03.10.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அசுர கட்டளைகளும், பொய்களும் இராவணனின் சட்டங்களாகும், ஸ்ரீமத்தும், உண்மையுமே தந்தையின் சட்டமாகும்.
பாடல்:
எதனைப் பற்றிச் சிந்திக்கும்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் வியப்படைய வேண்டும்?பதில்:
1. இது எவ்வாறு ஓர் எல்லையற்ற, அற்புதமான நாடகமாகவுள்ளது என்பதும், எவ்வாறு விநாடிக்கு விநாடி கடந்து செல்கின்ற முகச்சாயல்களும், செயற்பாடுகளும் மீண்டும் அதேவிதமாக இடம்பெறும் என்பதுமாகும். இருவர் ஒரேமாதிரியான முகச்சாயல்களைக் கொண்டிருக்க முடியாது என்பது அத்தகையதோர் அற்புதமாகும். 2. எவ்வாறு எல்லையற்ற தந்தை வந்து, முழு உலகிற்கும் சற்கதி அருள்கின்றார் என்பதும், எவ்வாறு அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதும் ஓர் அற்புதமேயாகும்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தையான சிவன் இங்கிருந்து, சாலிகிராம்களாகிய, தனது ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர்களுக்கு அவர் எதனை விளங்கப்படுத்துகின்றார்? அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் அனைவரதும், அதாவது, சாலிகிராம்கள் அனைவரினதும் சரீரங்களுக்கெனப் பெயர்கள் உள்ளன. ஒரேயொரு பரமாத்மாவிற்கே சரீரம் இல்லை. அந்தப் பரமாத்மாவின் பெயர் சிவன் என்பதாகும். அவர் பரமாத்மாவான, தூய்மையாக்குபவர் என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் மாத்திரமே முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அனைவரும் தமது பாகங்களை நடிப்பதற்கு இங்கு வருகிறார்கள். விஷ்ணுவில் இரு ரூபங்கள் உள்ளன என்றும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சங்கரருக்குப் பாகம் இல்லை. தந்தை இங்கமர்ந்திருந்து, இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். தந்தை எப்பொழுது வருகிறார்? புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு, பழைய உலகம் அழிக்கப்படவுள்ள பொழுதாகும். புதிய உலகில் ஒரேயொரு ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனை மாத்திரமே இருப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பரமாத்மாவான பரமதந்தையைத் தவிர வேறு எவராலும் இதனைச் செய்ய முடியாது. அவர் மாத்திரமே பரமாத்மா, அவர் கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். அவரின் பெயர் சிவன். அவர் ஒரு சரீரப் பெயரைக் கொண்டிருப்பதில்லை. ஏனைய அனைவரினதும் சரீரங்களுக்கும் ஒரு பெயர் உள்ளது. பிரதானமான அனைவரும் வந்து விட்டதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நாடகச் சக்கரம் தொடர்ந்தும் சுழன்று, இப்பொழுது இறுதியை அடைந்து விட்டது. இறுதியில் மாத்திரமே தந்தை தேவைப்படுகின்றார். மக்கள் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்நேரத்திலேயே மக்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகின்றார்கள், ஏனெனில் உலகம் மாற வேண்டும். காரிருளிலிருந்து பேரொளி ஏற்படுகின்றது, அதாவது, துன்ப உலகம் சந்தோஷ உலகமாக ஆகவேண்டும். பரமாத்மாவான பரமதந்தை சிவன் அதி மங்களகரமான சங்கம யுகத்தில், பழைய உலகை அழித்து, புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு ஒரேயொரு முறையே வருகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முதலில், புதிய உலகின் ஸ்தாபனையும், பின்னர் பழைய உலகின் விநாசமும் இடம்பெறுகின்றன. நீங்கள் கற்று, திறமைசாலிகளாகி, தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அசுர குணங்கள் மாற்றப்பட வேண்டும். உங்கள் அட்டவணையில் நீங்கள் தெய்வீகக் குணங்களையும், அசுர குணங்களையும் விபரிக்க வேண்டும். உங்களைச் சோதியுங்கள்: நான் எவரையாவது தொந்தரவு செய்கின்றேனா? நான் பொய் பேசுகின்றேனா? நான் ஸ்ரீமத்திற்கு மாறாக எதனையாவது செய்கின்றேனா? பொய் பேசுதல், எவருக்கும் துன்பம் விளைவித்தல், எவரையும் தொந்தரவு செய்தல் போன்ற அனைத்தும் இராவணனின் சட்டமாகும். இவை (ஸ்ரீமத்) இராமரது சட்டமாகும். ஸ்ரீமத்தும், அசுர வழிகாட்டல்களும் நினைவுகூரப்பட்டுள்ளன. அரைக் கல்பத்திற்கு, அசுர வழிகாட்டல்கள் உள்ளன, அதன் மூலமே மக்கள் அசுர குணமுடையவர்களாகவும், சந்தோஷம் அற்றவர்களாகவும், நோயாளிகளாகவும் ஆகியுள்ளனர். அப்பொழுதே ஐந்து விகாரங்களும் தோன்றுகின்றன. தந்தை வந்து, உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். ஸ்ரீமத்தினைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் தெய்வீகக் குணங்களைப் பெறுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அசுர குணங்கள் மாற்றப்பட வேண்டும். இன்னமும் அசுர குணங்கள் எஞ்சியிருக்குமாயின், அந்தஸ்து குறைக்கப்படுகின்றது. உங்கள் தலை மீதுள்ள பல பிறவிகளின் பாவச் சுமை உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாகத் தொடர்ந்தும் இலேசாகும். இது இப்பொழுது அதிமங்களகரமான சங்கம யுகம் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் தந்தையிடமிருந்து தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, புதிய உலகின் அதிபதிகள் ஆகுகின்றோம். எனவே, பழைய உலகம் நிச்சயமாக அழியப்போகின்றது என்பதையும், புதிய உலகம் பிரம்மாகுமாரர்கள், குமாரிகளின் மூலம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதையும் இது நிரூபிக்கின்றது. உங்களுக்கு இந்த உறுதியான நம்பிக்கை உள்ளதாலேயே, நீங்கள் சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்தும் எவருக்கேனும் நன்மை செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் சகோதர, சகோதரிகள் எவ்வளவு சேவை செய்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்கின்றீர்கள். தந்தை வந்து விட்டார், எனவே அவர் நிச்சயமாக ஆரம்பத்தில் வெகு சிலரையே சந்தித்திருப்பார். அதன்பின்னர் தொடர்ந்தும் வளர்ச்சி உள்ளது. ஒரு பிரம்மாவின் ஊடாகப் பலர் பிரம்மாகுமார்கள், குமாரிகள் ஆகுகின்றார்கள். பிராமணக் குலம் நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. பிரம்மாகுமாரிகளும், பிரம்மாகுமார்களுமான நீங்கள் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகளே, அதாவது, நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை அறிவீர்கள். ஆதியில் நீங்கள் சகோதரர்களாக மாத்திரமே இருக்கின்றீர்கள். பின்னர் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆகும்பொழுது, நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றீர்கள். அதன்பின்னர் தேவ குலத்தினுள் செல்லும்பொழுது, உறவுமுறைகள் தொடர்ந்தும் வளரும். இந்நேரத்தில் நீங்கள் பிரம்மாவின் புத்திரர்களும், புத்திரிகளும் என்பதால், ஒரேயொரு குலமே உள்ளது. அதனை ஒரு வம்சம் என்று அழைக்க முடியாது. கௌரவர்களின் இராச்சியமோ அல்லது பாண்டவர்களின் இராச்சியமோ இல்லை. அரசர்களும், அரசிகளும் வரிசைக்கிரமமாகச் சிம்மாசனத்தில் அமரும்பொழுது, ஒரு வம்சம் தோன்றுகின்றது. இப்பொழுது மக்களே மக்களை ஆட்சி செய்கின்றார்கள். ஆரம்பத்திலிருந்தே, தூயதும், தூய்மையற்றதுமான வம்சங்கள் இருந்துள்ளன. தேவர்களுடையது மாத்திரமே தூய வம்சமாக இருந்தது. அது 5000 வருடங்களுக்கு முன்னர் சுவர்க்கமாகியது என்பதையும், அது தூய வம்சமாகவும் இருந்தது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர்களின் விக்கிரகங்களும் உள்ளன. பல அழகிய ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. வேறு எவருக்கும் இந்தளவிற்கு ஆலயங்கள் இல்லை. அந்தத் தேவர்களுக்கு மாத்திரம் பல ஆலயங்கள் உள்ளன. குழந்தைகள் அனைவரதும் சரீரங்களிற்கான பெயர்கள் அனைத்தும் மாறுகின்றன என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சிவன் என்ற அவரது பெயர் மாத்திரமே தொடர்ந்துள்ளது. கடவுள் சிவன் பேசுகின்றார்: எந்தச் சரீரதாரியையும் கடவுள் என்று அழைக்க முடியாது. தந்தையைத் தவிர, வேறு எவராலும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க முடியாது. ஏனெனில் அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. இங்கும், தந்தையை எவ்வாறு நினைவுசெய்வது என்பதைப் பலரின் புத்தியால் கிரகிக்க முடியாதுள்ளது; அவர்கள் குழப்பம் அடைகின்றார்கள். அத்தகைய சின்னஞ்சிறிய புள்ளியை நாங்கள் எவ்வாறு நினைவுசெய்வது? சரீரம் பெரியது. நீங்கள் அதனைத் தொடர்ந்தும் நினைவுசெய்கின்றீர்கள். நெற்றியின் மத்தியில் ஒரு நட்சத்திரம் பிரகாசிக்கின்றது என்றும் நினைவுகூரப்படுகின்றது, அதாவது, ஓர் ஆத்மா நட்சத்திரம் போன்றவர். ஓர் ஆத்மா சாலிகிராம் என அழைக்கப்படுகின்றார். பெரிய சிவலிங்க வடிவமே வழிபாடு செய்யப்படுகின்றது. ஆத்மாவைப் பார்க்க முடியாததைப் போன்று, சிவபாபாவையும் எவராலும் பார்க்க முடியாது. பக்தி மார்க்கத்தில், ஒரு புள்ளியை எவ்வாறு வழிபாடு செய்ய முடியும்? ஏனெனில் முதலில் சிவபாபாவின் கலப்படமற்ற வழிபாடு நடைபெற்றது. எனவே வழிபடுவதற்கு நிச்சயமாகப் பெரிதான ஒன்றே தேவைப்படுகின்றது. அவர்கள் முட்டை வடிவமுடைய, பெரிய சாலிகிராம்களையும் செய்கின்றார்கள். ஒருபுறம் அவர்கள் ஆத்மாக்கள் பெருவிரல் வடிவமானவர்கள் என்றும், மறுபுறம் ஆத்மாக்கள் நட்சத்திரங்கள் என்றும் கூறுகின்றார்கள். இப்பொழுது நீங்கள் ஒரு விடயத்திலே கவனம் செலுத்த வேண்டும். அரைக் கல்பத்திற்கு நீங்கள் பெரியதொரு வடிவத்தையே வழிபட்டு வந்தீர்கள். எனவே ஆத்மாவை ஒரு புள்ளி எனக் கருதுவதற்கு இப்பொழுது உங்களுக்கு முயற்சி தேவை. அதை உங்களால் பார்க்கவேனும் முடியாது. ஆத்மாவைப் புத்தியால் அறிந்துகொள்ள முடியும். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தில் பிரவேசித்து, பின்னர் அச்சரீரத்தை நீக்குகின்றார், ஆனால் அதனை எவராலும் பார்க்க முடியாது. அது (ஆத்மா) பெரிதான ஒன்றாக இருந்திருந்தால் அதனை மக்களால் பார்க்கக்கூடியதாக இருந்திருக்கும். தந்தையும் ஒரு புள்ளியே. ஆனால் அவர் ஞானக் கடல். வேறு எவரையும் ஞானக் கடல் என்று அழைக்க முடியாது. சமயநூல்கள் பக்தி மார்க்கத்திற்குரியவை. அந்த வேதங்கள், சமயநூல்கள் அனைத்தையும் எழுதியவர் யார்? அதனை வியாசர் எழுதியதாக அவர்கள் கூறுகின்றார்கள். கிறிஸ்துவின் ஆத்மா ஒரு சமயநூலையும் எழுதவில்லை. பின்னர், மக்களே அதனை அமர்ந்திருந்து, எழுதினார்கள். அவர்களுக்கு இந்த ஞானம் எதுவுமே இல்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக் கடல். சமயநூல்களில் இந்த ஞானத்தைப் பற்றியோ அல்லது சற்கதியைப் பற்றியோ குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு சமயத்தினரும் தத்தமது சொந்தச் சமய ஸ்தாபகர்களை நினைவு செய்கின்றார்கள். அவர்கள் சரீரதாரிகளையே நினைவுசெய்கின்றார்கள். கிறிஸ்துவிற்கும் ஓர் உருவம் உள்ளது. அனைவரினதும் உருவங்கள் உள்ளன. சிவபாபாவே பரமாத்மா. ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். எவருக்கும் ஞானத்தைக் கொடுத்து, சற்கதி அருள்வதற்குரிய இந்த ஞானம் சகோதரர்களிடம் இல்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். இந்நேரத்தில் சகோதரர்களும், தந்தையும் உள்ளார்கள். உலகில் உள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை வந்து, சற்கதி அருள்கின்றார். ஒரேயொருவரே உலகிற்குச் சற்கதி அருள்பவர். நீங்கள் ‘ஸ்ரீ ஸ்ரீ 108 ஜெகத்குரு’ அல்லது ‘உலகக் குரு’ என்று எவ்வாறு கூறினாலும், அது ஒன்றே. இப்பொழுது இது அசுர இராச்சியமாகும். தந்தை சங்கம யுகத்தில் வந்து, இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உண்மையிலேயே இப்பொழுது புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதும், பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஒரேயொரு அசரீரியான தந்தை மட்டுமே தூய்மையாக்குபவர் என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எந்தச் சரீரதாரியும் தூய்மையாக்குபவராக இருக்க முடியாது. பரமாத்மா மாத்திரமே தூய்மையாக்குவர். சீதையும் இராமரும் தூய்மையாக்குபவர்கள் என்று கூறப்பட்டபொழுதிலும், கடவுள் உங்களது பக்திக்கான பலனை உங்களுக்குக் கொடுப்பதற்கு வருகின்றார் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். எனவே சீதைகள் அனைவரும் மணவாட்டிகளும், ஒரேயொரு இராமரே அனைவருக்கும் சற்கதி அருள்கின்ற, மணவாளனும் ஆவார். தந்தை மாத்திரமே இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். நாடகத்திற்கேற்ப, இவ்விடயங்களை நீங்கள் 5000 வருடங்களின் பின்னரும் மீண்டும் செவிமடுப்பீர்கள். நீங்கள் அனைவரும் இப்பொழுது கற்கின்றீர்கள். பலர் பாடசாலையில் கற்கின்றார்கள். இவை அனைத்தும் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டுள்ள நாடகத்தில் உள்ளது. நீங்கள் எந்த நேரத்தில் எதனைக் கற்றாலும், என்ன செயல்பாடு இடம்பெற்றாலும், ஒரு கல்பத்தின் பின்னர், அதே செயற்பாடு மீண்டும் அவ்வாறே இடம்பெறும். நீங்கள் 5000 வருடங்களின் பின்னரும் இதேபோன்று கற்பீர்கள். இந்த அநாதியான நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு விநாடி நீங்கள் எதனைப் பார்த்தாலும், அது புதியதைப் போன்றே தோன்றும். சக்கரம் தொடர்ந்தும் சுழலும். நீங்கள் தொடர்ந்தும் புதிய விடயங்களைக் காண்பீர்கள். இது தொடர்ந்தும் சுழல்கின்ற, 5000 வருடங்களுக்குரிய ஒரு நாடகம் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். அதில் அதிகளவு விபரங்கள் உள்ளன. ஆனால் பிரதான விடயங்கள் மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, மக்கள் கடவுளைச் சர்வவியாபி என்று கூறுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் சர்வவியாபி அல்ல. தந்தை வந்து, உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் அறிமுகத்தையும் கொடுக்கின்றார். தந்தை எங்கள் ஆஸ்தியை எங்களுக்குக் கொடுப்பதற்காக ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். பிரம்மா மூலம் படைப்பு இடம்பெற்றதும் நினைவுகூரப்பட்டுள்ளது. இதன் விளக்கம் மிகவும் சிறந்தது. பலவகை ரூபத்திற்கு நிச்சயமாக ஓர் அர்த்தம் இருக்கும். எவ்வாறாயினும், என்றுமே தந்தையைத் தவிர, வேறு எவரும் அவற்றை விளங்கப்படுத்தவில்லை. பல ரூபங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றின் விளக்கத்தைக் கூட எவரும் அறியார். சிவபாபாவே அதிமேலானவர். அவருக்கான ரூபமும் உள்ளது, ஆனால் அதனை எவரும் அறியார். சரி. அதன்பின்னர் சூட்சும உலகமும் உள்ளது. அதனையும் கூட நீங்கள் ஒருபுறம் ஒதுக்கலாம்; அதற்கான அவசியம் இல்லை. இவ்விடத்தின் வரலாறும், புவியியலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மற்றையது காட்சி என்ற விடயம். தந்தை இவருக்குள் இங்கு அமர்ந்திருப்பதைப் போன்று, சூட்சும உலகில், அவர் (இவரின்) கர்மாதீத சரீரத்தில் அமர்ந்திருந்து, இவரைச் சந்தித்து, இவருடன் பேசுகின்றார். எவ்வாறாயினும், அங்கு உலகின் வரலாறும், புவியியலும் இருப்பதில்லை. வரலாறும் புவியியலும் இவ்விடத்திற்கே உரியன. சத்திய யுகத்தில் தேவர்கள் இருந்தார்கள் என்பதும், அது 5000 வருடங்களுக்கு முன்னர் என்பதும் குழந்தைகளின் புத்தியில் பதிந்துள்ளன. இந்த ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது என்பதைக் கூட எவரும் அறியார். ஏனைய சமயங்கள் அனைத்தினதும் ஸ்தாபனையைப் பற்றி அனைவரும் அறிந்துள்ளார்கள். அவர்களுக்கான (சமய) புத்தகங்கள் போன்றனவும் உள்ளன. அது நூறாயிரம் ஆண்டுகளுக்கான விடயமாக இருக்க முடியாது. அது முற்றிலும் தவறானது. ஆனால் மக்களின் புத்தி முற்றிலும் செயற்படுவதேயில்லை. தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, அனைத்தையும் மிகவும் நன்றாகக் கிரகியுங்கள். பிரதான விடயம் தந்தையை நினைவுசெய்வதாகும். இது நினைவு என்ற ஓட்டப் பந்தயம். அவர்கள் ஓட்டப் பந்தயங்களை நடாத்துகின்றார்கள். சிலர் தாமாகவே ஓடுகின்றார்கள். சிலர் மூன்று கால் ஓட்டப் பந்தயத்தில் ஓடுகின்றார்கள். இங்கு தம்பதிகளாக இருப்பவர்கள் தம்பதியராகச் சேர்ந்து ஓடப் பயிற்சி செய்கின்றார்கள். சத்திய யுகத்தில் தங்களுக்கு இதே சரீரங்கள் கிடைக்காமையினால் தமது பெயர்களும், ரூபங்களும் மாறினாலும் கூட, அங்கும் தாங்கள் தம்பதியராகவே இருப்பார்கள் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். சரீரங்கள் தொடர்ந்தும் மாறுகின்றன. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். முகச்சாயல்கள் வேறானவையாக இருக்கும். எவ்வாறாயினும், விநாடிக்கு விநாடிக்கு கடந்து சென்ற முகச்சாயல்கள், செயற்பாடுகள் அனைத்தும் எவ்வாறு 5000 வருடங்களின் பின்னரும் மீண்டும் அதேபோல் இடம்பெறுகின்றன என்பதையிட்டுக் குழந்தைகள் வியப்படைய வேண்டும். இந்த நாடகம் மிகவும் அற்புதமானது! வேறெவராலும் இதனை விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் அனைவருமே முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். அனைவரும் வரிசைக்கிரமமாக இருப்பார்கள்; அனைவருமே கிருஷ்ணராக மாட்டார்கள். அனைவரினதும் முகச்சாயல்கள் வெவ்வேறானவை. இது அத்தகையதோர் அற்புதமான நாடகம்! இருவர் ஒரே முகச்சாயல்களைக் கொண்டிருக்க முடியாது. அதே நாடகமே மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றது. நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் சிந்தித்துக் கொண்டிருந்தால், எவ்வாறு எல்லையற்ற தந்தை வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையிட்டு வியப்படைவீர்கள். நாங்கள் பிறவிபிறவியாக, பக்தி மார்க்கத்தில் சமயநூல்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டிருந்தோம். நாங்கள் சாதுக்கள் போன்றோரிடமிருந்து சமயக் கதைகளையும் செவிமடுத்து வந்தோம். தந்தை கூறுகின்றார்: பக்திக்கான காலம் இப்பொழுது முடிவடைந்து விட்டது. பக்தர்கள் இப்பொழுது தங்கள் பக்திக்கான பலனைக் கடவுளிடமிருந்து பெற உள்ளனர். கடவுள் எப்பொழுது, எந்த வடிவில் வருவார் என்பதை அவர்கள் அறியாதுள்ளார்கள். சிலவேளையில் தாம் சமயநூல்களை வாசிப்பதன் மூலம் கடவுளைக் காண்பார்கள் எனவும், சிலவேளைகளில் கடவுள் இங்கு வருவார் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். சமயநூல்களைக் கற்பதன் மூலம் அனைத்தையும் நிறைவேற்ற முடியுமாயின், தந்தை வரவேண்டிய அவசியம் என்ன? சமயநூல்களை வாசிப்பதன் மூலம் கடவுளைக் கண்டடைய முடியுமாயின், கடவுள் வந்து என்ன செய்வார்? நீங்கள் அரைக் கல்பத்திற்கு அந்தச் சமயநூல்களைக் கற்று, தொடர்ந்தும் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். எனவே, உலகச் சக்கரமும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் செயற்பாடுகள் தெய்வீகமாக இருக்க வேண்டும். முதலில், எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். எவருக்காவது நஞ்சு தேவைப்படும்பொழுது, அதனை நீங்கள் கொடுக்காதிருந்தால் நீங்கள் அவருக்குத் துன்பம் விளைவிக்கின்றீர்கள் என்றல்ல. தந்தை அவ்வாறான அர்த்தத்துடன் அதைக் கூறவில்லை. சில முட்டாள்கள் (புத்துக்கள்) கூறுகின்றார்கள்: நாங்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடாது என்று பாபா கூறுவதால், ஒருவர் நஞ்சைக் கேட்டால் நான் அவருக்கு அதனைக் கொடுக்க வேண்டும், இல்லையேல் அதுவும் நாம் பிறருக்குத் துன்பம் விளைவிப்பதாகும், அல்லவா? இவ்வாறாக நினைக்கின்ற முட்டாள் புத்தியுடையோரும் உள்ளனர். தந்தை கூறுகின்றார்: நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தெய்வீகச் செயற்பாடுகள், அசுரச் செயற்பாடுகள் போன்றவற்றின் புரிந்துணர்வு இருக்க வேண்டும். அவர்கள் இதனைக் கூட புரிந்துகொள்ளாமல், ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை என்று கூறுகின்றார்கள். எனவே, நீங்கள் எதனைச் செய்தாலும், எதனை உண்டாலும், எதனைப் பருகினாலும், விகாரத்தில் ஈடுபட்டாலும் பரவாயில்லை என்று கூறுகின்றார்கள். இவ்வாறு கற்பிப்பவர்களும் உள்ளார்கள். அவர்கள் அவ்வாறாகப் பலரைத் தம்வசப்படுத்தி உள்ளார்கள். வெளியில், பலரும் சைவ உணவு உண்பவர்களாக இருக்கின்றார்கள். அது நிச்சயமாக நல்லது, இதனாலேயே அவர்கள் சைவ உணவை உட்கொள்பவர்கள் ஆகுகின்றார்கள். சகல சாதியினருள்ளும் வைஷ்ணவர்கள் உள்ளனர்; அவர்கள் அழுக்கான எதனையுமே உண்பதில்லை. அவ்வாறானவர்கள் சிறுபான்மையாகவே உள்ளனர். நீங்களும் அந்தச் சிறுபான்மையில் உள்ளடக்கப்படுகின்றீர்கள்; இந்நேரத்தில் உங்களில் மிகச்சிலரே உள்ளீர்கள். நாளடைவில், தொடர்ந்தும் வளர்ச்சி இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் ‘தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்’ என்ற கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள்: நீங்கள் வேறு எவராலும் தயாரிக்கப்பட்ட தூய்மையற்ற எதனையும் உண்ணக்கூடாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் அட்டவணையைப் பாருங்கள்: 1. நான் ஸ்ரீமத்திற்கு எதிராக எதையாவது செய்கின்றேனா? 2. நான் பொய் பேசுகின்றேனா? 3. நான் எவரையாவது தொந்தரவு செய்கின்றேனா? நான் தெய்வீகக் குணங்களைக் கிரகித்துள்ளேனா?2. கற்பதுடன், தெய்வீக நடத்தையையும் கிரகியுங்கள். நிச்சயமாகத் தூய்மையாகுங்கள். தூய்மையற்ற எதனையும் உண்ணாதீர்கள். முழுமையான வைஷ்ணவர் ஆகுங்கள். ஓட்டப் பந்தயத்தில் விரைந்தோடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப, உங்கள் புத்தியை வெறுமையாக வைத்திருப்பதால், வீணான மற்றும் விகாரமான கனவுகளிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுவீர்களாக.தந்தையின் அறிவுறுத்தல்கள்: உறங்கச் செல்கின்ற வேளையில் உங்கள் புத்தியைத் தெளிவாக்குங்கள். நல்லதோ, தீயதோ, அதிலிருந்து உங்கள் புத்தியை வெறுமையாக்கி, அதனைத் தந்தையிடம் கையளியுங்கள். தந்தையிடம் அனைத்தையும் கையளித்த பின்னர் தந்தையுடன் உறங்கச் செல்லுங்கள், தனியே உறங்காதீர்கள். நீங்கள் தனியே உறங்கச் செல்லும்பொழுது அல்லது வீண் விடயங்களைப் பற்றிப் பேசிய பின்னர் உறங்கச் செல்லும்பொழுது, உங்களுக்கு வீணான அல்லது விகாரமான கனவுகள் வருகின்றன. இதுவும் கவனயீனமே ஆகும். இந்தக் கவனயீனத்தைக் கைவிட்டு, தந்தையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள், அப்பொழுது நீங்கள் வீணான மற்றும் விகாரமான கனவுகளிலிருந்து விடுபட்டிருப்பீர்கள்.
சுலோகம்:
பாக்கியசாலி ஆத்மாக்களால் மட்டுமே உண்மையான சேவையைச் செய்வதன் மூலம் ஆசீர்வாதங்களைப் பெற இயலுகின்றது.