02.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் எப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். தூய்மை அற்றவர்களுக்குத் தூய்மை ஆகுவதற்கான பாதையைக் காட்டுங்கள்.
கேள்வி:
முயற்சி செய்யும்போது, விவேகமான, புத்திசாலிக் குழந்தைகள் எந்தவொரு ஸ்ரீமத்தில் நிச்சயமாகக் கவனம் செலுத்துவார்கள்?பதில்:
உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைவதற்காகச் சதா நினைவில் இருப்பதற்கான முயற்சியைச் செய்த வண்ணம் இருப்பார்கள். விவேகமான குழந்தைகள் நிச்சயமாக இந்த ஸ்ரீமத்தில் கவனம் செலுத்துவார்கள்: நான் ஒரு கருவியாகிப் பல ஆத்மாக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். பலருக்கு நன்மை செய்பவர்கள் இயல்பாகவே தங்களுக்கும் நன்மை செய்து கொள்கிறார்கள்.பாடல்:
நான் எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்த வண்ணம் வந்துள்ளேன்….ஓம் சாந்தி.
குழந்தைகளான நீங்கள் புதிய உலகம், பழைய உலகம் இரண்டையும் உங்களுடைய புத்தியில் வைத்திருக்கிறீர்கள். ஏனெனில் பழைய உலகம் இப்போது அழியப் போகிறது என்பதையும், தந்தை புதிய உலகை உருவாக்குகிறார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சிவனின் பிறந்தநாள் கொண்டாடுப்படுகிறது என்றும் சிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது என்றும் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். இந்த இரு வார்த்தைகளின் அர்த்தம் உலகிலுள்ள எவருக்கும் தெரியாது. சிவஜெயந்தி என்றால் சிவனின் பிறந்த நாளாகும். பொதுவாக மக்கள் மனிதர்களின் பிறந்த நாளையே கொண்டாடுவார்கள். சிவன் பிறவி எடுப்பதில்லை. அவர் எவ்வாறு பிறப்பு எடுத்தார் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்ததாக நினைவுகூரப்படுகிறது. ஆனால் சிவனின் பிறப்பைப் பற்றி எந்த விவரமும் கிடையாது. பரமாத்மாவாகிய பரமதந்தை, பிரம்மாவினூடாக ஸ்தாபனை செய்கிறார் என்பது நினைவுகூரப்படுகிறது. அவர் மேலே சூட்சும வதனத்தில் இருந்தவண்ணம் எவரையாவது தூண்டுகிறாரா? அது சாத்தியமற்ற விடயம்! மக்கள் தூய்மையாக்குகின்ற தந்தையை நினைவு செய்கிறார்கள். தந்தையே வந்து இதனை விளங்கப்படுத்தும் போது மட்டுமே இது மனிதர்களின் புத்திகளில் பதிகிறது. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருப்பதனால், தந்தை சங்கமயுகத்திலேயே வருகிறார். தந்தை வந்துவிட்டார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். ஆனால் எவரும் இதனைப் புரிந்து கொள்வதில்லை. அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்டபோது, எவரும் பரமாத்மா உண்மையில் மீண்டும் ஒருமுறை பிரம்மாவினூடாக பாரதத்தை மேன்மையான சத்தியயுக உலகமாக மாற்றுகிறார் என்று எழுதவில்லை. தந்தை வந்துள்ளார் என்பதும், அவர் சுவர்க்க இராச்சிய ஆஸ்தியை வழங்குகிறார் என்பதும், அவர் இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் என்பதையும் எவரும் மிகச்சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கானவர்கள் வருகிறார்கள். சிலர் தங்குகிறார்கள். அவர்களிலும் எண்ணிக்கை தொடர்ந்து குறைவடைகிறது. அவர்களால் இலகுவான இதனையேனும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவர்களின் புத்திகள் தமோபிரதான் ஆகிவிட்டது. தந்தை கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அதனால் உங்களுடைய பாவங்கள் அழியும். இது நீங்கள் சதோபிரதான் ஆகக்கூடிய யோக அக்கினி ஆகும். எப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். இராவணனே உங்களைப் பாவச் செயல்களைச் செய்ய வைக்கிறான். அவனுடைய வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள். எவருக்கும் துன்பத்தை ஏற்படுத்தாதீர்கள். தந்தை தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்காக வந்துள்ளார். பாபா கூறுகிறார்: இதுவும் உங்களுடைய வியாபாரம் ஆகும். இரவுபகலாக, எவ்வாறு உங்களால் தூய்மை அற்றவர்களுக்குத் தூய்மையாகுவதற்கான பாதையைக் காட்ட முடியும் என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இந்தப் பாதை மிகவும் இலகுவானது. யோக சக்தியால் மட்டுமே உங்களால் சதோபிரதான் ஆகமுடியும். இதுவே அநாதியான சத்திரசிகிச்சை நிபுணரின் மருந்தாகும். இது மந்திரம் போன்ற எதுவும் அல்ல. இது தந்தையை நினைவு செய்வது மட்டுமே ஆகும். அனைத்தும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்படுகிறது. இது உங்களுக்கு ஒவ்வொரு கல்பமும் விளங்கப்படுத்தப்படுகிறது. ஞானம், பக்தி, விருப்பமின்மை என நினைவு கூரப்படுகிறது. எதில் விருப்பமின்மை? இந்த அழுக்கான பழைய உலகின் மீதில் இருந்தாகும். இந்தப் பழைய உலகில் ஆத்மாக்கள் முற்றிலும் பாவம் நிறைந்தவர்கள் ஆகிவிட்டார்கள். தூய்மையாக்குபவரே, விடுதலையாக்குபவரே, வாருங்கள்! எனக் கூறப்படுகிறது. உங்களை எதில் இருந்து விடுதலை ஆக்க வேண்டும்? துன்பத்தில் இருந்தும், இராவண இராச்சியத்தில் இருந்தும் ஆகும். இராவணன் ஆங்கிலத்தில் ஈவில் என்று அழைக்கப்படுகிறான். நீங்கள் கூறுகிறீர்கள்: எங்களைச் சாத்தானின் இராச்சியத்தில் இருந்து விடுவித்துத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். எமது வழிகாட்டியாகி எங்களை உங்களுடன் திரும்பவும் அழைத்துச் செல்லுங்கள். எவ்வாறு ஒருவர் இன்னொருவரைச் சிறையில் இருந்து விடுவித்து மிகுந்த அன்புடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வாரோ, அதேபோன்று, எல்லையற்ற தந்தை இந்த உத்தரவாதத்தைக் குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் வழங்குகிறார்: நான் உங்கள் அனைவரையும் சிறையில் இருந்து விடுவிக்க வந்துள்ளேன். இது மேளாக்களிலும் கண்காட்சிகளிலும் மாதிரியுருக்களாகச் செய்து காட்டப்பட்டுள்ளன. அனைவரும் சிறையில் அகப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை மிக இலகுவாக உங்களுக்கு விளங்கப்படுத்தி, உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகிறார். அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். உங்களுடைய பாவங்கள் அழிவதுடன், நீங்கள் சத்தியயுக அதிபதிகளாகவும் ஆகுவீர்கள். இது மிகவும் இலகுவானது! எந்தவொரு மதத்தைச் சார்ந்த எவராலும் இதனைப் புரிந்து கொள்ள முடியும். எப்போது இன்ன மதம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும். இறுதியில், ஆத்மாக்கள் அனைவரும் தமது சொந்தப் பிரிவிற்குச் செல்வார்கள். அதன்பின்னர் தேவ தர்மம் ஆரம்பம் ஆகும். ஸ்தாபனை பிரம்மாவினூடாக இடம்பெறுகிறது என்று எழுதப்பட்டுள்ளது. திரிமூர்த்தி படமே முதலாம் இலக்கப் படமாகும். திரிமூர்த்தி மற்றும் சக்கரப் படங்களை உபயோகித்து உங்களால் மிகத் தெளிவாக விளங்கப்படுத்த முடியும். அமைதி தாமம், சந்தோஷ தாமம், அத்துடன் இந்த துன்ப தாமம் என்பவை உள்ளன என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. துன்ப உலகின் மீது விருப்பமின்மை இருக்க வேண்டும். பக்தியெனும் இரவு முடிவிற்கு வந்து, சத்திய, திரேதா யுகங்கள் என்ற பகல் ஆரம்பமாகப் போகிறது. தந்தை கூறுகிறார்: பழைய உலகம் இப்போது அழியப்போகிறது. எனவே நீங்கள் அதில் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். அது எல்லைக்கு உட்பட்ட விருப்பமின்மை. ஆனால் இதுவோ எல்லையற்ற விருப்பமின்மை. அந்த சந்நியாசிகள் புது உலகை உருவாக்குவதில்லை. தந்தையே படைப்பவர் ஆவார். அவர் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கும் தந்தையான சுவர்க்கக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். வேறு எவரும் கிடையாது. இந்தக் கல்வி சத்தியயுக இராச்சியத்தைப் பெறுவதற்காகவே ஆகும். ஞானக்கடல் வந்து உங்களுக்கு இந்த ஞானத்தை வழங்குகிறார். அவர் மட்டுமே ஞானக்கடல் என்றும், தூய்மையாக்குபவர் என்றும் அழைக்கப்படுகிறார். அவரிடம் உள்ள ஞானம் என்ன? அது எவ்வாறு சட்டத்தரணியாகவோ அல்லது சத்திரசிகிச்சை நிபுணராகவோ ஆகுவது என்ற ஞானமா? உலகின் ஆரம்பம், மத்தி, இறுதிக்குரிய ஞானம் பரமாத்மாவிடம் உள்ளது. சட்டத்தரணியாகவோ அல்லது பொறியியலாளராகவோ ஆகுவதற்கான அனைத்து ஞானமும் அதில் உள்ளடங்கி உள்ளது. ஞானத்தின் பிரதானமான வெண்ணெய் இந்த இறை ஞானமாகும். லௌகீகக் கல்வியைக் கற்றுப் பொறியியலாளர் போன்றவை ஆகுவது பெரிய விடயமல்ல. சத்தியயுகச் சம்பிரதாயங்களும், வழக்கங்களும் எதுவாயினும் அவை அங்கு தொடரும். சென்ற கல்பத்தில் நாம் கட்டிய மாளிகைகளை மீண்டும் கட்டுவோம். அது சத்தியயுகம் என்று அழைக்கப்படுகிறது. அந்த இடத்தின் சம்பிரதாயங்களும் நடைமுறைகளும் என்னவென்று மக்களுக்குத் தெரியாது. அங்கு எவ்வாறு வைரங்களும் இரத்தினங்களும் பதித்த மாளிகைகள் கட்டப்படுகின்றன? அங்குள்ளவர்கள் பதினாறு சுவர்க்கக்கலைகள் நிரம்பியவர்கள், முற்றிலும் விகாரம் அற்றவர்கள் என்று நினைவுகூரப்படுகிறார்கள். அங்குள்ள சம்பிரதாயங்கள், நடைமுறைகளுக்கேற்ப இராச்சியம் தொடரும். அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் தமது சொந்தப் பாகங்களை நடிப்பார்கள். அங்கு நீங்கள் எவ்வாறு கட்டடங்களைக் கட்டுவீர்கள் என்பதும், எவ்வாறு அங்கு வாழுவீர்கள் என்பதும் அனைத்தும் நிச்சயிக்கப்பட்டது. பழைய உலகின் சம்பிரதாயங்கள் தொடர்வதைப் போன்று, புதிய உலகின் சம்பிரதாயங்களும் அங்கு தொடரும். இங்கு, அசுரர்கள் இருக்கிறார்கள். அங்கு தேவர்கள் இருக்கிறார்கள். இந்த விடயங்கள் எதுவும் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் ஞானத்தையும் பக்தியையும் பற்றிப் பேசுகிறார்கள். பிரம்மாவின் பகலைப் பற்றியும், இரவைப் பற்றியும் பேசுகிறார்கள். பிரம்மாவின் பெயரை மட்டுமே அவர்கள் குறிப்பிடுகிறார்களே தவிர விஷ்ணுவின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. பிரம்மா பின்னர் விஷ்ணு ஆகுகிறார். பிரம்மாவும் சரஸ்வதியுமே விஷ்ணு ஆகும். இலக்ஷ்மி, நாராயணனின் இரட்டை ரூபமே விஷ்ணு ஆகும். இதனாலேயே, 84 பிறவிகளின் பின்னர் இலக்ஷ்மியும் நாராயணனும் இவ்வாறு ஆகுகிறார்கள் என பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். இராஜயோக தபஸ்யா சூட்சும வதனத்தில் அன்றி, இங்கேயே செய்யப்படுகிறது. யாகங்கள் இங்கேயே செய்யப்படுகின்றன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இதுவே இறுதி யாகமாகும். பின்னர் சத்திய, திரேதா யுகங்களில் எந்தவித யாகங்களும் இருக்காது. பல்வேறுபட்ட யாகங்களைச் செய்கிறார்கள். மழை இல்லாவிட்டால், யாகம் செய்கிறார்கள். துன்பம் ஏற்படும்போது யாகம் செய்கிறார்கள். அந்த யாகத்தினூடாக அந்த வேதனை நீங்கும் என அவர்கள் நம்புகிறார்கள். இதுவே அனைத்திலும் மிகப் பெரிய யாகமாகும். முழு உலகினதும் துன்பம் இந்த ஞான யாகத்தின் மூலம் நீக்கப்படும். இதுவே குதிரை அர்ப்பணிக்கப்படும் அழியாத ஞான யாகம் ஆகும். அனைவரும் இதில் அர்ப்பணிக்கப்படுவார்கள். இது உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் பெரியதொரு கூடாரம் அமைத்துச் சந்தையொன்றை நடாத்துவார்கள். அதுவும் நல்லதே. கூடாரத்தை அமைப்பதற்கு அதிகளவு நேரம் எடுக்காது. மண்டபம் ஒன்றைத் தேடும் முயற்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக, கூடாரம் ஒன்றை அமையுங்கள். சிறிய நகரங்களில் உங்களால் சிறிய கூடாரங்களை அமைக்க முடியும். கிராமங்களில் மின்சாரம் இல்லாவிடின், பகலில் கண்காட்சிகளை நடத்துங்கள். நீங்கள் உங்களுடைய சொந்த வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். ஏன் நீங்கள் எதனையும் கடனாகப் பெற வேண்டும்? தந்தை கண்காட்சி அமைப்பாளர் குழுவிற்கு வழிகாட்டல்களை வழங்குகிறார். நீரால் பாதிக்கப்படாத கூடாரத்தைச் செய்யுங்கள். எனவே மழை பெய்தாலும் அதனைப் பாதிக்காது. பாபா டெல்லிக்குச் செல்லும்போது, குளிரிலும் அவர் கூடாரங்களுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றினார். குளிரின் போது அணிவதற்கு அனைவரிடமும் குளிரைத் தாங்கும் ஆடைகள் இருக்கும். கண்காட்சிகளுக்காக நீங்கள் பல கூடாரங்களை அமைக்கலாம். எவரும் தடைகளை உருவாக்கக்கூடாது. எனவே, அனைத்தையும் நன்றாகக் காப்புறுதி செய்யுங்கள். சேவை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு விளங்கப்படுத்துவதுடன், தந்தையின் முழுமையான அறிமுகத்தையும் வழங்குங்கள். நாங்கள் இப்போது தந்தையுடன் இருக்கிறோம். நாங்கள் ஞானக்கடலான, தந்தையிடம் இருந்து இந்த ஞானத்தைப் பெறுகிறோம். சத்தியயுகத்தில் இந்த ஞானத்திற்கான அவசியம் எதுவும் இல்லை. தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குச் சத்கதியை அருள வந்துள்ளேன். இராவணனினூடாகச் சீரழிவு ஏற்படுகிறது. ஒரேயொரு தந்தை மட்டுமே சத்கதியை அருள்பவர் ஆவார். இது உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் தாங்கள் எதனையும் புரிந்து கொள்ளா விட்டாலும், புரிந்து கொள்வதற்குத் தங்களுக்கு நேரம் இல்லாவிடினும் மக்களுக்கு இது மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள். நீங்கள் முக்கிய நபர்களிடம் சென்று இதனை விளங்கப்படுத்துங்கள்: தந்தை எவ்வாறு உலகை மேன்மையானதாக ஆக்குகிறார் எனப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை மேன்மையானவர்கள் ஆக்குவது தந்தையின் கடமையாகும். இதனாலேயே நீங்கள் தந்தையை அழைத்தீர்கள். ‘எமது துன்பத்தை நீக்கி எமக்குச் சந்தோஷத்தை அருளுங்கள்!’ என நீங்கள் தொடர்ந்து பாடினீர்கள். தந்தை வரும்போது உங்களை அர்ப்பணித்து, ஸ்ரீமத்தை மிகச்சரியாகப் பின்பற்றுவீர்கள் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எவ்வாறாயினும், சிலர் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. கடவுள் யார் என்பதை மக்கள் அறிவதில்லை. அவர் சர்வவியாபி என அவர்கள் கூறுகின்றனர். தூய்மையாக்குபவரான ஒரேயொரு கடவுளே இருக்கிறார். அவர் எவ்வாறு சர்வவியாபி ஆகமுடியும்? அவ்வாறு இருந்தால், அனைவரும் கடவுள் என்றே அழைக்கப்படுவார்கள். கடவுள் சிறியவராகவோ அல்லது பெரியவராகவோ இருக்க முடியாது. கண்காட்சிப் படங்களில், சிலர் இறைச்சி உண்பது போலவும், ஏனையோர் சண்டை செய்வது போலவும் நீங்கள் காட்டியுள்ளீர்கள். கடவுள் இவை அனைத்தையும் செய்வாரா? இதனைக் கேட்கும்போது மக்கள் மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் உங்களை விட்டு வெளியே சென்றதும், அவர்கள் கேட்ட அனைத்தையும் விட்டுச் செல்கிறார்கள். பிரஜைகள் மட்டுமே உருவாகுகிறார்கள். அவர்கள் அரசர்கள் ஆகுவதற்கு அதிகளவு பிரயத்தனம் செய்கிறார்கள். அனைவரும் அரசர் ஆகவேண்டும் என்று தமது கரத்தை உயர்த்துகிறார்கள். ஆனால் ஐந்து அல்லது ஏழு நாட்களின் பின்னர் அவர்கள் அங்கிருக்க மாட்டார்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். அவள் உங்களை மிக விரைவாகச் சிறைப்பிடித்து விடுகிறாள். இராச்சியத்தை ஸ்தாபிப்பது மிகவும் கடினமான விடயமாகும். மதத்தை ஸ்தாபிப்பதில் எந்தவிதக் கடினமும் இல்லை. அங்கு அசுரர்களால் உருவாக்கப்படும் தடைகள் எதுவும் இருக்காது. இங்கு, குழந்தைகள் தாம் திருமணம் செய்யப் போவதில்லை எனக் கூறுகிறார்கள். அவர்களின் தந்தையர்களோ அவர்கள் நிச்சயமாகத் திருமணம் செய்யவேண்டும் எனக் கூறுவார்கள். இல்லாவிடின் உலகம் எவ்வாறு தொடரும்? ஓ, ஆனால் திருமணம் செய்யாதிருப்பது நல்லது. நீங்கள் திருமணம் செய்யாவிட்டால், உங்களுக்குக் குழந்தைகள் இருக்காது. எனவே குடும்பக் கட்டுப்பாடு நிகழ்கிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: எதனையாவது செய்பவர்கள் அதன் பலனைப் பெறுவார்கள். நீங்கள் முன்னேறும்போது, பலர் விரைவாக பாபாவிற்குச் சொந்தம் ஆகுவார்கள். சென்ற கல்பத்தில் நிகழ்ந்தது போலவே ஸ்தாபனை இடம்பெறும் எனக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். சென்ற கல்பத்தில் பகலில் என்ன நிகழ்ந்ததோ அது அதேபோன்று நிகழும். நீங்கள் இரவில் நித்திரைக்குச் செல்லும்போது, ‘இன்று என்ன நிகழ்ந்ததோ அது நாடகத்திற்கேற்பவே நிகழ்ந்தது, நாளை நடக்க இருப்பதும் நாடகத்திற்கேற்பவே நிகழும்’ என நினைக்கிறீர்கள். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இது நாடகம் என்றோ அல்லது அதன் ஆரம்பம், மத்தி, முடிவு என்னவென்றோ தெரியாது. அவர்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்றும், ஏனைய அனைவரும் காரிருளில் இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். என்ன நிகழ்கிறதோ அது நாடகத்திற்கேற்ப நிகழும். இன்று, நீங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். நாளை நீங்கள் நோய்வாய்ப்பட்டால், நாடகத்திற்கேற்ப, நீங்கள் அந்த வேதனையினூடாகச் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. அது ஒவ்வொரு கல்பத்திலும் அவ்வாறாகவே இருக்கும். உங்களுடைய புத்தியில் நாடகம் உள்ளது. எனவே, கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. தடைகள் ஏற்பட்டு ஏதாவது பிற்போடப்படும்போது, அது ஒவ்வொரு கல்பத்திலும் பிற்போடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இத்தகைய அறிகுறிகள் புலப்படுகின்றன. உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைவதற்கு அதிகளவு முயற்சி செய்யப்பட வேண்டும். நீங்கள் உயர்வடைகிறீர்களா எனப் பாருங்கள். நான் பாபாவின் சேவையைச் செய்கிறேனா அல்லது ஓரிடத்தில் தங்கியுள்ளேனா? நான் எவருக்காவது நன்மை செய்கிறேனா? நான் பலருக்கு நன்மை செய்தால், நானும் நன்மையை அடைவேன். பரீட்சைகள் முடிவடைந்ததும் நீங்கள் அந்த அந்தஸ்தை அடைவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது ஒவ்வொரு கல்பத்திற்குமான பேரம் ஆகும். பின்னர், இறுதியில் அதிகளவில் வருந்துதல் காணப்படும்: அந்த வேளையில் நான் ஏன் முயற்சி செய்யவில்லை? ஏன் நான் பாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்லை? பாபா எளிமையாகக் கூறுகிறார்: மன்மனாபவ, அவ்வளவுதான்! அவர் அதிகளவு அன்புடன் கூறுகிறார்: ‘குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்!’ சேவை செய்து மற்றவர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள். நீங்கள் ஏன் முயற்சி செய்து உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரக்கூடாது? இத்தகைய குழந்தைகள் விவேகிகள் என்றும், புத்திசாலிகள் என்றும் கூறப்படுகிறார்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்லை அல்லது எவருக்கும் நன்மை செய்யவில்லை என்பதையும், அதனால் நீங்கள் பெறுகின்ற அந்தஸ்து குறைவானதாக இருக்கும் என்பதையும் உங்களுக்குக் கற்பிப்பவரும் புரிந்து கொள்கிறார். எந்தளவிற்கு நீங்கள் பலருக்கும் பாதையைக் காட்டுகிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தை நீங்கள் கோருவீர்கள். உங்களுக்கே சேவை செய்யுங்கள். எதனையாவது செய்பவர்கள், அதன் பிரதிபலனைப் பெற்றுக் கொள்வார்கள். எனவே, நான் ஏன் முயற்சி செய்து இத்தகைய சேவையைச் செய்யக்கூடாது? எங்கேயாவது கண்காட்சி இடம்பெறும்போது, நீங்கள் அரைச்சம்பள விடுமுறை எடுத்துச் சென்று அங்கு சேவை செய்யுங்கள். சிலர் தமது முழுநாள் சம்பளத்தையும் விட்டுச் சென்று சேவை செய்கிறார்கள். பாபா கூறுகிறார்: உங்களுடைய குழந்தைகளுக்கு ஏதாவது தேவைப்பட்டால், அதனை அவர்களுக்கு அனுப்புங்கள். நீங்கள் உங்களுடைய சரீர வாழ்வாதாரத்திற்காக ஆயிரம் ரூபாய்களையும் பயன்படுத்த முடியும் அல்லது பத்து ரூபாயையும் பயன்படுத்த முடியும். அதிகளவு பணத்தைக் கொண்ட சிலர் நூறாயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்வார்கள். பாபா கூறுகிறார்: நீங்கள் புல் வெட்டினாலும், தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் 21 பிறவிகளுக்குச் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சகல கவலைகளில் இருந்தும் விடுபடுவதற்கு, நாடகத்தின் இந்த மிகச்சரியான ஞானத்தை உங்களுடைய புத்தியில் வைத்திருங்கள். என்ன நிகழ்ந்தாலும், சென்ற கல்பத்தில் நிகழ்ந்தது போன்றே நிகழ்ந்தது.2. இரவுபகலாக, எவ்வாறு தூய்மை அற்றவர்களுக்குத் தூய்மை ஆகுகின்ற பாதையைக் காட்டுவது என்பதை மட்டும் சிந்தியுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உலகை மாற்றுதல் என்ற மேன்மையான பணியை நிறைவேற்றும் பொறுப்பை நிறைவேற்றும் பொழுதே ஆதார மூர்த்தியாகவும் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பீர்களாக.ஆதார மூர்த்திகளாக இருப்பவர்கள் சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவார்கள். நீங்கள் எங்கே சென்றாலும் அல்லது எப்படிச் சென்றாலும், ஏனைய ஆத்மாக்கள் அதேபோன்று உங்களைப் பின்பற்றுவார்கள். இது உங்களின் பொறுப்பு. ஆனால் இந்தப் பொறுப்பு, உங்களின் ஸ்திதியை உருவாக்குவதில் உங்களுக்கு அதிகளவில் உதவி செய்கிறது. இது ஏனென்றால், இதைச் செய்வதன் மூலம் நீங்கள் ஆத்மாக்கள் பலரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். இதன் மூலம் உங்களின் பொறுப்பு இலேசானது ஆகுகிறது. இந்தப் பொறுப்பு உங்களின் களைப்பை முடிக்கிறது.
சுலோகம்:
இதயத்திற்கும் தலைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணுவதன் மூலம், நீங்கள் செய்யும் சேவையில் வெற்றிநிறைந்தவர் ஆகுவீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
உங்களின் சகல பொக்கிஷங்களையும் ஆத்மாக்கள் அனைவருக்கும் தானம் செய்வது எனில், அவர்களை ஈடேற்றுவதாகும். இந்த முறையில் மற்றவர்களை ஈடேற்றுபவர்கள், தங்களைச் சகல பொக்கிஷங்களும் நிரம்பியவர்களாகவும் துன்பமற்ற இடத்தின் சக்கரவர்த்திகளாகவும் அனுபவம் செய்வார்கள். அவர்களின் எண்ணங்களிலேனும் துன்பமான எந்தவொரு சம்ஸ்காரமும் வெளிப்பட முடியாது. சேவை செய்யும்போது, எவருடைய பலவீனமான சம்ஸ்காரங்களையும் பார்க்காதீர்கள். ஆனால் அவர்களுக்காகக் கருணைநிறைந்த பார்வையைக் கொண்டிருப்பதுடன் உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.