02.10.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, “பாபா” என்பதே அதி இனிமையான வார்த்தையாகும். “பாபா” என்ற வார்த்தை உங்கள் உதடுகளிலிருந்து சதா வெளிப்பட வேண்டும். தொடர்ந்தும் அனைவருக்கும் சிவபாபாவின் அறிமுகத்தைக் கொடுங்கள்.

கேள்வி:
சத்தியயுகத்தில் மனிதர்கள் மாத்திரமன்றி, விலங்குகளும்கூட ஒருபோதும் நோய்வாய்ப் படுவதில்லை, ஏன்?

பதில்:
சங்கம யுகத்தில் பாபா ஆத்மாக்கள் மீதும், எல்லையற்ற உலகின்மீதும் செய்யும் சத்திர சிகிச்சையால் நோய்களின் பெயரும், சுவடுகளும் மறைந்து விடுகின்றன. தந்தையே அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் ஆவார். தற்போது உலகம் நோய்களால் நிறைந்திருக்கின்றது. பின்னர், அவ்வுலகில் துன்பத்தின் பெயரோ, சுவடோ எஞ்சியிருக்காது. இவ்வுலகின் துன்பத்தில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு, நீங்கள் மிக மிக தைரியசாலிகளாக இருக்க வேண்டும்.

பாடல்:
உங்களைக் கண்டுகொண்டதால், நாங்கள் அனைத்தையுமே கண்டுகொண்டோம். ஆகாயம், பூமி அனைத்தும் எங்களுக்கே சொந்தம்.

ஓம் சாந்தி.
நீங்கள் இரு தடவைகள்கூட “இரட்டை ஓம் சாந்தி” கூறலாம். ஆத்மா தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார்: இந்த ஆத்மாவாகிய நான் ஓர் அமைதி சொரூபம். எனது வதிவிடம் அமைதிதாமம், நாங்கள் அனைவரும் பாபாவின் குழந்தைகள். ஆத்மாக்கள் எல்லோரும் “ஓம்” எனக் கூறுகின்றனர். அங்கு, நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நாங்கள் இங்கு வரும்போது சகோதர, சகோதரிகள் ஆகுகின்றோம். உறவுமுறையானது இப்பொழுது சகோதர, சகோதரியுடன் ஆரம்பிக்கின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள். அத்துடன் நீங்கள் பிரம்மாவினதும் குழந்தைகள் என்பதால் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். நீங்கள் வேறு எந்த உறவுமுறைகளையும் கொண்டிருக்கவில்லை. பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மா குமாரர்களும், குமாரிகளும் ஆவர். இப்பழைய உலகை மாற்றுவதற்காக அவர் இந்நேரத்திலேயே வருகின்றார். பிரம்மா மூலம் மாத்திரமே தந்தை புதிய உலகைப் படைக்கின்றார். நீங்கள் பிரம்மாவுடனும் ஓர் உறவுமுறையைக் கொண்டிருக்கின்றீர்கள். இவ்வழிமுறை மிக நல்லது. நீங்கள் அனைவரும் பிரம்மா குமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். அத்துடன் உங்களை சகோதர, சகோதரிகளாகக் கருதுங்கள். குற்றப்பார்வை எதுவும் இருக்கக்கூடாது. இங்கு, குமார்களும், குமாரிகளும் வளர்ந்து வரும்போது, அவர்களின் கண்கள் தொடர்ந்தும் குற்றம் உடையதாகி, அவர்கள் குற்றச் செயல்களைச் செய்கின்றார்கள். இராவண இராச்சியத்திலேயே குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. சத்திய யுகத்தில் குற்றச் செயல்கள் எதுவும் கிடையாது. “குற்றம்” என்ற வார்த்தைகூட அங்கு கிடையாது. இங்கு பல குற்றச் செயல்கள் உள்ளன. அதற்காக நீதிமன்றங்களும் உள்ளன. அங்கு நீதிமன்றங்கள் போன்றவை இல்லை. சிறைச்சாலைகள், பொலிஸ் அல்லது திருடர்கள் போன்றவை அங்கு இல்லாதிருப்பது ஓர் அற்புதமேயாகும். இத்துன்ப விடயங்கள் அனைத்தும் இங்கேயே இடம்பெறுகின்றன. இதனாலேயே இது இன்ப துன்பம், வெற்றி தோல்வி பற்றிய நாடகம் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். மாயையால் தோற்கடிக்கப்படுபவர்கள் அனைத்தாலும் தோற்றுப் போகிறார்கள் என்பது நினைவு கூரப்படுகின்றது. தந்தை வந்து, அரைக் கல்பத்திற்கு மாயையை வெற்றி கொள்ளச் செய்கின்றார். பின்னர் நீங்கள் அரைக் கல்பத்திற்குத் தோற்கடிக்கப்பட வேண்டும். இது எதுவும் புதிதல்ல. இது சில சதங்கள் பெறுமதி வாய்ந்த சாதாரணமான நாடகமாகும். பின்னர் நீங்கள் என்னை நினைவு செய்து, அரைக் கல்பத்திற்கு உங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் இராவண இராச்சியத்தில் என்னை மறக்கின்றீர்கள். பாரத மக்கள் எதிரியாகிய இராவணனின் கொடும்பாவியை ஒவ்வொரு வருடமும் எரிக்கின்றனர். பாரத மக்கள் பலர் இருக்கின்ற நாடுகளிலும் அவர்கள் அந்தக் கொடும்பாவியை எரிக்கின்றனர். இது பாரத மக்களின் சமயப் பண்டிகை என அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் தஷேராவைக் (இராவணனின் கொடும்பாவியை எரித்தல்) கொண்டாடுகின்றனர். எனவே, அது எல்லைக்கு உட்பட்ட விடயம் எனக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப் படுத்த வேண்டும். இப்பொழுது இலங்கையில் மாத்திரமன்றி, முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது. உலகம் மிகப் பெரியது. முழு உலகமும் கடலால் சூழப்பட்டுள்ளது எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். எருது ஒன்று தனது ஒரு கொம்பால் உலகைத் தாங்கி நிற்பதாகவும், அந்த எருது களைப்பு அடையும்போது, அது மற்றைய கொம்பிற்கு அதை மாற்றுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அப்படி எதுவுமே இல்லை. உலகம் நீரால் சூழப்பட்டுள்ளது, சுற்றிவர எங்கும் நீர் மாத்திரமே உள்ளது. இப்பொழுது முழு உலகமும் இராவண இராச்சியமாகும். எனவே, தந்தை இராம இராச்சியத்தை அல்லது கடவுளின் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்காக மீண்டும் வந்திருக்கின்றார். நீங்கள் ஈஸ்வரனைப் (கடவுள்) பற்றிப் பேசும்போது, அவரே சர்வசக்திவான் என்றும், அவரால் அனைத்தையும் செய்யமுடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அப்புகழ் அவசியமற்றது. அவர்மீது அவ்வளவு அன்பு கிடையாது. இங்கு, கடவுள் தந்தை என அழைக்கப்படுகின்றார். “பாபா” என்று கூறும்போது, ஓர் ஆஸ்தியைப் பெறும் விடயம் உள்ளது. சிவபாபா கூறுகின்றார்: நீங்கள் எப்பொழுதும் “பாபா, பாபா” என்று கூறவேண்டும். “ஈஸ்வரன்”, “பிரபு” போன்ற வார்த்தைகளை மறந்துவிடுங்கள். பாபா கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். நீங்கள் கண்காட்சிகளில் விளங்கப்படுத்தும்போது, சிவபாபாவின் அறிமுகத்தை மீண்டும் மீண்டும் கொடுங்கள். சிவபாபா மாத்திரமே அதிமேலானவர் ஆவார். அவர் தந்தையாகிய கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். “பாபா” என்ற வார்த்தையே அனைத்திலும் அதி இனிமையானது. உங்கள் வாயிலிருந்து “சிவபாபா, சிவபாபா” என்ற வார்த்தை தொடர்ந்தும் வெளிப்படவேண்டும். வாய் எனும்போது அது மனிதர்களுடையது மாத்திரமே ஆகும். அது பசுவின் வாயாக இருக்க முடியாது. நீங்கள் சிவசக்திகள். உங்கள் கமல வாயிலிருந்து ஞானாமிர்தம் வெளிப்படுகின்றது. உங்கள் பெயரைப் போற்றச் செய்வதற்காக அவர்கள் கௌமுக்கை (பசுவின் வாய்) குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கங்கைகளைப் பற்றி இவ்வாறு கூறுவதில்லை. இப்பொழுதே கமல வாயிலிருந்து அமிர்தம் வெளிப்படுகின்றது. நீங்கள் ஒரு தடவை ஞானாமிர்தத்தைப் பருகிவிட்டால், அதன் பின்னர் நஞ்சைப் பருகக்கூடாது. அமிர்தத்தைப் பருகுவதால் நீங்கள் தேவர்கள் ஆகின்றீர்கள். நான் அசுரர்களை தேவர்கள் ஆக்குவதற்காக இப்பொழுது வந்திருக்கின்றேன். நீங்கள் இப்பொழுது தேவ சமுதாயத்தினர் ஆகுகின்றீர்கள். எவ்வாறு அல்லது எப்பொழுது சங்கம யுகம் வருகின்றதென்பதை எவரும் அறியமாட்டார்கள். பிரம்மா குமாரர்களும், குமாரிகளுமாகிய நாங்கள் அதி மேன்மையான சங்கம யுகத்திற்கு உரியவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனைய அனைவரும் கலியுகத்திற்கு உரியவர்கள். உங்களில் வெகு சிலரே இருக்கின்றீர்கள். உங்களிடம் விருட்சம் பற்றிய ஞானம் உள்ளது. முதலில் விருட்சம் சிறிதாக இருந்து பின்னர் வளர்கின்றது. அவர்கள் பிறப்பைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல கண்டுபிடிப்புக்களை உருவாக்குகின்றனர். எவ்வாறாயினும், மனிதர்கள் ஒன்று நிகழவேண்டும் என நினைக்க, அதற்குப் பதிலாக இன்னொன்று நிகழ்கின்றது. அனைவரும் மரணித்தாக வேண்டும். தாங்கள் மிகச் சிறந்த அறுவடை செய்வோம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், மழை வரும்போது பெருமளவு சேதம் விளைவிக்கப்படுகின்றது. இயற்கை அனர்த்தங்கள் பற்றி எவரும் புரிந்து கொள்வதில்லை. எதற்கும் உத்தரவாதம் கிடையாது. அறுவடை காலத்தில் ஆலங்கட்டி மழையுடன் பலத்த புயல் அடிக்கும் போது சேதம் விளைவிக்கப்படுகின்றது. மழை இல்லாமல் போனாலும்கூட சேதம் ஏற்படவே செய்கின்றது. அவை இயற்கை அனர்த்தங்கள் எனப்படுகின்றன. அவ்வாறு பல இடம்பெறும். அவற்றில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு, நீங்கள் மிகவும் தைரியசாலிகளாக இருக்க வேண்டும். சத்திர சிகிச்சைக்கு உள்ளாகும் ஒருவரைப் பார்க்க முடியாத நபர் மயங்கி வீழ்ந்து விடுகின்றார். இந்த அழுக்கான உலகம் முழுவதும் இப்பொழுது சத்திரசிகிச்சைக்கு உள்ளாகப் போகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் அனைவருக்கும் சத்திரசிகிச்சை செய்ய வந்துள்ளேன். முழு உலகமும் நோய்வாய்ப்பட்டுள்ளது. தந்தை அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் என்றும் அழைக்கப்படுகின்றார். எதிர்கால உலகில் வாழப்போகும் எவரும் ஒருபோதும் வேதனையையோ, துன்பத்தையோ அனுபவிக்காத வகையில், அவர் இப்பொழுது முழு உலகிலும் ஒரு சத்திர சிகிச்சையை மேற்கொள்கின்றார். அவர் அத்தகைய மகத்தான சத்திர சிகிச்சையாளர் ஆவார். அவரே ஆத்மாக்கள் மீதும், எல்லையற்ற உலகின் மீதும் சத்திரசிகிச்சை செய்பவர் ஆவார். அங்கு மனிதர்கள் மாத்திரமன்றி விலங்குகள்கூட ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. தந்தை தனது பாகம் என்னவென்றும், குழந்தைகளின் பாகம் என்னவென்றும் விளங்கப்படுத்துகின்றார். இது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய நாடகம் எனப்படுகின்றது. நீங்கள் இப்பொழுதே இதனைப் பெறுகின்றீர்கள். முதலில், குழந்தைகளாகிய நீங்கள் இந்த சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இன்று சற்குருவார் தினம். நீங்கள் எப்பொழுதும் உண்மையையே பேசவேண்டும். வியாபாரத்திலும்கூட கூறப்படுகின்றது: உண்மை பேசுங்கள்! ஏமாற்றாதீர்கள்! இருந்த போதிலும், அவர்கள் பேராசைப்பட்டு, கூடுதலான விலை கூறி பேரம் பேசுகின்றார்கள். அவர்கள் ஒருபோதும் உண்மை பேசுவதில்லை, பொய்களையே பேசுகின்றனர். இதனாலேயே அவர்கள் சத்தியமானவரை நினைவு செய்கின்றனர். கூறப்படுகின்றது: சத்தியமானவரின் பெயர் உங்களுடனேயே இருப்பதாக! சத்தியமான பாபா மாத்திரமே ஆத்மாக்களாகிய உங்களைத் தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்வார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது சத்தியத்தின் சகவாசத்தினுள் வந்திருக்கின்றீர்கள். எனவே, நீங்கள் அவருடன் திரும்பிச் செல்வீர்கள். சத்தியமான சிவபாபா வந்துவிட்டார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் ஆத்மாக்களாகிய எங்களைத் தூய்மையாக்கி அனைவரையும் தன்னுடன் ஒன்றாகத் திரும்ப அழைத்துச் செல்வார். சத்திய யுகத்தில், இராமரின் பெயரோ, சத்தியமானவரின் பெயரோ உங்களுடன் இருப்பதாக நீங்கள் கூறமாட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்காகவே வந்திருக்கின்றேன். நான் உங்களை எனது கண்களில் அமர்த்தி, வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்கின்றேன். அது இக்கண்களன்றி, மூன்றாவது கண்ணாகும். உங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல தந்தை இந்நேரத்தில் வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது சங்கரரின் ஊர்வலமல்ல, இது சிவனின் குழந்தைகளின் ஊர்வலமாகும். அவர் அத்துடன் கணவன்மாருக்கு எல்லாம் கணவன் ஆவார். அவர் கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் மணவாட்டிகள், நானே மணவாளன். நீங்கள் அனைவரும் காதலிகள், நானே அன்பிற்கினியவர். அன்பிற்கினியவர் ஒருவரே ஆவார். நீங்கள் அரைக் கல்பமாக அன்பிற்கினியவரான எனது காதலிகளாக இருந்து வந்தீர்கள். நான் இப்பொழுது வந்துவிட்டேன். நீங்கள் அனைவரும் பக்தர்கள், கடவுளே பக்தர்கள் அனைவரையும் பாதுகாப்பவர். ஆத்மாக்கள் தங்கள் சரீரங்கள் மூலம் பக்தி செய்கின்றனர். சத்திய, திரேதா யுகங்களில் பக்தி கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது பக்தியின் பலன் கொடுக்கப்படுகின்றது. அதற்கான வெகுமதியை நீங்கள் சத்திய யுகத்தில் அனுபவிக்கின்றீர்கள். அவரே உங்களது அன்பிற்கினியவர். அவர் உங்களைத் தன்னுடன் திரும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்வார், பின்னர் நீங்கள் இப்பொழுது செய்யும் முயற்சிக்கேற்ப உங்களின் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவீர்கள். இது எங்கும் எழுதப்படவில்லை. சங்கரர் பார்வதிக்கு அமரத்துவக் கதையைக் கூறியதாக அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் அனைவரும் பார்வதிகள். நானே அமரத்துவக் கதையை உங்களுக்குக் கூறுகின்ற அமரத்துவப் பிரபு ஆவேன். அந்த ஒருவர் மாத்திரமே அமரத்துவப் பிரபு என அழைக்கப்படுகின்றார். தந்தையே அதிமேலானவர். அவருக்கென ஒரு சரீரம் இல்லை. அவர் கூறுகின்றார்: அமரத்துவப் பிரபுவாகிய நான் குழந்தைகளாகிய உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகின்றேன். சங்கரரும், பார்வதியும் எவ்வாறு இங்கு வந்திருக்க முடியும்? அவர்கள் சூரியன், சந்திரனின் ஒளியேதும் அற்ற சூட்சும வதனத்திலேயே உள்ளனர். உண்மையான தந்தை இப்பொழுது உங்களுக்கு உண்மைக் கதையைக் கூறுகின்றார். வேறு எவராலுமன்றி, தந்தையால் மாத்திரமே உண்மைக் கதையை உங்களுக்குக் கூறமுடியும். விநாசம் இடம்பெறுவதற்குக் காலம் எடுக்கும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உலகம் மிகப் பெரியது. பல கட்டடங்கள் வீழ்ந்து அழியும். பூகம்பங்கள் மூலம் பெருமளவு சேதம் விளைவிக்கப்படும். பலர் மரணிப்பார்கள். பின்னர், உங்களின் சிறிய விருட்சம் மாத்திரமே எஞ்சியிருக்கும். டெல்கி பரிஸ்தான் (தேவதைகளின் பூமி) ஆகும். பரிஸ்தானில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் மாத்திரமே இருக்கும். அங்கு அத்தகைய பெரிய மாளிகைகள் கட்டப்படும். நீங்கள் எல்லையற்ற சொத்துக்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு எவ்வித செலவும் ஏற்படாது. பாபா கூறுகின்றார்: இவரது (பிரம்மா) வாழ்க்கைக் காலத்தில் தானியங்கள் மிக மலிவாக இருந்தன. எனவே, சத்திய யுகத்தில் எவ்வளவு மலிவாக இருக்கும் எனச் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொருவரினதும் வீடும், நிலமும் டெல்லியின் அளவிற்குப் பெரிதாக இருக்கும். உங்களின் இராச்சியம் இனிய நீர் கொண்ட ஆற்றங்கரையில் இருக்கும். உங்கள் ஒவ்வொருவரிடமும் என்னதான் இருக்காது? உங்களிடம் எப்பொழுதும் உணவு இருக்கும். அங்கு பழங்களும், பூக்களும் எவ்வளவு பெரிதாக இருக்கும் என நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். நீங்கள் அங்கு சென்று அமிர்தத்தைப் (சுபிராஸ்) பருகிவிட்டு திரும்பி வந்தீர்கள். அங்கு ஒரு தோட்டக்காரர் இருந்ததாக அவர்கள் கூறுவதுண்டு. தோட்டக்காரர் நிச்சயமாக வைகுந்தத்திலும் ஆற்றங்கரைகளிலும் இருப்பார். அங்கு வெகுசிலரே இருப்பார்கள். இப்பொழுது பல பில்லியன் கணக்கானோர் உள்ளனர். எவ்வாறாயினும், பின்னர் அங்கு 900,000 பேர் மாத்திரமே இருப்பார்கள். அனைத்தும் உங்களுக்கே சொந்தமாக இருக்கும். தந்தை அத்தகையதோர் இராச்சியத்தை எங்களுக்குக் கொடுக்கின்றார். எவராலும் அதை எங்களிடம் இருந்து அபகரிக்க முடியாது. நீங்கள் பூமிக்கும் ஆகாயத்திற்கும் அதிபதிகளாக இருப்பீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். கேட்கும்போது சந்தோஷப் பாதரசத்தை உயர வைக்கின்ற 6 முதல் 8 வரையான அத்தகைய பாடல்கள் உள்ளன. உங்கள் ஸ்திதி நன்றாக இல்லாதிருப்பதை உணர்ந்தால் அப்பாடல்களில் ஒன்றைப் போடுங்கள், அவை சந்தோஷப் பாடல்கள் ஆகும். அவற்றின் அர்த்தத்தைக்கூட நீங்கள் அறிவீர்கள். உங்களை முகமலர்ச்சியாக வைத்திருப்பதற்காக பாபா பல வழிகளை உங்களுக்குக் காண்பிக்கின்றார். சிலர் தங்களிடம் அதிக சந்தோஷம் இல்லை என்றோ, அல்லது தாங்கள் மாயையின் புயல்களை அனுபவம் செய்வதாகவோ பாபாவிற்கு எழுதுகின்றனர். ஆ! ஆனால் மாயையின் புயல்கள் வரும்போது ஏதாவது பாடலைப் போடுங்கள். பெரிய ஆலயங்களில் அவர்கள் மக்களை மகிழ்விப்பதற்காக நுழைவாயிலில் பாடலைப் போட்டுவிடுகின்றனர். மும்பாயில் மாதவ்பாக் என்ற இடத்தில் இலக்ஷ்மி நாராயணனின் ஆலய நுழைவாயிலில் அவர்கள் தொடர்ந்தும் பாடலைப் போடுகின்றனர். நீங்கள் ஏன் இத்திரைப்படப் பாடல்களைப் போடுகின்றீர்கள் எனச் சிலர் கேட்கின்றனர். நாடகத்தின்படி, இவை எங்களுக்கு மிகவும் பயனுள்ளவை என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள். அவற்றைக் கேட்பதால் நீங்கள் சந்தோஷம் அடைகின்றீர்கள். எவ்வாறாயினும், சில குழந்தைகள் அவற்றை மறந்து விடுகின்றனர். நீங்கள் வீட்டில் சோகமாக இருக்கும்போது, இப்பாடல்களைக் கேட்டு சந்தோஷம் அடையுங்கள். இவை மிகவும் பெறுமதி வாய்ந்த விடயங்களாகும். ஒருவரின் வீட்டில் சண்டை சச்சரவுகள் தொடருமாயின், அவர்களிடம் கூறுங்கள்: கடவுள் கூறுகின்றார்: காமமே மிகக் கொடிய எதிரி. இதை வெற்றி கொள்வதால் நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பின்னர், மலர் தூவலும், வெற்றி முழக்கமும் இருக்கும். பொன் மலர்கள் தூவப்படும். நீங்கள் இப்பொழுது முட்களிலிருந்து பொன்மலர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் அவதாரம் எடுப்பீர்கள். மலர்கள் தூவப்படுகின்றன என்றில்லை. நீங்களே மலர்களாக கீழே இறங்குகின்றீர்கள். பொன்மலர்கள் தூவப்படுவதாக மக்கள் நினைக்கின்றனர். ஓர் இளவரசர் வெளிநாட்டுக்குச் சென்று விருந்து கொடுத்ததுடன், விருந்திற்காக பொன் மலர்களையும் செய்வித்தார். இவை அனைவர் மீதும் தூவப்பட்டன. அவர் தனது சந்தோஷத்திற்காக அதிகளவு விருந்தோம்பலைச் செய்தார். அவர் நிஜத் தங்கத்தாலேயே அவற்றைச் செய்வித்தார். பாபாவிற்கு அவரின் அந்தஸ்து போன்றவை மிக நன்றாகத் தெரியும். உண்மையில், நீங்களே மலர்களாகக் கீழே இறங்குகின்றீர்கள். பொன் மலர்களாகிய நீங்கள் மேலிருந்து கீழே இறங்குகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உலக இராச்சியம் என்ற மாபெரும் அதிர்ஷ்டலாபச் சீட்டை வெல்கின்றீர்கள். ஒரு லௌகீகத் தந்தை, “நான் உங்களுக்காகவே இதைக் கொண்டு வந்திருக்கின்றேன்” எனக் கூறும்போது, அவரது குழந்தைகள் மிகவும் சந்தோஷம் அடைகின்றனர். பாபா கூறுகின்றார்: நான் உங்களுக்காக சுவர்க்கத்தைக் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் அங்கு ஆட்சி புரிவீர்கள். எனவே, நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். பாபா ஒருவருக்கு சிறிய பரிசொன்றைக் கொடுத்தபோது, அவர் கூறினார்: பாபா, நீங்கள் எங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றீர்கள். அதனுடன் ஒப்பிடும்போது, இப்பரிசு எம்மாத்திரம்? ஆ, எனினும் நீங்கள் சிவபாபாவின் நினைவுச் சின்னத்தை வைத்திருந்தால், உங்களால் சிவபாபாவை நினைவு செய்து, பல மில்லியன்களைப் பெறமுடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் சத்திய சகவாசத்துடன் வீடு திரும்ப வேண்டும். எனவே, சதா உண்மையானவராக இருங்கள். ஒருபோதும் பொய் பேசாதீர்கள்.

2. பிரம்மாபாபாவின் குழந்தைகளாகிய நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். எனவே, நீங்கள் ஒருபோதும் குற்றச் செயல்களைச் செய்யக்கூடாது. சகோதரர்கள், மற்றும் சகோதர, சகோதரிகள் என்பது தவிர்ந்த ஏனைய உறவுமுறைகள் பற்றிய எந்த விழிப்புணர்வும் இருக்கக்கூடாது.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்ரர் திரிகாலதரிசியாகி, உங்களின் நினைவெனும் சக்தியால் உங்களுடையதும் மற்றவர்களினதும் மேன்மையான முயற்சிகளின் பெறுபேற்றை அறிந்தவர் ஆகுவீர்களாக.

பூமியில் இருந்து விண்வெளிக்குச் செல்பவர்களைப் பற்றிய எல்லா விடயங்களையும் விஞ்ஞானிகள் அறிந்திருப்பதைப் போல், திரிகாலதரிசிக் குழந்தைகளான நீங்கள் உங்களின் மௌனத்தால், அதாவது, உங்களின் நினைவெனும் சக்தியால், உங்களின் சொந்த மேன்மையான முயற்சிகளையும் ஸ்திதியைப் பற்றியும் அத்துடன் மற்றவர்களின் முயற்சிகள், ஸ்திதியைப் பற்றியும் மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். தெய்வீகப் புத்தியைக் கொண்டிருப்பதாலும் உங்களை நினைவின் தூய எண்ணங்களில் ஸ்திரப்படுத்திக் கொள்வதாலும் நீங்கள் திரிகாலதரிசியாக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். அப்போது நீங்கள் நடைமுறை வடிவில் இடுவதற்காகப் புதிய திட்டங்கள் தானாகவே வெளிப்படும்.

சுலோகம்:
எல்லோருடனும் ஒத்துழைப்பவராக இருங்கள். நீங்கள் இயல்பாகவே தொடர்ந்து அன்பைப் பெறுவீர்கள்.

அவ்யக்த சமிக்ஞை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.

எவருமே தமக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பு இல்லை எனச் சொல்ல முடியாது. ஒருவரால் பேச முடியாவிட்டால், அவரால் தனது மனதால், தனது மனோபாவத்தால் மற்றும் சந்தோஷமான ஸ்திதியால் சேவை செய்ய முடியும். உங்களின் ஆரோக்கியம் நன்றாக இல்லா விட்டாலும், வீட்டில் இருந்தவண்ணம் ஒத்துழையுங்கள். உங்களின் மனதில் தூய எண்ணங்களின் களஞ்சியத்தைச் சேமித்து, நல்லாசிகளால் நிரம்பி இருங்கள்.