01.11.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்நேரத்தில் அசரீரியான தந்தை ஒரு பௌதீகச் சரீரத்தினுள் பிரவேசித்து, உங்களை அலங்கரிக்கின்றார். அவர் அதனைத் தனியாகச் செய்வதில்லை.

பாடல்:
குழந்தைகளாகிய நீங்கள் ஏன் நினைவு யாத்திரையில் இருக்கின்றீர்கள்?

பதில்:
1. இந்த நினைவின் மூலமே நீங்கள் மிக நீண்ட ஆயுளைப் பெறுவதுடன், நோயிலிருந்தும் விடுபடுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். 2. நினைவில் இருப்பதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. நீங்கள் நிஜத் தங்கம் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய உங்களிலிருந்து ரஜோ, தமோ கலப்படங்கள் அகற்றப்படுவதால், தூய்மை ஆகின்றீர்கள். 3. நினைவின் மூலம் நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். 4. நீங்கள் அலங்கரிக்கப்படுகின்றீர்கள். 5. நீங்கள் மிகுந்த செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். இந்நினைவே உங்களைப் பல்கோடி மடங்கு பாக்கியசாலிகள் ஆக்குகின்றது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது என்ன செய்கின்றீர்கள்? நீங்கள் வெறுமனே மௌனமாக அமர்ந்திருக்கின்றீர்கள் என்றில்லை. நீங்கள் ஞானமுள்ள ஸ்திதியில் அர்த்தத்துடனேயே அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் ஏன் தந்தையை நினைவு செய்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை உங்களுக்கு மிக நீண்ட ஆயுட்காலங்களைத் கொடுக்கின்றார். தந்தையை நினைவுசெய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் நிஜத் தங்கமாகவும், சதோபிரதானாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் அதிகளவு அலங்கரிக்கப்படுகின்றீர்கள். உங்கள் ஆயுட்காலங்கள் நீண்டதாகுவதுடன், ஆத்மாக்களாகிய நீங்களும் தூய்மையாகின்றீர்கள். இப்பொழுது ஆத்மாக்களில் கலப்படம் கலக்கப்பட்டிருக்கின்றது. நீங்கள் நினைவு யாத்திரையில் இருப்பதால் ரஜோ, தமோ ஸ்திதிகளின் கலப்படங்கள் அனைத்தும் அகற்றப்படும். நீங்கள் அதிகளவு நன்மையைப் பெறுகின்றீர்கள். பின்னர் உங்கள் ஆயுட்காலங்கள் நீண்டதாகும். நீங்கள் சுவர்க்கத்தில் வசிப்பவர்களாகவும், அத்துடன் மிகுந்த செல்வந்தர்களாகவும் ஆகுவீர்கள்; நீங்கள் பல்கோடி மடங்கு பாக்கியசாலிகள் ஆகுவீர்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அவர் எச்சரீரதாரிகளையும் பற்றி இவ்வாறு கூறுவதில்லை. தந்தை தனக்கென ஒரு சரீரத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆத்மாக்களாகிய நீங்களும் கூட அசரீரிகளாகவே இருந்தீர்கள். பின்னர், மறுபிறவிகள் எடுத்ததால், தெய்வீகப் புத்தியுடையவரிலிருந்து கல்லுப் புத்தியுடையவராக ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் தூய்மையாக வேண்டும். இப்பொழுது நீங்கள் தூய்மையாகிக் கொண்டிருக்கின்றீர்கள். பிறவிபிறவியாக நீங்கள் தண்ணீரில் நீராடிக் கொண்டிருந்தீர்கள். அதன் மூலமாக நீங்கள் தூய்மையாகுவீர்கள் என நம்பினீர்கள். ஆனால், தூய்மையாகுவதற்குப் பதிலாக நீங்கள் மேலும் தூய்மையற்றவர்களாகி, ஓர் இழப்பையே ஏற்படுத்திக் கொண்டீர்கள். ஏனெனில், அது பொய்மையான மாயையாகும். அனைவரும் பொய்களைப் பேசும் சம்ஸ்காரத்தைக் கொண்டுள்ளனர். தந்தை கூறுகிறார்: உங்களைத் தூய்மையாக்கி விட்டு நான் சென்று விட்டேன். எனவே, உங்களைத் தூய்மையற்றவர்களாக ஆக்கியவர் யார்? இப்பொழுது நீங்கள் இதை உணர்கின்றீர்கள், இல்லையா? நீங்கள் கங்கைகளில் நீராடினீர்கள், எனினும் நீங்கள் தூய்மையாகவில்லை. தூய்மையாகியதும், நீங்கள் தூய உலகிற்குச் செல்ல வேண்டும்! அமைதி தாமமும், சந்தோஷ தாமமும் தூய தாமங்களாகும். இது இராவண உலகம், இது துன்ப பூமி எனப்படுகின்றது. இவ்விடயங்களை இலகுவில் புரிந்துகொள்ள முடியும். அவற்றில் எச்சிரமமும் கிடையாது, இவற்றை வேறு எவருக்காவது விளங்கப்படுத்துவதிலும் எச்சிரமமும் கிடையாது. நீங்கள் எவரையாவது சந்திக்கும்பொழுது, அவர்களுக்குக் கூறுங்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி எல்லையற்ற தந்தையை நினைவுசெய்யுங்கள். பரமதந்தை, பரமாத்மா சிவனே சகல ஆத்மாக்களினதும் தந்தையாவார். ஒவ்வொருவரினதும் சரீரத்திற்கென வெவ்வேறான லௌகீகத் தந்தைமார் உள்ளனர். சகல ஆத்மாக்களினதும் தந்தை ஒருவரேயாவார். பாபா மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அவர் ஹிந்தியில் மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். ஹிந்தி மொழியே பிரதான மொழியாகும். நீங்கள் அந்தத் தேவர்களைப் பல்கோடி மடங்கு பாக்கியசாலிகள் என அழைப்பீர்கள். அவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்! எவ்வாறு அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகினார்கள் என்பதை எவரும் அறியார். தந்தையே இப்பொழுது உங்களுக்கு இதனைக் கூறுகின்றார். இந்த அதி மங்களகரமான சங்கம யுகத்தில், இலகு யோகத்தின் மூலமாக நீங்கள் அவ்வாறு ஆகுகின்றீர்கள். இப்பொழுது இது பழைய உலகினதும், புதிய உலகினதும் சங்கமம் ஆகும். பின்னர் நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தை இப்பொழுது ஒரு சில வார்த்தைகளைக் கூறுகின்றார்: ஓர் அர்த்தத்துடன் என்னை நினைவுசெய்யுங்கள். கீதையில் கூறப்படுகின்றது: “மன்மனாபவ!” மக்கள் அவ்வாசகங்களை வாசிக்கின்றார்களே ஆயினும், அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். ஏனெனில், நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். வேறு எவராலும் இவ்வாறு கூறமுடியாது. தந்தை மாத்திரமே கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர், மறுபிறவிகள் எடுக்கையில், தமோபிரதான் ஆகினீர்கள். இப்பொழுது 84 பிறவிகளின் பின்னர், நீங்கள் மீண்டும் ஒரு தடவை புதிய உலகில் தேவர்கள் ஆகவேண்டும். இப்பொழுது நீங்கள் படைப்பவர், படைப்புக்கள் ஆகிய இரண்டையும் அறிவீர்கள். எனவே, நீங்கள் இப்பொழுது ஆஸ்திகர்களாகி விட்டீர்கள். முன்னர், பிறவிபிறவியாக நீங்கள் நாஸ்திகர்களாகவே இருந்து வந்தீர்கள். தந்தை உங்களுக்குக் கூறுகின்ற விடயங்களை வேறு எவருமே அறியார். நீங்கள் வேறு எங்குதான் சென்றாலும், இவ்விடயங்கள் எதனையும் எவருமே உங்களுக்குக் கூறமாட்டார்கள். இப்பொழுது இரு தந்தையரும் உங்களை அலங்கரிக்கின்றார்கள். முதலில், தந்தை தனியாகவே இருந்தார், அவருக்கென ஒரு சரீரம் இருக்கவில்லை. அவரால் மேலே இருக்கும்பொழுது. உங்களை அலங்கரிக்க முடியாது. 1 உடன் 2 ஐச் சேர்க்கும்பொழுது, நீங்கள் 12 ஐப் பெறுகின்றீர்கள் எனக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், தூண்டுதல் அல்லது சக்தி போன்ற கேள்விக்கே இடமில்லை. அவரால் தூண்டுதல் மூலமாக, மேலேயிருந்தவாறு உங்களைச் சந்திக்க முடியாது. அசரீரியானவர் ஒரு பௌதீகச் சரீரத்தை ஆதாரமாக எடுக்கும்பொழுதே, அவரால் உங்களை அலங்கரிக்க முடியும். பாபா உங்களைச் சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நாடக நியதிப்படி, பாபா இதனைச் செய்வதற்குக் கட்டுப்பட்டுள்ளார். காரணம் அவர் இக்கடமையை ஏற்றிருக்கின்றார். அவர் ஒவ்வொரு 5000 வருடங்களும், குழந்தைகளாகிய உங்களுக்காகவே வருகின்றார். நீங்கள் இந்த யோக சக்தி மூலமாக மிகவும் தூய்மை ஆகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள், உங்கள் சரீரங்கள் இரண்டும் மிகவும் தூய்மையாகின்றன. பின்னர் நீங்கள் அசுத்தமாகுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் காட்சிகளைப் பெறுகின்றீர்கள்: “இந்த முயற்சி மூலம் நாங்கள் அலங்கரிக்கப்பட்டு, அவர்களைப் போன்று ஆகுவோம்”. அங்கு குற்றப் பார்வை கிடையாது. அவர்கள் முழுமையாக உடலை மூடி ஆடை அணிந்திருப்பார்கள். இராவண இராச்சியத்தில் மக்கள் எத்தனை அழுக்கான விடயங்களைக் கற்றுக் கொள்கின்றார்கள் எனப் பாருங்கள்! எவ்வாறு இலக்ஷ்மி, நாராயணனின் ஆடைகள் உள்ளன என்பதைப் பாருங்கள், அவை மிகவும் சிறந்தவை! இங்கு, அனைவரும் சரீர உணர்வுடையவர்களாகவே உள்ளனர். அவர்கள் (இலக்ஷ்மி, நாராயணன்) சரீர உணர்வுடையவர்கள் என அழைக்கப்படுவதில்லை. அவர்களுடையது இயற்கையழகு ஆகும். தந்தை உங்களை இயல்பாகவே அழகு கொண்டவர்களாக ஆக்குகின்றார். தற்காலத்தில், எவராலுமே நிஜ ஆபரணங்களை அணிவதற்குக் கூட முடியாதுள்ளது. எவராவது அதை அணிந்திருப்பாராயின், அவரிடமிருந்து அது கொள்ளையடிக்கப்பட்டு விடும். இத்தகைய விடயங்கள் அங்கு இருக்க மாட்டாது. தந்தையின்றி, உங்களால் எதுவாகவும் ஆகமுடியாது, அத்தகைய தந்தையை நீங்கள் கண்டுகொண்டீர்கள். தாங்கள் சிவபாபாவிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்வதாகப் பலர் கூறுகின்றனர். எனினும், எவ்வாறு அவர் கொடுப்பார்? நீங்கள் அவரிடம் நேரடியாக எதனையாவது கேட்டுப் பெறுவதற்கு முயற்சிக்கலாம், எனினும், எதையாவது உங்களால் பெற முடிகின்றதா எனப் பாருங்கள். பலர் கூறுகின்றனர்: “நாங்கள் சிவபாபாவிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வோம். பிரம்மாவிடம் எதையாவது கேட்பதற்கான அவசியம் என்ன? சிவபாபா எங்களுக்குத் தூண்டுதல் மூலமாக எதையாவது கொடுப்பார்”. மிகச் சிறந்த, பழைய குழந்தைகளைக் கூட மாயை கடிக்கின்றாள். அவர்கள் ஒரேயொருவரை மாத்திரமே நம்புகின்றார்கள். எனினும், அந்த ஒருவரால் தானாக என்ன செய்ய முடியும்? தந்தை கூறுகின்றார்: நான் எவ்வாறு தனியாக வரமுடியும்? ஒரு வாய் இன்றி, என்னால் எவ்வாறு பேசமுடியும்? வாய் நினைவுகூரப்படுகின்றது. கௌமுக்கிலிருந்து (பசுவின் வாய்) அமிர்தத்தைப் பருகுவதற்காக மக்கள் பெருமளவில் அலைந்து திரிகின்றார்கள். அவர்கள் ஒரு காட்சியைப் பெறுவதற்காக ஸ்ரீநாத்திற்குச் செல்கின்றார்கள். எனினும், அக்காட்சியைப் பெறுவதால் அவர்களுக்கு என்ன நிகழும்? அது, தத்துவங்களை வழிபடுதல் எனப்படுகின்றது. அந்த விக்கிரகத்தினுள் ஆத்மா இருப்பதில்லை. அது பஞ்ச தத்துவங்களால் ஆக்கப்பட்ட ஒரு பொம்மை, எனவே, அதன் அர்த்தம் மாயையை நினைவுசெய்தல் என்பதாகும். இயற்கைத் தத்துவங்கள் ஐந்து உள்ளன. அவற்றை நினைவுசெய்வதால் என்ன நிகழும்? அனைவரும் சடப்பொருட்களின் ஆதாரத்தை எடுக்கின்றனர். எனினும், அங்கு சடப்பொருட்கள் சதோபிரதானாக இருக்கும். இங்கு, சடப்பொருட்கள் தமோபிரதானாக உள்ளன. தந்தை ஒருபொழுதுமே சதோபிரதான் சடப்பொருட்களிலிருந்து ஆதாரங்களை எடுக்க வேண்டியதில்லை. சதோபிரதானான சடப்பொருளை இங்கு கண்டுகொள்ள முடியாது. தந்தை கூறுகின்றார்: சாதுக்கள், புனிதர்கள் போன்ற அனைவரையும் நான் ஈடேற்ற வேண்டும். துறவற மார்க்கத்திற்கு நான் செல்வதில்லை. இது இல்லறப் பாதையாகும். தூய்மையாகுமாறு நான் அனைவருக்கும் கூறுகின்றேன். அங்கு (துறவற மார்க்கத்தில்) அவர்களின் பெயர்கள், ரூபங்கள் போன்றவை மாற்றமடைகின்றன. தந்தை விளஙகப்படுத்துகின்றார்: எவ்வாறு இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது எனப் பாருங்கள். எந்த இருவரதும் முகச்சாயல் ஒரே மாதிரி இருக்க முடியாது. அவர்களில் மில்லியன் கணக்கானோர் உள்ளனர். இருப்பினும், அவர்கள் அனைவரதும் முகச்சாயல்கள் வேறுபட்டனவாகவே உள்ளன. எவரும் என்னதான் முயற்சி செய்தாலும் இருவரின் முகச்சாயல்கள் ஒரேமாதிரி இருக்க முடியாது. இது இயற்கையின் அற்புதம் எனப்படுகின்றது. சுவர்க்கமும் கூட ஓர் அற்புதம் என்றே கூறப்படுகின்றது. அது மிக அழகானது! மாயையின் ஏழு அற்புதங்களும், தந்தையின் ஓர் அற்புதமும் உள்ளன. அந்த ஏழு அற்புதங்களையும் தராசின் ஒரு பக்கத்திலும், இந்த ஓர் அற்புதத்தைத் தராசின் மறுபக்கத்திலும் இட்டு நிறுத்துப் பாருங்கள், அப்பொழுதும் இதுவே பாரமானதாக இருக்கும். நீங்கள் ஞானத்தை ஒரு பக்கத்திலும், பக்தியை மறு பக்கத்திலும் வைப்பீர்களாயின், இந்த ஞானத்தின் பக்கமே பாரமானதாக இருக்கும். உங்களுக்குப் பக்தியைக் கற்பிப்பதற்குப் பலர் உள்ளனர், ஆனால் ஒரேயொரு தந்தையே உங்களக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை இங்கிருந்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உங்களை அலங்கரிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: தூய்மையாகுங்கள்! குழந்தைகள் கூறுகின்றனர்: இல்லை, நான் அழுக்காகுவேன்! அவர்கள் கருட புராணத்தில் நச்சாற்றைக் காண்பித்துள்ளனர். பல்லிகள், தேள்கள், பாம்புகள் போன்றவை தொடர்ந்தும் ஒன்றையொன்று கடிக்கின்றன. தந்தை கூறுகின்றார்: நீங்கள் முழுமையான அநாதைகள் ஆகுகின்றீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். வெளியிலுள்ள ஒருவருக்கு இதனைக் கூறுவீர்களாயின், அவர் குழப்பமடைந்து விடுவார். நீங்கள் மிகவும் சாமர்த்தியமாக விளங்கப்படுத்த வேண்டும். சில குழந்தைகளுக்கு எவ்வாறு பேசுவது என்ற பகுத்தறிவு கூட இல்லை. சிறு குழந்தைகள் முற்றிலும் கள்ளம் கபடமற்றவர்கள். இதனாலேயே அவர்கள் மகாத்மாக்கள் எனப்படுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணரை மகாத்மா என அழைப்பதற்கும், துறவறப் பாதையைக் கொண்ட சந்நியாசிகளை மகாத்மாக்கள் என அழைப்பதற்கும் இடையே வேறுபாடு உள்ளது. இது இல்லறப் பாதையாகும். அவர் ஒருபொழுதும் விகாரத்தின் மூலம் பிறப்பதில்லை. அவர் மேன்மையானவர் என அழைக்கப்படுகின்றார். நீங்கள் இப்பொழுது மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இப்பொழுது பாப், தாதா ஆகிய இருவரும் இங்கு ஒன்றாக உள்ளனர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் நிச்சயமாக உங்களை அலங்கரிப்போம். குழந்தைகளாகிய உங்களை அலங்கரிக்கின்ற ஒரேயொருவரிடம் செல்லவே அனைவரும் விரும்புவார்கள். எனவே, நீங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காகவே இங்கு வருகின்றீர்கள். தந்தையிடம் வருவதற்கு, இதயம் ஈர்க்கப்படுகின்றது. முழுமையான நம்பிக்கை கொண்டவர்கள் கூறுவார்கள்: “நீங்கள் என்னை அடித்தாலும், வேறு என்னதான் செய்தாலும் நான் என்றுமே உங்கள் சகவாசத்தை விடமாட்டேன்”. சிலர் எவ்விதக் காரணமும் இன்றியே அவரை விட்டு விலகி விடுகின்றனர். நாடகத்தின் பாகத்தில் இதுவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவரை விவாகரத்துச் செய்கின்றார்கள், அல்லது விலகிச் செல்கின்றார்கள். அவர் இராவண குலத்தைச் சார்ந்தவர் என்பதைத் தந்தை அறிவார். ஒவ்வொரு கல்பத்திலும் இதுவே நிகழ்கின்றது. சிலர் மீண்டும் திரும்பி வருகின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவரது கரத்தை விட்டு விலகுவதால் நீங்கள் குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். சிலர் நேரடியாக இங்கு வந்து சத்தியம் செய்கின்றனர்: “நான் ஒருபொழுதும் இத்தகைய தந்தையை விட்டு விலகமாட்டேன்”. எவ்வாறாயினும், இராவணனாகிய மாயை சற்றும் குறைந்தவள் அல்ல. அவள் விரைவாக அவர்களைத் தன் பக்கம் இழுக்கின்றாள். பின்னர், அவர்கள் நேரடியாக இங்கு வரும்பொழுது, இது அவர்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. தந்தை ஒருபொழுதும் அவர்களுக்காகத் தடியை எடுக்க மாட்டார். தந்தை மேலும் அன்புடனேயே விளங்கப்படுத்துவார்: முதலையாகிய மாயை உங்களை உண்டு விட்டாள், எனினும், நீங்கள் பாதுகாக்கப்பட்டு இங்கு வந்திருப்பது நல்லது. நீங்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டு சுய உணர்வை இழந்து விடுவீர்களாயின், உங்கள் அந்தஸ்து குறைக்கப்படும். எப்பொழுதும் உறுதியாக இருப்பவர்கள் என்றுமே விலகிச் செல்ல மாட்டார்கள். அவர்கள் ஒருபொழுதும் அவரது கரத்தை விட்டு நீங்க மாட்டார்கள். அவர்கள் தந்தையை விட்டு விலகி, மரணித்து, பின்னர் இராவணனாகிய மாயைக்கு உரியவர்கள் ஆகினால், மாயை அவர்களை மேலும் பலமாக உண்பாள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை அதிகளவு அலங்கரிக்கின்றேன். நன்னடத்தையைக் கொண்டிருந்து, எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள் என உங்களுக்குக் கூறப்படுகின்றது. சிலர் தங்கள் இரத்தத்தால் கூட எழுதி விட்டு, பின்னர் முன்பு இருந்தது போன்றே ஆகிவிடுகின்றனர். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். அவள் உங்களைக் காதுகளில் அல்லது மூக்கில் பிடித்து, மிகவும் விரக்தியடையச் செய்கின்றாள். இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது கண்ணாகிய ஞானக் கண் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் பார்வை ஒருபொழுதும் குற்றமுள்ளதாக ஆகக்கூடாது. நீங்கள் உலக அதிபதிகளாக விரும்பினால், சில முயற்சிகள் செய்தாக வேண்டும். இப்பொழுது உங்கள் ஆத்மாக்கள், உங்கள் சரீரங்கள் ஆகிய இரண்டும் தமோபிரதானாக உள்ளன. உங்களில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. இக்கலப்படத்தை எரிப்பதற்கு, தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். தந்தையை நினைவு செய்ய உங்களால் முடியாதா? உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் நினைவைக் கொண்டிருக்காது விட்டால், தீய ஆவியான மாயை உங்களை விழுங்கி விடுவாள். இராவண இராச்சியத்தில் நீங்கள் மிகவும் அழுக்கானவர்களாகி விட்டீர்கள். விகாரமின்றிப் பிறந்த எவருமே இல்லை. அங்கு விகாரத்தின் அடையாளம் கிடையாது. இராவணனே அங்கு இல்லை. இராவண இராச்சியம் துவாபர யுகத்திலேயே ஆரம்பிக்கின்றது. ஒரேயொரு தந்தையே உங்களைத் தூய்மையாக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இந்த ஒரு பிறவியில் மாத்திரமே நீங்கள் தூய்மையாகினால், பின்னர், விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. அது விகாரமற்ற உலகமாகும். தூய தேவர்களே அங்கு இருந்தனர், பின்னர் 84 பிறவிகளை எடுக்கையில், அவர்கள் கீழிறங்கி விட்டனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களாக உள்ளனர். இதனாலேயே அவர்கள் ௮ழைக்கின்றனர்: “ஓ சிவபாபா, இத்தூய்மையற்ற உலகிலிருந்து எங்களை விடுவியுங்கள்”. தூய்மையின்மை எனும் விடயத்தை உங்களுக்குப் புரிய வைப்பதற்காகவே தந்தை இப்பொழுது வந்துள்ளார். முன்னர் நீங்கள் இராவண இராச்சியத்தில் இருந்ததால், இதனைப் புரிந்துகொள்ளவில்லை. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்ல வேண்டுமாயின், அழுக்காகுவதை நிறுத்துங்கள். அரைக் கல்பமாக நீங்கள் அழுக்கானவர்களாகவே இருந்தீர்கள். உங்கள் தலை மீது பெரும் பாவச் சுமை உள்ளது. அத்துடன், நீங்கள் அவரைப் பெருமளவு அவதூறு செய்துள்ளீர்கள். தந்தையை அவதூறு செய்ததால், நீங்கள் பெருமளவு பாவத்தைச் சேகரித்து விட்டீர்கள். இதுவும் கூட நாடகத்தின் ஒரு பாகமேயாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் 84 பிறவிகளின் பாகத்தைப் பெற்றுள்ளீர்கள். அதனை நீங்கள் நடித்தாக வேண்டும். ஒவ்வொருவரும் தமது சொந்தப் பாகத்தை நடித்தாக வேண்டும். எனவே நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்? சத்திய யுகத்தில் எவருமே அழுவதில்லை. ஞானத்தின் சகுனங்கள் முடிவடையும்பொழுது அழுகையும், புலம்பலும் ஆரம்பிக்கின்றன. பற்றை வென்ற அரசனின் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். அவர்கள் அதனை ஒரு பொய்யான உதாரணமாக உருவாக்கியுள்ளனர். சத்திய யுகத்தில் எவரும் அகால மரணத்தை அனுபவம் செய்வதில்லை. ஒரேயொரு தந்தையே உங்களைப் பற்றை வென்றவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் உங்களை உலக அதிபதிகளாக்குகின்ற பரமதந்தை பரமாத்மாவின் வாரிசுகள் ஆகுகின்றீர்கள். உங்களையே கேளுங்கள்: இந்த ஆத்மாவாகிய நான் அவரின் வாரிசா? உலகியல் கல்வி மூலம் அடைவதற்கு என்ன இருக்கின்றது? தற்சமயம், நீங்கள் தூய்மையற்ற மனிதர்களின் முகங்களை பார்க்கவோ அல்லது அவர்களை உங்கள் குழந்தைகளுக்குக் காண்பிக்கவோ கூடாது. நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள் என்பதைப் பற்றியே உங்கள் புத்தி சதா எண்ண வேண்டும். ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்வதுடன், ஏனையோரைப் பார்த்தும், பார்க்காதிருங்கள். நாங்கள் புதிய உலகை மாத்திரமே பார்க்கின்றோம். நாங்கள் தேவர்கள் ஆகுகின்றோம். அப்புதிய உறவுமுறைகளை மாத்திரமே பாருங்கள். பழைய உறவுமுறைகளைப் பார்த்தும் பார்க்காதிருங்கள். அவையனைத்தும் அழியப் போகின்றன. நாங்கள் தனியாகவே வந்தோம், தனியாகவே திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை எங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வதற்காக ஒரு தடவை மாத்திரமே வருகின்றார். அது சிவபாபாவின் ஊர்வலம் எனப்படுகின்றது. அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள். தந்தை உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றார். அவர் உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக்குகின்றார். முன்னர், நீங்கள் நஞ்சை அருந்தினீர்கள், இப்பொழுது, நீங்கள் அமிர்தத்தைப் பருகுகின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் தொடர்ந்தும் உங்களைச் சங்கம யுகத்தில் வசிப்பவராகக் கருதியவாறே முன்னேறிச் செல்லுங்கள். பழைய உறவுமுறைகளைப் பார்த்தும் பார்க்காதிருங்கள். நான் தனியாகவே வந்தேன், தனியாகவே திரும்பிச் செல்ல வேண்டும் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்கட்டும்.

2. உங்கள் ஆத்மா, சரீரம் இரண்டையும் தூய்மையாக்குவதற்கு, அனைத்தையும் ஞானம் என்ற மூன்றாவது கண்ணால் பார்ப்பதற்குப் பயிற்சி செய்யுங்கள். குற்றப் பார்வையை முடித்து விடுங்கள். இந்த ஞானத்தாலும், யோகத்தாலும் உங்களை அலங்கரியுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் “மன்மனபவ” எனும் அலௌகீக வழிமுறை மூலம் களிப்படைந்திருப்பதால், தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்களாக.

தந்தைக்குச் சமமானவர் ஆகுவது எனில், சங்கம யுகத்தில் ஒரு ஞாபகார்த்தத்தைக் கொண்டாடுவது என்பதாகும். அது சங்கம யுகத்தில் விழாவைக் கொண்டாடுவதாகும். நீங்கள் விரும்பியளவு உங்களால் கொண்டாட முடியும். ஆனால், நீங்கள் வெறுமனே களிப்படையாமல், “மன்மனபவ”வாக ஆகுவதால், களிப்படைந்து தந்தையைச் சந்திப்பதைக் கொண்டாடுங்கள். ஓர் அலௌகீக வழியில் ஆன்மீகக் களிப்பைக் கொண்டாடுவதே நிலைத்து நிற்கின்றது. சங்கம யுகத்து வழிமுறையான “தீப மாலை” (ஒளிகளின் மாலை) பழைய கணக்குகளை முடித்து விடவுள்ளதால், ஒவ்வோர் எண்ணமும், ஒவ்வொரு கணமும் புதிதாக, அதாவது, அலௌகீகமாக இருக்கட்டும். பழைய எண்ணங்கள், பழைய சுபாவம், பழைய சம்ஸ்காரங்கள், பழைய நடத்தை போன்ற அனைத்தும் இராவணனிடம் நீங்கள் பட்ட கடன் ஆகும். ஆகவே, திடசங்கற்பம் மூலம் அவை அனைத்தையும் முடித்து விடுங்கள்.

சுலோகம்:
சூழ்நிலைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, உங்களையும், தந்தையையும் பாருங்கள்.