02.08.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    17.02.2011     Om Shanti     Madhuban


ஆத்மாக்களுக்கு ஒரு துளியையேனும் வழங்குவதற்காக உங்களின் மனதால் சேவை செய்யுங்கள். நீண்ட காலத்திற்கு தீவிர முயற்சியைச் செய்து, என்றும் தயாராக இருங்கள். அப்போது நீங்கள் வெற்றி மாலையின் மணி ஆகுவீர்கள்.


இன்று, அன்புக்கடலான தந்தை, தனது அன்பான குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். ‘எனது பாபா, வாருங்கள்!’ என்று குழந்தைகள் நினைவு செய்தார்கள். எனவே தந்தையும் கூறுகிறார்: எனது அன்பான குழந்தைகளே! அன்பானது எத்தகைய கவர்ச்சியைக் கொண்டிருக்கிறது என்றால், ஒவ்வொரு குழந்தையும் தந்தையைத் தனக்குச் சொந்தம் ஆக்கியுள்ளார். தந்தையும் ஒவ்வொரு குழந்தைக்கும், எனது குழந்தையே! எனக் கூறி, ஒவ்வொரு குழந்தையையும் தனக்குள் அமிழ்த்தி உள்ளார். இது ஓர் அற்புதமே! ‘எனது பாபா’ என்று குழந்தைகள் கூறியுள்ளார்கள். ‘எனது’ என்ற வார்த்தை மிகுந்த அன்பால் நிரம்பியுள்ளது, அதனால் தந்தையும் ‘எனது குழந்தைகளே’ என்று கூறினார். அன்பு எப்படிப்பட்டது என்றால் அது உங்களை நீங்கள் எவ்வாறு இருந்தீர்களோ அதில் இருந்து முற்றிலும் மாற்றுகிறது. அன்பு அலைகள் ஒவ்வொரு குழந்தையின் நெற்றியில் இருந்து பாய்கின்றன. இதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அன்பு என்பது ஒருவரின் இதயத்தை உங்களுக்குச் சொந்தம் ஆக்குகின்ற வழிமுறை ஆகும். ஒவ்வொரு குழந்தையிடம் இருந்தும் அன்பு அலைகள் மட்டுமே பாய்வதைப் பார்த்து பாப்தாதா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.

‘ஓ எமது மூதாதையர்களே, குறுகிய காலத்திற்கேனும் எமக்கு அமைதியை வழங்குங்கள், ஒரு துளி சந்தோஷத்தை வழங்குங்கள்’ என்று உங்களை நினைவு செய்து அழைக்கின்ற, உங்களின் பக்தர்களையும் சந்தோஷமற்ற, அமைதியற்ற ஆத்மாக்களையும் காப்பாற்றுவதற்காக பாப்தாதா இப்போது ஐந்து நிமிட அப்பியாசத்தைச் செய்யப் போகிறார். உங்களின் மனங்களின் சக்தியால் இங்கே இருந்தவண்ணம் அந்த ஆத்மாக்களை வெளிப்படச் செய்யுங்கள். ‘எங்களைக் காப்பாற்றுங்கள்! எங்களைக் காப்பாற்றுங்கள்!’ என்று அவர்கள் அழைப்பது உங்களுக்குக் கேட்கிறதா? உங்களின் மனதின் சக்தியால் சந்தோஷம் மற்றும் அமைதிக்கதிர்கள் அத்தகைய ஆத்மாக்களை அடையச் செய்யுங்கள். இந்த முறையில் உங்களின் மனதால் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சேவை செய்யுங்கள். ஏனென்றால், தந்தையுடன் கூடவே, குழந்தைகளான நீங்களும் உலகச் சேவையாளர்கள் ஆவீர்கள். நாள் முழுவதும் வார்த்தைகளால் சேவை செய்வதற்கு நீங்கள் கருவிகள் ஆகுவதைப் போல், அவ்வப்போது, தொடர்ந்து உங்களின் மனங்களால் சேவை செய்வதைப் பயிற்சி செய்யுங்கள். இதில் உங்களுக்கு நன்மையும் உள்ளது. ஏனென்றால், உங்களின் மனங்கள் சதா இந்தச் சேவை செய்வதில் மும்முரமாக இருந்தால், இடையில் மாயை உருவாக்கும் பயனற்ற, வீணான எண்ணங்களில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று பாப்தாதா இப்போது உங்களைக் கேட்டால், நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்? நீங்கள் முயற்சி செய்கிறீர்கள், ஆனால் சிலவேளைகளில் மட்டும்...... எனவே, நீங்கள் எல்லா வேளையிலும் முயற்சி செய்வதில்லை. பாப்தாதா இப்போது குழந்தைகளான உங்கள் அனைவரின் பதிவேடுகளிலும் ‘சிலவேளை’ என்ற வார்த்தை இல்லாமல் போக வேண்டும் என்றே விரும்புகிறார். ‘சிலவேளை’ என்ற வார்த்தையை முடிக்க முடியுமா? நேரம் வரும்போது நீங்கள் தயாராக இருப்பீர்களா? ‘அது நடக்கிறது’ அல்லது ‘அது நிச்சயமாக நடக்கவே வேண்டும்’ என்பதற்குப் பதிலாக, உங்களால் என்றும் தயாராக முடியுமா? ஏன்? நீங்கள் மாயையை வென்றவர், உங்களின் மனதை வென்றவர், உலகை வென்றவர் என்ற சம்ஸ்காரத்தை நீண்ட காலத்திற்குரிய பயிற்சியாக ஆக்கினால், இந்த நீண்ட காலத்திற்குரிய பயிற்சி இறுதிக்கணங்களில் உங்களை வெற்றியாளர் ஆக்குவதுடன் விசேடமான மாலையின் மணியாகவும் உங்களை ஆக்கும். அப்போது நீங்கள் திறமைச் சித்தி அடைவீர்கள். வெறுமனே சித்தி அல்ல, ஆனால் திறமைச்சித்தி. எனவே கூறுங்கள்! உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? நீங்கள் திறமைச்சித்தி அடைய விரும்புகிறீர்கள், அல்லவா? நீங்களே துவாபர யுகத்தில் இருந்து இன்றுவரை வழிபடுபவர்கள் ஆகியவர்கள். அதாவது, நீங்கள் மாலையின் மணிகள் ஆகுகிறீர்கள். உங்களை மாலையின் மணி ஆக்குவதற்கான தூய எண்ணம் உங்களுக்கு இருக்கிறதல்லவா?

தினமும் அமிர்த வேளையில், பாப்தாதா தனது மாலையின் மணிகளைப் பார்த்து அவர்களுடன் விசேடமாகக் கொண்டாடுகிறார். நீங்கள் அனைவரும் உங்களை மாலையின் மணிகளாகப் புரிந்து கொள்கிறீர்களா? 16000 என்ற இன்னொரு மாலையும் உள்ளது. ஆனால் அது இரண்டாவது மாலை ஆகும். புகழ்வதற்கும் பூஜிப்பதற்கும் தகுதிவாய்ந்த விசேடமான மாலையே முதல் மாலை ஆகும். இன்று, பாப்தாதா அந்த மணிகளைப் பார்த்தார். ஏனென்றால், பிரம்மாபாபாவுடன் கூடவே, அவர்களே விசேடமாக இராச்சிய உரிமையைப் பெற்றுக் கொள்வார்கள். இன்று, தந்தை பிரம்மா தற்சமயம் தீவிர முயற்சி செய்யும் தனது குழந்தைகளைப் பார்த்தார். ஆமாம், எதிர்கால இராச்சிய சிம்மாசனத்தில் இரண்டு பேர் மட்டுமே அமர்வார்கள். எனினும் முதல் மாலையில் வருபவர்கள் இராச்சியத்தில் அவர்களின் சகபாடிகள் ஆவார்கள். நீங்கள் உங்களையே சோதித்துப் பார்த்தீர்களா? நீங்கள் பாப்தாதாவுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்கள். ஏனென்றால், இது இப்போது உங்கள் அனைவருக்கும் திரும்பிச் செல்லும் பயணம் ஆகும். நீங்கள் எப்படியும் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதனால், நீங்கள் தனியே செல்லாமல் தந்தையுடனேயே திரும்பிச் செல்வீர்கள். எனவே, யார் நெருக்கமான மணிகளாக இருந்து, தந்தையுடன் வீடு திரும்பிச் செல்வீர்கள்? நீண்ட காலத்திற்கு தீவிர முயற்சியாளர்களாக இருப்பவர்களே. வெறுமனே முயற்சியாளர்கள் அல்ல, சிலவேளைகளில் மட்டும் சிலதைச் செய்பவர்கள் அல்ல. நீண்ட காலத்திற்குத் தந்தைக்குச் சமமாக இருப்பவர்கள் மட்டுமே இராச்சிய உரிமையைக் கோரிக் கொள்வார்கள். எனவே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் தீவிர முயற்சியைச் செய்கிறீர்களா? முயற்சியாளர்களின் வரிசையில் தாம் இருக்கிறோம் என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். தீவிர முயற்சியாளர்கள், உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! நீங்கள் உங்களின் கைகளை மிகவும் தாழ்வாகவே உயர்த்துகிறீர்கள். அச்சா, உங்களில் பலர் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். மீண்டும் ஒருமுறை உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! இவ்வாறு அல்ல (கைகளைக் குறைவாக உயர்த்துதல்). அச்சா.

பாப்தாதா குழந்தைகளின் அட்டவணைகளை ஒவ்வொரு நாளும் பார்க்கிறார். பெரும்பாலானோர் தீவிர முயற்சியாளர்கள். ஆனால், அவர்களும் அதற்கு சிலவேளை என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்கிறார்கள். எவ்வாறாயினும், தந்தை என்ன கூறுகிறார்? தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள்! உங்களின் சூட்சும எண்ணங்களிலேனும் எந்தவிதமான குழப்பமும் இருக்கக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக நீண்ட காலத்திற்கு ஆட்ட, அசைக்க முடியாதவராகவும் தூய எண்ணங்களைக் கொண்டவராகவும் ஆகவேண்டும். சில குழந்தைகள் மிகவும் இனிமையாக இதயபூர்வமாக உரையாடுகிறார்கள். ‘பாபா, நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால், காலம் நெருங்கி வரும்போது, அதிகமான குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும். எனவே இயல்பாகவே விருப்பமின்மை இருக்கும்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அப்போது யார் உங்களின் ஆசிரியர்? நேரமா அல்லது தந்தையா? நேரம் உங்களின் படைப்பு ஆகும். நீண்ட காலப்பகுதிக்கு தீவிர முயற்சியானது உங்களை இறுதியில் திறமைச்சித்தி அடைய வைக்கும் என்று தந்தை இப்போது உங்களுக்கு சமிக்கை செய்கிறார். அனைவரும் சித்தி அடைவார்கள். ஆனால் திறமைச்சித்தி அடைவதற்கு, நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக தீவிர முயற்சி செய்ய வேண்டியது அவசியம். ஆகவே, இன்றைய திகதியைக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போதும் ‘சிலவேளை’ அல்லது ‘சிலது’, ‘அது நடக்கும், நாங்கள் அதைச் செய்வோம்’ என்றிருந்தால், நீங்கள் தொடர்ந்து முன்னேறும்போது இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. தந்தையின் அன்பு எப்போதும் உள்ளது. அவருக்குக் கடைசி மணியிலும் அன்பு உள்ளது. ஏன்? அவர்கள் தமது இதயபூர்வமாக ‘எனது பாபா’ எனக் கூறியுள்ளார்கள். இன்றுள்ள மகாத்மாக்கள்கூட ‘எனது பாபா’ என்று சொல்லவில்லை. ஆனால், குறைந்தபட்சம் அவர்கள் ‘எனது பாபா’ என்று நம்புகிறார்கள். எனவே, தந்தை அவர்களின் மீதும் அன்பு வைத்துள்ளார். தந்தை சதா குழந்தைகளின் மீது அன்பு வைத்துள்ளார் - இறுதிக்கணம் வரையும் கடைசியாக இருப்பவரையும் நேசிக்கிறார். அன்பே உங்களைத் தந்தைக்குச் சொந்தமாக ஆக்குகிறது. உங்களில் பெரும்பாலானோருக்கு பாப்தாதாவின் மீது அன்பு உள்ளது, அது இருக்கும் என்று பாப்தாதாவும் கூறியுள்ளார். ஆனால், உங்களுக்கு அன்பு மட்டும் தேவையாக இல்லை, ஆனால் உங்களுக்கு சக்தியும் தேவை. அத்துடன் நீங்கள் தீவிர முயற்சியும் செய்ய வேண்டும்.

பாப்தாதாவிற்குக் குழந்தைகளான உங்களின் மீது நம்பிக்கை உள்ளது. இதனாலேயே, அவர் குழந்தைகளான உங்களுக்கு பலகோடி மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா!’ நீங்கள் தைரியசாலிகள். உங்களின் தைரியத்துடன் நீங்கள் நிச்சயமாகத் தந்தையின் உதவியைப் பெறுவீர்கள். இப்போது, ஒரு விடயத்தைச் செய்யுங்கள். உங்களின் மனதை மும்முரமாக வைத்திருப்பதற்கு, ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வையுங்கள் எனத் தந்தை உங்களுக்கு முன்னரே கூறியதைப் போல், நீங்கள் ஒரு புள்ளி, நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைத்து, அனைவரையும் ஒரு புள்ளியாகப் பார்க்க வேண்டும். நீங்கள் அனைவரையும் ஒரு புள்ளியாகப் பார்க்கும்போது, உங்களுக்குள் வேறெந்த எண்ணங்களும் இருக்க மாட்டாது. உங்களின் மனதால் சேவை செய்வதில் கவனம் செலுத்துங்கள். சந்தோஷமற்ற ஆத்மாக்கள் பலர் கதறி அழுகிறார்கள். அதனால் அவர்களுக்குக் கதிர்களை வழங்கும் சேவையைச் செய்வதில் உங்களின் மனதில் நீங்கள் மேலதிக ஒருமுகப்படுத்தலைக் கொண்டிருக்க வேண்டும். உங்களின் மனதால் சேவை செய்வது மிகவும் மேன்மையான சேவையாகும். இது சந்தோஷம் அற்றிருப்பவர்களுக்கும் நன்மை செய்யும், அத்துடன் உங்களுக்கும் நன்மை செய்யும். இரட்டை நன்மை இதில் உள்ளது. நீங்கள் வார்த்தைகளால் சேவை செய்கிறீர்கள், அந்தச் சேவையும் அதிகரிக்கிறது. நீங்கள் அதை உங்களின் இதயபூர்வமாகச் செய்கிறீர்கள். எண்ணிக்கை அதிகரிக்கிறது, நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. உங்களில் பெரும்பாலானோர் வார்த்தைகளால் சேவை செய்வதில் நன்றாக இருக்கிறீர்கள் - அனைவரும் அல்ல, ஆனால் உங்களில் பெரும்பாலானோர் அவ்வாறு இருக்கிறீர்கள். அதேபோல், விசேடமான ஆத்மாக்களுக்கு ஒரு துளியைக் கொடுக்கும் சேவையைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்களின் மனங்களை சுதந்திரமாக வைத்திருக்காதீர்கள். உங்களின் மனங்களை ஏதாவதொரு சேவையில் மும்முரமாக வைத்திருங்கள்: உங்களின் மனதால் சக்திகளை வழங்குதல், வார்த்தைகளால் சேவை செய்தல், உங்களின் செயல்களில் நற்குணங்களால் சேவை செய்தல், உங்களின் உறவுகளுக்கும் தொடர்புகளுக்கும் சந்தோஷத்தை வழங்கும் சேவை செய்தல். இந்த வெவ்வேறு வகையான சேவைகளில் உங்களின் மனதை மும்முரமாக ஈடுபடுத்துங்கள். ஏனென்றால், உலகிலேயே அதிசெல்வந்த ஆத்மாக்கள் யார்? அது நீங்கள்தான், இல்லையா? நீங்கள் எத்தனை பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள்? எனவே, ஒவ்வொரு பொக்கிஷத்தாலும் சேவை செய்யுங்கள். சேவை செய்வதில் எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் இந்தப் பொக்கிஷங்களைப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு அவை அதிகரிக்கும். ஆகவே, நீங்கள் உங்களுக்குச் சேவை செய்வதில் கவனம் செலுத்துவதைப் போல், உங்களின் மனதால் சந்தோஷமற்ற ஆத்மாக்களுக்கும் உங்களின் பக்தர்களுக்கும் கதிர்களை வழங்குகின்ற சேவையில் நாள் முழுவதும் கவனம் செலுத்துங்கள். அவர்கள் அதிகளவில் அழுகிறார்கள், ஆனால் உங்களால் அவற்றைக் கேட்க முடிவதில்லை. அவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்களின் வீடுகளில் ஏதாவதொரு காரணத்தால் துன்பம் உள்ளது. இத்தகைய சந்தோஷம் அற்றவர்களுக்கு யார் சந்தோஷத்தைக் கொடுப்பார்கள்? கூறுங்கள்! யார் அதைக் கொடுப்பார்கள்? அது நீங்கள்தானே? எனவே, நாள் முழுவதும் உங்களின் மனதால் செய்யும் சேவையைச் சோதித்துப் பாருங்கள். அதற்கு நீங்கள் எவ்வளவு நேரத்தைக் கொடுக்கிறீர்கள்? எவ்வாறு நீங்கள் உங்களுக்கு நேரம் ஒதுக்குகிறீர்களோ, அதேபோல், உங்களின் மனதால் சேவை செய்வதற்கு நீங்கள் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்? நீங்கள் கருணைநிறைந்தவர்கள், அல்லவா? எனவே, சந்தோஷம் அற்றவர்களின் மீது கருணை கொள்ளுங்கள். உங்களிடம் ஒரு பாடல் உள்ளதல்லவா? ‘ஓ தாயே, தந்தையே, சந்தோஷம் அற்றவர்களின் மீது கருணை காட்டுங்கள்!’ பாப்தாதா இதைப் பற்றி அதிகளவில் கேட்கிறார். உங்களால் அந்தளவிற்கு அதைக் கேட்க முடியவில்லை, எனினும் இப்போது அதைச் செவிமடுங்கள். அந்த மக்கள் எங்குதான் செல்வார்கள்? அவர்கள் உங்களின் சகோதர, சகோதரிகள் ஆவார்கள். எனவே, உங்களுக்கே நன்மை செய்து, உங்களின் மனங்களை மும்முரமாக வைத்திருங்கள். அத்துடன் சந்தோஷம் அற்றவர்களின் துன்பத்தை நீக்குங்கள். அவர்கள் கதறி அழுகிறார்கள், அவர்களின் இதயங்களும் அழுகின்றன. பாப்தாதா இதைக் கேட்பதுடன் குழந்தைகளான உங்களையும் நினைவு செய்கிறார். ஓ எனது அதியன்பிற்குரிய குழந்தைகளே, எனது நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டு எடுக்கப்பட்ட குழந்தைகளே, இப்போது கருணைநிறைந்த இதயங்களைக் கொண்டிருங்கள். பிராமணர்களுடனும் ஒத்துழையுங்கள். ஒருவரின் சம்ஸ்காரங்கள் எந்த வகையாக இருந்தாலும் உங்களின் கடமை என்ன? இந்த சம்ஸ்காரங்களுடன் முரண்பாடு அடைவதா அல்லது அந்த ஆத்மாவை சம்ஸ்காரங்களின் முரண்பாட்டில் இருந்து விடுவிப்பதா? ‘துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருள்பவர்’ என்ற பட்டம், உங்களின் பட்டமும்தான், அல்லவா? நீங்கள் தந்தையின் சகபாடிகள், அல்லவா? தந்தையின் சகபாடிகளே, உங்களிடம் உள்ள எண்ணம் என்ன? நீங்கள் இந்த உலகின் துன்பம் மற்றும் அமைதியின்மையை மாற்றி, சந்தோஷத்தையும் அமைதியையும் கொண்டு வரப் போகிறீர்கள், அல்லவா? நீங்கள் இதைச் செய்ய வேண்டும். உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் இதைச் செய்யப் போகின்றீர்களா? அல்லது, நீங்கள் வெறுமனே அவதானிக்கப் போகின்றீர்களா? இது நடக்கிறது, ஆனால் இப்போது இது மாற வேண்டும். அது பிராமண ஆத்மாக்களாக இருந்தாலும் தொடர்ந்து அதை அவதானித்து, அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். ஆனால் உங்களின் வார்த்தைகளாலும் உங்களின் மனங்களில் உள்ள எண்ணங்களாலும் அவர்களை மாற்றுங்கள். நீங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை: பாப்தாதா தொடர்ந்து அதை அறிகிறார். இந்த விடயம் பாப்தாதாவை வந்தடைந்துள்ளது. நீங்கள் இந்தச் சூழ்நிலையை அவரிடம் கொடுத்திருப்பதனால், நீங்களே தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால், பாப்தாதா பொறுப்பாக இருக்கிறார். அத்துடன் விசேடமான, அதியன்பிற்குரிய சகபாடிக் குழந்தைகள் அவரின் கருவிகள் ஆவார்கள். எனவே, உங்களின் மனதில் வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, இப்போது சதா அந்த சந்தோஷமற்ற, குழப்பத்திற்கு உள்ளாகியுள்ள ஆத்மாக்களுக்கு, அவர்கள் பிராமண ஆத்மாக்களோ அல்லது வேறு எவருமோ, சதா ஒத்துழைப்பை வழங்குங்கள். ஒத்துழைப்பவராக இருங்கள். அச்சா.

இங்கே முதல் தடவையாக வந்திருக்கும் புதிய குழந்தைகள், நீங்கள் ஒரு விநாடியில் பத்து நிமிடங்கள் வேலை செய்ய வேண்டும். நீங்கள் சிறிதளவேனும் உங்களின் நேரத்தை வீணாக்கக் கூடாது. நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களால் உங்களின் முயற்சிகளைத் தீவிரமாக்கி, நீங்கள் விரும்பிய அளவு உங்களால் முன்னே செல்ல முடியும். இவை பிராமணர்கள் அனைவரின் சார்பாகவும் தந்தையிடம் இருந்தும் வருகின்ற நல்லாசிகளும் தூய உணர்வுகளும் ஆகும். அச்சா.

மதுவனத்தைச் சேர்ந்த அனைவரும் எழுந்து நில்லுங்கள்! மதுவனவாசிகள் இல்லாவிட்டால், யார் உங்களுக்கு இத்தகைய விருந்துபசாரத்தைச் செய்வார்கள்? நீங்கள் சௌகரியமாக வந்து சேர்ந்தீர்கள், நீங்கள் உண்டு, பருகி புத்துணர்ச்சி அடைகிறீர்கள். அதனால் மதுவனவாசிகளை கைதட்டிப் பாராட்டுங்கள்! போதியளவு இடம் இன்மையால் மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் வெகு தொலைவில் இருந்தவண்ணம் முரளியைக் கேட்க வேண்டியுள்ளது என்பதை பாப்தாதா அறிவார். இதுவும் மதுவனத்தைச் சேர்ந்தவர்களின் சேவையே ஆகும். இதுவும் சேவையே. நீங்கள் மற்றவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறீர்கள். அதனால் நீங்கள் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆகுகிறீர்கள். மதுவனத்தைச் சேர்ந்தவர்களின் கடமை, சந்தோஷத்தைக் கொடுத்து சந்தோஷத்தைப் பெறுவதாகும். வந்திருக்கும் அனைவரின் அனுபவங்களுடன் நீங்கள் உங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறீர்கள். அதனால் அந்த அனுபவங்களில் இருந்து அனைவரும் நன்மை பெறுகிறார்கள். பல நன்மைகள் உள்ளன. ஆனால் காலம் குறைவாக இருப்பதனால், நீங்கள் அந்தளவிற்குப் பகிர்ந்து கொள்வதில்லை. மதுவனவாசிகளின் பட்டம் என்ன? சந்தோஷத்தைக் கொடுத்து சந்தோஷத்தைப் பெறுபவர்கள். சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகள், தந்தையைப் பின்பற்றுபவர்கள் ஆவார்கள். அச்சா.

இந்தத் தடவை வந்திருப்பவர்கள், நீங்கள் தவறாமல் ஒழுங்காக முரளியைச் செவிமடுக்க வேண்டும். முரளியைக் கேட்காதவர்கள் யாராவது இங்கே இருக்கிறீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எவருமே இல்லை. அச்சா. முரளியைக் கேட்காதவர்கள் அல்லது வாசிக்காதவர்கள் எழுந்து நில்லுங்கள்! வெகுசிலரே இருக்கிறார்கள். அது பரவாயில்லை, ஆனால் இப்பொழுதில் இருந்து, எஞ்சியிருக்கும் காலத்திற்கு..... இவை தந்தையின் மேன்மையான வாசகங்கள். பாப்தாதா பரந்தாமத்தில் இருந்து வருகிறார், பிரம்மாபாபா சூட்சும வதனத்தில் இருந்து வருகிறார். அவர்கள் மேன்மையான வாசங்களைக் கூறுகிறார்கள். அதனால் ஒரு நாளேனும் முரளியைத் தவறவிடாதீர்கள். நீங்கள் அதைத் தவற விட்டால், பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் இருந்து நீங்கள் நீக்கப்படுவீர்கள். முரளியைத் தவறவிடுபவர்கள், தாம் மூன்று சிம்மாசனங்களுக்கு அதிபதிகள் இல்லை என்பதையும் அவர்களின் கொள்ளளவிற்கேற்ப இரண்டு சிம்மாசனங்களுக்கு மட்டுமே அதிபதிகள் ஆகுவார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, முரளி, முரளி, முரளி. ஏனென்றால், ஒவ்வொரு முரளியும் ஒவ்வொரு நாளுக்குமான வழிகாட்டல்களைக் கொண்டுள்ளது. இவை நான்கு பாடங்களுக்குமான வழிகாட்டல்கள் ஆகும். நீங்கள் ஒவ்வொரு நாளும் வழிகாட்டல்களைப் பெற வேண்டும். ஏதாவதொரு காரணத்தால் அதைத் தவற விடுபவர்கள், தங்களுக்காக ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அதன்மூலம் முரளியைக் கேட்க வேண்டும். சத்கதிக்காக ஏதாவதொரு வழிமுறையைக் கண்டுபிடியுங்கள். தற்காலத்தில் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் உங்களுக்காகவே செய்யப்பட்டுள்ளன. சிவபாபா பிரம்மா பாபாவிற்குள் பிரவேசிப்பதற்கு 100 வருடங்களுக்கு முன்னதாகவே இந்த விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்டது. இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். இதனாலேயே நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டும். நன்மையைப் பெற்றுக் கொள்ளுங்கள்! அச்சா. பாபாவின் முன்னால் அமர்ந்திருக்கும் அல்லது எங்கிருந்தாலும் முரளியைக் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் இதயத்தின் ஆழத்தில் இருந்து, ஆழமான அன்புடன் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

இது உத்தரப்பிரதேசம், பனாரஸ் என்பனவற்றின் சேவை செய்யும் முறை:

தந்தை பிரம்மாவிற்கும் உலக அன்னையான ஜெகதாம்பாவிற்கும் உத்தரப்பிரதேசத்தின் மீது அதிகளவு அன்பு இருந்தது. தந்தை பிரம்மா, பம்பாய்க்குச் சென்ற அதேயளவு உத்தரப் பிரதேசத்திற்கும் சென்றுள்ளார். தந்தை பிரம்மா தனது பாதங்களைப் பதித்த இடம் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தது! லக்னோ மற்றும் கான்பூர் இரண்டுமே இந்த அதிர்ஷ்டத்திற்கான உரிமையைப் பெற்றுள்ளன. பம்பாயும் அவ்வாறே ஆகியுள்ளது. ஆனால் இது இப்போது உத்தரப்பிரதேசத்தின் முறை ஆகும். தாயினதும் தந்தையினதும் கற்பித்தல்களின் துளிகள் நேரடியாக உத்தரப் பிரதேசத்தின் மீது விழுந்துள்ளன. உத்தரப்பிரதேசம் இப்போது எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் மேளாக்களில் வார்த்தைகளால் சேவை செய்கிறீர்கள். ஆனால் தற்சமயத்திற்கேற்ப, இதுவரை அனைவருக்கும் வாரிசுகளையும் பிரபல்யமான மைக்குகளையும் கொண்டு வரும்படி பாப்தாதா கூறி வருகிறார். பிரபல்யம் என்றால் அவர்களின் வார்த்தைகள் அவற்றைக் கேட்பவர்களில் ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய மைக்குகளைத் தயார் செய்யுங்கள். ஒவ்வொரு நிலையத்திலும் இத்தகைய வாரிசுகளின் குழு ஒன்று இருக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் எத்தனை நிலையங்கள் உள்ளன? பல உள்ளன. எனவே, நீங்கள் அந்தளவு வாரிசுகளையும் கொண்டு வரவேண்டும். எத்தனை நிலையங்கள் உள்ளன என்றும், எத்தனை வாரிசுகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கணக்கிடுங்கள். எனவே, எத்தனை பேர் இருக்க வேண்டுமோ, அத்தனை வாரிசுகள் வந்துவிட்டார்களா அல்லது இனித்தான் வரப் போகின்றார்களா? நீங்கள் இனிமேல்தான் அவர்களை உருவாக்கப் போகின்றீர்கள் என்றால், இதற்குக் காலத்தின் உத்தரவாதம் கிடையாது. எவ்வளவிற்கு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக வாரிசுகளையும் மைக்குகளையும் உருவாக்குங்கள். அவர்களின் ஒலியின் மூலம் ஆத்மாக்கள் பலரின் பாக்கிய ரேகை திறக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் அதிகளவு சேவை செய்துள்ளீர்கள். பழையவர்கள் அதிகளவு சேவை செய்துள்ளார்கள். இப்போது, ஏனையோரையும் சேவை செய்யத் தூண்டுங்கள். அதைச் செய்யக் கூடியவர்களைத் தயார் செய்யுங்கள். உங்களால் இதைச் செய்ய முடியும், அல்லவா? ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால் பலரைத் தயார் செய்யுங்கள். ஒவ்வொரு நிலையமும் அது சிறியதோ அல்லது பெரியதோ, அது நிலையங்களின் பட்டியலில் இருக்குமாயின், அவர்கள் நிச்சயமாக அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், காலத்தைப் பற்றி எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. எந்த நேரம் எதுவும் நடக்கக்கூடும். இதனாலேயே, பாப்தாதா இதை சகல பிராந்தியங்களுக்கும், இங்கே வராதவர்களுக்கும் கூறுகிறார். பாபா சகல பிராந்தியங்களுக்கும் கூறுகிறார்: இப்போது, முன்னேறிச் செல்லுங்கள்! வகுப்புக்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கிறது. ஆனால் இப்போது கருவிகள் ஆகக் கூடியவர்களைத் தயார் செய்யுங்கள். அவர்களை உருவாக்குங்கள். ஏனென்றால், சகல பிராந்தியங்களிலும் கருவிகள் ஆகக்கூடிய அத்தகைய ஆத்மாக்களை பாப்தாதா பார்த்துள்ளார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பக்தர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தங்களை பக்தர்கள் என்று அழைக்கும் சிலர் இருந்தாலும் அவர்கள் பக்தர்களே. அவர்கள் தமது பக்தியின் பலனைப் பெறச் செய்யுங்கள். அவர்கள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள், ஆனால் அது நல்லதே. அனைவரும் தமது முயற்சிகளினூடாக முன்னேறுவதை பாப்தாதா பார்த்துள்ளார். ஆனால் அப்படியிருந்தும் மேற்கொண்டு முன்னேறுவதற்கு ஓர் எல்லை காணப்படுகிறது. நீங்கள் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்யவில்லை என்பதல்ல. நீங்கள் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்கிறீர்கள், ஆயினும் இப்போது உங்களின் வேகத்தைச் சிறிதளவு அதிகரியுங்கள். நீங்கள் நல்லவர்கள், நீங்கள் நல்ல சேவை செய்கிறீர்கள். தாதிகள் அனைவரும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறார்கள். பாண்டவர்களும் பலர் வந்துள்ளார்கள். பாண்டவர்களும் சளைத்தவர்கள் அல்ல. பாண்டவர்களால் மட்டும் செய்யக்கூடிய பல வகையான சேவைகள் உள்ளன. இதனாலேயே, பாப்தாதாவும் மதுவனவாசிகள் அனைவரும் பாண்டவர்கள் அனைவரையும் பாராட்டுகிறார்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் புத்தியின் பாதங்களை சதா ஒழுங்குமுறைக் கோட்பாடுகளின் கோட்டுக்குள் வைத்திருந்து, சக்திசாலியாகவும் சகல பேறுகளாலும் நிரம்பியவராகவும் ஆகுவீர்களாக.

தமது புத்திகளின் பாதங்களை ஒருபோதும் மரியாதைக் கோட்பாடுகளின் ரேகைக்கு வெளியில் செல்ல அனுமதிக்காத குழந்தைகள், அதிர்ஷ்டசாலிகளாவும் அன்பானவர்களாகவும் ஆகுகிறார்கள். அவர்களால் ஒருபோதும் எந்தவிதமான தடைகள், புயல்கள், விரக்தி அல்லது சந்தோஷம் இன்மையை அனுபவம் செய்ய முடியாது. இவற்றில் ஏதாவது உங்களிடம் வருமாயின், நீங்கள் நிச்சயமாக உங்களின் புத்தியின் பாதத்தால் மரியாதைக் கோட்பாடுகளின் கோட்டைத் தாண்டி விட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கோட்டைத் தாண்டுவது என்றால் இரப்பவராக ஆகுதல் என்று அர்த்தம். ஆகவே, ஒருபோதும் இரப்பவராக ஆகாதீர்கள். சக்திசாலியாகி, சகல பேறுகளாலும் நிரம்பியவராகவும் ஆகுங்கள்.

சுலோகம்:
சதா பற்றற்றவராகவும் தந்தையின் மீது அன்புடையவராகவும் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.

திடசங்கற்பமே வெற்றியின் திறவுகோல், வெற்றி குழந்தைகளான உங்களின் பிறப்புரிமை. ஆகவே, திடசங்கற்பத்தைப் பயன்படுத்துங்கள். ‘இது நடக்கும், நான் இதைச் செய்வேன்....’ என்று சிந்திப்பதன் மூலம் கவனக்குறைவானவர் ஆகாதீர்கள். இந்த முறையில் சிந்திக்காதீர்கள். வீணான எண்ணங்கள் அனைத்தையும் முடித்து வெற்றியாளர் ஆகுவதற்கான திடசங்கற்பத்தைக் கொண்டிருங்கள்.