02.12.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த விளக்கை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். எந்தப் புயலிலும் அது பாதுகாப்பாக எரிவதற்கு, உங்களுக்கு ஞானமும் யோகமும் என்ற எண்ணெய் நிச்சயமாகத் தேவையாகும்.
கேள்வி:
எந்த முயற்சி மறைமுகமான தந்தையிடமிருந்து மறைமுகமான ஆஸ்தியைப் பெறச் செய்கிறது?பதில்:
அகநோக்கில் இருப்பதாகும். மௌனத்தில் நிலைத்திருந்து தந்தையை நினைவுசெய்வதன் மூலம் நீங்கள் மறைமுகமான ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் நினைவில் இருந்தவாறு சரீரத்தை விட்டு நீங்குவது மிகவும் நல்லது. இதில் எச் சிரமமும் இல்லை. நினைவில் இருப்பதுடன், நீங்கள் ஞானத்தினாலும் யோகத்தினாலும் சேவை செய்ய வேண்டும். உங்களால் இதனைச் செய்ய முடியாதுவிடின், கர்மயோகம் செய்யுங்கள். நீங்கள் பலரைச் சந்தோஷமடையச் செய்தால், ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். உங்கள் வார்த்தைகளும் நடத்தையும் முற்றிலும் தூய்மையாக இருக்க வேண்டும்.பாடல்:
இது பலத்துக்கும் பலவீனத்துக்கும் இடையிலான யுத்தம்....ஓம் சாந்தி.
நீங்கள் அத்தகைய பாடல்களைச் செவிமடுக்கும் போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் ஞானக்கடலைக் கடைய வேண்டும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். ஒருவர் மரணிக்கும் பொழுது, அந்த ஆத்மாவிற்காகப் பன்னிரண்டு நாட்களுக்கு ஒரு விளக்கு ஏற்றி வைக்கப்படுகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் மரணிப்பதற்கு ஆயத்தங்களைச் செய்வதுடன், உங்கள் சொந்த விளக்கு பிரகாசமாக எரிவதற்கும் முயற்சி செய்கின்றீர்கள். மாலையில் கோர்க்கப்பட இருப்பவர்களே இந்த முயற்சியைச் செய்பவர்கள். பிரஜைகள் இந்த மாலையில் ஒருவராக மாட்டார்கள். நீங்கள் வெற்றி மாலையில் முன்னணியில் செல்வதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும், பூனையாகிய மாயை உங்கள் விளக்கு அணைந்து விடக்கூடிய, பாவச் செயல்களை உங்களைச் செய்ய வைக்காதவாறு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உங்களுக்கு ஞானசக்தி, யோகசக்தி இரண்டும் தேவையாகும். யோகத்துடன், நீங்கள் ஞானத்தையும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த விளக்கைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இறுதிவரை முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் போது, உங்கள் விளக்கு மங்கி அணைந்து விடாதிருப்பதில், நீங்கள் பெரும் கவனம் செலுத்த வேண்டும். இதனாலேயே நீங்கள் ஞானம், யோகம் என்னும் எண்ணெயை ஒவ்வொரு நாளும் ஊற்ற வேண்டும். உங்களிடம் யோக சக்தியின் பலம் இல்லையாயின், உங்களால் வேகமாக முன்னேற முடியாமல், பின்தங்கி விடுவீர்கள். பாடசாலைகளில் வெவ்வேறு பாடங்கள் இருக்கின்றன. ஒருவர் ஒரு குறித்த பாடத்தில் குறைவாக இருந்தால், அவர் கணிதத்தில் (வேறொரு பாடம்) பெருமளவு முயற்சியைச் செய்கிறார். அதுவே இங்கும் பொருத்தமாக உள்ளது. பௌதீகச் சேவை என்னும் பாடமும் மிகவும் நல்லது. இதன் மூலம் நீங்கள் பலரின் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். சில குழந்தைகள் ஞானத்தினால் சேவை செய்கின்றார்கள். நாளுக்கு நாள், சேவை தொடர்ந்தும் அதிகரிக்கும். உரிமையாளர் ஒருவர், ஆறு முதல் எட்டுக் கடைகளை வைத்திருக்கலாம், ஆனால் அனைத்துக் கடைகளும் ஒரேமாதிரி இயங்குவதில்லை. சில கடைகள் ஒரு சில வாடிக்கையாளர்களையும், ஏனைய கடைகள் அதிக வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கும். உங்களுக்கும் இரவில் உறங்குவதற்கு நேரமில்லாத நாளும் வரும். ஞானக்கடலான பாபா, தங்கள் புத்தியை அழிவற்ற ஞான இரத்தினங்களால் நிரப்புவதற்கு வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியவரும். அந்த நேரத்தில், பல குழந்தைகள் வருவார்கள், கேட்கவும் வேண்டாம்! மலிவுவிலையில் மிகவும் நல்ல பொருட்களை விற்கும் ஒரு கடை இருக்கும் பொழுது, மக்கள் ஒருவருக்கொருவர் கூறுகிறார்கள். இராஜயோகத்தின் இந்தக் கற்பித்தல்கள் புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவானவை எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இங்கே ஞான இரத்தினங்களைப் பெற முடியும் என அனைவருக்கும் தெரிய வரும்போது, அவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். ஞானம், யோகம் மூலம் தொடர்ந்தும் சேவை செய்யுங்கள். ஞானம், யோகம் மூலம் உங்களால் சேவை செய்ய முடியாவிட்டால், பௌதீகச் சேவையைச் செய்வதனால் உங்களால் புள்ளிகளைப் பெற முடியும். நீங்கள் பலரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். இது ஒரு மிகவும் மலிவான சுரங்கமாகும். இது அழிவற்ற வைரங்களினதும், இரத்தினங்களினதும் சுரங்கமாகும். அவர்கள் எட்டு மணிகளின் மாலையைச் செய்து அதனை வழிபடுகின்றார்கள். ஆனால் அந்த மாலை யாரைக் குறிக்கின்றது என்பதை அவர்கள் அறியார்கள். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தீர்கள் என்பதையும், எவ்வாறு பூஜிப்பவர்கள் ஆகுகிறீர்கள் என்பதையும் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். உலகில் உள்ள வேறு எவரும் அறியாத இந்த ஞானம் மிகவும் அற்புதமானது! நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள், நீங்கள் இப்பொழுது நரகத்தின் அதிபதிகள் ஆகிவிட்டீர்கள் என்ற நம்பிக்கையை இப்பொழுது அதிர்ஷ்ட நட்சத்திரங்களான குழந்தைகளாகிய நீங்கள் கொண்டுள்ளீர்கள். நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகும்பொழுது, அங்கேயே நீங்கள் மறுபிறவியைப் பெறுவீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இந்தச் சங்கமயுகத்தைப் பற்றி அறிவீர்கள். உலகில் உள்ள ஏனையோர் கலியுகத்தில் உள்ளனர். அனைத்து யுகங்களும் வித்தியாசமானவை. நீங்கள் சத்தியயுகத்தில் இருக்கும் போது, நீங்கள் சத்தியயுகத்திலேயே மறுபிறவியைப் பெறுவீர்கள். நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இப்போது உங்களில் எவராவது சரீரத்தை நீக்கினால், உங்களின் சம்ஸ்காரங்களுக்கேற்ப, இங்கேயே மறுபிறவியைப் பெறுவீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் இந்தச் சங்கமயுகத்துக்கு உரியவர்கள். அந்தச் சூத்திரர்கள் கலியுகத்திற்கு உரியவர்கள். நீங்கள் இந்த ஞானத்தை இந்தச் சங்கமயுகத்தில் பெறுகின்றீர்கள். இப்போது நடைமுறைரீதியாகச் சங்கமயுகத்தில் உள்ள பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகளாகிய நீங்களே ஞான கங்கைகள்; ஆவீர்கள். நீங்கள் ஓர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதுடன், ஒரு கடையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஞானத்தையும் யோகத்தையும் நீங்கள் கிரகிக்காவிட்டால், உங்களால் கடையைக் கவனித்துக் கொள்ள முடியாது. நீங்கள் செய்யும் சேவையின் பலனை பாபா உங்களுக்குக் கொடுப்பார். ஒரு யாகம் உருவாக்கப்படும் போது பல தரப்பட்ட பிராமணர்களும் அங்கு செல்கிறார்கள். சிலருக்குப் பெருமளவு தானம் கொடுக்கப்படுகிறது, ஏனையோருக்குக் குறைந்தளவு தானம் கொடுக்கப்படுகின்றது. பரமாத்மாவாகிய பரமதந்தை இப்பொழுது இந்த உருத்திர ஞான யாகத்தை உருவாக்கியுள்ளார். நாங்கள் பிராமணர்கள், எங்களின் தொழில் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதாகும். வேறு எந்த யாகத்தையும் பற்றி, தாங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுவதாகக் கூறப்பட மாட்டாது. இது உருத்திர ஞான யாகம் என்று அழைக்கப்படுகிறது, இது கல்வி கற்கும் கூடம் (பாட்சாலா) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஞானத்தையும் யோகத்தையும் கற்பதன் மூலம் ஒவ்வொரு குழந்தையும் தேவ அந்தஸ்தை அடைய முடியும். பாபாவுடன் பரந்தாமத்தில் இருந்து, நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் என பாபா உங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். “நீங்கள் பரந்தாமவாசிகள்” என நீங்களும் கூறுகின்றீர்கள். இந்நேரத்தில் நீங்கள் பாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். அந்த உலகத்தை ஸ்தாபிப்பவர்கள் நிச்சயமாக அதன் அதிபதிகள் ஆகுவார்கள். நீங்களே ஞான சூரியனும், ஞானச் சந்திரனும், ஞான நட்சத்திரங்களுமான உலகின் மிகவும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் ஆவீர்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஞானக்கடல் எங்களை இவ்வாறு ஆகுமாறு செய்கின்றார். அந்தச் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் பௌதீகமானவை, நாங்கள் அவற்றுடன் ஒப்பிடப்படுகின்றோம். பின்னர் நாங்கள் ஞான சூரியனாகவும், ஞானச் சந்திரனாகவும், ஞான நட்சத்திரங்களாகவும், ஆகுவோம். ஞானக்கடலே எங்களை அவ்வாறு ஆக்குகின்றார். இந்தப் பெயர்கள் நிச்சயமாக எங்களுக்குக் கொடுக்கப்படும். நாங்கள் ஞானக்கடல் எனவும் அழைக்கப்படுகின்ற, ஞான சூரியனின் குழந்தைகள் ஆவோம். அவர் இங்கு வசிப்பதில்லை. பாபா கூறுகின்றார்: நான் வந்து உங்களை எனக்குச் சமமானவர்கள் ஆக்குகின்றேன். நீங்கள் இங்கேயே ஞான சூரியனாகவும், ஞான நட்சத்திரங்களாகவும் ஆகவேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் இங்கே மீண்டும் நிச்சயமாகச் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். அனைத்தும் முயற்சியிலேயே தங்கியுள்ளது. நாங்கள் மாயையை வெல்கின்ற, சத்திரியர்கள் ஆவோம். அம்மக்கள் மனத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரும் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்கின்றார்கள். நீங்கள் ஹத்தயோகம் செய்ய வேண்டியதில்லை. பாபா கூறுகின்றார்: நீங்கள் எச் சிரமத்தையும் அனுபவம் செய்ய வேண்டியதில்லை. நான் கூறுகிறேன்: நீங்கள் என்னிடம் வரவேண்டும். எனவே நீங்கள் என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நான் குழந்தைகளாகிய உங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். எந்த மனிதரும் இதனைக் கூறமாட்டார்கள். அவர்களில் சிலர் தங்களை ஈஸ்வரர் (கடவுள்) என அழைத்தாலும், அவர்கள் தங்களை வழிகாட்டிகள் என அழைக்க மாட்டார்கள். பாபா கூறுகின்றார்: நானே பிரதான வழிகாட்டியாவேன். நானே மகாகாலன் ஆவேன். சத்தியவான் சாவித்திரியைப் பற்றிய கதையும் உள்ளது. ஏனெனில் அவள் சரீரதாரியை நேசித்ததால், துன்பத்தை அனுபவம் செய்தாள். நான் ஆத்மாக்களாகிய உங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன் என்பதையும், நீங்கள் ஒருபொழுதும் சந்தோஷமற்றவர்கள் ஆகமாட்டீர்கள் என்பதையும் அறிவதால், ஆத்மாக்களாகிய நீங்கள் சந்தோஷம் அடைகின்றீர்கள். உங்கள் பாபா, உங்கள் இனிய வீட்டுக்கு உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அந்த வீடு சத்தத்துக்கு அப்பாற்பட்ட இடமாகிய, முக்திதாமம் என அழைக்கப்படுகின்றது. நானே மகாகாலன் எனக் கூறப்படுகிறது. அது (மரணம்) ஓர் ஆத்மாவை மாத்திரமே எடுக்கிறது. ஆனால் நானோ மகாகாலன் ஆவேன். 5000 வருடங்களுக்கு முன்னரும், நான் வழிகாட்டியாகி, அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இந்த மணவாளன் மணவாட்டிகளான உங்கள் அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார், எனவே நீங்கள் அவரை நினைவு செய்யவேண்டும். நீங்கள் இப்போது கற்கின்றீர்கள் என்பதனையும், நீங்கள் மீண்டும் இங்கு வருவீர்கள் என்பதனையும் புரிந்து கொள்கின்றீர்கள். முதலில் நீங்கள் உங்கள் இனிய வீட்டிற்குத் திரும்பிச் சென்று, பின்னர் மீண்டும் இங்கே கீழிறங்கி வரவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்தின் நட்சத்திரங்கள் ஆவீர்கள். முன்னர் நீங்கள் நரகத்தின் நட்சத்திரங்களாக இருந்தீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் நட்சத்திரங்கள் என அழைக்கப்பட்டீர்கள். நீங்கள், உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என அழைக்கப்பட்டீர்கள். நீங்கள் உங்கள் பாட்டனாரின் சொத்தைப் பெறுகின்றீர்கள். இது ஒரு சக்திமிக்க சுரங்கமாகும். எவ்வாறாயினும், இச் சுரங்கம் ஒருமுறை மாத்திரமே வெளிப்படும். அங்கே பல்வேறு வகையான சுரங்கங்கள் தொடர்ந்தும் வெளிப்படும். அவற்றைத் தேடத் தொடங்கினால், நீங்கள் பலவற்றைக் கண்டுபிடிப்பீர்கள். நீங்கள் இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களின் சுரங்கத்தை ஒருமுறை மாத்திரமே கண்டுபிடிப்பீர்கள். அனேக புத்தகங்கள் உள்ளன, ஆனால் அவற்றை ஞான இரத்தினங்கள் என அழைக்க முடியாது. பாபாவே ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். இது அழிவற்ற ஞான இரத்தினங்களின் அசரீரியான சுரங்கமாகும். எங்கள் புத்தி இந்த இரத்தினங்களால் நிரப்பப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தை அனுபவம்செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் இந்த ஆன்மீகப் போதையைக் கொண்டிருக்க வேண்டும். அதிகளவில் வியாபாரம் செய்யும் கடை பிரபல்யம் அடைகின்றது. நீங்கள் பிரஜைகளையும் வாரிசுகளையும் உருவாக்க வேண்டும். நீங்கள் உங்கள் புத்தியை இங்கு இந்த இரத்தினங்களால் நிரப்பிய பின்னர், சென்று அவற்றை மற்றவர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். பரமாத்மாவாகிய பரமதந்தையே ஞானக்கடலாவார். அவர் உங்கள் புத்தியை ஞான இரத்தினங்களால் நிரப்புகின்றார். இது தேவர்களுக்குத் தட்டு நிறைய இரத்தினங்கள் படைக்கப்படுவதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த (பௌதீக) கடல் அல்ல. அந்தக் கடலிடமிருந்து நீங்கள் இரத்தினங்களைப் பெற முடியாது. இது ஞான இரத்தினங்களுக்கான கேள்வி ஆகும். நாடகத்துக்கேற்ப, இந்தச் சுரங்கங்களிலிருந்து நீங்கள் மீண்டும் இரத்தினங்களைப் பெறுவீர்கள். மீண்டும் நீங்கள் பக்திமார்க்கத்தில் செல்லும்பொழுது, உங்கள் ஆலயங்களைக் கட்டுவதற்கான எல்லையற்ற வைரங்களும் இரத்தினங்களும் இருக்கும். பூமியதிர்ச்சிகள் இடம்பெறும்பொழுது, அனைத்துமே புதைக்கப்பட்டு விடும். ஒன்றல்ல, பல மாளிகைகள் அங்கு கட்டப்பட்டிருக்கும். இங்கும், ஆட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் பலவிதங்களில் போட்டி போடுகிறார்கள். ஆகவே, ஒரு கல்பத்துக்கு முன்னர் இருந்ததைப் போன்று, மீண்டும் மிகச்சரியாகக் கட்டடங்கள் கட்டப்படும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அங்கு மிகவும் இலகுவாகக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. விஞ்ஞானம் பெருமளவு உதவியைச் செய்யும், ஆனால் அங்கு “விஞ்ஞானம்” என்னும் வார்த்தை இருக்க மாட்டாது. இந்தியில், “விஞ்ஞானம்” என்னும் வார்த்தை, விக்கியான் என்று அழைக்கப்படுகின்றது. இந் நாட்களில், விக்கியான் பவன் எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. “விக்கியான்” எனும் வார்த்தை ஞானத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றது. கியானும், யோகமும் ஒன்றாக விக்கியான் என்று அழைக்கப்படுகின்றது. நாங்கள் ஞானத்தின் மூலம் இரத்தினங்களைப் பெறுகின்றோம், நாங்கள் யோகத்தின் மூலம் சதா ஆரோக்கியமானவர்கள் ஆகுகின்றோம். இதுவே கியானினதும் யோகத்தினதும் ஞானம் ஆகும். இதன் மூலமே பின்னர், வைகுந்தத்தில் பல பாரிய கட்டடங்கள் கட்டப்படும். இப்பொழுது நாங்கள் முழு ஞானத்தையும் அறிந்து கொண்டுள்ளோம். நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். உங்கள் சரீரங்களின் மீது உங்களுக்கு இனிமேலும் எந்தப் பற்றும் இருக்கக்கூடாது. ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சரீரங்களை நீங்கி விட்டு, நீங்கள் புதிய சரீரங்களைப் பெறுகின்ற, சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள். நீங்கள் அங்கு இருக்கும்பொழுது, உங்கள் பழைய சரீரத்தை எப்பொழுது நீக்கிப் புதியதொன்றைப் பெற வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அங்கு எவ்வித அதிர்ச்சியோ அல்லது துன்பமோ இல்லை. நீங்கள் ஒரு புதிய சரீரத்தைப் பெறுவது நல்லதாகும். பாபா முன்னைய கல்பத்தில் செய்தது போன்று, எங்களையும் அதேபோன்று ஆக்குகின்றார். நாங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றோம். இப்பொழுது இருப்பதைப் போன்று ஒரு கல்பத்திற்கு முன்னரும் அதே எண்ணற்ற சமயங்கள் நிச்சயமாக இருந்தன. இவ்விடயங்கள் அந்தக் கீதையில் எழுதப்படவில்லை. கூறப்பட்டுள்ளது: பிரம்மாவின் மூலம் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனை உள்ளது. எவ்வாறு எண்ணற்ற சமயங்கள் அனைத்தினதும் விநாசம் இடம்பெறுகின்றது என்பதை உங்களால் விளங்கப்படுத்த முடியும். இப்பொழுது ஸ்தாபனை இடம்பெறுகிறது. தேவதர்மம் முற்றிலும் மறைந்த பின்னரே பாபா வந்தார். ஆகவே, அது எவ்வாறு தொன்று தொட்ட காலத்திலிருந்து தொடர்ந்திருக்க முடியும்? இவை மிகவும் இலகுவான விடயங்களாகும். எவை அழிக்கப்பட்டன? சகல எண்ணற்ற சமயங்களும். இப்பொழுது எண்ணற்ற சமயங்கள் உள்ளன. இது இப்பொழுது இறுதி ஆகும். நீங்கள் இந்த ஞானம் அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். சிவபாபா மாத்திரம் விளங்கப்படுத்துகின்றார் என்றில்லை. இந்த பாபா எதனையாவது விளங்கப்படுத்துகிறாரா? அவருக்கும் நடிக்க வேண்டிய அவரது பாகம் உள்ளது. பிரம்மாவினது ஸ்ரீமத்தும் நினைவுகூரப்படுகின்றது. ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத்தைக் கொடுத்தார் என உங்களால் கூறமுடியாது. அங்கு அனைவரும் ஸ்ரீ (மேன்மை) யாக இருப்பதால், அவர்களுக்கு வழிகாட்டல்கள் தேவை இல்லை. இங்கேயே நீங்கள் பிரம்மாவின் வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். அங்கே அரசர், அரசி, பிரஜைகள் போன்ற அனைவருக்கும் உள்ள வழிகாட்டல்கள் மேன்மையானவை. நிச்சயமாக அவற்றை முன்னதாகவே அவர்களுக்கு எவரோ ஒருவர் கொடுத்திருக்க வேண்டும். தேவர்களுக்கே மேன்மையான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமத்தின் மூலம் சுவர்க்கம் உருவாக்கப்படுகிறது, அசுர வழிகாட்டல்கள் மூலம் நரகம் உருவாக்கப்படுகிறது. சிவன் உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கிறார். இவ் விடயங்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவானதாகும். இந்தக் கடைகள் அனைத்தும் சிவபாபாவிற்கு உரியவை. அவற்றைக் குழந்தைகளாகிய நீங்களே நடாத்துகின்றீர்கள். ஏனைய தொழில்கள் போன்று, ஒரு கடையை நன்றாக நடாத்துபவர்களின் பெயர்களின் போற்றப்படுகின்றன. எவ்வாறாயினும் வெகு சிலரால் மாத்திரமே இந்தத் தொழிலைச் செய்ய முடியும். நீங்கள் அனைவரும் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும். சிறு குழந்தைகளாலும் கூட ஞானம், யோகம் என்ற தொழிலைச் செய்ய முடியும். அமைதிதாமத்தையும், சந்தோஷதாமத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். அம்மக்கள் இராமா! இராமா! எனக் கூறுகிறார்கள். ஆனால் இங்கோ நீங்கள் மௌனமாக இருந்து, நினைவுசெய்ய வேண்டும். எதனையும் கூறவேண்டிய தேவை இல்லை. விஷ்ணுதாமமும், சிவன் தாமமும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விடயங்களாகும். உங்கள் இனிய வீட்டையும், உங்கள் இனிய இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். அவர்கள் பௌதீகமான மந்திரங்களைக் கொடுக்கின்றார்கள், ஆனால் இது சூட்சுமமான மந்திரமாகும். இந்த நினைவு மிகவும் சூட்சுமமானது. இந்த நினைவின் மூலம் நாங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றோம். நீங்கள் மந்திரங்கள் எதனையும் உச்சரிக்க வேண்டியதில்லை, ஆனால் நினைவைக் கொண்டிருங்கள். நீங்கள் எவ்விதமாகவும் சப்தமிட வேண்டியதில்லை. நாங்கள் அகநோக்குடையவர்கள் ஆகுவதாலும், மௌனமாக இருப்பதினாலும் எங்கள் மறைமுகமான ஆஸ்தியை மறைமுகமான தந்தையிடமிருந்து பெறுகின்றோம். இந்த நினைவில் நிலைத்திருக்கும் போதே சரீரத்தை நீக்குவது மிகவும் நல்லது. இதில் சிரமம் எதுவுமில்லை. நினைவில் நிலைத்திருக்க முடியாதவர்கள் இதனைப் பயிற்சி செய்ய வேண்டும். பாபா கூறுவதை அனைவருக்கும் கூறுங்கள்: என்னை நினைவுசெய்தால் உங்கள் இறுதி எண்ணம் உங்களை உங்கள் இலக்கிற்கு இட்டுச்; செல்லும். இந்த நினைவின் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நான் உங்களைச் சுவர்க்கத்திற்கும் அனுப்புவேன். உங்கள் புத்தியின் யோகத்தை சிவபாபாவுடன் இணைத்துக் கொள்வது மிக இலகுவாகும். இங்கே நீங்கள் சகல முன்னெச்சரிக்கைகளையும் எடுக்க வேண்டும். நீங்கள் முற்றிலும் தூய்மையானவர்களாக (சதோபிரதான்) விரும்பினால், உங்கள் நடத்தை, உங்கள் வார்த்தை, அத்துடன் ஏனைய அனைத்தும் தூய்மையாக இருத்தல் வேண்டும். நீங்கள் உங்களுடனேயே பேச வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். உங்கள் சகபாடிகளுடன் நீங்கள் பேசும் பொழுது அன்புடன் பேச வேண்டும். பாடல் ஒன்றுள்ளது: ஓ அன்பிற்கினியவரே, எப்பொழுதும் பெறுமதிமிக்க வார்த்தைகளைப் பேசுங்கள்! நீங்கள் ரூப்பும் பசந்த்தும் (ஞான இரத்தினங்களைப் பொழியும் யோகி) ஆவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ரூப் ஆகுகிறீர்கள். தந்தையே ஞானக்கடல் ஆவார். ஆகவே, நிச்சயமாக அவர் வந்து அந்த ஞானத்தைப் பேசுவார். அவர் கூறுகின்றார்: நான் ஒருமுறை மாத்திரமே வந்து ஒரு சரீரத்தைப் பெறுகின்றேன். இந்த மந்திரவித்தை குறைந்ததல்ல. பாபா ரூப்பும் பசந்தும் ஆவார். எவ்வாறாயினும், அசரீரியானவரால் பேச முடியாது, ஆதலால் அவர் ஒரு சரீரத்தைப் பெறுகிறார். ஆனால் அவர் பிறப்பு இறப்பு என்ற சக்கரத்தினுள் வருவதில்லை. ஆத்மாக்களாகிய நீங்களே பிறப்பு, மறுபிறப்பு எடுக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்களையே தந்தைக்கு அர்ப்பணித்து விடுகிறீர்கள். ஆதலால் பாபா கூறுகின்றார்: நீங்கள் எதன் மீதும் எவ்விதப் பற்றும் வைத்திருக்கக்கூடாது. எதனையும் உங்களுடையதெனக் கருதாதீர்கள். நீங்கள் பற்றை முடித்துவிடுவதற்காக பாபா உங்களுக்குத் திறமையான வழிகளை உருவாக்குகிறார். நீங்கள் ஒவ்வொரு அடியிலும் தந்தையிடம் கேட்கவேண்டும். மாயை உங்களைக் குத்திவிடக் கூடியவள். இது முற்றிலும் ஒரு குத்துச்சண்டை போன்றது. பலர் காயப்பட்டாலும், பின்னர் அதிலிருந்து மீண்டுவிடுகிறார்கள். அவர்கள் மேலும் எழுதுகிறார்கள்: பாபா, மாயை என்னை அறைந்து, எனது முகத்தையும் அழுக்காக்கி விட்டாள். அது அவர்கள் நான்காவது மாடியிலிருந்து வீழ்வதைப் போல் உள்ளது. உங்களிடம் கோபம் இருந்தால், அது மூன்றாவது மாடியிலிருந்து வீழ்வது போன்றதாகும். இவ் விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். பாருங்கள், சில குழந்தைகள் ஒலிநாடாக்களைக் கேட்கிறார்கள். அவர்கள், தங்களுக்கு ஒலிப்பதிவு நாடாக்களை அனுப்புமாறு பாபாவிடம் கேட்கிறார்கள், அதனால் அவர்களால் மிகச்சரியாக முரளியைக் கேட்க முடியும். இந்த வசதியும் கூட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதனைப் பலர் செவிமடுக்கும் போது, அவர்களில் பலரின் புத்தி திறக்கப்பட்டு, பலரும் நன்மையடைவார்கள். ஒருவர் ஒரு கல்லூரியை நிறுவினால், அவர் தனது அடுத்த பிறவியில் அதி விவேகத்தைப் பெறுகிறார். பாபா கூறுகின்றார்: ஓர் ஒலிப்பதிவுக் கருவியை (டேப் ரெக்கோடர்) வாங்கினால், பலரும் அதிலிருந்து நன்மையடைவார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சதோபிரதான் ஆகுவதற்கு, நீங்கள் பெரும் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். உங்கள் உணவு, பானம், வார்த்தைகள், நடத்தை, அத்துடன் ஏனைய அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும். தந்தையைப் போன்று ரூப் பசந்த் ஆகுங்கள்.2. அசரீரியான சுரங்கத்திலிருந்து அழிவற்ற ஞான இரத்தினங்களினால் உங்கள் புத்தியை நிரப்பி, எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்திருந்து, தொடர்ந்தும் இந்த இரத்தினங்களை ஏனையோருக்கும் தானம் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பற்றை அழிப்பவராகுவதன் மூலம், துன்பம் மற்றும் அமைதியின்மையின் பெயர் மற்றும் சுவடுகள் அனைத்தையும் முடித்து, நினைவின் சொரூபம் ஆகுவீர்களாக.ஒரேயொருவரின் விழிப்புணர்வில் சதா இருப்பவர்களால் தமது ஸ்திதியை நிலையானதாகவும் ஸ்திரமானதாகவும் (ஏக்-ரஸ்) ஆக்கிக் கொள்ள முடியும். நிலையான, ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பதென்றால், ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளின் இனிமையையும் (ராஸ்) ஒரேயொருவரிடமிருந்து சகல பேறுகளையும் அனுபவம் செய்தல் என்று அர்த்தம். சகல உறவுமுறைகளிலும் தந்தையைத் தமக்குச் சொந்தமாக்கி, நினைவின் சொரூபங்களாக இருப்பவர்கள், இலகுவாகப் பற்றை அழிப்பவர்கள் ஆகுகிறார்கள். பற்றை அழிப்பவர்களால் பணத்தைச் சம்பாதிப்பதில், தமது செல்வத்தைப் பராமரிப்பதில் அல்லது யாராவது நோயுற்றால் எந்தவிதமான துன்ப அலைகளையும் அனுபவிக்க முடியாது. பற்றை அழிப்பவர் என்றால், துன்பத்தின் அல்லது அமைதியின்மையின் எந்தவிதப் பெயரோ அல்லது சுவடோ இல்லாமல் இருப்பதுடன் சதா கவலையற்றவராகவும் இருப்பதாகும்.
சுலோகம்:
மன்னிப்பவர், கருணைநிறைந்தவராக இருப்பதுடன் தொடர்ந்து எல்லோருக்கும் ஆசீர்வாதங்களையும் வழங்குபவர் ஆவார்.