03.10.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே இப்பொழுது சுவாலையில் அர்ப்பணிக்கின்ற உண்மையான விட்டிற்பூச்சிகள். இந்த அர்ப்பணத்தின் ஞாபகார்த்தமே தீபாவளி.
கேள்வி:
பாபா தனது குழந்தைகளுக்கு என்ன செய்தியைக் கூறுகிறார்?பதில்:
ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறு நிர்வாணா தாமத்திலிருந்து கீழே வருகிறீர்கள் என்றும், தான் எவ்வாறு கீழிறங்கி வருகின்றார் என்றும் பாபா உங்களுக்குக் கூறுகின்றார். அவர் கூறுகிறார்: நான் யார், நான் என்ன செய்கிறேன், நான் இராம இராச்சியத்தை எவ்வாறு ஸ்தாபிக்கிறேன், அத்துடன் நான் எவ்வாறு இராவணனை வெற்றி கொள்வதற்குக் குழந்தைகளாகிய உங்களைத் தூண்டுகிறேன் என உங்களுக்குக் கூறுகிறேன். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இந்த அனைத்து விடயங்களையும் புரிந்து கொள்கிறீர்கள், உங்களது ஒளி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.பாடல்:
நீங்களே தாயும் நீங்களே தந்தையும.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய புலனங்கங்களினூடாகப் பாடலைக் கேட்டீர்கள். இப்பாடல் சரியாகவே ஆரம்பிக்கிறது. இறுதியில், “நான் உங்களின் கால் தூசாக இருக்கிறேன்” என்ற பக்தி மார்க்கத்தின் வார்த்தைகள் இருக்கின்றன. இப்பொழுது குழந்தைகள் எவரது கால் தூசாகவும் இருக்க முடியாது. அது தவறானது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சரியான வார்த்தைகளைக் கூறுகிறார். குழந்தைகள் வருகின்ற அதே இடத்திலிருந்தே தந்தையும் வருகின்றார்; அது சத்தத்திற்கு அப்பாற்பட்ட உலகமாகும் (நிர்வாணா தாமம்). அனைவரும் எவ்வாறு வருகின்றனர் என்ற செய்தியை பாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறியிருக்கின்றார். அவர் தான் எவ்வாறு வருகின்றார் என்றும், வந்து என்ன செய்கின்றார் என்றும் உங்களுக்குக் கூறியிருக்கின்றார். அவர் இராம இராச்சியத்தை ஸ்தாபிக்கும் பொருட்டு, இராவணனை வெற்றி கொள்வதற்கு உங்களைத் தூண்டுகிறார். இராம இராச்சியமும், இராவண இராச்சியமும் இந்தப் பூமியிலேயே இருப்பதாகக் கூறப்படுகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஆகாயம், பூமி, சூரியன் அனைத்தும் உங்கள் கரங்களிலேயே இருக்கும். ஆகவே, இராம இராச்சியம் முழு உலகிலும் உள்ளது எனவும், இராவண இராச்சியமும் முழு உலகிலும் இருக்கிறது எனவும் கூறலாம். இராவண இராச்சியத்தில் பில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். இராம இராச்சியத்தில் வெகு சிலரே இருக்கின்றனர்; பின்னர் படிப்படியாக, சனத்தொகை அதிகரிக்கிறது. இராவண இராச்சியத்தில் சனத்தொகை பாரிய அளவில் அதிகரிக்கிறது, ஏனெனில் மனிதர்கள் விகாரம் நிறைந்தவர்கள். இராம இராச்சியத்தில், அவர்கள் விகாரம் அற்றவர்களாக இருக்கின்றனர். இது மனிதர்களைப் பற்றிய ஒரு கதை. இராமர் எல்லையற்றதன் அதிபதி, இராவணனும் எல்லையற்றதன் அதிபதி. இப்பொழுது எண்ணற்ற சமயங்கள் உள்ளன. “எண்ணற்ற சமயங்களின் அழிவு” எனக் கூறப்படுகிறது. பாபா விருட்சத்தின் படத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்தி இருக்கின்றார். மக்கள் தஷேராவைக் கொண்டாடும் பொழுது, அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர். அது எல்லைக்கு உட்பட்ட எரித்தலாகும். உங்கள் விடயம் எல்லையற்றது. பாரத மக்களே இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர். வெளிநாடுகளிலும், எங்கெல்லாம் பாரத மக்கள் பலர் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர். அது எல்லைக்கு உட்பட்ட தஷேராவாகும். அவர்கள் இராவண இராச்சியம் இலங்கையில் இருப்பதாகச் சித்தரித்துள்ளனர். சீதையை அவன் கவர்ந்து, இலங்கைக்குக் கொண்டு சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். அது எல்லைக்கு உட்பட்ட விடயம். தந்தை கூறுகிறார்: இராவணனின் இராச்சியம் முழு உலகிலும் இருக்கிறது. இராமரின் இராச்சியம் இப்பொழுது இல்லை. இராம இராச்சியம் என்றால் கடவுளால் ஸ்தாபிக்கப்பட்ட இராச்சியம். சத்திய யுகமே இராம இராச்சியம் என அழைக்கப்படுகிறது. இராம நாமத்தை உச்சரித்தவாறு மக்கள் மாலையை உருட்டுகின்றனர், ஆனால் அவர்கள் அந்நேரத்தில் அரசனான இராமரை நினைவு செய்வதில்லை; அவர்கள் முழு உலகிற்கும் சேவை செய்கின்ற, ஒரேயொருவரின் மாலையின் மணிகளையே உருட்டுகின்றனர். தசேராவிற்குப் பின்னர், மக்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். ஏன் அவர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்? ஏனெனில் அதுவே தேவர்கள் முடிசூட்டும் விழாவாகும். முடிசூடும் விழாவின்போது, அவர்கள் பல விளக்குகளை ஏற்றுகின்றனர். முதலில் முடிசூடுதல் இருக்கிறது. இரண்டாவதாக அனைத்து வீடுகளிலும் தீபமாலை இருக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். அந்நேரத்தில் ஆத்மாக்கள் அனைவரினதும் ஒளியும் ஏற்றப்படுகிறது. இப்பொழுது ஆத்மாக்கள் அனைவரினதும் ஒளியும் அணைந்து விட்டது. அவர்கள் கலியுகத்தவர்கள். அதாவது, அவர்கள் அனைவரும் இருளில் உள்ளனர். இருள் என்றால் பக்தி மார்க்கம் என்று அர்த்தம். பக்தி செய்து கொண்டிருக்கும்போது, அவர்களது ஒளி குறைவடைந்து விட்டது. அந்தத் தீபமாலை செயற்கையானது. முடிசூடும் விழா என்பதனால், அவர்கள் வாண வேடிக்கைகள் போன்றவற்றைச் செய்கிறார்கள் என்றில்லை. அவர்கள் தீபாவளி நேரத்தில் இலக்ஷ்மியை வரவழைத்து, வணங்குகின்றனர். அந்தப் பண்டிகை பக்தி மார்க்கத்திற்கு உரியது. அவர்கள் சிம்மாசனத்தில் அமர்கின்ற, அரசனது முடிசூடும் நாளை பெரும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். அவை அனைத்தும் எல்லைக்கு உட்பட்டவை. இப்பொழுது உண்மையான தசேராவான, எல்லையற்ற விநாசம் இடம்பெற இருக்கின்றது. தந்தை அனைவரது ஒளிகளையும் ஏற்றவே வந்து விட்டார். தங்களது ஒளிகள் பேரொளியுடன் கலந்து விடுமென மக்கள் எண்ணுகின்றனர். பிரம்ம சமாஜியைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆலயங்களில் சதா ஒரு விளக்கினை ஏற்றி வைத்திருக்கின்றனர். ஒரு விட்டில் பூச்சி எவ்வாறு சுவாலையைச் சுற்றி வந்து, தன்னை அதில் அர்ப்பணிக்கிறதோ, அதேபோன்று, ஆத்மாக்களும் பேரொளியுடன் இரண்டறக் கலந்து விடுவதாக அவர்கள் நம்புகின்றனர். அதன் உதாரணமும் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் அரைச் சக்கரமாக அவருடைய காதலிகளாகவே இருந்தீர்கள். நீங்கள் வந்து, இப்பொழுது ஒரேயொரு அன்பிற்கினியவரிடம் உங்களை அர்ப்பணித்து விட்டீர்கள். இது எரிந்து விடுவதற்கான ஒரு விடயமல்ல. அந்தக் காதலர்கள் ஒருவரை ஒருவர் மட்டுமே நேசிக்கின்றனர். ஆனால் இங்கு ஒரேயொருவரே அன்பிற்கினியவர், ஏனைய அனைவரும் அவருடைய காதலிகள். பக்தி மார்க்கத்தில், அவரது காதலிகள் அனைவரும் அந்த அன்பிற்கினையவரையே நினைவு செய்கின்றனர். அவர்கள் தம்மை அர்ப்பணிப்பதற்காக அந்த அன்பிற்கினியவரை வருமாறு அழைக்கின்றனர். நாங்கள் எவரையும் அன்றி, உங்களை மட்டுமே நினைவு செய்வோம் என அவர்கள் கூறுகின்றனர்; அது பௌதீக அன்பல்ல. அந்தக் காதலர்களுக்குப் பௌதீக அன்பே இருக்கின்றது. அவர்கள் தொடர்ந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதால், மிகவும் திருப்தி அடைகின்றனர். இங்கு, ஒரேயொருவரே அன்பிற்கினியவர், ஏனைய அனைவரும் காதலிகள். அனைவரும் தந்தையையே நினைவு செய்கின்றனர். சிலர் இயற்கை போன்றவற்றை நம்புகின்ற போதும், ‘ஓ கடவுளே’ என்ற வார்த்தைகள் இன்னமும் அவர்களது உதட்டிலிருந்து வெளிவருகின்றன. அனைவரும் அவரை அழைக்கின்றனர்: “எங்கள் துன்பத்தை அகற்றுங்கள்!” பக்தி மார்க்கத்தில், பல காதலிகளும், அன்பிற்கினியவர்கள் பலரும் இருக்கிறார்கள்; சிலர் ஒருவருடைய காதலிகளாகவும், மற்றவர்கள் வேறு ஒருவருடைய காதலிகளாகவும் உள்ளனர். அனுமனுக்கு எத்தனை காதலிகள் இருக்கிறார்கள்? அவர்கள் அனைவரும் அவர்களுடைய அன்பிற்கினியவரின் படத்தை உருவாக்கி, பின்னர் ஒன்றாக அமர்ந்திருந்து வழிபடுகிறார்கள். அவர்கள் வழிபட்ட பின்னர், தங்களுடைய அன்பிற்கினியவரை கடலிலே மூழ்கடித்து விடுகிறார்கள். இதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. இது போன்ற எதுவும் இங்கு இருக்க மாட்டாது. இங்கு உங்களுடைய அன்பிற்கினியவர் என்றென்றும் அழகானவர்; அவர் என்றுமே அவலட்சணம் ஆகுவதில்லை. அழகிய பயணியாகிய தந்தை வந்து, உங்கள் அனைவரையும் அழகானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் அனைவரும கூட பயணிகள். நீங்கள் உங்களுடைய பாகங்களை நடிப்பதற்கு, மிகவும் தொலைதூர தேசத்திலிருந்து இங்கு வருகின்றீர்கள். புரிந்து கொள்கின்ற நீங்களும் உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாகவே புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது திரிகாலதரிசிகள் (முக்காலங்களையும் அறிந்தவர்கள்) ஆகி விட்டீர்கள். படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி இறுதியையும் நீங்கள் அறிவீர்கள். ஆகவே, நீங்கள் திரிகாலதரிசி பிரம்மாகுமார்கள், குமாரிகளாகி விட்டீர்கள். அந்த மக்கள் “ஜெகத்குரு” என்ற பட்டத்தைப் பெறுவதைப் போன்றே, இந்தப் பட்டத்தை நீங்கள் பெறுகிறீர்கள். “சுயதரிசனச் சக்கரதாரி” என்பதே நீங்கள் பெறுகின்ற சிறந்த பட்டமாகும். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே சுயதரிசனச் சக்கரதாரிகளா அல்லது சிவபாபாவும் சுயதரிசனச் சக்கரதாரியா? (சிவபாபாவும் அப்படியே). ஆம், ஓர் ஆத்மா சரீரத்தில் இருக்கின்ற காரணத்தினால், சுயதரிசனச் சக்கரதாரி என்று அழைக்கப்படுகின்றார். தந்தை இவருக்குள் பிரவேசித்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சிவபாபா சுயதரிசனச் சக்கரதாரியாக இல்லா விட்டால், எப்படி அவரால் உங்களை அவ்வாறு ஆக்கமுடியும்? அவர் அதிமேன்மையான ஆத்மாவாகிய, பரமன் ஆவார். சரீரத்தைப் பற்றி இவ்வாறு கூறப்படவில்லை. பரம தந்தை வந்து, உங்களையும் பரமர் ஆக்குகிறார். ஆத்மாக்களாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் சுயதரிசனச் சக்கரதாரிகளாக முடியாது. எந்த ஆத்மாக்களால்? பிராமண தர்மத்திற்குரிய ஆத்மாக்களால் ஆகும். நீங்கள் சூத்திர தர்மத்திற்கு உரியவர்களாக இருக்கும்போது, இதனை அறிந்து கொள்ளவில்லை. இப்பொழுது மாத்திரமே நீங்கள் தந்தையின் மூலம் இதனை அறிந்து கொள்கின்றீர்கள். இவை அத்தகைய நல்ல விடயங்கள். நீங்களே இவற்றைச் செவிமடுத்துச் சந்தோஷமானவர்கள் ஆகுகின்றீர்கள். வெளியில் இருப்பவர்கள் இவற்றைச் செவிமடுக்கும்போது, ஆச்சரியப்படுவார்கள். ஓ! இந்த ஞானம் மிக மேன்மையானது. அச்சா, அவர்களும் சுயதரிசனச் சக்கரதாரிகளாகி, உலக அதிபதிகளான, பூகோளத்தை ஆட்சிபுரிபவர்களாகவும் ஆகமுடியும். எவ்வாறாயினும் சிலர் இங்கிருந்து சென்றதும், அனைத்தும் முடிவடைந்து விடுகிறது. மாயை மிகவும் தைரியசாலி. இங்கே அவர்கள் கேட்ட அனைத்தையும் இங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர். இது கருப்பையில் இருக்கின்ற ஒரு குழந்தை சத்தியம் செய்வதைப் போன்றது. அவர் வெளியில் வந்ததும், அந்தச் சத்தியத்தை மறந்து விடுகின்றார். நீங்கள் கண்காட்சிகளில் மக்களுக்கு விளங்கப்படுத்தும்போது, “இது மிக நல்லது, இது மிக நல்லது” என அவர்கள் கூறுகின்றனர். இந்த ஞானம் மிக நல்லது என்றும், அவர்களும் அத்தகைய முயற்சியைச் செய்வார்கள் எனவும், அதையும் இதையும் செய்வர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்கள் சென்றதும் அனைத்தும் (இங்கு) விட்டு விடப்படுகிறது. அவர்கள் அதனால் சிறிதளவே தாக்கப்படுகின்றனர்: அவர்கள் உங்களிடம் மீண்டும் வர மாட்டார்கள் என்பதல்ல. விருட்சம் தொடர்ந்தும் வளரும். பின்னர் விருட்சம் வளர்ந்ததும், அனைவரும் ஈர்க்கப்படுவார்கள். இது இப்பொழுது ஆழ் நரகமாகும். அவர்கள் கருட புராணத்தில் அத்தகைய பயங்கரமான கதைகளை எழுதி இருக்கின்றார்கள். மனிதர்களைச் சிறிது பயப்படுத்துவதற்காக அவர்கள் இதனைக் கூறுகின்றனர். அதிலிருந்தே அவர்கள் மனிதர்களும் பாம்புகளாகவும், தேள்களாகவும் ஆகுவார்கள் என்ற எண்ணக் கருத்தை எடுத்துக் கொண்டார்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களை இந்த நச்சுக் கடலிலிருந்து அகற்றி, அந்தப் பாற்கடலுக்கு அனுப்புகிறேன். ஆரம்பத்தில் நீங்கள் அமைதி தாமத்தில் வசித்தீர்கள். பின்னர் நீங்கள் உங்களுடைய பாகங்களை நடிப்பதற்காக அந்தச் சந்தோஷ தாமத்திற்குச் சென்றீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் அமைதி தாமத்திற்கும், அந்தச் சந்தோஷ தாமத்திற்கும் செல்கிறீர்கள். நீங்கள் இத்தாமங்களை நினைவு செய்கிறீர்கள். “நீங்களே தாயும் தந்தையும், உங்களிடம் இருந்தே நாங்கள் பெருஞ் சந்தோஷத்தைப் பெறுகின்றோம்” என மக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் அந்தச் சந்தோஷம் சத்திய யுகத்திலேயே இருக்கிறது. இப்பொழுது சங்கம யுகமாகும். இறுதியில் இங்கு மக்கள் அதிகளவு விரக்தியினால் கூக்குரலிடுவார்கள். ஏனெனில் அப்பொழுது அதிகூடியளவு துன்பம் இருக்கிறது. பின்னர் சத்திய யுகத்தில் அதிகூடியளவு சந்தோஷம் இருக்கிறது. இது அதிகூடியளவு சந்தோஷத்தையும், அதிகூடியளவு துன்பத்தையும் பற்றிய நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். அவர்கள் விஷ்ணு அவதாரத்தையும் காட்டுகின்றார்கள். அவர்கள் இலக்ஷ்மி நாராயணன் தம்பதி மேலிருந்து கீழிறங்கி வருவதாகக் காட்டுகின்றனர். எவ்வாறாயினும், அந்தச் சரீரதாரிகள் மேலிருந்து வருவார்கள் என்றில்லை. ஒவ்வோர் ஆத்மாவும் மேலிருந்து வருகிறார், ஆனால் கடவுளின் அவதாரம் தனித்துவமானது. அவரே வந்து, பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறார். மக்கள் அவரது பிறந்த தின விழாவாகிய, சிவ ஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர். ஆஸ்தியாகிய முக்தியையும், ஜீவன்முக்தியைம் அருள்பவர் பரம தந்தையாகிய பரமாத்மா சிவனே என்பதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பின், தந்தையாகிய கடவுளின் விழாவை முழு உலகிலும் கொண்டாடியிருப்பார்கள். சிவபாபாவே விடுதலை அளிப்பவரும் வழிகாட்டியும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பின், அவர்கள் எல்லையற்ற தந்தையின் ஞாபகார்த்தத்தைக் கொண்டாடி இருப்பார்கள். அவரது பிறப்பு பாரதத்திலேயே இடம்பெறுகிறது. பாரதத்திலேயே மக்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் அவரை முழுமையாக இனங்காணாததன் காரணமாக, அதனை விடுமுறையுடன் கொண்டாடுவதில்லை. பிறந்த தினமும் அனைவருக்கும் சற்கதியளிக்கும் தந்தையின் யாத்திரையும் நிச்சயமாக அவர் வந்து, அத்தகைய தனித்துவமான பணியைப் புரிகின்ற அவரது பிறந்த இடத்திலேயே பெருமளவு கொண்டாடப்பட வேண்டும். ஆலயமாகிய உங்களது ஞாபகார்த்தமும் இங்கு இருக்கின்றது. எவ்வாறாயினும் சிவபாபாவே வந்து, விடுதலை அளிப்பவராகவும், வழிகாட்டியாகவும் ஆகுகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. “எங்களைத் துன்பம் அனைத்திலிருந்தும் விடுவித்து, சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. பாரதமே அனைத்திலும் அதியுயர்வான பூமியாகும். நினைவு கூரப்படுகின்ற பாரதத்தின் புகழ் எல்லையற்றது. இங்கேயே சிவபாபா பிறப்பெடுக்கிறார். ஆனால் எவரும் அவரை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் அவரைக் கௌரவிக்கும் வகையில் ஒரு முத்திரையை உருவாக்குவதில்லை. அவர்கள் ஏனைய பலரதும் முத்திரைகளை அவர்களைக் கௌரவிக்கும் வகையில் உருவாக்குகின்றனர். இப்பொழுது மக்கள் இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் வகையில் எவ்வாறு நீங்கள் விளங்கப்படுத்தலாம்? சந்நியாசிகள் வெளிநாடுகளுக்குச் சென்று, பாரதத்தின் புராதன யோகத்தைக் கற்பிக்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு உங்கள் இராஜயோகம் பற்றிக் கூறியதும், உங்கள் பெயர் புகழப்படும். அவர்களிடம் வினவுங்கள்: இராஜயோகத்தைக் கற்பித்தவர் யார்? எவருக்கும் தெரியாது. கிருஷ்ணர் ஹத்தயோகத்தைக் கற்பிக்கவில்லை. சந்நியாசிகள் ஹத்தயோகத்தைப் பயிற்சி செய்கிறார்கள். பெருமளவில் கற்றவர்கள் தம்மைத் தத்துவஞானிகள் என் அழைக்கிறார்கள். அவர்கள் பல சமயநூல்களைக் கற்றபோதிலும் தந்தை இப்பொழுது கூறுவதே சரியானது, ஏனைய அனைத்தும் தவறானவை என இவ்விடயங்களைப் புரிந்துகொண்டு, தங்களை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். தந்தை வருகின்ற இந்த இடமே உண்மையில் மகத்துவமான யாத்திரை ஸ்தலம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பூமியே தர்மபூமி என அழைக்கப்படுகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இங்கிருப்பது போல் வேறெங்கும் பல தர்மாத்மாக்கள் இல்லை. நீங்கள் அதிக தான தர்மங்களைச் செய்கிறீர்கள். நீங்கள் தந்தையை இனங்கண்டு கொண்டதுடன், உங்கள் மனங்;கள், சரீரங்கள், செல்வத்தையும் இந்தச் சேவையில் பயன்படுத்துகிறீர்கள். தந்தை மட்டுமே அனைவருக்கும் விடுதலை அளிக்கின்றார். அவர் அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றார். எந்தச் சமய ஸ்தாபகர்களும் எவரையும் துன்பத்தில் இருந்து விடுவிப்பதில்லை. அம்மக்கள் தமது சமய ஸ்தாபகர்களைப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகத் தமது பாகங்களை நடிப்பதற்காகக் கீழிறங்கி வருகின்றனர். தங்கள் பாகங்களை நடித்துக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் தமோபிரதான் ஆகுகின்றனர். பின்னர் தந்தை வந்து, உங்களைச் சதோபிரதான் ஆக்குகின்றார். ஆகவே பாரதம் அத்தகைய மகத்தான யாத்திரை ஸ்தலமாகும். பாரதமே முதல் இலக்கத்தை உடைய, அதியுயர்வான பூமியாகும். தந்தை கூறுகிறார்: இதுவே எனது பிறப்பிடமாகும். நான் அனைவருக்கும் சற்கதியளிக்கவே இங்கே வருகின்றேன். நான் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறேன். தந்தை உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்காகவே வந்திருப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ஆகவே, அத்தகைய தந்தையைப் பேரன்புடன் நினைவு செய்யுங்கள். ஏனையோர் உங்களைப் பார்க்கும்போது, அவர்களும் அத்தகைய செயல்களையே செய்வார்கள். இவை சூட்சுமமான, தெய்வீகச் செயல்கள் என அறியப்பட்டுள்ளன. எவரும் எதனையும் புரிந்து கொள்வதில்லை என ஒருபொழுதும் எண்ணாதீர்கள். உங்களிடமிருந்து இப்படங்களை எடுத்துச் செல்லக்கூடிய மக்கள் வெளிப்படுவார்கள். நீராவிக்கப்பல்களில், அவர்கள் எடுத்துச் செல்லக்கூடியவாறு, மிகச் சிறந்த படங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். அப்பொழுது எங்கெல்லாம் நீராவிக்கப்பல்கள் நிற்கின்றனவோ, அங்கு அவர்களால் அந்தப் படங்களைப் போட முடியும். உங்கள் சேவை பெருமளவு இடம்பெற வேண்டும். பல பெருந்தன்மையான மக்கள் உங்களின் பொக்கிஷக் களஞ்சியங்களை நிரப்புவதற்காக வெளித் தோன்றுவார்கள். யார் பழைய உலகை மாற்றிப் புதிய உலகை ஸ்தாபிக்கிறார் என்று அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலான அத்தகைய சேவையை உங்களுக்காக அவர்கள் செய்வார்கள். முன்னர், உங்களுக்கும் சீரழிந்த புத்தியே இருந்தது. இப்பொழுது நீங்கள் மிகவும் சுத்தமான புத்தியை உடையவர்கள் ஆகிவிட்டீர்கள். இந்த ஞானத்தின் மூலமும், யோக சக்தியின் மூலமும் நீங்கள் இவ்வுலகைச் சுவர்க்கமாக ஆக்குகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஏனைய அனைவரும் முக்தி தாமத்திற்குச் சென்று அங்கே இருப்பார்கள். நீங்கள் அதிகாரிகளாகவும் ஆகவேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். நீங்கள் அவரது நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் சக்தியைப் பெறுகிறீர்கள். தந்தை, உலக சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார். அவர் உங்களுக்கு அனைத்து வேதங்களினதும், சமயநூல்களினதும் சாராம்சத்தைக் கூறுகிறார். ஆகவே குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவைக்காக அதிகளவு உற்சாகம் இருக்க வேண்டும். வேறெதுவும் அல்லாமல், இந்த ஞான இரத்தினங்களே உங்கள் உதடுகளிலிருந்து வெளிவர வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ரூப்பும் பசந்தும் ஆவீர்கள். முழு உலகமும் எவ்வாறு மீண்டும் மிகப் புதியதாகவும், புத்துணர்ச்சி உடையதாகவும் ஆகுகின்றது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அனைத்தும் புதிதாகுகின்றன. அங்கு துன்பம் பற்றிய குறிப்பே இல்லை. ஐந்து தத்துவங்களும் கூட உங்களுக்குச் சேவை செய்வதற்கு இருக்கின்றன. இந்நேரத்தில், அவர்கள் அவச்சேவை செய்கிறார்கள், ஏனெனில் மனிதர்கள் தகுதியற்றவர்கள். தந்தை இப்பொழுது உங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் உதடுகளிலிருந்து சதா இந்த ஞான இரத்தினங்கள் மாத்திரமே வெளித் தோன்றக் கூடியவாறு ரூப்பும் பசந்தும் ஆகுங்கள். சேவை செய்வதில் உற்சாகமாக இருங்கள். நினைவில் நிலைத்திருந்து, ஏனையோருக்கும் தந்தையை நினைவூட்டுங்கள். இந்தத் தெய்வீகமான, தனித்துவமான பணியைச் செய்யுங்கள்.2. உண்மையான காதலியாகி, ஒரேயொரு அன்பிற்கினியவரிடம் உங்களை அர்ப்பணியுங்கள். அதாவது, உங்களைத் தியாகம் செய்யுங்கள்! அப்போதே உண்மையான தீபாவளி ஏற்படும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய சகல சக்திகளினதும் முழுக் கையிருப்பு மூலம் ஓர் உலகச் சக்கரவர்த்தியின் அந்தஸ்தைப் பெறுவீர்களாக.ஓர் உலகச் சக்கரவர்த்தியின் அந்தஸ்தை அடைகின்ற ஆத்மாக்கள் தங்களுக்காக மட்டுமே முயற்சி செய்ய மாட்டார்கள். உங்கள் வாழ்வில் வருகின்ற தடைகளையும், பரீட்சைகளையும் வெற்றி கொள்வது மிகவும் சாதாரணம். ஆனால் ஓர் உலகச் சக்கரவர்த்தி ஆகுகின்ற ஓர் ஆத்மாவிடம் சகல சக்திகளினதும் முழுக் கையிருப்பு இப்போது இருக்கும். அவருடைய ஒவ்வொரு விநாடியும், எண்ணமும் பிறருக்காகவே இருக்கும். அவருடைய சரீரம், மனம், செல்வம், நேரம், மூச்சு அனைத்தும் உலக நன்மைக்காக ஒரு தகுதிவாய்ந்த வழியில் தொடர்ந்தும் பயன்படுத்தப்படும்.
சுலோகம்:
ஒரு பலவீனம் இருந்தால் கூட பல சிறப்பியல்புகள் முடிவடைந்து விடுகின்றன. ஆகவே, பலவீனங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள்.அவ்யக்த சமிக்கை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.
உங்கள் மேள்மையான உணர்வுகள், நல்லாசிகள், மேன்மையான மனோபாவம், மேன்மையான அதிர்வலைகள் மூலம் எந்தவோர் இடத்தில் இருக்கும்போதும், பல ஆத்மாக்களுக்கு மனம் மூலம் உங்களால் சேவை செய்ய முடியும். இதற்கான வழிமுறையானது, ஒரு வெளிச்ச வீடாகவும், சக்தி வீடாகவும் ஆகுவதே ஆகும். இதற்கு, பௌதீக வசதிகளோ, வாய்ப்போ அல்லது நேரமோ இருக்கின்ற கேள்வியே கிடையாது. நீங்கள் ஒளியாலும், சக்தியாலும் நிறைவாக இருக்க வேண்டும்.