03.12.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவு யாத்திரையில் கவனயீனமானவர் ஆகாதீர்கள். நினைவைக் கொண்டிருப்பதனால், ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகுவீர்கள். தந்தை சகல ஆத்மாக்களுக்கும் சேவை செய்வதற்காகவே வந்துள்ளார். அவர்களைச் சுத்தமானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆக்குவதற்காகவே அவர் வந்துள்ளார்.

கேள்வி:
உங்களது உணவும், பானமும் தூய்மையாக இருப்பதற்கு, நீங்கள் என்ன உணர்வைப் பேண வேண்டும்?

பதில்:
நீங்கள் சத்திய பூமிக்குச் செல்வதற்காகவும், மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்காகவுமே பாபாவிடம் வந்துள்ளீர்கள் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருந்தால், உங்கள் உணவும், பானமும் தூய்மையாகும், ஏனெனில், தேவர்கள் ஒருபோதும் தூய்மையற்ற எதனையும் உண்பதில்லை. நீங்கள் சத்திய பூமியாகிய தூய உலகின் அதிபதிகள் ஆகுவதற்காகவே சத்தியமான பாபாவிடம் வந்துள்ளதால், நீங்கள் தூய்மையற்றவர்களாக ஆகமுடியாது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களிடம் கேட்கின்றார்: குழந்தைகளே, நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, யாரை நினைவு செய்கின்றீர்கள்? நீங்கள் உங்களின் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கின்றீர்கள். அவர் எங்கே இருக்கின்றார்? “ஓ, தூய்மையாக்குபவரே!” என நீங்கள் அவரை அழைத்தீர்கள். இந்நாட்களில், சந்நியாசிகளும் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே! சீதா ராமா! தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற இராமா, வாருங்கள்! சத்தியயுகம் தூய உலகம் எனவும், கலியுகம் தூய்மையற்ற உலகம் எனவும் அழைக்கப்படுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் எங்கு அமர்ந்திருக்கின்றீர்கள்? கலியுகத்தின் இறுதியிலாகும். இதனாலேயே நீங்கள் அழைக்கின்றீர்கள்: பாபா, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். நாங்கள் யார்? ஆத்மாக்கள். ஆத்மாக்களே தூய்மையாக வேண்டும். ஓர் ஆத்மா தூய்மையாகும்போது, அவர் ஒரு தூய சரீரத்தைப் பெறுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர்களாகும் போது, தூய்மையற்ற சரீரங்களைப் பெறுகின்றீர்கள். இச்சரீரங்கள் மண் பொம்மைகளைப் போன்றவை, ஆனால் ஆத்மாக்களோ அழிவற்றவர்கள். ஆத்மாக்கள் இந்த அங்கங்கள் மூலமாகவே பேசுவதுடன், அழைக்கின்றனர்: நாங்கள் மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டோம். வந்து, எங்களைத் தூய்மையாக்குங்கள்! தந்தை உங்களைத் தூய்மையாக்குகின்றார், ஆனால் இராவணனாகிய, ஐந்து விகாரங்கள் உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குகின்றன. நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள் என்பதையும், 84 பிறவிகள் எடுத்த பின்னர், இப்பொழுது உங்கள் இறுதிப் பிறவியில் உள்ளீர்கள் என்பதையும் தந்தை உங்களுக்கு இப்பொழுது ஞாபகப்படுத்தியுள்ளார். தந்தை கூறுகின்றார்: நானே இம் மனித உலக விருட்சத்தின் விதையாவேன். நீங்கள் என்னை அழைத்தீர்கள்: ஓ, பரமாத்மாவாகிய பரமதந்தையே, ஓ தந்தையாகிய கடவுளே, என்னை விடுதலை செய்யுங்கள்! அனைவரும் தத்தமக்காக அழைக்கின்றனர்: என்னை விடுதலை செய்து, எனது வழிகாட்டியாகி, அமைதிதாமமாகிய வீட்டிற்குத் திரும்பவும் என்னை அழைத்துச் செல்லுங்கள். எவ்வாறு நிலையான அமைதியைக் கொண்டிருப்பது எனச் சந்நியாசிகளும் கேட்கின்றனர். அமைதிதாமமே உங்கள் வீடாகும், அங்கிருந்தே ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களது பாகங்களை நடிப்பதற்காகக் கீழிறங்கி வருகிறீர்கள். சரீரங்களன்றி, ஆத்மாக்களே அங்கு உள்ளன. ஆத்மாக்கள் நிர்வாணமாக, அதாவது, சரீரமற்றவர்களாக உள்ளனர். “நிர்வாண்” என்றால் ஆடையின்றி இருப்பது என்று அர்த்தம் அல்ல. இல்லை. ஆத்மாக்கள் சரீரங்களின்றி, நிர்வாணமாக உள்ளனர். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்மலோகத்தில் சரீரமின்றியே வசிக்கின்றீர்கள். அது அசரீரி உலகம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் எவ்வாறு ஏணியில் கீழிறங்கி வந்தீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் அதிகபட்ச எண்ணிக்கையான 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள், ஆனால், சிலரோ ஒரு பிறவியை மாத்திரமே எடுப்பவர்களாக உள்ளனர். ஆத்மாக்கள் தொடர்ந்தும் மேலிருந்து கீழே வருகின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் தூய்மையாக்குவதற்காகவே இப்பொழுது வந்துள்ளேன். சிவபாபா பிரம்மாவின் மூலமாக உங்களுக்குக் கற்பிக்கின்றார். சிவபாபாவே ஆத்மாக்களின் தந்தையாவார். பிரம்மா ஆதிதேவர் என அழைக்கப்படுகின்றார். தந்தை எவ்வாறு இந்த தாதாவினுள் பிரவேசிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள்: ஓ, தூய்மையாக்குபவரே வாருங்கள்! ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களின் மூலம் அழைக்கின்றனர். ஆத்மா என்பதே பிரதான விடயமாகும். இது துன்ப பூமியாகும். இங்கு, கலியுகத்தில், மக்கள் எங்காவது அமர்ந்திருக்கும்போதே திடீரென மரணிப்பதைப் பாருங்கள். அங்கு, எவரும் ஒருபோதும் நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகுவதில்லை. அதன்பெயரே சுவர்க்கம் ஆகும். அது அத்தகைய சிறந்த பெயராகும். நீங்கள் அப்பெயரைக் குறிப்பிடும்போது, உங்கள் இதயம் சந்தோஷம் ௮டைகின்றது. கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்கு முன்னர் வைகுந்தம் இருந்ததாக கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். இங்கு, பாரத மக்கள் எதனையும் அறியார்கள். அவர்கள் பெருமளவு சந்தோஷத்தையும், அத்துடன் பெருமளவு துன்பத்தையும் அனுபவித்துள்ளனர். அவர்கள் தமோபிரதான் ஆகிவிட்டனர். அவர்களே 84 பிறவிகளை எடுப்பவர்கள். அரைக் கல்பத்தின் பின்னரே ஏனைய சமயங்கள் வருகின்றன. அரைக் கல்பத்திற்குத் தேவர்கள் இருந்ததையும், அங்கு வேறு எச் சமயங்களும் இருக்கவில்லை என்பதையும் இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பின்னர், திரேதாயுகத்து இராமர் வந்தபோது, பௌத்தர்களோ அல்லது இஸ்லாமியர்களோ அங்கு இருக்கவில்லை. மனிதர்கள் காரிருளில் உள்ளனர். உலகத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என அவர்கள் கூறுகின்றனர். இதனாலேயே மனிதர்கள் குழப்பமடைந்து, கலியுகம் இன்னமும் அதன் குழந்தைப் பருவத்தில் இருப்பதாக நம்புகின்றனர். கலியுகம் முடிவுக்கு வருவதையும், சத்தியயுகம் வரப்போகின்றது என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அதனாலேயே நீங்கள் உங்களது சுவர்க்க ஆஸ்தியைக் கோருவதற்காகத் தந்தையிடம் வந்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் சுவர்க்கத்தில் வசித்தீர்கள். தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு மாத்திரமே வருகின்றார். நீங்கள் மாத்திரமே சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள். ஏனைய அனைவரும் அமைதிதாமமாகிய வீட்டிற்குச் செல்வார்கள். அதுவே சகல ஆத்மாக்களும் வசிக்கின்ற, இனிய வீடாகும். பின்னர், அவர்கள் தங்களது பாகங்களை நடிப்பதற்காக இங்கு கீழிறங்கி வருகின்றனர். சரீரமின்றி, ஓர் ஆத்மாவினால் பேச முடியாது. அங்கு, ஆத்மாக்கள் சரீரத்தைக் கொண்டிருக்காததால், அவர்கள் மௌனமாக உள்ளனர். பின்னர், அரைக் கல்பத்திற்குச் சூரியவம்ச, சந்திரவம்ச தேவர்கள் உள்ளனர். பின்னர் துவாபர, கலியுகங்களில் மனிதர்கள் உள்ளனர். தேவர்களின் இராச்சியம் இருந்தது. அவர்கள் இப்பொழுது எங்கு சென்றுவிட்டனர்? எவருமே அறியார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். வேறு எந்த மனிதர்களிடமும் இந்த ஞானம் இல்லை. தந்தை மாத்திரமே வந்து, மனிதர்களாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அதன் மூலமாக நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். தேவர்களின் உணவும், பானமும் ஒருபோதும் தூய்மையற்றதாக இருப்பதில்லை. அவர்கள் ஒருபோதும் சிகரெட் போன்றவற்றைப் புகைப்பதில்லை. இங்கு, தூய்மையற்ற மனிதர்கள் என்ன செய்கின்றார்கள் எனக் கேட்கவே வேண்டாம்! அவர்கள் அனைத்தையும் உண்கின்றார்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: முன்னர், இந்தப் பாரதம் சத்திய பூமியாக இருந்தது. சத்தியமான தந்தையே நிச்சயமாக அதனை ஸ்தாபித்திருக்க வேண்டும். தந்தை சத்தியமானவர் என அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் மாத்திரமே இந்தப் பாரதத்தைச் சத்திய பூமியாக ஆக்குகின்றேன். நீங்கள் எவ்வாறு உண்மையான தேவர்கள் ஆகலாம் என்பதையும் நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். பல குழந்தைகள் இங்கு வருகின்றனர். இதனாலேயே இக்கட்டடங்கள் போன்றவை கட்டப்பட்டுள்ளன. அவை இறுதிவரை தொடர்ந்தும் கட்டப்படும். பல கட்டடங்கள் கட்டப்படும், சில வாங்கப்படும். சிவபாபா பிரம்மா மூலம் இப்பணியை மேற்கொள்கின்றார். இது பிரம்மாவின் பல பிறவிகளின் இறுதிப்பிறவி என்பதால், அவர் அவலட்சணமானவர் ஆகிவிட்டார். பின்னர் அவர் அழகானவர் ஆகுவார். கிருஷ்ணரை அவலட்சணமானவராகவும், அழகானவராகவும் சித்தரிக்கின்ற படமொன்று உள்ளது. அருங்காட்சியகங்களில் பல பெரிய, அழகான படங்களும் உள்ளன. உங்களால் இப்படங்களை எவருக்கும் மிகவும் நன்றாக விளங்கப்படுத்த முடியும், பாபா இங்கு ஓர் அருங்காட்சியகத்தைக் கட்டுவிக்கவில்லை. இது மௌன கோபுரம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் அமைதிதாமமாகிய உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை அறிவீர்கள். நாங்கள் அவ்விடத்து வாசிகள், பின்னர், நாங்கள் இங்கு வந்து, சரீரங்களை ஏற்று, எங்கள் பாகங்களை நடிக்கின்றோம். அனைத்திற்கும் முதலில், உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு சாதுவோ அல்லது புனிதரோ அல்லர் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இந்த தாதா சிந்திவாசியாக இருந்தார், ஆனால், உங்களுடன் பேசுவதற்காக அவரில் பிரவேசித்திருப்பவர் ஞானக்கடல் ஆவார். எவருமே அவரை அறியார்கள். அவர்கள், “தந்தையாகிய கடவுள்” என்று .கூறுகின்றபோதிலும், அவருக்கு ஒரு பெயரோ அல்லது உருவமோ இல்லையென்றும், அவர் அசரீரியானவர் என்றும் கூறுகின்றனர். அவருக்கு ஒரு உருவம் இல்லையென்று அவர்கள் கூறி, பின்னர் அவர் சர்வவியாபகர் என்றும் கூறுகின்றனர். பரமாத்மா எங்கே இருக்கின்றார் என அவர்களிடம் கேளுங்கள். அவர் சர்வவியாபகர் என்றோ அல்லது அவர் அனைவரினுள்ளும் இருக்கின்றார் என்றோ அவர்கள் பதில் அளிப்பார்கள். ஓ! ஆனால் ஒவ்வொருவரினுள்ளும் ஓர் ஆத்மா இருக்கின்றார். அனைவரும் சகோதரர்கள். எனவே, எவ்வாறு கடவுள் ஒவ்வொரு துணிக்கையிலும் இருக்க முடியும்? ஒவ்வொருவரினுள்ளும் ஆத்மாவும், அத்துடன் பரமாத்மாவும் இருப்பதாக நீங்கள் கூறமுடியாது. நீங்கள் பரமாத்மாவாகிய தந்தையை அழைக்கின்றீர்கள்: பாபா, வந்து, தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள். உங்கள் அனைவரையும் தூய்மையாக்குகின்ற இந்தத் தொழிலை, இந்தச் சேவையை வந்து செய்யுமாறு என்னை அழைக்கின்றீர்கள். இத் தூய்மையற்ற உலகிற்கு வருமாறு நீங்கள் எனக்கு அழைப்பு விடுக்கின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் தூய்மையற்றவர்கள். தந்தை ஒருபோதும் தூய உலகைப் பார்ப்பதில்லை. அவர் உங்களுக்குச் சேவை செய்வதற்காகவே இத் தூய்மையற்ற உலகிற்கு வந்துள்ளார். இந்த இராவண இராச்சியம் இப்பொழுது அழிக்கப்படவுள்ளது. இராஜ யோகத்தைக் கற்கின்ற நீங்கள் அனைவரும் அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆகுவீர்கள். அவர் எண்ணற்ற தடவைகள் உங்களுக்கு இதனைக் கற்பித்துள்ளார். அவர் உங்களுக்கு மீண்டும் 5000 வருடங்களின் பின்னரே கற்பிப்பார். சத்திய, திரேதா யுக இராச்சியங்கள் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றன. முதலில், பிராமணக் குலம் இருக்க வேண்டும். மனித குலத்தின் தந்தையாகிய பிரம்மா நினைவுகூரப்பட்டுள்ளார். அவர் ஆதாம் என்றும், ஆதிதேவர் (முதலாவது தேவர்) என்றும் அழைக்கப்படுகின்றார். எவரும் இதனை அறியார்கள். இங்கு வந்து, இவ்விடயங்களைச் செவிமடுத்து, பின்னர் மாயையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுகின்ற பலர் இருக்கின்றனர். புண்ணியாத்மாக்களாக ஆகும்பொழுது, அவர்கள் பாவாத்மாக்கள் ஆகிவிடுகின்றனர். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள்; அவள் அனைவரையும் பாவாத்மாக்கள் ஆக்குகின்றாள். இங்கு, தூய, புண்ணியாத்மாக்கள் என எவருமே இல்லை. தேவர்கள் தூய ஆத்மாக்களாக இருந்தனர். நீங்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள் ஆகும்போதே தந்தையை அழைக்கின்றீர்கள். இப்பொழுது இது இராவண இராச்சியமான, தூய்மையற்ற உலகமாகும். இது முட்காடு எனவும் அழைக்கப்படுகின்றது. சத்தியயுகம் பூந்தோட்டம் என அழைக்கப்படுகின்றது. முகல் தோட்டத்தில் பல்வேறு முதற்தரமான மலர்கள் உள்ளன. அங்கு எருக்கலம்பூவை நீங்கள் காண முடியும். ஆனால், அவற்றின் அர்த்தத்தையோ அல்லது அவர்கள் ஏன் எருக்கலம்பூவை சிவனுக்குப் படைக்கின்றனர் என்பதையோ எவருமே அறியார். தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார்: நான் கற்பிப்பவர்களில் பல்வேறு வகையான மலர்கள் உள்ளனர். முதற்தரமான மல்லிகை மலர்களும், ஏனைய நறுமணம் வீசும் மலர்களும் (ரத்தன் ஜோதி), அத்துடன் எருக்கலம்பூ போன்ற சிலரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். இது மரண பூமியாகிய துன்ப பூமி என அழைக்கப்படுகின்றது. சத்தியயுகம் அமரத்துவ பூமியாகும். இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. இந்த தாதா சமயநூல்களைக் கற்றார்; தந்தை சமயநூல்களிலிருந்து கற்பிப்பதில்லை. தந்தையே சற்கதியை அருள்பவர். சிலவேளைகளில் அவர் கீதையைக் குறிப்பிடுகின்றார். கடவுளே சகல சமயநூல்களினதும் இரத்தினமாகிய கீதையைப் பேசினார். ஆனால், கடவுள் யார் என்பதைப் பாரத மக்கள் அறியார்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குத் தன்னலமின்றிச் சேவை செய்து, உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றேன். நான் அவ்வாறு ஆகுவதில்லை. நீங்கள் சுவர்க்கத்தில் என்னை நினைவுசெய்ய மாட்டீர்கள். துன்ப வேளையில் அனைவரும் என்னை நினைவு செய்கின்றார்கள். ஆனால், சந்தோஷ வேளையில் எவருமே என்னை நினைவு செய்வதில்லை. இது சந்தோஷமும், துன்பமும் உள்ள நாடகம் என அழைக்கப்படுகின்றது. சுவர்க்கத்தில் வேறு எந்தச் சமயங்களும் இல்லை. அவை அனைத்தும் பின்னரே வருகின்றன. இப்பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்படவுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பல இயற்கை அனர்த்தங்களும், புயல்களும் பெரும் விசையுடன் வரும். அனைவரும் அழிக்கப்படுவார்கள். தந்தை இப்பொழுது வந்து, உங்களை விவேகமற்றவர்களிலிருந்து விவேகிகள் ஆக்குகின்றார். தந்தை உங்களுக்கு அதிகளவு செல்வத்தைக் கொடுத்தார். அவையனைத்தும் எங்கு சென்றுவிட்டன? நீங்கள் இப்பொழுது மிகவும் கடனாளிகள் ஆகிவிட்டீர்கள். தங்கச் சிட்டுக்குருவியாக அறியப்பட்ட பாரதம் இப்பொழுது என்னவாகிவிட்டது? தூய்மையாக்குபவராகிய தந்தை இப்பொழுது வந்து, மீண்டும் ஒருமுறை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். அது ஹத்தயோகம், இதுவோ இராஜயோகம் ஆகும். இந்த இராஜயோகம் ஆண், பெண் இரு பாலாருக்குமானதாகும். அந்த ஹத்தயோகமோ ஆண்களால் மாத்திரமே கற்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் முயற்சி செய்து, நிச்சயமாக உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதை அனைவருக்கும் காட்ட வேண்டும். இப்பழைய உலகம் இப்பொழுது நிச்சயமாக அழியப்போகின்றது. இப்பொழுது சொற்ப காலமே எஞ்சியுள்ளது. அந்த யுத்தமே இறுதி யுத்தமாகும். அந்த யுத்தம் ஆரம்பித்துவிட்டால், அது நிறுத்தப்பட மாட்டாது. நீங்கள் உங்களது கர்மாதீத ஸ்திதியை அடைந்து, சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதிவாய்ந்தவராகும்போதே அந்த யுத்தம் ஆரம்பமாகும். மீண்டும் தந்தை கூறுகின்றார்: உங்கள் நினைவு யாத்திரையில் கவனயீனமானவர் ஆகாதீர்கள். இதிலேயே மாயை தடைகளை ஏற்படுத்துகின்றாள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் நன்றாகக் கற்பதனால், முதற்தரமான மலர்கள் ஆகுங்கள். இந்த முட்காட்டைப் பூந்தோட்டம் ஆக்குவதற்கு, தந்தையின் முழுமையான உதவியாளர் ஆகுங்கள்.

2. கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கும், சுவர்க்கத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்திற்கான உரிமையைக் கொண்டிருப்பதற்கும் நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள், கவனயீனமானவர் ஆகாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா தந்தையின் ஆசீர்வாதக் கரங்களை உங்களின் தலைமீது அனுபவம் செய்து, மாஸ்ரர் தடைகளை அழிப்பவர் ஆகுவீர்களாக.

கணேஷ் தடைகளை அழிப்பவர் எனப்படுகிறார். சகல சக்திகளையும் கொண்டிருப்பவர்களால் தடைகளை அழிப்பவர்கள் ஆகமுடியும். அந்த நேரத்திற்குத் தேவையான ஒவ்வொரு சக்தியையும் பயன்படுத்துங்கள். எந்தவொரு தடையாலும் தங்கியிருக்க முடியாது. மாயை எத்தனை வடிவங்களை எடுத்தாலும், ஞானம் நிறைந்தவராக இருங்கள். ஞானம் நிறைந்ததோர் ஆத்மாவால் ஒருபோதும் மாயையால் தோற்கடிக்கப்பட முடியாது. பாப்தாதாவின் ஆசீர்வாதக் கரங்கள் உங்களின் தலைமீது இருக்கும்போது, வெற்றித் திலகம் இடப்படும். இறைவனின் கரமும் அவரின் சகவாசமும் உங்களைத் தடைகளை அழிப்பவர்கள் ஆக்குகிறது.

சுலோகம்:
நற்குணங்களைக் கிரகித்து, அவற்றை மற்றவர்களுக்குத் தானம் செய்பவர்கள், நற்குண சொரூபங்கள் ஆவார்கள்.