02.09.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே உலகில் அமைதியை ஸ்தாபிப்பதற்கான கருவிகள் ஆவீர்கள். எனவே, நீங்கள் ஒருபோதும் அமைதி அற்றவர்களாக ஆகக்கூடாது.

கேள்வி:
எக்குழந்தைகளைத் தந்தை தனது கீழ்ப்படிவான குழந்தைகள் என அழைக்கின்றார்?

பதில்:
அமிர்தவேளையில் எழுந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்ற தந்தையின் பிரதான வழிகாட்டலைப் பின்பற்றி, அதிகாலையில் நீராடி, தங்களைப் புத்துணர்ச்சியூட்டி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நினைவு யாத்திரையில் அமர்கின்ற குழந்தைகளே தகுதிவாய்ந்த, கீழ்ப்படிவான குழந்தைகள் எனத் தந்தையால் கூறப்படுகின்றனர். அவர்களே அரசர்கள் ஆகுவார்கள். தகுதியற்ற குழந்தைகள் நிலத்தைச் சுத்தம் செய்ய நேரிடும்.

ஓம் சாந்தி.
இதன் அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. “ஓம்” என்றால், நான் ஓர் ஆத்மா. நிச்சயமாக ஓர் உயிர் (ஆத்மா) இருப்பதாகவும், சகல ஆத்மாக்களுக்கும் தந்தையும் இருப்பதாகவும் அனைவரும் கூறுகின்றனர். ஒருவரது சரீரத்தின் தந்தை வேறானவர். நீங்கள் உங்களது எல்லைக்கு உட்பட்ட தந்தையிடம் இருந்து எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தியையும், உங்களது எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியையும் பெறுகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. இந்நேரத்தில் உலகில் அமைதி வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர். நீங்கள் படங்களைப் பயன்படுத்தி அமைதியைப் பற்றி விளங்கப்படுத்தும்போது, அவர்களை கலியுகத்தின் இறுதியினதும், சத்தியயுகத்தின் ஆரம்பத்தினதும் சங்கமத்திற்குக் கொண்டுவர வேண்டும். அது புதிய உலகமான சத்திய யுகமாகும். அங்கு தூய்மையும், அமைதியும், சந்தோஷமும் நிறைந்த ஒரு தர்மம் மாத்திரமே இருக்கும். அது சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. புதிய உலகில் சந்தோஷமே இருக்கும் என்பதையும், அங்கு துன்பம் இருக்க முடியாது என்பதையும் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். எவருக்கும் இதை விளங்கப்படுத்துவது மிக இலகுவானது. அமைதி, அமைதியின்மை பற்றிய கேள்வி இவ்வுலகிலேயே எழுகின்றது. அது நிர்வாண தாமம் ஆகும். அங்கு அமைதி, அமைதியின்மை பற்றிய கேள்வி எழமாட்டாது. குழந்தைகளாகிய நீங்கள் சொற்பொழிவுகள் ஆற்றும்போது, முதலில் ‘உலகில் அமைதி’ என்ற தலைப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அமைதியைப் பெறுவதற்காக மனிதர்கள் அதிகளவு முயற்சி செய்கின்றனர். அவர்கள் அதற்கான விருதுகளைப் பெறுகின்றனர். உண்மையில், அமைதிக்காக அலைந்து திரிதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை உங்களது ஆதி தர்மத்தில் ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்களை உங்களது ஆதி தர்மத்தில் ஸ்திரப்படுத்துவதால், அமைதி கிடைக்கும். நீங்கள் என்றென்றும் அமைதியான தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் இந்த ஆஸ்தியை அவரிடமிருந்தே பெறுகின்றீர்கள். அது அநாதியான முக்தி என அழைக்கப்படுவதில்லை. கடவுளாலுமே அநாதியான முக்தியைப் பெறமுடியாது. கடவுளும் தனது பாகத்தை நடிப்பதற்காக நிச்சயமாக வரவேண்டும். அவர் கூறுகின்றார்: நான் ஒவ்வொரு சக்கரத்திலும் சங்கமயுகத்தில் வருகின்றேன். கடவுளாலேயே அநாதியான முக்தியைப் பெறமுடியவில்லை ஆயின், அவரது குழந்தைகளால் எவ்வாறு அநாதியான முக்தியைப் பெறமுடியும்? நீங்கள் இவ்விடயங்கள் குறித்து ஞானக்கடலை நாள் முழுவதும் கடைய வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இவ்விடயங்களைக் கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதால் அதிக பயிற்சியைப் பெறுகின்றீர்கள். சிவபாபா விளங்கப்படுத்தும் போது, பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே புரிந்து கொள்கின்றீர்கள். நீங்களே இந்த ஞானக்கடலைக் கடைய வேண்டும். ஏனெனில், நீங்களே சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் இரவு பகலாக சேவையில் ஈடுபட்டுள்ளதால், அதிகளவில் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். மக்கள் பகல் முழுவதும் தொடர்ந்தும் அருங்காட்சியகங்களுக்கு வருகின்றனர். சில இடங்களில், மக்கள் இரவு 10 அல்லது 11 மணிவரைக்கும் வருகின்றனர். வேறு சில இடங்களில் அவர்கள் அதிகாலை 4 மணி முதல் சேவை செய்ய ஆரம்பிக்கின்றனர். இங்கு, இது உங்களது வீடாகும். எனவே, உங்களுக்குத் தேவையான போதெல்லாம் இங்கே அமரலாம். மக்கள் தொலைவில் இருந்து வெளியிலுள்ள நிலையங்களுக்குச் செல்கின்றனர். எனவே, அவர்கள் ஒரு நேரத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இங்கு, குழந்தைகள் எந்நேரமும் விழித்தெழலாம். எவ்வாறாயினும், இரவில் நீங்கள் நீண்ட நேரம் கற்றுவிட்டு, காலையில் எழுந்த பின்னர் தூங்கி வழிவதாக இருக்கக்கூடாது. எனவேதான் காலைநேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் நீராடி, உங்களைப் புத்துணர்ச்சி அடைந்த பின்னர் இங்கே வரலாம். உரிய நேரத்திற்கு வராதவர்கள் கீழ்ப்படிவான குழந்தைகள் என அழைக்கப்பட மாட்டார்கள். ஒரு லௌகீகத் தந்தைக்கு தகுதியான குழந்தைகளும் உள்ளனர், தகுதியற்ற குழந்தைகளும் உள்ளனர். எல்லையற்ற தந்தைக்கும்கூட அத்தகைய குழந்தைகள் உள்ளனர். தகுதி வாய்ந்த குழந்தைகள் சென்று, அரசர்கள் ஆகுவார்கள். ஆனால் தகுதியற்ற குழந்தைகள் நிலத்தைச் சுத்தம் செய்வார்கள். அனைத்தும் அறிந்து கொள்ளப்படும். ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு பற்றியும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பெடுக்கும்போது அது சுவர்க்கமாகும். அந்நேரத்தில் ஓர் இராச்சியம் மாத்திரமே இருப்பதுடன், உலகில் அமைதி நிலவும். சுவர்க்கத்தில் வெகுசில மனிதர்களே இருப்பார்கள். அது புதிய உலகமாகும். அங்கு அமைதியின்மை நிலவமுடியாது. தந்தை ஸ்தாபிக்கின்ற அந்த ஒரு தர்மம் இருக்கும்போது அங்கு அமைதி இருக்கும். பின்னர் ஏனைய சமயங்கள் வரும்போது, அமைதியின்மை ஏற்படுகின்றது. அங்கே, அவர்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்களாக உள்ளதால், பூரண அமைதி நிலவும். சந்திரன் பூரணமாக உள்ளபோது, மிக அழகாக இருக்கும். அது பூரண சந்திரன் எனப்படுகின்றது. திரேதாயுகத்தில் உள்ளவர்கள் முக்கால்வாசி நிறைந்தவர்கள் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் குறைபாடு உள்ளவர்கள் ஆகினார்கள், அவர்கள் இரு கலைகள் குறைந்தவர்களாக உள்ளனர். சத்தியயுகத்தில் முழுமையான அமைதி இருக்கும். உலகம் 25 வீதம் பழையதாக ஆகும்போது, சிறிதளவு குழப்பம் இருக்கும். இரு கலைகள் குறைவடையும் போது அழகு குறைகின்றது. சுவர்க்கத்தில் முற்றிலும் அமைதியும், நரகத்தில் முற்றிலும் அமைதியின்மையும் காணப்படுகின்றன. இந்நேரத்திலேயே மக்கள் உலக அமைதியை வேண்டுகின்றனர். முன்னர், மக்கள் அந்தளவிற்கு உலக அமைதியை வேண்டுவதற்கான ஓசை இருக்கவில்லை. இப்பொழுது உலகில் அமைதி ஸ்தாபனையாகி வருவதால், அந்த ஓசை பரவியுள்ளது. ஆத்மாக்கள் உலக அமைதியை விரும்புகின்றார்கள். மக்கள் சரீர உணர்வில் இருப்பதால், அவர்கள் வெறுமனே உலக அமைதியைப் பற்றிப் பேசுகின்றனர். 84 பிறவிகள் இப்பொழுது முடிவிற்கு வருகின்றன. தந்தை மாத்திரமே வந்து இதனை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் தந்தையை மாத்திரமே நினைவு செய்கின்றீர்கள். எப்பொழுது, எந்த ரூபத்தில் அவர் வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார்? அவரது பெயர் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என்பதாகும். அவர் எவ்வாறு சுவர்க்கத்தை உருவாக்குகின்றார் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். ஸ்ரீ கிருஷ்ணரால் அதை உருவாக்க முடியாது. அவர் தேவர் என அழைக்கப்படுகின்றார். மனிதர்கள் தேவர்களின் முன்னால் தலை வணங்குகின்றனர். அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் இருப்பதாலேயே அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகின்றனர். ஒருவரிடம் பல நற்குணங்கள் உள்ளபோது அவர் ஒரு தேவரைப் போன்றவர் எனக் கூறப்படுகின்றது. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுபவர்கள், அசுரர்களைப் போன்றவர்கள் எனக் கூறப்படுகின்றது. நீங்கள் எல்லையற்ற தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எனவே, குழந்தைகளாகிய உங்களின் நடத்தை மிக நல்லதாக இருக்க வேண்டும். அறியாமைப் பாதையில், ஆறேழு குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து, கூட்டுக் குடும்பங்களாக பாலும் சீனியும் போன்று வாழ்வதைத் தந்தை பார்த்திருக்கின்றார். அதேசமயம், வேறு சில குடும்பங்களில் குடும்பத்தில் இருவர் மாத்திரமே இருப்பினும், அவர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள். நீங்கள் முற்றிலும் பாலும் சீனியும் போன்று ஒன்றாக இருக்கவேண்டும். சத்தியயுகத்தில் அவர்கள் பாலும் சீனியும் போன்று வாழ்கின்றனர். இங்கே நீங்கள் பாலும் சீனியும் போன்று வாழக் கற்றுக் கொள்கின்றீர்கள். எனவே, நீங்கள் ஒருவரோடு ஒருவர் பெருமளவு அன்புடன் வாழவேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் பாவச் செயல்கள் எதையும் செய்யவில்லையா என உங்களையே சோதித்துப் பாருங்கள். நான் எவருக்காவது துன்பம் விளைவித்தேனா? நீங்கள் எவருமே அமர்ந்திருந்து, இவ்விதமாக உங்களைச் சோதிப்பதில்லை. இது பெருமளவு புரிந்துணர்விற்கான விடயமாகும். நீங்களே உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய குழந்தைகள். ஒரு வீட்டில், அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற சிலர் இருப்பார்களாயின், அவர்களால் எவ்வாறு அமைதியை நிலைநாட்ட முடியும்? ஒரு குழந்தை தனது லௌகீகத் தந்தைக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தினால், அக்குழந்தை இறப்பதே மேல் என அத்தந்தை கூறுகின்றார். நீங்கள் ஏதாவது பழக்கங்களை பழகிக் கொள்ளும்போது அவை உறுதியாகின்றன. தாங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதையும், தாங்கள் உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதையும் சிலர் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள். எனவே, நீங்கள் அமைதியற்றவர் ஆகினால், சிவபாபாவிடம் செல்லுங்கள். அவர் வைரம் ஆவார். நீங்கள் அமைதி அடைவதற்கான வழிமுறையை மிக விரைவிலேயே அவர் உங்களுக்குக் காண்பிப்பார். அவர் அமைதிக்கான வழிமுறை ஒன்றை உங்களுக்குக் காண்பிப்பார். ஓர் இராஜரீகக் குடும்பத்திற்குரிய நடத்தையைக் கொண்டிராத பலர் உள்ளனர். இப்பொழுது நீங்கள் அழகான புதிய உலகிற்குச் செல்ல ஆயத்தம் ஆகின்றீர்கள். இது விரும்பத்தகாத, விலைமாதர் இல்லமாகிய தீய உலகமாகும். உலக அமைதி அந்தப் புதிய உலகிலேயே இருக்கும். சங்கமயுகத்தில் அமைதி இருக்க முடியாது. இங்கு, நீங்கள் அமைதியாக இருப்பதற்கு முயற்சி செய்கின்றீர்கள். முழு முயற்சி எடுக்கப்படா விட்டால், தண்டனை கிடைக்கும். தர்மராஜூம் என்னுடனேயே இருக்கின்றார். சகல கர்மக்கணக்குகளையும் தீர்ப்பதற்கான காலம் வரும்போது, பெருமளவு தண்டனை இருக்கும். நிச்சயமாக கர்ம வேதனை உள்ளது. ஒருவர் நோய்வாய்ப்படும்போது, அதுவும்கூட கர்ம வேதனையே ஆகும். தந்தையை விடவும் மேலானவர் எவருமே இல்லை. அவர் விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, அழகானவர்கள் ஆகுங்கள், நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். இல்லாவிடில் நன்மை கிடையாது. நீங்கள் அரைக் கல்பமாக நினைவு செய்து வந்த தந்தையாகிய கடவுளிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோராவிட்டால், குழந்தைகளாகிய உங்களால் என்ன பயன்? எவ்வாறாயினும், நாடகத்திற்கேற்ப, இது நிச்சயமாக நிகழ்ந்தாக வேண்டும். எனவே, நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்குப் பல வழிகள் உள்ளன. சத்தியயுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தபோது, உலகில் அமைதி நிலவியது. தற்போது அமைதியின்மை நிலவுவதால் யுத்தம் நிச்சயமாக இடம்பெறும். பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் மீண்டும் சத்தியயுகத்தில் வருவார். தேவர்களின் நிழல்கூட கலியுகத்தினுள் வரமுடியாது எனக் கூறப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைச் செவிமடுக்கின்றீர்கள். சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இதைக் கிரகிக்க வேண்டும். இதைச் செய்வதற்கு உங்களது முழு ஆயுட்காலமும் எடுக்கின்றது. நீங்கள் அவர்களது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு விளங்கப்படுத்தினாலும் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்! எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: முதலில், பிரதான விடயத்தை விளங்கப்படுத்துங்கள். ஞானம் பக்தியிலிருந்து வேறுபட்டதாகும். அரைக் கல்பத்திற்கு பகலும், அரைக் கல்பத்திற்கு இரவும் காணப்படுகின்றது. சமய நூல்களில் சக்கரத்தின் காலப்பகுதியை அவர்கள் தவறாக எழுதிவிட்டார்கள். அதன்படி, அது அரைக்கு அரைவாசியாக இருக்க முடியாது. உங்கள் மத்தியிலும்கூட, நீங்கள் சமய நூல்களைக் கற்றிரா விட்டால், அது நல்லதே. அவற்றைக் கற்றவர்களுக்கு சந்தேகம் எழுவதால், அவர்கள் தொடர்ந்தும் கேள்விகள் கேட்பார்கள். உண்மையில், மக்கள் ஓய்வு பெறும் ஸ்திதியில் உள்ளபோது, அவர்கள் எவரோ ஒருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் கடவுளை நினைவு செய்கின்றனர். அது, அவர்களது குரு அவர்களுக்குக் கற்பிப்பவற்றிலேயே தங்கியுள்ளது. அவர்களுக்கு பக்தியும் கற்பிக்கப்படுகின்றது. பக்தியைக் கற்பிக்காத எந்த குருவும் இல்லை. பக்தியின் பலன் அவர்களிடம் உள்ளது. இதனாலேயே அவர்களைப் பின்பற்றுகின்ற பலர் உள்ளனர். அவ்வாறு பின்பற்றுபவர்கள் பக்தர்கள் என்றும், பூஜிப்பவர்கள் என்றும் கூறப்படுகின்றனர். இங்கு, அனைவரும் பூஜிப்பவர்களே. அங்கு, பூஜிப்பவர்கள் எவருமே இல்லை. கடவுள் ஒருபோதுமே பூஜிப்பவர் ஆகமுடியாது. உங்களுக்குப் பல கருத்துக்கள் விளங்கப்படுத்தப்படுகின்றன. படிப்படியாக, குழந்தைகளாகிய நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கான சக்தியை விருத்தி செய்து கொள்வீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் வருகின்றார் என நீங்கள் இப்பொழுது அவர்களிடம் கூறுகின்றீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் நிச்சயமாக சத்திய யுகத்திலேயே இருப்பார். இல்லாவிடில், எவ்வாறு உலக வரலாறும் புவியியலும் மீண்டும் நிகழும்? ஸ்ரீகிருஷ்ணர் அங்கு தனியாக இருக்கமாட்டார். அரசன், அரசியைப் போன்றே பிரஜைகளும் இருப்பார்கள். இதற்கும் புரிந்துணர்வு தேவைப்படுகின்றது. நீங்கள் தந்தையின் குழந்தைகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை உங்களது ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்க வந்துள்ளார். அனைவருமே சுவர்க்கத்திற்குச் செல்லவோ, அல்லது அனைவருமே திரேதா யுகத்திற்குச் செல்லவோ மாட்டார்கள். விருட்சம் படிப்படியாக வளர்கின்றது. இது மனித உலக விருட்சமாகும். அங்கு, அது ஆத்மாக்களின் விருட்சமாகும். ஸ்தாபனை இங்கு பிரம்மா மூலம் இடம்பெறுகின்றது. பின்னர், சங்கரர் மூலம் விநாசமும், அதன் பின்னர் பராமரிப்பும் இடம்பெறுகின்றது. நீங்கள் இவ்வார்த்தைகளைச் சரியாகக் கூறவேண்டும். இவ்வுலக சக்கரம் எவ்வாறு சுழல்கிறது, எவ்வாறு படைப்பு நிகழ்கின்றது என்பதன் போதை உங்களுக்கு உள்ளது. இப்பொழுது புதிய, சிறிய படைப்பு இடம்பெறுகின்றது. இது ஒரு குட்டிக்கரணம் போன்றது. முதலில், பல சூத்திரர்கள் உள்ளனர். பின்னர், தந்தை வந்து, பிரம்மா மூலம் பிராமணப் படைப்புகளை உருவாக்குகின்றார். அவர்கள் பின்னர் உச்சிக்குடுமிகள் ஆகின்றனர். உச்சிக்குடுமியும், பாதங்களும் ஒன்றாக வருகின்றன. முதலில், பிராமணர்கள் இருக்கவேண்டும். பிராமணர்களின் காலம் மிகவும் குறுகியது. பின்னர் தேவர்கள் உள்ளனர். வெவ்வேறு குலங்களைக் கொண்ட இப்படம் மிகவும் பயனுள்ளதாகும். இப்படத்தை விளங்கப்படுத்துவது மிக இலகுவானது. அது பல்வகையான மனிதர்களின் பல்வேறு ரூபங்களைக் காட்டுகின்றது. இதை விளங்கப்படுத்துவதில் பெருமளவு சந்தோஷம் உள்ளது. பிராமணர்கள் உள்ளபோது. ஏனைய சமயங்கள் அனைத்தும் உள்ளன. சூத்திரர்களில் இருந்தே பிராமணர்களின் நாற்று நாட்டப்படுகின்றது. மக்கள் மரக்கன்றுகளை நடுகின்றார்கள். தந்தையும் உலக அமைதிக்கான மரக்கன்றை நடுகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கடவுளின் குழந்தைகள் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். எப்பொழுதும் பாலும் சீனியும் போன்று ஒன்றாக இருங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.

2. நீங்கள் பாவச் செயல்கள் எதையும் செய்யவில்லையா என, உங்களையே உள்ளாரச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் அமைதியற்றவர் ஆகின்ற அல்லது அமைதியின்மையைப் பரப்புகின்ற பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லையா என்பதைச் சோதித்துப் பாருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தூய்மை சக்தியால் துன்பம் அற்ற சேவையின் சக்கரவர்த்தியாகி சதா சந்தோஷ உலகில் இருப்பீர்களாக.

சந்தோஷத்தினதும் அமைதியினதும் அத்திவாரம் தூய்மையே ஆகும். தமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையாக இருக்கும் குழந்தைகள் உயர்வானவர்களாகவும் புனிதமானவர்களாகவும் இருப்பார்கள். எங்கே தூய்மை சக்தி உள்ளதோ, அங்கே இயல்பாகவே சந்தோஷமும் அமைதியும் உள்ளன. தூய்மையே சந்தோஷத்தினதும் அமைதியினதும் தாய். தூய ஆத்மாக்களால் ஒருபோதும் சந்தோஷம் இல்லாமல் இருக்க முடியாது. அவர்கள் துன்பமற்ற தேசத்தின் சக்கரவர்த்திகள் ஆவார்கள். அவர்களின் கிரீடங்களும் தனித்துவமானவை, அவர்களின் சி;ம்மாசனங்களும் தனித்துவமானவை. ஒளிக்கிரீடமே தூய்மையின் அடையாளம் ஆகும்.

சுலோகம்:
நான் ஓர் ஆத்மா, இந்தச் சரீரம் அல்ல. இந்த எண்ணத்தைக் கொண்டிருப்பதெனில், உங்களின் ஆதி சுயத்திற்கான எண்ணத்தைக் கொண்டிருப்பதாகும்.

அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.

சக்திவாய்ந்த யோகத்தின் மூலம் மட்டுமே, அதாவது, அன்பு மற்றும் நினைவின் அக்கினியானது எரிமலை ஆகும்போதே, ஊழல் மற்றும் வன்முறையின் அக்கினி முடிவடைந்து, ஆத்மாக்கள் எல்லோருக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும். இதன் மூலமே உங்களின் எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவம் ஏற்றி வைக்கப்படும். ஒருபுறம், நினைவின் அக்கினியானது அந்த அக்கினியை முடித்துவிடும். இன்னொரு புறம், அது ஆத்மாக்களுக்கு இறைவனின் செய்தியை வழங்குவதுடன் அவர்களின் குளிர்மை ரூபத்தின் அனுபவத்தையும் வழங்கும். இதனூடாக, ஆத்மாக்கள் தமது பாவங்கள் என்ற அக்கினியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.