02.03.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.10.2004     Om Shanti     Madhuban


ஒரேயொருவரை வெளிப்படுத்துவதற்கு, உங்களின் ஸ்திதியை நிலையானதாகவும் ஸ்திரமானதாகவும் ஆக்குங்கள். உங்களின் சுய மரியாதையுடன் இருந்து, எல்லோருக்கும் மரியாதை அளியுங்கள்.


இன்று, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் மூன்று பாக்கிய நட்சத்திரங்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறார். முதலாவது, இறை பராமரிப்பின் பாக்கியம். இரண்டாவது, இறை கல்வியின் பாக்கியம். மூன்றாவது, இறை ஆசீர்வாதங்களின் பாக்கியம். இந்த முறையில், அவர் ஒவ்வொருவரின் நெற்றியின் மத்தியிலும் மூன்று நட்சத்திரங்களைப் பார்க்கிறார். நீங்கள் உங்களின் பாக்கிய நட்சத்திரங்களைப் பார்க்கிறீர்களா? உங்களால் அவற்றைப் பார்க்க முடிகிறதா? உலகில் வேறு எவரின் நெற்றியிலும் இத்தகைய மேன்மையான பாக்கியம் ஜொலிப்பதை உங்களால் பார்க்க முடியாது. இந்தப் பாக்கிய நட்சத்திரங்கள் உங்கள் எல்லோருடைய நெற்றியிலும் ஜொலிக்கின்றன. எவ்வாறாயினும், சில வேளைகளில் அவற்றின் ஜொலிப்பில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. சிலரின் பிரகாசம் மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது. ஏனையோரின் பிரகாசம் மத்திய நிலையில் உள்ளது. பாக்கியத்தை அருள்பவர் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் சமமான பாக்கியத்தை வழங்கியுள்ளார். அவர் எவருக்கும் எதையும் விசேடமாகக் கொடுக்கவில்லை. பராமரிப்பு ஒன்றே. நீங்கள் எல்லோரும் ஒன்றாகவே படிக்கிறீர்கள். அத்துடன் நீங்கள் எல்லோரும் ஒரே ஆசீர்வாதத்தையே பெற்றுள்ளீர்கள். உலகின் மூலை முடுக்கெங்கும் எங்கும் ஒரே கல்வியே கற்பிக்கப்படுகிறது. ஒரே திகதியில் ஒரே முரளி வாசிக்கப்படுவது ஓர் அற்புதமே. அத்துடன் அமிர்த வேளை நேரமும் ஒவ்வொருவரின் நாட்டிற்கேற்ப, ஒரே நேரமாகவே உள்ளது. நீங்கள் பெறுகின்ற ஆசீர்வாதமும் ஒன்றேயாகும். சுலோகமும் ஒன்றேயாகும். ஏதாவது வேறுபாடு உள்ளதா? அமெரிக்காவுக்கும் இலண்டனுக்கும் இடையே இதில் ஏதாவது வேறுபாடு உள்ளதா? வேறுபாடு இல்லை. அப்படி என்றால், ஏன் ஒரு வேறுபாடு காணப்படுகிறது?

பாப்தாதா அமிர்தவேளையில் எல்லோருக்கும் ஒரே பராமரிப்பையே வழங்குகிறார். எல்லோரும் சதா நினைவைக் கொண்டிருக்கும் ஒரே வழிமுறையையே பெற்றுள்ளார்கள். எனவே, ஏன் வரிசைக்கிரமம் ஏற்படுகிறது? வழிமுறை ஒன்றாக இருக்கும்போது, வெற்றியின் பேற்றில் ஏன் வேறுபாடு ஏற்படுகிறது? பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரின் மீதும் சமமான அன்பையே வைத்துள்ளார். ஒருவர் தனது முயற்சிகளால் கடைசி இலக்கத்தில் இருந்தாலும், பாப்தாதா அந்தக் கடைசி இலக்கத்தைச் சேர்ந்தவரிலும் ஒரே அன்பையே கொண்டிருக்கிறார். உண்மையில், அன்புடன் கூடவே, அவர் கடைசி இலக்கத்தின் மீது கருணையும் கொள்கிறார். அதாவது, கடைசியில் இருக்கும் இவர் வேகமாகச் சென்று முதலாவதாக வரவேண்டும் என்று கருணை கொள்கிறார். தொலைவில் இருந்து வந்திருக்கும் நீங்கள் எல்லோரும் எப்படி இங்கே வந்து சேர்ந்தீர்கள்? இறையன்பே உங்களை இங்கே இழுத்து வந்தது, அப்படித்தானே? நீங்கள் இந்த அன்பெனும் இழையால் ஈர்க்கப்பட்டு இங்கே வந்துள்ளீர்கள். எனவே, பாப்தாதா எல்லோர் மீதும் அன்பு வைத்திருக்கிறார். நீங்கள் இதை நம்புகிறீர்களா? அல்லது, பாபா உங்களின் மீது அன்பு வைத்திருக்கிறாரா அல்லது அவரின் அன்பு குறைவாக இருக்கிறதா என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கிறதா? பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் மீதும் வைத்திருக்கும் அன்பானது இன்னொருவரை விட அதிகமாகவே இருக்கும். இறைவனிடம் இருந்து பெறப்படும் இந்த அன்பானது, குழந்தைகளான உங்களின் விசேடமான பராமரிப்பின் அடிப்படை ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் என்ன நினைக்கிறீர்கள்? தந்தையிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு பெரியதா அல்லது வேறு ஒருவரின் அன்பு பெரியதாகவும் உங்களுடையது குறைவாகவும் இருக்கிறதா? நீங்கள் இந்த முறையில் சிந்திக்கிறீர்களா? பாபாவின் மீதான உங்களின் அன்பு மகத்தானது என நீங்கள் நம்புகிறீர்கள்தானே? இது இப்படித்தானே? பாண்டவர்களே? நீங்கள் ஒவ்வொருவரும் ‘எனது பாபா!’ என்றே சொல்வீர்கள். அவர் நிலையப் பொறுப்பாளரின் பாபா, தாதியின் பாபா அல்லது தாதி ஜான்கியின் பாபா என நீங்கள் சொல்ல மாட்டீர்கள். நீங்கள் இப்படிச் சொல்வீர்களா? இல்லை! ‘எனது பாபா!’ என்றே நீங்கள் சொல்வீர்கள். ‘என்னுடையவர்’ என நீங்கள் கூறியதாலும் தந்தையும் ‘என்னுடையவர்’ எனக் கூறியதாலும் இந்த ‘என்னுடையவர்’ என்ற ஒரு வார்த்தையால் குழந்தைகள் தந்தைக்குச் சொந்தம் ஆகியுள்ளார்கள். தந்தையும் குழந்தைகளுக்குச் சொந்தம் ஆகியுள்ளார். இதற்கு ஏதாவது முயற்சி தேவையா? இதற்கு ஏதாவது முயற்சி வேண்டுமா? சிறிதளவு முயற்சியாவது? இல்லையா? சிலவேளைகளில் நீங்கள் அதை முயற்சி என உணர்கிறீர்களா? அது முயற்சி என நீங்கள் உணர்வதில்லையா? நீங்கள் அப்படி உணர்கிறீர்கள். அதற்கு முயற்சி தேவை என நீங்கள் கண்டதும் என்ன செய்வீர்கள்? நீங்கள் களைப்படைகிறீர்களா? உங்களின் இதயபூர்வமான அன்புடன் ‘எனது பாபா’ எனச் சொல்லுங்கள். அந்த முயற்சி அன்பாக மாறிவிடும். ‘எனது பாபா’ என நீங்கள் சொன்னவுடனேயே, அந்த ஒலி பாபாவைச் சென்றடைகிறது. அப்போது தந்தை மேலதிக உதவியை வழங்குகிறார். எவ்வாறாயினும், இது இதயத்தின் ஒப்பந்தம். இது வார்த்தைகளின் ஒப்பந்தம் அல்ல. இது இதயத்தால் செய்யப்பட்ட ஒப்பந்தம். எனவே, நீங்கள் உங்களின் இதயத்தால் ஓர் ஒப்பந்தத்தைச் செய்வதில் கெட்டிக்காரர்கள்தானே? எப்படி ஓர் ஒப்பந்தத்தைச் செய்வது என உங்களுக்குத் தெரியுமா? பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு எப்படி ஓர் ஒப்பந்தத்தைச் செய்வது எனத் தெரியுமா? இதனாலேயே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். எப்படியும் மிகத் தொலைவில் வசிப்பவர் யார்? அமெரிக்காவில் இருப்பவர்களா? அமெரிக்காவில் இருப்பவர்கள் மிகத் தொலைவில் வசிக்கிறார்களா அல்லது தந்தை மிகத் தொலைவில் வசிக்கிறாரா? அமெரிக்கா இந்த உலகிலேயே உள்ளது. தந்தை வேறோர் உலகில் இருந்து வருகிறார். எனவே, மிகத் தொலைவில் வசிப்பவர் யார்? அமெரிக்காவில் இருப்பவர்கள் அல்ல. பாப்தாதாவே மிகத் தொலைவில் இருக்கிறார். ஒருவர் சூட்சும வதனத்தில் இருந்து வருகிறார், ஒருவர் பரந்தாமத்தில் இருந்து வருகிறார். எனவே, அதனுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா எம்மாத்திரம்? எதுவுமே இல்லை!

எனவே, இன்று, தொலைதூர வாசியான தந்தை இந்தப் பௌதீக உலகில் தொலைவில் வசிக்கும் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். இன்று பாப்தாதா உங்களுக்காகவே வந்துள்ளார் என்ற போதை உங்களுக்கு இருக்கிறதா? பாரத மக்கள் எப்படியும் தந்தைக்குச் சொந்தமானவர்களே. ஆயினும் பாப்தாதா குறிப்பாக இரட்டை வெளிநாட்டவர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். ஏன் அவர் மகிழ்ச்சி அடைகிறார்? தந்தை பாரதத்தில் வந்ததாலேயே பாரத மக்களுக்கு இந்த மேலதிக போதை உள்ளது என்பதை பாப்தாதா இனங்கண்டுள்ளார். எவ்வாறாயினும், பாபா இரட்டை வெளிநாட்டவர்களின் மீது அன்பு வைத்திருக்கிறார். ஏனென்றால், அவர்கள் வெவ்வேறு கலாச்சாரங்களில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் பிராமணக் கலாச்சாரத்திற்கு மாறியுள்ளார்கள். நீங்கள் மாறியுள்ளீர்கள்தானே? உங்களுக்குள்ளே இனியும் இது பாரதக் கலாச்சாரம், உங்களின் கலாச்சாரம் வேறுபட்டது என்ற எண்ணம் இல்லையல்லவா? இல்லை. எல்லோரும் ஒரே கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஆகியிருப்பதையே பாப்தாதா பெறுபேற்றிலே பார்த்தார். நீங்கள் எங்கிருந்து வந்திருந்தாலும் உங்களின் பௌதீக சரீரங்களைப் பொறுத்தவரை நாடுகள் வெவ்வேறானவை. ஆனால் ஆத்மா பிராமணக் கலாச்சாரத்திற்கே சொந்தமானவர். பாப்தாதா மிகவும் விரும்புகின்ற இரட்டை வெளிநாட்டவர்களின் இன்னொரு விடயம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? (அவர்கள் சேவையில் விரைவாக ஈடுபடுகிறார்கள்) வேறு ஏதாவது சொல்லுங்கள். (அவர்களுக்குத் தொழிலும் உள்ளது, அத்துடன் சேவையும் செய்கிறார்கள்) அதை இங்கே இந்தியாவிலும் செய்கிறார்கள். இந்தியாவிலும் வேலைக்குச் சென்றவண்ணம் சேவையும் செய்கிறார்கள். (ஏதாவது நடந்தால், அவர்கள் தமது பலவீனத்தைப் பற்றி நேர்மையாகச் சொல்கிறார்கள். அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள்) அச்சா. இந்தியாவில் இருப்பவர்கள், நேர்மையாக இல்லையா?

நீங்கள் தொலைவில் வசித்தாலும் தந்தையின் மீதுள்ள அன்பினால் உங்களில் பெரும்பாலானோர் அன்பெனும் பாடத்தில் சித்தி அடைந்துள்ளதை பாப்தாதா பார்த்தார். பாரதத்திற்கு அந்தப் பாக்கியம் எப்படியும் உள்ளது. ஆனால் வெகு தொலைவில் வசித்தாலும் நீங்கள் எல்லோரும் அன்பில் சித்தி அடைந்துள்ளீர்கள். உங்களின் அன்பில் சதவீதம் உள்ளதா என பாப்தாதா கேட்பாராக இருந்தால், தந்தையின் மீதான அன்பெனும் பாடத்தில் சதவீதம் காணப்படுகிறதா? தங்களிடம் 100 வீதமான அன்பு இருக்கிறதென நம்புபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நூறு சதவீதமா? பாரதவாசிகள் தமது கைகளை உயர்த்துகிறார்கள் இல்லை! பாருங்கள், பாரதம் இந்த பாக்கியத்தைப் பெற்றுள்ளது. அது பெற்றுள்ள மகத்தான பாக்கியம், தந்தை பாரதத்தில் வந்திருப்பதே ஆகும். தந்தை இதற்காக அமெரிக்காவைத் தேர்ந்து எடுக்கவில்லை. அவர் பாரதத்தையே தேர்ந்து எடுத்துள்ளார். இவர் (நியூயோர்க்கில் இருந்து காயத்ரிபென்) முன்னால் அமர்ந்துள்ளார். எவ்வாறாயினும், தொலைவில் இருந்தாலும் உங்களிடம் ஆழ்ந்த அன்பு உள்ளது. பிரச்சனைகள் வரும். ஆனால், ‘பாபா, பாபா’ எனக் கூறுவதன் மூலம் நீங்கள் அந்தப் பிரச்சனைகளை முடிக்கிறீர்கள்.

பாப்தாதா அன்பெனும் பாடத்திற்கு உங்களுக்கு சித்திக்கான மதிப்பெண்களை வழங்கியுள்ளார். எனவே, இப்போது நீங்கள் வேறு எதில் சித்தி அடைய வேண்டும்? நீங்கள் சித்தி அடைய வேண்டும்! நீங்கள் சித்தி அடைந்துள்ளீர்கள். நீங்கள் சித்தி அடைய வேண்டும். தற்சமயத்திற்கேற்ப, அன்பு சக்திக்காக நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்;த்தி இருந்த அளவிற்கு ஒவ்வொரு குழந்தையும் சுய மாற்றத்தின் சக்தியிலும் சதவீதத்தைக் கொண்டிருக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். நீங்கள் எல்லோரும் அதற்காக உங்களின் கைகளை உயர்த்தினீர்கள்தானே? உங்களின் சுய மாற்றத்திலும் அதேயளவு வேகம் காணப்படுகிறதா? நீங்கள் உங்களின் கைகளை இதற்காக முழுமையாக உயர்த்துவீர்களா அல்லது அரைவாசி உயர்த்துவீர்களா? அதற்காக எவ்வளவில் நீங்கள் உயர்த்துவீர்கள்? நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். ஆனால் அதற்கு நேரம் எடுக்கிறது. நேரம் நெருங்கி வருவதற்கேற்ப, சுய மாற்றத்தின் சக்தியானது மிக வேகமாக இருக்க வேண்டும். ஒரு கடதாசித் துண்டில் முற்றுப்புள்ளி வைப்பதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? அதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? ஒரு விநாடியேனும் இல்லை. இது சரியா? எனவே, உங்களிடம் இத்தகைய துரித வேகம் உள்ளதா? உங்களைக் கைகளை உயர்த்தும்படி கேட்க வேண்டுமா? நீங்கள் உங்களின் கைகளை அரைவாசியே உயர்த்துவீர்கள். காலத்தின் வேகம் துரிதமானது. சுய மாற்றத்தின் சக்தியும் அதேபோல் வேகமாக இருக்க வேண்டும். நீங்கள் மாற்றத்தைப் பற்றிப் பேசும்போது, எப்போதும் ‘மாற்றம்’ என்ற வார்த்தையின் முன்னால் ‘சுயம்’ என்ற வார்த்தையை நினையுங்கள். மாற்றம் அல்ல, ஆனால் சுய மாற்றம். ஒரு வருடத்திற்குள் குழந்தைகள் தமது சம்ஸ்காரங்களின் மாற்றத்தினூடாக உலக மாற்றத்தை ஏற்படுத்துவோம் என பாப்தாதாவிற்குச் சத்தியம் செய்திருப்பதை பாப்தாதா நினைவுகூருகிறார். உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் அந்த வருடத்தைக் கொண்டாடினீர்கள்தானெ? சம்ஸ்காரங்களின் மாற்றத்தினூடாக உலக மாற்றம். உலகின் வேகம் உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், உங்களின் சம்ஸ்காரங்களின் மாற்றத்தின் வேகம் அதே அளவிற்கு வேகமாக இருக்கிறதா? வெளிநாடுகளில் உள்ள சிறப்பியல்பு என்னவென்றால், அங்கு எல்லாமே வேகமாக இருப்பது ஒரு நியதியாக உள்ளது. அவர்கள் எல்லாவற்றையும் வேகமாகவே செய்கிறார்கள். எனவே, தந்தை கேட்கிறார்: உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுவது என வரும்போது, நீங்கள் வேகமாக இருக்கிறீர்களா? சுய மாற்றத்தின் வேகம் துரிதமாக ஆகுவதையே இப்போது பாப்தாதா பார்க்க விரும்புகிறார். பாப்தாதாவிற்கு என்ன வேண்டும்? என நீங்கள் எல்லோரும் கேட்கிறீர்கள்தானே? நீங்கள் உங்களுக்கு இடையேயும் கலந்துரையாடுகிறீர்கள். அத்துடன் ஒருவரையொருவர் கேட்கிறீர்கள்: பாப்தாதாவிற்கு என்ன வேண்டும்? உங்களால் ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி இடக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதையே பாப்தாதா விரும்புகிறார். ஒரு கடதாசியில் நீங்கள் முற்றுப்புள்ளி வைப்பதைப் போல், இதுவும் அதைவிட வேகமாக இருக்க வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்துவதில், மிகச்சரியாக இல்லாத எதற்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியும்தானே? எவ்வாறாயினும், அது சிலவேளைகளில் ஒரு கேள்விக்குறி ஆகிவிடுகிறது. நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறீர்கள். அது ஒரு கேள்விக்குறி ஆகிவிடுகிறது. இது ஏன் இப்படி இருக்கிறது? இது என்ன? இந்த ஏன்? மற்றும் என்ன? என்ற கேள்விகள் முற்றுப்புள்ளியை ஒரு கேள்விக்குறி ஆக்கிவிடுகின்றன. பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார்: ‘ஏன்? ஏன்?’ எனச் சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக நீங்கள் என்ன சொல்ல வேண்டும்? ‘பறவுங்கள்’ அல்லது ‘ஆஹா!’ ஒன்றில் ஆஹா! அல்லது பறவுங்கள் எனச் சொல்லுங்கள். ‘ஏன்? ஏன்?’ எனச் சொல்லாதீர்கள். ‘ஏன்? ஏன்?’ என விரைவாக எப்படிச் சொல்வது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது வெறுமனே வருகிறதா? ஏன் என்பது வரும்போதெல்லாம் அதற்குப் பதிலாக, ‘ஆஹா, ஆஹா!’ எனச் சொல்லுங்கள். யாராவது எதையாவது செய்தால் அல்லது எதையாவது சொன்னால் ‘ஆஹா நாடகமே, ஆஹா!’ எனச் சொல்லுங்கள். ‘ஏன் இவர் இப்படிச் செய்கிறார்? ஏன் இவர் இப்படிச் சொல்கிறார்? மற்றவர் செய்தால் நானும் இதைச் செய்வேன்’ என்பதல்ல. இல்லை!

தற்காலத்தில், பாப்தாதா கண்டுள்ளார்..... நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்தவே விரும்புகிறீர்கள், அப்படித்தானே? எனவே, தற்காலத்தில், இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் உள்ள பெறுபேறு என்னவென்றால், இரண்டு இடங்களிலும் ஒரு விடயத்தின் அலை காணப்படுகிறது. அது என்ன? ‘இது இருக்க வேண்டும், எனக்கு இது கிடைக்க வேண்டும், இவர் இதைச் செய்ய வேண்டும். நான் நினைப்பதும் சொல்வதுமே நடக்க வேண்டும்’. உங்களின் எண்ணங்களில் எழுகின்ற இந்த எதிர்பார்ப்பு விடயங்கள் அனைத்தும் வீணான எண்ணங்களே. அவை உங்களைச் சிறந்தவர்கள் ஆக்க அனுமதிப்பதில்லை. பாப்தாதா ஒவ்வொருவரினதும் வீணானவற்றின் அட்டவணையையும் குறுகிய காலத்திற்குக் கவனித்தார். அவர் அதைச் சோதித்தார். பாப்தாதாவிடம் சக்திவாய்ந்த பொறிமுறை உள்ளது. உங்கள் எல்லோரிடமும் உள்ளதைப் போன்ற கணணி அவரிடம் இல்லை. உங்களின் கணணி பழுதடையவும் கூடும். எவ்வாறாயினும், பாப்தாதாவிடம் மிகவும் வேகமாகச் சோதிக்கும் பொறிமுறை உள்ளது. உங்களில் பெரும்பாலானோருக்கு நாள் முழுவதும் அவ்வப்போது வீணான எண்ணங்கள் இருப்பதை பாப்தாதா கண்டார். என்ன நடக்கின்றது என்றால், வீணான எண்ணங்களின் நிறையோ, பாரமானது. சிறந்த எண்ணங்களின் நிறை குறைவாக இருக்கும். எனவே, அவ்வப்போது உங்களுக்குள் ஏற்படுகின்ற வீணான எண்ணங்கள் உங்களின் தலையைப் பாரம் ஆக்குகின்றன. அவை உங்களின் முயற்சிகளைப் பாரம் உடையவையாக ஆக்குகின்றன. சுமை இருப்பதனால் அது உங்களை அதை நோக்கி இழுக்கிறது. இதனாலேயே, குறைந்தளவு தூய எண்ணங்கள் இருக்கும்போது அவை சுய முன்னேற்றத்திற்கான உயர்த்தியாக இருக்கும். அவை ஏணிகூட இல்லை, ஆனால் உயர்த்தியாகச் செயல்படும். நீங்கள் அந்த முயற்சி எனும் ஏணியில் ஏறவேண்டி இருக்கும். இரண்டு வார்த்தைகளை நினைவில் வைத்திருங்கள். வீணானவற்றை முடிப்பதற்கு, அமிர்த வேளையில் இருந்து இரவுவரை உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், நடத்தையில் இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். இதை நடைமுறை வடிவில் கொண்டு வாருங்கள். இந்த இரண்டு கூற்றுக்களாவன: சுயமரியாதை, மற்றவர்களுக்கு மரியாதை. நீங்கள் உங்களின் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும். அத்துடன் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ‘ஒருவர் எத்தகையவராக இருந்தாலும் நான் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நான் மரியாதை கொடுப்பதுடன் எனது சுயமரியாதை என்ற ஸ்திதியில் இருக்க வேண்டும்.’ இரண்டிலும் சமநிலை இருக்க வேண்டும். சிலவேளைகளில், நீங்கள் அதிகளவில் உங்களின் சுயமரியாதையில் இருக்கிறீர்கள். ஆனால் மற்றவர்களுக்குப் போதுமான அளவு மரியாதை கொடுப்பதில்லை. ஒருவர் உங்களுக்கு மரியாதை கொடுத்தால் மட்டுமே, நீங்கள் அவருக்கு மரியாதை கொடுப்பீர்கள் என்பதாக இருக்கக்கூடாது. இல்லை. ‘நான் அருள்பவர் ஆகவேண்டும்.’ சிவசக்தி பாண்டவ சேனையினர் அருள்பவரின் குழந்தைகளான அருள்பவர்கள் ஆவார்கள். ‘மற்றவர் கொடுத்தால் நான் கொடுப்பேன்’ எனச்சொல்வது ஒரு வியாபாரம் ஆகுகிறது. அது அருள்பவராக ஆகுவது அல்ல. எனவே, நீங்கள் வியாபாரிகளா அல்லது அருள்பவர்களா? ஓர் அருள்பவர் ஒருபோதும் எடுப்பவராக இருக்க மாட்டார். உங்களின் மனோபாவத்திலும் பார்வையிலும் இந்த இலட்சியத்தைக் கொண்டிருங்கள்: நான் செய்ய வேண்டும், மற்றவர்கள் அல்ல. நான் ஒவ்வொருவருக்காகவும், அதாவது, அவர்கள் ஞானியோ அஞ்ஞானியோ எல்லோருக்காகவும் சதா நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும். உண்மையில், நீங்கள் அஞ்ஞானிகளுக்காக நல்லாசிகளைக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், ஞானி ஆத்மாக்கள் எல்லோருக்காகவும் ஒவ்வொரு கணமும் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் இருக்க வேண்டும். உங்களின் பார்வை அவ்வாறு ஆகவேண்டும். உங்களின் மனோபாவம் அவ்வாறு ஆகவேண்டும். உங்களின் ஒவ்வொரு கண்ணிலும் ஒரு கண்மணி உள்ளது. அந்தக் கண்மணிகள் எப்போதாவது மறைந்து போகின்றனவா? உங்களின் கண்களில் இருந்து கண்மணிகள் மறைந்து போனால் நீங்கள் என்னவாகுவீர்கள்? உங்களால் பார்க்க முடியுமா? எனவே, உங்களின் கண்களில் கண்மணிகள் இருப்பதைப் போல், ஆத்மாவும் புள்ளியான தந்தையும் உங்களின் கண்களில் அமிழ்ந்துள்ளார்கள். பார்க்கின்ற புள்ளி (ஆத்மா) ஒருபோதும் மறையாததைப் போல், ஆத்மா மற்றும் தந்தையின் விழிப்புணர்வு என்ற புள்ளியும் உங்களின் மனோபாவத்தில் அல்லது பார்வையில் இருந்து மறைந்து போக அனுமதிக்காதீர்கள். நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும், அல்லவா? எனவே, தந்தைக்கு அவரின் பார்வையிலும் மனோபாவத்திலும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் மரியாதையும் மதிப்பும் இருப்பதைப் போல், உங்களின் பார்வையிலும் மனோபாவத்திலும் சுயமரியாதையும் மற்றவர்களுக்காக மரியாதையும் இருக்க வேண்டும். உங்களின் மனதில் உள்ள எண்ணங்கள் - இவர் மாற வேண்டும், அவர் அதைச் செய்யக்கூடாது, இவர் இப்படிப்பட்டவர் - கற்பித்தல்களைக் கொடுப்பதனால் அது நடக்கப் போவதில்லை. நீங்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதன் மூலமே அவர்கள் உங்களின் மனதில் உள்ள எண்ணங்களை - அவர் மாற வேண்டும் அல்லது இதை அல்லது அதைச் செய்ய வேண்டும் என்பவை - நிறைவேற்ற ஆரம்பிப்பார்கள். உங்களின் மனோபாவத்தின் மூலமே அவர்கள் மாறுவார்கள். உங்களின் வார்த்தைகள் மூலம் அல்ல. எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? சுய மரியாதையும் மற்றவர்களுக்கு மரியாதையும் - நீங்கள் இரண்டையும் நினைவு செய்வீர்கள்தானே? அல்லது, சுயமரியாதையை மட்டும் நினைவு செய்வீர்களா? மரியாதை கொடுப்பது என்றால் மரியாதையைப் பெற்றுக் கொள்வதாகும். மரியாதை கொடுப்பதென்றால் மரியாதைக்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுதல் என்று அர்த்தம். ஆத்ம உணர்வு அன்பின் அடையாளம், உங்களின் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் மற்றவர்களின் பலவீனங்களை மாற்றுவதே. கடைசிச் செய்திலும் பாப்தாதா கூறினார்: தற்சமயம், உங்களின் ரூபம் கருணை நிறைந்ததாக இருக்க வேண்டும். உங்களின் கடைசிப் பிறவியிலும், உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் பக்தர்களின் மீது கருணை நிறைந்தவர்களாக கருணை காட்டுகின்றன. உயிரற்ற விக்கிரகங்களே இவ்வளவு கருணை நிறைந்தவர்களாக இருக்கும்போது, உயிர்வாழும் ரூபங்கள் எப்படி இருக்க வேண்டும்? உயிர்வாழும் ரூபங்கள் கருணைச் சுரங்கங்களாக இருக்க வேண்டும். ஒரு கருணைச் சுரங்கம் ஆகுங்கள். யார் வந்தாலும் அவருக்கு கருணை காட்டுங்கள். இதுவே அன்பின் அடையாளம். நீங்கள் இதைச் செய்ய விரும்புகிறீர்கள்தானே? அல்லது, வெறுமனே கேட்டுக் கொண்டிருக்க மட்டும் விரும்புகிறீர்களா? நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் அப்படி ஆகவேண்டும்! எனவே, ‘பாப்தாதாவிற்கு என்ன வேண்டும்?’ என்ற கேள்விக்கு பாபா பதில் அளிக்கிறார். நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டீர்கள். அதனால் பாப்தாதா உங்களுக்குப் பதில் அளிக்கிறார்.

தற்சமயம், பாரதத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ சேவையில் மிக நல்ல விரிவாக்கம் காணப்படுகிறது. ஒரு விசேடமான பணியைச் செய்வதற்கு யாராவது ஒருவரைக் கருவி ஆக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். யாராவது ஒருவரை ஒத்துழைக்கச் செய்யுங்கள். இதுவரை எதையாவது செய்ய வேண்டும் என விரும்புபவரை, இப்போது உண்மையில் நடைமுறையில் அதைச் செய்து காட்டக்கூடியவரை ஒத்துழைக்கச் செய்யுங்கள். நீங்கள் பல நிகழ்ச்சிகளைச் செய்தீர்கள். நீங்கள் எங்கெங்கே நிகழ்ச்சிகளை நடத்தினீர்களோ, அந்த நிகழ்ச்சிகளை நடத்திய அனைவருக்கும் பாப்தாதா பாராட்டுக்களை வழங்குகிறார். இப்போது மேலும் அதிகமான புதுமையைக் காட்டுங்கள். அப்போது நீங்கள் செய்வதைப் போல், உங்களின் சார்பாக அவர்கள் தந்தையை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் வாயில் இருந்தும், இது இறை கல்வி என்பதும் வெளிப்பட வேண்டும். அவர்களின் இதயங்களில் இருந்து ‘பாபா, பாபா’ என்பது வெளிப்பட வேண்டும். அவர்கள் ஒத்துழைப்பவர்கள் ஆகுகிறார்கள். ஆனால், ‘இந்த ஒருவரே ஒரேயொருவர். இவரே அந்த ஒருவர், இவரே ஒருவர்....’ என்பது இன்னமும் எஞ்சியுள்ளது. இந்த ஒலி பரவ வேண்டும். பிரம்மாகுமாரிகள் மிக நல்ல பணியைச் செய்கிறார்கள். அவர்களால் இதைச் செய்ய முடியும். அவர்கள் இதைச் சொல்கின்ற அளவிற்கு வந்துள்ளார்கள். ஆனால், இப்போது ‘இவரே ஒரேயொருவர், இது இறை ஞானம்’ என அவர்கள் சொல்ல வேண்டும். தந்தையை வெளிப்படுத்த இருப்பவர்கள் இதைப் பயமில்லாமல் சொல்ல வேண்டும். கடவுளே இந்தப் பணியைச் செய்விக்கிறார், இது இறை பணி என நீங்கள் சொல்கிறீர்கள். எவ்வாறாயினும், எல்லோருமே அழைக்கின்ற, தந்தையாகிய இறைவனைத் தாங்களும் அறிவோம் என அவர்கள் இப்போது சொல்ல வேண்டும். இப்போது அவர்களுக்கு அந்த அனுபவத்தை வழங்குங்கள். ஒவ்வொரு கணமும் உங்களின் இதயங்களில் என்ன உள்ளது? ‘பாபா, பாபா, பாபா!’ இத்தகையதொரு குழு வெளிப்பட வேண்டும். இது நல்லது. உங்களால் இதைச் செய்ய முடியும். இதுவரை என்ன நடந்ததோ, அது நல்லதே. மாற்றம் நிகழ வேண்டும். எவ்வாறாயினும், ‘இவரே ஒருவர், இவரே அந்த ஒருவர், இவரே ஒருவர்’ என்பதே கடைசியான மாற்றம் ஆகும். பிராமணக் குடும்பம் நிலையான ஸ்திதியைக் கொண்டிருக்கும் போதே இது நிகழும். தற்சமயம், ஸ்திதி தொடர்ந்தும் மாறுகிறது. நிலையான ஸ்திதியே ஒரேயொருவரை வெளிப்படுத்தும். இது ஓகேயா? எனவே, இரட்டை வெளிநாட்டவர்களே, உதாரணம் ஆகுங்கள். மரியாதை கொடுப்பதுடன் உங்களின் சுய மரியாதையிலும் இருப்பதில் ஓர் உதாரணம் ஆகுங்கள். இதில் ஓர் இலக்கத்தைக் கோருங்கள். பற்றை வென்ற குடும்பத்தின் உதாரணத்தை அவர்கள் காட்டுகிறார்கள். அதில் தூதுவர்களும் வேலையாட்களும் ஏனைய அனைவரும் பற்றை வென்றவர்கள் ஆகினார்கள். அதேபோல், நீங்கள் யாராக இருந்தாலும் - அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஒவ்வொரு நாடும் - நிலையாக இருப்பதிலும் ஒரே வழிகாட்டலைப் பின்பற்றுவதில் ஒற்றுமையாகவும் உங்களின் சுயமரியாதையுடன் இருந்து மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதிலும் ஓர் இலக்கத்தைக் கோரிக் கொள்ளுங்கள். உங்களால் அதைப் பெற முடியும்தானே? அதைக் கோரிக் கொள்ளுங்கள். நீங்கள் ஓர் இலக்கத்தைப் பெற விரும்புகிறீர்களா?

தந்தையின் கண்களில் கலந்திருக்கும் எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் கண்ணின் ஒளிகளாக இருக்கும் குழந்தைகளுக்கும் நிலையான ஸ்திதியில் சதா ஸ்திரமாக இருக்கும் குழந்தைகளுக்கும் சதா பிரகாசிக்கின்ற பாக்கியத்தின் நட்சத்திரங்களாக இருக்கும் பாக்கியசாலிக் குழந்தைகளுக்கும் சதா சுயமரியாதையைக் கொண்டிருப்பதுடன் மற்றவர்களுக்காக அதேயளவு மரியாதையைக் கொடுப்பவர்களுக்கும் தமது முயற்சிகளின் வேகத்தைத் துரிதமாக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் ஆசீர்வாதங்களும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உண்மையான சகபாடியின் சகவாசத்தில் இருப்பதன் மூலம் அன்பானவர்களாகவும் பற்றில் இருந்து விடுபட்டவர்களாகவும் ஆகுவீர்களாக.

ஒவ்வொரு நாளும் அமிர்தவேளையில், பாப்தாதாவுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருக்கும் சந்தோஷத்தைக் கொண்டிருப்பதுடன் அதை மற்றவர்களுக்கும் தானம் செய்யுங்கள். சகல வகையான சந்தோஷத்திற்கான உரிமையைக் கொண்டிருப்பதுடன் மற்றவர்களுக்கும் இந்த உரிமையைக் கொடுங்கள். பௌதீகப் பணி எதையும் செய்யும்போதும் பௌதீக சகபாடிகளை நினைவு செய்யாதீர்கள். ஆனால் முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். ஏனென்றால் தந்தையே உங்களின் உண்மையான நண்பர் ஆவார். நீங்கள் உண்மையான சகபாடியின் சகவாசத்தை எடுக்கும்போது, இலகுவாக உங்களால் பற்றற்றவராகவும் எல்லோர் மீதும் அன்பானவராகவும் ஆகமுடியும். ஒவ்வொரு பணியிலும் ஒரேயொரு தந்தையை சகல உறவுமுறைகளிலும் நினைவு செய்பவர்கள், பற்றில் இருந்து இலகுவாக விடுபடுவார்கள். அவர்கள் எவர்மீதும் பற்று வைப்பதில்லை. எவருக்கும் அடிமையாகவும் ஆகுவதில்லை. எனவே, அவர்களை மாயையால் தோற்கடிக்க முடியாது.

சுலோகம்:
மாயையை இனங்கண்டு கொள்வதற்கு, திரிகாலதரிசியாகவும் திரிநேத்ரியாகவும் ஆகுங்கள். நீங்கள் வெற்றியாளர் ஆகுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

சத்தியத்தின் அடையாளம், நல்ல பண்புகளைக் கொண்டிருப்பதாகும். நீங்கள் உண்மையானவர்களாக இருந்து சத்தியத்தின் சக்தியைக் கொண்டிருந்தால், ஒருபோதும் நல்ல பண்புகளைக் கொண்டிருப்பதை நிறுத்த மாட்டீர்கள். நீங்கள் சத்தியத்தை நிரூபிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் இதை நல்ல பண்புகளுடன் செய்யுங்கள். உங்களின் நல்ல பண்புகளைக் கைவிட்டு, எதையாவது உண்மை என நிரூபிக்க முயற்சி செய்வதன் மூலம் உங்களால் அதை நிரூபிக்க முடியாது. நல்ல பண்புகள் இல்லாதிருப்பதன் அடையாளம், பிடிவாதம் ஆகும். நல்ல பண்புகளின் அடையாளம், பணிவாகும். சத்தியத்தை நிரூபிப்பவர்கள் சதா பணிவாக இருப்பதுடன் எப்போதும் எல்லோருடனும் நல்ல பண்புகளுடன் பழகுவார்கள்.