03.09.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உண்மையான வழிகாட்டி உங்களுக்கு உண்மையான யாத்திரையைக் கற்பிப்பதற்காக வந்துள்ளார். உங்கள் யாத்திரையில் பிரதான விடயம் தூய்மையே ஆகும். நினைவில் நிலைத்திருந்து, தூய்மை ஆகுங்கள்.

கேள்வி:
தூதுவரின் குழந்தைகளாகிய நீங்கள் எவ்விடயங்களைப் பற்றி விவாதிக்கவோ, வாதாடவோ கூடாது, ஆனால் ஒரேயொரு அக்கறையையே கொண்டிருக்க வேண்டும்?

பதில்:
தூதுவரின் குழந்தைகளே, அனைவருக்கும் இச்செய்தியைக் கொடுங்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த யோக அக்கினி மூலமாகவே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந்த ஒரேயொரு அக்கறையை மாத்திரமே கொண்டிருங்கள். ஏனைய விடயங்களில் ஈடுபடுவதில் எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அதன் மூலமாக அவர்கள் ஆஸ்திகர்கள் ஆகமுடியும். படைப்பவராகிய தந்தை யார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும்போது, படைப்பைப் புரிந்து கொள்வது அவர்களுக்கு இலகுவாகும்.

பாடல்:
எங்கள் யாத்திரை தனித்துவமானது.

ஓம் சாந்தி.
நீங்கள் உண்மையான யாத்திரைத் தலத்தின் வாசிகள் என்பதை இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உண்மையான வழிகாட்டியும், அவரது குழந்தைகளாகிய நாங்களும் உண்மையான யாத்திரையில் செல்கின்றோம். இது பொய்யான பூமியாகும், இது தூய்மையற்ற பூமியாகும். நாங்கள் இப்பொழுது அந்தத் தூய பூமியாகிய, சத்திய பூமிக்குச் செல்கின்றோம். மக்கள் யாத்திரை செல்கின்றனர். சிலவேளைகளில், எவரும் எந்நேரத்திலும் செல்லக் கூடியதாக, விசேட யாத்திரைகளும் உள்ளன. இதுவும் உண்மையான வழிகாட்டி வரும்போது நீங்கள் செல்கின்ற ஒரு யாத்திரையே ஆகும். அவர் ஒவ்வொரு கல்பத்தின் சங்கமத்திலேயே வருகின்றார். இதில், வெப்பம், குளிர் அல்லது தடுமாறித் திரிவதற்கான கேள்விக்கே இடமில்லை. இதுவே நினைவு யாத்திரை ஆகும். சந்நியாசிகளும் அந்த யாத்திரைகளில் செல்கின்றனர். தங்கள் யாத்திரையில் உண்மையாக இருப்பவர்கள், தூய்மையாக இருப்பார்கள். நீங்கள் அனைவரும் ஒரு யாத்திரையிலேயே இருக்கின்றீர்கள். நீங்கள் பிராமணர்கள். உண்மையான பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் யார்? என்றுமே விகாரத்தில் ஈடுபடாதவர்கள். நீங்கள் அனைவரும் நிச்சயமாக முயற்சியாளர்கள். மனதில் எண்ணங்கள் இருந்தாலும், விகாரத்தில் உண்மையாக ஈடுபடாதிருப்பதே பிரதான விடயமாகும். பிராமணர்களில் எத்தனை பேர் விகாரம் அற்றவர்களாக இருக்கின்றனர் என எவராவது உங்களிடம் வினவினால், அவரிடம் கூறுங்கள்: இக்கேள்வியைக் வினவுவதற்கான அவசியமே இல்லை. உங்களுக்கு இந்த விடயங்கள் அனைத்தினாலும் போஷாக்கு கிடைக்கிறதா? நீங்கள் யாத்திரிகர்கள் ஆகவேண்டும், அவ்வளவே. அங்கே எத்தனை யாத்திரிகர்கள் இருக்கின்றார்கள் எனக் கேட்பதில் எவ்வித நன்மையும் இல்லை. சில பிராமணர்கள் உண்மையானவர்கள், சிலர் போலியானவர்கள். இன்று, அவர்கள் உண்மையானவர்களாக இருப்பார்கள், ஆனால் நாளையே அவர்கள் போலியானவர்கள் ஆகிவிடுவார்கள். ஒருவர் விகாரத்தில் வீழ்ந்து விட்டால், அவர் பிராமணராக இருக்கமாட்டார். அவர் மீண்டும் சூத்திரர் ஆகுகின்றார். இன்று, அவர் ஒரு சத்தியம் செய்கின்றார். நாளை, அவர் விகாரத்தில் வீழ்ந்து, ஓர் அசுரனைப் போன்று ஆகிவிடுகின்றார். எந்தளவிற்குத் தந்தை இங்கே இருந்து இவ்விடயங்களை விளங்கப்படுத்த வேண்டும்? இவ்விடயங்களால் உங்களுக்குப் போஷாக்கும் கிடைக்காது அல்லது உங்கள் வாயும் இனிப்பூட்டப்பட மாட்டாது. இங்கு, நாங்கள் தந்தையை நினைவு செய்வதுடன், தந்தையின் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் புரிந்து கொள்வதற்காகவுமே வருகின்றோம். வேறு எதிலும் பெறுமதி இல்லை. அவர்களிடம் கூறுங்கள்: இங்கு, தந்தையை நினைவு செய்வது கற்பிக்கப்படுகின்றது. தூய்மையே இதில் பிரதான விடயமாகும். இன்று தூய்மையாக இருந்து, பின்னர் தூய்மை அற்றவர்கள் ஆகுபவர்கள், அதன் பின்னர் பிராமணர்களாக இருப்பதில்லை. நாங்கள் எவ்வளவு நேரம் இங்கிருந்து, இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கூறமுடியும்? பலர் இவ்வாறாக மாயையின் புயல்களால் வீழ்ந்து விடுகின்றார்கள். இதனாலேயே பிராமணர்களின் மாலை உருவாக்கப்பட முடியாது. நாங்கள் தூதுவரின் குழந்தைகள், உங்களுக்கு அவரின் செய்தியைக் கொடுக்கின்றோம். தூதுவரின் குழந்தைகளாகிய நாங்கள் உங்களுக்கு இச்செய்தியைக் கொடுக்கின்றோம்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த யோக அக்கினி மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந்த ஒரேயொரு அக்கறையை மாத்திரமே கொண்டிருங்கள். மனிதர்கள் பல கேள்விகளைக் கேட்கின்றனர். இந்த ஒரு விடயத்தைத் தவிர வேறு விடயங்கள் எதிலும் ஈடுபட்டிருப்பதால் எந்த நன்மையும் இல்லை. இங்கு நீங்கள் எவ்வாறு ஒரு நாஸ்திகரில் இருந்து ஆஸ்திகர் ஆகுவது என்பதையும், ஓர் அநாதையில் இருந்து எவ்வாறு பிரபுவிற்கும், அதிபதிக்கும் உரியவர் ஆகுவது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அதன் மூலம் நீங்கள் அதிபதியிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர முடியும்: இவையே நீங்கள் கேட்க வேண்டிய விடயங்களாகும். நீங்கள் அனைவரும் முயற்சியாளர்கள். பலர் விகாரத்தினாலேயே தோல்வி அடைகின்றனர். ஒருவர் நீண்ட நாட்களின் பின்னர் தனது மனைவியைக் கண்டால், கேட்கவே வேண்டாம்! ஒருவரிடம் மதுபானம் அருந்துகின்ற அல்லது புகைப்பிடிக்கின்ற பழக்கம் இருக்குமாயின், அவரால் அதை நிறுத்த முடியாது இருப்பதால், யாத்திரை செல்லும்போதும் அவர் இரகசியமாக மதுபானம் அருந்துவார், அல்லது புகை பிடிப்பார். எவராலும் என்ன செய்ய முடியும்? பலர் உண்மையைக் கூறாமல், தாங்கள் செய்வதைத் தொடர்ந்தும் மறைக்கின்றனர். நீங்கள் சாமர்த்தியமாகப் பதில் கூறுவதற்கான பல வழிகளை பாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் காண்பிக்கின்றார். மனிதர்கள் எவர் மூலமாக ஆஸ்திகர்கள் ஆகுகின்றார்களோ, அந்த ஒரேயொரு தந்தையின் அறிமுகத்தை மாத்திரம் கொடுங்கள். அவர்கள் முதலில் தந்தையை அறிந்து கொள்ளும்வரை, கேள்விகள் கேட்பது பயனற்றதாகும். இங்கு வந்தாலும், எதையும் புரிந்து கொள்ளாத பலர் உள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் செவிமடுக்கின்றனர். எனினும், அவர்கள் எந்த நன்மையையும் பெறுவதில்லை. சிலர் பாபாவிற்கு எழுதுகின்றனர்: ஆயிரம் அல்லது இரண்டாயிரம் மக்கள் இங்கு வந்தனர், எனினும் அவர்களில் ஓரிருவரே புரிந்து கொள்வதற்காகத் தொடர்ந்தும் வருகின்றனர். இன்ன இன்ன முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் (பெரிய ஒன்றுகூடல்களுக்கு) வருகின்றனர். அவர்கள் பெறவேண்டிய அறிமுகத்தைப் பெறவில்லை என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. அவர்கள் முழு அறிமுகத்தையும் பெறும்போதே நீங்கள் கூறுவது சரியென்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆத்மாக்களாகிய எங்களது தந்தை பரமபிதா பரமாத்மா ஆவார். அவரே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள்! இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுங்கள். தூய்மையாக இருக்காதவர்கள் பிராமணர்களல்ல, அவர்கள் சூத்திரர்கள். இது ஒரு யுத்த களமாகும். விருட்சம் தொடர்ந்தும் வளரும், புயல்களும் ஏற்படும். பல இலைகள் தொடர்ந்தும் விழும். உண்மையான பிராமணர்கள் யாரென்பதை யார் அமர்ந்திருந்து கணக்கிடுவார்கள்? ஒருபோதும் சூத்திரர்கள் ஆகாதவர்களும், யாருடைய கண்கள் எவரை நோக்கியும் சற்றேனும் ஈர்க்கப்படாமலும் இருக்கின்றதோ, அவர்களே உண்மையான பிராமணர்கள் ஆவர். கர்மாதீத ஸ்திதி இறுதியிலேயே அடையப்படும். இலக்கு மிக உயர்வானது. எதுவும் உங்கள் மனதில் புகக்கூடாது. நீங்கள் இறுதியிலேயே அந்த ஸ்திதியை அடைவீர்கள். இந்நேரத்தில், எவருமே அத்தகைய ஸ்திதியைக் கொண்டிருக்கவில்லை. இந்நேரத்தில் நீங்கள் அனைவரும் முயற்சியாளர்கள், நீங்கள் தொடர்ந்தும் தளம்பல் அடைகின்றீர்கள். கண்கள் பற்றிய கேள்வியே பிரதான விடயமாகும். நாங்கள் ஆத்மாக்கள், இச்சரீரங்கள் மூலமாக நாங்கள் எங்கள் பாகங்களை நடிக்கின்றோம். நீங்கள் இப்பயிற்சியை மிக உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். இந்த இராவண இராச்சியம் இருக்கும்வரை யுத்தம் தொடர்ந்தும் இடம்பெறும். இறுதியிலேயே கர்மாதீத ஸ்திதி அடையப்படும். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, இவ்வுணர்வைக் கொண்டிருப்பதுடன், தொடர்ந்தும் அதைப் புரிந்து கொள்வீர்கள். தற்போது விருட்சம் இன்னமும் மிகவும் சிறியதாகவே உள்ளது. புயல்கள் வந்ததும் இலைகள் வீழ்கின்றன. பலவீனமாக உள்ளவர்கள், விருட்சத்திலிருந்து வீழ்கின்றனர். உங்கள் ஸ்திதி எவ்வாறு உள்ளதென நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுப் பார்க்கலாம். கேள்விகள் கேட்பவர்களுடன் அதிகம் தொடர்பு வைக்காதீர்கள். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றோம். எல்லையற்ற தந்தை வந்து, எங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். அதாவது, சந்தோஷம் மாத்திரமே உள்ள புதிய உலகை அவர் ஸ்தாபிக்கின்றார். மனிதர்கள் வாழுகின்ற பிரதேசம் உலகம் என அழைக்கப்படுகின்றது. அசரீரி உலகில் ஆத்மாக்கள் மாத்திரமே உள்ளனர். எவ்வாறு ஒவ்வோர் ஆத்மாவும் சின்னஞ்சிறிய புள்ளியாகவே உள்ளார் என்பது எவரது புத்தியிலும் புகுவதில்லை. நீங்கள் புதியவர்கள் எவருக்கும் முதலில் இதைக் கூறக்கூடாது. எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார் என்பதை முதலில் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். பாரதம் தூய்மையாக இருந்தது, அது இப்பொழுது தூய்மை அற்றதாகி விட்டது. கலியுகத்தின் பின்னர் சத்திய யுகம் இருக்கும். பிரம்மாகுமாரர், குமாரிகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. இது புதிய படைப்பாகும். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். இவ்விளக்கம் உங்கள் புத்திகளில் இருக்க வேண்டும். இதில் சிரமம் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், மாயை உங்களை மறக்கச் செய்து, உங்களைப் பாவச் செயல்கள் செய்ய வைக்கின்றாள். அரைக்கல்பமாக பாவச்செயல்கள் செய்கின்ற பழக்கம் இருக்கின்றது. அந்த அசுரப் பழக்க வழக்கங்கள் யாவும் நீக்கப்பட வேண்டும். பாபாவே கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் முயற்சியாளர்கள். கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கு நீண்டகாலம் எடுக்கும். பிராமணர்கள் என்றால் ஒருபோதும் விகாரத்தில் ஈடுபடுவதில்லை. அவர்கள் யுத்தகளத்தில் இருக்கும்போது தோற்கடிக்கப்படுகின்றார்கள். இதைப் பற்றிக் கேள்விகள் கேட்பதால் எவ்வித நன்மையும் இல்லை. அனைத்திற்கும் முதலில், உங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள். சிவபாபா முன்னைய கல்பத்தில் செய்தது போன்றே எங்களுக்குக் கட்டளை இடுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள்! இது அதே யுத்தமாகும். தந்தை ஒரேயொருவரே. ஸ்ரீகிருஷ்ணரைத் தந்தை என அழைக்க முடியாது. அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி விட்டார்கள். தந்தை மாத்திரமே தவறானவற்றை மாற்றிச் சரியானது ஆக்குகின்றார். இதனாலேயே அவர் சத்தியமானவர் என அழைக்கப்படுகின்றார். இந்நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே முழு உலகினதும் இரகசியங்களை அறிவீர்கள். சத்தியயுகத்தில், அது தேவ வம்சமாகும். இராவண இராச்சியத்தில், இது அசுர வம்சமாகும். நீங்கள் சங்கமயுகத்தை மிகத்தெளிவாகக் காண்பிக்க வேண்டும். இது அதி மேன்மையான சங்கமயுகம் ஆகும். அக்கரையில் தேவர்களும், இக்கரையில் அசுரர்களும் உள்ளனர். எவ்வாறாயினும், அவர்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் புரிவதில்லை. பிராமணர்களாகிய உங்களின் யுத்தம் விகாரங்களுடனேயே ஆகும், எனினும் இதை யுத்தம் என்றும் அழைக்க முடியாது. காமமே அனைத்திலும் கொடிய விகாரமாகும். இந்த விகாரமே மகா எதிரியாகும். அதை வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். இவ்விகாரத்தினாலேயே அப்பாவிகள் அடிக்கப்படுகின்றனர். பலவிதமான தடைகள் உள்ளன. தூய்மையே பிரதான விடயமாகும். தொடர்ந்தும் முயற்சி செய்வதன் மூலமும், தொடர்ந்தும் புயல்களை அனுபவம் செய்வதன் மூலமும் நீங்கள் இறுதியில் வெற்றியாளர்கள் ஆகுவீர்கள், ஏனென்றால் மாயையும் களைப்படைந்து விடுவாள். குத்துச் சண்டையில், பலசாலி மிக விரைவிலேயே தனது எதிரியைத் தோற்கடித்து விடுவார். அவர்களின் வியாபாரம் மிக நன்றாகச் சண்டையிட்டு வெற்றி அடைவதாகும். பலசாலிகள் மிகவும் பிரபல்யமானவர்கள் ஆகுகின்றனர், அவர்கள் பரிசுகளையும் பெறுகின்றனர். இங்கு, உங்களுடையது மறைமுகமானது. நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதையும் ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் தூய்மையாக வேண்டும். அனைவருக்கும் இச்செய்தியைக் கொடுங்கள். அவர்கள் கேட்கின்ற அந்தக் கேள்விகளில் அகப்பட்டு விடாதீர்கள். உங்கள் வியாபாரம் ஆன்மீகம் ஆகும். பாபா ஆத்மாக்களாகிய எங்களை இந்த ஞானத்தால் நிரப்பினார், அதன்பின்னர் இந்த ஞானம் மறைந்ததும் நாங்கள் எங்கள் வெகுமதியைப் பெற்றோம். பாபா இப்பொழுது மீண்டும் ஒருதடவை எங்களை இந்த ஞானத்தால் நிரப்புகின்றார். இப்பொழுது, உங்கள் போதையைப் பேணுங்கள். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் தந்தையின் செய்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்: தந்தையை நினைவுசெய்யுங்கள், நீங்கள் நன்மை பெறுவீர்கள். உங்கள் வியாபாரம் ஆன்மீகம் ஆகும். தந்தையை அறிந்து கொள்வதே முதலாவதும், முதன்மையானதுமான விடயமாகும். தந்தை மாத்திரமே ஞானக்கடல் ஆவார். அவர் சமயநூல்களை உரைப்பதில்லை. தத்துவ ஞானிகள் நூல்களைக் கற்கின்றனர், ஆனால் கடவுள் ஞானம் நிறைந்தவர். அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொண்டுள்ளார். அவர் எதையாவது கற்றாரா? அவர் வேதங்கள், சமயநூல்கள் போன்ற அனைத்தையும் அறிவார். தந்தை கூறுகின்றார்: எனது பாகம் உங்களுக்கு இந்த ஞானத்தை விளங்கப்படுத்துவதே ஆகும். வேறு எவராலும் இந்த ஞானத்திற்கும், பக்திக்கும் இடையிலான வேறுபாட்டை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. இந்த ஞானம் ஒரு கல்வியாகும். பக்தியை இந்த ஞானம் என அழைக்க முடியாது. சற்கதியை அருள்பவர் தந்தை ஒருவரே ஆவார். உலக வரலாறு நிச்சயமாக மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது. பழைய உலகம் முடிவடைந்த பின்னர், புதிய உலகம் நிச்சயமாக வரவேண்டும். பாபா உங்களுக்கு மீண்டும் ஒரு தடவை கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! அவர் இதையே மிக அதிகமாக வலியுறுத்துகின்றார். மிகவும் பிரபல்யம் வாய்ந்த பல குழந்தைகள் நினைவு யாத்திரையில் மிகவும் பலவீனமாக இருப்பதை பாபா அறிவார். மிகவும் பிரபல்யமாக இல்லாதவர்களும், பந்தனத்தில் இருப்பவர்களும், ஏழைகளும் நினைவு யாத்திரையில் அதிகளவில் நிலைத்திருக்கின்றனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தையே கேட்டுப் பாருங்கள்: நான் எவ்வளவு நேரம் தந்தையை நினைவு செய்கின்றேன்? தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இயன்றவரை என்னை நினைவு செய்யுங்கள். உள்ளார்ந்தமாக மிகவும் மலர்ச்சியாக இருங்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். எனவே, நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும்! தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். பின்னர், வெவ்வேறு சரீரங்களை எடுத்து, உங்கள் பாகங்களை நடிக்கையில், நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் தூய்மையாகி, உங்கள் தெய்வீகப் பாகங்களை மீண்டும் நடிக்க வேண்டும். நீங்கள் தேவ தர்மத்திற்கு உரியவர்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள். சூரிய வம்சத்தைச் சார்ந்த அனைவருமே 84 பிறவிகளை எடுப்பதில்லை. சிலர் தாமதமாகவே தொடர்ந்தும் கீழே இறங்குகின்றனர். அவ்வாறு இல்லா விட்டால், அனைவருமே உடனடியாகக் கீழிறங்கி வரவேண்டி இருந்திருக்கும். ஒருவர் அதிகாலையில் விழித்தெழுந்து தனது புத்தியைப் பயன்படுத்தினால், அவரால் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளாகிய நீங்களே இந்த ஞானக்கடலைக் கடைய வேண்டும். சிவபாபா இதனைச் செய்வதில்லை. அவர் கூறுகின்றார்: நாடகத்தின்படி நான் எதை உங்களுக்குக் கூறினாலும், முன்னைய கல்பத்தில் நான் உங்களுக்கு விளங்கப்படுத்திய அதே விடயங்களையே இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த ஞானத்தைக் கடையவேண்டும். ஏனெனில், நீங்களே இந்த ஞானத்தை மற்றவர்களுக்குக் கொடுத்து விளங்கப்படுத்த வேண்டும். இந்த பிரம்மாவும் இந்த ஞானத்தைக் கடைகின்றார். சிவபாபா அன்றி, பிரம்மாகுமாரர், குமாரிகளாகிய நீங்களே அதைக் கடையவேண்டும். எவருடனும் அதிகம் பேசாதிருப்பதே பிரதான விடயமாகும். சமயநூல்களைக் கற்பவர்கள் தங்கள் மத்தியில் அதிகளவில் விவாதிக்கின்றனர். நீங்கள் எவருடனும் விவாதிக்கவோ, வாதாடவோ கூடாது. நீங்கள் அனைவருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும், அவ்வளவே. அனைத்திற்கும் முதலில், பிரதான விடயத்தை விளங்கப்படுத்துங்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்ற முதல் பாடத்தை அவர்களை எழுதுமாறு செய்யுங்கள். நீங்கள் இதனை அவர்களுக்கு இறுதியில் விளங்கப்படுத்தினால், அவர்கள் சந்தேகத்தை வளர்த்துக் கொள்வார்கள். அவர்கள் புத்தியில் நம்பிக்கை கொண்டிராததால், எதையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் கூறுவது சரியே! முதலில், படைப்பவரான தந்தையை அறிந்து கொள்ளல் என்ற பிரதான விடயத்தை விளங்கப்படுத்திவிட்டு, பின்னர் படைப்பின் இரகசியங்களை விளங்கப்படுத்துங்கள். கீதையின் கடவுள் யாரென்பதே பிரதான விடயம். நீங்கள் அதில் அவர்களை வெற்றிகொள்ள வேண்டும். முதலில் எந்த சமயம் ஸ்தாபிக்கப்பட்டது? பழைய உலகைப் புதியதாக்குபவர் யார்? தந்தை மாத்திரமே இந்தப் புதிய ஞானத்தை ஆத்மாக்களுக்குக் கொடுக்கின்றார். இதன் மூலமாகவே புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. உங்களுக்குத் தந்தையையும், புதிய படைப்பையும் இனங்காண்பதற்கான ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் அவர்களுக்கு அல்ஃபாவை உறுதி ஆக்குங்கள். அதன் மூலம் அவர்களால் நிச்சயமாக இராச்சியத்தை அடைய முடியும். தந்தையிடம் இருந்து மாத்திரமே உங்களால் இந்த ஆஸ்தியைப் பெறமுடியும். நீங்கள் தந்தையை அறிந்து கொண்டதுமே ஆஸ்திக்கான ஓர் உரிமையைக் கோருகின்றீர்கள். ஒரு குழந்தை, பிறந்ததும் தனது பெற்றோரையே பார்ப்பதால், அது அக்குழந்தைக்கு நிச்சயமாகி விடுகின்றது. அந்தக் குழந்தை தனது தாய், தந்தையிடம் மாத்திரமே செல்கின்றது. வேறு எவரிடமும் செல்வதில்லை. ஏனென்றால், தாயிடமிருந்தே அவனுக்குப் பால் கிடைக்கிறது. நீங்களும் இந்த ஞானப் பாலைப் பெறுகின்றீர்கள். அவரே தாயும் தந்தையும் ஆனவர், இல்லையா? இவை மிகவும் சூட்சுமமான விடயங்கள். எவராலும் இவ்விடயங்களை விரைவாகப் புரிந்துகொள்ள முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் உண்மையான, தூய பிராமணர் ஆகுங்கள். தூய்மையற்ற, சூத்திரர் ஆகுகின்ற எண்ணத்தை உங்கள் மனதில் ஒருபோதும் கொண்டிராதீர்கள். உங்கள் கண்கள் வேறு எவர்மீதும் ஒருபோதும் ஈர்க்கப்படாதவாறு, அத்தகைய ஸ்திதியை உருவாக்குங்கள்.

2. தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற அனைத்தையும் நினைவில் வைத்திருங்கள். பாவச் செயல்கள் செய்ததால் உருவாகிய அசுரப் பழக்கவழக்கங்களை முடித்து விடுங்கள். சம்பூரணமான தூய்மை என்ற மேன்மையான இலக்கை அடைவதற்குத் தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவானாகி, சகல காரணங்களுக்கும் தீர்வுகளைக் கண்டுபிடித்து, அதனால் பயம் மற்றும் கவலையில் இருந்து விடுபட்டிருப்பீர்களாக.

தற்சமயம், தற்காலிக சந்தோஷத்துடன் கூடவே, கவலை மற்றும் பயம் என்ற இரண்டு விடயங்களும் உள்ளன. எங்கே கவலை உள்ளதோ, அங்கே மன அமைதி இருக்க முடியாது. எங்கே பயம் உள்ளதோ, அங்கே அமைதி இருக்க முடியாது. எனவே, சந்தோஷத்துடன் கூடவே, துன்பம் மற்றும் அமைதியின்மைக்கான காரணங்களும் உள்ளன. எவ்வாறாயினும், நீங்கள் சகல சக்திகள் என்ற பொக்கிஷங்களால் நிரம்பியுள்ள மாஸ்ரர் சர்வசக்திவான் குழந்தைகள், காரணங்கள் எல்லாவற்றுக்கும் தீர்வுகளைக் கண்டுகொள்பவர்கள், சகல பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைக் கண்டு கொள்ளும் தீர்வுகளின் சொரூபங்களாக இருப்பவர்கள். அதனால் நீங்கள் கவலை மற்றும் பயத்தில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். உங்களுக்கு முன்னால் வருகின்ற எந்தவொரு பிரச்சனையும் உங்களுடன் விளையாடவே வருகின்றன, உங்களைப் பயப்படுத்துவதற்காக அல்ல.

சுலோகம்:
உங்களின் மனோபாவத்தை (விரித்தி) மேன்மை ஆக்குங்கள், உங்களின் வீடும் குடும்பமும் (பிரவிரித்தி) இயல்பாகவே மேன்மையானவை ஆகும்.

அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.

காலத்திற்கேற்ப, பிராமண ஆத்மாக்களான நீங்கள் நெருங்கி வரும்போது, நீங்கள் சூழலையும் அக்கினி போன்று சக்திவாய்ந்தது ஆக்குவதற்காகத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும். இதற்கு, நீங்கள் உங்களுக்கு இடையே பத்திகளையும் ஆழமான கலந்துரையாடல்களையும் செய்ய முடியும். ஆனால் நீங்கள் எரிமலை ரூபத்தை அனுபவம் செய்வதுடன் மற்றவர்களுக்கும் இந்த அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். இந்தச் சேவை செய்வதில் மும்முரமாக ஈடுபடுங்கள். அப்போது சகல அற்பமான விடயங்களும் மாற்றப்பட்டு விடும்.