03.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களை உலகின் அதிபதிகளாக்குகின்ற தந்தையை நினைவு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருங்கள். நினைவு செய்வதால் மாத்திரமே நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள்.

பாடல்:
உங்களுடைய நெற்றி (புத்தி) முழுமையாகத் திறக்கப்பட வேண்டுமாயின், நீங்கள் எந்த ஒரு விடயத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:
கல்வியில் கவனம் செலுத்துங்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார், எனவே நீங்கள் ஒருபொழுதும் கல்வியைத் தவறவிடக்கூடாது. நீங்கள் வாழும் வரைக்கும் அமிர்தத்தைப் பருக வேண்டும். கல்வியில் கவனம் செலுத்துங்கள். சமூகமளிக்காமல் இருக்காதீர்கள். நீங்கள் முரளியைப் பெற்று அதைக் கற்கவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முரளியிலும் புதிய கருத்துக்கள் இருக்கின்றன, அதன் மூலம் உங்கள் நெற்றி திறக்கும்.

ஓம் சாந்தி.
கடவுள் சிவன் சாலிகிராம்களுடன் பேசுகிறார். இது முழுக் கல்பத்திலும் ஒரு தடவையே இடம்பெறுகிறது. உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். வேறு எவருக்கும் இதைத் தெரிந்துகொள்ள முடியாது. மனிதர்களுக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியோ சிறிதளவேனும் தெரியாது. ஸ்தாபனையில் தடைகள் இருக்கும் என்பதும், இது ஞான யாகம் என அழைக்கப்படுகிறது என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் இப்பழைய உலகில் பார்ப்பவை அனைத்தும் அர்ப்பணிக்கப்பட உள்ளன. எனவே நீங்கள் அதில் எந்தப் பற்றையும் கொண்டிருக்கக்கூடாது. புதிய உலகிற்காக, தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். இது மிகவும் மங்களகரமான சங்கமயுகமாகும். இது மாற்றம் இடம்பெற வேண்டிய, விகாரம், விகாரமின்மை என்பவற்றின் சங்கமமாகும். புதிய உலகம் விகாரமற்ற உலகம் என்று அழைக்கப்படுகிறது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் மாத்திரமே இருந்தது. இக் கருத்துக்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை உங்களுக்கு இரவு பகலாகக் கூறுகிறார்: குழந்தைகளே, நான் உங்களுக்கு மிகவும் ஆழமான கருத்துக்களைக் கூறுகின்றேன். தந்தை இங்கே இருக்கும்வரை கல்வி தொடரும். பின்னர், கல்வி முடிவிற்கு வரும். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இந்த விடயங்கள் தெரியாது. உங்களுக்கிடையேயும் இது வரிசைக்கிரமமாகவே உள்ளது, இது பாப்தாதாவிற்குத் தெரியும். பலர் விழுகிறார்கள், பல கஷ்டங்கள் இருக்கின்றன. அனைவரும் எப்பொழுதும் தூய்மையாக இருப்பார்கள் என்றில்லை. நீங்கள் தூய்மையாக இல்லாததாலேயே, தண்டனை பெற வேண்டியுள்ளது. மாலையின் மணிகள் மாத்திரமே திறமைச் சித்தியடைவார்கள். பின்னர் பிரஜைகளும் உருவாக்கப்படுகிறார்கள். இவ்விடயங்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, அவர்களால் புரிந்துகொள்ள இயலாமல் இருக்கிறது. அதற்கு அவர்களுக்கு காலம் எடுக்கும். தந்தை விளங்கப்படுத்துவதைப் போன்று, உங்களால் விளங்கப்படுத்த இயலாமல் உள்ளது. 'இன்ன இன்னார் விகாரத்தில் விழுந்துவிட்டார், இது நடந்தது" என்ற பிறரைப் பற்றிய அறிக்கைகளைப் பற்றி தந்தை மாத்திரமே அறிந்துள்ளார். பெயர்கள் எதுவும் குறிப்பிடப்பட முடியாது. பாபா பெயர்கள் எதனையும் குறிப்பிட்டிருந்தால், அந்நபருடன் எவரும் பேச விரும்பமாட்டார்கள். பின்னர் அனைவரும் அந்நபரை வெறுப்பான பார்வையுடன் பார்ப்பார்கள், அவர் அனைவருடைய இதயத்தில் இருந்தும் விலக்கப்பட்டுவிடுவார். அவர் சம்பாதித்த வருமானம் அனைத்தையும் இழந்துவிடுவார். யார் விழுகிறாரோ அவருக்கு மாத்திரமே அது தெரியும், தந்தைக்கும் தெரியும். இவை மிகவும் மறைமுகமான விடயங்களாகும். நீங்கள் இன்ன இன்னாரைச் சந்தித்தீர்கள் என்றும் நீங்கள் அவருக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தினீர்கள் என்றும், அவரால் இனி சேவையில் உதவ முடியும் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், அவர் உங்கள் முன்னால் வரும்பொழுதே அது சாத்தியமாகிறது. உதாரணமாக, நீங்கள் ஆளுநருக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தினாலும், அவரால் எவருக்கும் விளங்கப்படுத்த முடியாது. அவர் எவருக்கும் விளங்கப்படுத்தியிருந்தால், எவரும் அவரை நம்ப மாட்டார்கள். புரிந்துகொள்பவர்கள் மாத்திரமே புரிந்துகொள்வார்கள். அவரால் ஏனையோருக்கும் விளங்கப்படுத்த முடியாமல் இருக்கும். இது முட்காடு என்றும், நாங்கள் அதை மங்களகரமான இடமாக ஆக்குகிறோம் என்றும் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். அவர்கள் நன்மை பயப்பவராகிய விஷ்ணு தேவரைப் பற்றிக் கூறுகிறார்கள். அந்த வாசகங்கள் பக்தி மார்க்கத்திற்கு உரியதாகும். அது விஷ்ணு இராச்சியமாக இருக்கும்பொழுது மங்களகரமாக இருக்கிறது. அவர்கள் விஷ்ணுவின் அவதாரத்தைக் காட்டுகிறார்கள். பாபா அனைத்தையும் பார்த்துள்ளார். அவர் அனுபவமுள்ளவர். அந்த சமயங்கள் அனைத்தும் அவருக்க மிக நன்றாகத் தெரியும். தந்தை பிரவேசித்துள்ள சரீரம் ஆளுமையைக் கொண்டிருக்க வேண்டும். இதனாலேயே அவர் கூறுகிறார்: அவர் அனைத்தையும் மிக நன்றாக அனுபவித்த பின்னர் அவருடைய பல பிறவிகளின் இறுதியில், நான் அவரில் பிரவேசிக்கிறேன். அதுவும் ஒரு சாதாரண மனிதரிலே பிரவேசிக்கின்றேன். ஆளுமை என்றால் அவர் அரசராகவோ அல்லது இராஜரீக குடும்பத்தின் அங்கத்தவராகவோ இருக்க வேண்டும் என்பதல்ல. இல்லை. இவர் அதிகளவு அனுபவங்களைக் கொண்டிருக்கிறார். நான் இவருடைய இரதத்தில், இவருடைய பல பிறப்புக்களின் இறுதியில் வருகிறேன். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்றும் ஒரு மாலை உருவாக்கப்படுகிறது என்றும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். எவ்வாறு இந்த இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது, சிலர் எவ்வாறு அரசர்களாகவும் அரசிகளாகவும் ஆகுகிறார்கள், மற்றவர்கள் எவ்வாறு வேறு ஏதோவொருவராக ஆகிறார்கள் போன்ற, இந்த விடயங்கள் அனைத்தும் எவராலும் ஒருநாளில் புரிந்துகொள்ள முடியாது. எல்லையற்ற தந்தை மாத்திரமே உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். கடவுள் வந்து உங்களுக்கு விளங்கப்படுத்தியும் மிகவும் அரிதாகவே எவராயினும் தூய்மையாகிறார்கள். இதைப் புரிந்துகொள்வதற்குக் காலம் எடுக்கிறது. ஆத்மாக்கள் அதிக தண்டனைகளை அனுபவிக்கிறார்கள். தண்டனையை அனுபவித்த பின்னரும் சிலர் பிரஜைகளாகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகவேண்டும். நீங்கள் எவருக்கும் துன்பம் கொடுக்கக்கூடாது. அனைவருக்கும் சந்தோஷத்திற்கான பாதையைக் காட்டுவதற்காகவும், துன்பத்தில் இருந்து அனைவரையும் விடுவிப்பதற்காகவும் தந்தை வருகிறார். எனவே, அவரால் எவ்வாறு எவருக்காவது துன்பத்தைக் கொடுக்க முடியும்? குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இந்த விடயங்கள் அனைத்தும் தெரியும். வெளியே உள்ள மக்களால் எதனையும் சிறிதளவேனும் புரிந்துகொள்ள முடிவதில்லை. உங்கள் உறவினர்கள் அனைவரின் மீதுமுள்ள உங்களுடைய பற்றை நீங்கள் துண்டிக்க வேண்டும். நீங்கள் வீட்டில் இருக்க வேண்டியிருந்தாலும் பெயரளவில் மாத்திரமே இருக்கவேண்டும். இந்த முழு உலகமும் அழியப்போகிறது என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. எவ்வாறாயினும், எவரும் இந்த எண்ணத்தைக் கொண்டிருப்பதில்லை. விசேடமான அன்பிற்கினிய குழந்தைகள் இதைப் புரிந்துகொள்கிறார்கள், அவர்கள் தொடர்ந்தும் கற்பதற்கு முயற்சி செய்கிறார்கள். இருந்தும் பலர் தோல்வியடைகிறார்கள். மாயையின் பல சுழற்சிகளும் இருக்கின்றன. அவளும் மிகவும் சக்திவாய்ந்தவள். எவ்வாறாயினும், உங்களால் இந்த விடயங்களை வேறு எவருக்கும் விளங்கப்படுத்த முடியாது. மக்கள் உங்களிடம் வருகிறார்கள், அவர்கள் இங்கே என்ன இடம்பெறுகிறது என்பதையும் ஏன் அதிகளவு அறிக்கைகள் உள்ளன என்பதையும் புரிந்துகொள்வதற்கு விரும்புகிறார்கள். அவர்கள் (அரசாங்க அமைச்சர்கள்) மாற்றம் பெறுகிறார்கள். எனவே நீங்கள் அமர்ந்திருந்து ஒவ்வொருவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். இது நல்ல ஸ்தாபனம் எனப் பின்னர் அவர்கள் கூறுவார்கள். இராச்சியத்தை ஸ்தாபிப்பது பற்றிய விடயங்கள் மிகவும் ஆழமானதும் களிப்பூட்டுவதுமாகும். குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டுவிட்டதால், நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் தேவர்களாக, உலகின் அதிபதிகளாக ஆகுகிறோம், எனவே நாங்கள் நிச்சயமாக எங்களுக்குள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுடைய இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னால் உள்ளது. அவர்கள் புதிய உலகின் அதிபதிகளாவார்கள். நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொள்கிறீர்கள். நாங்கள் கற்கிறோம். ஞானம் நிறைந்தவராகிய எல்லையற்ற தந்தை எங்களை அமரத்துவ பூமிக்கு, அதாவது சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்காகக் கற்பிக்கிறார். நாங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறோம். முன்னைய கல்பத்தில் இராச்சியத்தைப் பெற்றவர்கள் மாத்திரமே வருவார்கள். நீங்கள் சரியாக முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்று, உங்களுடைய இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். இந்த மாலை வரிசைக்கிரமமாக உருவாக்கப்படுகிறது. பாடசாலையிலும், நன்றாகக் கற்பவர்கள் புலமைப்பரிசு ஒன்றைப் பெறுகிறார்கள். அவை எல்லைக்குட்பட்ட விடயங்கள், உங்களுக்கோ எல்லைக்கு அப்பாற்பட்ட விடயங்கள் கூறப்படுகின்றன. நீங்கள் தந்தையின் உதவியாளர்கள் ஆகுகிறீர்கள். எனவே நீங்களே உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். உண்மையில், நீங்களே உங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். நீங்கள் நிச்சயமாக மீண்டும் அவ்வாறு ஆகவேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். நிற்கும்பொழுதும், அமர்ந்திருக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் உங்களால் தந்தையை நினைவு செய்ய முடியும். உங்களை உலகின் அதிபதிகளாக்குகின்ற தந்தையை அதிகளவு ஆர்வத்துடன் நினைவு செய்ய வேண்டும். எவ்வாறாயினும் மாயை உங்களைத் தனியாக விடமாட்டாள். பல வகையான அறிக்கைகள் எழுதப்படுகின்றன: பாபா, நான் மாயையின் பல பாவம் நிறைந்த எண்ணங்களைக் கொண்டிருக்கிறேன். தந்தை கூறுகிறார்: இது ஒரு யுத்தகளமாகும். நீங்கள் ஐந்து விகாரங்களை வெல்லவேண்டும். தந்தையை நினைவு செய்வதால், நீங்கள் சதோபிரதான் ஆகுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பக்தி மார்க்கத்தில் உள்ள எவருக்கும் இது தெரியாது. இது ஒரு கல்வியாகும். தந்தை வினவுகிறார்: நீங்கள் எவ்வாறு தூய்மையாகுவீர்கள்? நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்கள், நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆகவேண்டும். தேவர்கள் தூய்மையாக இருந்தார்கள். மாணவர்களாகிய நீங்கள் கற்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். எதிர்காலத்தில், நீங்கள் சூரியவம்ச இராச்சியத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் அதற்காக மிக நல்ல முயற்சியைச் செய்யவேண்டும். அனைத்தும் உங்களுடைய புள்ளிகளிலேயே தங்கியுள்ளது. யுத்த களத்தில் தோற்பதால், நீங்கள் சந்திர வம்சத்திற்குச் செல்கிறீர்கள். 'யுத்த களம்" என்ற பெயரைக் கேட்டு, அவர்கள் பின்னர், அம்பையும் வில்லையும் காட்டியுள்ளார்கள். அவர்கள் அங்கே அம்பையும் வில்லையும் பயன்படுத்திச் சண்டையிட்டார்களா? அவ்வாறு எதுவும் இருக்கவில்லை. முன்னர், அவர்கள் வில்லுடனும் அம்புகளுடனும் சண்டையிட்டார்கள். அதன் அடையாளங்கள் இப்பொழுதும் இருக்கின்றன. சிலர் அம்புகள் எய்துவதில் மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இந்த ஞானத்தில் யுத்தம் என்பதற்கான கேள்வியே இருக்காது. சிவபாபா மாத்திரமே ஞானக்கடல், அவரிடமிருந்தே நீங்கள் இந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். தந்தை இப்பொழுது கூறுகிறார்: நீங்கள் உங்களுடைய சரீரம் உட்பட, உங்களுடைய சரீர உறவினர்கள் அனைவரின் மீதான உங்களுடைய பற்றைத் துண்டிக்க வேண்டும். இவை அனைத்தும் பழையதாக இருக்கிறது. புதிய உலகம் பாரதத்தின் சத்தியயுகமாக இருந்தது. அதன் பெயர் மிகவும் பிரபல்யமாக இருந்தது. புராதன யோகத்தை யார், எப்பொழுது கற்பித்தார்? அவர் தானே வந்து விளங்கப்படுத்தும்வரை, இதை எவராலும் அறிய முடியாது. இது புதியதொன்றாகும். ஒவ்வொரு கல்பமும் நடந்தவையெல்லாம் மீண்டும் தொடரும். இதில் எந்த வேறுபாடும் இருக்கமுடியாது. தந்தை கூறுகிறார்: இப்பொழுது, இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாகுவதால், நீங்கள் 21 பிறவிகளுக்கு தூய்மையற்றவர்களாக இருக்க வேண்டியிருக்காது. தந்தை மிக நன்றாக விளங்கப்படுத்தினாலும், அனைவருமே முழுக் கவனத்துடன் கற்பார்கள் என்றில்லை. பகலுக்கும் இரவிற்கும் இடையிலான வித்தியாசம் இருக்கிறது. சிலர் கற்பதற்கு வந்து, சிறிதளவு கற்ற பின்னர் மறைந்துவிடுகிறார்கள். மிக நன்றாகப் புரிந்துகொள்பவர்கள், 'தாங்கள் எவ்வாறு வந்தார்கள்” என்றும், “தாங்கள் எவ்வாறு தூய்மையாகுவதற்கு சத்தியம் செய்தார்கள்" என்பது பற்றியும் தங்களுடைய அனுபவங்களையும் கலந்துரையாடுகிறார்கள். தந்தை கூறுகிறார்: தூய்மைக்கான சத்தியம் செய்த பின்னர், நீங்கள் ஒருமுறையேனும் தூய்மையற்றவராகினால், நீங்கள் உழைத்த வருமானம் இழக்கப்படுகிறது. பின்னர் உங்களுடைய உணர்வு தொடர்ந்தும் உங்களை உறுத்துகிறது. 'தந்தையை நினைவு செய்யுங்கள்" என உங்களால் கூறமுடியாதிருக்கும். அவர்கள் விகாரத்தைப் பற்றியே பிரதானமாக வினவுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்தக் கல்வியைத் தவறாது கிரமமாகக் கற்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குப் புதிய விடயங்களை கூறுகிறேன். நீங்கள் மாணவர்கள், கடவுள் உங்களுக்கு கற்பிக்கிறார். நீங்கள் இறை மாணவர்கள். அவ்வாறான மேன்மையான கல்வியை நீங்கள் ஒரு நாளேனும் தவறவிடக் கூடாது. நீங்கள் முரளி செவிமடுப்பதை, ஒரு நாளேனும் தவறவிட்டால், நீங்கள் சமூகமளிக்காமைக்கான ஒரு பதிவைப் பெறுகிறீர்கள். மிக நல்ல மகாராத்திகளும் முரளியைத் தவறவிடுகிறார்கள். தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்றும், தாம் முரளி கேட்காவிட்டால் பாதிப்பில்லை என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். ஆம்! நீங்கள் சமூகமளிக்காமைக்கான பதிவைப் பெற்று, பின்னர் தோல்வியடைவீர்கள். தந்தை தானே கூறுகிறார்: நீங்கள் சரியான நேரத்தில் விளங்கப்படுத்தும்போது, மிகவும் பயன் நிறைந்ததாக இருக்கக்கூடிய கருத்துக்களை நான் ஒவ்வொரு நாளும் கூறுகிறேன். நீங்கள் அவற்றைச் செவிமடுக்காவிட்டால், உங்களால் அவற்றை எவ்வாறு பயன்படுத்த முடியும்? இந்த அமிர்தத்தை, நீங்கள் வாழும்வரை பருக வேண்டும். நீங்கள் இந்தக் கற்பித்தல்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் ஒருபொழுதும் சமூகமளிக்காமல் இருக்கக் கூடாது. நீங்கள் எவரிடமிருந்தும் முரளியைப் பெற்று வாசிக்க முடியும். நீங்கள் உங்களுடைய சொந்த அகங்காரத்தை கொண்டிருக்கக் கூடாது. ஓ! தந்தையாகிய கடவுளே உங்களுக்குக் கற்பிப்பதால், நீங்கள் அதை ஒரு நாளேனும் தவறவிடக்கூடாது. உங்களுடைய அல்லது எவருடைய நெற்றியாவது (புத்தி) திறக்கக் கூடியவாறான கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் வெளிவருகிறது. 'ஆத்மா என்றால் என்ன, கடவுள் யார், பாகம் எவ்வாறு தொடர்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு காலம் தேவைப்படுகிறது. இறுதியில் நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்வீர்கள். எவ்வாறாயினும், இப்பொழுது நீங்கள் இதை விளங்கப்படுத்த வேண்டும். இறுதி ஸ்தியானது, நீங்கள் தந்தையை நினைவு செய்தவாறு வீடு செல்வதாக இருக்கும். நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். நீங்கள் எவ்வளவு தூய்மையாகியுள்ளீர்கள் என்பதை உங்களாலேயே புரிந்துகொள்ள முடியும். தூய்மையற்றவர்கள் நிச்சயமாகக் குறைந்த சக்தியையே பெறுகிறார்கள். எட்டு இரத்தினங்கள் மாத்திரமே சிறப்புச் சித்தியடைகிறார்கள். அவர்கள் தண்டனை எதனையும் சிறிதளவேனும் அனுபவிக்க மாட்டார்கள். இவை மிகவும் சூட்சுமமான விடயங்களாகும். இந்தக் கல்வி மிகவும் மேன்மையானது. நீங்கள் தேவர்களாக முடியுமென்பதைக் கனவிலும் சிந்தித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்வதால், பல்கோடி மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகிறீர்கள். இதனைப் பார்க்கும்போது வியாபாரங்கள் முதலானவை சிறிதேனும் பயனற்றது. எதுவுமே பயன்படக்கூடியதாக இருக்காது. அப்படியிருந்தும், நீங்கள் அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் சிவபாபாவிற்குக் கொடுக்கிறீர்கள் என்று ஒருபொழுதும் எண்ணக்கூடாது. ஆம்! நீங்கள் கோடீஸ்வரர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் கொடுக்கிறீர்கள் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தால், அதன் பலம் குறைந்துவிடுகிறது. மக்கள் ஏதாவதொன்றைப் பெறுவதற்காக, கடவுளின் பெயரில் தானம் கொடுத்து, புண்ணியம் செய்கிறார்கள். அது கொடுப்பதல்ல. கடவுள் அருள்பவர். அவர் உங்களுடைய அடுத்த பிறவியில் அதிகளவு கொடுக்கிறார். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தில், அவர்கள் தற்காலிக சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சந்தோஷம் எனும் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இந்த அமிர்தத்தைப் பருகி, இக்கற்பித்தல்களை வாழும்வரை கிரகிக்க வேண்டும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார். எனவே, நீங்கள் முரளியை ஒரு நாளேனும் தவறவிடக் கூடாது.

2. பல்கோடி வருமானத்தைச் சேமிப்பதற்கு, பெயரளவில் வீட்டில் வாழ்ந்துகொண்டே உங்களுடைய வேலைகள் அனைத்தையும் செய்யும்பொழுதும், நீங்கள் தந்தையின் நினைவில் இருக்கவேண்டும்.

ஆசீர்வாதம்:
உங்களுடைய சந்தோஷத்தின் ஆளுமையினால் புகழுக்குரியவராகவும் பூஜைக்குரியவராகவும் ஆகுவதன் மூலம், அனைவருமே உரிமையை கோர உதவுபவர் ஆகுவீர்களாக.

அனைவரிடமிருந்தும் திருப்திக்கான சான்றிதழை பெறுபவர்கள் சதா சந்தோஷமாக இருக்கிறார்கள். உங்களுடைய சந்தோஷத்தின் ஆளுமையினால், நீங்கள் மிகவும் பிரபல்யம் அடைகிறீர்கள், அதாவது நீங்கள் புகழுக்குரியவராகவும் பூஜைக்குரியவராகவும் ஆகுகிறீர்கள். நீங்கள் பிற ஆத்மாக்களையிட்டு, தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களை கொண்டிருந்து சதா சந்தோஷமாக இருப்பதால், அவர்கள் சந்தோஷம், ஆதாரம், தைரியத்தின் இறக்கைகளையும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் பெறுகிறார்கள்: இந்தப் பேறுகள் சிலர் உரிமையை கோருவதற்கும் ஏனையோர் பக்தர்கள் ஆகுவதற்கும் உதவுகின்றன.

சுலோகம்:
தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களை பெறுவதற்கான இலகுவான வழி உங்கள் இதயத்தில் அன்பை கொண்டிருப்பதாகும்.