனத்தில் இருப்பவர்களும், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுபவர்களுமே இரவுபகலாக நினைவில் இருக்கின்றார்கள். ‘சிவபாபா, நான் எப்பொழுது இந்த உறவினர்களிடம் இருந்து விடுதலை அடைவேன்?’ ஆத்மாக்கள் அழைக்கின்றார்கள்: பாபா, நான் எவ்வாறு இந்தப் பந்தனத்தில் இருந்து விடுதலை அடைவது? நீங்கள் அதிகளவு நினைவில் இருக்கின்றீர்களாயின், உங்கள் அட்டவணையை பாபாவிற்கு அனுப்ப வேண்டும். உங்கள் அட்டவணையை ஒவ்வோர் இரவும் எழுதுமாறும், ஒரு நாட்குறிப்பேட்டை வைத்திருக்குமாறும் உங்களுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாட்குறிப்பேட்டை வைத்திருப்பதனால், இழப்பு ஏற்படும் என்ற பயம் உங்களுக்கு இருக்கும். இதனைப் பார்த்தால் பாபா என்ன கூறுவார்? அதி அன்பிற்கினிய பாபாவை நீங்கள் மிகக்குறுகிய காலத்திற்கே நினைவு செய்கின்றீர்கள் என்றா கூறுவார்? உங்கள் லௌகீகத் தந்தை, உங்கள் மனைவி போன்றோரை நீங்கள் நினைவு செய்கிறீர்கள். இருப்பினும், இவ்வளவு குறுகிய நேரமேனும் உங்களால் என்னை நினைவு செய்ய முடியாதுள்ளது! உங்கள் அட்டவணையை எழுதினால் நீங்கள் வெட்கப்படுவீர்கள். இந்த நிலையில் உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைய முடியாது என்பதைக் காண்பீர்கள். ஆகையாலேயே உங்கள் அட்டவணையை நீங்கள் எழுத வேண்டும் என பாபா வலியுறுத்துகின்றார். தந்தையையும், 84 பிறவிச் சக்கரத்தையும் நினைவு செய்தால், நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்பவர் ஆகுவீர்கள். பிறரை உங்களைப் போன்றவர்களாக நீங்கள் ஆக்கினாலே உங்கள் பிரஜைகளை உங்களால் ஆட்சிசெய்ய முடியும். இந்த இராஜயோகம் சாதாரண மனிதரை நாராயணனாக மாற்றுவதற்கு உரியது. இதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். ஆத்மாக்களைப் பார்க்க முடியாது, ஆனால் அவர்களைப் புரிந்து கொள்ள முடியும். இவரில் ஓர் ஆத்மா உள்ளார் எனப் புரிந்து கொள்ளப்படுகின்றது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் நிச்சயமாக இருக்கும். அவர்களே அதிக முயற்சியைச் செய்தவர்கள். அவ்வாறே அவர்கள் புலமைப்பரிசிலைப் பெற்றார்கள். அவர்களுக்கு நிச்சயமாகப் பல பிரஜைகள் இருப்பார்கள். அவர்கள் அதிமேலானதோர் அந்தஸ்தையும் கோரினார்கள். அவர்கள் நிச்சயமாகப் பெருமளவு யோகம் செய்திருக்க வேண்டும், அவ்வாறே அவர்கள் திறமைச்சித்தி எய்தினார்கள். உங்களால் ஏன் யோகம் செய்ய முடியவில்லை என்பதற்கான காரணத்தை நீங்கள் அறிய வேண்டும். உங்கள் புத்தி உங்கள் வியாபாரத்திலுள்ள சிக்கல்கள் அனைத்தையும் நோக்கியே திசை திருப்பப்படுகின்றது. அதிலிருந்து நேரத்தை ஒதுக்கி இதில் நீங்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை ஒதுக்கி, சென்று தோட்டத்தில் ஏகாந்தத்தில் அமர்ந்திருங்கள். பெண்களால் அங்கே செல்ல முடியாது; அவர்கள் வீட்டைப் பராமரிக்க வேண்டும். ஆண்களுக்கு அது இலகுவாக இருக்கும். முன்னைய கல்பத்தைச் சேர்ந்த பாக்கியசாலிகள் இந்தத் தொடுகையை உணர்வார்கள். இந்தக் கல்வி மிகவும் சிறந்தது. ஒவ்வொருவரின் புத்தியும் அவரவருக்கே உரியது. எல்லாவிதச் சந்தர்ப்பத்திலும், நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். தந்தை உங்கள் அனைவருக்கும் வழிகாட்டல்கள் கொடுக்கின்றார், ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் அவற்றை பின்பற்ற வேண்டும். பாபா பொதுவான வழிகாட்டல்களை மாத்திரமே கொடுக்கின்றார். ஒருவர் வந்து தனிப்பட்ட ஆலோசனையைக் கேட்டால், அதனையும் பாபாவினால் கொடுக்க முடியும். மக்கள் பெரிய மலையின் மேலே யாத்திரை செல்லும் பொழுது, வழிகாட்டிகள் அவர்களை எச்சரிக்கின்றனர்; அவர்கள் பெரும் சிரமத்துடனேயே செல்கின்றார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் இலகுவான வழியைக் காட்டுகின்றார்: தந்தையை நினைவு செய்யுங்கள்! உங்கள் சரீர உணர்வு அனைத்தையும் முடித்து விடுங்கள்! தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! தந்தை வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்த பின்னர் மீண்டும் சென்று விடுகின்றார். ஓர் ஆத்மாவைப் போன்ற விரைவான ரொக்கட் வேறு எதுவும் இருக்க முடியாது. மக்கள் சந்திரனுக்குச் செல்வதற்கு முயற்சிப்பதில் அதிகளவு நேரத்தை வீணாக்குகின்றார்கள். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அந்த விஞ்ஞானக் கலை விநாசத்திற்கு உதவும். அவர்களிடம் விஞ்ஞானம் உள்ளது, உங்களிடம் மௌனம் உள்ளது. உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள்: இதுவே மயான அமைதி. இந்த ஆத்மாவாகிய நான், இந்தச் சரீரத்திலிருந்து வேறுபட்டவன். சரீரம் ஓர் பழைய சப்பாத்தாகும். பாம்பினதும், ஆமையினதும் உதாரணங்கள் உங்களையே குறிக்கின்றன. நீங்கள் இந்த ஞானத்தை ரீங்காரமிட்டு, பூச்சிக்களைப் போன்றுள்ள சாதாரண மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றீர்கள். அவர்களை நச்சுக்கடலில் இருந்து பாற்கடலுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது உங்கள் கடமையாகும். சந்நியாசிகள் யாகம் வளர்த்தல் அல்லது தபஸ்யா செய்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. பக்தியும், இந்த ஞானமும் இல்லறத்தினருக்கு உரியது. சந்தியாசிகள் சத்தியயுகத்திற்குச் செல்ல விரும்புவதில்லை. அவர்களுக்கு இவ்விடயங்களைப் பற்றி என்ன தெரியும்? அவர்கள் துறவறப் பாதையில் இருக்க வேண்டும் என்பது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முழு 84 பிறவிகளையும் எடுத்துள்ளவர்கள் நாடகத்திற்கு ஏற்ப தொடர்ந்தும் வருவார்கள்; அவர்கள் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாக வெளிப்படுவார்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். கண்கள் அதிகளவு குற்றம் புரியக்கூடியவை. நீங்கள் இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைப் பெறும்பொழுது, உங்கள் கண்கள் குற்றம் அற்றவை ஆகுகின்றன. பின்னர் அரைக்கல்பத்திற்கு, அவை என்றுமே குற்றம் புரிபவையாக ஆகமாட்டாது. அவை உங்களைப் பெருமளவு ஏமாற்றுகின்றன. நீங்கள் தந்தையை எந்தளவிற்கு அதிகமாக நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் பௌதீகப் புலன்கள் சாந்தம் அடையும். பின்னர். 21 பிறவிகளுக்குப் பௌதீகப் புலன்களின் விஷமம் எதுவும் இருக்க மாட்டாது. அங்கே பௌதீகப் புலன்களின் விஷமங்கள் எதுவும் இருக்க மாட்டாது. உங்கள் பௌதீகப் புலன்கள் அனைத்தும் அமைதியானதாகவும், சதோகுணியாகவும் ஆகுகின்றன. நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகிய பின்னரே, அசுர சுபாவம் வெளிப்படுகின்றது. தந்தை உங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்குகின்றார். நீங்கள் அரைக்கல்பத்திற்கான ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிக முயற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது உங்கள் பௌதீகப் புலன்கள் உங்களை ஏமாற்ற மாட்டாது. இறுதிவரை இந்த யுத்தம் தொடரும். நீங்கள் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடையும் பொழுது, அந்த யுத்தம் ஆரம்பமாகும். நாளுக்கு நாள், ஓசை எங்கும் பரவும், மக்களுக்கு மரண பயம் ஏற்படும். தந்தை கூறுகின்றார்: இந்த ஞானம் அனைவருக்குமானது. தந்தையின் அறிமுகத்தை மாத்திரம் கொடுங்கள்! ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையை நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: ‘தந்தையான கடவுள்’. இயற்கையின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களும் உள்ளனர். எவ்வாறாயினும், கடவுள் இருக்கின்றார். முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெறுவதற்கே மக்கள் அவரை நினைவு செய்கின்றார்கள். அநாதியான முக்தி என்பது இல்லை. உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் சுழல வேண்டும். சத்தியயுகம் இருந்தபொழுது, ஒரேயொரு பாரதமே இருந்தது எனப் புத்தியும் கூறுகின்றது. மக்களுக்கு எதுவுமே தெரியாது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. இது நூறாயிரக் கணக்கான வருடங்களுக்கான விடயமாக இருக்க முடியாது. இது நூறாயிரக் கணக்கான வருடங்களுக்கு உரியதாயின், சனத்தொகை மிக அதிகமாக இருந்திருக்கும். தந்தை கூறுகின்றார்: கலியுகம் இப்பொழுது முடிவடைய உள்ளது, சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. கலியுகம் இன்னும் குழந்தைப் பருவத்திலேயே உள்ளது என்றும், அதன் கால எல்லை பற்பல ஆயிரம் ஆண்டுகள் என்றும் அம்மக்கள் நம்புகின்றார்கள். சக்கரம் 5000 வருடங்களை மாத்திரமே கொண்டது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாரதத்தில் ஸ்தாபனை இடம்பெறுகின்றது. பாரதம் இப்பொழுது சுவர்க்கம் ஆகிக் கொண்டிருக்கின்றது. நாங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், இந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! இதுவே நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டிய முதல் விடயமாகும். அவர்களுக்குத் தந்தையின் மீது நம்பிக்கை ஏற்படும்வரை, தொடர்ந்தும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு அவர்களுக்கு விடை கிடைக்காத பொழுது, அவர்கள் கூறுகின்றார்கள்: கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்று நீங்கள் எங்களுக்குக் கூறுகின்றீர்கள், எனினும் உங்களுக்கு எதுவும் தெரியாது! ஆகையால் முதலில் இவ்விடயத்தை மாத்திரமே கூறுங்கள். முதலில் அவர்களுக்குத் தந்தையின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும், அதாவது உண்மையில் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஒருவரே, அவரே படைப்பவர் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். அவர் நிச்சயமாகச் சங்கமயுகத்தில் வருகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை; நான் சக்கரங்களின் சங்கமத்திலேயே வருகின்றேன். நானே புதிய உலகைப் படைக்கின்றேன். நான் எவ்வாறு சக்கரத்தின் இடையில் வர முடியும்? நான் பழையதற்கும், புதியதற்கும் இடையில் வருகின்றேன். இதுவே அதி மேன்மையான சங்கமயுகம் என அழைக்கப்படுகின்றது. இங்கேயே நீங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமே அனைவரிலும் அதிமேன்மையானவர்கள். இந்த இலக்கும், குறிக்கோளும் மிகவும் இலகுவானது! இதன் ஸ்தாபனை இப்பொழுது மேற்கொள்ளப்படுகின்றது என அனைவரிடமும் கூறுங்கள். ‘அதிமேன்மையானது’ என்ற வார்த்தைகளை நீங்கள் நிச்சயமாகப் பயன்படுத்த வேண்டுமென பாபா உங்களிடம் கூறியுள்ளார். ஏனெனில் நீங்கள் இங்குதான் அதிசீரழிந்தவர்களில் இருந்து அதிமேன்மையானவர்களாக மாறுகின்றீர்கள். நீங்கள் இப் பிரதான விடயங்களை மறந்து விடக்கூடாது. நீங்கள் நிச்சயமாகக் காலங்களுக்கான திகதிகளையும் எழுத வேண்டும். உங்கள் இராச்சியம் ஆரம்பத்தில் தொடங்குகின்றது. ஏனையோரின் இராச்சியம் ஆரம்பத்தில் இருப்பதில்லை. அந்தச் சமய ஸ்தாபகர்கள் வந்த பின்னரே அச்சமயங்கள் விரிவடைகின்றன. அவர்களில் மில்லியன் கணக்கானோர் இருக்கும் பொழுதே, அவர்களின் இராச்சியம் ஆரம்பம் ஆகுகின்றது. உங்கள் இராச்சியம் சத்தியயுகத்தின் ஆரம்பத்திலேயே தொடங்குகின்றது. சத்தியயுக இராச்சியம் எங்கிருந்து வந்தது என்பது எவரது புத்தியிலும் புகுவதில்லை. கலியுகத்தின் இறுதியில் பல சமயங்கள் உள்ளன. எனவே சத்தியயுகத்தில் எவ்வாறு ஒரேயொரு தர்மமும், ஒரேயொரு இராச்சியமும் இருந்திருக்க முடியும்? அங்கே வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட பல மாளிகைகள் இருந்தன. பாரதம் வைகுந்தம் என அழைக்கப்படும் வகையில் இருந்தது. இது 5000 வருடங்களின் முன்னரான விடயமே. நூறாயிரம் வருடங்களாயின், அது எவ்வாறு கணக்கிடப்பட்டிருக்க முடியும்? அதன் கணக்கு எவ்வாறு இருந்திருக்க முடியும்? மனிதர்கள் மிகவும் குழப்பம் அடைந்துள்ளார்கள். இப்பொழுது இதை அவர்களுக்கு யாரால் விளங்கப்படுத்த முடியும்? அவர்கள் தாம் அசுர இராச்சியத்தில் இருப்பதை நம்புவதில்லை. ‘தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களும், முற்றிலும் விகாரமற்றவர்களும்……’ என்பதே தேவர்களின் புகழாகும். அவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் என்பதால் அவர்களிடம் ஐந்து விகாரங்களும் இருப்பதில்லை. ஆகையால் தந்தை கூறுகின்றார்: நினைவே பிரதானமான விடயம். 84 பிறவிகளை எடுத்த பின்னர், நீங்கள் தூய்மை அற்றவர்களாகி உள்ளீர்கள், நீங்கள் இப்பொழுது தூய்மையானவர்களாக வேண்டும். இதுவே நாடகத்தின் சக்கரமாகும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைப் பயன்படுத்தி, உங்களை ஏமாற்றுகின்ற கண்களைக் குற்றமற்றதாக ஆக்குங்கள். நினைவு செய்வதனால் மாத்திரம் உங்கள் பௌதீக அங்கங்கள் அமைதி அடைந்து முற்றிலும் தூய்மையாகும். ஆகையால் இந்த முயற்சியை மாத்திரம் செய்யுங்கள்.2. உங்கள் வேலையின் பொழுதும் ஏகாந்தத்தில் இருந்து நினைவு செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள். உங்களால் யோகம் செய்ய முடியாமல் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள். உங்கள் அட்டவணையை நிச்சயமாக எழுதுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சகித்துக் கொள்ளும் சக்தியைக் கிரகித்து, எல்லோரின் மீதும் அன்புடையவராகி, அதன் மூலம் அழியாத, இனிமையான பலனைப் பெறுவீர்களாக.எதையாவது சகித்துக் கொள்ளுதல் என்றால், நீங்கள் இறக்க வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. ஆனால் எல்லோரின் இதயத்திலும் அன்புடன் வாழ்வதாகும். ஒருவர் எவ்வளவுதான் எதிர்த்தாலும், அவர் இராவணனை விடப் பயங்கரமாக இருந்தாலும் நீங்கள் ஒரு தடவை மட்டும் அன்றி, பத்துத் தடவைகள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டி இருந்தாலும் சகித்துக் கொள்ளும் சக்தியின் பலன், அழியாததும் இனிமையானதும் ஆகும். நீங்கள் அதிகளவில் சகித்துக் கொண்டீர்கள், மற்றவரும் சிறிதளவு சகித்துக் கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். உங்களுக்கு ஏதாவது தற்காலிகமான பலன் கிடைக்க வேண்டும் என நினைக்காதீர்கள். கருணை உணர்வு உடையவர் ஆகுங்கள். இதுவே சேவை செய்கின்ற உணர்வாகும். சேவை செய்ய விரும்புபவர்கள், எல்லோருடைய பலவீனங்களையும் ஏற்றுக் கொள்வார்கள். அவற்றை அவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.
சுலோகம்:
கடந்து சென்ற எல்லாவற்றையும் மறந்து, கடந்த காலத்து விடயங்களில் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் சதா எச்சரிக்கையாக இருங்கள்.அவ்யக்த சமிக்ஞை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.
எப்படி பாப்தாதாவிற்குக் கருணை உள்ளதோ, அவ்வாறே, குழந்தைகளான நீங்களும் மாஸ்ரர் கருணை நிறைந்தவர்கள் ஆகவேண்டும். உங்களின் மனப்பாங்கினால், தந்தையிடம் இருந்து நீங்கள் பெற்ற சக்திகளை சூழலின் மூலம் ஆத்மாக்களுக்கு வழங்குங்கள். குறுகிய காலத்தில் நீங்கள் முழு உலகத்திற்கும் சேவை செய்வதுடன் பஞ்சபூதங்கள் உட்பட எல்லோரையும் தூய்மை ஆக்குவதற்கு, உங்களின் மனதால் துரித கதியில் சேவை செய்யுங்கள். யோக சக்திகளுடன் பரிசோதனை செய்யுங்கள்.