03.11.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    25.10.2002     Om Shanti     Madhuban


பிராமண வாழ்க்கையின் அடிப்படை, தூய்மை எனும் இராஜரீகம் ஆகும்.


இன்று, அன்புக்கடலானவர், தனது அன்பான குழந்தைகளைப் பார்க்கிறார். சூட்சுமமான, ஆன்மீக இழையால் கட்டப்பட்டுள்ள, எங்கும் உள்ள அன்பான குழந்தைகளான நீங்கள் எல்லோரும் உங்களின் இனிய வீட்டுக்கு வந்துள்ளீர்கள். குழந்தைகளான நீங்கள் அன்பினால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்திருப்பதைப் போல், தந்தையும் குழந்தைகளின் அன்பெனும் இழையால் கட்டப்பட்டு, தனிப்பட்ட முறையில் குழந்;தைகளான உங்களின் முன்னால் வந்துள்ளார். எங்கும் உள்ள குழந்தைகள், தொலைவில் அமர்ந்திருந்தாலும், அன்பிலே திளைத்திருப்பதை பாப்தாதா பார்க்கிறார். தனிப்பட்ட முறையில் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் குழந்தைகளையும், வெகு தொலைவில் அமர்ந்திருக்கும் குழந்தைகளையும் பாப்தாதா பார்த்து, மகிழ்ச்சி அடைகிறார். இந்த ஆன்மீக, அழியாத அன்பு, இந்த இறையன்பு, இந்த ஆத்ம உணர்வு அன்பு, கல்பம் முழுவதிலும் இப்போது மட்டுமே அனுபவம் செய்யப்படுகிறது.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையினதும் தூய்மையின் இராஜரீகத்தைப் பார்க்கிறார். பிராமண வாழ்க்கையின் இராஜரீகம், தூய்மையாகும். எனவே, ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் ஆன்மீக இராஜரீகத்தின் அடையாளமான, தூய்மை ஒளிக் கிரீடத்தை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் எல்லோரும் உங்களின் தூய்மைக் கிரீடங்களையும், ஆன்மீக இராஜரீகத்தின் கிரீடங்களையும் பார்க்கிறீர்களா? பின்னால் அமர்ந்திருப்பவர்கள், அவற்றைப் பார்க்கிறீர்களா? இது கிரீடம் அணிந்துள்ளவர்களின் அழகான ஒன்றுகூடல் ஆகும். இது அத்தகையதுதானே, பாண்டவர்களே? கிரீடங்கள் ஜொலிக்கின்றன, அல்லவா? நீங்கள் அத்தகைய ஒன்றுகூடலைப் பார்க்கிறீர்கள்தானே? குமாரிகளே, நீங்கள் கிரீடம் தரித்த குமாரிகள்தானே? குழந்தைகளின் இராஜ குடும்பம் மிக மேன்மையானதாக இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். உங்களின் அநாதியான இராஜரீகத்தை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களான நீங்கள் பரந்தாமத்தில் வசிக்கும்போது, உங்களின் ஆன்மீக இராஜரீகம் ஆத்மாவின் ரூபத்தில் விசேடமானது. ஆத்மாக்கள் எல்லோரும் ஒளி ரூபத்திலேயே இருக்கிறார்கள். ஆனால், எஞ்சிய ஆத்மாக்களுடன் ஒப்பிடும்போது, உங்களின் பிரகாசம் மேன்மையானது. நீங்கள் பரந்தாமத்தை நினைக்கிறீர்களா? ஆரம்ப காலத்தில் இருந்தே, உங்களின் பிரகாசமும், போதையும் தனித்துவமானவை. நீங்கள் வானத்தில், எப்படி நட்சத்திரங்கள் எல்லாமே பிரகாசிப்பதையும், எப்படி அவை ஒளியாக இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால், அந்த நட்சத்திரங்கள் எல்லாவற்றிலும், சில விசேடமான நட்சத்திரங்களின் பிரகாசம், அதி அழகானதும், தனித்துவமானதும் ஆகும். அதேபோல், ஏனைய ஆத்மாக்களுடன் ஒப்பிடும்போது, ஆத்மாக்களான உங்களின் பிரகாசம், உங்களின் ஆன்மீக இராஜரீகத்தினதும் தூய்மையினதும் பிரகாசம், தனித்துவமானது. நீங்கள் இதை நினைவு செய்கிறீர்கள்தானே? பின்னர், ஆரம்ப காலத்திற்கு வாருங்கள். ஆரம்ப காலப்பகுதியை நீங்கள் நினைத்தால், உங்களின் தேவ ரூபத்தில் ஆன்மீக இராஜரீகத்தின் ஆளுமை எத்தனை விசேடமானது? கல்பம் முழுவதும், யாருக்காவது தேவ ரூபத்தின் இராஜரீகம் இருந்ததா? நீங்கள் உங்களின் ஆன்மீக இராஜரீகத்தையும், உங்களின் தூய்மையின் ஆளுமையையும் நினைக்கிறீர்கள்தானே? பாண்டவர்களான நீங்களும் நினைக்கிறீர்களா? இப்போது உங்களுக்கு நினைவு வந்து விட்டதா? அப்படியாயின், மத்திய காலப்பகுதிக்கு வாருங்கள். அதன்பின்னர், மத்திய காலப்பகுதியில் இருந்து, அதாவது, துவாபர யுகத்தில் உங்களின் பூஜிக்கத் தகுதிவாய்ந்த படங்கள் உருவாக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து, வேறெந்த சித்திரங்களுக்காவது அந்த இராஜரீகமோ அல்லது பூஜிப்பதன் இராஜரீகமோ உள்ளதா? பல சித்திரங்கள் உள்ளன. ஆனால், உங்களைப் போல், சரியான வழிமுறையில் மிகச்சரியாகப் பூஜிக்கப்படுகின்ற, வேறெந்த ஆத்மாக்கள் யாராவது இருக்கிறார்களா? அவர்கள் மதரீதியான தலைவர்களோ, அரசியல் தலைவர்களோ அல்லது நடிகர்களோ யாராக இருந்தாலும், அவர்கள் எல்லோருடைய சித்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், நீங்கள் அவை எவற்றிலாவது சித்திரங்களில் உள்ள அதே இராஜரீகத்தையும், பூஜிப்பதன் இராஜரீகத்தையும் பார்த்திருக்கிறீர்களா? இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் உங்களின் சொந்த பூஜையைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரும் அதைப் பார்த்திருக்கிறீர்களா அல்லது அதைப் பற்றி கேட்டது மட்டும்தானா? வேறெந்தச் சித்திரங்களும் இத்தகைய மிகச்சரியான பூஜையை அல்லது பிரகாசத்தையும், ஆன்மீகத்தையும் கொண்டிருக்க மாட்டாது. இத்தகைய சித்திரங்கள் ஒருபோதும் இருக்க மாட்டாது. ஏன்? உங்களிடம் தூய்மையின் இராஜரீகம் உள்ளது. உங்களிடம் தூய்மையின் ஆளுமை உள்ளது. அச்சா, உங்களின் சொந்த வழிபாட்டை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பார்த்திருக்கா விட்டால், பாருங்கள்! இப்போது, இறுதியாக, சங்கமயுகத்திற்கு வாருங்கள். சங்கமயுகத்திலும், உலகெங்கும், தூய்மையின் இராஜரீகமே பிராமண வாழ்க்கையின் அடிப்படையாகும். தூய்மை இல்லாவிட்டால், இறையன்பின் அனுபவம் இருக்காது. அதன்பின்னர், இறை பேறுகள் எல்லாவற்றின் அனுபவமும் இருக்காது. பிராமண வாழ்க்கையின் ஆளுமை, தூய்மை ஆகும். தூய்மை என்பது ஆன்மீக இராஜரீகம். ஆகவே, கல்பத்தின் ஆரம்பத்தினூடாக மத்தியில் இருந்து இறுதிவரை, அநாதியாகவும், ஆதியாகவும் இந்த ஆன்மீக இராஜரீகம் கல்பம் முழுவதும் தொடர்கிறது.

ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே பாருங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கண்ணாடி இருக்கிறதல்லவா? உங்களிடம் ஒரு கண்ணாடி இருக்கிறதா? உங்களால் அதைப் பார்க்க முடிகிறதா? அப்படியாயின், அதில் உங்களுக்குள் எத்தனை சதவீதம் தூய்மையின் இராஜரீகம் உள்ளதெனப் பாருங்கள். தூய்மையின் பிரகாசம் உங்களின் முகத்தில் புலப்படுகிறதா? தூய்மையின் போதையின் பிரகாசம் உங்களின் நடத்தையில் புலப்படுகிறதா? போதையின் பிரகாசம் என்றால் போதை என்று அர்த்தம். உங்களின் நடத்தையிலும், போதையின் பிரகாசம், ஆன்மீகப் போதை புலப்படுகிறதா? நீங்களே உங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பார்ப்பதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? ஒரு விநாடியா? எனவே, நீங்கள் எல்லோரும் உங்களையே பார்த்திருக்கிறீர்களா?

குமாரிகள்: உங்களிடம் பிரகாசமும், போதையும் உள்ளனவா? நல்லது. நீங்கள் எல்லோரும் எழுந்து நில்லுங்கள்! எழுந்து நில்லுங்கள்! (ஒவ்வொரு குமாரியும் ‘ஏக்-விரதா’ ஒரேயொருவருக்கே அர்ப்பணித்திருத்தல் என்று எழுதப்பட்ட சிவப்புப் பட்டியை அணிந்திருந்தார்கள்). அது அழகாக இருக்கிறதல்லவா? ஏக்-விரதா என்றால் தூய்மையின் இராஜரீகம் என்று அர்த்தம். எனவே, நீங்கள் ஏக்-விரதா என்ற பாடத்தை உறுதியாக்கிக் கொண்டுள்ளீர்களா? நீங்கள் திரும்பிச் செல்லும்போது, பலவீனம் ஆகாதீர்கள். இப்போது, குமார்களின் குழு, எழுந்து நில்லுங்கள்! குமார்களின் குழுவும் நல்லது. குமார்கள் சத்தியத்தின் பட்டியைத் தமது இதயங்களில் கட்டியுள்ளார்கள். இந்தக் குமாரிகள் அதை வெளியே கட்டியுள்ளார்கள். நீங்கள் சத்தியத்தின் பட்டியைக் கட்டியுள்ளீர்களா? குமார்களான நீங்கள், சதா, அதாவது, எப்போதும் தூய்மையின் ஆளுமையுடன் இருப்பீர்களா? இது அப்படித்தானே? ‘ஹா ஜி!’ எனக் கூறுங்கள். ஆமா அல்லது இல்லையா? அல்லது, நீங்கள் திரும்பிச் சென்றபின்னர், சிறிது பின்தங்கி விட்டீர்கள் எனக் கடிதம் எழுதுவீர்களா? அப்படிச் செய்யாதீர்கள். நீங்கள் ஒரு பிராமண வாழ்க்கை வாழும்போது, நிச்சயமாக நீங்கள் சம்பூரணமாகத் தூய்மையாக இருக்க வேண்டும். இத்தகைய சத்தியத்தை நீங்கள் செய்திருக்கிறீர்களா? உங்களின் சத்தியம் உறுதியாக இருந்தால், ஒரு கையை அசையுங்கள். உங்களின் புகைப்படங்கள் தொலைக்காட்சியில் எடுக்கப்படுகின்றன. பின்தங்குபவர்களுக்கு இந்தப் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்படும். ஆகவே, பின்தங்காதீர்கள். மிகவும் பலம்வாய்ந்தவர்களாக இருங்கள். ஆமாம், நீங்கள் பலம்வாய்ந்தவர்கள். பாண்டவர்கள் எப்போதும் பலசாலிகள். பலசாலிப் பாண்டவர்கள், மிகவும் நல்லது.

தூய்மையின் மனோபாவம், நல்லாசிகளும் தூய உணர்வுகளும் ஆகும். ஒருவர் எத்தகையவராக இருந்தாலும், தூய மனோபாவம் என்றால் நல்லாசிகளும், தூய உணர்வுகளுமே. தூய பார்வையைக் கொண்டிருத்தல் என்றால், எல்லோரையும் சதா ஆத்ம உணர்வு ரூபத்தில் அல்லது தேவதை ரூபத்தில் பார்ப்பதாகும். ஆகவே, மனோபாவம், பார்வை. மற்றும் மூன்றாவது, செயல்கள். எனவே, உங்களின் செயல்களிலும், சதா ஒவ்வோர் ஆத்மாவிற்கும் சந்தோஷத்தைக் கொடுத்து, சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இதுவே தூய்மையின் அடையாளம். இந்தத் தாரணை, உங்களின் மனோபாவம், பார்வை மற்றும் செயல்களில் இருக்க வேண்டும். ஒருவர் என்னதான் செய்தாலும், அவர் உங்களுக்குத் துன்பம் விளைவித்தாலும் அல்லது உங்களை அவமதித்தாலும், உங்களின் கடமை என்ன? நீங்கள் துன்பத்தை விளைவிப்பவரைப் பின்பற்ற வேண்டுமா அல்லது பாப்தாதாவைப் பின்பற்ற வேண்டுமா? நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும், அப்படித்தானே? எனவே, தந்தை பிரம்மா துன்பத்தைக் கொடுத்தாரா அல்லது சந்தோஷத்தைக் கொடுத்தாரா? அவர் சந்தோஷத்தையே கொடுத்தார், அப்படித்தானே? ஆகவே, மாஸ்ரர் பிரம்மாக்களான, பிராமண ஆத்மாக்களான நீங்கள் என்ன செய்ய வேண்டும்? யாராவது உங்களுக்குத் துன்பம் கொடுத்தாலும், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் துன்பத்தைக் கொடுப்பீர்களா? நீங்கள் அதைக் கொடுக்க மாட்டீர்களா? யாராவது உங்களுக்கு அதிகளவு துன்பத்தைக் கொடுத்தால் அல்லது உங்களை அதிகளவில் அவமதித்தால் என்ன செய்வீர்கள்? யாராவது உங்களை அதிகளவில் அவமதித்தால், நீங்கள் அதைச் சிறிதளவு உணர்வீர்களா, மாட்டீர்களா? குமாரிகளான நீங்கள் அதை உணர்வீர்களா? சிறிதளவு? ஆகவே, தந்தையைப் பின்பற்றுங்கள். எனது கடமை என்ன? என நினைத்துப் பாருங்கள். மற்றவர்களின் கடமையைப் பார்ப்பதன் மூலம் உங்களின் சொந்தக் கடமையை மறந்து விடாதீர்கள். மற்றவர் உங்களை அவமதிக்கிறார் - எனவே, நீங்கள் சகிப்புத்தன்மையின் தேவி ஆகிவிடுங்கள். சகிப்புத்தன்மையின் தேவன் ஆகிவிடுங்கள். உங்களின் சகிப்புத்தன்மையால், உங்களை இகழ்ந்தவர் உங்களைக் கட்டி அணைப்பார். சகிப்புத்தன்மைக்கு அந்தளவு சக்தி உள்ளது. ஆனால், நீங்கள் அதைச் சிறிது நேரம் சகித்துக் கொள்ள வேண்டும். ஆகவே, நீங்கள் சகிப்புத்தன்மையின் தேவதேவியர்கள்தானே? நீங்கள் அத்தகையவர்களா? சதா இந்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்: நான் சகிப்புத்தன்மையின் தேவர் (தேவதா). நான் சகிப்புத்தன்மையின் இறைவி. எனவே, ஒரு தேவர் என்றால் கொடுக்கும் அருள்பவர் என்று அர்த்தம். யாராவது உங்களை இகழ்ந்தால், உங்களை மதிக்காவிட்டால், அது குப்பைதானே? அல்லது, அது நல்லதொரு விடயமா? அப்படியென்றால், நீங்கள் ஏன் அதை எடுக்கிறீர்கள்? மற்றவர்களிடமிருந்து குப்பையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா? யாராவது உங்களிடம் குப்பையைக் கொடுத்தால், நீங்கள் அதை எடுப்பீர்களா? நீங்கள் எடுக்க மாட்டீர்கள்தானே? யாராவது உங்களை மதிக்காவிட்டால், யாராவது உங்களை இகழ்ந்தால் அல்லது திட்டினால், யாராவது உங்களைக் குழப்பினால், அவை எல்லாம் என்ன? அவை நல்ல விடயங்களா? அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் அதை எடுக்கிறீர்கள்? நீங்கள் அதைச் சிறிதளவு எடுத்துக் கொள்கிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் அதைச் சிறிதளவு எடுத்தபின்னர், ‘நான் அதை எடுத்திருக்கக்கூடாது’ என நினைக்கிறீர்கள். இப்போது, அதை எடுக்கவே வேண்டாம்! அதை எடுப்பதென்றால், உங்களின் மனதிற்குள் அதைக் கிரகித்தல், அதை உணருதல் என்று அர்த்தம். ஆகவே, உங்களின் அநாதியான காலப்பகுதியை, ஆரம்ப காலப்பகுதியை, மத்திய காலப்பகுதியை, அத்துடன் சங்கமயுகக் காலப்பகுதியை நினைவு செய்யுங்கள். உங்களின் தூய்மையின் இராஜரீகத்தையும், கல்பம் முழுவதும் உங்களுடைய ஆளுமையையும் நினையுங்கள். யார் என்ன செய்தாலும், எவராலும் உங்களின் ஆளுமையைப் பறிக்க முடியாது. உங்களுக்குள் இந்த ஆன்மீகப் போதை இருக்கிறதல்லவா? இரட்டை வெளிநாட்டவர்களே, உங்களுக்குள் இந்த இரட்டைப் போதை இருக்கிறதல்லவா? உங்களிடம் இரட்டைப் போதை இருக்கிறதுதானே? எல்லாவற்றிலும் உங்களுக்கு இரட்டைப் போதை உள்ளது. தூய்மையின் இரட்டைப் போதை. சகிப்புத்தன்மையின் தேவி அல்லது தேவன் ஆகுகின்ற இரட்டைப் போதை. உங்களிடம் இரட்டிப்பாக இருக்கிறதல்லவா? இதில் அமரராக இருங்கள், அவ்வளவுதான். அமரராக இருக்கும் ஆசீர்வாதத்தை ஒருபோதும் மறக்காதீர்கள்.

அச்சா, இல்லறத்தவர்களாக இருப்பவர்கள், அதாவது, தம்பதிகள் - உண்மையில், நீங்கள் தனியேதான் இருக்கிறீர்கள், ஆயினும் நீங்கள் தம்பதிகள் எனக் கூறப்படுகிறீர்கள் - எழுந்து நில்லுங்கள்! எழுந்து நில்லுங்கள். பல தம்பதிகள் இருக்கிறார்கள். குமார்களும் குமாரிகளும் வெகு சிலரே இருக்கிறார்கள். குமார்களை விட அதிகமான தம்பதிகள் இருக்கிறார்கள். எனவே, தம்பதிகளே, ஏன் பாப்தாதா உங்களுக்கு வீட்டில் குடும்பத்துடன் வாழ்வதற்கான வழிகாட்டலைக் கொடுத்திருக்கிறார்? தம்பதிகளாகவே இருப்பதற்கான அனுமதி ஏன் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது? உங்களின் இல்லறத்தில் வாழ்வதற்கான அனுமதி ஏன் உங்களுக்குக் கொடுக்கப்பட்டது என உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால், தம்பதிகளாக வாழும்போது, நீங்கள் மகாமண்டலேஸ்வரர்களையும் உங்களின் பாதங்களில் தலைவணங்கச் செய்ய வேண்டும். இந்தளவு தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? ஒன்றாக வாழ்ந்து, தூய்மையாக இருப்பதென்பது கடினம் என அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அது கடினமா? அல்லது, இலகுவா? (இது மிகவும் இலகுவானது). உறுதியாகவா? அல்லது, சிலவேளைகளில் இலகுவாகவும், சிலவேளைகளில் சோம்பேறித்தனமாகவும் இருக்கிறதா? இதனாலேயே, நாடகத்தின்படி, அவர்களுக்குச் சவால் விடுப்பதற்காக, பாப்தாதா உங்கள் எல்லோரையும் உலகின் முன்னால் உதாரணங்கள் ஆக்கியுள்ளார். ஆகவே, உங்களின் இல்லறங்களில் வசிக்கும்போது, சுதந்திரமாக இருங்கள். உங்களால் தூய்மையின்மையில் இருந்து விடுபட்டு இருக்க முடிகிறதா? எனவே, நீங்களே ஒரு சவால் விடுப்பவர்கள், அப்படித்தானே? நீங்கள் எல்லோரும் அவர்களுக்கு சவால் விடுப்பீர்கள். அதாவது, நீங்கள் அவர்களுக்குச் சவால் விடுக்கும்போது, என்ன நடக்குமோ தெரியவில்லை என உங்களுக்குள் சிறியதொரு பயம் இல்லைதானே? உலகிற்கே சவால் விடுங்கள். ஏனென்றால், ஒன்றாக வாழ்வதும், அதேவேளை உங்களின் கனவுகளிலேனும் தூய்மையின்மைக்கான எண்ணம் சிறிதளவேனும் இல்லாதிருப்பதும் புதியதொரு விடயம். இதுவே சங்கமயுக பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பாகும். ஆகவே, நீங்கள் எல்லோரும் உலகெனும் காட்சிப் பெட்டியில் உள்ள உதாரணங்கள் ஆவீர்கள். நீங்கள் மாதிரிகள், உதாரணங்கள். உங்களைப் பார்க்கும்போது, எல்லோருக்கும் தங்களாலும் இதைச் செய்ய முடியும் என்ற பலம் ஏற்படும். இது ஓகேயா? சக்திகளான நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? நீங்கள் பக்காவாக (உறுதி) இருக்கிறீர்கள்தானே? சிலவேளைகளில் உறுதியானவர்களாகவும், சிலவேளைகளில் பலவீனமானவர்களாகவும் இல்லையல்லவா? பக்கா (உறுதி). உங்களைப் பார்க்கும்போது பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். பாராட்டுக்கள். பாருங்கள், உங்களில் பலர் இருக்கிறீர்கள்! மிகவும் நல்லது.

இப்போது, எஞ்சியிருப்போர் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் இல்லாமல் சத்கதி இருக்க முடியாது. ஆசிரியர்களே, எழுந்து நில்லுங்கள்! அச்சா. மிக நல்ல பாண்டவர்களும் இருக்கிறார்கள். ஆஹா! ஆசிரியர்களின் சிறப்பியல்பு என்னவென்றால், ஒவ்வோர் ஆசிரியரின் முகச்சாயல்களிலும் எதிர்காலம் தெரிகிறது. ஒவ்வோர் ஆசிரியரின் முகச்சாயல்களிலும் தேவதை ரூபம் புலப்பட வேண்டும். இத்தகைய முகச்சாயல்கள் உங்களிடம் உள்ளன அல்லவா? தேவதைகளான உங்களைப் பார்க்கும்போது, மற்றவர்களும் தேவதைகள் ஆகுவார்கள். பாருங்கள், பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்! வெளிநாடுகளிலும் பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து வந்துள்ள குழுவில் பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இப்போது சிலரே வந்துள்ளார்கள். வராதவர்களையும் பாப்தாதா நினைவுகூருகிறார். இது நல்லது. ஆசிரியர்களான நீங்கள் எல்லோரும் உங்களின் நடத்தையின் மூலமும், முகத்தின் மூலமும் எப்படித் தந்தையை வெளிப்படுத்தலாம் என ஒன்றாகத் திட்டம் இடுகிறீர்கள். உலக மக்கள், இறைவன் சர்வவியாபி எனச் சொல்கிறார்கள். ஆனால் நீங்களோ, அவர் அவ்வாறானவர் இல்லை எனச் சொல்கிறீர்கள். எவ்வாறாயினும், பாப்தாதா கூறுகிறார்: இப்போது, காலத்திற்கேற்ப, தந்தை நடைமுறையில் ஒவ்வோர் ஆசிரியரினூடாகவும் புலப்பட வேண்டும். ஆகவே, அவர் சர்வவியாபியாகத் தென்படுவார்தானே? யாரை அவர்கள் பார்த்தாலும், அவர்கள் தந்தையை மட்டுமே பார்க்க வேண்டும். ஆத்மாக்களான நீங்கள், பரமாத்மாவினுள் மறைந்துவிட வேண்டும். அப்போது பரமாத்மா மட்டுமே புலப்படுவார். இது சாத்தியமா? அச்சா, இதற்கான திகதி என்ன? ஒரு திகதியை நிச்சயம் செய்ய வேண்டும்தானே? எனவே, இதற்கான திகதி என்ன? உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை? (நாங்கள் இப்போதே ஆரம்பிப்போம்.) நீங்கள் ஆரம்பிப்பீர்கள். அந்தத் தைரியம் நல்லதே. ஆனால், உங்களுக்கு எவ்வளவு காலம் தேவை? இப்போது 2002 ஆம் ஆண்டு. எனவே, இது இரண்டாயிரத்து எந்த ஆண்டு வரை செல்லும்? ஆகவே, இப்போது ஆசிரியர்களே, நீங்கள் தந்தையில் அமிழ்ந்திருப்பவர்களாகத் தென்படுவதில் கவனம் செலுத்த வேண்டும். ‘என் மூலம் தந்தை தென்பட வேண்டும்.’ நீங்கள் இதற்கான திட்டங்களைச் செய்வீர்கள்தானே? சந்திப்புக்களை வைப்பதென்று வரும்போது, இரட்டை வெளிநாட்டவர்கள் கெட்டிக்காரர்கள். இப்போது, இதற்காக ஒரு சந்திப்பை வையுங்கள். எப்படித் தந்தையை உங்கள் ஒவ்வொருவரின் மூலமும் பார்க்க முடியும் என்பதற்காக ஒரு சந்திப்பை வைக்காமல் திரும்பிச் செல்லாதீர்கள். தற்சமயம், பிரம்மாகுமாரிகள் தென்படுகிறார்கள். பிரம்மாகுமாரிகள் மிகவும் நல்லவர்கள் என அவர்கள் சொல்கிறார்கள். இப்போது, அவர்களின் பாபா எவ்வளவு நல்லவர் என்பதையும் அவர்கள் பார்க்க வேண்டும்! அப்போது மட்டுமே உலக மாற்றம் நிகழும். ஆகவே, இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் இந்தத் திட்டத்தை நடைமுறை வடிவத்தில் கொண்டு வருவீர்கள்தானே? நீங்கள் இதைச் செய்வீர்களா? பக்கா. அச்சா. அப்போது, உங்களின் தாதியின் ஆசைகள் பூர்த்தியாகும். இது ஓகேயா? அச்சா.

பாருங்கள், இரட்டை வெளிநாட்டவர்கள் மிகவும் சேவை மனப்பாங்கு உடையவர்கள்! உங்களால், எல்லோரும் அன்பையும், நினைவுகளையும் பெறுகிறார்கள். பாப்தாதாவும் - அதை மகத்தான அன்பு எனச் சொல்ல முடியாது - உங்களின் மீது விசேடமான அன்பு வைத்திருக்கிறார். ஏன் அவர் உங்களின் மீது அன்பு வைத்திருக்கிறார்? ஏனென்றால், சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகியிருக்கும் இரட்டை வெளிநாட்டு ஆத்மாக்கள், தந்தையின் செய்தியை உலகின் வெவ்வேறு இடங்களையும் சென்றடையச் செய்துள்ளார்கள். இல்லாவிட்டால், உலகெங்கும் உள்ள ஆத்மாக்கள் தாகத்துடனேயே இருந்திருப்பார்கள். இப்போது, தந்தை பாரதத்தில் வந்தார், ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு செய்தி வழங்கப்படவில்லை போன்ற எந்தவிதமான முறைப்பாடுகளையும் தந்தை பெற மாட்டார். ஆகவே, நீங்களே தந்தையிடம் வருகின்ற முறைப்பாடுகளை முடிப்பதற்கான கருவிகளாக இருப்பவர்கள். எந்தவொரு நாடும் விடுபடக்கூடாது என்பதில் ஜனக்கிற்கும் அதிகளவு உற்சாகம் உள்ளது. இது நல்லது. குறைந்தபட்சம் நீங்கள் தந்தைக்குச் செய்யும் முறைப்பாடுகளை முடித்து வைப்பீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் சகபாடிகளை அதிகளவில் களைப்படையச் செய்கிறீர்கள். நீங்கள் அவர்களைக் களைப்படையச் செய்கிறீர்கள்தானே? ஜயந்தி, அவர் எல்லோரையும் களைப்படையச் செய்வதில்லையா? எவ்வாறாயினும், இந்தக் களைப்பிலும் களிப்புள்ளது. முதலில், ‘இது என்ன ஒரே விடயம் திரும்பத் திரும்ப வருகிறது?’ என்பது போல் இருந்தது. எவ்வாறாயினும், சொற்பொழிவுகள் வழங்கிய பின்னர் ஆசீர்வாதங்களுடன் நீங்கள் திரும்பி வரும்போது, உங்களின் முகம் மாறிவிடுகிறது. அது நல்லது. இரண்டு தாதிகளுக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அதிகரிக்கும் சிறப்பியல்பு உள்ளது. அவர்களால் அமைதியாக அமர்ந்திருக்க முடியாது. சேவை செய்வதற்கு இன்னமும் எஞ்சியுள்ளதல்லவா? நீங்கள் தேச வரைபடத்தைப் பார்த்தால், அது பாரதமோ அல்லது வெளிநாடுகளோ, நீங்கள் தொடர்ந்து ஒவ்வோர் இடத்தையும் குறித்துக் கொண்டே வந்தால், பல இடங்கள் இன்னமும் எஞ்சியிருப்பதை நீங்கள் காணலாம். ஆகவே, பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஆனால், அவர்களை அதிகளவு வருத்திக் கொள்ளாதீர்கள் என்றும் அவர் கூறுகிறார். நீங்கள் எல்லோரும் சேவை செய்வதில் சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? இப்போது, குமாரிகளான நீங்களும் ஆசிரியர்கள் ஆகுவீர்கள்தானே? ஆசிரியர்களாக இருப்பவர்கள், எப்படியும் ஆசிரியர்களே. எவ்வாறாயினும், ஆசிரியர்களாக இல்லாதிருக்கும் நீங்கள், ஆசிரியர்களாகி, ஏதாவதொரு நிலையத்தைப் பராமரிப்பீர்கள்தானே? நீங்கள் கரங்கள் ஆகுவீர்கள்தானே? இரட்டை வெளிநாட்டவர்கள் இரண்டு வகையான வேலைகளைச் செய்கிறார்கள். உங்களுக்கு வேலையும் இருக்கிறது. அத்துடன் நீங்கள் ஒரு நிலையத்தையும் பார்த்துக் கொள்கிறீர்கள். இதனாலேயே, பாப்தாதா உங்களுக்கு இரட்டைப் பாராட்டுக்களை வழங்குகிறார். அச்சா.

எங்கும் உள்ள அதிகபட்ச அன்பான குழந்தைகளுக்கும், அதிகபட்ச நெருக்கமானவர்களுக்கும், ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இராஜரீகத்திற்கான உரிமையைக் கொண்டிருப்பவர்களுக்கும், தமது முகங்களிலும், தமது நடத்தையிலும், தூய்மையின் பிரகாசத்தை வெளிப்படுத்துபவர்களுக்கும், நினைவைக் கொண்டிருப்பதிலும் சேவை செய்வதிலும் சதா தீவிர முயற்சி செய்வதன் மூலம் முதலாம் இலக்கத்தவர்கள் ஆகுபவர்களுக்கும், தந்தையைப் போல், சகல சக்திகளினதும் சகல நற்குணங்களினதும் சதா சொரூபங்களாக இருப்பவர்களுக்கும் சகல திசைகளிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், நமஸ்தேயும்.

பாப்தாதா வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதானமான ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் சேவைக்காக மிக நல்ல திட்டங்களைச் செய்துள்ளீர்கள். ஏனென்றால், சேவை பூர்த்தியாகினால் மட்டுமே, உங்களின் இராச்சியம் வரும். ஆகவே, சேவைக்கான வழிமுறைகளும் அத்தியாவசியமானவை. எவ்வாறாயினும், சேவையானது மனதாலும், அதேவேளை வார்த்தைகளாலும் செய்யப்பட வேண்டும். அவை இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். சேவையும், சுய முன்னேற்றமும் ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய சேவையே வெற்றியை நெருக்கமாகக் கொண்டுவரும். நீங்கள் சேவை செய்வதற்குக் கருவிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் உங்களின் சொந்த இடங்களில் நல்ல சேவை செய்கிறீர்கள். ஆனால், இப்போது பாபா வழங்கிய பணியைச் செய்வதற்கான திட்டங்களைச் செய்யுங்கள். உங்களிலும் சேவையிலும் என்ன வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், மேலதிகமான எவற்றைச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு திட்டத்தைச் செய்யுங்கள். எப்படியும், பாப்தாதா எப்போதும் சேவையாளர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறார். நிலையங்கள் அனைத்தும் நன்றாக வளர்ச்சி அடைகின்றன, அல்லவா? வளர்ச்சி இருக்கிறதல்லவா? அது நல்லது. எல்லாமே நன்றாக நடக்கிறதல்லவா? அது நல்லது. அது தொடர்ந்தும் நன்றாகவே இருக்கும். இப்போது, இங்குமங்கும் சிதறிப் போயிருப்பவர்களை ஓர் ஒன்றுகூடலில் ஒன்றாகக் கொண்டுவந்து, அவர்களைப் பலசாலிகள் ஆக்குங்கள். எல்லோருக்கும் நடைமுறை அத்தாட்சியைக் காட்டுங்கள். உங்களில் சிலர் எத்தகைய சேவை செய்தாலும், நீங்கள் பல வெவ்வேறு திட்டங்களையும் செய்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் நன்றாக முன்னேறுகிறீர்கள். ஆனால் இப்போது, அவர்கள் எல்லோரும் உள்ள ஒரு குழுவை பாபாவின் முன்னால் கொண்டு வாருங்கள். அப்போது சேவைக்கான அத்தாட்சியை முழு பிராமணக் குடும்பத்தின் முன்னாலும் காட்ட முடியும். இது சரிதானே? எப்படியும் நீங்கள் எல்லோரும் நல்லவர்கள். நீங்களே எல்லோரிலும் சிறந்தவர்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் ஸ்திதியை மூன்று வகையான விழிப்புணர்வின் திலகத்துடன் மேன்மையானதாக்கி, அதன்மூலம் ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுவீர்களாக.

பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் மூன்று வகையான விழிப்புணர்வுத் திலகத்தை வழங்கியுள்ளார். ஒன்று, உங்களைப் பற்றிய விழிப்புணர்வு. இரண்டாவது, தந்தையைப் பற்றிய விழிப்புணர்வு. மூன்றாவது, மேன்மையான கர்மத்தின் விழிப்புணர்வு, அதாவது, நாடகத்தின் விழிப்புணர்வு. எப்போதும் இந்த மூன்று வகையான விழிப்புணர்வைக் கொண்டிருப்பவர்கள், மேன்மையான ஸ்திதியைக் கொண்டிருப்பார்கள். ஆத்மாவாக இருக்கும் விழிப்புணர்வுடன் கூடவே, உங்களிடம் தந்தையின் விழிப்புணர்வும் உள்ளது. அத்துடன், தந்தையின் விழிப்புணர்வுடன் கூடவே, நாடகத்தின் விழிப்புணர்வையும் கொண்டிருத்தல் அவசியமாகும். இது ஏனென்றால், உங்களின் கர்மத்தில் நாடகத்தைப் பற்றிய ஞானம் உங்களிடம் இருந்தால், எந்தவிதமான தளம்பலும் இருக்காது. எழுகின்ற வெவ்வேறு சூழ்நிலைகளிலும் நீங்கள் ஆட்ட, அசைக்க முடியாதவராக இருப்பீர்கள்.

சுலோகம்:
உங்களின் பார்வை அலௌகீகமாக இருக்கட்டும். உங்களின் மனம் குளிர்மையாகவும், உங்களின் புத்தி கருணைநிறைந்ததாகவும் இருக்கட்டும்.