02.11.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சங்கமயுகமே பாக்கியசாலிகள் ஆகுவதற்கான யுகமாகும். இந்த யுகத்தில் உங்கள் பாக்கிய நட்சத்திரத்தை நீங்கள் விரும்பிய அளவிற்கு பிரகாசிக்கச் செய்ய முடியும்.

பாடல்:
உங்கள் முயற்சியைத் தீவிரமாக ஆக்கிக்கொள்வதற்கான இலகுவான வழிமுறை என்ன?

பதில்:
தொடர்ந்தும் தந்தையைப் பின்பற்றுங்கள், உங்கள் முயற்சி தீவிரமடையும். தந்தையை மாத்திரமே பாருங்கள். தாய் மறைமுகமானவர். தந்தையைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் தந்தையைப் போன்று மேன்மையானவர் ஆகுவீர்கள். ஆகையால் தொடர்ந்தும் மிகச்சரியாகப் பின்பற்றுங்கள்.

கேள்வி:
எந்தக் குழந்தைகளை புத்துக்கள் என தந்தை கருதுகின்றார்?

பதில்:
தந்தையை இனங்கண்ட பின்னரும் சந்தோஷமற்றிருக்கும் குழந்தைகள் புத்துக்கள் ஆவார்கள். உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை இனங்கண்ட பின்னரும், அவரின் குழந்தைகள் ஆகிய பின்னரும், உங்களுக்குச் சந்தோஷம் இல்லாதிருந்தால் நீங்கள் புத்துக்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.

ஓம் சாந்தி.
இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்வதுடன், அமைதி தாமத்தையும் நினைவு செய்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம், நாங்கள் தூய்மையாகி வீடு திரும்புவோம். இங்கிருக்கும்போது, உங்களுக்கு இந்த எண்ணங்கள் உள்ளன. தந்தை உங்களுக்கு வேறு எந்த சிரமத்தையும் கொடுப்பதில்லை. எவரும் ஜீவன்முக்தியைப் பற்றி அறியாதுள்ளார்கள். அவர்கள் அனைவரும் முக்திக்கான முயற்சியை செய்கின்றார்கள், ஆனால் அவர்கள் முக்தி என்றால் என்னவென்பதை புரியாதுள்ளார்கள். சிலர் தாம் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலந்துவிட விரும்புவதாகவும் இங்கு திரும்பி வருவதற்கு விரும்பவில்லை என்றும் கூறுகின்றார்கள். அவர்கள் நிச்சயமாக இந்தச் சக்கரத்தினுள் பிரவேசிக்க வேண்டும் என்பதை அறியாதுள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த விடயங்களைப் புரிந்துள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் என்பதையும், அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். பாக்கியசாலிகள் அதிர்ஷ்டசாலிகள் எனப்படுகின்றார்கள். தந்தை மாத்திரமே இப்பொழுது உங்களைப் பாக்கியசாலிகள் ஆக்குகின்றார். ஒரு தந்தை எவ்வாறோ, அவ்வாறே குழந்தைகளும் இருப்பார்கள். சில தந்தையர் செல்வந்தராகவும் ஏனையோர் ஏழைகளாகவும் உள்ளனர். நீங்கள் எல்லையற்ற தந்தையை இனங்கண்டு கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஒருவர் தான் விரும்பியளவிற்கு அதிர்ஷ்டசாலி ஆக முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் விரும்பியளவிற்கு செல்வந்தராக முடியும். தந்தை கூறுகின்றார்: முயற்சி செய்வதன் மூலம் நீங்கள் விரும்பியதை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். அனைத்தும் நீங்கள் செய்யும் முயற்சியிலேயே தங்கியுள்ளது. முயற்சி செய்வதன் மூலம் நீங்கள் விரும்பியளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இலக்ஷ்மியினதும் நாராயணனினதும் அந்தஸ்தே அனைத்திலும் உயர்வான அந்தஸ்தாகும். நீங்கள் நினைவு அட்டவணையையும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் நிச்சயமாக தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகவேண்டும். நீங்கள் ஒரு புத்துவைப் போன்று இங்கு அமர்ந்திருக்கக் கூடாது. பழைய உலகம் இப்போது புதியதாக வேண்டும் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். தந்தை உங்களைப் புதிய சதோபிரதான் உலகிற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளார். அவர் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்ற எல்லையற்ற தந்தையாவார். அவர் விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் சதோபிரதான் ஆகுவதனால் மாத்திரமே உங்களால் எல்லையற்ற சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் சதோவாகினால், நீங்கள் குறைந்தளவு சந்தோஷத்தையே பெறுவீர்கள். ரஜோவாகினால், இன்னமும் குறைந்தளவு சந்தோஷத்தையே பெறுவீர்கள். தந்தை உங்களுக்கு முழுக் கணக்கையும் கூறுகின்றார். நீங்கள் அளவற்ற செல்வத்தையும் சந்தோஷத்தையும் பெறுகின்றீர்கள். எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியை பெறுவதற்கு நினைவு செய்வதை விட வேறு வழியேதும் இல்லை. நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு நினைவு செய்கின்றீர்களோ அந்தளவிற்கு நீங்கள் இயல்பாகவே தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டுமாயின் தெய்வீகக் குணங்கள் உங்களுக்கு நிச்சயமாக வேண்டும். நீங்கள் உங்களை சோதித்துப் பார்க்க வேண்டும். உங்கள் சொந்த முயற்சியினால், நீங்கள் விரும்பியளவு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக் கொள்ளலாம். உங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர் இங்கே அமர்ந்திருக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் இவ்வாறாக உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் விளங்கப்படுத்துகின்றேன். இரண்டு வார்த்தைகளே உள்ளன: மன்மனாபவ, மத்தியாஜிபவ. நீங்கள் எல்லையற்ற தந்தையை இனங்கண்டுள்ளீர்கள். எல்லையற்ற தந்தையே உங்களுக்கு எல்லையற்ற ஞானத்தைக் கொடுக்கின்றார். அந்த எல்லையற்ற தந்தையே தூய்மையற்றவரில் இருந்து தூய்மையானவர் ஆகுவதற்கான பாதையைக் காட்டுகின்றார். எனவே, தந்தை விளங்கப்படுத்துவது புதியதொரு விடயம் அல்ல. கீதையில் எழுதப்பட்டிருப்பவையும் ஒரு சாக்கு மாவில் ஒரு துளி உப்பு கலந்ததைப் போன்றுள்ளது. உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். சரீர சமயங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள். ஆரம்பத்தில், நீங்கள் சரீரமற்றவராகவே இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் பல நண்பர்கள், உறவினர்கள் என்ற பந்தனத்தில் இருக்கின்றீர்கள். அனைவரும் தமோபிரதானாக உள்ளார்கள். அவர்கள் இப்பொழுது சதோபிரதான் ஆக வேண்டும். தமோபிரதானில் இருந்து, நீங்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பின்னர் உங்கள் நண்பர்கள், உறவினர் போன்றோர் அனைவருமே தூய்மை ஆகுவார்கள். அவர்கள் எந்தளவிற்கு முன்னைய கல்பத்தில் சதோபிரதான் ஆகினார்களோ அவ்வாறே ஆகுவார்கள். அவர்களின் முயற்சியும் அவ்வாறே இருக்கும். எனவே, இப்பொழுது நீங்கள் யாரைப் பின்பற்ற வேண்டும்? நினைவு கூரப்பட்டுள்ளது: தந்தையைப் பின்பற்றுங்கள். இவர் தந்தையை நினைவு செய்து முயற்சி செய்வதைப் போன்று, அவரைப் பின்பற்றுங்கள். தந்தையே நீங்கள் முயற்சி செய்வதற்கு உங்களைத் தூண்டுகின்றார். அவர் எந்த முயற்சியையும் செய்வதில்லை. அவர் உங்களை முயற்சி செய்யவே தூண்டுகின்றார். அதன் பின்னர் அவர் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தந்தையைப் பின்பற்றுங்கள். மறைமுகமான தாயும் தந்தையும் உள்ளனர். தாய் மறைமுகமானவர், தந்தையைப் பார்க்க முடியும். இது மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீங்கள் அத்தகைய மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற வேண்டுமானால், இந்தத் தந்தை (பிரம்மபாபா) அவரை எவ்வாறு நினைவு செய்கின்றாரோ, அவரைப் போன்று நீங்களும் தந்தையை மிகவும் நன்றாக நினைவு செய்யுங்கள். இந்தத் தந்தையே (பிரம்மபாபா) அனைவரிலும் அதியுயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றார். அவர் மிகவும் மேன்மையானவராக இருந்தார். இப்பொழுது, இறுதியில், அவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில், நான் அவருக்குள் பிரவேசிக்கின்றேன். இதனை மிகவும் நன்றாக நினைவு செய்யுங்கள். அதனை மறந்துவிடாதீர்கள். மாயை பலரை மறக்கச் செய்கின்றாள். நீங்கள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாக ஆகுகின்றீர்கள் என்று கூறுகின்றீர்கள். அவ்வாறு ஆகுவது எவ்வாறு என்பதை பாபா உங்களுக்குக் காண்பிக்கின்றார். அனைவருமே அவரை மிகச் சரியாகப் பின்பற்றுவார்கள் என்றில்லை என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை உங்களிடம் இலக்கையும் இலட்சியைத்தையும் கூறுகின்றார்: தந்தையைப் பின்பற்றுங்கள். இது இந்த நேரத்தையிட்டே நினைவு கூரப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மாத்திரமே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர்கள் சந்நியாசிகளைப் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் அது தவறாகும். அவர்கள் அவர்களைப் பின்பற்றுவதில்லை. அவர்கள் அனைவருமே பிரம்மதத்துவத்தைப் பற்றிய ஞானத்தையோ அல்லது தத்துவங்களைப் பற்றிய ஞானத்தையோ உடையவர்கள். கடவுள் அவர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதில்லை. அவர்கள் தத்துவ ஞானிகள் அல்லது பிரம்மஞானிகள் (பிரம்ம தத்துவத்தைப் பற்றிய அல்லது ஒளித் தத்துவத்தைப் பற்றிய ஞானத்தை உடையவர்கள்). எவ்வாறாயினும், தத்துவமோ அல்லது பிரம்மமோ அவர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதில்லை. அவை யாவும் சமயநூல்களின் ஞானமாகும். தந்தை உங்களுக்கு இங்கே ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். இதனை மிகவும் நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இதயத்தினால் மிகவும் நன்றாகக் கிரகிப்பட வேண்டும் என்பதை நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள். தந்தை உங்களுக்கு ஒவ்வொரு நாளும் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். தூய்மையற்றவர்களால் திரும்பிச் செல்ல முடியாது. நீங்கள் யோகசக்தியின் மூலமோ அல்லது தண்டனையை அனுபவம் செய்வதன் மூலமோ தூய்மையாக வேண்டும். அனைவரது கர்மக் கணக்கும் நிச்சயமாகத் தீர்க்கப்பட வேண்டும். ஆத்மாக்களாகிய உங்களது ஆதி வாசஸ்தலம் பரந்தாமமாகும் என்பதையும், அதன் பின்னர் உங்கள் சந்தோஷமும் துன்பமும் நிறைந்த பாகங்களை நீங்கள் இங்கே நடிக்கிறீர்கள் என்பதையும் தந்தை விளங்கப்படுத்தியிருக்கிறார். சந்தோஷபாகம் இராம இராச்சியத்திலும், துன்பம் நிறைந்த பாகம் இராவண இராச்சியத்திலுமாகும். சுவர்க்கம், இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கே முழுமையான சந்தோஷம் உள்ளது. சுவர்க்கவாசிகளும் நரகவாசிகளும் நினைவு கூரப்பட்டுள்ளார்கள். இது மிகவும் நன்றாகக் கிரகிக்கப்பட வேண்டும். தமோபிரதானில் இருந்து, தொடர்ந்தும் நீங்கள் எந்தளவிற்கு சதோபிரதான் ஆகுகின்றீர்களோ அந்தளவிற்கு உங்களுக்குள் சந்தோஷம் இருக்கும். துவாபரயுகத்தில் நீங்கள் ரஜோ ஸ்திதியில் இருந்த போதும், நீங்கள் சந்தோஷமாகவே இருந்தீர்கள். நீங்கள் அந்தளவிற்கு சந்தோஷம் இழந்தவராகவோ அல்லது விகாரம் நிறைந்தவராக இருக்கவில்லை. இங்கே நீங்கள் மிகவும் சந்தோஷம் இழந்தவராகவும், விகாரம் நிறைந்தவராகவும் இருக்கின்றீர்கள். உங்கள் மூத்தோரைப் பாருங்கள்: அவர்கள் மிகவும் விகாரம் நிறைந்தவர்களாகவும் குடிகாரர்களாகவும் இருக்கின்றார்கள். மதுபானம் மிகவும் தீயது. சத்திய யுகத்தில் தூய ஆத்மாக்கள் மாத்திரமே உள்ளார்கள். அவர்கள் நாளுக்கு நாள் கீழிறங்கும்போது முற்றாக அழுக்கடைகின்றார்கள். ஆகையாலேயே இது ஆழ்நரகம் என்று அழைக்கப்படுகின்றது. மதுபானம், சண்டை சச்சரவு செய்வதற்கும், இழப்பை ஏற்படுத்துவதற்கும் காரணம் ஆகுகின்றது. இந் நேரத்தில் மக்களின் புத்தி சீரழிந்துவிட்டது போலுள்ளது. மாயை மிகவும் சக்திநிறைந்தவள். தந்தையே சந்தோஷத்தைக் கொடுக்கின்ற ஒருவரான, சர்வ சக்திவான். அதேபோன்று, மாயையும் அதிகளவு துன்பத்தை ஏற்படுத்தக் கூடியவள். கலியுகத்தில் உள்ள மக்களின் நிலையைப் பாருங்கள்: அவர்கள் முற்றாக உக்கிய நிலையை அடைகின்றார்கள். அவர்களுக்கு எதுவுமே புரிவதில்லை. அவர்கள் கல்லுப்புத்தியை கொண்டிருப்பதை போன்றுள்ளது. இதுவும் நாடகத்தில் உள்ளது. இது ஒருவரின் பாக்கியத்தில் இல்லாதிருந்தால் அவரின் புத்தி அவ்வாறு ஆகுகின்றது. தந்தை மிகவும் இலகுவான ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் உங்களை “குழந்தாய், குழந்தாய்” என்று கூறியவாறே, உங்களுக்குத் தொடர்ந்தும் கற்பிக்கின்றார். தாய்மாரும் தமக்கு ஐந்து குழந்தைகள் இருப்பதாகவும், அத்துடன் இன்னொரு குழந்தை, பரலோகக் குழந்தையும் உள்ளார் என்றும், அவர் தம்மை சந்தோஷ உலகிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார் என்றும் கூறுகின்றார்கள். நீங்கள் அவரைத் தந்தையாகவும், குழந்தையாகவும் கருதுகின்றீர்கள். அவர் மந்திரவாதி. தந்தை மந்திரவாதி என்பதால் குழந்தைகளாகிய நீங்களும் மந்திரவாதிகள் ஆகுகின்றீர்கள். எங்கள் பாபாவும் எங்கள் குழந்தையே என்று நீங்கள் கூறுகின்றீர்கள். எனவே நீங்கள் தந்தையைப் (பிரம்மபாபா) பின்பற்றி, அவ்வாறு ஆக வேண்டும். இது அவரது சுவர்க்க இராச்சியமாக இருந்தது. இவை சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. பக்தி மார்க்கத்தின் சமயநூல்களும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை. அவை மீண்டும் தோன்றும். உங்களுக்குக் கற்பிப்பதற்கு ஓர் ஆசிரியர் தேவை என்பதை தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஒரு புத்தகம் ஆசிரியராக முடியாது, அவ்வாறாயின், ஓர் ஆசிரியரின் அவசியம் இருக்கமாட்டாது. இப்புத்தகங்கள் போன்றவை சத்தியயுகத்தில் இருக்கமாட்டாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆத்மா என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். அப்படித்தானே? ஆத்மாக்கள் அனைவரது தந்தையும் நிச்சயமாக உள்ளார். சிலர் வரும் போது, இந்துக்களும் இஸ்லாமியரும் சகோதரர்கள் என்று கூறிய போதிலும், அவர்களுக்கு அதன் அர்த்தம் விளங்காதுள்ளது. சகோதரர்கள் என்ற புரிந்துணர்வு ஏற்படும் போது, நிச்சயமாக அவர்களுக்குத் தந்தையும் இருக்க வேண்டும். ஒரு சதப் பெறுமதியான புரிந்துணர்வுகூட எஞ்சவில்லை. கடவுள் பேசுகின்றார்: இதுவே பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். அர்த்தம் மிகவும் தெளிவாக உள்ளது! எவருமே இழிவை ஏற்படுத்துவதில்லை. தந்தை உங்களுக்கு வழியைக் காட்டுகின்றார். முதலாமவர் கடைசியானவர் ஆகின்றார். அழகானவர் அவலட்சணம் ஆகுகின்றார். நீங்கள் அழகாக இருந்தீர்கள் என்றும், மீண்டும் அழகானவர் ஆகுகின்றீர்கள் என்பதையும் புரிந்துள்ளீர்கள். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலமே நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள். இது இராவண இராச்சியமாகும். இராம இராச்சியம் சிவாலயம் என அழைக்கப்படுகின்றது. சீதைக்கு உரியவராகிய இராமர் திரேதாயுகத்தில் ஆட்சி செய்தார். இதுவும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளது. அவர் இரண்டு கலைகளினாhல் குறைவடைந்துள்ளார் என்று கூறப்படுகின்றது. சத்தியயுகமே அதியுயர்ந்தது. அது நினைவு கூரப்படுகின்றது. திரேதா, துவாபர யுகங்கள் அந்தளவிற்கு நினைவு செய்யப்படுவதில்லை. சத்தியயுகம் புதிய உலகமாகும், கலியுகம் பழைய உலகமாகும்: 100 சதவீத சந்தோஷமும் 100 சதவீத துன்பமும் உள்ளது. திரேதாயுகத்திலும், துவாபரயுகத்திலும் அரைவாசியாக உள்ளன. ஆகையாலேயே பிரதானமான சத்தியயுகமும் கலியுகமும் நினைவு கூரப்பட்டுள்ளன. தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். முயற்சி செய்ய வேண்டியது உங்கள் கடமையாகும். நீங்கள் சத்தியயுகத்து வாசிகளாகப் போகின்றீர்களா அல்லது திரேதாயுக வாசிகளாகப் போகின்றீர்களா? நீங்கள் தேவதர்மத்திற்கே உரியவராக இருந்த போதிலும், துவாபரயுகத்தில் நீங்கள் கீழிறங்குகின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் தூய்மையற்றவராக இருப்பதால், உங்களைத் தேவர்கள் என நீங்கள் அழைத்துக் கொள்ள முடியாது. எனவே, தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு நாளாந்தம் விளங்கப்படுத்துகின்றார்: மன்மனாபவவே பிரதான விடயமாகும். நீங்களே முதல் இலக்கத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைக் கடந்து இறுதிப் பிறவியை அடைகின்றீர்கள். அதன் பின்னர் நீங்கள் மீண்டும் முதல் இலக்கத்தை அடைகின்றீர்கள். எனவே நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும். அவர் எல்லையற்ற தந்தையாவார். அவர் அதி மங்களகரமான சங்கமயுகத்திலேயே வந்து, 21 சந்ததிக்கு சுவர்க்க சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். உங்கள் ஆயுட்காலம் முடிவடையும் போது, நீங்கள் இயல்பாகவே சரீரத்தை நீக்குகின்றீர்கள். அதுவே யோக சக்தி எனப்படுகின்றது. அல்லவா? அத்தகைய சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. “அதுவே யோக சக்தி” என அழைக்கப்படுகின்றது. அங்கே ஞானம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் இயல்பாகவே வளர்ச்சியடைகின்றீர்கள். அங்கே நோய்கள் எதுவுமில்லை. அங்கே ஊனமுற்ற, வலது குறைந்தோர் எவரும் இருப்பதில்லை. அவர்கள் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருக்கின்றார்கள். அங்கே துன்பத்தின் பெயரோ சுவடோ இருப்பதில்லை. பின்னர் சுவர்க்கக் கலைகள் படிப்படியாகக் குறைகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையிடமிருந்து, உங்களுடைய மேன்மையான ஆஸ்தியைப் பெறுவதற்காக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் திறமைச் சித்தி அடைய வேண்டும், அப்படித்தானே? அனைவராலும் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும் என்றில்லை. எந்த சேவையையும் செய்யாதவர்கள் என்ன அந்தஸ்தைப் பெற முடியும்? அருங்காட்சியகங்களில் குழந்தைகள் அதிகளவு சேவை செய்கிறார்கள். அழைக்கப்படாமலே மக்கள் அங்கு வர விரும்புகின்றார்கள். அதுவே பறக்கும் வேகத்தில் இடம்பெறும் சேவை எனப்படுகின்றது. இதனைவிட துரிதமான சேவை இடம்பெறுவதற்கான வழிமுறை ஏதும் உருவாகலாம் என்பது எங்களுக்குத் தெரியாது. நீங்கள் இரண்டு முதல் நான்கு பிரதான படங்களை உங்களுடன் வைத்திருக்க வேண்டும். திரிமூர்த்தி, விருட்சம், சக்கரம், மற்றும் ஏணி ஆகியவற்றின் பெரிய படங்களை எங்கும் வைக்கவேண்டும். குழந்தைகள் திறமையானவர்கள் ஆகும்போதே சேவை இடம்பெறும். சேவை இடம்பெற வேண்டும். கிராமங்களிலும் சேவை இடம்பெற வேண்டும். தாய்மாருக்கு கல்வி அறிவு இல்லாவிட்டாலும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பது மிகவும் இலகுவாகும். முன்னர் பெண்கள் கல்வி கற்கவில்லை. இஸ்லாமிய சட்டப்படி அப் பெண்கள் கண்கள் மாத்திரமே தெரியும் வண்ணம் முக்காடிட வேண்டும். இந்த பாபா மிகவும் அனுபவசாலி. தந்தை கூறுகிறார்: இவ்விடயங்கள் எனக்குத் தெரியாது. நான் மேலே வசிக்கிறேன். பிரம்மாவே இவ் விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் அனுபவசாலி. நான், இவருக்குத் தெரியாத விடயங்களான மன்மனாபவ பற்றிய விடயங்களைக் கூறி, உலகச் சக்கரத்தின் இரகசியத்தை விளங்கப்படுத்துகின்றேன். இவர் தனது அனுபவங்களை வேறாக விளங்கப்படுத்துகிறார். நான் அவ்விடயங்களில் சம்பந்தப்படுவதில்லை. உங்களுக்குப் பாதையைக் காட்டுவதே எனது பாகமாகும். நான், தந்தையும் ஆசிரியரும் சற்குருவுமாவேன். நான் உங்கள் ஆசிரியராகி, உங்களுக்குக் கற்பிக்கிறேன். ஆனால் இதில் கருணை போன்ற கேள்விக்கே இடமில்லை. நான் உங்களுக்குக் கற்பித்த பின்னர், உங்களை மீண்டும் என்னுடன் அழைத்துச் செல்கின்றேன். இக் கல்வியின் மூலமே சற்கதி கிடைக்கின்றது. நான் மீண்டும் உங்களை அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். “சிவனின் ஊர்வலம்” நினைவுகூரப்படுகிறது. அது சங்கரின் ஊர்வலம் அல்ல. அது சிவனின் ஊர்வலமாகும். ஆத்மாக்கள் அனைவரும் மணவாளனைப் பின்தொடர்ந்து செல்கின்றனர். அவர்கள் அனைவரும் பக்தர்கள், நான் மாத்திரமே கடவுள் ஆவேன். உங்களைத் தூய்மையாக்கி என்னுடன் உங்களை அழைத்துச் செல்வதற்காக வாருங்கள் என நீங்கள் என்னை அழைத்தீர்கள். எனவே நான் நிச்சயமாக குழந்தைகளாகிய உங்களை என்னுடன் மீண்டும் அழைத்துச் செல்வேன். உங்கள் கர்மக் கணக்குகளை நீங்கள் தீர்த்து, உங்களை என்னுடன் அழைத்துச் செல்வதற்கு நான் உங்களுக்கு உதவ வேண்டும். தந்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: மன்மனாபவ. தந்தையை நினைவு செய்தால், நீங்கள் நிச்சயமாக உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்வீர்கள். நீங்கள் உலக இராச்சியத்தையும் பெறுகின்றீர்கள். எனவே நீங்கள் அதற்கேற்ற முயற்சியைச் செய்ய வேண்டும். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. நீங்கள் அதிகளவு துன்பத்தை அனுபவித்து விட்டீர்கள் என்பதை நான் அறிவேன். இப்பொழுது, நான் உங்களுக்கு எச்சிரமத்தையும் கொடுப்பதில்லை. பக்தி மார்க்கத்தில், அவர்களின் ஆயுட்காலம் குறுகியதாகும். அவர்கள் அகால மரணம் அடைகின்றார்கள். அவர்கள் அதிகளவில் அழுது புலம்புகின்றார்கள். அவர்களின் மூளை பழுதடையும் அளவிற்கு அவர்கள் துன்பத்தை அடைந்துள்ளார்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். சுவர்க்கத்தின் அதிபதியாக ஆக விரும்பினால், நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். மேன்மையானவர் ஆகுவதற்கு முயற்சி எப்பொழுதும் செய்யப்படுகின்றது. நாங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுவோம். தந்தை கூறுகின்றார்: நான் சூரிய, சந்திர வம்சங்கள் இரண்டினதும் தர்மங்களை ஸ்தாபிக்கின்றேன். அவர்கள் (திரேதாயுகம்) சித்தியடையாதவர்கள் என்பதாலேயே சத்திரியர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். இது யுத்த களமாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சந்தோஷ உலகின் ஆஸ்திக்கு முழு உரிமையையும் கோரிக்கொள்வதற்கு, சங்கமயுகத்தில் ஓர் ஆன்மீக மந்திரவாதி ஆகி, தந்தையை உங்கள் குழந்தை ஆக்கிக் கொள்ளுங்கள். உங்களை முற்றாக அர்ப்பணியுங்கள்.

2. சுயதரிசன சக்கரதாரிகள் ஆகி, அதிர்ஷ்ட நட்சத்திரம் ஆகுங்கள். பறக்கும் வேகத்தில் இடம்பெறுகின்ற சேவைக்கான கருவியாகி உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கிராமங்களிலும் சேவை செய்யுங்கள். அத்துடன், நிச்சயமாக நினைவு அட்டவணயை வைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் திடசங்கற்பம் என்ற தீக்குச்சியால் ஆத்ம உணர்வு என்ற வாணவேடிக்கை குண்டைப் போடுவதன் மூலம் சதா வெற்றியாளர் ஆகுவீர்களாக.

தற்காலத்தில், அவர்கள் வாணவேடிக்கை குண்டுகளைத் தயாரிக்கிறார்கள். ஆனால், நீங்கள் ஆத்ம உணர்வு என்ற வாணவேடிக்கைக் குண்டைப் போடுவதற்குத் திடசங்கற்பம் என்ற தீக்குச்சியைப் பயன்படுத்தி அதனால் பழையவை அனைத்தையும் முடித்துவிட வேண்டும். அவர்கள் வாணவேடிக்கைகளில் தமது பணத்தை வீணடிக்கிறார்கள். ஆனால் நீங்களோ ஒரு வருமானத்தைச் சேமிக்கிறீர்கள். அவர்களுடையது, வாணவேடிக்கை (அரிஸ்பஜி). ஆனால் உங்களுடையதோ, பறக்கும் ஸ்திதியின் விளையாட்டு (பஜி). அதன் மூலம் நீங்கள் வெற்றியாளர் ஆகுகிறீர்கள். எனவே, இந்த ஒளியேற்றுதல் மற்றும் சம்பாதிப்பதில் இரட்டை நன்மையைப் பெறுவதற்கு, இந்த வழிமுறையைப் பயன்படுத்துங்கள்.

சுலோகம்:
ஒரு விசேடமான பணியில், உதவியாளர் ஆகுவதெனில், ஆசீர்வாதங்களின் உயர்த்தியை எடுத்துக் கொள்வதாகும்.