03.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த எல்லையற்ற நாடகத்தில் நீங்கள் அற்புதமான நடிகர்கள். இது ஓர் அநாதியான நாடகம், இதிலுள்ள எதுவும் மாற்றப்பட முடியாது.
கேள்வி:
எந்த ஆழமான இரகசியங்களை விவேகிகளான, தொலைநோக்குப் பார்வையுள்ள குழந்தைகள் மாத்திரம் புரிந்து கொள்கின்றார்கள்?பதில்:
அசரீரி உலகம், மற்றும் முழு நாடகத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதி வரையிலான ஆழமான இரகசியங்களைத் தொலைநோக்குப் பார்வையுடைய குழந்தைகளால் மாத்திரமே புரிந்துகொள்ள முடியும். விதையினதும், விருட்சத்தினதும் முழு ஞானமும் அவர்களின் புத்தியில் உள்ளது. இந்த எல்லையற்ற நாடகத்தில் ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு நடிகரே என்பதையும், சத்தியயுகத்தில் இருந்து கலியுகம் வரையிலான அவர்களின் பாகங்களை நடிப்பதற்கு அவரகள் ஆடைகளை அணிகிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள். எந்தவொரு நடிகராலும் இடையில் வீடு திரும்பிச் செல்ல முடியாது.பாடல்:
நீங்கள் பகலை உண்பதிலும், இரவை உறங்குவதிலும் வீணாக்கினீர்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். அந்தப் பாடலிலுள்ள சில வார்த்தைகள் சரியானவை, ஏனையவை தவறானவை. சந்தோஷத்தின் பொழுது, எவரும் கடவுளை நினைவு செய்வதில்லை. நிச்சயமாகத் துன்பம் வரவேண்டும். துன்பம் உள்ளபொழுது, தந்தை வந்து சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. நீங்கள் இப்பொழுது சந்தோஷ தாமத்துக்காகக் கற்கிறீர்கள் என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அமைதி தாமமும், சந்தோஷ தாமமும். முதலில் முக்தியும், பின்னர் ஜீவன்முக்தியும் உள்ளன. அமைதி தாமமே உங்கள் வீடு. அங்கே எவரும் ஒரு பாகத்தை நடிப்பதில்லை. ஒரு நடிகர் வீடு செல்லும் பொழுது, அங்கே அவர் ஒரு பாகத்தை நடிப்பதில்லை. ஒரு மேடையிலேயே ஒரு பாகம் நடிக்கப்படுகிறது. இதுவும் ஒரு மேடை ஆகும். எல்லைக்கு உட்பட்ட நாடகங்களைப் போன்றே, இது ஓர் எல்லையற்ற நாடகம் ஆகும். தந்தையைத் தவிர வேறு எவராலும் அதன் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்த முடியாது. உண்மையில்,“யாத்திரை”,“யுத்தம்” போன்ற வார்த்தைகள் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன, இங்கே யுத்தம் போன்றவை இல்லை. “யாத்திரை” எனும் வார்த்தை இங்கே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில், நினைவுசெய்தல் என்பதே அதன் அர்த்தம். தொடர்ந்தும் நினைவில் நிலைத்திருப்பதால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இந்த யாத்திரையும் இங்கே முடிவடையும். நீங்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. நீங்கள் தூய்மையாகிப் பின்னர் வீடு திரும்ப வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தூய்மை அற்றவர்களால் வீடு திரும்ப முடியாது. உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாவாகிய நான், முழுச் சக்கரத்துக்குமான ஒரு பாகத்தினால் நிரப்பப்பட்டுள்ளேன். இப்பொழுது இந்தப் பாகம் முடிவடைகிறது. தந்தை ஆலோசனை கொடுக்கிறார்: இது மிகவும் இலகுவானது, என்னை நினைவுசெய்யுங்கள்! இல்லாவிடின், நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்; நீங்கள் எங்கும் செல்வதில்லை. தந்தை வந்து கூறுகிறார்: என்னை நினைவுசெய்தால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். யுத்தம் போன்றவை கிடையாது. நீங்கள் உங்களைத் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக்க வேண்டும். மாயையை வெல்ல வேண்டும். 84 பிறவிகளின் சக்கரம் முடிவடைய வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாரதம் சதோபிரதானாக இருந்தது. நிச்சயமாக இங்கே மனிதர்கள் இருப்பார்கள். பூமி மாற்றம் அடையாது. நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், நீங்கள் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள், நீங்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதானாக வேண்டும் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். வந்து தங்களைத் தூய்மை ஆக்குமாறு மனிதர்கள் அவரை அழைக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர் யார் என்பதையோ அல்லது அவர் எவ்வாறு வருகிறார் என்பதையோ அவர்கள் அறிந்து கொள்வதில்லை. இப்பொழுது பாபா உங்களை மிகவும் விவேகிகள் ஆக்கியுள்ளார். நீங்கள் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறீர்கள். அங்கிருந்த ஏழைகள் கூட, இங்குள்ள செல்வந்தர்களை விடவும் மிகவும் மேன்மையானவர்களாக இருந்தனர். பின்னர், பல பேரரசர்கள் இருந்தார்கள், ஏராளமான செல்வம் இருந்தது. எனினும் அவர்கள் விகாரத்தில் ஈடுபட்டார்கள். அங்குள்ள (சுவர்க்கம்) சாதாரண பிரஜைகள் அவர்களை (பின்னால் வந்த அரசர்கள்) விடவும் அதி மேன்மையானவர்களாக இருந்தனர். பாபா உங்களுக்கு வேறுபாட்டை விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்களின் மீது இராவணனின் நிழல் விழும்பொழுது, அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் விகாரமற்ற தேவர்களின் விக்கிரகங்களின் முன்னிலையில் சென்று தங்களைத் தூய்மையற்றவர்கள் என அழைத்து, அவர்களுக்குத் தலைவணங்குகிறார்கள். தந்தை இங்கே வரும்பொழுது, அவர் உங்களை உடனடியாகவே மேன்மையானவர்கள் ஆக்குகிறார்; அது ஒரு விநாடிக்குரிய விடயம். இப்பொழுது தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஞானமாகிய மூன்றாவது கண்ணைக் கொடுத்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் தொலைநோக்குப் பார்வை உடையவர்கள் ஆகுகிறீர்கள். மேலே அசரீரி உலகிலிருந்து ஆரம்பித்து முழு நாடகச் சக்கரத்தையும் உங்கள் புத்தியால் நினைவுசெய்ய முடியும். நீங்கள் ஓர் எல்லைக்கு உட்பட்ட நாடகத்தைப் பார்க்கச் செல்லும்பொழுது, நீங்கள் பார்த்த அனைத்தையும் உங்களால் கூறமுடியும். உங்களால் அனைத்தையும் பற்றிப் பேச முடியும். ஏனெனில் உங்கள் புத்தி அதனால் நிரம்பி இருக்கும். ஆத்மா தன்னை நிரப்பிக் கொண்டு, பின்னர் அதை வழங்குகின்றார். அதேபோன்று, இது ஓர் எல்லையற்ற விடயம். மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் நடைபெறுகின்ற, இந்த எல்லையற்ற நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைக் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் நிரப்பி வைத்திருக்க வேண்டும். ஓர் எல்லைக்கு உட்பட்ட நாடகத்திலிருந்து ஒரு நடிகர் அகற்றப்பட்டால், அவருக்குப் பதிலாக இன்னும் ஒருவரை மாற்ற முடியும். ஒருவர் நோய்வாய்ப்படும் பொழுது, அவருக்குப் பதிலாக இன்னுமொருவர் இடப்படுவார். எவ்வாறாயினும், இந்த நாடகம் உயிரோட்டமானது; இதில் சிறிதளவு மாற்றம் கூட இருக்க முடியாது. நீங்கள் ஆத்மாக்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அந்தச் சரீரங்கள் பல்வேறு பாகங்களை நடிப்பதற்காக நீங்கள் அணியும் உங்கள் ஆடைகளாகும். உங்கள் பெயர்கள், ரூபங்கள், தேசங்கள், முகச்சாயல்கள் போன்ற அனைத்தும் தொடர்ந்தும் மாற்;றம் அடைகின்றன. தாங்கள் எதை நடிக்க வேண்டும் என்பதை நடிகர்கள் அறிந்திருக்கிறார்கள். தந்தை தொடர்ந்தும் சக்கரத்தின் இரகசியங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்து இந்தக் கலியுகத்திற்கு வருகிறீர்கள். பின்னர் வீட்டுக்குச் சென்று புதிதாக உங்கள் பாகங்களை நடிப்பதற்குக் கீழே வருகிறீர்கள். இவை அனைத்தினதும் விபரங்களை விளங்கப்படுத்துவதற்குக் காலம் எடுக்கிறது. விதையானவரில் இந்த ஞானம் இருந்தாலும், அதை விளங்கப்படுத்துவதற்குக் காலம் எடுக்கிறது. விதையானவரினதும், விருட்சத்தினதும் இரகசியங்கள் அனைத்தையும் உங்கள் புத்திகள் அறிந்துள்ளன. அதிலும், இவ்விருட்சத்தின் விதை மேலே உள்ளார் என்பதை மிகவும் விவேகிகளாகிய குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். எவ்வாறு விருட்சம் உருவாக்கப்படுகிறது, பராமரிக்கப்படுகிறது, பின்னர் அழிக்கப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இதனாலேயே திரிமூர்த்தி சித்தரிக்கப்படுகிறது. தந்தை கொடுக்கும் விளக்கத்தை மனிதர்களால் கொடுக்க முடியாது. அவர்கள் இங்கே வரும்பொழுது மாத்திரமே, அவர்களால் அதைப் பற்றி அறிய முடியும். இதனாலேயே இங்கே வந்து புரிந்து கொள்ளுமாறு நீங்கள் அனைவருக்கும் கூறுகிறீர்கள். சிலர் தங்கள் சொந்த நம்பிக்கைகளில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் தாங்கள் எதையும் செவிமடுக்க விரும்பவில்லை எனக் கூறுகிறார்கள். சிலர் நீங்கள் கூறுவதைச் செவிமடுக்கிறார்கள், சிலர் உங்கள் புத்தகங்களையும் வாங்குகிறார்கள், ஏனையோர் வாங்குவதில்லை. இப்பொழுது உங்கள் புத்தி மிகவும் பரந்ததாகவும், எல்லையற்றதாகவும், தொலை நோக்கு உடையதாகவும் ஆகிவிட்டது. மூன்று உலகங்களையும் பற்றி நீங்கள் அறிவீர்கள். அசரீரி உலகம் எனவும் அழைக்கப்படுகின்ற, பரந்தாமத்தை நீங்கள் அறிவீர்கள். சூட்சும லோகத்தில் எதுவுமேயில்லை. அசரீரி உலகுடனும், பௌதீக உலகுடனுமே முழுத் தொடர்பும் உள்ளது; இப்பொழுது ஒரு குறுகிய காலத்துக்கு மாத்திரமே சூட்சுமலோகம் இருக்கிறது. ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் பாகங்களை நடிப்பதற்கு, மேலிருந்து இங்கே கீழே வரவேண்டும். அனைத்துச் சமயங்களையும் கொண்ட இவ்விருட்சம் வரிசைக்கிரமமானது. இவ்விருட்சம் மனிதர்களுக்கானது; இது முற்றிலும் மிகச்சரியானது. அதில் எதுவும் முன்னதாகவோ அல்லது பின்னரோ நடைபெற முடியாது, ஆத்மாக்களாலும் வேறு எங்கும் இருக்க முடியாது. நட்சத்திரங்கள் ஆகாயத்தில் இருப்பதைப் போன்றே, பிரம்ம தத்துவத்தில் ஆத்மாக்கள் இருக்கிறார்கள். அந்த நட்சத்திரங்களைத் தொலைவிலிருந்து பார்க்கும் பொழுது, அவை மிகவும் சிறியதாகத் தோன்றுகின்றன, உண்மையில், அவை மிகவும் பெரியவை. எவ்வாறாயினும், ஆத்மாக்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ ஆகுவதில்லை, அவர்களை என்றுமே அழிக்கவும் முடியாது. நீங்கள் சத்தியயுகத்துக்குச் செல்கின்றீர்கள், பின்னர் கலியுகத்துக்கு வருகிறீர்கள். நீங்கள் சத்தியயுகத்தி;ல் இருந்தீர்கள் எனவும், நீங்கள் இப்பொழுது கலியுகத்துக்குள் வந்துவிட்டீர்கள் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எந்தப் பெறுமதியும் எஞ்சவில்லை. எவ்வளவுதான் மாயையின் பிரகாசம் இருப்பினும், இது இன்னமும் இராவணனின் சத்தியயுகமே. ஆனால் அதுவோ கடவுளின் சத்தியயுகம் ஆகும். எவ்வாறு இன்னமும் ஆறு தொடக்கம் ஏழு வருடங்களில் அதிகளவில் தானியம் இருக்கும் என மக்கள் தொடர்ந்தும் பேசுகிறார்கள், கேட்கவும் வேண்டாம்! அவர்களுடைய திட்டம் என்ன என்பதையும், குழந்தைகளாகிய உங்களின் திட்டம் என்ன என்பதையும் பாருங்கள்! தந்தை கூறுகிறார்: பழையதைப் புதியதாக்குவதே எனது திட்டம். உங்களுக்கு ஒரு திட்டம் மாத்திரம் உள்ளது. தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள் என்பதை அறிவீர்கள். பாபா உங்களுக்குப் பாதையைக் காட்டுகிறார். அவர் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுத்து, நினைவில் நிலைத்திருக்குமாறு வழிகாட்டலையும் கொடுக்கிறார். “வழிகாட்டல்” என்னும் வார்த்தை உள்ளது. தந்தை சம்ஸ்கிருதத்தில் பேசுவதில்லை. அவர் ஹிந்தியில் மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். பல்வேறு மொழிகள் உள்ளன. கூறப்படுவதைச் செவிமடுத்துப் பின்னர் அதை மொழி பெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளார்கள். மக்களில் பலருக்கு ஹிந்தியும், ஆங்கிலமும் தெரியும்; அவர்கள் அவற்றைக் கற்கிறார்கள். எவ்வாறாயினும், தங்கள் வீட்டைப் பராமரிக்கும் தாய்மார்கள் அந்தளவுக்குக் கற்பதில்லை. இந்த நாட்களில், மக்கள் வெளிநாடுகளில் ஆங்கிலத்தைக் கற்றுவிட்டு, இங்கே திரும்பி வந்த பின்னரும், தொடர்ந்தும் ஆங்கிலத்தையே பேசுகிறார்கள். பின்னர் அவர்களால் ஹிந்தியையும் பேச முடியாதுள்ளது. அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் தங்கள் தாய்மார்களுடன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் அப்பாவித் தாய்மார்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், அவர்கள் மிகவும் குழப்பம் அடைகிறார்கள். பின்னர் அவர்கள் அரைகுறை ஹிந்தியைக் கற்க வேண்டியுள்ளது. சத்தியுயகத்தில் ஓர் இராச்சியமும் ஒரு மொழியுமே இருந்தன. இப்பொழுது அது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகிறது. எவ்வாறு ஒவ்வொரு 5000 வருடங்களும் உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இப்பொழுது நீங்கள் ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். இங்கே உங்களுக்குப் பெருமளவு நேரம் உள்ளது. காலையில் நீராடிய பின்னர், உலா செல்லுதல் போன்றவற்றின் மூலம் உங்களை நீங்கள் பெருமளவில் களிப்பூட்டிக் கொள்ளலாம். எவ்வாறு நாங்கள் எல்லோரும் நடிகர்கள் என்பதை உள்ளார நினைவு செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கு இந்த விழிப்புணர்வு உள்ளது. பாபா எங்களுக்கு 84 பிறவிகளின் சக்கரத்தின் இரகசியங்களைக் கூறியுள்ளார். நாங்கள் சதோபிரதானாக இருந்தோம்; இது பெரும் சந்தோஷத்துக்குரிய ஒரு விடயம். மனிதர்களும் உலா வருகிறார்கள். அவர்களுக்கு வருமானம் கிடைப்பது இல்லை, ஆனால் நீங்களோ பெருமளவுக்குச் சம்பாதிக்கிறீர்கள். உங்கள் புத்தியில் சக்கரத்தை வைத்திருப்பதுடன், தொடர்ந்தும் தந்தையையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான பல சிறந்த வழிகளை பாபா உங்களுக்குக் காண்பிக்கிறார். குழந்தைகள் இந்த ஞானக்கடலைக் கடையாத பொழுது, மாயை அவர்களின் புத்தியில் அதிகத் தொந்தரவுகளை விளைவிக்கின்றாள். மாயை அவர்களுக்குத் தொல்லை கொடுக்கிறாள். எவ்வாறு நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள் என்பதையும், எவ்வாறு நீங்கள் சத்தியயுகத்தில் இத்தனை பிறவிகளை எடுத்துப் பின்னர் தொடர்ந்தும் கீழே வந்தீர்கள் என்பதையும் பற்றிச் சிந்தியுங்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒரு தடவை சதோபிரதானாக வேண்டும். பாபா கூறியுள்ளார்: என்னை நினைவு செய்வதால், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, உங்கள் புத்தியில் பாபாவின் நினைவைக் கொண்டிருப்பதால், மாயை விளைவிக்கும் குழப்பங்கள் முடிவடையும். அத்துடன் நீங்கள் பெருமளவு நன்மையை அனுபவம் செய்வீர்கள். இங்கே ஒரு தம்பதியினர் ஒன்றாக வந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் தமது சொந்தத் தனிப்பட்ட முயற்சியைச் செய்து, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர வேண்டும். இங்கே தனியாக வருவதிலும் பெருமளவு சந்தோஷம் உள்ளது.ஏனென்றால், நீங்கள் உங்களில் கவனம் செலுத்த முடியும். உங்களுடன் வேறொருவர் இருந்தால், உங்கள் புத்தி இங்கும் அங்கும் ஈர்க்கப்படும். இங்கே மிகவும் இலகுவாக உள்ளது. எல்லா இடங்களிலும் தோட்டங்கள் உள்ளன. ஒரு பொறியியலாளர் அவற்றைப் பார்த்தால், எவ்வாறு ஒரு பாலத்தை இங்கே அல்லது அங்கே கட்ட முடியும் என்பதைப் பற்றிச் சிந்திப்பார். தான் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி அவர் சதா சிந்தித்துக் கொண்டிருப்பார். புத்தியில் திட்டங்கள் தோன்றுகின்றன. வீட்டில் இருப்பவர்களின் புத்தியும் அங்கு தொடர்புபட்டிருக்க வேண்டும். இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தி, சதா இதைப் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் கற்கவும், உங்கள் வியாபாரத்தைத் தொடரவும் வேண்டும். முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் போன்றோர் அனைவரும் தூய்மையாக வேண்டும். ஒவ்வோர் ஆத்மாவுக்கும் தந்தையிடம் இருந்து தனது ஆஸ்தியைக் கோருவதற்கு உரிமை உள்ளது. இந்த விதையை உங்கள் குழந்தைகளில் அவர்களின் குழந்தைப் பருவத்தில் விதைப்பது மிகவும் சிறந்தது. வேறு எவராலும் இந்த ஆன்மீக ஞானத்தைக் கற்பிக்க முடியாது. இதுவே தந்தை வரும்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்ற, உங்கள் ஆன்மீக ஞானமாகும். வேறு பாடசாலைகளில், நீங்கள் லௌகீக ஞானத்தைப் பெறுகிறீர்கள். மற்றையது சமயநூல்களின் ஞானமாகும். இது கடவுள் உங்களுக்குக் கற்பிக்கும் ஆன்மீக ஞானம். இதைப் பற்றி வேறு எவருக்கும் தெரியாது. பரமாத்மா வந்து உங்களுக்குக் கற்பிக்கின்ற, ஆன்மீக ஞானம் இதுவேயாகும். அதற்கு வேறு எந்தப் பெயரும் கொடுக்க முடியாது. தந்தையே வந்து உங்களுக்கு இதைக் கற்பிக்கிறார். இவை கடவுளின் வாசகங்கள். இந்த நேரத்தில் கடவுள் ஒருமுறை மாத்திரம் வந்து எங்களுக்குக் கற்பிக்கிறார். இது ஆன்மீக ஞானம் என அழைக்கப்படுகிறது. சமயநூல்களின் ஞானம், இந்த ஞானத்திலிருந்து வேறுபட்டது. லௌகீகக் கல்லூரிகள் போன்றவற்றின் அறிவு ஒரு வகையானது எனவும், இரண்டாவது சமயநூல்களின் சமய அறிவு எனவும், மூன்றாவது இந்த ஆன்மீக ஞானம் எனவும் நீங்கள் அறிவீர்கள். அந்தத் தத்துவ கலாநிதிகள் எவ்வளவுதான் மகத்தானவர்களாக இருந்தாலும், அவர்களும் சமயநூல்களின் விடயங்களை மட்டுமே அறிவார்கள். உங்களுடைய இந்த ஞானமானது முற்றிலும் வேறுபட்டது. ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாகிய, ஆன்மீகத் தந்தை மாத்திரமே இந்த ஆன்மீக ஞானத்தைக் கற்பிக்கிறார். அவருடைய புகழ்: அமைதிக்கடல், சந்தோஷக்கடல் போன்றன. கிருஷ்ணரின் புகழ் அவருடைய புகழிலிருந்து முழுமையாக வேறுபட்டது. மனிதர்களே நற்குணங்களையும் குறைபாடுகளையும் கொண்டிருப்பவர்கள். மக்கள் அவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். தந்தையின் மிகச்சரியான புகழை நீங்கள் அறிவீர்கள். வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், அம்மக்கள் கிளிகளைப் போன்று பாடுகிறார்கள். நீங்கள் எவ்வாறு முன்னேறலாம் என்பதையிட்டுத் தந்தை உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார். தொடர்ந்தும் முயற்சி செய்வதால், நீங்கள் தொடர்ந்தும் உறுதியானவர்கள் ஆகுவீர்கள். பின்னர், நீங்கள் உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும்பொழுதும், உங்களுக்கு அந்த நினைவு இருப்பதுடன் கடவுளின் விழிப்புணர்வையும் கொண்டிருப்பீர்கள். அரைக்கல்பத்துக்கு, மாயையின் விழிப்புணர்வு இருந்து வந்தது. இப்பொழுது தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு இவ்விடயங்களை மிகச்சரியாக விளங்கப்படுத்துகிறார். நீங்கள் என்னவாக இருந்தீர்கள் எனவும், இப்பொழுது என்னவாகி விட்டீர்கள் எனவும் உங்களையே பாருங்கள். பாபா எங்களை மீண்டும் ஒருமுறை அந்தத் தேவர்களாக ஆக்குகிறார். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்து கொள்கிறீர்கள். முதலில், பாரதம் மாத்திரமே இருந்தது. தந்தை தனது பாகத்தை நடிப்பதற்குப் பாரதத்தில் மாத்திரமே வருகிறார். நீங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்கள். நீங்கள் தூய்மையாக வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் பின்னரே வருவீர்கள். அப்பொழுது நீங்கள் எந்தச் சந்தோஷத்தைப் பெறுவீர்கள்? நீங்கள் அந்தளவுக்குப் பக்தி செய்திருக்காது விட்டால், வரமாட்டீர்கள். இன்னார் அந்தளவு ஞானத்தைப் பெறப் போவதில்லை என்பது புரிந்து கொள்ளப்படும். உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியும். பெருமளவு முயற்சி செய்யப்பட்டுள்ளது. இருந்தும், அரிதாகவே சிலர் வெளிப்படுகிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் களைப்படையக் கூடாது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்யாமல், நீங்கள் எதையும் பெற முடியாது. பிரஜைகள் தொடர்ந்தும் உருவாக்கப்பட வேண்டும். முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பாபா உங்களுக்கு ஒரு வழிமுறையைக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் முன்னேற விரும்பினால், காலையில் நீராடிய பின்னர், ஏகாந்தமாக நடந்து செல்லுங்கள் அல்லது எங்காவது அமர்ந்து கொள்ளுங்கள். நடப்பது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. உங்களால் பாபாவை நினைவுசெய்ய முடியும். அத்துடன் நாடகத்தின் இரகசியங்களும் உங்கள் புத்திகளில் இருக்கும். சம்பாதிப்பதற்கு அதிகளவு வருமானம் உள்ளது. இதுவே உங்களின் உண்மையான வருமானம். ஒருமுறை அந்த வருமானத்தைச் சம்பாதித்து முடித்த பின்னர், இந்த வருமானத்தைச் சம்பாதிப்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். இங்கே எதுவும் சிரமம் இல்லை. எவ்வாறு சிலர் தங்கள் சுயசரிதையை எழுதுகிறார்கள் என பாபா பார்த்துள்ளார். “இன்று நான் இந்த நேரத்தில் எழுந்தேன், பின்னர் நான் இதைச் செய்தேன்” போன்றன. அதைப் பின்னர் வாசிப்பவர்கள், அதிலிருந்து சிலவற்றைக் கற்பார்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள். மக்கள் முக்கிய பிரமுகர்களின் சுயசரிதையை வாசிக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளுக்காக எழுதுகின்றார்கள். அதன்மூலம் குழந்தைகளும் சிறந்த சுபாவத்தைக் கொண்டிருக்க முடியும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். உங்கள் சதோபிரதான் உலக இராச்சியத்தை நீங்கள் மீண்டும் ஒருமுறை கோர வேண்டும். நீங்கள் ஒவ்வொரு கல்பமும் உங்கள் இராச்சியத்தைக் கோரிப் பின்னர் அதை இழக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். இவை அனைத்தும் உங்கள் புத்திகளில் உள்ளன. அதுவோ புதிய உலகம்; இதுவோ அந்தப் புதிய தர்மத்துக்கான புதிய ஞானம். ஆகவே, இனிமையிலும் இனிமையான குழந்தைகளான உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: விரைந்து முயற்சி செய்யுங்கள்! உங்கள் வாழ்வுக்கான உத்தரவாதம் இல்லை. இந்நாட்களில், மரணம் மிகச் சுலபமாக ஏற்படுகிறது. அமரத்துவ பூமியில் அத்தகைய மரணம் இருக்காது. இங்கே, எதுவும் செய்யாமல் இருக்கும்போதே மக்கள் மரணிக்கிறார்கள். இதனாலேயே நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்து உங்கள் கணக்கில் சேகரிக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஞானத்தைக் கடைவதில் உங்கள் புத்தியை மும்முரமாக வைத்திருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம், சென்று, ஏகாந்தமாக அமர்ந்திருந்து இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். தந்தையை நினைவுசெய்து, உங்கள் உண்மையான வருமானத்தைச் சேமித்துக் கொள்ளுங்கள்.2. தொலைநோக்குப் பார்வை உடையவராகி இந்த எல்லையற்ற நாடகத்தை மிகச்சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். நடிகர்கள் அனைவரினதும் பாகங்களையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக அவதானியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இனிமை என்ற ஆசீர்வாதத்தால் ஒரு மேன்மையான ஆத்மாவாகி சதா முன்னேறுவீர்களாக.இனிமை என்பது எந்தவொரு கசப்பையும் இனிமையாக்கக் கூடிய விசேடமான நற்குணம் ஆகும். எவருக்கும் சில கணங்களுக்கு இனிய திருஷ்டியைக் கொடுங்கள். சில இனிய வார்த்தைகளைப் பேசுங்கள். உங்களால் அந்த ஆத்மா நிறைந்து இருப்பதை உணரச் செய்ய முடியும். சில கணங்களுக்கான இனிய திருஷ்டியும் வெகு சில இனிய வார்த்தைகளும் அந்த ஆத்மாவின் உலகையே மாற்றி விடும். உங்களிடம் இருந்து வருகின்ற ஓரிரு இனிய வார்த்தைகள், அந்த ஆத்மா எல்லா வேளையும் மாறுவதற்குக் கருவி ஆகுகின்றன. ஆகவே, எப்போதும் உங்களுடன் இனிமை என்ற ஆசீர்வாதத்தை சதா வைத்திருங்கள். சதா இனிமையாக இருங்கள், எல்லோரையும் இனிமையானவர்கள் ஆக்குங்கள்.
சுலோகம்:
ஒவ்வொரு சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருங்கள், நீங்கள் சகல இரகசியங்களையும் புரிந்து கொள்வீர்கள்.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியை சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.
உங்களின் எண்ணங்கள் அனைத்தும் மௌனமாகும்போது, ஒரேயொரு தந்தையும் நீங்களுமே இருப்பீர்கள். இந்தச் சந்திப்பின் அனுபவத்தின் எண்ணம் மட்டும் உங்களிடம் இருக்கும்போது, நீங்கள் எண்ணத்தின் சக்தியைச் சேமிப்பீர்கள். உங்களின் யோகம் சக்திவாய்ந்தது ஆகிவிடும். இதற்கு, அமிழ்த்தும் சக்தியையும் விஸ்தாரத்தில் இருந்து விடுபடும் சக்தியையும் கிரகியுங்கள். உங்களின் எண்ணங்களுக்குப் பலவீனமாக அன்றி, முழுமையான தடையைப் பிரயோகியுங்கள். அது ஒரு விநாடியை விட அதிகம் எடுக்குமாயின், அமிழ்த்தும் சக்தி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.