01.10.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, மாயையைக் கண்டு பயப்படாதீர்கள். அவள் எவ்வளவுதான் உங்களை மறக்கச் செய்ய முயற்சித்தாலும், அதனால் களைப்படையாதீர்கள். அமிர்தவேளையில் எழுந்திருந்து, நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

கேள்வி:
எந்தக் குழந்தைகளால் தங்களுடைய முயற்சியினால், முன்னிலையில் ஓர் எண்ணைக் கோரமுடியும்?

பதில்:
தந்தைக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களால், அதாவது தங்களை அர்ப்பணித்தவர்களே முன்னேறிச் செல்கிறார்கள். குழந்தைகள் தங்களைத் தந்தைக்கு அர்ப்பணிக்கின்றார்கள், தந்தை தன்னைக் குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கின்றார். நீங்கள் இப்பொழுது பழைய, பெறுமதியற்ற உங்களுடைய மனம், சரீரம், செல்வம் அனைத்தையும் தந்தைக்கு கொடுக்கின்றீர்கள். அவர் அதற்குப் பதிலாக உலக இராச்சியத்தையே உங்களுக்குக் கொடுக்கின்றார். இதனாலேயே அவர் ஏழைகளின் பிரபு என்று அழைக்கப்படுகின்றார். தந்தை ஏழ்மையான பாரதத்திற்குத் தானம் செய்யவே வந்துள்ளார்.

பாடல்:
அன்பான கடவுளே, குருடர்களுக்கு வழி காட்டுங்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான ஆன்மீக, மிக, மிக இனிமையான குழந்தைகள். இவ்வாறு தான் கூறப்பட்டுள்ளது, இல்லையா? அவர் எல்லையற்ற தந்தை ஆதலால், அவர் எல்லையற்ற அன்பைக் கொண்டுள்ளார். அவர் கூறுகிறார்: இனிமையான, நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டு கொண்ட குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். ஒரு தந்தையே உங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றார். பக்தி மார்க்கத்தில் உள்ள எவருமே உங்களுக்கு இந்தப் பாதையைக் காட்ட முடியாது. அங்கே அவர்கள் தொடர்ந்தும் தடுமாறித் திரிகின்றனர். இப்பொழுது நீங்கள் பாதையைக் கண்டு கொண்ட போதிலும், மாயை உங்களின் புத்தியை நிரந்தரமாகத் தந்தையுடன் இணைந்திருக்க அனுமதிப்பதில்லை. ஒரு தந்தையை நினைவு செய்வதன் மூலம், உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்படுவதுடன், எதையிட்டும் கவலைப்படத் தேவையில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அதற்குப் பதிலாக, நீங்கள் அவரை மறந்து விடுகின்றீர்கள்! தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தூய்மையாக்குகின்ற தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். தந்தை ஞானக்கடல் ஆவார். அவரே கீதை ஞானத்தை அருள்பவர் ஆவார். அவர் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்றார், அதாவது, அவர் உங்களுக்கு சற்கதி அருள்கின்றார். ஸ்ரீகிருஷ்ணரை ஞானக்கடல் என்று அழைக்க முடியாது. ஒரேயொரு கடலே இருக்கின்றார். பூமியும் முற்றிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. அவை அனைத்தும் ஒரே கடல்தான், ஆனால் அது பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். எனவே நீங்கள் பூமி, கடல் அனைத்தினதும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அங்கே இது எனது நிலம், நீங்கள் எங்கள் எல்லையைக் கடந்து செல்லக்கூடாது என எவருமே கூறமாட்டார்கள். இங்கே, அவர்கள் கடலையும் பிரித்துள்ளார்கள். முழு உலகமும் பாரதமாக இருந்தது என்றும், நீங்கள் அதன் அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதையும் புரிந்து கொள்கின்றீர்கள். பாபா, நாங்கள் எங்களிடம் இருந்து அபகரிக்க முடியாத உலக இராச்சியத்தை உங்களிடம் இருந்து பெறுகின்றோம் என்று பாடல் ஒன்றும் உள்ளது. இங்கே அவர்கள் தண்ணீருக்காகவும் சண்டை போடுகின்றார்கள். ஒருவர் மற்றவரிடம் இருந்து நீரைப் பெறுவதற்கு நூறாயிரக்கணக்கான ரூபாய்களை கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது. நீங்கள் முன்னைய கல்பத்தில் பெற்றது போன்று, முழு உலக இராச்சியத்தையும் பெறுகின்றீர்கள். தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைக் கொடுத்துள்ளார். பரமதந்தை, பரமாத்மாவே ஞானத்தை அருள்பவர் ஆவார். அவர் இந்நேரத்தில் வந்தே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். சத்தியயுகத்தில் இலக்ஷ்மி, நாராயணனிடம் இந்த ஞானம் இருக்கமாட்டாது. ஆம், அவர்களுடைய முன்னைய பிறவியில் இந்த ஞானத்தை எடுத்து அவ்வாறு ஆகினார்கள் என நீங்கள் கூறலாம். நீங்களும் அவ்வாறானவர்களே. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா நீங்களும் அவ்வாறே. நீங்கள் எங்களை உலகின் அதிபதிகள் ஆக்கினீர்கள். தந்தை கூறுகின்றார்: எனது வழிகாட்டல்கள் சிக்கலானவை அல்ல, ஏனைய கல்விகள் அதிக சிக்கலானவை! இது மிகவும் இலகுவானது. நீங்கள் படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிந்து கொள்வதுடன், எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வருகின்றீர்கள் எனவும் ஏனையோருக்கும் கூறுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையுடன் வீடு திரும்பவேண்டும். மாயையின் பல புயல்களும் வரும் என்று தந்தையும் உங்களுக்குக் கூறியுள்ளார். அவை பற்றிப் பயப்பட வேண்டாம். நீங்கள் அதிகாலையில் எழுந்து நினைவில் நிலைத்திருக்கும் போது, உங்களின் புத்தியில் ஏனைய எண்ணங்கள் வந்து உங்களால் 2 நிமிடங்கள் கூட நினைவில் நிலைத்திருக்க முடியாதிருக்கும். தந்தை கூறுகின்றார்: களைப்பு அடையாதீர்கள். அச்சா, ஒரு விநாடி நினைவில் நிலைத்திருங்கள். பின்னர் அடுத்த நாளும், அதற்கு அடுத்தநாளும் நினைவில் நிலைத்திருங்கள். நினைவில் இருப்பதற்கு நிச்சயமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டிருங்கள். விகாரத்தில் ஈடுபடுபவர்களுக்குப் பல புயல்கள் வரும். தூய்மையே பிரதான விடயமாகும். இன்று, இந்த உலகம் தூய்மையற்ற விபச்சார விடுதியாகும். நாளை இது தூய சிவாலயம் (சிவாலயம் - சுவர்க்கம்) ஆகும். இது ஒரு பழைய சரீரம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் தந்தையை எப்பொழுதும் நினைவு செய்தால், அப்பொழுது நீங்கள் சரீரத்தை விட்டு நீங்கினாலும் சுவர்க்கத்திற்கு செல்லத் தகுதியானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து சிறிதளவு ஞானத்தைச் செவிமடுத்தீர்கள், இல்லையா? இங்கிருந்து ஓடிப்போனவர்களும், இப்பொழுது திரும்பிவந்து, அவர்களுடைய ஆஸ்தியை மீண்டும் கோருகின்றனர். உங்களுடைய இறுதி எண்ணம் உங்களை இலக்கிற்கு இட்டுச்செல்லும் என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக ஒருவர் அவரது சரீரத்தை விடுகின்றபோது, அவர் இந்த ஞானத்தின் சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்வதால், குழந்தைப் பருவத்திலேயே இந்தத் திசைக்கு வருமாறு ஈர்க்கப்படுவார். அவரால் பேசமுடியாதவாறு, அவரது அங்கங்கள் சிறியதாக இருந்த போதிலும் அவர் இந்த ஞானத்தினால் ஈர்க்கப்படுவார். குழந்தைப் பருவத்தில் இருந்தே, அவர் சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய நல்ல சம்ஸ்காரங்களையே கொண்டிருப்பார். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கே கற்பிக்கின்றார். தந்தை இராணுவத்தில் உள்ளவர்களின் உதாரணத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர்கள் அந்த சம்ஸ்காரங்களை கொண்டு சென்று, மீண்டும் இராணுவத்தில் ஓர் அங்கத்தவர் ஆகின்றனர். அதேபோன்று சமயநூல்களைக் கற்கின்றவர்கள் அந்த சம்ஸ்காரங்களை அவர்களுடன் கொண்டு செல்வதால், அவர்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே சமயநூல்களைக் கற்கின்றனர். பின்னர் அவர்கள் அதற்காகப் புகழப்படுகின்றனர். இங்கிருந்து சென்றவர்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே புகழப்படுகின்றனர். ஆத்மாவே இந்த ஞானத்தைக் கிரகிக்கின்றார், ஆயினும் மீதமிருக்கும் கர்மக்கணக்குகளும் தீர்க்கப்பட வேண்டும். குறைந்தது அவர்கள் சுவர்க்கத்துக்காவது செல்வார்கள். அவர்கள் தந்தையிடம் வந்து அவருக்கு வணக்கம் செலுத்துவார்கள். பல பிரiஐகளும் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் தந்தையிடம் இருந்து அவர்களது ஆஸ்தியைப் பெறுவார்கள். இறுதியில் கூறப்பட்டுள்ளது: ஓஹோ பிரபு (கடவுள்)! உங்களது தெய்வீக நடவடிக்கைகள் அற்புதமானவை! நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள்: ஓஹோ பாபா! உங்கள் தெய்வீகச் செயல்கள் நாடகத் திட்டத்திற்கு ஏற்பவே இருக்கின்றன. பாபா, உங்களுடைய நடவடிக்கைகள் மனிதர்கள் அனைவரது நடவடிக்கைகளில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டவை. தந்தைக்கு மிக நல்ல சேவை செய்பவர்கள், மிக நல்ல பரிசைப் பெறுகின்றார்கள். அவர்கள் வெற்றி மாலையில் கோர்க்கப்படுகின்றார்கள். பரமாத்மாவாகிய தந்தை, ஆத்மாக்களுக்குக் கொடுக்கின்ற ஆன்மீக ஞானம் இதுவாகும். மனிதர்கள் அனைவரும் சரீரங்களையே நினைவு செய்கின்றனர். அவர்கள் கூறுகின்றார்கள்: சிவானந்தா, கணேஸ்வரானந்தா போன்றவர்கள் அந்த ஞானத்தைக் கொடுக்கின்றார்கள். இங்கே, அசரீரியான சிவபாபாவே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். நானே அதிமேலானவர், ஆத்மாவாகிய எனது பெயர் சிவன் ஆகும். அவர்கள் கூறுகின்றனர்: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். பின்னர் அவர்கள் பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கு கூறுகின்றனர்: தேவர்களுக்கு வந்தனங்கள். அவர்களும் படைப்புக்களே ஆவார்கள். அவர்களிடம் இருந்து எந்த ஆஸ்தியையும் பெறமுடியாது. உங்களிடையே நீங்கள் சகோதரர்கள். உங்கள் சகோதரரை நினைவு செய்வதன் மூலம், உங்களால் ஓர் ஆஸ்தியைப் பெறமுடியாது. இந்த (பிரம்மா) தாதாவும் உங்களுடைய சகோதரரே ஆவார். அவரும்கூட கற்கின்ற ஒரு மாணவர் ஆவார். நீங்கள் அவரிடம் இருந்து ஓர் ஆஸ்தியையும் பெறுவதில்லை. அவரும் சிவபாபாவிடம் இருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றார். அவரே முதலில் செவிமடுக்கின்றார். நான் தந்தைக்கு கூறுகின்றேன்: பாபா, நானே உங்களுடைய முதல் குழந்தை ஆவேன். நான் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றேன். நான் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களின் இரதமாக ஆகுகின்றேன். சிவனுடைய இரதம் பிரம்மா ஆவார். பிரம்மாவின் மூலமே விஷ்ணுதாமம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பிராமணர்களாகிய நீங்கள் உதவியாளர்கள், பின்னர் நீங்கள் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். சரியாக 5000 வருடங்களுக்கு முன்னர் செய்தது போன்று, தந்தையிடம் இருந்து உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கோருகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். முன்னைய கல்பத்தில் தங்களுடைய இராச்சிய பாக்கியத்தை கோரியவர்களே இங்கே வருவார்கள். யார் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினியாக அல்லது பிரஜைகளாக வருவார்கள் என்பதை ஒவ்வொருவரது முயற்சியில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். இறுதியில் நீங்கள் அனைத்துக் காட்சிகளையும் காண்பீர்கள். அனைத்தும் உங்கள் முயற்சியிலேயே தங்கியுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை அர்ப்பணிக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு ஆவேன். ஏழைகளான நீங்கள் மாத்திரமே உங்களை எனக்கு அர்ப்பணிப்பவர்கள். எப்பொழுதும், ஏழைகளுக்கே தானம் வழங்கப்படுகின்றது. உதாரணமாக ஒருவர் கல்லூரியைக் கட்டுகின்றபோது அது ஏழைகளுக்கான தானமல்ல, அது கடவுளின் பெயரிலான தானம் அல்ல, ஆனால் அதுவும் தானமே ஆகும். ஒருவர் ஒரு கல்லூரியைத் திறக்கின்றபோது, அவர் அதன் பலனைப் பெறுகின்றார். அவரது அடுத்த பிறவியில் அவர் நல்ல கல்வியைப் பெறுவார், அதுவே அவர் பெறுகின்ற ஆசீர்வாதம் ஆகும். பாரதத்திலேயே அதிகளவு தானங்களும், புண்ணியமும் செய்யப்படுகின்றன. இந்நேரத்தில் பல நல்ல தானங்கள் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் தந்தைக்கு தானம் செய்கின்றீர்கள், தந்தை உங்களுக்கு தானம் செய்கின்றார். அவர் உங்களிடமுள்ள பயனற்ற விடயங்களை எடுத்துக்கொண்டு, அதற்குப் பதிலாக உலக இராச்சியத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சரீரம், மனம், செல்வத்தை தந்தைக்குத் தானம் செய்கின்றீர்கள். மக்கள் மரணிக்கும் முன்னர் உயில் எழுதுகின்றனர். இதை இன்ன, இன்ன ஆச்சிரமத்திற்கு கொடுங்கள், அல்லது இந்த ஆரிய சமாஜிகளே அனைத்தையும் பெறவேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். உண்மையில் பட்டினியால் வாடுகின்ற ஏழைகளுக்கே தானம் கொடுக்கப்பட வேண்டும். பாரதம் இப்பொழுது ஏழையாக உள்ளது. சத்தியயுகத்தில் பாரதம் அதி செல்வந்தமாக இருந்தது! நீங்கள் அங்கே இருந்தபோது, உங்களிடமிருந்த உணவு, தானியங்கள் போன்று வேறு எவரிடமும் இருக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கே அதனால் எந்தச் செலவுமில்லை. கைப்பிடியளவு அரிசியைத் தானம் செய்து, அதற்குப் பதிலாக நீங்கள் 21 பிறவிகளுக்கு மாளிகையைப் பெறுகின்றீர்கள். நீங்கள் சொத்தையும் பெறுவீர்கள். இப்பொழுது பஞ்சதத்துவங்களும் தமோபிரதான் ஆகையால், அவைகள் தொடர்ந்தும் துன்பம் விளைவிக்கின்றன. அங்கே பஞ்சதத்துவங்களும் சதோபிரதானாக இருக்கும். யார் சத்தியயுகத்துக்குச் செல்வார்கள், யார் துவாபரயுகத்தில் இருப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கலியுக முடிவில் சிறிய கொப்புகளும் கிளைகளும் வெளிவரும். நீங்கள் இப்பொழுது விருட்சம், நாடகம் போன்றவற்றின் இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் கொண்டுள்ளீர்கள். நீங்கள் தந்தையின் பாகத்தையும் அறிவீர்கள். மகாபாரத யுத்தத்தில் ஐந்து பாண்டவர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. ஓகே, பின்னர் என்ன நடந்தது? நிச்சயமாக இராஜயோகம் கற்றவர்கள் இராச்சியத்தை அரசாட்சி செய்திருப்பார்கள். முன்னர், நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. பாபாவும் கீதை போன்றவற்றைக் கற்கும் வழக்கம் உடையவர். அவர் நாராயணனை வழிபட்டார். அவர் கீதையை அதிகளவு விரும்பினார்! அவர் புகைவண்டியில் பிரயாணம் செய்யும்போதும் கீதையைப் படிக்கும் வழக்கம் உடையவர். அவர் எதையுமே புரிந்து கொள்ளவில்லை என இப்பொழுது உணர்கின்றார். அது ஒரு தகரத்திலுள்ள கூழாங்கற்கள் போன்றதாகும். பக்திமார்க்கத்தில் நீங்கள் அதிகளவு செய்தீர்கள், ஆனால் எந்த ஈடேற்றமும் இருக்கவில்லை. உலகிலே அதிகளவு சண்டை சச்சரவுகள் உள்ளன. இங்கேயும் அனைவரும் தூய்மையாக முடியும் என்றில்லை. இதனாலேயே சண்டையுள்ளது. தந்தை உங்களுக்கு புகலிடம் கொடுப்பதுடன், நோய் நிச்சயம் வெளியாகும் எனவும் கூறுகின்றார். உங்கள் குழந்தைகள் போன்றவர்களையும் நீங்கள் நினைவு செய்வீர்கள். நீங்கள் அந்தப் பற்றை வென்றவர்கள் ஆகவேண்டும். நீங்கள் இறந்து விட்டதாக நினைத்துப் பாருங்கள். நீங்கள் தந்தைக்குச் சொந்தம் ஆகின்றபோது, இந்த உலகிற்கு நீங்கள் இறந்து விட்டீர்கள் என்பதே அதன் அர்த்தம். அப்பொழுது சரீரத்தின் விழிப்புணர்வு எதுவும் இருக்க மாட்டாது. தந்தை கூறுகின்றார்: உங்கள் சரீரங்களையும், நீங்கள் கொண்டுள்ள சரீர உறவுமுறைகளையும் மறவுங்கள். இந்த உலகில் நீங்கள் பார்ப்பவை எதுவும் இல்லாதது போன்று இருக்கும். இந்தப் பழைய சரீரங்களையும் விட்டுவிட வேண்டும். நாங்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். நாங்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, பின்னர் நாங்கள் அழகிய புதிய சரீரங்களைப் பெறுவோம். அவர்கள் இப்பொழுது அவலட்சணமானவர்கள், பின்னர் அழகானவர்கள் ஆகுவார்கள். பாரதம் இப்பொழுது அவலட்சணமாக இருக்கின்றது, பின்னர் அது அழகானதாக மாறும். பாரதம் இப்பொழுது முட்காடாக உள்ளது, அனைவரும் தொடர்ந்து ஒருவரையொருவர் குத்துகின்றனர். அவர்கள் எது பற்றியாவது குழப்பம் அடைகின்றபோது, ஒருவரை ஒருவர் அவமரியாதை செய்து, சண்டையிட ஆரம்பிக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் வீட்டிலும் மிக இனிமையானவர்கள் ஆகவேண்டும். இல்லை எனில் மக்கள் கூறுவார்கள்: இவர் ஐந்து விகாரங்களையும் தானம் செய்துள்ளார், எனவே அவர் ஏன் கோபம் கொள்கின்றார்? அவர் கோபத்தைத் தானம் செய்யவில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஐந்து விகாரங்களையும் எனக்குத் தானம் செய்யுங்கள், தீயசகுனங்களின் கிரகணம் அகற்றப்படும். சந்திரனும் கிரகணத்தால் பீடிக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது சம்பூரணம் ஆகுகின்றீர்கள். எனவே, தந்தை கூறுகின்றார்: விகாரங்களைத் தானம் செய்யுங்கள். நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். ஆத்மாக்களான நீங்கள், தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஆத்மா கூறுகின்றார்: பழைய உலகில் மிகச்சொற்ப நேரமே மீதமுள்ளது. நீங்கள் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும். உங்கள் கவலைகள் அனைத்தையும் முடிக்க வேண்டும். பலவிதமான எண்ணங்களும் வரும் என்பதை பாபாவும் அறிவார். உங்களுடைய வியாபாரத்தைப் பற்றிய எண்ணங்களும் வரும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பக்தி செய்ய ஆரம்பிக்கும் போது வாடிக்கையாளர்களையும், வியாபாரம் போன்றவற்றையும் நினைவு செய்வதால் அவர்கள் தங்களையே கிள்ளுவார்கள். ‘நான் நாராயணனின் நினைவில் அமர்ந்திருக்கின்றேன், எனவே நான் ஏன் அந்த விடயங்களை நினைக்கின்றேன்?’ இங்கேயும் அதே விடயமே நடக்கின்றது. உங்களை இந்த ஆன்மீக சேவையில் மிக நன்றாக ஈடுபடுத்திக் கொள்கின்றபோது, நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றை விட்டுவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. உங்களை பாபாவின் சேவையில் ஈடுபடுத்துங்கள். கூறப்பட்டுள்ளது: நீங்கள் அதை விட்டுவிட்டால், விடுதலை ஆகுவீர்கள். தொடர்ந்தும் சரீர உணர்வைத் துறவுங்கள். இலகுவாகத் தந்தையை நினைவு செய்யுங்கள். குரங்குகள் போன்றவர்களில் இருந்து ஆலயத்தில் வீற்றிருக்கத் தகுதியானவர்கள் ஆகுவீர்கள். தந்தை ரீங்காரமிடும் வண்டினதும், ஆமையினதும் உதாரணங்களைக் கொடுக்கின்றார். மக்கள் பின்னர் இந்த உதாரணங்களை பக்திமார்க்கத்திற்கு எடுத்துச் செல்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது யார் அந்தப் பூச்சிகள் என்பதை அறிவீர்கள். ரீங்காரமிடும் வண்டுகளாகிய நீங்கள் இந்த ஞானத்தை ரீங்காரம் இடுகின்றீர்கள். அந்த உதாரணம் இந்த நேரத்தையே குறிக்கின்றது. அவர்கள் இதே உதாரணத்தை பாவிக்க முடியாது. விழாக்கள் போன்றவை அனைத்தும் இந்த நேரத்திற்கே சொந்தமானவை. சத்திய, திரேதா, யுகங்களில் இந்த விழாக்கள் இருக்க மாட்டாது. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குச் சொந்தமாகும். சமீபத்தில், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியின் போது, அவர்கள் களிமண்ணால் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகத்தைச் செய்து வழிபட்ட பின்னர், ஏரியில் மூழ்கடித்தார்கள். அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அது குருட்டு நம்பிக்கையாகும். நீங்கள் எவருக்கேனும் விளங்கப்படுத்தும் போது அவர்கள் அதைப்புரிந்து கொள்வதில்லை. ஒருவருக்கு நோய் ஏற்படும்போது, நீங்கள் ஸ்ரீகிருஷ்ணரைப் பூஜிப்பதை நிறுத்தியதாலேயே இது நடந்தது என அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு வியப்படையும் பலர் இருக்கின்றனர். அவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுத்து அதை ஏனையோருக்கும் கூறிப் பின்னர் ஓடி விடுகின்றனர். இதனாலேயே பிராமணர்களின் மணிமாலை உருவாக்கப்பட முடியாதுள்ளது. இந்த பிராமண குலத்தின் அலங்காரமே அதிமேன்மையானது. ஆயினும், அவர்களின் மணிமாலை உருவாக்கப்பட முடியாதுள்ளது. இது சிவபாபாவின் மணிமாலை என்றும், பின்னர் நீங்கள் சத்தியயுகத்துக்குச் சென்று வரிசைக்கிரமமாக விஷ்ணு மாலையின் மணியாக ஆகுவீர்கள் என்பதும் உங்கள் புத்திகளில் உள்ளது. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் எப்படிப்பட்டது என்றால், எவராலும் அதைப்புரிந்து கொள்ள முடியாதுள்ளது. தந்தை தொடர்ந்தும் உங்களுக்குக் கற்பிக்கின்றார். வளர்ச்சியும் தொடர்கின்றது. பலர் கண்காட்சிகள் போன்றவற்றுக்கு வருகின்றார்கள். நாங்கள் வந்து இதை அதிகளவில் புரிந்து கொள்வோம் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆயினும், அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் அனைத்தும் முடிவடைகின்றது. அங்கே கேட்டவை அனைத்தும் அங்கேயே தங்கிவிடும். நீங்கள் கடவுளைக் கண்டுகொள்ள மிக நல்ல பாதையைக் காட்டுகின்றீர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆயினும் இதைப் பின்பற்றி, தங்களின் ஆஸ்தியைக் கோரவேண்டும் என்பது அவர்களது புத்தியில் பிரவேசிப்பதில்லை. பிரம்மாகுமாரிகள் மிக நல்ல சேவை செய்கின்றார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே நீங்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும், இல்லையா? நீங்கள் தொடர்ந்தும் பௌதீகமான சேவை செய்கின்றீர்கள். இப்பொழுது இந்த ஆன்மீக சேவையைச் செய்யுங்கள்! மனிதர்கள் அனைவரும் தொடர்ந்தும் சமூகத்திற்குச் சேவை செய்கின்றார்கள். எவருமே கட்டணமின்றி சேவை செய்வதில்லை. இல்லையெனில், எவ்வாறு அவர்கள் தங்களுக்கு உணவு அளிக்கமுடியும்? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிக நல்ல சேவையைச் செய்கின்றீர்கள். பாரதத்தின் மீது நீங்கள் அதிகளவு கருணை கொள்கின்றீர்கள். முன்னர் எங்களுடைய பாரதம் எவ்வாறு இருந்தது? இப்பொழுது அதன் நிலையை இராவணன் எவ்வாறு ஆக்கியுள்ளான் எனப்பாருங்கள்! நாங்கள் இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, நிச்சயமாக எங்களின் ஆஸ்தியைக் கோருவோம். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்திற்குச் சொந்தமானவர்கள் எனவும், எஞ்சிய அனைவரும் கலியுகத்திற்குச் சொந்தமானவர்கள் என்பதையும் அறிவீர்கள். நாங்கள் அக்கரைக்குச் செல்கின்றோம். தந்தையின் நினைவில் மிக நன்றாக நிலைத்து இருப்பவர்கள், நினைவில் இருந்தவாறே தம்முடைய சரீரங்களை விட்டுச் செல்வார்கள். பின்னர் ஆத்மாக்கள் திரும்பி வர மாட்டார்கள். அந்த ஆத்மாக்கள் பாபாவின் நினைவில் இருந்தவாறே சரீரத்தை விட்டுச் செல்வார்கள். இங்கே ஹத்தயோகம் போன்றவற்றிற்கான கேள்வி இல்லை. அவர்கள் திரான்சில் செல்லும் போது எவ்வாறு மறைகின்றார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். அவ்வாறே, நீங்களும் எங்கேயாவது அமர்ந்திருவாறு, உங்கள் சரீரங்களை அவ்வாறே விட்டுச்செல்வீர்கள். நீங்கள் சூட்சும உலகத்திற்குச் சென்று, பின்னர் தந்தையிடம் செல்வீர்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்கு அதிகளவு முயற்சி செய்தவர்கள் இந்த முறையில் சரீரத்தை விட்டுச் செல்வார்கள். அவர்களுக்கு காட்சிகள் கிடைக்கும். ஆரம்பகாலத்தில் நீங்கள் பல காட்சிகளைக் கண்டீர்கள். அதேபோன்று இறுதியிலும் நீங்கள் மீண்டும் பல காட்சிகளைக் காண்பீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் ஆலயத்தில் வீற்றிருக்கத் தகுதியானவர் ஆகுவதற்கு, சரீர உணர்வைத் துறவுங்கள். உங்களை ஆன்மீக சேவையில் ஈடுபடுத்துங்கள்.

2. இப்பொழுது வீடு திரும்பும் நேரமாகும். எனவே எஞ்சியிருக்கும் கர்மக்கணக்குகளையும், உங்கள் வியாபாரம் பற்றிய எண்ணங்களையும் முடியுங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆன்மீக சகவாசத்தை வைத்திருப்பதன் மூலம் உங்களை ஆன்மீக நிறத்தால் நிறமூட்டி, சதா மலர்ச்சி நிறைந்தவர்களாகவும் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பீர்களாக.

தந்தையைத் தமது இதயத்தின் உண்மையான சகபாடி ஆக்கிக் கொள்ளும் குழந்தைகள் எப்போதும் ஆன்மீக சகவாசத்தால் நிறமூட்டப்பட்டு இருப்பார்கள். உங்களின் புத்தியை உண்மையான தந்தை, உண்மையான ஆசிரியர், உண்மையான சற்குருவின் சகவாசத்தில் வைத்திருப்பது என்றால், சத்தியத்தின் சகவாசத்தைக் (சத்சங்) கொண்டிருப்பதாகும். சத்தியத்தின் சகவாசத்தில் இருப்பவர்கள், சதா மலர்ச்சியானவர்களாகவும் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பார்கள். அவர்கள் எந்த வகையான சுமையையும் அனுபவம் செய்ய மாட்டார்கள். அவர்கள் தங்களை முழுமையானவர்களாக, தங்களுக்குள் சந்தோஷச் சுரங்கமே இருப்பதைப் போன்றும் தந்தைக்குச் சொந்தமான எதுவும் தங்களுக்கும் சொந்தம் என்றும் அனுபவம் செய்வார்கள்.

சுலோகம்:
மனச்சோர்வுடன் இருப்பவர்களை, உங்களின் இனிய வார்த்தைகளாலும் ஊக்கம் மற்றும் உற்சாகத்தின் ஒத்துழைப்பாலும் பலசாலிகள் ஆக்குங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.

மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதற்கு, ஒவ்வோர் ஆத்மாவிலும் நற்குணங்களை மட்டுமே பாருங்கள். எவருடைய பலவீனங்களையும் குறைபாடுகளையும் பார்க்கும்போது, உங்களின் நல்லாசிகளையும் அவருக்கு உதவி செய்யும் ஆசையையும் பயன்படுத்தி அந்த ஆத்மாவிற்கு சக்தியைத் தானம் செய்து அவரை நற்குணவான் ஆக்குங்கள். உங்களின் நேரம், சந்தோஷம், பெயர், புகழ், எந்தவொரு பேற்றிற்கான ஆசை என்பவற்றைத் துறவுங்கள். பெறுவதற்கான ஆசையைத் துறந்த மகாதானிகள் ஆகுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் மற்றவர்களை ஈடேற்றுவதற்கான நோக்கம் நிரம்பியவர் எனப்படுவீர்கள்.