03.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இது இப்பொழுது, பழைய உலகின் இறுதிநேரம் ஆகும், இதனாலேயே நீங்கள் சங்கமயுகத்தில் வருங்கால இராச்சியத்திற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகவேண்டும்.
கேள்வி:
சிம்மாசனத்தில் அமர்வதற்காகக் குழந்தைகளாகிய நீங்கள் என்ன ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும்?பதில்:
நீங்கள் சகலதுறைச் சேவையைச் செய்வதில் ஆர்வம் கொண்டிருக்கும் போது, உங்களால் சிம்மாசனத்தில் அமர முடியும். சகலதுறை சேவையைச் செய்து பலருக்கும் சந்தோஷத்தை வழங்குபவர்கள் அதற்கான பிரதிபலனைப் பெறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சதா ஒவ்வொரு வகையான சேவையிலும் ஈடுபட்டிருக்க வேண்டும். உங்கள் தாயையும் தந்தையையும் வெளிப்படுத்தும் அளவிற்கு நீங்கள் மிகவும் திறமைசாலிகளாக ஆகவேண்டும். நீங்கள் ‘மம்மா, பாபா’ எனக் கூறுவதால், அனைவருக்கும் அவர்களைப் போன்றவர்கள் ஆகிக் காட்டுங்கள்.பாடல்:
இந்தப் பாவ உலகிலிருந்து அப்பால் எங்களை ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்!ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான பிரம்மாகுமார்கள், குமாரிகளான உங்களுக்கு மாத்திரமே பாவ உலகம் என்றால் என்ன, புண்ணிய உலகம் என்றால் என்ன, தூய்மையற்ற உலகம் என்றால் என்ன, தூய உலகம் என்றால் என்னவென்பது தெரியும். ‘ஓ தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ என மக்கள் கூறினாலும், அவர்களுக்கு அவரைத் தெரியாது. ஆத்மாக்களே கூறுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! மனிதர்கள் அனைவரும் தொடர்ந்தும் அழைக்கின்றார்கள், ஆனால் தூய உலகம் என்றால் என்னவென்பது எவருக்கும் தெரியாது. அது எப்பொழுது, எவ்வாறு ஸ்தாபிக்கப்படும்? நீங்கள் இப்பொழுது ஞானம் நிறைந்த தந்தைக்கு உரியவர்கள், இதனாலேயே ஞானக்கடலான, ஞானம் நிறைந்த தந்தையை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். தூய உலகம் பின்னர் எவ்வாறு தூய்மை அற்றதாகுகிறது என்பதையோ, தூய்மையற்ற உலகம் எவ்வாறு தூய்மை ஆகுகிறது என்பதையோ அல்லது தூய்மையற்ற உலகில் வாழ்பவர்கள் யார், தூய உலகில் வாழ்பவர்கள் யார் என்பதையோ வேறு எவரும் அறிய மாட்டார்கள். இந்நேரத்தில் நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களை அறிந்திருக்கின்றீர்கள். சத்தியயுகமே தூய உலகம் என்று அழைக்கப்படுகின்றது. தூய உலகமான பாரதத்தில், நிச்சயமாக ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் ஒரேயொரு இராச்சியம் இருந்திருக்க வேண்டும், இதனாலேயே பாரதம் அதிபுராதன தேசம் என்று நினைவுகூரப்படுகின்றது. தூய்மையாக்குகின்ற தந்தை மீண்டும் ஒருமுறை தூய உலகிற்குச் செல்வதற்கான பாதையை உங்களுக்குக் காட்டுகின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு இவ்வழிமுறையை ஒரு விநாடியில் காட்டுகின்றேன். தந்தை உங்கள் புதிய உலக இராச்சிய பாக்கியத்தை உங்களுக்குக் கொடுப்பதற்கு மாத்திரமே வருகின்றார். இது எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெறப்படும் எல்லையற்ற ஆஸ்தியாகும். தந்தை மாத்திரமே வந்து, உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். நாங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்கின்றோம். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும். ஆதி சனாதன தேவிதேவதா தர்மமே இருந்தது, இந்து சமயம் அல்ல. முதலில், பாரதத்தில் தேவ தர்மத்தினர் மாத்திரமே இருந்தனர். கிறிஸ்தவர்கள் மறுபிறவிகள் எடுப்பதனால், எண்ணிக்கையில் அதிகரிப்பதைப் போன்று, இவர்களும் பின்னர் நிச்சயமாகத் தொடர்ந்தும் மறுபிறவிகள் எடுத்திருக்க வேண்டும். புத்தர் பௌத்த சமயத்தை ஸ்தாபித்தவர், ஆகவே அவரே அவர்களின் சமய ஸ்தாபகர். ஒரு புத்தரிலிருந்து பல பௌத்தர்கள் வெளிப்பட்டனர். கிறிஸ்து ஒருவர் மாத்திரமே இருந்தபொழுதும், இப்பொழுது எத்தனை கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள்! இவ்வாறே எல்லா சமயங்களும் தொடர்ந்துள்ளன. எவ்வாறாயினும், ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருந்தபொழுது, ஏனையோரில் எவரும் இருக்கவில்லை. பிறரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். கிறிஸ்து கிறிஸ்தவ சமயத்தையும், ஏபிரகாம் இஸ்லாமிய சமயத்தையும் ஸ்தாபித்தார்கள். அச்சா. அவ்வாறாயின், சத்தியயுகத்தின் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபித்தவர் யார்? சத்தியயுகத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது, எனவே, நிச்சயமாக அந்த இராச்சியத்தை எவரோ ஒருவரே ஸ்தாபித்திருக்க வேண்டும். சத்தியயுகத்தில் தேவ தர்மம் இருந்தது, இந்நேரத்தில் தந்தை அதனை ஸ்தாபிக்கின்றார். இதனாலேயே சங்கமயுகத்தில் தந்தை வரவேண்டும். மனிதர்கள் அனைவரும் இப்பொழுது தூய்மையற்ற உலகில் இருக்கின்றார்கள். பழைய உலகில் மில்லியன் எண்ணிக்கையான மக்கள் உள்ளார்கள். புதிய உலகில் அத்தனை மனிதர்கள் இருக்க முடியாது. அங்கே ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. அங்கே இஸ்லாமியர்களோ, பௌத்தர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ இருக்கவில்லை. தேவ தர்மம் மறைந்து விட்டது. எவ்வாறு கடவுள் அந்தத் தர்மத்தை ஸ்தாபித்தார் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். அவர்கள் தேவ தர்மத்தின் பெயரையே மறந்து விட்டார்கள், அதற்குப் பதிலாக, அவர்கள் இந்து சமயத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: பழைய உலகம் மாற வேண்டிய பொழுதே, நான் வருகின்றேன். இது இப்பொழுது இப்பழைய உலகின் இறுதி நேரமாகும். பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். இந்த மகாபாரத யுத்தத்தின் மூலமே இந்தப் பழைய உலகின் இறுதி ஏற்பட்டது. அனைவரும் அழிக்கப்பட்டனர் எனவும், எவருமே எஞ்சியிருக்கவில்லை எனவும் கீதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு பஞ்ச பாண்டவர்கள் காப்பாற்றப்பட்டனர் எனவும், ஆனால் அவர்களும் மலையில் உருகிப் போனார்கள் எனவும் அவர்கள் விவரிக்கின்றார்கள். எவ்வாறாயினும், உண்மையில் அவ்வாறு எதுவும் நிகழவில்லை. தந்தை இந்தத் தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். பிரளயமோ அல்லது பெருவெள்ளமோ இடம்பெறுவதில்லை. மக்கள் பாபாவை அழைக்கின்றார்கள்: ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! இது இப்பொழுது இராவண இராச்சியம் என்பதால், எங்கள் துன்பத்தை அகற்றி, எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள்’. மக்கள் இராம இராச்சியத்தை விரும்புவதால், நிச்சயமாக இது இராவண இராச்சியமாக இருக்க வேண்டும் என்பதே அர்த்தமாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இராம இராச்சியத்தின் ஸ்தாபனையும், இராவண இராச்சியத்தின் அழிவும் இப்பொழுதே இடம்பெறுகின்றன. நான் கற்பிக்கின்ற வழிமுறைகளைக் கற்பவர்கள், பின்னர் அங்கே சென்று, புதிய உலகில் இராச்சியத்தை ஆட்சிசெய்வார்கள். அங்கே இந்த ஞானம் எதுவும் இருக்க மாட்டாது. இப்பொழுது உங்கள் புத்தியில் சகல ஞானமும் உள்ளது. தங்கள் புத்தியில் அதனை வைத்திருப்பவர்கள், அதனைப் பிறருக்கு விளங்கப்படுத்துகின்றார்கள்; அது வரிசைக்கிரமமாகவே உள்ளது. சேவை செய்கின்ற குழந்தைகளின் புத்திகளில் இந்த ஞானம் அனைத்தும் சதா ஊறிக் கொண்டிருக்கின்றது. நிச்சயமாக முதலில் அவர்களே சத்தியயுகத்தில் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். முதலில் தந்தை பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் பிராமணர்களை உருவாக்குகின்றார். இந்த யாகம் இந்த ஞானத்தின் அடிப்படையானது என்பதால், பிராமண சமுதாயத்தினர் நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். சங்கமயுகத்தில் நிச்சயமாகப் பிராமண சமுதாயத்தினர் இருப்பார்கள். கலியுகத்தில் அசுர சமுதாயத்தினர் இருக்கின்றனர், ஆனால் சத்தியயுகத்திலோ தேவ சமுதாயத்தினர் இருக்கின்றார்கள். ஆகவே, நிச்சயமாகச் சங்கமயுகத்திலேயே தேவ சமுதாயத்தினர் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் குத்துக்கரணம் அடிக்கும்பொழுது, ஒவ்வொருவரின் தலையும், பாதங்களும் ஒன்றாகுகின்றன. நீங்கள் பிராமணர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு செய்கின்றீர்கள். பல்வகை ரூபத்தின் படமும் முக்கியமானது. இதன் விளக்கம் மிகவும் சிறந்தது. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்களது ஆறு மாதக் குழந்தை அல்லது நான் உங்களது நான்கு நாள் குழந்தை. சிலர் கூறுகின்றார்கள்: நான் உங்களின் ஒருநாள் குழந்தை, அதாவது, நான் இன்றுதான் பாபாவிற்கு உரியவர் ஆகியுள்ளேன். நான் வாய்வழித் தோன்றல் ஆகியுள்ளேன். உயிருடன் இருக்கும் பொழுதே தந்தைக்கு உரியவர்கள் ஆகுபவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, நான் இப்பொழுது உங்களுக்கு உரியவன். சிறு குழந்தையால் இவ்வாறு பேச முடியாது. இந்த ஞானம் வளர்ந்தவர்களுக்கு உரியது. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்களது சிறு குழந்தை. சிறு குழந்தைகளுக்குப் படங்களைக் காட்டி விளங்கப்படுத்துவது இலகுவானது. நாளுக்கு நாள், விளங்கப்படுத்துவதற்கு எண்ணற்ற வழிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நாடகத் திட்டப்படி, 5000 வருடங்களின் முன்னரும் படங்களைப் பயன்படுத்தும் இவ் வழிமுறை உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஏன் இவ்வழிமுறை இருக்கவில்லை, அது இப்பொழுது மாத்திரமே வெளிப்பட்டுள்ளது என்ற கேள்வி எழ முடியாது. நாடகத்திற்கு ஏற்ப, குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டிய எந்த ஒரு வழிமுறையும் அதற்குரிய நேரத்திலேயே வெளிப்படும். பாடசாலை வகுப்புக்கள் வரிசைக்கிரமமாக உள்ளன. மாணவர்கள் ஆரம்பத்திலேயே ஒரு முக்கிய பரீட்சையில் சித்தியெய்த மாட்டார்கள். ஆரம்பத்தில் அவர்களுக்கு அல்பாவும், பீற்றாவுமே கற்பிக்கப்படுகின்றன. நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகுவதனாலேயே, அவர் உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்றார். உங்களின் லௌகீகத் தந்தையை நீங்கள் ‘அப்பா’ என்று அழைத்த பின்னர், உங்களுடைய நம்பிக்கை மாறுவதில்லை, இல்லையா? ஆனால், இங்கே ‘பாபா, பாபா!’ என்று கூறிய பின்னரும், அவர்களின் நம்பிக்கை உடைகின்றது. அவர் எல்லையற்ற தந்தை என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதால், அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகின்றார்: ஏனைய அனைத்தையும் துறந்து, என்னையும், ஆஸ்தியையும் மாத்திரம் நினைவு செய்யுங்கள். நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, இதனை நினைவுசெய்தால், நீங்கள் சந்தோஷத்தையும் அனுபவம் செய்வீர்கள். எவ்வாறாயினும், உங்களால் ஏன் நினைவில் நிலைத்திருக்க முடிவதில்லை? ‘பாபா, நான் உங்களுக்கு உரியவன், வேறு எவர் மீதும் பற்று வைக்க மாட்டேன். நான் உங்கள் வழிகாட்டல்களை மாத்திரமே பின்பற்றுவேன்’ என நீங்கள் உத்தரவாதம் அளிக்கின்றீர்கள். தந்தையும் கூறுகின்றார்: நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாததால், தொடர்ந்தும் தவறு செய்கின்றீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். ஆத்மா அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதால், அவர் மிகவும் சந்தோஷம் அடைகின்றார். நாங்கள் 84 பிறவிகளை எடுக்கும் பொழுது இழந்த எங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பரமாத்மாவான பரமதந்தை எங்களுக்குக் கொடுத்தார் என்பதை ஆத்மா அறிவார். அதனைத் தந்தை இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களுக்குக் கொடுக்கின்றார். ஆகவே, உங்களுக்கு முடிவற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். அக சந்தோஷமும் வெளியில் தெரியும். அதனை நீங்கள் இலக்ஷ்மி நாராயணனின் முகங்களில் பார்க்கலாம். அறியாமைப் பாதையிலும் சிலர் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்கள், அத்துடன் பிறருடன் உரையாடுவதிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றார்கள். மனித உலகில் யாருடைய பதவி மிகவும் உயர்வானது? உண்மையில், அனைவராலும் தந்தை என்று அழைக்கப்படுகின்ற, பரமாத்மாவான சிவனே அதியுயர்வானவர். எவ்வாறாயினும், அவரது தொழில் என்னவென்பது எவருக்கும் தெரியாது. தந்தை வரும்பொழுது மாத்திரமே, அவர் உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் பாபாவிடமிருந்து வைகுந்த இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். எனவே நீங்கள் சாதாரண மனிதர்களில் இருந்து நாராயணன் ஆகுகின்றீர்கள் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். சிலர் தங்களது கரத்தை உயர்த்திய பொழுதிலும், அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. இந்த நம்பிக்கையுடன் இருப்பவர்கள், தாங்கள் இப்பொழுது தங்கள் 84 பிறவிகளை நிறைவு செய்துள்ளனர் என்ற சந்தோஷத்தையும் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் இப்பொழுது தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, உலக அதிபதிகள் ஆகுகின்றோம். உங்களுக்கு இக்கல்வியையிட்டு அதிகளவு போதை இருக்க வேண்டும். ஒரு ஜனாதிபதி, ஆளுனர் போன்றோர் அதிகளவு போதையைக் கொண்டிருக்கின்றார்கள். பிரபல்யமானவர்களும் அவர்களைச் சந்திப்பதற்காகச் செல்கின்றார்கள். தம்மைச் சந்திக்க வருபவர்களின் தராதரங்களைத் தெரிந்து கொள்ளாமல், அவர்கள் எவரையும் சந்திக்க மாட்டார்கள். பாபாவும் ஒருபொழுதும் எவரையுமே வெறுமனே சந்திப்பார் என்றில்லை. பாபாவின் பதவியைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே புரிந்து கொள்கின்றீர்கள். அதிலும், நீங்கள் செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாகவே அதனை அறிந்துள்ளீர்கள். நீங்கள் உங்களைப் பிரம்மாகுமார்கள், பிரம்மாகுமாரிகள் என்று அழைத்தாலும், நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதும், அவரிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதும் உங்கள் புத்திகளில் இருப்பதில்லை. நீங்கள் தந்தையையோ அல்லது ஆஸ்தியையோ நினைவு செய்வதில்லை. இதனை நீங்கள் நினைவு செய்திருப்பின், உங்களுக்குள் சந்தோஷத்தையும் அனுபவம் செய்வீர்கள். ஒரு குமாரி திருமணம் செய்யும்பொழுது, அவளுக்கு மறைமுகமானதொரு தானம் வழங்கப்படுகின்றது. அவர்கள் அவளுடைய பெட்டியைப் பூட்டி, அந்தப் பெட்டிக்கான சாவியை அவளது கையில் கொடுக்கின்றார்கள். தந்தையும் உங்கள் கைகளில் உலக இராச்சியத்திற்கான திறவுகோலை வைக்கின்றார். நீங்களே சுவர்க்கம் என்ற புதிய உலகை அங்குரார்ப்பணம் செய்கின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். பாபா உங்களைத் தகுதியானவர்கள் ஆக்குகின்றார். பாபா பக்தர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்து, பக்தர்களைத் தூய்மையாக்கும்வரை, அவர்கள் சுவர்க்கம் செல்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக முடியாது. இதனாலேயே நாரதரின் உதாரணமும் கொடுக்கப்பட்டுள்ளது. பல நல்ல பக்தர்கள் இருந்த பொழுதிலும், ஆத்மாக்கள் தூய்மையற்றே உள்ளார்கள். அவர்கள் பிறவிபிறவியாகத் தூய்மை அற்றவர்கள் ஆகுகிறார்கள். நீங்கள் தந்தையைச் சந்திக்கும்வரை, உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. தந்தை உங்களைப் பிரம்மாவின் மூலம் தத்து எடுத்திருப்பதால், நீங்கள் புதிய உலகிற்குச் சென்று ஆட்சிசெய்வீர்கள். வேறு எவரும் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதும் இல்லை, எவரும் இதனைப் பற்றி அறிந்திருப்பதும் இல்லை. தந்தை மாத்திரமே சங்கமயுகத்தில் வந்து, எதிர்கால 21 பிறவிகளுக்கான ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். இந்தத் தந்தையை வேறு எவருக்கும் தெரியாது. கடவுள் உண்மையிலேயே 5000 வருடங்களின் முன்னரும் வந்து, தேவர்களாக மாற்றப்பட்ட மனிதர்களுக்கு இந்த கீதா ஞானத்தைக் கூறினார் என்று நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். கீதையே ஆதிசனாதன தேவதேவியரின் தர்மநூலாகும். சத்தியயுகத்தில் சமயநூல்கள் போன்றன எதுவும் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றேன். நான் மீண்டும் ஒருமுறை உலகின் ஆரம்பம், மத்தி, இறுதிக்கான இந்த ஞானத்தைத் தேவர்களாக ஆகுபவர்களுக்குக் கூறுவதற்கு வந்திருக்கின்றேன், அவர்கள் தங்களுடைய 84 பிறவிகளையும் எடுத்த பின்னர், சக்கரத்தின் இறுதியை அடையும் பொழுது, நான் மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். நான் என்றுமே சக்கரத்தின் இடையில் வருவதில்லை. கிறிஸ்துவோ அல்லது இவ்வுலகில் ஒரு சமயத்தை ஸ்தாபிப்பவர்களோ இடையில் வருவதில்லை. (அவர்கள் தங்களுக்குரிய நேரத்தில் மாத்திரமே வருவார்கள்). ஒரு சமயத்தை ஸ்தாபிக்க வருகின்றவர்கள் அனைவரும் அதனை இவ்வுலகிற்காகவே செய்கின்றார்கள். நான் சங்கமயுகத்தில் புதிய உலகத்தை ஸ்தாபிப்பதற்கு வருகின்றேன். கிறிஸ்துவின் ஆத்மா இன்னொருவரில் பிரவேசித்துத் தனது சமயத்தை ஸ்தாபிக்கின்றார், ஆனால் இந்தத் தந்தையோ ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். இலக்ஷ்மி நாராயணன் இராச்சியம் எப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டது, அதனை யார் ஸ்தாபித்தார் என்பவற்றை எவரும் அறியார். இலக்ஷ்மி நாராயணனுக்கு ஆலயங்களைக் கட்டுபவர்களிடம் நீங்கள் வினவ வேண்டும். ஓர் ஒன்றுகூடலிலும் நீங்கள் வினவலாம். இந்த இரகசியங்கள் உங்கள் புத்திகளில் உள்ளன. பாபா ஒவ்வொரு கல்பத்திலும் பிரம்மாவினூடாக ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். எவருக்கும் இது தெரியாது. இந்த வார்த்தைகள் இருந்தாலும், அவை எவரது புத்தியிலும் மிகச்சரியாக நிலைத்திருப்பதில்லை. சில குழந்தைகள் மீது தீய சகுனங்கள் உள்ளன. சரீர உணர்வே முதலாவது இலக்கத் தீய சகுனமாகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடன் இருப்பீர்களாக! இலக்ஷ்மி நாராயணனினதும், ஏணியினதும் இப்படங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துவதற்கு மிகவும் சிறப்பானவை. அவற்றினால் பலரும் நன்மையடைய முடியும். எவ்வாறாயினும். நாடகத்திற்கு ஏற்ப, அது தாமதிக்கலாம், இதனாலேயே இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதில் தடைகளும் ஏற்படுகின்றன. தந்தையே கூறுகின்றார்: பல தடைகள் உள்ளன. மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். அவள் விரைவில் எனது குழந்தைகளை அவர்களின் காதுகளை அல்லது மூக்குகளைப் பிடித்துக் கொள்கின்றாள். அதுவே இராகுவின் சகுனம் எனப்படுகின்றது. இந்நேரத்தில் குறிப்பாகப் பாரதத்தில் விகாரங்கள் என்ற இராகு கிரகணத்தின் சகுனங்கள் நூறு வீதம் நிலவுகின்றன. இந்தப் பாரதம் வைரம் போல் தூய்மையாக இருந்தது என்பதை நீங்கள் ஒரு விநாடியில் நிரூபிக்கலாம். இப்பொழுது அது விகாரம் நிறைந்ததாகவும், சிப்பி போன்று பெறுமதி உடையதாகவும் ஆகியுள்ளது, அது மீண்டும் வைரம் போலாக வேண்டும். முழுக் கதையும் பாரதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தந்தை வந்து, உங்களை ஒரு வைரம் போன்றவர்கள் ஆக்குகின்றார். அப்பொழுதும், பல்வேறு வகையான தடைகள் உள்ளன. சரீர உணர்வு என்ற தடையே மிகவும் பெரியது. எவருக்கும் இலக்ஷ்மி நாராயணனின் படத்தை விளங்கப்படுத்துதல் மிகவும் இலகுவானது. குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதிலும் பெருமளவு ஆர்வம் இருக்க வேண்டும். பல வகையான சேவைகள் உள்ளன. பலருக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பவர்களும் பிரதிபலனாகப் பெருமளவைப் பெறுகின்றார்கள். சிலர் தங்கள் எலும்புகளினால் சகலதுறைச் சேவையையும் செய்கின்றார்கள். நீங்கள் சகலதுறைச் சேவையாளர்கள் ஆகுகின்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். “பாபா, நான் சேவைக்கு என்றுமே பிரசன்னமாக உள்ளேன்”. ஆன்மீகச் சேவை செய்கின்ற பல நல்ல குழந்தைகள் தங்களது உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றார்கள். சிம்மாசனத்தைப் பெறுவதிலும் குழந்தைகள் மிகவும் திறமைசாலிகள் ஆகுகின்றார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இங்கே, பெண்களே தங்களது வீடுகளைக் கவனித்துக் கொள்கின்றார்கள். இப்பொழுது தாய்மாரும், குமாரிகளும் இந்தச் சேவையில் உஷாரானவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும் ஆக வேண்டும். மம்மா சேவை செய்ததைப் போல், அதேவிதமாகச் சேவை செய்வதால், இதனை நீங்களும் நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். இதனை நீங்கள் செய்து காட்ட வேண்டும். ‘மம்மா, மம்மா!’ என்று வெறுமனே கூறுவதில் என்ன பலன் இருக்கின்றது? நீங்கள் அவரைப் போலாக வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சரீர உணர்வு என்ற சகுனங்களே யக்ஞத்திற்குத் தடை ஆகுகின்றன. ஆகவே, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கு, இயன்றளவு முயற்சி செய்யுங்கள்.2. உங்கள் கல்வியினதும், உங்கள் சத்தியயுகப் பதவியினதும் சந்தோஷத்தையும், போதையையும் பேணுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். எந்தத்தவறும் செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
ஆன்மிக அப்பியாசத்தைச் செய்வதனால் சுய கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதன் மூலம் சீரமைக்கப்பட்ட புத்தியைக் கொண்டிருப்பதை அனுபவம் செய்யும் ஒரு தேவதை ஆகுவீர்களாக.சீரமைக்கப்பட்ட, இலேசான புத்தியைக் கொண்டிருப்பதே பிராமண வாழ்வின் ஆளுமையாகும். சீரமைக்கப்படுவது மகத்துவமாகும். எவ்வாறாயினும், இதற்கு ஒவ்வொரு நாளும் அமிர்தவேளையில் ஆன்மிக அப்பியாசத்தை செய்வதுடன், வீணான எண்ணங்கள் என்ற எந்த உணவையும் எடுக்காதிருப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். இதில் எச்சரிக்கையாக இருப்பதற்கு, சுயகட்டுப்பாட்டைக் கொண்டிருங்கள். எப்பொழுதுமே அதற்குரிய நேரத்தில் இருக்க வேண்டிய எண்ணங்கள் என்ற உணவையே எடுங்கள். வீணான எண்ணங்கள் என்ற மேலதிக உணவு எதனையும் எடுக்காதீர்கள். அப்போது மட்டுமே நீங்கள் சீரமைக்கப்பட்ட புத்தியைக் கொண்டிருந்து, தேவதை வடிவம் உடையவர் ஆகுகின்ற இலக்கை அடைய முடியும்.
சுலோகம்:
ஸ்ரீமத்தை ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் அடியிலும் மிகச்சரியாக பின்பற்றுபவரே ஒரு மகாத்மா ஆவார்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
உங்கள் எண்ணங்களின் சக்தியினாலும், வார்த்தைகளின் சக்தியினாலும், நீங்கள் கொண்டிருக்கின்ற சகவாசத்தினாலும் உங்களுடைய அன்பு நிறைந்த உறவுமுறைகளாலும், உங்களுடைய அளவற்ற சந்தோஷ பொக்கிஷத்தாலும் முடிவற்று தானம் செய்வதே பிறர் மீது கருணை கொண்டிருந்து அவர்களை ஈடேற்றுவதாகும். உங்கள் தொடர்பில் வருகின்ற எந்தவோர் ஆத்மாவும் சந்தோஷப் பொக்கிஷங்களை நிரப்பியவாறு திரும்பிச் செல்ல வேண்டும். அத்தகைய முடிவற்ற தானியாகுங்கள்.