03.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த எல்லையற்ற நாடகத்தை உங்களுடைய உணர்வில் சதா வைத்திருப்பதன் மூலம், நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். நல்ல முயற்சியாளர்களான, மிக விசேடமான குழந்தைகளே அதிகளவில் பூஜிக்கப்படுகிறார்கள்.

கேள்வி:
எந்த உணர்வு உங்களை இந்த உலகின் சகல வகையான துன்பங்களில் இருந்தும் விடுவிக்கிறது? முகமலர்ச்சியுடன் இருப்பதற்கான வழி என்ன?

பதில்:
நீங்கள் இப்போது எதிர்காலப் புதிய உலகிற்குச் செல்கிறீர்கள் என்ற உணர்வில் எப்போதும் இருங்கள். எதிர்கால சந்தோஷத்தைப் பேணுங்கள், நீங்கள் உங்களுடைய துன்பம் அனைத்தையும் மறந்துவிடுவீர்கள். இந்தத் தடைகள் நிறைந்த உலகில் தடைகளே இருக்கும். ஆனால், நீங்கள் இந்த உலகில் இன்னும் சில நாட்கள் மாத்திரமே இருப்பீர்கள் என அறியும்பொழுது, நீங்கள் மலர்ச்சியாக இருப்பீர்கள்.

பாடல்:
விழித்தெழுங்கள்! ஓ மணவாட்டிகளே, விழித்தெழுங்கள்! புதிய நாள் புலரப் போகிறது….

ஓம் சாந்தி.
இந்தப் பாடல் மிக நல்லது. நீங்கள் இந்தப் பாடலைச் செவிமடுக்கும்போது, 84 பிறவிகள் அனைத்தினதும் இரகசியங்கள் மிகவும் ஆரம்பத்தில் இருந்து உங்கள் புத்தியில் வருகின்றன. நீங்கள் மேலிருந்து கீழே இங்கு வரும்போது, நீங்கள் சூட்சும வதனத்தினூடாக வருவதில்லை எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் இப்போது சூட்சும வதனத்தினூடாகவே அங்கே திரும்பிச் செல்ல வேண்டும். இந்த வேளையில் மாத்திரமே பாபா உங்களுக்குச் சூட்சும வதனத்தைக் காட்டுகிறார். இந்த ஞானத்திற்குரிய விடயங்கள் சத்திய, திரேதா யுகங்களில் தெரியாது. அத்துடன் இந்தப் படங்கள் எவையும் அங்கு இருக்காது. பக்தி மார்க்கத்தில் பல படங்கள் காணப்படுகின்றன. தேவர்கள் போன்றோரும் அதிகளவில் பூஜிக்கப்படுகிறார்கள். துர்க்கை, காளி, சரஸ்வதி அனைவரும் உண்மையில் ஒருவரே. ஆனால் அவருக்குப் பல்வேறுபட்ட பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. நல்ல முயற்சியாளர்களான, மிக விசேடமான குழந்தைகளே அதிகளவில் பூஜிக்கப்படுவார்கள். நீங்கள், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களில் இருந்து பூஜிப்பவர்கள் ஆகி, பாபாவையும் உங்களையும் பூஜிக்க ஆரம்பித்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவர் (பிரம்மபாபா) நாராயணனைப் பூஜித்து வந்தார். இது ஓர் அற்புதமான நாடகம். எவ்வாறு ஒரு நாடகத்தைப் பார்க்கும்போது சந்தோஷம் ஏற்படுகிறதோ, அவ்வாறே, இதுவும் ஓர் எல்லையற்ற நாடகமாகும். எவருக்கும் இதனைப் பற்றித் தெரியாது. இப்போது உங்கள் புத்தியில் நாடகத்தின் இரகசியங்கள் அனைத்தும் உள்ளன. இந்த உலகில் அதிகளவில் துன்பம் நிலவுகிறது. நீங்கள் இங்கு மேலும் சில நாட்கள் மாத்திரமே தங்கியிருந்து, பின்னர் புதிய உலகிற்குச் செல்வீர்கள் என நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எதிர்காலத்திற்கான சந்தோஷத்தைப் பேணும்போது, நிகழ்காலத்தின் துன்பம் அகன்று விடுகின்றது. ‘பாபா, பல தடைகள் ஏற்படுவதால், நாங்கள் இழப்பினை அனுபவம் செய்கிறோம்’ எனப் பலரும் எழுதுகிறார்கள். தந்தை கூறுகிறார்: எந்தவிதத் தடைகள் உங்கள் முன் வந்தாலும், நீங்கள் இன்று மில்லியன்களை உடையவராக இருந்து நாளை கடனாளி ஆகினாலும், நீங்கள் எதிர்கால சந்தோஷத்தில் நிலைத்திருக்க வேண்டும். இது இராவணனின் அசுர உலகம். நீங்கள் நடக்கும் போதும், உலாவித்திரியும் போதும் ஏதாவதொரு தடை வரும். இந்த உலகிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. பின்னர் நாங்கள் எல்லையற்ற சந்தோஷ உலகிற்குச் செல்வோம். பாபா கூறுகிறார்: நேற்று, நாங்கள் அலவட்சணமாக இருந்தோம், நாங்கள் கிராமத்துச் சிறுவர்களாக இருந்தோம். தந்தை இப்போது எங்களுக்கு ஞானத்தை அளித்து எங்களை அழகானவர்கள் ஆக்குகிறார். தந்தையே விதையானவரும், சத்தியமும், உயிருள்ளவரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் பரமாத்மா என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்திலும் அதியுயர்ந்த வசிப்பிடத்தில் வசிக்கிறார். அவர் மறுபிறவிச் சக்கரத்தினுள் பிரவேசிப்பதில்லை. நாங்கள் அனைவரும் மறுபிறவிச் சக்கரத்தினுள் பிரவேசிக்கிறோம். ஆனால் அவர் தனது இருப்பிடத்தில் இருப்பார். அவர் சக்கரத்தின் இறுதியில் வந்து அனைவருக்கும் சற்கதி அருள வேண்டும். பக்தி மார்க்கத்தில், பிறவிபிறவியாக, நீங்கள் பாடி வருகிறீர்கள்: பாபா, நீங்கள் வரும்போது, நாங்கள் உங்களுக்கு உரியவர்கள் ஆகுவோம். என்னுடையவர் பாபா ஒருவரே அன்றி, வேறொருவரும் இல்லை. நாங்கள் பாபாவுடன் மாத்திரமே செல்வோம். இது துன்ப உலகம். பாரதம் மிக ஏழையாக உள்ளது! தந்தை கூறுகிறார்: நான் பாரதத்தைச் செல்வம் மிக்கதாக ஆக்கினேன், இராவணன் அதனை நரகமாக்கி விட்டான். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தந்தையின் முன்னால் நேரடியாக அமர்ந்துள்ளீர்கள். பலர் வீட்டில் தங்கள் குடும்பங்களுடன் வசிக்கிறார்கள். அனைவராலும் இங்கு அமர்ந்திருக்க முடியாது. வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வாழுங்கள். நீங்கள் நிற ஆடைகளை அணியலாம். நீங்கள் வெள்ளை ஆடைகளை அணிய வேண்டும் என்று யார் சொன்னது? பாபா ஒருபோதும் இதனை எவருக்கும் கூறவில்லை. நீங்கள் நிற ஆடைகளை விரும்பாததாலேயே, வெள்ளை ஆடைகளை அணிகிறீர்கள். இங்கு வசிக்கும்போது நீங்கள் வெள்ளை ஆடைகளை அணிந்தாலும், நிற ஆடைகளை அணிபவர்களால், அந்த ஆடையுடன் பலருக்கு நன்மையை ஏற்படுத்த முடியும். பெண்கள் தங்கள் கணவன்மாருக்கு விளங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள்: கடவுள் எங்களைத் தூய்மையானவர்கள் ஆகும்படி கூறுகிறார். தேவர்கள் தூய்மையாக இருந்ததாலேயே, அவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் மக்கள் தலைவணங்குகிறார்கள். தூய்மையாகுவது மிகவும் நல்லது. இது இப்போது உலக இறுதி என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தப் பணம் அனைத்தையும் வைத்திருந்து நீங்கள் என்ன செய்வீர்கள்? அதிகளவில் கொள்ளை இடம்பெறுகிறது. அதிகளவில் இலஞ்சம் கொடுப்பது இடம்பெறுகிறது. ‘சிலரின் செல்வம் புதைக்கப்பட்டுவிடும், சிலரின் செல்வம் களவாடப்பட்டுவிடும். ஆனால், கடவுளின் பெயரில் அதனை உபயோகிப்பவர்களின் செல்வம் மாத்திரமே பயனுள்ள முறையில் உபயோகிக்கப்படும்’ என்ற கூற்று இந்த நேரத்திற்கே பொருந்துகிறது. கடவுள் இப்போது உங்கள் முன்னால் பிரசன்னமாக உள்ளார். விவேகமான குழந்தைகள் அனைத்தையும் கடவுளின் பெயரில் கொடுத்து அதனைப் பயனுள்ள முறையில் உபயோகிக்கிறார்கள். மனிதர்கள் தூய்மையற்ற மனிதர்களுக்கே தானம் செய்கிறார்கள். இங்கு, தூய, புண்ணியாத்மாக்களிடம் இருந்து தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பிராமணர்களைத் தவிர வேறு எவருடனும் உங்களுக்குத் தொடர்பு கிடையாது. நீங்கள் தூய, புண்ணியாத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள் தூய, புண்ணியச் செயல்களை மாத்திரமே செய்கிறீர்கள். இங்கு கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடங்களில் நீங்கள் மாத்திரமே தங்குகிறீர்கள். பாவத்தைப் பற்றிய கேள்விக்கு இடமேயில்லை. உங்களிடம் உள்ள பணத்தை, நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்காக உபயோகிக்கிறீர்கள். உங்களில் சிலர் உண்ணாமலே இருந்து, கூறுகிறீர்கள்: பாபா, எனது பெயரில் இந்தக் கட்டடத்திற்கு ஒரு செங்கல்லை வையுங்கள். அதன்பலனாக என்னால் ஒரு மாளிகையைப் பெற முடியும். அத்தகைய குழந்தைகள் மிகவும் விவேகிகள். நீங்கள் கற்களுக்குப் பதிலாக தங்கத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். மிகக் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. நீங்கள் அதிகளவு சேவை செய்கிறீர்கள். விழாக்களும், கண்காட்சிகளும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. புதல்விகளான நீங்கள் அதி திறமைசாலிகள் ஆகவேண்டும். உங்களில் சிலர் தந்தைக்கு உரியவர்கள் ஆகுவதில்லை. நீங்கள் உங்கள் பற்றினை விட்டு விடுவதில்லை. தந்தை கூறுகிறார்: நான் உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புகிறேன். நான் இப்போது உங்களை மீண்டும் சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு தயார் செய்கிறேன். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், உயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறீர்கள். வேறு எவராலும் இந்த விடயங்களைக் கூற முடியாது. உங்கள் புத்தியில் முழு உலகச் சக்கரமும், அசரீரி உலகமும், சூட்சும உலகமும் உள்ளன. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகித் தொடர்ந்தும் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். இது எத்தகைய வியாபாரம் எனப் பாருங்கள். நீங்களே சுவர்க்கத்தின் செல்வந்த அதிபதிகள் ஆகுகிறீர்கள். எனவே, நீங்கள் மற்றவர்களையும் இவ்வாறு ஆக்க வேண்டும். எவ்வாறு நீங்கள் மற்றவர்களுக்குப் பாதையைக் காட்ட முடியும் என்பதே உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டிய ஒரேயொரு விடயம் ஆகும். நாடகத்திற்கேற்ப, கடந்து சென்ற எதுவும் நாடகமே ஆகும். விநாடிக்கு விநாடி என்ன நிகழ்ந்தாலும், நாங்கள் அதனைப் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிக்கிறோம். தெய்வீகத் திருஷ்டியினூடாகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் காட்சிகளை அருளுகிறார். நீங்கள் முன்னேறுகையில், பல காட்சிகளைக் காண்பீர்கள். மக்கள் விரக்தியில் கதறி அழுவார்கள். ஆனால், நீங்களோ சந்தோஷத்தில் கைதட்டுவீர்கள். நாங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகிறோம், எனவே, ஒரு புதிய உலகம் நிச்சயமாக எங்களுக்குத் தேவையாக உள்ளது. இதற்காகவே விநாசமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது நல்ல விடயமாகும். தங்கள் மத்தியில் சண்டையிடக்கூடாது, அமைதி நிலவவேண்டும் என மக்கள் நம்பினாலும், அச் சண்டை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இரண்டு குரங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட, மூன்றாவது அவற்றுக்கு இடையே உள்ள வெண்ணெயை எடுத்துக் கொள்கிறது. எனவே, தந்தை இப்போது கூறுகிறார்: தந்தையாகிய என்னை நினைவு செய்து, அனைவருக்கும் இந்தப் பாதையைக் காட்டுங்கள். எளிமையாக வாழ்ந்து, எளிமையான உணவினை உண்ணுங்கள். சிலவேளைகளில், உங்களுக்கு மிக நல்ல விருந்தோம்பல் செய்யப்படுகிறது. நீங்கள் உண்கின்ற பொக்கிஷக் களஞ்சியத்தைப் பற்றிக் கூறுகிறீர்கள்: ‘பாபா, இவை அனைத்தும் உங்களுடயவை’. தந்தை கூறுகிறார்: அதனை நம்பிக்கைப் பொறுப்பாளராக பராமரியுங்கள்! ‘பாபா, இவை அனைத்தும் உங்களால் கொடுக்கப்பட்டது’. பக்தி மார்க்கத்தில், இது சொல்ல வேண்டும் என்பதற்காகவே கூறப்பட்டது. இப்போது, நான் உங்களை நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ஆகும்படி கூறுகிறேன். நான் இப்போது நேரடியாக உங்களின் முன்னால் இருக்கிறேன். நானும் நம்பிக்கைப் பொறுப்பாளராகி, அதன் பலனாக, உங்களையும் நான் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக ஆக்குகிறேன். நீங்கள் எதனையும் செய்வதற்கு முன்னர், முதலில், கேளுங்கள். பாபா தொடர்ந்தும் அனைத்து விடயங்களைப் பற்றியும் அறிவுரை கூறுகிறார். ‘பாபா, நான் வீடு கட்டலாமா? நான் இதனைச் செய்யலாமா?’ பாபா கூறுகிறார்: ஆமாம், நீங்கள் செய்யலாம். ஆனால், நீங்கள் எதனையும் பாவாத்மாக்களுக்குக் கொடுக்கக்கூடாது. உங்கள் புதல்வி ஞானப் பாதையைப் பின்பற்றாமல் திருமணம் செய்ய விரும்பினால், என்ன செய்ய முடியும்? தந்தை வினவுகிறார்: நீங்கள் ஏன் தூய்மை அற்றவர்கள் ஆகுவதற்கு விரும்புகிறீர்கள்? எவ்வாறாயினும், அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாவிடின், அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகிறார்கள். பல்வேறு நிலைமைகள் காணப்படுகின்றன. ஒருவர் தூய்மையாக இருந்தாலும், மாயை அந்த ஆத்மாவை அறைவதனால், அவர் தீயவர் ஆகிவிடுகிறார். மாயை மிகவும் சக்திசாலி. யாராவதொருவர் காமத்தின் ஆதிக்கத்தின் கீழ் வரும்போது, அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்றே கூறப்பட வேண்டும். இதுவரை நடைபெற்றவை எவையும் ஒரு கல்பத்திற்கு முன்னரும் நிகழ்ந்தவையே ஆகும். அது எதுவும் புதியதல்ல. நாங்கள் இந்த நல்ல பணியைச் செய்யும்போது பலர் தடைகளை உருவாக்குகிறார்கள். இது எதுவும் புதியதல்ல! எங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வம் மூலம் நாங்கள் நிச்சயமாகப் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்க வேண்டும். நாங்கள் அனைத்தையும் தந்தைக்கு அர்ப்பணிப்போம். நீங்கள் ஸ்ரீமத்திற்கேற்ப ஆன்மீகமாகப் பாரதத்திற்குச் சேவை செய்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்களுடைய இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை கூறுகிறார்: மக்கள் என்றும் ஆரோக்கியம் ஆனவர்களாகவும் செல்வந்தர்களாகவும் ஆகத் தக்க வகையில் மூன்று சதுர அடி நிலத்தில் ஆன்மீக வைத்தியசாலை இணைந்த பல்கலைக்கழகத்தைத் திறந்து வையுங்கள். எவ்வாறாயினும், எவரும் மூன்று சதுர அடி நிலத்தைக்கூட வழங்குவதில்லை. அவர்கள் கூறுகிறார்கள்: பிரம்மாகுமாரிகள் உங்களை வசியம் செய்து, உங்களைச் சகோதர, சகோதரி ஆக்கிவிடுவார்கள். இது நாடகத்தில் உங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள மிக நல்ல வழிமுறை ஆகும். ஒரு சகோதரரும் சகோதரியும் ஒருவருக்கொருவர் தீய பார்வையைக் கொண்டிருக்க முடியாது. இந்நாட்களில், உலகில் பல தீய விடயங்கள் காணப்படுகின்றன, கேட்கவும் வேண்டாம். தந்தை கருணை கொள்வது போலவே, குழந்தைகளாகிய நீங்களும் கருணை கொள்ள வேண்டும். எவ்வாறு தந்தை நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுகிறாரோ, அவ்வாறே, கருணைநிறைந்த குழந்தைகளான நீங்களும் தந்தையின் உதவியாளர்கள் ஆகவேண்டும். உங்களிடம் செல்வம் இருந்தால், வைத்தியசாலை இணைந்த பல்கலைக்கழகத்தைத் திறவுங்கள். இதில் மேலதிகச் செலவு என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தப் படங்களை அங்கே வைத்திருங்கள். ஒரு கல்பத்தின் முன்னரும் ஞானத்தைப் பெற்றவர்களின் புத்திகளின் பூட்டானது திறக்கும். அவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். பல குழந்தைகள் கற்பதற்காகத் தொலைவில் இருந்து வருகிறார்கள். சில குழந்தைகள் தங்கள் கிராமத்தில் இருந்து இரவிலே கிளம்பி, தங்கள் நிலையங்களைக் காலையில் சென்றடைவதை பாபா பார்த்துள்ளார். அவர்கள் தங்கள் புத்திகளை நிரப்பிக் கொண்டு வீடு திரும்புகிறார்கள். நீங்கள் செவிமடுக்கும் அனைத்தும் வெளியேறிவிடும் வகையில் உங்கள் எவரது புத்தியும் இருக்கக்கூடாது. நீங்கள் எந்த அந்தஸ்தைக் கோருவீர்கள்? உங்களுக்கு உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பதற்காக எல்லையற்ற தந்தை கற்பிக்கின்றார் என்பதில் குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் மிக இலகுவானது. முற்றிலும் கல்லுப் புத்தியைக் கொண்டவர்கள் தெய்வீகப் புத்தி உடையவர்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதை பாபா புரிந்து கொள்கிறார். பாபாவிற்குப் பெருமளவு சந்தோஷம் உள்ளது. அது மறைமுகமானது. ஞானமும் மறைமுகமானது. மம்மாவும், பாபாவும் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகிறார்கள். எனவே, நீங்கள் எவ்விதத்திலும் குறையலாமா? “நானும் சேவை செய்வேன்”. ஆகவே நீங்கள் யோகசக்தியின் மூலம் உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்ற போதையில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் இப்போது சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள். இந்த ஞானம் அங்கு இருக்காது. இந்த ஞானம் தற்காலத்திற்கே உரியது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. விவேகிகளாகி, கடவுளின் பெயரில் அனைத்தையும் பயன்படுத்துவதன் மூலம், அவற்றைத் தகுதிவாய்ந்தவை ஆக்குங்கள். தூய்மை அற்றவர்களுக்குத் தானம் செய்யாதீர்கள். பிராமணர்களைத் தவிர வேறு எவருடனும் தொடர்பைக் கொண்டிராதீர்கள்.

2. ஞானம் வெளியேறுவதை அனுமதிக்கும் வகையில், உங்கள் புத்தியில் எந்த ஓட்டைகளும் இல்லாதிருப்பதை நிச்சயம் செய்யுங்கள். உங்களின் எல்லையற்ற ஆஸ்தியை கொடுப்பதற்கு, எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த மறைமுகமான சந்தோஷத்தில் நிலைத்திருங்கள். தந்தையைப் போன்று கருணை நிறைந்தவர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சம்பூரணமாகவும் முழுமையாகவும் இருப்பதன் மூலம் சதா சந்தோஷமாகவும் வெற்றி நிறைந்தவர்களாகவும் இருந்து, திருப்தியை அனுபவம் செய்வீர்களாக.

சகல பொக்கிஷங்களாலும் நிறைந்திருப்பவர்கள், சதா திருப்தியாக இருப்பார்கள். திருப்தி என்றால் முழுமை என்று அர்த்தம். தந்தை முழுமையானவராக இருப்பதனால், அவரின் புகழில் அவர் கடல் என்று அழைக்கப்படுகிறார். அதேபோல், குழந்தைகளான நீங்களும் மாஸ்ரர் கடல்கள் ஆகுகிறீர்கள். அதாவது, நீங்கள் நிரம்பியவர்களாகி, சதா சந்தோஷ நடனம் ஆடுகிறீர்கள். சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் உங்களுக்குள் இருக்க முடியாது. நீங்களே நிரம்பியவர்களாக இருப்பதனால், நீங்கள் எவரின் தொந்தரவிற்கும் உள்ளாக மாட்டீர்கள். எந்த வகையான குழப்பத்தை அல்லது தடையையும் ஒரு விளையாட்டாகவே நீங்கள் அனுபவம் செய்வீர்கள். பிரச்சனையும் களிப்பிற்கான வழிமுறையாக ஆகிவிடும். உங்களின் புத்தியில் நம்பிக்கை இருப்பதனால் நீங்கள் சதா சந்தோஷமாகவும் வெற்றியாளராகவும் ஆகுவீர்கள்.

சுலோகம்:
இக்கட்டான சூழ்நிலைகளைப் பார்த்துப் பயப்படாதீர்கள். அவற்றில் இருந்து கற்றுக் கொண்டு, உங்களை முதிர்ச்சியானவர் ஆக்கிக் கொள்ளுங்கள்.

அவ்யக்த சமிக்கை: சத்தியத்தின் கலாச்சாரத்தையும் நல்ல பண்புகளையும் கடைப்பிடியுங்கள்.

வலுவைப் பிரயோகிப்பதன் மூலம் எதையாவது உண்மை என நிரூபிக்க முயற்சி செய்பவர்கள், நிச்சயமாகத் தமக்குள் நேர்மை அற்ற எதையாவது வைத்திருப்பார்கள். பல குழந்தைகளின் மொழியானது, நான் உண்மையில் நேர்மையான சத்தியத்தையே பேசுகிறேன், நான் 100 வீதம் சத்தியமே பேசுகிறேன் எனச் சொல்கிறார்கள். எவ்வாறாயினும், சத்தியத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. சத்தியம் சூரியன் போன்றது. அதை மறைக்க முடியாது. உங்களுக்கு முன்னால் எத்தனை திரைகளை வைத்தாலும் உங்களின் சத்திய ஒளியை மறைக்க முடியாது. கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்ட வார்த்தைகளும் நடத்தையும் நிச்சயமாக வெற்றியை ஏற்படுத்தும்.

மாதேஷ்வரியின் விலைமதிப்பற்ற மேன்மையான வாசகங்கள்.

குரு, ஆசிரியர் மற்றும் தந்தையின் ரூபத்தில் கடவுள் வெவ்வேறு உறவுமுறைகளின் ஆஸ்தியை வழங்குகிறார்.

பாருங்கள், இறைவன் மூன்று ரூபங்களை எடுத்து எங்களுக்கு ஆஸ்தியை வழங்குகிறார். அவரே எங்களின் தந்தையும் ஆசிரியரும் அத்துடன் குருவும் ஆவார். தந்தையுடன் எமக்குத் தந்தையின் உறவுமுறை உள்ளது. ஆசிரியருடன் எமக்கு ஆசிரியரின் உறவுமுறை உள்ளது. குருவுடன் எமக்குக் குருவின் உறவுமுறை உள்ளது. நீங்கள் உங்களிடம் இருந்து தந்தை உறவுமுறையை ரத்துச் செய்தால், எப்படி உங்களால் ஆஸ்தியைப் பெற முடியும்? நீங்கள் சித்தி அடைந்து ஆசிரியரிடம் இருந்து ஒரு சான்றிதழைப் பெற்றால் மட்டுமே ஆசிரியரின் ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் தந்தையின் நம்பிக்கையான கீழ்ப்படிவான குழந்தையாக இருந்தும் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றாவிட்டால் எதிர்காலத்திற்காக ஒரு வெகுமதியை நீங்கள் உருவாக்க மாட்டீர்கள். உங்களால் சம்பூரணமான சத்கதியையும் அடைய முடியாது. தந்தையிடமிருந்து உங்களால் தூய்மையின் ஆஸ்தியையும் பெற முடியாது. கடவுளின் சத்தியம் என்னவென்றால், நீங்கள் தீவிர முயற்சி செய்தால், நான் உங்களுக்கு நூறு மடங்கு நன்மை செய்வேன் என்பதாகும். இது சொல்வதற்காக மட்டும் அல்ல. ஆனால் நீங்கள் அவருடன் ஆழமான உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் அர்ச்சுனனுக்கு அறிவுறுத்தல் கொடுத்தார்: எல்லோரையும் கொன்றுவிடு, என்னை மட்டும் சதா நினைவு செய். கடவுள் சர்வவல்லமை வாய்ந்தவர், சர்வசக்திவான், சகல சக்திகளும் நிறைந்த ஒரேயொருவர் ஆவார். எனவே, அவர் நிச்சயமாகத் தனது சத்தியத்தை நிறைவேற்றுவார். எவ்வாறாயினும், குழந்தைகளான நீங்கள் அவருக்கான உங்களின் பொறுப்பை நிறைவேற்றும் போது, எல்லோரிடம் இருந்தும் உங்களின் புத்தியின் யோகத்தைத் துண்டித்து ஒரேயொரு இறைவனிடம் உங்களை இணைத்துக் கொள்ளும் போதும் மட்டுமே இது நடக்கும். அப்போது மட்டுமே உங்களால் அவரிடமிருந்து உங்களின் முழுமையான ஆஸ்தியைப் பெற முடியும்.