02.06.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள். உங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் பராமரிக்கின்ற பொழுதும் ஒரு தாமரை மலர் போன்று இருந்து நினைவு யாத்திரையில் நிலைத்து இருப்பதுடன் பிறரையும் அதனைச் செய்யத் தூண்டுங்கள்.
கேள்வி:
தந்தை எவ்வாறு குழந்தைகளான உங்களை அலங்கரிக்கின்றார்? நீங்கள் எந்த அலங்காரத்தைப் பயன்படுத்துவதை அவர் தடை செய்கிறார்?பதில்:
பாபா கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நான் உங்களை ஆன்மீகமாக அலங்கரிக்கவே வந்துள்ளேன். நீங்கள் என்றுமே பௌதீக ஒப்பனையைச் செய்யக்கூடாது. நீங்கள் யாசிப்பவர்கள் என்பதால் நவநாகரீகத்தைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கக் கூடாது. இந்த உலகம் மிகவும் தீயது என்பதால் உங்கள் சரீரங்களிற்கான எவ்வகையான நவநாகரீகங்களிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.பாடல்:
இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்து விட்டது.ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை இங்கே அமர்ந்திருந்து எல்லையற்ற குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். “எல்லையற்றது” என்றால் எந்த எல்லைகளுமே இல்லாதிருப்பது என அர்த்தமாகும். பல குழந்தைகள் உள்ளார்கள். பல்வேறு எண்ணற்ற குழந்தைகளுக்கு ‘படைப்பவர்’ என்று அழைக்கப்படுகின்ற ஒரேயொரு தந்தையே உள்ளார். ஏனையோர் எல்லைக்கு உட்பட்ட பௌதீகத் தந்தையர்கள். ஆனால் அவரோ எல்லையற்ற ஆத்மாக்களின் தந்தை ஆவார். பக்தி மார்க்கத்தில் ஆத்மாக்கள் அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள். அது பக்திமார்க்கம் என்றும் இராவண இராச்சியம் என்றும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ‘எங்களை இப்பொழுது இந்த இராவண இராச்சியத்தில் இருந்து இராம இராச்சியத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று மக்கள் அழைக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பாருங்கள், பாரதத்தின் அதிபதிகளாக இருந்த தேவர்கள் இப்பொழுது அவ்வாறில்லை. அவர்கள் யார் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். நாங்கள் சத்தியயுகத்து சூரிய வம்ச குலத்தின் அதிபதிகளாக இருந்தோம். அரசர்களும் அரசிகளும் இருந்தார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதனை இப்பொழுது நினைவுகூருகிறீர்கள். பாபா குழந்தைகளாகிய எங்களுக்கு எங்கள் ஆஸ்தியான இராச்சியப் பாக்கியத்தைக் கொடுப்பதற்கும் எங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கும் வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது அனைவரும் பக்தி மார்க்கத்தில் இருக்கின்றார்கள். பக்தி மார்க்கமே இராவண இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரேயொரு தந்தை மாத்திரமே குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞான மார்க்கத்தைக் கற்பிக்கின்றார். பக்தி மார்க்கத்தில் அனைவரும் அந்த எல்லையற்ற தந்தையை நினைவு செய்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்கான ஞான இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் அரைக் கல்பத்திற்கு அழைக்க மாட்டீர்கள். “ஓ இராமா! ஓ பிரபு!” என்று கூறுவதற்கு அவசியம் இருக்காது. மக்கள் சந்தோஷம் இல்லாமல் போகும் பொழுது “ஓ இராமா!” எனக் கூறுகின்றார்கள். அங்கு உங்களுக்கு எவ்விதத் துன்பமும் இருக்காது. இது உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாடகம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அரைக் கல்பத்திற்கு இந்த ஞானத்தின் பகலும் அரைக் கல்பத்திற்குப் பக்தியின் இரவும் இருக்கின்றன. பக்தி எங்களைக் கீழிறங்குமாறு செய்கின்றது. குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் நிச்சயமாக ஏணியைப் பற்றிய இந்த ஞானம் இருப்பது அவசியமாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது 84 பிறவிச் சக்கரம். இந்தச் சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்யும் அரசர்கள் ஆகுவீர்கள். இதனாலேயே பாபா இந்தப் படங்களைச் செய்வித்துள்ளார்; இந்தச் சக்கரத்தை அறிந்து கொள்வதனால் 21 பிறவிகளுக்கான இராச்சிய பாக்கியத்தை நாங்கள் எவ்வாறு கோருகின்றோம் என்பதை அவை காட்டுகின்றன. இப்பொழுது உங்களில் பலர் இருக்கின்றீர்கள். ஆன்மீகச் சக்தி சேனை இப்பொழுது மிகவும் பெரியதாக உள்ளது. நீங்கள் அனைவரும் வழிகாட்டிகள். பாபாவும் வழிகாட்டியே. அவர் வழிகாட்டி என்று அழைக்கப்படுகின்றார். “வழிகாட்டி” என்ற வார்த்தை ஒரு தூய வார்த்தையாகும். மற்றவர்களை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்பவர்களே வழிகாட்டிகள் ஆவார்கள். உல்லாசப் பயணிகள் சுற்றுலா செல்லும் பொழுது அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு ஒரு வழிகாட்டி நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அனைத்தையும் காட்டும்படி கூறப்படுகின்றார். தீர்த்த யாத்திரைகளிலும் நீங்கள் வழிகாட்டிகளைக் காணலாம். தந்தை கூறுகின்றார்: நீங்கள் பிறவிபிறவியாக தீர்த்தயாத்திரைகள் செய்திருக்கின்றீர்கள். நீங்கள் அமர்நாத்திற்கும் ஏனைய யாத்திரைத் தலங்களுக்கும் செல்கின்றீர்கள். நீங்கள் எங்கும் செல்கின்றீர்கள். அந்த இடத்திற்குச் செல்லும் பொழுது நீங்கள் அதனை மட்டுமே நினைவு செய்கின்றீர்கள். அப்போது உங்கள் இதயம் உங்கள் வீடுகள், வியாபாரம் போன்றவற்றில் இருந்து திசைதிருப்பப்பட்டே இருக்கும். இங்கே தொடர்ந்தும் உங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு உங்கள் வியாபாரத்தையும் மேற்கொள்வதுடன் மறைமுகமான யாத்திரையிலும் நிலைத்து இருக்குமாறே உங்களுக்குக் கூறப்படுகின்றது. இது மிகவும் நல்லது! நீங்கள் விரும்பிய அளவிற்குப் பெரியதொரு வியாபாரத்தையும் மேற்கொள்ளலாம். இதைச் செய்வதற்கு எவருக்கும் தடை விதிக்கப்படவில்லை. நீங்கள் உங்கள் இராச்சியத்தையும் பராமரித்துக் கொள்ளலாம். ஜனக மன்னனும் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியை அடைந்தார். லௌகீக தீர்த்தயாத்திரைகளில் அலைந்து திரிய வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. உங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் நீங்கள் முழுமையாகப் பராமரிக்க வேண்டும். வீட்டில் தமது குடும்பங்களுடன் வாழும் பொழுதும் ஒரு தாமரை மலர் போல வாழ வேண்டும் என்பதை மிக நல்ல, விவேகமான குழந்தைகள் புரிந்து கொள்கின்றார்கள். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது நீங்கள் சலிப்படையக் கூடாது. குமார்களும் குமாரிகளும் சந்நியாசிகளைப் போன்றவர்கள்; அவர்களுக்கு விகாரங்கள் இல்லை; அவர்கள் ஐந்து விகாரங்களில் இருந்து விலகி உள்ளார்கள். உங்களுடைய அலங்காரம் (ஒப்பனை) அவர்களுடையதில் இருந்து வேறுபட்டது என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். அவர்களுடையது தமோபிரதான் ஒப்பனை, ஆனால் உங்களுடையதோ சதோபிரதான் ஒப்பனை ஆகும். அதன் மூலம் நீங்கள் சதோபிரதான் சூரிய வம்ச இராச்சியத்திற்குச் செல்வீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: எந்தவித தமோபிரதான் லௌகீக நாகரீகத்தையும் பின்பற்றாதீர்கள். இந்த உலகம் மிகவும் தீயதாகும். வீட்டில் வாழும்பொழுது நவநாகரீகமாக இருக்காதீர்கள். நவநாகரீகம் மற்றவர்களைக் கவர்கின்றது. இந்த நேரத்தில் அழகு நல்லதல்ல. அதனை விடவும் நீங்கள் அவலட்சணமாக இருப்பது மேலானது. ஏனெனில் குறைந்தபட்சம் பிறர் உங்களைச் சிக்க வைக்க முயற்சிசெய்ய மாட்டார்கள். மக்கள் அழகானவர்களைத் துரத்திச் செல்கின்றார்கள். ஸ்ரீகிருஷ்ணரையும் அவர்கள் அவலட்சணமாகவே காட்டி உள்ளார்கள். நீங்கள் சிவபாபாவின் மூலம் அழகானவர்கள் ஆகவேண்டும். அம்மக்களோ பவுடர் போன்றவற்றை இட்டு அழகானவர்கள் ஆகுகின்றனர். அதிகளவு நவநாகரீகம் உள்ளது, கேட்கவும் வேண்டாம்! செல்வந்தர்கள் முற்றாகவே முடிவடைந்து விட்டார்கள்! ஏழைகள் நல்லவர்கள். கிராமங்களிற்குச் சென்று ஏழைகளிற்கு நன்மை செய்யுங்கள். எவ்வாறாயினும் ஓசையைப் பரவச் செய்யக்கூடிய பிரபல்யமானவர்களும் தேவைப்படுகின்றனர். நீங்கள் அனைவரும் ஏழைகள். உங்களில் எவராவது செல்வந்தரா? எவ்வாறு நீங்கள் இங்கு ஒரு சாதாரணமான முறையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்று பாருங்கள்! பம்பாயில் எந்தளவிற்கு நாகரீகம் உள்ளது என்று பாருங்கள்! பாபாவை சந்திக்க வரும் சிலருக்கு நான் கூறுகிறேன்: நீங்கள் பௌதீகமாக ஒப்பனை செய்திருக்கின்றீர்கள். இப்பொழுது வாருங்கள், 21 பிறவிகளுக்கு நீங்கள் சுவர்க்கத்தின் தேவதை ஆகக்கூடிய இந்த ஞான ஒப்பனையை நான் உங்களுக்கு இடுவேன். நீங்கள் சதா சந்தோஷமானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் ஒருபொழுதும் அழவோ அல்லது எந்தவிதத் துன்பத்தையும் அனுபவிக்கவோ மாட்டீர்கள். இப்பொழுது அந்தப் பௌதீக ஒப்பனையைச் செய்வதை நிறுத்துங்கள். நான் உங்களுக்கு அத்தகைய முதற்தரமான இந்த ஞான இரத்தினங்களால் ஆன ஒப்பனையைச் செய்வேன், கேட்கவும் வேண்டாம்! நீங்கள் எனது வழிகாட்டல்களைப் பின்பற்றினால் நான் உங்களை அரசிகள் ஆக்குவேன். இது நல்லது. பாரத மக்களாகிய உங்கள் அனைவரையும் நான் இந்த தமோபிரதானான நரகமான அசுர உலகிலிருந்து அழைத்துச் சென்று உங்களைச் சுவர்க்கத்தின் சக்கரவர்த்தினிகள் ஆக்குவேன். இன்று நீங்கள் வெண்ணிற ஆடை அணிந்திருக்கின்றீர்கள், உங்கள் அடுத்த பிறவியில் நீங்கள் தங்கக் கரண்டியைப் பயன்படுத்தி பால் அருந்தியவாறு சுவர்க்கத்தில் இருப்பீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் புரிந்து கொள்கின்றீர்கள். இந்த உலகம் மிகவும் அழுக்கானது. சுவர்க்கம் என்றால் சுவர்க்கமே, கேட்கவும் வேண்டாம்! இங்கு நீங்கள் யாசிப்பவர்கள். பாரதமும் யாசிக்கும் நாடாக உள்ளது. நீங்கள் யாசிப்பவரில் இருந்து இளவரசர்களாக மாறுகின்றீர்கள் என்பது நினைவு கூரப்படுகின்றது. நீங்கள் அதன்பின்னர் அதே பாரதத்தில் மீண்டும் பிறப்பெடுப்பீர்கள். தந்தை எம்மைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்கினார். இதில் பகலிற்கும் இரவிற்குமான வேறுபாடு உள்ளது! உண்பதற்குக் கூட எதுவும் இல்லாத மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கே தானங்கள் வழங்கப்படுகின்றன. பாரதம் மிகவும் ஏழ்மையானது. இந்த நேரத்தில் அனைவருமே தமோபிரதானாக உள்ளார்கள் என்பதை அப்பாவி மக்கள் அறியாமல் உள்ளார்கள். நாளுக்கு நாள் அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழே இறங்குகின்றார்கள். இந்நேரத்தில் எவராலும் ஏணியில் ஏற முடியாது. அவர்கள் தொடர்ந்தும் கீழே இறங்குகின்றார்கள்: பதினாறு சுவர்க்கக் கலைகளில் இருந்து பதினான்கு முதல் பன்னிரண்டு சுவர்க்கக் கலைகளாகக் குறைவடைகின்றன. இலக்ஷ்மியும் நாராயணனும் முதலில் பதினாறு சுவர்க்க கலைகள் நிறைந்தவர்களாக இருந்தார்கள். அதன்பின் அவர்கள் கீழிறங்கி பதினான்கு சுவர்க்க கலைகள் உடையவர்கள் ஆகினார்கள். ஏணியில் கீழிறங்கி வரும்பொழுது அனைவரும் முற்றிலும் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள் என்பதை நன்றாக நினைவு செய்யுங்கள். அதன்பின்னர் யார் உங்களை மீண்டும் ஒருமுறை சுவர்க்க அதிபதிகள் ஆக்க முடியும்? உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன. அனைவரும் இதனைப் பற்றிப் பேசுகின்றார்கள், ஆனால் எந்த வரலாறு மீண்டும் நடைபெறுகின்றது என அவர்களுக்குத் தெரியாது. சமயநூல்களில் சத்தியயுகத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் அல்லது மில்லியன் கணக்கான வருடங்கள் என்று அவர்கள் எழுதியுள்ளார்கள். எப்பொழுது சத்தியயுகம் வரும் என அவர்களிடம் வினவினால் அதற்கு இன்னமும் 40000 வருடங்கள் செல்ல வேண்டும் என அவர்கள் பதில் அளிப்பார்கள். சக்கரத்தின் காலஎல்லை 5000 வருடங்களே என அவர்களுக்கு நீங்கள் நிரூபிக்க முடியும். சத்தியயுகம் மாத்திரமே நூறாயிரக்கணக்கான வருடங்களைக் கொண்டது என அவர்கள் கூறுகின்றார்கள். காரிருள் நிலவுகின்றது. ஆகையால் கடவுள் வந்துள்ளார் என்பதை அவர்கள் எவ்வாறு நம்புவார்கள்? கலியுகத்தின் இறுதியில் கடவுள் வருவார் என அவர்கள் நம்புகின்றார்கள். இவ் விடயங்கள் அனைத்தையும் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். விநாசம் உங்கள் முன்னால் உள்ளது. விநாசம் இடம்பெறுவதற்கு முன்னர் உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து நீங்கள் கோரிக்கொள்ள வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அனைவரும் கும்பகர்ண உறக்கத்தில் உறங்குகின்றார்கள். எனவே அப்பாவி மக்கள் விரக்தியில் மரணிக்க நீங்களோ வெற்றிக் களிப்பில் இருப்பீர்கள். விநாச காலத்தின் பொழுது விரக்திக் கூக்குரல்கள் ஒலிக்கும். புத்தியில் அன்பற்றவர்களே விரக்தியில் அழுவார்கள். நீங்கள் இப்பொழுது சத்தியமான ஒரேயொருவரின் உண்மையான குழந்தைகள். நரகத்தின் விநாசம் நடைபெறாமல் எவ்வாறு சுவர்க்கம் உருவாக்கப்படும்? இதுவே மகா பாரத யுத்தம் என நீங்கள் கூறுகின்றீர்கள். இதன் மூலம் சுவர்க்க வாயில்கள் திறக்கப்படவுள்ளன. மக்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. தேவ இராச்சியம் எனும் வெண்ணெயை நீங்கள் இப்பொழுது பெறுகின்றீர்கள் என்பது உங்கள் புத்திகளில் இருக்கின்றது. அவர்கள் தொடர்ந்தும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். அவர்களும் மனிதர்கள், நீங்களும் மனிதர்களே. ஆனால் அவர்கள் அசுர சமுதாயத்திற்கு உரியவர்கள். நீங்களோ தேவ சமுதாயத்திற்கு உரியவர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நேரடியாக விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய உங்களின் உள்ளார சந்தோஷம் உள்ளது. இத்தகைய ஓர் இராச்சியத்தை இப்பொழுது நீங்கள் கோருவது போன்று எண்ணற்ற தடவைகள் கோரியுள்ளீர்கள். இரு பூனைகள் தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன, நீங்கள் முழு உலக இராச்சியம் எனும் வெண்ணெயைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இங்கு உலக அதிபதிகள் ஆகுவதற்கே வருகின்றீர்கள். பாபாவுடன் யோகம் செய்வதனால் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள், நாங்களோ நிச்சயமாகச் சுவர்க்க இராச்சியத்தைக் கோருவோம். இது பொதுவான ஒன்றாகும். பௌதீகச் சக்தியைக் கொண்டவர்களால் சுவர்க்க இராச்சியத்தைக் கோர முடியாது. நீங்கள் யோகசக்தி மூலம் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். உங்கள் பரம தேவதர்மம் அகிம்சைக்கு உரியது. அங்கு எவ்விதமான வன்முறையும் இருக்காது. அதன் ஆரம்பத்தில் இருந்து அதன் மத்தியினூடாக அதன் இறுதிவரை துன்பத்தை விளைவிக்கின்ற காமவாள் எனும் வன்முறையே அனைத்திலும் தீங்கானதாகும். இராவண இராச்சியம் எப்பொழுது இருக்கின்றது என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அழைக்கின்றார்கள்: “இப்பொழுது வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!” எனவே நாங்கள் நிச்சயமாக ஏதோவொரு காலத்தில் தூய்மையாக இருந்தோம். பாரதவாசிகளான குழுந்தைகள் அழைக்கின்றார்கள்: எங்களைத் துன்பத்தில் இருந்து விடுதலையாக்கி அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்! எங்கள் துன்பத்தை நீக்கி எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள். ஹரி எனவும் ஸ்ரீகிருஷ்ணர் அழைக்கப்படுகின்றார். பாபா, எங்களை ஹரியின் வாயிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். “ஹரியின் வாயில்” என்பது கிருஷ்ணரின் பூமியாகும். இது அசுரர்களின் பூமியாகும். நாங்கள் இந்தக் கம்சனின் பூமியை விரும்பவில்லை. மாயையைப் பற்றிய ஒரு நாடகமும் உள்ளது. துவாபர யுகத்திலிருந்து இராவண இராச்சியம் ஆரம்பிப்பதை நீங்கள் அறிவீர்கள். தூய்மையாக இருந்த தேவர்கள் தூய்மை அற்றவர்களாக ஆரம்பித்தார்கள். ஜெகந்நாத் புரியில் இதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த உலகில் மிகவும் அழுக்கானது. நீங்கள் அவ்விடயங்கள் அனைத்திலும் இருந்தும் வெளியேறி தேவதைகளின் பூமிக்குச் செல்கின்றீர்கள். இதற்குப் பெருமளவு தைரியமும் துணிவும் தேவைப்படுகின்றன. பாபாவிற்கு உரியவர்கள் ஆகியபின்னர் நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகக்கூடாது. கணவனும் மனைவியும் ஒன்றாக வாழும் பொழுது அங்கு ஒரு நெருப்பு இல்லாமல் இருப்பது அசாத்தியம் என அவர்கள் எண்ணுகின்றார்கள். இதனாலேயே நாங்கள் இங்கு அனைவரையும் சகோதர, சகோதரிகள் ஆக்குகின்றோம் என்றும் இது எங்கும் எழுதப்படவில்லை என்றும் கூறி அவர்கள் குழப்பத்தினை விளைவிக்கின்றார்கள். இங்கு நாங்கள் என்ன வகையான மாய வித்தையைக் கொண்டிருக்கின்றோம் என்று அவர்கள் அதிசயப்படுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: நீங்கள் பிரம்மாகுமாரிகளிடம் சென்றால் அவர்கள் அங்கேயே உங்களை வைத்துக் கொள்வார்கள். அவர்கள் தொடர்ந்தும் மற்றவர்களைக் குழப்பம் அடையச் செய்கின்றார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தங்கள் பாகங்களில் அதனைக் கொண்டிருப்பவர்கள் எது நடைபெற்றாலும் வருவார்கள். இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. சிவபாபாவே ஞானக்கடலும் தூய்மையாக்குபவரும் அனைவருக்கும் சற்கதியை அளிப்பவரும் ஆவார். பிரம்மாவின் மூலம் அவர் உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். இந்த வார்த்தைகள் எவரும் வாசிக்கத் தக்கதாக பெரிய எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். அவர்கள் தூய்மையின் காரணமாகப் பல்வேறு தடைகளை விளைவிக்கின்றார்கள். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே எந்தச் சரீரதாரியுடனும் பற்றின் இழைகள் எதுவும் இருக்கக்கூடாது. பற்றின் இழைகள் ஏதாவது இருக்குமாயின் நீங்கள் அங்கு சிக்கிக் கொள்கின்றீர்கள். இங்கு உங்கள் தாய் மரணிக்கும் பொழுதும் கூட நீங்கள் அல்வா உண்கின்றீர்கள். பாபா உங்களைத் தன் முன்னால் அமர வைத்து உங்களிடம் வினவுகின்றார்: நாளை உங்கள் உறவினர் ஒருவர் மரணித்தால் நீங்கள் அழுவீர்களா? நீங்கள் கண்ணீர் சிந்தினால் தோல்வி அடைந்து விடுவீர்கள். அந்த நபர் ஒரு சரீரத்தை விடுத்து இன்னொன்றை எடுத்திருப்பார். எனவே அதில் அழுவதற்கு என்ன இருக்கின்றது? இதனைக் கேட்கின்ற ஏனைய அனைவரும் கூறக்கூடும்: நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? குறைந்தபட்சம் ஏதாவது நல்லதைக் கூறுங்கள்! ஓ! ஆனால் நாங்கள் நல்ல விடயங்களையே கூறுகின்றோம். சத்தியயுகத்தில் எந்தவித அழுகையும் கிடையாது, உங்களுடைய இந்த வாழ்க்கை அதனைவிட மிகவும் மேன்மையானது. நீங்களே அனைவரையும் அழுவதிலிருந்து காப்பாற்றுபவர்கள். எனவே நீங்களே எவ்வாறு அழ முடியும்? நாங்கள் எங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற கணவர்களுக்கு எல்லாம் கணவரை கண்டுவிட்டோம். ஆகவே பின்னர் நாங்கள் ஏன் எங்களை நரகத்தினுள் விழ வைப்பவர்களுக்காக அழ வேண்டும்? நாங்கள் எங்களுடைய ஆஸ்தியைக் கோரிக் கொள்வதற்காக பாபா எங்களுக்கு இத்தகைய இனிமையான விடயங்களைக் கூறுகின்றார். இவ்வேளையில் பாரதத்தில் பெரும் இழப்பு உள்ளது. தந்தை வந்து அதற்கு நன்மை அளிக்கின்றார். பாரதம் மிகவும் சீரழிந்த தேசம் எனவும் அழைக்கப்படுகின்றது. சிந்தியில் இருப்பவர்களைப் போன்று நாகரீகமானவர்கள் எவரும் இல்லை; அவர்கள் வெளிநாட்டிலிருந்து நாகரீகத்தைக் கற்கின்றார்கள். பெண்கள் சிகை அலங்காரத்திற்காக அதிகளவு செலவழிக்கின்றார்கள்! அவர்கள் நரகத்தின் தேவதைகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். தந்தை உங்களைச் சுவர்க்கத் தேவதைகள் ஆக்குகின்றார். அவர்கள் கூறுகின்றார்கள்: எங்களுக்கு இங்கு இதுவே சுவர்க்கம். குறைந்தபட்சம் இந்தச் சந்தோஷத்தையாவது நாங்கள் அனுபவிப்போம்! நாளை என்ன நடைபெறப் போகின்றது என்றே எங்களுக்குத் தெரியாது! பலர் இங்கு இத்தகைய அபிப்பிராயங்களுடன் வருகின்றார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் உண்மையான ஆன்மீக வழிகாட்டியாகி அனைவருக்கும் வீட்டிற்கான பாதையைக் காட்டுங்கள். உங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்திற்கான தொழிலை மேற்கொள்ளும் பொழுதும் நினைவு யாத்திரையில் இருங்கள். தொழிலைச் செய்வதையிட்டும் தொடர்புகளைக் கொண்டிருப்பதை இட்டும் களைப்பு அடையாதீர்கள்.2. இந்த ஞானத்தினால் உங்களை அலங்கரித்து உங்களை ஒரு சுவர்க்கத் தேவதை ஆக்குங்கள். இந்தத் தமோபிரதான் உலகில் பௌதீக ஒப்பனையைச் செய்யாதீர்கள். கலியுகத்தின் நவநாகரீகத்தைப் பின்பற்றுவதைத் துறந்திடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு குழந்தையாகவும் அதிபதியாகவும் இருப்பதன் சமநிலையைப் பேணிய வண்ணம் ஒரு யுக்தியுக்தான முறையில் செயல்பட்டு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.எவ்வளவிற்கு இயலுமோ அந்தளவிற்கு சேவை செய்வதில் ஒரு குழந்தை ஆகுங்கள். உங்களின் ஸ்திதியில் முயற்சி செய்வதற்கு ஓர் அதிபதி ஆகுங்கள். தொடர்புகளை ஏற்படுத்தும்போதும் சேவை செய்யும்போதும் ஒரு குழந்தை ஆகுங்கள். நினைவு யாத்திரையின் போதும் இந்த ஞானத்தைக் கடையும் போதும் ஓர் அதிபதி ஆகுங்கள். உங்களின் சகபாடிகளுடனும் ஒன்றுகூடலிலும் ஒரு குழந்தை ஆகுங்கள், ஒரு தனிநபராக அதிபதி ஆகுங்கள். இந்தச் சமநிலையைப் பேணியவண்ணம் செயல்படுவதே ஒரு யுக்தியுக்தான முறையில் செயல்படுவதாகும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களால் இலகுவாக ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெற முடியும். உங்களின் ஸ்திதியும் நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்கும். அத்துடன் நீங்கள் இலகுவாக அனைவராலும் நேசிக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
உங்களின் சிந்தனையும் செயலும் சமமாக இருக்கும்போது நீங்கள் அகசக்தி கொண்ட ஒரு சக்திசாலி ஆத்மா எனப்படுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
முகமலர்ச்சியுடன் இருக்கும் நற்குணம் உங்களின் முயற்சிகளில் அதிகளவில் உங்களுக்கு உதவ முடியும். உங்களின் முகம் மலர்ச்சியாக இருப்பதைப் போன்றே ஆத்மாவாகிய நீங்களும் மலர்ச்சியாக இருக்க வேண்டும். இந்த இயல்பான நற்குணம் ஆத்மாவில் தாரணை செய்யப்பட வேண்டும். நீங்கள் சதா மலர்ச்சியாக இருந்தால் மாயையின் எந்தவிதமான கவர்ச்சியும் உங்களைக் கவராது. இது தந்தையின் உத்தரவாதம் ஆகும். எவ்வாறாயினும் சதா மலர்ச்சியாக இருப்பதற்கு உங்களின் ஆன்மீக கௌரவத்தைப் பேணுங்கள், சகித்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு பற்றற்ற பார்வையாளராக மாயையின் விளையாட்டுக்களை அவதானியுங்கள்.