02.02.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 31.12.2003 Om Shanti Madhuban
இந்த வருடம், ஒரு பணிவான கருவியாகி, உங்களின் சேமிப்புக் கணக்கை அதிகரித்து, சதா மகாதானி ஆகுங்கள்.
இன்று, பல கரங்களைக் கொண்ட ஒரேயொருவரான பாப்தாதா, எங்கும் உள்ள தனது கரங்கள் அனைத்தையும் பார்க்கிறார். சில கரங்கள் தமது பௌதீக ரூபங்களில் அவரின் முன்னால் தனிப்பட்ட முறையில் இருக்கிறார்கள். சில கரங்கள் தமது சூட்சுமமான ரூபங்களில் தென்படுகிறார்கள். பாப்தாதா தனது கரங்கள் எல்லோரையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். கரங்கள் எல்லோரும் வரிசைக்கிரமம் ஆனவர்கள்: சகல கலா வல்லவர்கள், என்றும் தயாராக இருப்பவர்கள், கீழ்ப்படிவான கரங்கள். பாப்தாதா ஒரு சமிக்கை கொடுத்தவுடனேயே, வலது கரங்கள் சொல்கிறார்கள்: ‘ஆம், பாபா வந்தேன் பாபா. இப்பொழுதே பாபா’. இத்தகைய விசேடமான அதியன்பிற்குரிய குழந்தைகளைப் பார்க்கும்போது, அதிகளவு சந்தோஷம் ஏற்படுகிறது. பாப்தாதாவைத் தவிர வேறு எவரிடமும், தர்மாத்மாக்கள் (மதரீதியான ஆத்மாக்கள்) அல்லது மகாத்மாக்கள் எவரிடமும் இத்தகைய பல ஒத்துழைக்கும் கரங்கள் இல்லை என்ற ஆன்மீக போதை பாப்தாதாவிற்கு உள்ளது. கல்பம் முழுவதும் சென்று, இத்தகைய கரங்களை யாராவது பெற்றுள்ளார்களா எனப் பாருங்கள். எனவே, பாப்தாதா கரங்கள் அனைவரினதும் சிறப்பியல்பைப் பார்த்தார். நீங்கள் முழு உலகிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விசேடமான கரங்கள் ஆவீர்கள். நீங்கள் இறைவனுடன் ஒத்துழைக்கும் கரங்கள். இந்த மண்டபத்தில் இன்று எத்தனை கரங்கள் வந்துள்ளார்கள் எனப் பாருங்கள்! (இன்று, சாந்திவான் மண்டபத்தில் 18000 இற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் அமர்ந்திருந்தார்கள்). நீங்கள் எல்லோரும் உங்களை இறைவனின் கரங்களாக அனுபவம் செய்கிறீர்களா? உங்களுக்கு அந்த போதை உள்ளதல்லவா?
நீங்கள் எல்லோரும் புது வருடத்தைக் கொண்டாடுவதற்காக எங்கும் இருந்து வந்துள்ளீர்கள் என்பதையிட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், புது வருடம் உங்களுக்கு எதை நினைவூட்டுகிறது? புதிய யுகம் மற்றும் புதிய பிறவி. உங்களின் கடைசிப் பிறவி எந்தளவிற்கு மிகப் பழையதாக உள்ளதோ, அதேபோல், புதிய, முதல் பிறவியும் மிக அழகாக இருக்கும். இவர் சியாம் (அவலட்சணமானவர்), அவர் சுந்தர் (அழகானவர்). இன்று, வருடத்தின் கடைசி நாள் தெளிவாக இருப்பதைப் போல், புதிய வருடமும் உங்களின் முன்னால் தெளிவாக இருப்பதைப் போல், புதிய யுகமும் புதிய பிறவியும் உங்களின் முன்னால் தெளிவாகத் தெரிகிறதா? இன்று, நீங்கள் கடைசிப் பிறவியில் இருக்கிறீர்கள். நாளை, நீங்கள் முதல் பிறவியில் இருப்பீர்கள். இது தெளிவாக இருக்கிறதா? அது உங்களின் முன்னால் தோன்றுகிறதா? ஆரம்பத்தில் குழந்தைகளுக்குத் தந்தை பிரம்மாவிடமிருந்து இந்த அனுபவம் ஏற்பட்டது. தந்தை பிரம்மா எப்போதும் தனது புதிய பிறவியின் இராஜ சரீரத்தின் ஆடை தனக்கு முன்னால் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதுண்டு. அவரைச் சந்திக்க வருகின்ற குழந்தைகள் எல்லோரும் தந்தை பிரம்மாவின் அனுபவத்தைப் பெறுவதுண்டு: ‘இன்று, நான் ஒரு வயதான மனிதர். நாளை, நான் ஒரு சிறு குழந்தை ஆகிவிடுவேன்’. உங்களுக்கு இது நினைவிருக்கிறதா? பழையவர்களுக்கு இது நினைவிருக்கிறதா? இது இன்றும் நாளைக்குமான ஒரு விளையாட்டு. உங்களின் எதிர்காலம் தெளிவாக அனுபவம் செய்யப்பட வேண்டும். இன்று, நீங்கள் சுய இராச்சிய அதிகாரிகள். நாளை, நீங்கள் உலக அதிகாரிகள். உங்களுக்கு இந்த போதை இருக்கிறதா? பாருங்கள், இன்று, சில சிறுவர்கள் கிரீடங்களை அணிந்தவண்ணம் அமர்ந்திருக்கிறார்கள். (ரிட்ரீட்டுக்காக வந்துள்ள இரட்டை வெளிநாட்டுச் சிறுவர்கள் கிரீடத்தை அணிந்தவண்ணம் அமர்ந்திருக்கிறார்கள்). உங்களிடம் உள்ள போதை என்ன? கிரீடத்தை அணிந்திருக்கும்போது உங்களிடம் உள்ள போதை என்ன? தேவதைகளாக இருக்கும் போதையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். தாம் போதையுடன் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக அவர்கள் தமது கைகளை அசைக்கிறார்கள்.
எனவே, இந்த வருடம் நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்தப் புது வருடத்தில் நீங்கள் என்ன புதுமையை ஏற்படுத்துவீர்கள்? ஏதாவது திட்டங்களைச் செய்தீர்களா? என்ன புதுமையை நீங்கள் ஏற்படுத்துவீர்கள்? நீங்கள் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். 100000 பேர்களுக்கும் 200000 பேர்களுக்கும் கூட நீங்கள் நிகழ்ச்சிகளை நடத்தினீர்கள். ஆனால் என்ன புதுமையை ஏற்படுத்துவீர்கள்? ஒருபுறம், மக்கள் தமக்கு ஏதாவது பேறுகளை அடைய விரும்புகிறார்கள். ஆனால் அவர்களிடம் தைரியம் இருப்பதில்லை. அவர்களுக்குத் தைரியம் கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் கேட்க விரும்புகிறார்கள். ஆனால் அப்படி ஆகுவதற்கான தைரியம் அவர்களிடம் இல்லை. இத்தகைய ஆத்மாக்களை மாற்றுவதற்கு, அனைத்திற்கும் முதலில், அந்த ஆத்மாக்களில் தைரியத்தின் இறக்கைகளை உருவாக்க வேண்டும். தைரியத்தின் இறக்கைகளின் அடிப்படை, அனுபவமே. அவர்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுங்கள். அனுபவம் எப்படிப்பட்டதென்றால், அவர்கள் ஒரு துளியைப் பெற்று எதையாவது அனுபவம் செய்தாலும், அதை நீங்கள் அனுபவத்தின் இறக்கைகள் என்று அழைத்தாலென்ன அல்லது அனுபவத்தின் பாதங்கள் என்று அழைத்தாலென்ன, அவர்களால் அதன் மூலம் தைரியமாக முன்னேறிச் செல்ல முடியும். இதற்கு, குறிப்பாக இந்த வருடம், நீங்கள் சதா மகாதானிகள் ஆகவேண்டும். எப்போதும். உங்களின் மனங்களால் அவர்களை சக்தி சொரூபங்கள் ஆக்குங்கள். மகாதானிகளாகி, சதா உங்களின் மனங்களாலும் அதிர்வலைகளாலும் அவர்களுக்கு சக்திகளின் அனுபவத்தை வழங்குங்கள். உங்களின் வார்த்தைகளால் இந்த ஞான தானத்தைக் கொடுங்கள். உங்களின் செயல்களால் அவர்களுக்கு நற்குணங்களைத் தானம் செய்யுங்கள். நாள் முழுவதும், உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களால் மூன்று ரூபங்களிலும் சதா தானிகள் ஆகுங்கள். காலத்திற்கேற்ப, சிலவேளைகளில் மட்டும் தானம் செய்யும் தானிகள் ஆகாதீர்கள். இல்லை, சதா தானிகள் ஆகுங்கள். ஏனென்றால், ஆத்மாக்களுக்கு இது தேவையாக உள்ளது. எனவே, இத்தகைய மகாதானிகள் ஆகுவதற்கு, அனைத்திற்கும் முதலில், உங்களின் சேகரிப்புக் கணக்கைச் சோதித்துப் பாருங்கள். நான்கு பாடங்களிலும் நான் என்ன சதவீதத்தைச் சேகரித்துள்ளேன்? உங்களின் கணக்கில் நீங்கள் எதையும் சேகரிக்காவிட்டால், எப்படி நீங்கள் மகாதானிகள் ஆகுவீர்கள்? உங்களின் சேமிப்புக் கணக்கைச் சோதிப்பதன் அடையாளம் என்ன? நீங்கள் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களால் சேவை செய்தீர்கள். ஆனால், அதைச் சேகரிப்பதன் அடையாளம், சேவை செய்யும்போது, அனைத்திற்கும் முதலில், தனக்குள்ளே திருப்தி இருக்க வேண்டியது அவசியம். அத்துடன்கூடவே, நீங்கள் சேவை செய்த ஆத்மாக்கள் சந்தோஷ திருப்தியைக் கொண்டிருக்கிறார்களா? இரு பக்கங்களிலும் திருப்தி இல்லாவிட்டால், உங்களின் சேவையின் பலன், உங்களின் சேவைக் கணக்கில் சேமிக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சிலவேளைகளில், பாப்தாதா குழந்தைகளின் சேமிப்புக் கணக்குகளைப் பார்க்கிறார். சிலவற்றில், அதிகளவு கடின உழைப்பும் குறைந்தளவு சேமிப்புப் பலனும் காணப்படுகின்றன. இதற்கான காரணம் என்ன? இரு பக்கங்களிலும் திருப்தி குறைவாக உள்ளது. தனக்குள் அல்லது மற்றவர்களுக்குள் திருப்தி இல்லாவிட்டால், சேமிப்புக் கணக்கு குறைந்து விடுகிறது. குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களின் சேமிப்புக் கணக்கை இலகுவாக அதிகரிப்பதற்கு பாப்தாதா ஒரு தங்கச் சாவியைக் கொடுத்துள்ளார். அந்தச் சாவி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள்தானே? உங்களின் சேமிப்புக்கணக்கை இலகுவாக நிரம்பி வழியச் செய்வதற்கான தங்கச்சாவி என்னவென்றால், உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களால் நீங்கள் சேவை செய்யும் போதெல்லாம் ஒரு கருவியாக இருக்கும் விழிப்புணர்வை நீங்கள் முதலில் கொண்டிருக்க வேண்டும். ஒரு கருவியாக இருக்கும் உணர்வைக் கொண்டிருத்தல், பணிவாக இருக்கும் உணர்வைக் கொண்டிருத்தல், தூய நோக்கங்களையும் ஆத்ம உணர்வு அன்பின் உணர்வுகளையும் கொண்டிருத்தல் - இந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து நீங்கள் சேவை செய்தால், ஆத்மாக்களின் ஆசைகள் எல்லாமே இந்த உணர்வுகளால் இயல்பாகவே நிறைவேறும். மக்கள் தற்காலத்தில் எல்லோருடைய நோக்கங்களும் என்ன என்பதை எப்போதும் குறித்துக் கொள்கிறார்கள். அந்த நபர் ஒரு கருவியாக இருந்து எதையும் செய்கிறாரா அல்லது அகங்கார நோக்கத்துடன் செய்கிறாரா? எங்கு கருவியாக இருக்கும் நோக்கம் இருக்கிறதோ, அங்கே இயல்பாகவே பணிவான உணர்வு இருக்கும். எனவே சோதித்துப் பாருங்கள்: நான் எதைச் சேகரித்துள்ளேன்? எவ்வளவற்றைச் சேகரித்துள்ளேன்? ஏனென்றால், இந்த வேளையில் மட்டுமே, இந்த சங்கமயுகத்தில் மட்டுமே, இது சேகரிப்பதற்கான யுகம் ஆகும். பின்னர், கல்பம் முழுவதிலும் நீங்கள் எதைச் சேகரித்தீர்களோ, அதற்கான வெகுமதியே இருக்கும்.
எனவே, இந்த வருடம், நீங்கள் ஒவ்வொருவரும் எந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும்? உங்களின் சொந்த சேகரிப்புக் கணக்கைச் சோதித்துப் பாருங்கள். ஒரு சோதிப்பவராகவும் செய்பவராகவும் ஆகுங்கள். ஏனென்றால், நீங்கள் காலம் நெருங்கி வரும் காட்சிகளைக் காண்கிறீர்கள். நீங்கள் சமமானவர்கள் ஆகுவீர்கள் என நீங்கள் எல்லோரும் பாப்தாதாவிற்கு சத்தியம் செய்துள்ளீர்கள். நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? இவ்வாறு சத்தியம் செய்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். இது உறுதியா? அல்லது, குறிப்பிட்டதொரு சதவீதத்திற்கு மட்டுமே நீங்கள் அந்த சத்தியத்தைச் செய்திருக்கிறீர்களா? நீங்கள் இந்த சத்தியத்தை உறுதியாக்கி உள்ளீர்களா? எனவே, உங்களிடம் தந்தை பிரம்மாவிற்குச் சமமானதொரு சேமிப்புக் கணக்குத் தேவையல்லவா? நீங்கள் பிரம்மா பாபாவிற்குச் சமமானவர் ஆகவேண்டும். எனவே, தந்தை பிரம்மாவின் என்ன விசேடமான தெய்வீகச் செயல்களை நீங்கள் கண்டீர்கள்? ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர், ‘நான்’ என்று சொன்னாரா அல்லது ‘பாபா’ என்று சொன்னாரா? ‘நான் இதைச் செய்கிறேன்’ என்றல்ல, ஆனால், ‘பாபா என்னைச் செய்ய வைக்கிறார்’. நீங்கள் யாரைச் சந்திக்க வந்துள்ளீர்கள்? நீங்கள் பாபாவைச் சந்திக்க வந்துள்ளீர்கள். ‘நான்’ என்ற எந்தவிதமான உணர்வோ அல்லது அறிவோ கிடையாது. நீங்கள் இதைக் கண்டீர்கள்தானே? ஒவ்வொரு முரளியிலும் எத்தனை தடவைகள் ‘பாபா, பாபா’ என அவர் உங்களுக்கு நினைவூட்டியுள்ளார்? எனவே, சமமானவர் ஆகுவதென்றால், அனைத்திற்கும் முதலில் ‘நான்’ என்ற உணர்வு சிறிதளவேனும் இருக்கக்கூடாது என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பிராமணர்களில் ‘நான்’ என்ற உணர்வானது மிகவும் இராஜரீகமாக உள்ளது என்றும் உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு இது நினைவிருக்கிறதா? உங்களுக்கு இதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதுதானே? பாப்தாதாவின் வெளிப்படுத்துதல் இடம்பெற வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள். ‘பாப்தாதாவை நாம் வெளிப்படுத்துவோம்!’ நீங்கள் பல திட்டங்களையும் செய்துள்ளீர்கள். நீங்கள் மிக நல்ல திட்டங்களைச் செய்துள்ளீர்கள். பாப்தாதா அவற்றையிட்டு மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், உங்களின் திட்டங்களில் ‘நான்’ என்ற உணர்வின் இந்த இராஜரீக வடிவம், குறிப்பிட்ட சதவீதத்தில் உங்களின் வெற்றியைக் குறைக்கிறது. உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும் செயலிலும் இயல்பாகவே ‘பாபா, பாபா’ என்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும் - நான் என்ற உணர்வு இருக்கக்கூடாது. பாப்தாதா, கரவன்ஹார் என்னைச் செய்ய வைக்கிறார். இதுவே ஜகதாம்பாவின் விசேடமான தாரணையாகும். ஜகதாம்பாவின் சுலோகன் உங்களுக்கு நினைவிருக்கிறதா? பழையவர்களுக்கு அது நினைவிருக்கும். உங்களுக்கு இது நினைவிருக்கிறதா? கூறுங்கள். ‘ஹுக்கும் ஹி ஹுக்கும் சல்லா ரஹா ஹே’ (உங்களுக்குக் கட்டளை இடுகின்ற ஒருவரே, உங்களை அசைய வைக்கிறார்) இதுவே ஜகதாம்பாவின் விசேடமான தாரணை. எனவே, நீங்கள் ஓரிலக்கத்தைப் பெற்று சமமானவர் ஆகவிரும்பினால், ‘நான்’ என்ற உணர்வுகள் அனைத்தையும் முடியுங்கள். இயல்பாகவே உங்களின் வாயில் இருந்து ‘பாபா, பாபா’ என்பது மட்டுமே வெளிப்பட வேண்டும். உங்களின் செயல்களிலும் உங்களின் முகத்திலும் இருந்து தந்தையின் ரூபம் மட்டுமே வெளிப்பட வேண்டும். அப்போது, வெளிப்படுத்துதல் இடம்பெறும்.
பாப்தாதா இந்த ‘நான்’ என்ற இராஜரீக ரூபத்தின் பாடலை அதிகளவில் கேட்கிறார். ‘நான் செய்தது சரி. நான் நினைத்தது சரி. அதுவே நடக்க வேண்டும்’. ‘நான்’ என்ற இந்த உணர்வு உங்களை ஏமாற்றுகிறது. நீங்கள் எதைப் பற்றியாவது சிந்திப்பீர்கள், அதைப் பற்றிப் பேசுவீர்கள், ஆனால், ஒரு பணிவான கருவி என்ற நோக்கத்துடன் அதைச் செய்யுங்கள். பாப்தாதா ஏற்கனவே உங்களுக்கு ஆன்மீக அப்பியாசத்தைக் கற்பித்துள்ளார். அது என்ன அப்பியாசம்? ஒரு கணம், அதிபதி ஆகுங்கள். அடுத்தகணம், ஒரு குழந்தை ஆகுங்கள். உங்களின் அபிப்பிராயங்களை வழங்குவதில் ஓர் அதிபதி ஆகுங்கள். பின்னர், அதைப் பெரும்பாலானவர்கள் முடிவு செய்யும்போது, ஒரு குழந்தை ஆகுங்கள். ஓர் அதிபதி மற்றும் குழந்தை என்ற இந்த ஆன்மீக அப்பியாசம் மிகவும் அத்தியாவசியமானது. பாப்தாதாவின் கற்பித்தல்களில் இந்த மூன்று வார்த்தைகளையும் நினைவில் வைத்திருங்கள். நீங்கள் எல்லோரும் அவற்றை நினைவு செய்கிறீர்களா? உங்களின் எண்ணங்களில், அசரீரியானவர் ஆகுங்கள். உங்களின் வார்த்தைகளில், அகங்காரம் அற்றவர் ஆகுங்கள். உங்களின் செயல்களில் விகாரமற்றவர் ஆகுங்கள். உங்களுக்கு ஏதாவது எண்ணங்கள் ஏற்படும் போதெல்லாம், உங்களின் அசரீரி ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தவண்ணம் அந்த எண்ணங்களை உருவாக்குங்கள். நீங்கள் ஏனைய எல்லாவற்றையும் மறந்தாலும், இந்த மூன்று வார்த்தைகளையும் மறக்காதீர்கள். மூன்று வார்த்தைகளால் ஆன இந்தக் கற்பித்தல்கள், சாகார் ரூபத்திடமிருந்து கிடைத்த ஒரு பரிசாகும். உங்களுக்கு சாகார் ரூபத்தில் இருந்த தந்தை பிரம்மாவின் மீது அன்பு இருந்தது. இப்போதும், சில இரட்டை வெளிநாட்டவர்கள் தமக்குத் தந்தை பிரம்மாவிடம் அதிகளவு அன்பு இருப்பதாக அவர்களின் அனுபவங்களைக் கூறுகிறார்கள். அவர்கள் அவரைக் காணாவிட்டாலும், அவர்களுக்கு அவரிடம் அன்பு இருக்கிறது. இரட்டை வெளிநாட்டவர்களே, உங்களுக்குத் தந்தை பிரம்மாவின் மீது அதிகளவு அன்பு உள்ளதா? எனவே, யாரை நீங்கள் நேசிக்கிறீர்களோ, அவரிடம் இருந்து பெற்ற பரிசை நீங்கள் மிகக் கவனமாக வைத்திருப்பீர்கள். அது சிறியதொரு பரிசாக இருந்தாலும் உங்களுக்கு ஒருவரின் மீது ஆழ்ந்த அன்பு இருக்கும்போது, அவரிடமிருந்து பெற்ற பரிசை நீங்கள் கவனமாக மறைத்து வைத்திருப்பீர்கள். ஆகவே, உங்களுக்குத் தந்தை பிரம்மாவின் மீது அன்பு உள்ளது. எனவே, இந்த மூன்று வார்த்தைகளின் கற்பித்தலில் உங்களுக்கு அன்பு உள்ளது என்றே அர்த்தம். இவற்றின் மூலம் நீங்கள் சம்பூரணமாகவும் சமமானவராகவும் ஆகுவது மிகவும் இலகுவாகி விடும். தந்தை பிரம்மா கூறியவற்றை நினைவில் வைத்திருங்கள்.
எனவே, இந்தப் புதிய வருடத்தில், நீங்கள் வார்த்தைகளால் சேவை செய்யக்கூடும். அதைக் கோலாகலமாகச் செய்யுங்கள். ஆனால், அனுபவத்தைக் கொடுக்கும் சேவையிலும் சதா கவனம் செலுத்துங்கள். ஒரு சகோதரன் அல்லது சகோதரி மூலம் அதிகளவு சக்தியைப் பெறுகின்ற அனுபவத்தை அனைவரும் பெறச் செய்யுங்கள். அல்லது, அவர்கள் அமைதியின் அனுபவத்தைப் பெறச் செய்யுங்கள். ஏனெனில், ஓர் அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது. நீங்கள் கேட்டவற்றை மறக்க முடியும். நீங்கள் அதை இரசிப்பீர்கள். ஆனால் அதை மறக்க முடியும். ஓர் அனுபவம் எத்தகையது என்றால், அது உங்களை நெருக்கமாக ஈர்க்கும். உங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், தொடர்ந்து உங்களுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்துவார்கள். ஏனென்றால், ஓர் உறவுமுறை இல்லாமல், அவர்களால் ஆஸ்திக்கான உரிமையைக் கோர முடியாது. ஆகவே, அனுபவம் அவர்களை ஓர் உறவுமுறைக்குள் கொண்டுவரும். அச்சா.
உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள்? சோதித்து, ஒரு சோதிப்பவராகவும் உருவாக்குபவராகவும் ஆகுங்கள். ஓர் அனுபவத்தைக் கொடுக்கின்ற உருவாக்குபவர் ஆகுங்கள். உங்களின் சேமிப்புக் கணக்கைச் சோதிப்பவர் ஆகுங்கள். அச்சா.
எல்லோரும் இப்போது என்ன செய்வீர்கள்? நீங்கள் பாப்தாதாவிற்குப் புது வருடப் பரிசைக் கொடுப்பீர்களா மாட்டீர்களா? புது வருடத்தில் மக்கள் என்ன செய்வார்கள்? நீங்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்குவீர்கள், அப்படித்தானே? நீங்கள் ஒரு வாழ்த்து மடலை அல்லது பரிசைக் கொடுப்பீர்கள். எனவே, பாப்தாதாவிற்கு வாழ்த்து மடல்கள் தேவையில்லை. அவருக்கு ஒரு பதிவேடு தேவைப்படுகிறது. குழந்தைகள் எல்லோரும் முதலாம் இலக்கத்தவர்கள் ஆகுகிறார்கள் எனப் பதிவு செய்யும் ஒரு பதிவேட்டையே பாப்தாதா விரும்புகிறார். அவர்கள் தடைகளில் இருந்து விடுபட்டவர்கள் ஆகவேண்டும். இப்போது, பாப்தாதா சில தடைகளைப் பற்றிக் கேட்கும்போது, பாப்தாதாவிற்கு ஒரு வியப்பூட்டும் விளையாட்டு நினைவிற்கு வருகிறது. அந்த வியப்பூட்டும் விளையாட்டு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது வயதானவர்கள், பொம்மைகளுடன் விளையாடும் ஒரு விளையாட்டு. அவர்கள் வயதானவர்கள். ஆனால் பொம்மைகளுடன் விளையாடுகிறார்கள். எனவே, அது வியப்பூட்டும் விளையாட்டுத்தானே? எனவே, நீங்கள் இப்போது கேட்கின்ற, பார்க்கின்ற அற்பமான விடயங்களும் அப்படியே தென்படுகின்றன. அவர்கள் தமது ஓய்வெடுக்கும் ஸ்திதியில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்யும் செயல்களைப் பாருங்கள்! ஆகவே, தந்தை அந்தப் பதிவேட்டை விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, வாழ்த்து மடல்களுக்குப் பதிலாக, தடைகளில் இருந்து விடுபட்டிருக்கும் பதிவேட்டைக் கொடுங்கள். உங்களின் அற்பமான விடயங்கள் அனைத்தும் முடிந்துவிட வேண்டும். எப்படிப் பெரிய விடயங்களைச் சிறியதாக்குவது என்றும் சிறிய விடயங்கள் அனைத்தையும் எப்படி முடிப்பது என்றும் கற்றுக் கொள்ளுங்கள். பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் ஒரு கண்ணாடி ஆக்க வேண்டும் என்று விரும்புகிறார். அந்தக் கண்ணாடியில் பாப்தாதாவின் முகம் தென்பட வேண்டும். பாப்தாதா உங்களின் கண்ணாடியில் தென்பட வேண்டும். எனவே, இத்தகைய தனித்துவமான கண்ணாடியை பாப்தாதாவிற்குப் பரிசாகக் கொடுங்கள். உலகில், இறைவனைப் பார்க்கக்கூடிய கண்ணாடி எதுவும் இல்லை. எனவே, நீங்கள் ஒரு தனித்துவமான கண்ணாடி ஆகுகின்ற பரிசைப் புது வருடத்தில் கொடுங்கள். யார் உங்களைப் பார்த்தாலும் யார் நீங்கள் சொல்வதைக் கேட்டாலும் அவர்கள் பாப்தாதாவை மட்டுமே பார்க்க வேண்டும், பாப்தாதா சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும். அவர்கள் தந்தையின் ஒலியைக் கேட்க வேண்டும். எனவே, இந்தப் பரிசை நீங்கள் கொடுப்பீர்களா? கொடுப்பீர்களா? இதைக் கொடுப்பதற்கான திடசங்கற்பத்தைக் கொண்டிருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! திடசங்கற்பத்தைக் கொண்டிருப்பதற்காக உங்களின் கைகளை உயர்த்துங்கள். இரட்டை வெளிநாட்டவர்களும் தமது கைகளை உயர்த்துகிறார்கள். சிந்திக் குழுவினரும் தமது கைகளை உயர்த்துகிறார்கள். நீங்கள் கவனமாகக் கருத்தில் கொண்ட பின்னரே உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். சிந்திக் குழுவினர் அதைக் கருத்தில் கொண்ட பின்னரே தமது கைகளை உயர்த்துகிறார்கள்.
இது நல்லது. பாப்தாதாவிற்கு சிந்திக் குழுவின் மீது நம்பிக்கை இருக்கிறது. பாபா அவற்றைப் பற்றிச் சொல்லட்டுமா? பாபாவிற்கு உள்ள நம்பிக்கை என்ன? பாபாவிற்கு உள்ள நம்பிக்கை என்னவென்றால், சிந்திக் குழுவில் இருந்து ஒரு மைக் வெளிப்பட வேண்டும், அவர் தான் எப்படி இருந்தார் என்றும் இப்போது எப்படி இருக்கிறார் என்றும் எல்லோருக்கும் சவால் விடுத்து, சிந்திகளை விழித்தெழச் செய்ய வேண்டும். அந்த அப்பாவிகள் ஆதரவற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இறைவனை இனங்காண்பதில்லை. அவர்கள் தமது நாட்டில் அவதரித்தவரையே இனங்காண்பதில்லை. எனவே, சிந்திக் குழுவில் இருந்து ஒரு மைக் வெளிப்பட்டு, எல்லோருக்கும் சவால் விடுத்து, சத்தியம் என்றால் என்னவென்று சொல்ல வேண்டும். இது ஓகேயா? நீங்கள் இந்த நம்பிக்கையை நிறைவேற்றுவீர்களா? அச்சா.
எங்கும் உள்ள சதா மகாதானிக் குழந்தைகள் எல்லோருக்கும் தந்தையின் வலது கரமாக விளங்கும் கீழ்ப்படிவான கைகளுக்கும் எங்கும் உள்ள ஆத்மாக்களுக்கும் தைரியத்தின் இறக்கைகளைக் கொடுக்கும் சகல தைரியசாலி ஆத்மாக்களுக்கும் ஒவ்வொரு செயலிலும் தந்தை பிரம்மாவை சதா பின்பற்றும் எங்கும் உள்ள குழந்தைகளுக்கும் தந்தை பிரம்மாவினதும் ஜகதாம்பாவினதும் கற்பித்தல்களைத் தமது நடைமுறை வாழ்க்கைகளில் கடைப்பிடிக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் அதிக, அதிக அன்பும் நினைவும் ஆசீர்வாதங்களும் நமஸ்தேயும்.
இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கும் பாரதத்தின் குழந்தைகளுக்கும் இரட்டை இரவு வணக்கம் அத்துடன் காலை வணக்கம். நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? எனவே, எந்தவொரு சூழ்நிலை ஏற்பட்டாலும் இந்த நாளை நினைத்து, சந்தோஷ நடனம் ஆடுங்கள். சதா சந்தோஷ ஊஞ்சலில் தொடர்ந்து ஆடுங்கள். துன்பத்தின் எந்தவிதமான அலைகளும் வரக்கூடாது. உலகிலுள்ள ஆத்மாக்கள் பலர் துன்பம் விளைவிக்கிறார்கள். குழந்தைகளான நீங்களோ சந்தோஷ சொரூபங்கள், சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகள். நீங்கள் சந்தோஷத்தைப் பார்த்து, சந்தோஷத்தைக் கொடுப்பவர்கள். சிலவேளைகளில், சந்தோஷ ஊஞ்சலில் ஆடுங்கள். சிலவேளைகளில், அன்பெனும் ஊஞ்சலில் ஆடுங்கள். சிலவேளைகளில் அமைதி ஊஞ்சலில் ஆடுங்கள். தொடர்ந்து ஆடுங்கள். உங்களின் பாதங்கள் சேற்றில் பதிய அனுமதிக்காதீர்கள். தொடர்ந்து ஊஞ்சலில் ஆடுங்கள். சந்தோஷமாக இருந்து, எல்லோரையும் சந்தோஷப்படுத்துங்கள். எல்லோருக்கும் சந்தோஷத்தைப் பகிர்ந்து அளியுங்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் தேவதை ஸ்திதியால் தந்தைக்கு அவரின் அன்பின் பிரதிபலனை வழங்குவதன் மூலம் தீர்வுகளின் சொரூபம் ஆகுவீர்களாக.உங்களின் தேவதை ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதென்றால் தந்தைக்கு அவரின் அன்பின் பிரதிபலனைக் கொடுப்பதாகும். இத்தகைய பிரதிபலனைக் கொடுப்பவர்கள், தீர்வுகளின் சொரூபங்கள் ஆகுகிறார்கள். தீர்வுகளின் சொரூபம் ஆகுவதன் மூலம், உங்களின் சொந்தப் பிரச்சனைகளும் மற்றவர்களின் பிரச்சனைகளும் இயல்பாகவே முடிவடைந்துவிடும். எனவே, இது இப்போது இத்தகைய சேவை செய்வதற்குரிய நேரம். இது இப்போது கொடுப்பதற்கும் அதேவேளை எடுப்பதற்கும் உரிய நேரம். எனவே, இப்போது தந்தையைப் போல், எல்லோரையும் ஈடேற்றுபவர் ஆகுங்கள். அவர்களின் அழைப்பைக் கேட்டு, உங்களின் தேவதை ரூபத்தில் அந்த ஆத்மாக்களை அணுகி, தமது பிரச்சனைகளால் களைப்பு அடைந்துள்ள ஆத்மாக்களின் களைப்பை நீக்குங்கள்.
சுலோகம்:
வீணானவற்றுக்கு கவலையற்றவராக இருங்கள். ஒழுங்குமுறைக் கோட்பாடுகளுக்கு அல்ல.ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
எங்களுக்கு இடையே உள்ள வெவ்வேறு சம்ஸ்காரங்களுக்கு இடையே நாங்கள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். ஒற்றுமைக்கு, நாங்கள் தற்போதுள்ள வேறுபாடுகளை முடித்து, இரண்டு விடயங்களைக் கிரகிக்க வேண்டும். 1) ஒரேயொருவருக்குச் சொந்தமானவர் ஆகி, ஒரேயொருவரின் பெயரை எடுங்கள். 2) உங்களின் எண்ணம், நேரம், ஞானம் என்ற பொக்கிஷங்களில் சிக்கனமாக இருங்கள். அப்போது, ‘நான்’ என்பது தந்தைக்குள் அடங்கிவிடும். அத்துடன் வேறுபாடுகள் அனைத்தும் முடிவடைந்துவிடும்.