03.02.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்மா என்ற தீபத்தினுள் ஞானம், யோகம் எனும் எண்ணெயை ஊற்றுங்கள், அதனால் ஒளி ஏற்றப்பட்டிருக்கும். ஞானத்துக்கும், யோகத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி:
தந்தை தனது கடமையைத் தூண்டுதல் மூலம் செய்ய முடியாது, அவர் தனிப்பட்ட முறையில் இங்கு வரவேண்டும். இது ஏன்?

பதில்:
மனிதர்களின் புத்தி முற்றிலும் தமோபிரதான் ஆகியுள்ளதால் ஆகும். தமோபிரதான் புத்தியினால் தூண்டுதல்களைப் பற்றிக் கொள்ள முடியாது. தந்தை வந்ததனாலேயே அவர்கள் பாடுகின்றார்கள்: உங்களின் ஆகாய சிம்மாசனத்தை விட்டு விடுங்கள்.

பாடல்:
உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டு விடுங்கள்..

ஓம் சாந்தி.
பக்தர்கள் இந்தப் பாடலை இயற்றியுள்ளார்கள். இதனுடைய அர்த்தம் மிக அழகானது. உங்களின் ஆகாய சிம்மாசனத்தை விட்டுக் கீழே வாருங்கள் என அது கூறுகின்றது. எவ்வாறாயினும், ஆகாயம் இங்கே, இந்த வசிப்பிடத்திலேயே உள்ளது. ஆகாயத்திலிருந்து எவரும் வருவதில்லை. அவர்கள் ஆகாயத்தில் இருக்கும் சிம்மாசனத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். இப்பொழுது நீங்கள் ஆகாய தத்துவத்தின் கீழ் வசிக்கின்றீர்கள், ஆனால் தந்தையோ மகத்தான ஒளித்தத்துவத்தில் வசிக்கின்றார். அது ஆத்மாக்கள் வசிக்கின்ற பிரம்ம தத்துவம் என்றும், மகத்தான ஒளித்தத்துவம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஆகையால் தந்தை நிச்சயமாக அங்கிருந்து தான் வருகின்றார். எவராவது வரவேண்டும். அவர்கள் பாடுகின்றார்கள்: எங்களுக்கு ஒளி ஏற்ற வாருங்கள். குருடர்களின் குருட்டுக் குழந்தைகளும், ஞானமுள்ளவரின் ஞானம் பெற்ற குழந்தைகளும் உள்ளனர் என்பது நினைவு கூரப்படுகின்றது. திருதராட்டினன் யுதிஷ்டிரன் என்ற பெயர்கள் அடையாளங்களாகும். அவர்கள் இராவணனின் குழந்தைகள். இராவணன் மாயையாகும். நீங்கள் இறைபுத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள், ஏனையோர் அசுரபுத்தியைக் கொண்டுள்ளார்கள். தந்தை இப்பொழுது உங்கள் புத்தியின் பூட்டைத் திறக்கின்றார், ஆனால் இராவணன் பூட்டைப் பூட்டுகின்றான். ஒருவர் எதையுமே புரிந்து கொள்ளாத போது அவர் கல்புத்தி கொண்டவர் எனக் கூறப்படுகின்றது. தந்தை உங்களின் தீபங்களை ஏற்றுவதற்கு இங்கு வந்துள்ளார். அவர் தூண்டுதல் மூலம் எதையும் செய்வதில்லை. சதோபிரதானாக இருந்த ஆத்மாக்களின் பலம் இப்பொழுது முற்றாகக் குறைவடைந்து விட்டது. அவர்கள் தமோபிரதான் ஆகிவிட்டார்கள்; அவர்களது பிரகாசம் குறைந்து விட்டது. ஒருவர் மரணிக்கும் தறுவாயில், அவர்கள் ஒரு தீபத்தை ஏற்றுகின்றார்கள். அவர்கள் ஏன் தீபத்தை ஏற்றுகின்றார்கள்? ஏனெனில் ஒரு தீபத்தை ஏற்றும் பொழுது, ஆத்மா இருளிலே இருப்பதில்லை என அவர்கள் நம்புவதால் தீபத்தை ஏற்றுகின்றார்கள். அவர்கள் இங்கே தீபத்தை ஏற்றும்பொழுது, அங்கே எவ்வாறு ஒளி இருக்க முடியும்? அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது விவேகமான புத்தியைக் கொண்டவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களைச் சுத்தமான புத்தியுள்ளவர்களாக ஆக்குகின்றேன். நான் ஞானம் எனும் எண்ணெயை உங்களுக்குள் ஊற்றுகின்றேன். ஞானமும், யோகமும் இரு வேறுபட்ட விடயங்கள் என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் கூறுவது போன்று யோகம் என்பது ஞானமாக இருக்க முடியாது. கடவுள் வந்து என்னை நினைவு செய்யுங்கள்! என்று கூறி இந்த ஞானத்தைக் கொடுத்ததாகச் சிலர் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும் அதனை ஞானம் என்று அழைக்கக்கூடாது. இங்கே தந்தையும், குழந்தைகளும் இருக்கின்றார்கள். அவர் உங்களுடைய பாபா என குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அதிலே ஞானம் என்ற கேள்வி இல்லை. இந்த ஞானம் விரிவானது, ஆனால் அதுவோ நினைவு மட்டுமே. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். அவ்வளவுவே! இது பொதுவான விடயம், அதை ஞானம் என அழைக்கக் கூடாது. ஒரு குழந்தை பிறந்த பின்னர் நிச்சயமாக தனது (லௌகீகத்) தந்தையை நினைவு செய்வார். ஞானம் விரிவானது. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், ஆனால் அது இந்த ஞானம் அல்ல. நீங்கள் ஓர் ஆத்மா என்றும், உங்களுடைய தந்தை பரமாத்மா, கடவுள் என்பதையும் உங்கள் ஒவ்வொருவராலும் புரிந்து கொள்ள முடியும். இதை ஞானம் என்று அழைக்க முடியுமா? அவர்கள் தந்தையை அழைக்கின்றார்கள். ஞானம் என்றால் இந்த ஞானம். உதாரணமாக ஒருவர் எம்.ஏ அல்லது பி.ஏ கற்கும் பொழுது அதற்குரிய அறிவைக் கொண்ட பல புத்தகங்களைப் படிப்பதற்காக வைத்திருப்பார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னுடைய குழந்தைகள், நான் உங்களுடைய தந்தையாவேன். என்னுடன் மாத்திரம் யோகம் செய்யுங்கள், அதாவது என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! இந்த நினைவு ஞானம் என்று அழைக்கப்படுவதில்லை. எவ்வாறாயினும் ஆத்மாக்களாகிய நீங்கள் என்னுடைய குழந்தைகளே. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒருபோதும் அழிவதில்லை. ஒருவர் மரணிக்கும் பொழுது அவர்கள் அந்த ஆத்மாவை அழைக்கின்றார்கள். அவரது சரீரம் அழிந்து விடும். எவ்வாறு அந்த ஆத்மா தனக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணமுடியும்? பிராமணப் புரோகிதரே அந்த உணவை உண்கின்றார். எவ்வாறாயினும், அவை பக்தி மார்க்க சம்பிரதாயமாகும். நாங்கள் கூறுகின்றோம் என்பதால், பக்தி மார்க்கம் ஒரு முடிவுக்கு வரும் என்றில்லை. அது தொடர்ந்தும் இருக்கும். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுக்கும். ஞானத்துக்கும், யோகத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசம் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் தெளிவாக இருக்க வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்ற பொழுது, அது ஞானமல்ல, அது தந்தையின் வழிகாட்டலாகும். இது யோகம் என்று அழைக்கப்படுகின்றது. எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கின்றது எனத் தெரிந்து கொள்வதே ஞானமாகும். அது ஞானம் என்று அழைக்கப் படுகின்றது. யோகம் என்றால் நினைவு ஆகும். தந்தையை நினைவு செய்வது குழந்தைகளின் கடமையாகும். அவர் பௌதீகத் தந்தை, ஆனால் இவரோ பரலோகத் தந்தையாவார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். ஆகையினால், ஞானம், நினைவிலிருந்து வேறுபட்டது. குழந்தைகளுக்கு அவர்களது தந்தையை நினைவு செய்யுமாறு கூறவேண்டுமா? ஒரு குழந்தை பிறப்பு எடுத்தவுடன், அவருடைய லௌகீகத் தந்தையை அவர் நினைவு செய்கின்றார். இங்கே உங்களுக்குத் தந்தையை நினைவூட்ட வேண்டியுள்ளது. இந்த நினைவிற்கே அதிகளவு முயற்சி தேவையாக உள்ளது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இந்தப் பணிக்குப் பெருமளவு முயற்சி தேவை. இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்களால் தொடர்ச்சியாக யோகத்தில் நிலைத்திருக்க முடிவதில்லை. தாம் பாபாவை நினைவுசெய்ய மறந்துவிட்டதாக குழந்தைகள் பாபாவுக்கு எழுதுகின்றார்கள். அவர்கள் ஞானத்தை மறந்து விட்டதாக ஒருபோதும் கூறுவதில்லை. ஞானம் மிக இலகுவானது. நினைவு ஞானமாக இருக்க முடியாது. இந்த நினைவிலேயே மாயையின் புயல்கள் பல வருகின்றன. சிலர் இந்த ஞானத்தில் மிகவும் திறமைசாலிகளாக இருந்து மற்றவர்களுக்கும் மிக நன்றாக ஞானத்தைக் கொடுக்கின்ற போதிலும், பாபா உங்கள் அனைவரையும் நினைவு அட்டவணையை எழுதுமாறு கேட்கின்றார். எவ்வளவு நேரம் நீங்கள் நினைவில் நிலைத்திருந்தீர்கள்? நீங்கள் வைத்திருக்கும் பாபாவின் நினைவின் சரியான அட்டவணையை அவருக்குக் காட்டுங்கள். நினைவே பிரதான விடயமாகும். வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! எனத் தூய்மையற்றவர்களே அழைக்கின்றார்கள். தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். இதிலேயே மாயை தடைகளை உருவாக்குகின்றாள். கடவுள் சிவன் பேசுகின்றார்: அனைவரும் நினைவிலேயே பலவீனமாக இருக்கின்றார்கள். ஞானத்தை மிக நன்றாகப் பேசக்கூடிய மிக நல்ல குழந்தைகள் நினைவில் முற்றிலும் பலவீனமாக இருக்கின்றார்கள். யோகம் செய்வதினால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். யோகம் செய்வதன் மூலமே உங்கள் புலன் அங்கங்கள் முற்றிலும் குளிர்மையாகவும், அமைதியாகவும் ஆகுகின்றன. பின்னர் ஒரு பாபாவைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்ய மாட்டீர்கள். எவருடைய சரீரத்தின் நினைவும் இருக்கமாட்டாது. இந்த முழு உலகமும் அழியப்போகின்றது என ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நாங்கள் வீடு திரும்ப இருக்கின்றோம், பின்னர் நாங்கள் இங்கே எங்கள் இராச்சியத்துக்கு இறங்கி வருவோம். இது சதா உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் பெற்ற ஞானத்தை உங்களுக்குள்ளே வைத்திருக்க வேண்டும். தந்தை யோகத்தின் பிரபு ஆவார்: அவரே நினைவைக் கற்பிப்பவர். உண்மையில், அவர்கள் கூறுவது போல் கடவுள் யோகேஸ்வரராக (யோகத்தின் பிரபு) இருக்கமுடியாது. நீங்களே யோகேஸ்வரர்கள். கடவுள் தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். கடவுளாகிய தந்தையே உங்களுக்கு நினைவைக் கற்பிக்கின்றார். அந்த அசரீரியான தந்தை இந்த சரீரத்தின் மூலம் பேசுகின்றார், குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் சரீரத்தின் மூலம் அவரை செவிமடுக்கின்றீர்கள். உங்களில் சிலர் யோகத்தில் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கின்றீர்கள், நீங்கள் சற்றேனும் நினைவைக் கொண்டிருப்பதில்லை! ஆகையினால் பல பிறவிகளின் மூலம் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்திற்குமான தண்டனையை அனுபவம் செய்ய வேண்டும். இங்கே வந்து பின்னர் பாவம் செய்தவர்கள் நூறுமடங்கு தண்டனையை அனுபவம் செய்வார்கள். அவர்கள் பெருமளவு ஞானத்தைப் பேசிய போதிலும், அவர்கள் முழுமையான யோகத்தைக் கொண்டிராததினால், அவர்களது பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. அவர்கள் பலவீனமாக இருக்கின்றார்கள். இதனாலேயே எட்டு மணிகளினாலேயே உண்மையான மாலை உருவாக்கப்படுகின்றது. ஒன்பது இரத்தினங்கள் நினைவு கூரப்படுகின்றன. நீங்கள் 108 இரத்தினங்கள் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? எவருமே 108 இரத்தினங்களைக் கொண்டு ஆபரணங்களைச் செய்வதில்லை. இந்த விடயங்களைப் பலர் புரிந்து கொள்வதில்லை. நினைவு செய்வதை ஞானம் என்று அழைக்க முடியாது. உலகச் சக்கரமே ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. புராணங்களிலே எந்த விதமான ஞானமும் இல்லை. அந்தப் புராணங்கள் பக்தி மார்க்கத்துக்குச் சொந்தமானவை. தந்தை கூறுகின்றார்: அவற்றின் மூலம் நீங்கள் என்னை அடைய முடியாது. சாது, சந்நியாசிகள் அனைவரையும் ஈடேற்றவே நான் வந்திருக்கின்றேன். அவர்கள் நீர்க்குமிழிகள் நீரில் கலந்து விடுகின்ற உதாரணத்தைக் கூறி, பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலந்துவிடுவதாக நம்புகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இதைக் கூறுவதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையின் குழந்தைகள் எனப் புரிந்து கொள்கின்றீர்கள். என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள் என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களும் ஆத்மாக்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால் அவர்களிடம் ஆத்மா என்றால் என்ன, அல்லது பரமாத்மா என்றால் என்ன என்ற ஞானம் நிச்சயமாக இல்லை. தந்தை மாத்திரமே வந்து இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அது ஆத்மாக்களின் வீடு என இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். முழு வம்சாவழி விருட்சமும் இங்கேயே இருக்கின்றது. ஒவ்வோர் ஆத்மாவும் அவருடைய சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளார். யார் சந்தோஷத்தைக் கொடுப்பது, யார் துன்பத்தைக் கொடுப்பது என எவருக்குமே தெரியாது. பக்தி இரவும், ஞானம் பகலுமாகும். நீங்கள் 63 பிறவிகளாக அலைந்து திரிந்தீர்கள். பின்னர் நான் வந்து ஞானத்தைக் கொடுக்கின்றேன், ஆனால் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கின்றது? ஒரு செக்கன் மாத்திரமே. ஜீவன்முக்தி ஒரு செக்கனில் பெறப்பட்டது என்பது நினைவு கூரப்படுகின்றது. தூய்மையாக்குபவராகிய அவரே உங்களுடைய தந்தையாவார். அவரை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்களின் சக்கரம் இருக்கின்றது. அவர்கள் இந்தப் பெயர்களைத் தெரிந்துள்ளார்கள். ஆனால் எவருக்குமே அவற்றின் காலவரையறை தெரியாதளவுக்கு கல்லுப்புத்தியைக் கொண்டுள்ளார்கள். இப்பொழுது கலியுகத்தின் காரிருள் என அவர்கள் புரிந்துள்ளார்கள். எவ்வாறாயினும் அவர்கள் கூறுவது போல கலியுகம் நீண்டகாலம் நீடித்தால், காரிருள் மேலும் இருக்கும். இதனாலேயே விநாசம் இடம்பெற்ற பொழுது, அனைவரும் கும்பகர்ண உறக்கத்தில் இருந்ததாக நினைவு கூரப்படுகின்றது. அவர்கள் சிறிதளவு ஞானத்தை செவிமடுத்தாலுமே, அவர்களால் பிரஜைகளில் ஒருவராக வரமுடியும். இலக்ஷ்மி, நாராயணனுக்கும், பிரஜைகளுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு இருக்கின்றது. கற்பிக்கின்றவர் ஒருவரே இருக்கின்றார். ஒவ்வொருவரும் அவரது சொந்தப் பாக்கியத்தைக் கொண்டுள்ளார்கள். சிலர் புலமைப் பரிசிலைப் பெறுகின்றார்கள், சிலர் சித்தி அடைவதில்லை. இராமர் ஏன் அம்பு, வில்லு சின்னத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்? ஏனெனில் அவர் சித்தி அடையவில்லை. இது கீதையைக் கற்கும் இடமாகும். சிலர் எந்தப் புள்ளியும் பெறத் தகுதியற்றவர்கள். ஆத்மாவாகிய நான், ஒரு புள்ளியானவர். தந்தையும் ஓர் புள்ளியாவார். இவ்வாறே நீங்கள் அவரை நினைவு செய்ய வேண்டும். இந்த விடயத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் என்ன அந்தஸ்தைப் பெற முடியும்? நீங்கள் நினைவில் நிலைத்திருக்காவிடின், பெருமளவு இழப்பு ஏற்படும். நினைவுசக்தி அற்புதங்கள் புரியும். அது உங்கள் புலன் அங்கங்களை முற்றாக அமைதியும், குளிர்மையும் அடையச் செய்யும். அவை ஞானத்தின் மூலம் அமைதி அடைவதில்லை, யோகசக்தியின் மூலமே அமைதி அடைகின்றன. வந்து கீதையின் ஞானத்தை எங்களுக்குக் கொடுங்கள் என பாரதமக்கள் அழைக்கின்றார்கள். ஆனால் யார் வருவார்? ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மா இங்கு இருக்கின்றார். நீங்கள் அவரை அழைப்பதற்கு மேலே எவரும் சிம்மாசனத்தில் இருப்பதில்லை. சிலர் தாங்கள் கிறிஸ்துவின் ஆத்மாவை நினைவு செய்வதாகக் கூறுகின்றார்கள், ஆனால் அந்த ஆத்மா இங்கேயே இருக்கின்றார். கிறிஸ்துவின் ஆத்மா இதுவரை வீடு திரும்பாமல் இங்கேயே இருக்கின்றார் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இலக்ஷ்மி, நாராயணனின் ஆத்மாக்களே முதல் எண்ணில் இருப்பவர்கள். அவர்களே முழுமையாக 84 பிறவிகள் எடுத்தவர்கள். அவர்களே இன்னமும் வீடு திரும்பவில்லை, எனவே மற்றவர்கள் எப்படி வீடு திரும்ப முடியும்? இவை அனைத்தையும் கணக்கிட முடியும். மனிதர்கள் கூறுபவை அனைத்தும் பொய்யே. முதலில் அரைக்கல்பத்துக்கு சத்தியதாமமும், அடுத்த அரைக்கல்பத்துக்கு பொய்யான பூமியும் இருக்கின்றது. அனைவரும் நரகவாசிகள் எனவும், மீண்டும் ஒருமுறை பாரதவாசிகள் சுவர்க்கவாசிகள் ஆகுவார்கள் எனவும் நீங்கள் இப்பொழுது அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் பலவிதமான வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் போன்றவற்றைக் கற்றுள்ளார்கள். அதைக் கற்பதன் மூலம் அவர்களால் முக்தியைப் பெற முடியுமா? அவர்கள் தொடர்ந்தும் கீழேயே வரவேண்டும். அனைத்துமே சதோ, ரஜோ, தமோ நிலைகளுக்கூடாக நிச்சயமாகச் செல்ல வேண்டும். புதிய உலகம் என்று அழைக்கப்படுகின்ற இடத்தைப் பற்றிய ஞானம் எவரிடமும் இல்லை. தந்தை இங்கே தனிப்பட்ட முறையில் அமர்ந்திருந்து, எப்போது, யார் தேவதர்மத்தை ஸ்தாபித்தார்? என விளங்கப்படுத்துகின்றார். பாரதமக்களுக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் ஞானத்தில் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, சிலர் யோகத்தில் சித்தி அடைவதில்லை எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் யோகம் செய்யாதுவிடின், உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட முடியாது, உங்களால் உயர்ந்த அந்தஸ்தையும் பெற முடியாது. யோகத்திலே போதை அடைந்தவர்களே, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். அவர்களுடைய புலன் அங்கங்கள் முற்றிலும் குளிர்மையாகிவிடும். அவர்கள் தங்களது சொந்த சரீர உணர்வுகள் உட்பட அனைத்தையும் மறந்து விடுவார்கள். நான் சரீரமற்றவன், இப்பொழுது நான் வீட்டுக்குத் திரும்பவேண்டும். இப்பொழுது நீங்கள் அமர்ந்திருக்கும் பொழுதும், அசைந்துதிரியும் பொழுதும், உங்களுடைய சரீரத்தைத் துறக்கவேண்டும் என்ற உணர்வைக் கொண்டிருங்கள். நாங்கள் எங்களது பாகத்தை நடித்து விட்டோம், நாங்கள் இப்பொழுது வீடு திரும்பவேண்டும். தந்தை கொண்டிருந்த ஞானம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எவரையும் நினைவு செய்ய வேண்டியதில்லை. குழந்தைகளாகிய நீங்களே அவரை நினைவு செய்ய வேண்டும். தந்தை ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். அவர் யோகத்தின் கடல் என அழைக்கப்படுவதில்லை. அவர் தன்னை அறிமுகப்படுத்தி சக்கரத்தின் ஞானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். நினைவை ஞானம் என்று அழைப்பதில்லை. குழந்தைகள் இயல்பாகவே தமது தந்தையை நினைவு செய்வார்கள். குழந்தைகளாகிய நீங்களும் நினைவைக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடின் எப்படி உங்களுடைய ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ள முடியும்? அவர் உங்களுடைய தந்தை ஆகியதால், நீங்கள் நிச்சயமாக அவரிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுத்தீர்கள் எனவும், எவ்வாறு தமோப்பிரதானிலிருந்து, சதோப்பிரதானாகவும், சதோப்பிரதானிலிருந்து, தமோப்பிரதானாகவும் ஆகினீர்கள் என்ற ஞானத்தை தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம், இப்பொழுது சதோப்பிரதான் ஆகவேண்டும். ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இங்கே ஆன்மீகத் தந்தையிடம் வந்துள்ளீர்கள். அவருக்கு ஒரு சரீரத்தின் ஆதாரம் தேவை. அவர் கூறுகின்றார்: இவர் தனது ஓய்வு பெறுகின்ற நிலையில் இருக்கின்ற பொழுது, நான் இவரது வயதான சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். முழு உலகும் நன்மையடைகின்ற இந்த நேரத்தில் தந்தை வருகின்றார். இவரே பாக்கியரதம் ஆவார். பெருமளவு சேவை இவர் மூலம் இடம்பெறுகின்றது. உங்களது சரீர உணர்வை விடுவதற்கு உங்களுக்கு நினைவு தேவை. இதில் ஞானம் என்ற கேள்வி இல்லை. நீங்கள் நினைவைக் கூடுதலாகக் கற்பிக்க வேண்டும். ஞானம் இலகுவானது: சிறு பிள்ளைகளாலும் அதைக் கொடுக்க முடியும். நினைவில் இருப்பதற்கே முயற்சி எடுக்க வேண்டும். ஒருவருடைய நினைவே இருக்கட்டும்: இதுவே கலப்படமற்ற நினைவு என்று அழைக்கப்படுகின்றது. ஒருவருடைய சரீரத்தை நினைவு செய்வது கலப்படமான நினைவாகும். இந்த நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் அனைவரையும் மறந்து சரீரமற்றவர்கள் ஆகுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டு பிடிக்ப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீக குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நினைவு சக்தி மூலம் உங்களுடைய புலன் அங்கங்களை குளிர்மையாகவும், அமைதியாகவும் ஆக்குங்கள். முழுமையாகச் சித்தியடைவதற்கு, தந்தையைச் சரியாக நினைவு செய்து தூய்மை ஆகுங்கள்.

2. நீங்கள் அமர்ந்திருக்கும் பொழுதும், அசையும் பொழுதும், இப்பொழுது நீங்கள் உங்களுடைய பழைய சரீரத்தைத் துறந்து வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பது உங்கள் புத்தியிலே இருக்க வேண்டும். தந்தை ஞானம் அனைத்தையும் கொண்டிருப்பது போன்று, நீங்களும் மாஸ்டர் ஞானக்கடலாக ஆகவேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களின் மேன்மையான ஸ்திதி என்ற ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருப்பதன் மூலம் சதா நிரம்பியிருப்பவர் ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தில், நீங்கள் சிவனும் சக்தியும் என்ற ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வில் இருந்தால், ஒவ்வொரு அசாத்தியமான செயலும் உங்களுக்குச் சாத்தியம் ஆகிவிடும். இதுவே உங்களின் அதி மேன்மையான ரூபமாகும். இந்த ரூபத்தில் ஸ்திரமாக இருப்பதன் மூலம், நீங்கள் சம்பூரணம் ஆகுகின்ற ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். பாப்தாதா சதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் சந்தோஷத்தை வழங்குகின்ற ஆசனத்தை வழங்குகிறார். சதா இந்த ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருங்கள். நீங்கள் தொடர்ந்து அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுவீர்கள். மறக்கின்ற சம்ஸ்காரத்தை முடித்துவிடுங்கள்.

சுலோகம்:
உங்களின் சக்திவாய்ந்த மனோபாவத்தின் மூலம், ஆத்மாக்களைத் தகுதியானவர்களாகவும் யோகிகளாகவும் ஆக்குங்கள்.

ஏகாந்தத்தில் அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.

உங்களிடம் ஏற்றுக் கொள்ளும் சக்தி இருக்கும்போது, ஒரே வழிகாட்டல் என்ற சூழல் உருவாக்கப்படும். எனவே, வேறுபாடுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது மட்டுமே உங்களால் ஒற்றுமைக்கு நெருக்கமாக வந்து, எல்லோரின் முன்னாலும் ஓர் உதாரணம் ஆகமுடியும். பிராமணக் குடும்பத்தின் சிறப்பியல்பு என்னவென்றால், பலர் இருந்தாலும் ஒற்றுமையாக இருப்பதேயாகும். ஒற்றுமையின் இந்த அதிர்வலைகள், முழு உலகிலும் ஒரு தர்மத்தையும் ஓர் இராச்சியத்தையும் ஸ்தாபிக்கும். ஆகவே, சகல வேறுபாடுகளையும் முடிப்பதில் விசேடமான கவனம் செலுத்தி, ஒற்றுமையை ஏற்படுத்துங்கள்.