02.10.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவில் நிலைத்திருந்தவாறே ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள், அப்பொழுது பலர் தொடர்ந்தும் உங்களின் காட்சியைப் பெறுவார்கள்.
பாடல்:
சங்கம யுகத்தில், எவ்வழிமுறை மூலம் நீங்கள் உங்கள் இதயத்தைத் தூய்மையாக்க முடியும்?பதில்:
நினைவில் இருந்தவாறே உணவு தயாரித்து, நினைவில் இருந்தவாறே அதை உண்ணுங்கள், அப்பொழுது உங்கள் இதயம் தூய்மையாகும். சங்கம யுகத்தில் பிராமணர்களாகிய உங்களால் தயாரிக்கப்படுகின்ற தூய பிரம்மபோஜன் தேவர்களால் மிகவும் விரும்பப்படுகின்றது. பிரம்மபோஜனின் மகிமையை உணர்ந்தவர்கள் தங்கள் உணவுத்தட்டுக்களைக் கழுவி, அந்நீரைப் பருகுகின்றார்கள். அதற்குப் பெருமளவு புகழும் உள்ளது. நினைவிலிருந்தவாறு தயாரிக்கப்படுகின்ற உணவை உண்பதால், நீங்கள் பெருமளவு சக்தியைப் பெறுவதுடன், உங்கள் இதயமும் தூய்மையாகுகின்றது.ஓம் சாந்தி.
தந்தை சங்கம யுகத்தில் மாத்திரமே வருகின்றார். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார் என அவர் தினமும் குழந்தைகளுக்குக் கூறவேண்டியுள்ளது. 'குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள்." என அவர் ஏன் கூறுகின்றார்? அதனால் அவர் உண்மையில் எல்லையற்ற தந்தை என்பதையும், அவரே ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் நினைவுசெய்கின்றீர்கள். அவர் சேவைக்காகப் பல்வேறு கருத்துக்களை விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகள் கூறுகின்றனர்: செய்வதற்கு எந்தச் சேவையும் இல்லை. எவ்வாறு நாங்கள் வெளியில் சேவை செய்ய முடியும்? தந்தை சேவை செய்வதற்கு மிக இலகுவான வழிமுறைகளை உங்களுக்குக் காட்டுகின்றார். உங்கள் கரங்களில் படங்களை வைத்திருங்கள். ரகுநாதரின் அவலட்சணமான படத்தையும், அழகான படத்தையும் வைத்திருங்கள். அத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரினதும், நாராயணரினதும் அவலட்சணமானதும், அழகானதுமான படங்களையும் அவை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, வைத்திருங்கள். மக்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகச்சிறிய படங்களையும் உருவாக்குகிறார்கள். ஆலயங்களைப் பராமரிக்கின்ற பூசகர்களிடமும் நீங்கள் கேட்கலாம்: இவர் உண்மையில் அழகானவராக இருந்தபோது, இவர் ஏன் அவலட்சண ரூபத்தில் காட்டப்படுகின்றார்? உண்மையில், சரீரம் அவலட்சணமாக இருக்க முடியாது. அழகானவர்கள் பலர் உங்களுடன் இருக்கின்றார்கள். ஆனால், இவர் ஏன் அவலட்சணமாக உருவாக்கப்பட்டுள்ளார்? தொடர்ந்தும் கீழிறங்கி வரும்போது, அந்த ஆத்மா எவ்வாறு வேறுபட்ட பெயர்களையும், ரூபங்களையும் ஏற்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மா காமச் சிதையில் ஏறுகின்ற காலத்திலிருந்து அவலட்சணமானவர் ஆகுகின்றார். ஜெகத்நாத்திலும், ஸ்ரீநாத்திலும் பல யாத்திரிகர்கள் உள்ளனர். நீங்களும் அழைப்பிதழ்களைப் பெறுகின்றீர்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: ஸ்ரீநாத்தின் 84 பிறவிகளின் சரிதையை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். சகோதர, சகோதரிகளே, வந்து அதனைச் செவிமடுங்கள். வேறு எவராலும் அத்தகைய விரிவுரைகளை ஆற்ற முடியாது. அவர் (ஸ்ரீ கிருஷ்ணர்) ஏன் அவலட்சணமானவர் ஆகியுள்ளார் என்பதை உங்களால் விளங்கப்படுத்த முடியும். ஒவ்வொருவரும் நிச்சயமாகத் தூய்மையானவரிலிருந்து தூய்மையற்றவர் ஆகவே வேண்டும். தேவர்கள் பாவப் பாதையில் சென்றபொழுது, அவர்களுடைய அவலட்சணமான ரூபங்கள் உருவாக்கப்பட்டன. காமச் சிதையில் அமர்ந்ததால், அவர்கள் கலியுகத்தவர்கள் ஆகினார்கள். இரும்பு கருநிறமும், தங்கம் பொன்னிறமும் ஆகும், அதாவது, அவர்கள் அழகானவர்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் 84 பிறவிகளை எடுத்த பின்னர் அவலட்சணமானவர்கள் ஆகுகின்றார்கள். நீங்கள் நிச்சயமாக ஏணியின் படத்தையும் உங்கள் கரத்தில் வைத்திருக்க வேண்டும். ஏணியின் படம் பெரியதாக இருப்பின், எவராலும் தொலைவிலிருந்து அதனை மிகத்தெளிவாகப் பார்க்க முடியும், பாரதத்தின் நிலைமை இவ்வாறு ஆகிவிட்டது என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த முடியும். 'எழுச்சியும், வீழ்ச்சியும்" எனவும் எழுதப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் பெருமளவு ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். சத்திய யுகம், திரேதா யுகம், துவாப ரயுகம், கலியுகம் என்பவற்றினூடாக உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பின்னர் நீங்கள் இந்த அதிமங்களகரமான சங்கம யுகத்தையும் காட்ட வேண்டும். நீங்கள் பல படங்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. ஏணிப் படமே பாரதத்துக்குப் பிரதானமானது. இப்பொழுது உங்களால் தூய்மையற்றவர்களில் இருந்து எவ்வாறு மீண்டும் ஒருமுறை தூய்மையானவர்களாக முடியும் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த முடியும். ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர். அவரை நினைவு செய்வதால், நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெற முடியும். குழந்தைகளாகிய உங்களிடம் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. ஏனைய அனைவரும் அறியாமை என்ற உறக்கத்தில் உறங்குகின்றார்கள். பாரதம் ஞானமுடையதாக இருந்தபோது, அது மிகுந்த செல்வத்தைக் கொண்டிருந்தது. இப்பொழுது பாரதம் அறியாமையில் உள்ளதுடன், மிகவும் ஏழையாகியும் விட்டது. ஞானம் நிறைந்த மனிதர்களும், அறியாமையிலுள்ள மனிதர்களும் உள்ளனர். தேவர்களும், மனிதர்களும் மிகவும் பிரபல்யமானவர்கள். தேவர்கள் சத்திய, திரேதா யுகங்களில் இருக்கின்றனர், மனிதர்கள் துவாபர, கலியுகங்களில் இருக்கின்றனர். எவ்வாறு சேவை செய்யப்பட வேண்டும் என்பது குழந்தைகளின் புத்தியில் எப்பொழுதும் இருக்க வேண்டும். தந்தை தொடர்ந்தும் அதனையும் விளங்கப்படுத்துகின்றார். எவருக்கேனும் விளங்கப்படுத்துவதற்கு ஏணிப் படம் மிகச்சிறந்தது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் வீட்டில் உங்களுடைய குடும்பத்துடன் வசிக்கலாம். நீங்கள் உங்களுடைய சரீரத்தின் ஜீவனோபாயத்திற்குச் சம்பாதிக்க வேண்டும். நீங்கள் ஒரு லௌகீகக் கல்வியையும் கற்க வேண்டும். எவ்வாறாயினும், அதன்பின்னர் உங்களுக்கு நேரம் இருக்கும்போதெல்லாம், நீங்கள் சேவையைப் பற்றியும், மற்றவர்களுக்கு எவ்வாறு நன்மையளிப்பது என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இங்கு உங்களால் பலருக்கு நன்மையளிக்க முடியாது. நீங்கள் இங்கு தந்தையின் முரளியைச் செவிமடுப்பதற்கே வருகின்றீர்கள். இதிலேயே மந்திர வித்தை உள்ளது. தந்தை மந்திரவாதி என அழைக்கப்படுகின்றார், இல்லையா? 'உங்களுடைய முரளியில் மந்திர வித்தை இருக்கின்றது" என நீங்கள் பாடுகிறீர்கள். உங்களுடைய வாய் மூலம் நீங்கள் பேசுகின்ற முரளியில் மந்திர வித்தை இருக்கின்றது. நாங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றோம். தந்தையைத் தவிர, இத்தகைய மந்திரவாதி வேறு எவருமில்லை. மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்டகாலம் எடுக்கவில்லை என்பதும் நினைவுகூரப்படுகிறது. பழைய உலகம் நிச்சயமாக மீண்டும் புதியதாக மாற வேண்டும். பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். இந்நேரத்தில் நீங்கள் இராஜயோகத்தைக் கற்பதால், நிச்சயமாக நீங்கள் அரசர்கள் ஆகப் போகின்றீர்கள். உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதால், உங்களுடைய 84வது பிறவியின் பின்னர், நீங்கள் உங்களது முதலாவது பிறவியைப் பெற வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். முன்னர் இருந்த சத்திய, திரேதா யுகங்கள் மீண்டும் வரவேண்டும். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்பொழுதும், நீங்கள் வீடு திரும்பப் போகின்றீர்கள் என்பதையும், பின்னர் நீங்கள் சதோபிரதான் தேவர்கள் ஆகுவீர்கள் என்பதையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். தற்பொழுது, மனிதர்களிடம் அந்தத் தெய்வீகக் குணங்கள் இல்லை. எனவே, நீங்கள் எங்கும் சேவை செய்ய முடியும். நீங்கள் செய்வதற்கு எவ்வளவு வேலையிருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் வீட்டில் வசித்தவாறே இந்த வருமானத்தைத் தொடர்ந்தும் சம்பாதிக்க முடியும். தூய்மையே இதற்கான பிரதான விடயமாகும். தூய்மை இருக்குமிடத்தில் அமைதியும், செல்வச் செழிப்பும் இருக்கின்றன. நீங்கள் முற்றிலும் தூய்மையாகினால், உங்களால் இங்கிருக்க முடியாது, ஏனெனில் நீங்கள் நிச்சயமாக அமைதி தாமத்திற்குச் செல்வது அவசியம் ஆகும். ஆத்மா தூய்மையாகி விட்டால், அதன்பின்னர் அவரால் இப்பழைய சரீரத்தில் இருக்க முடியாது, ஏனெனில் இது தூய்மையற்ற சரீரமாகும். பஞ்ச தத்துவங்களும் தூய்மையற்றவையாக உள்ளன. சரீரம் அவற்றாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு களிமண் பொம்மை என அழைக்கப்படுகின்றது. பஞ்ச தத்துவங்களாலான ஒரு சரீரம் அழிவடைந்ததும், இன்னொன்று உருவாக்கப்படுகின்றது, ஆனால் ஆத்மா எப்பொழுதும் இருக்கின்றார். ஆத்மா என்பது உருவாக்கப்படுகின்ற ஒன்றல்ல. ஒரு சரீரம் முதலில் மிகச் சிறிதாக இருந்து பின்னர் பெரிதாகுகின்றது. ஓர் ஆத்மா, தான் பெறுகின்ற, பல அங்கங்களின் மூலமாகவே தனது முழுப் பாகத்தையும் நடிக்கின்றார். இந்த உலகம் அற்புதமானது. ஆத்மாக்களின் அறிமுகத்தைக் கொடுக்கின்ற தந்தை அதி அற்புதமானவர். ஆத்மாக்களாகிய நாங்கள் மிகவும் சின்னஞ் சிறியவர்கள். ஆத்மா ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். ஒவ்வொரு விடயமும் அற்புதமானது. மிருகங்களின் சரீரங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதும் ஓர் அற்புதமே. அனைத்திலும் ஒரேமாதிரியான ஒரு சின்னஞ்சிறிய ஆத்மா இருக்கின்றார். ஒரு யானை மிகப் பெரியது, ஒரு சின்னஞ்சிறிய ஆத்மா சென்று, அதற்குள் அமர்கின்றது. தந்தை, எவ்வாறாயினும், மனிதப் பிறவிகளைப் பற்றியே விளங்கப்படுத்துகிறார். மனிதர்கள் எத்தனை பிறவிகளைப் பெறுகிறார்கள்? 8.4 மில்லியன் பிறவிகள் கிடையாது. பலவகையான சமயங்கள் இருப்பதைப் போன்று பல்வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆத்மாவும் எவ்வாறு பல்வேறு முகச்சாயல்கள் உடைய சரீரத்தைப் பெறுகின்றார் என்பது ஓர் அற்புதமே. பின்னர், சக்கரம் மீண்டும் சுழலும்போது, ஒவ்வொரு பிறப்பிலும் முகச்சாயல்கள், பெயர், வடிவம் என்பவை மாறுகின்றன. 'அவலட்சணமான கிருஷ்ணர், அழகான கிருஷ்ணர்" எனக் கூறப்பட மாட்டாது. இல்லை, ஆத்மா முதலில் அழகானவராக இருந்து, பின்னர் 84 பிறவிகளை எடுக்கும்போது, அவலட்சணமானவர் ஆகுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்களும் வேறுபட்ட சாயல்களுடன், வேறுபட்ட சரீரங்களுடன் உங்கள் பாகங்களை நடிக்கிறீர்கள். இதுவும் நாடகமே. குழந்தைகளாகிய நீங்கள் ஒருபோதும் எக்கவலைகளையும் கொண்டிருக்கக்கூடாது. அனைவரும் நடிகர்கள். நீங்கள் சரீரங்களைத் துறந்து, இன்னொன்றைப் பெற்று, உங்கள் பாகங்களை நடிக்க வேண்டும். ஒவ்வொரு பிறவியிலும் உறவினர்கள் போன்றோர் மாறுகின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. ஆத்மா 84 பிறவிகளை எடுப்பதனால், தமோபிரதான் ஆகிவிட்டார். எனவே, ஆத்மா இப்பொழுது சதோபிரதான் ஆகவேண்டும். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். உலகம் தூய்மையாக இருந்தது, அது இப்பொழுது தூய்மையற்றதாகி விட்டது, அது மீண்டும் தூய்மையாக வேண்டும். 'சதோபிரதான், தமோபிரதான்" எனும் வார்த்தைகள் உள்ளன. சதோபிரதான் உலகம் இருந்தது, பின்னர் சதோ, ரஜோ, தமோ உலகங்களும் உள்ளன. இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டவர்களால் எவ்வாறு சதோபிரதானாக முடியும்? உங்களால் எவ்வாறு தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக முடியும்? மழை நீர் மூலம் ஒருவரால் தூய்மையாக முடியாது. மழையால் மக்கள் மரணிக்கவும் கூடும்: வெள்ளம் வரும்போது, பலர் அதனுள் மூழ்கி விடுகிறார்கள். தந்தை இப்பொழுது தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார்: அந்தத் தேசங்கள் எதுவும் எஞ்சியிருக்காது. இயற்கை அனர்த்தங்களும் உதவி புரியும். பல மனிதர்களும், மிருகங்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள் அந்நீரின் மூலம் தூய்மையாகுகின்றார்கள் என்றில்லை, சரீரங்கள் அவற்றுடன் அடித்துச் செல்லப்படுகின்றன. சரீரங்கள் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக வேண்டும் என்பதல்ல. ஆத்மாக்களே தூய்மையாக வேண்டும். ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர். அம்மக்கள் தங்களை ஜெகத்குரு (உலகக் குருமார்கள்) என அழைத்தாலும், சற்கதியை அருள்வதே ஒரு குருவின் கடமையாகும். ஒரேயொரு தந்தையே சற்கதியை அருள்பவர். சற்குருவாகிய தந்தை மாத்திரமே சற்கதியை அருள்கின்றார். தந்தை தொடர்ந்தும் பெருமளவு விளங்கப்படுத்துகின்றார், இவரும் செவிமடுக்கின்றார். குருமார்கள் தங்களுடைய சீடர்களுக்குக் கற்பிப்பதற்கு, அவர்களைத் தங்களுக்கு அருகில் அமர்த்துகிறார்கள். இவரும் அவருக்கருகில் அமர்ந்திருக்கின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார், எனவே இவரும் கூட விளங்கப்படுத்த வேண்டும். இதனாலேயே குரு பிரம்மா முதலாம் இலக்கத்தவர் ஆகுகிறார். சங்கரரையிட்டு, அவர் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து, அனைவரையும் எரித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறாயின், அவரை ஒரு குரு என அழைக்க முடியாது. இருந்தபோதிலும், தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். சில குழந்தைகள் கூறுகிறார்கள்: எங்களுக்கு எங்கள் தொழில் போன்றவற்றைப் பற்றிப் பல்வேறு கவலைகள் இருக்கின்றன, எனவே நாங்கள் எவ்வாறு எங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்ய முடியும்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பக்தி மார்க்கத்திலும் நீங்கள் 'ஓ ஈஸ்வரா!, ஓ பகவானே!" எனக் கடவுளை நினைவுசெய்து கூறினீர்கள். ஏதேனும் துன்பம் வரும்போதே, நீங்கள் அவரை நினைவுசெய்கிறீர்கள். ஒருவர் மரணிக்கும் தறுவாயில் உள்ளபோது, இராமரின் நாமத்தை உச்சரிக்குமாறு மக்கள் கூறுகிறார்கள். இராமரின் பெயரில் நன்கொடைகளை வழங்குகின்ற பல ஸ்தாபனங்கள் உள்ளன. நீங்கள் ஞான தானம் செய்வதைப் போன்றே, அவர்கள் 'இராமா, இராமா' எனக் கூறச் சொல்கிறார்கள். நீங்களும் கூறுகிறீர்கள்: சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அம் மக்களுக்குச் சிவனைப் பற்றிக் கூட தெரியாது. அவர்கள் 'இராமா, இராமா' எனக் கூறுகிறார்கள். கடவுள் அனைவரிலும் இருப்பதாகக் கூறும் அவர்கள் ஏன் இராமரின் பெயரை உச்சரிக்குமாறு கூறுகிறார்கள்? தந்தை இங்கமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகின்றார்: இராமரையோ அல்லது ஸ்ரீகிருஷ்ணரையோ கடவுள் என அழைக்க முடியாது. அவர்கள் தேவர் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். அவர்களின் கலைகளும் குறைவடைகின்றன. அனைத்தினது கலைகளும் குறைவடைகின்றன. ஆடைகளும் முதலில் புதியதாக இருந்து, பின்னர் பழையதாகுகின்றன. எனவே, தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்திய பின்னர் கூறுகின்றார்: எனது இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அவரை நினைவுசெய்கையில் சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள். இங்கு, இது துன்ப பூமியாகும். தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். நினைவின் மூலமே நீங்கள் அளவற்ற சந்தோஷத்தைப் பெறுவீர்கள். உங்கள் துன்பம், வேதனை, நோய்கள் போன்றவை அனைத்தும் முடிவடையும். நீங்கள் 21 பிறவிகளுக்கு நோயிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுவீர்கள். சரீரத்தின் துன்பம், வேதனை அனைத்தும் முடிவடைந்து, நீங்கள் ஜீவன்முக்தி அந்தஸ்தைப் பெறுவீர்கள். அவர்கள் இதனைப் பாடுகின்றார்கள், ஆனால் நடைமுறையில் செய்வதில்லை. தந்தை நடைமுறை ரீதியில் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் ஆசைகள் அனைத்தும் முடிவடைந்து, நீங்கள் சந்தோஷமடைவீர்கள். தண்டனையை பெற்றுப் பின்னர் ஒரு சிறிய துண்டு சப்பாத்தியைப் பெறுவது நல்லதல்ல. அனைவரும் சூடான சப்பாத்திகளையே விரும்புகிறார்கள். இந்நாட்களில், அனைத்திற்கும் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. அங்கு, நெய்யாறுகள் பாயும். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் உள்ளுரத் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். 'இங்கமர்ந்திருந்து தந்தையை நினைவுசெய்யுங்கள்" என பாபா கூறுவதில்லை. இல்லை, நடக்கும்போதும், சுற்றுலா செல்லும்போதும், உலாவித் திரியும்போதும் சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். நீங்கள் உங்களுடைய தொழில் போன்றவற்றையும் செய்ய வேண்டும். உங்களுடைய புத்தியில் தந்தையின் நினைவு இருக்கட்டும். ஒரு லௌகீகத் தந்தையின் குழந்தைகள் தங்களுடைய தொழில் போன்றவற்றைச் செய்யும்போதும் அவரை நினைவுசெய்கின்றார்கள். எவரேனும் அவர்களிடம் வினவினால், தாங்கள் யாருடைய குழந்தைகள் என்பதை உடனடியாகவே அவர்கள் கூறி விடுவார்கள். அவர்கள் தங்களுடைய தந்தையின் சொத்தையும் தங்கள் புத்தியில் வைத்திருக்கிறார்கள். நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள், எனவே நீங்களும் அவருடைய சொத்தை நினைவு செய்கிறீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்வதுடன், வேறு எவருடனும் எந்த உறவுமுறையையும் கொண்டிருக்கக்கூடாது. ஆத்மாவில் முழுப் பாகமும் பதியப்பட்டுள்ளதுடன், அது தொடர்ந்தும் வெளிப்படுகின்றது. ஒவ்வொரு கல்பத்திலும் இப் பிராமண குலத்தில் நீங்கள் நடித்துள்ள பாகங்கள் அனைத்தும் தொடர்ந்தும் வெளிப்படுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் உணவு, இனிப்பு வகைகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம், எனினும், தொடர்ந்தும் சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். நீங்கள் சிவபாபாவின் நினைவில் இருந்;தவாறு அதனைத் தயாரிப்பீர்களாயின், அப்பொழுது அந்த இனிப்பை உண்பவர்களும் நன்மை பெறுவார்கள். சிலவேளைகளில், அவர்கள் காட்சிகளையும் பெறக்கூடும். அவர்கள் பிரம்மாவின் காட்சிகளையும் பெற முடியும். அவர்கள் தூய உணவை உண்பார்களாயின், பிரம்மா, ஸ்ரீகிருஷ்ணர் அல்லது சிவனின் காட்சிகளைப் பெற முடியும். பிரம்மா இங்கிருக்கின்றார். பிரம்மாகுமார்கள், குமாரிகள் என்ற பெயர் உள்ளது. பலர் தொடர்ந்தும் காட்சிகளைப் பெறுகிறார்கள், ஏனெனில் அவர்கள் தந்தையை நினைவுசெய்கிறார்கள். தந்தை உங்களுக்குப் பல வழிமுறைகளைக் காட்டுகின்றார். அவர்கள் தங்களுடைய உதடுகளால் 'இராமா, இராமா' எனக் கூறுகின்றார்கள். நீங்கள் உங்களுடைய உதடுகள் மூலம் எதனையும் கூற வேண்டியதில்லை. அம்மக்கள் தாங்கள் குருநானக்கிற்குப் போக் படைப்பதைப் புரிந்துகொள்வதைப் போன்று, நீங்களும் சிவபாபாவிற்குப் படைப்பதற்காகவே போக் தயாரிக்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவின் நினைவிலிருந்தவாறு அதனைத் தயாரித்தால், பலர் நன்மை பெற முடியும். அந்த உணவில் சக்தி இருக்கின்றது. இதனாலேயே உணவைத் தயாரிப்பவர்களிடம் பாபா வினவுகின்றார்: நீங்கள் சிவபாபாவின் நினைவில் இருந்தவாறு அதனைத் தயாரிக்கின்றீர்களா? 'நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்கின்றீர்களா?" என எழுதப்பட்டுள்ளது. நீங்கள் நினைவிலிருந்தவாறு அதனைத் தயாரித்தால், அதனை உண்பவர்கள் சக்தியைப் பெறுவதுடன், அவர்களுடைய இதயங்களும் தூய்மையாகும். பிரம்மபோஜனும் நினைவுகூரப்படுகின்றது. தேவர்கள் கூட பிராமணர்களால் தயாரிக்கப்பட்ட உணவை விரும்புகிறார்கள். சமயநூல்களிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. பிராமணர்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்பதனால், உங்கள் புத்தி தூய்மையாகி, நீங்கள் சக்தியைப் பெறுகின்றீர்கள். பிரம்மபோஜனிற்குப் பெருமளவு புகழ் உள்ளது. பிரம்மபோஜனின் மகிமையை நன்கு உணர்ந்தவர்கள், தங்கள் உணவுத்தட்டுக்களைக் கழுவி, அந்நீரைப் பருகுகின்றார்கள். அவர்கள் அதனையும் மிக மேன்மையானதாகக் கருதுகின்றார்கள். உண்ணாமல் எவராலும் இருக்க முடியாது. பஞ்சத்தின்போது, மக்கள் உணவில்லாமல் மரணிக்கின்றார்கள். ஆத்மாவே இந்த அங்கங்களின் மூலம் உணவை உண்கின்றார். ஆத்மாவே அனைத்தையும் சுவைக்கின்றார். ஆத்மாவே ஒன்று நல்லதா அல்லது தீயதா எனக் கூறுகின்றார்: இது மிகவும் சுவையானது. இது மிகவும் போசாக்கானது. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, தொடர்ந்தும் அத்தகைய போஜனையும் பெறுவீர்கள். எனவே, சிவபாபாவின் நினைவில் உணவைத் தயாரிக்குமாறு குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவதை நீங்கள் பயிற்சியில் இடவேண்டும். நீங்கள் இப்பொழுது தந்தையின் வீட்டில் இருக்கின்றீர்கள், பின்னர் நீங்கள் புகுந்த வீட்டிற்குச் செல்வீர்கள். சூட்சும வதனத்திற்கு போக் எடுத்துச் செல்லப்படும்போது, அங்கு அவர்கள் (பிராமணர்களும், தேவர்களும்) ஒருவரையொருவர் சந்திக்கின்றார்கள். தேவர்களுக்கே போக் படைக்கப்படுகின்றது. தேவர்கள் அங்கு செல்கின்றார்கள், பிராமணர்களாகிய நீங்களும் அங்கு செல்கின்றீர்கள், அங்கு ஒரு சந்திப்பு இடம்பெறுகிறது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்நாடகம் முற்றிலும் மிகச்சரியாகவே உருவாக்கப்பட்டிருப்பதால் எதனைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நடிகர்கள் அனைவரும் தங்கள் சொந்தப் பாகங்களையே நடிக்கின்றார்கள்.2. ஜீவன்முக்தி அந்தஸ்தை அடைவதற்கும், சதா சந்தோஷமானவர்கள் ஆகுவதற்கும், உள்ளார்த்தமாக ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். எதுவும் பேசாதீர்கள். உணவைத் தயாரிக்கும்போதும், உண்ணும்போதும் நிச்சயமாகத் தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சுயநலம், பொறாமை மற்றும் எரிச்சல் அடைதல் போன்றவற்றிலிருந்தும் விடுபட்டிருப்பதன் மூலம் கோபத்திலிருந்து விடுபடுவீர்களாக.நீங்கள் சேவை செய்வதற்காக சில கருத்துக்களை வழங்கலாம், நீங்களும் சேவை செய்ய முன்வரலாம். ஆனால் அந்தக் கருத்துக்கள் ஆசைகளாக மாற அனுமதிக்காதீர்கள். உங்களின் எண்ணங்கள் ஆசையாக மாறும்போது, உங்களுக்குள் எரிச்சல் தோன்றும். உங்களின் கருத்துக்களைப் பரோபகாரத்துடன் வழங்குங்கள். சுயநலமான நோக்கங்களுடன் அல்ல. நீங்கள் அதைச் சொன்னதால், அது நடக்க வேண்டும் என நினைக்காதீர்கள். நீங்கள் எதையும் செய்வதற்கு முன்வாருங்கள். ஆனால், “ஏன்?” அல்லது “என்ன?” என்ற கேள்விகளுக்குள் செல்லாதீர்கள். அப்போது, ஏனைய சகபாடிகளும் பொறாமை, வெறுப்பு என்ற ரூபங்களில் வருவார்கள். சுயநலத்தாலும், பொறாமையாலும் கூட கோபம் ஏற்படும். அதனால் இப்போது இதில் இருந்து விடுபடுங்கள்.
சுலோகம்:
ஓர் அமைதித் தூதுவராகி, எல்லோருக்கும் அமைதியை வழங்குவதே உங்களின் தொழிலாகும்.