04.02.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்கு அழியாத ஞான இரத்தினங்களைத் தானம் செய்கின்றார். அதனை நீங்கள் ஏனையோருக்குத் தானம் செய்கின்றீர்கள். இவற்றைத் தானம் செய்வதனாலேயே நீங்கள் சற்கதி அடைகின்றீர்கள்.
கேள்வி:
வேறு எவருமன்றி குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிந்து கொண்ட புதிய பாதை எது?பதில்:
தந்தை இப்பொழுது உங்களுக்கு வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்ற பாதையையும் சுவர்க்கத்திற்குச் செல்கின்ற பாதையையும் காட்டியுள்ளார். அமைதி தாமமே ஆத்மாக்களாகிய உங்கள் வீடு என்பதை நீங்கள் அறிவீர்கள். சுவர்க்கம், அமைதி தாமத்திலிருந்து வேறுபட்டதாகும். உங்களைத் தவிர வேறு எவரும் இந்தப் புதிய பாதையை அறிய மாட்டார்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: இப்பொழுது கும்பகர்ண தூக்கத்தைத் துறந்திடுங்கள். உங்கள் கண்களைத் திறந்து தூய்மையாகுங்கள். நீங்கள் தூய்மையாகினால் மாத்திரமே உங்களால் வீடு திரும்பமுடியும்.பாடல்:
விழித்தெழுங்கள் ஓ மணவாட்டிகளே விழித்தெழுங்கள்!ஓம் சாந்தி.
கடவுள் பேசுகிறார். மனிதர்களும் தேவர்களும் பௌதீக வடிவங்களைக் கொண்டிருப்பதனால் அவர்களைக் கடவுள் என அழைக்க முடியாது என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். பரமாத்மாவாகிய பரமதந்தைக்கு சூட்சுமமான வடிவமோ அல்லது பௌதீக வடிவமோ இல்லை. இதனாலேயே கூறப்படுகின்றது: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். அவர் மாத்திரமே ஞானக்கடல் ஆவார். எந்த மனிதரிடமும் இந்த ஞானம் இருக்க முடியாது. எந்த ஞானம்? படைப்பவரினதும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானம் ஆகும். ஆத்மாக்களினதோ அல்லது பரமாத்மாவினதோ ஞானம் எவரிடமும் இல்லை. ஆகவே தந்தை வந்து உங்களை விழித்தெழச் செய்கின்றார்: ஓ மணவாட்டிகளே ஓ பக்தர்களே விழித்தெழுங்கள்! அனைத்து ஆண்களும் பெண்களும் பக்தர்களே. அவர்கள் கடவுளை நினைவு செய்கின்றார்கள். மணவாட்டிகள் அனைவரும் மணவாளனை நினைவு செய்கின்றார்கள். ஆத்மாக்களாகிய சகல காதலர்களும் அன்பிற்கினிய பரமாத்மாவாகிய பரமதந்தையை நினைவு செய்கின்றார்கள். அனைவரும் சீதைகள். பரமாத்மாவாகிய பரமதந்தை ஒருவரே இராமர் ஆவார். ஏன் இராமர் என்ற பதம் உபயோகிக்கப்படுகின்றது? இப்பொழுது இது இராவண இராச்சியமாகும். அதனுடன் ஒப்பிடும்போது மற்றையது இராம இராச்சியம் என்று கூறப்படுகின்றது. இராமரே தந்தை ஆவார். அவர் ஈஸ்வரர் (கடவுள்) என்றும் பகவான் (கடவுள்) என்றும் அழைக்கப்படுகின்றார். அவரின் ஆதியான பெயர் சிவன் ஆகும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: விழித்தெழுங்கள்! புதிய யுகம் வரவுள்ளது. பழைய யுகம் முடிவுக்கு வருகின்றது. இந்த மஹாபாரத யுத்தத்தின் பின்னர் சத்திய யுகம் ஸ்தாபிக்கப்பட்டு இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் ஸ்தாபிக்கப்படும். பழைய கலியுகம் முடிவிற்கு வருகின்றது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே! கும்பகர்ண தூக்கத்தைத் துறந்து விடுங்கள்! இப்பாழுது உங்கள் கண்களைத் திறவுங்கள்! புதிய உலகம் வருகின்றது. சத்திய யுகமான புதிய உலகம் சுவர்க்கமென அழைக்கப்படுகின்றது. இந்தப் பாதை புதியதாகும். வீட்டிற்குத் திரும்புகின்ற, அதாவது சுவர்க்கத்திற்குச் செல்கின்ற பாதை எவருக்கும் தெரியாது. சுவர்க்கம் என்பது ஆத்மாக்கள் வசிக்கின்ற அமைதி தாமத்திலிருந்து வேறுபட்டது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: விழித்தெழுங்கள்! நீங்கள் இராவணனின் இராச்சியத்தில் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இந்த நேரத்தில் ஓர் ஆத்மாவேனும் தூய்மையாக இருக்க முடியாது. அவர்களைத் தூய, தர்மாத்மாக்களென அழைக்க முடியாது. மக்கள் தான, தர்மங்கள் செய்தாலும் ஓர் ஆத்மாவைக்கூட தூய ஆத்மா என்று அழைக்க முடியாது. கலியுகமான இங்கு தூய்மையற்ற ஆத்மாக்களே இருக்கின்றார்கள். சத்திய யுகத்தில் தூய ஆத்மாக்கள் இருக்கிறார்கள். இதனாலேயே அவர்கள் கூறுகிறார்கள்: ஓ சிவபாபா, வந்து எங்களைத் தூய ஆத்மாக்கள் ஆக்குங்கள். இது தூய்மைக்குரிய ஒரு விடயமாகும். அழியாத ஞான இரத்தினங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தானம் செய்வதற்காகத் தந்தை இப்பொழுது வருகின்றார். அவர் கூறுகின்றார்: தொடர்ந்து இவற்றை ஏனையோர்களுக்குத் தானம் செய்யுங்கள். ஐந்து விகாரங்களின் கிரகணமும் அகற்றப்படும். ஐந்து விகாரங்களையும் தானம் செய்யுங்கள். துன்பத்தின் கிரகணம் அகற்றப்படும். பின்னர்; நீங்கள் தூய்மையாகி சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். காமமே ஐந்து விகாரங்களிலும் முதன்மையானது. அதனைத் துறந்து தூய்மை ஆகுங்கள். மக்கள் கூறுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! விகாரத்தில் ஈடுபடுபவர்கள் தூய்மை அற்றவர்கள் எனப்படுவார்கள். இந்த இன்பமும் துன்பமும் என்ற நாடகம் பாரதத்திற்கு மாத்திரமே பொருந்தும். தந்தை பாரதத்தில் வந்து ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசித்து இவரின் வாழ்க்கை வரலாற்றை எங்களுக்குக் கூறுகின்றார். நீங்கள் அனைவரும் பிராமணர்கள், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். அவர் தூய்மை ஆகுவதற்கான சகல வழிகளையும் உங்களுக்குக் காட்டுகின்றார். பிரம்மா குமாரர்களும் குமாரிகளுமான நீங்கள் விகாரத்தில் ஈடுபட முடியாது. இந்த ஒரு பிறவியில் மாத்திரமே நீங்கள் பிராமணர்கள். நீங்கள் தேவ குலத்தில் 21 பிறவிகளும் சத்திரிய, சூத்திர குலங்களில் 63 பிறவிகளும் எடுக்கின்றீர்கள். இறுதிப் பிறவி பிராமண குலமாகும். இதிலேயே நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: தந்தையை நினைவு செய்வதன் மூலமும் யோக சக்தியின் மூலமும் உங்கள் பாவங்களை எரித்து தூய்மை ஆகுங்கள். இந்த ஒரு பிறவியில் தூய்மையாகுங்கள். சத்திய யுகத்தில் தூய்மை அற்றவர்கள் எவரும் இல்லை. இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாகுவதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்குத் தூய்மையானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தூய்மை அற்றவர்களாக இருந்ததனால் அழைத்தீர்கள். உங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்கியது யார்? இராவணனின் அசுர அறிவுறுத்தல்களே. என்னைத் தவிர வேறு எவராலும் குழந்தைகளாகிய உங்களைத் துன்பத்திலிருந்தும் இராவணனின் இராச்சியத்திலிருந்தும் விடுவிக்க முடியாது. காமச் சிதையில் அமர்ந்ததனால் அனைவரும் எரிக்கப்பட்டு விட்டனர். உங்களை இந்த ஞானச் சிதையில் அமர்த்துவதற்காக நான் வரவேண்டியுள்ளது. இந்த ஞானம் என்ற நீரை நான் ஊற்ற வேண்டியுள்ளது. நீங்கள் அனைவரும் ஜீவன் முக்தி அடையவேண்டும். நன்றாகக் கற்பவர்களே சற்கதியை அனுபவம் செய்கின்றார்கள். ஏனைய அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்கின்றார்கள். சத்திய யுகத்தில் தேவர்கள் மாத்திரமே உள்ளார்கள். அவர்களே சற்கதியை பெற்றவர்கள். ஏனையவர்கள் விடுதலையை, அதாவது முக்தியைப் பெறுகின்றார்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் தேவர்களின் இராச்சியம் இருந்தது. அது நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் என்ற கேள்வியல்ல. தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்! மன்மனாபவ என்ற வார்த்தை மிகவும் பிரபல்யமானது. கடவுள் பேசுகிறார்: சரீரதாரி எவரையும் கடவுள் என அழைக்க முடியாது. ஆத்மாக்கள் சரீரங்களை நீக்கிவிட்டு வேறொன்றை எடுக்கின்றார்கள். சில வேளைகளில் அவர்கள் பெண்ணாகவும் சில வேளைகளில் அவர்கள் ஆணாகவும் இருக்கிறார்கள். கடவுள் பிறப்பு இறப்பு என்ற நாடகத்தில் வருவதில்லை. இது நாடகத்திற்கேற்ப நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒரு பிறவி அடுத்ததைப் போன்று இருக்கமுடியாது. உங்களின் இந்தப் பிறவி மீண்டும் நிகழும். நீங்கள் அதே பாகத்தையும் அதே முகச்சாயலையும் மீண்டும் கொண்டிருப்பீர்கள். இந்த நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அது ஒருபோதும் மாறுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணர் முன்னர் சத்தியயுகத்தில் பெற்றிருந்த அதே சரீரத்தையே பெறுவார். அந்த ஆத்மா இப்பொழுது இங்கிருக்கின்றார். நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆகுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். படங்களில் காட்டப்பட்டுள்ள இலக்ஷ்மி நாராயணனின் முகச் சாயல்கள் மிகச் சரியானவையல்ல. ஆனால் அவை மீண்டும் அவ்வாறு உருவாக்கப்படும். புதியவர்கள் எவரும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் அனைவருக்கும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்தும் பொழுதே 84 பிறவிச் சக்கரத்தையும் ஒவ்வொரு பிறவியிலும் பெயர், வடிவம், முகச்சாயல் போன்றவை நிச்சயமாக வெவ்வேறாக இருக்கும் என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியும். இந்த முகச்சாயல் இவரின் இறுதிப் பிறவியான 84 ஆவது பிறவியினதாகும். இதனாலேயே நாராயணன் அதே முகச்சாயலுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு இல்லாவிடின் மக்களால் புரிந்து கொள்ள முடியாது. மம்மாவும். பாபாவும் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இங்குள்ள பஞ்ச பூதங்களும் தூய்மையானவை அல்ல. இந்தச் சரீரங்கள் அனைத்தும் தூய்மை அற்றவை. சத்திய யுகத்தில் சரீரங்கள் தூய்மையானவை. ஸ்ரீகிருஷ்ணரே மிகவும் அழகானவரென கூறப்படுகின்றது. அவரிடம் இயற்கை அழகுள்ளது. வெளிநாட்டிலுள்ள மக்கள் வெள்ளை நிறமாக இருந்தாலும் அவர்களைத் தேவர்களென அழைக்க முடியாது. அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் இல்லை. தந்தை இங்கு அமர்ந்திருந்து மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். இந்த அதி மேன்மையான கல்வியைக் கற்பதன் மூலம் நீங்கள் அத்தகைய மேன்மையான வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். அங்கு எண்ணற்ற வைரங்களும் இரத்தினங்களும் செல்வமும் இருந்தன. அங்கிருந்த மாளிகைகளில் வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் மறைந்து விட்டன. நீங்கள் மிகுந்த செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கான எல்லையற்ற வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். ஆனால் இதற்கு அதிகளவு முயற்சி தேவை. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! நான் ஓர் ஆத்மா. நான் இப்பொழுது இந்தப் பழைய சரீரத்தை நீக்கி விட்டு வீட்டிற்குத் திரும்ப வேண்டும். உங்களைத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காகத் தந்தை இப்பொழுது வந்துள்ளார். ஆத்மாவாகிய நான் இப்பொழுது 84 பிறவிகளைப் பூர்த்தி செய்துவிட்டேன். நான் தந்தையை நினைவு செய்து மீண்டும் ஒருமுறை தூய்மையாக வேண்டும். இல்லையேல் தண்டனை கிடைக்கும். ஏனெனில் வீடு திரும்புவதற்கு முன் கணக்கைத் தீர்ப்பதற்கான காலம் இதுவே ஆகும். சகல ஆத்மாக்களும் தங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்க்கவேண்டும். பக்தி மார்க்கத்தில் மக்கள் தங்களைக் காசியில் அர்ப்பணிக்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்வதனால் எவரும் முக்தி அடைவதில்லை. அது பக்தி மார்க்கமாகும். இது ஞான மார்க்கமாகும். தற்கொலை செய்வது என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அது தற்கொலையாகும். எவ்வாறாயினும் முக்தியடைய வேண்டுமென்ற ஆழமான ஆசையினால் அவர்களின் பாவக் கணக்குத் தீர்க்கப்படுகிறது. பின்னர் அது மீண்டும் ஆரம்பிக்கின்றது. தங்களைக் காசியில் அர்ப்பணிக்க வேண்டுமென்ற தைரியம் இப்பொழுது மக்களிடம் இல்லை. எவ்வாறாயினும் அவ்வாறு செய்வதால் முக்தியையோ அல்லது ஜீவன்முக்தியையோ எவராலும் பெறமுடியாது. வேறு எவருமன்றி தந்தையால் மாத்திரமே முக்தியை அல்லது ஜீவன் முக்தியை அளிக்க முடியும். ஆத்மாக்கள் தொடர்ந்தும் கீழே இறங்குகின்றார்கள். ஆகவே ஆத்மாக்கள் எவ்வாறு வீடு திரும்ப முடியும்? ஒரேயொரு தந்தையே வந்து அனைவருக்கும் முக்தியை அளித்து அவர்களை வீட்டிற்குக் அழைத்துச் செல்ல முடியும். சத்திய யுகத்தில் மிகக் குறைந்த அளவிலான மக்களே இருக்கின்றார்கள். ஆத்மாக்கள் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். சரீரங்கள் அழியக்கூடியவை. சத்திய யுகத்திலுள்ள மக்களுக்கு நீண்ட ஆயுட்காலம் உள்ளது. அங்கு துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களை விட்டு நீங்கி அவர்களின் அடுத்த சரீரத்தை எடுப்பார்கள். பாம்பின் உதாரணமும் உள்ளது. சரீரத்தை நீக்கிவிடுவது மரணித்தல் என்று அழைக்கப்படுவதில்லை. அதில் துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அந்தச் சரீரத்தை விட்டு நீங்கி தங்களுடைய அடுத்த சரீரத்தை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அந்த சரீரத்தில் பற்றற்றவர்களாக இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றீர்கள். நான் ஓர் ஆத்மா. இப்பொழுது நான் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். பின்னர் நான் புதிய உலகிற்குச் செல்வேன். நான் ஒரு புதிய சரீரத்தை எடுப்பேன். இதனைப் பயிற்சி செய்யுங்கள்! நீங்கள் 84 சரீரங்களை எடுக்கின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். எவ்வாறாயினும் மக்கள் 8.4 மில்லியன் இனம் பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள் தந்தையைப் பற்றிப் பேசும்போது, அவர் கற்கள், கூழாங்கற்கள், எண்ணற்ற பொருட்களில் இருப்பதாகவும் கூறுகின்றார்கள். அதுவே தர்மத்தை அவதூறு செய்தல் எனப்படுகின்றது. சுத்தமாக இருந்த மனிதர்களின் புத்தி இப்பொழுது சீரழிந்துவிட்டது. தந்தை இப்பொழுது உங்கள் புத்தியைச் சுத்திகரிக்கின்றார். நினைவின் மூலம் அது சுத்திகரிக்கப்படுகின்றது. தந்தை கூறுகிறார்: புதிய யுகம் இப்பொழுது வரவுள்ளது. அதன் அடையாளம் இந்த மஹாபாரத யுத்தமாகும். ஏவுகணைகள் மூலம் நடாத்தப்பட்ட இந்த யுத்தத்தின் மூலமே ஏனைய சமயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆகவே நிச்சயமாகக் கடவுளும் அங்கு இருக்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரால் எவ்வாறு இங்கு வர முடியும்? ஸ்ரீகிருஷ்ணர் ஞானக்கடலா அல்லது ஒரேயொரு அசரீரியானவர் ஞானக்கடலா? ஸ்ரீகிருஷ்ணரிடம் இந்த ஞானமேனும் இருக்காது. இந்த ஞானம் மறைந்துவிடும். உங்கள் ரூபங்களும் பக்தி மார்க்கத்திலே உருவாக்கப்படுகின்றது. நீங்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களில் இருந்து பூஜிப்பவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் போகிகள் (இந்திரிய சுகங்களில் ஈடுபடுவர்) ஆகியதால் உங்கள் சுவர்க்கக் கலைகள் குறைவடைவதுடன் ஆயுட்காலமும் குறைவடைகின்றது. அங்கு அவர்கள் அனைவரும் யோகிகளே. எவராவது ஒருவருடன் அவர்கள் யோகத்தைக் கொண்டிருப்பார்கள் என்று அர்த்தமல்ல. எவ்வாறாயினும் அங்கு அவர்கள் தூய்மையாக உள்ளார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் யோகேஸ்வர் (யோகத்தின் பிரபு) என்றும் அழைக்கப்படுகின்றார். இந்த நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருக்கின்றார். இந்த நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா யோகேஸ்வரர் ஆவார். சத்திய யுகத்தில் அவர் யோகேஸ்வர் என்று அழைக்கப்பட மாட்டார். அவர் ஓர் இளவரசர் என்றே அழைக்கப்படுகின்றார். வேறு எவருடைய சரீரத்தையும் நினைவு செய்யாது தந்தையை மாத்திரமே நினைவு செய்யும் வகையில் இறுதியில் உங்களுடைய ஸ்திதியானது இருக்கும். சரீரங்கள் மீதும் பழைய உலகின் மீதுமுள்ள உங்கள் பற்று அனைத்தும் முடிவடைய வேண்டும். சந்நியாசிகள் பழைய உலகில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்கள் இல்லறத்தவர்கள் மீதுள்ள பற்றை முடித்து விடுகின்றார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்தையே கடவுள் என நம்புவதுடன் அவர்கள் அதனுடன் யோகம் செய்கின்றார்கள். அவர்கள் தங்களை பிரம்ம கியானி என்றும் தத்வ கியானி என்றும் (பிரம்ம ஞானத்தைப் பற்றியும் ஒளித்தத்துவத்தைப் பற்றியும்) அழைக்கிறார்கள். அவர்கள் தாங்கள் பிரம்ம தத்துவத்துடன் கலந்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். தந்தை கூறுகிறார்: அவை அனைத்தும் தவறாகும். நான் ஒருவரே சரியானவர். நான் ஒருவரே சத்தியம் என அழைக்கப்படுகிறேன். உங்களுடைய நினைவு யாத்திரை மிகவும் உறுதியானதாக இருக்கவேண்டும் எனத் தந்தை கூறுகிறார். இந்த ஞானம் மிகவும் இலகுவானது. ஆனால் ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி தேவை. தந்தை கூறுகிறார்: நீங்கள் எவருடைய சரீரத்தையும் நினைவு செய்யக்கூடாது. அது ஒரு தீய ஆவியின் நினைவாகும். அது ஒரு தீய ஆவியை வணங்குவதாகும். நான் சரீரமற்றவர். நீங்கள் என்னை நினைவு செய்யவேண்டும். கண்களால் பார்க்கும்போதும் உங்கள் புத்தியினால் தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி தர்மராஜின் தண்டனையிலிருந்து விடுபடுங்கள். நீங்கள் தூய்மையாகினால் தண்டனை முடிவடைந்துவிடும். இலக்கு மிகவும் உயர்ந்ததாகும். பிரஜைகளை உருவாக்குவது சுலபம். ஆனால் அவர்களுள் யார் செல்வந்த பிரஜைகளாகவும் யார் ஏழைப் பிரஜைகளாகவும் ஆகுவார்கள் என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியில் உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடனும் வீட்டுடனும் மாத்திரமே இருக்கவேண்டும். நடிகர்கள் தங்கள் பாகங்களை நடித்து முடித்ததும் அவர்களின் புத்தி அவர்களுடைய வீட்டிற்கே செல்லும். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். அங்கு அவர்கள் எல்லைக்குட்பட்ட வருமானத்தைச் சம்பாதிக்கின்றார்கள். இங்கு உங்களுடைய வருமானம் எல்லையற்றது. சிறந்த நடிகர்கள் அதிகளவு வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். ஆகவே தந்தை கூறுகிறார்: வீட்டில் வாழ்ந்தவாறு உங்கள் தொழிலை மேற்கொள்ளும் போதும் உங்கள் புத்தியின் யோகம் மேலே இணைந்திருக்க வேண்டும். மனிதர்கள் ஒருவரையொருவர் காதலிக்கின்றார்கள். இங்கு நீங்கள் அனைவரும் ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலர்கள் ஆவீர்கள். அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள். அவரே அற்புதமான பயணி. இந்த நேரத்தில் அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவித்து அவர்களுக்கு சற்கதியை அருள்வதற்காகவே அவர் வருகின்றார். உண்மையான அன்பிற்கினியவர் என்று அவர் அழைக்கப்படுகின்றார். மக்கள் ஒருவரின் சரீரத்தையே காதலிக்கின்றார்கள். அதில் விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால் அது சரீர உணர்வின் யோகம் என்று அழைக்கப்படுகிறது. அது சடப்பொருட்களை நினைவு செய்வதாகும். மனிதர்களை நினைவு செய்வது என்பது சடப்பொருளினாலான பஞ்ச பூதுங்களை நினைவு செய்வதாகும். தந்தை கூறுகிறார்: பஞ்ச தத்துவங்களையும் மறந்து என்னை நினைவு செய்யுங்கள்! இதற்கு முயற்சி தேவை. உங்களுக்கு தெய்வீகக் குணங்களும் தேவை. எவரையாவது பழிவாங்குவதும் அசுர குணமேயாகும். சத்திய யுகத்தில் ஒரேயொரு தர்மமே உள்ளது. எவரையும் பழிவாங்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. அதுவே பிரிவினையற்ற தேவ தர்மாகும். தந்தை சிவனைத் தவிர வேறு எவராலும் அதனை ஸ்தாபிக்க முடியாது. சூட்சும உலகில் வாழும் தேவர்கள், தேவதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இப்பொழுது நீங்கள் பிராமணர்கள். பின்னர் நீங்கள் தேவதைகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் வீட்டிற்குத் திரும்பி புதிய உலகிற்குக் கீழே இறங்கி வந்து தெய்வீகக் குணங்களையுடைய மனிதர்கள் ஆகுகிறீர்கள். அதன் அர்த்தம் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள் என்பதாகும். இப்பொழுது நீங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆகாவிட்டால் எப்படி ஆஸ்தியைப் பெறுவீர்கள்? இந்த மம்மாவும் பிரஜாபிதா பிரம்மாவும் பின்னர் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றார்கள். ஜெயின்கள் தங்களுடைய ஜெயின் சமயமே மிகப் பழமையான சமயமென உங்களுக்குக் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் ஆதிதேவ் பிரம்மாவே மஹாவீர் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மாவே மஹாவீர் ஆவார். ஆனால் ஜெயின் குருமார்கள் தங்கள் சமய ஸ்தாபகருக்கு மஹாவீர் என்ற பெயரை வழங்கியுள்ளனர். நீங்கள் அனைவரும் இப்பொழுது மஹாவீர்கள் (பெரிய போர்வீரர்கள்). நீங்களே மாயையை வெற்றி கொள்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் தைரியசாலிகள் ஆகுகிறீர்கள். நீங்களே உண்மையான மஹாவீர்கள். நீங்கள் சிவசக்திகள் என்றும் அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் ஒரு சிங்கத்தின் மீது சவாரி செய்கிறீர்கள். மஹாராத்திகள் யானையில் சவாரி செய்கிறார்கள். அவ்வாறிருந்தும் தந்தை கூறுகிறார்: இலக்கு மிகவும் உயர்ந்தது. உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படுவதற்கு நீங்கள் ஒரேயொரு தந்தையை நினைவு செய்யவேண்டும். வேறு எந்த வழியுமில்லை. நீங்கள் யோக சக்தி மூலம் உலகை ஆட்சி செய்கிறீர்கள். இந்த ஆத்மா கூறுகிறார்: நான் இப்போது வீடு திரும்பவேண்டும். இந்த உலகம் பழையதாகும். இந்தத் துறவறம் எல்லையற்றது. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு உங்கள் தொழிலையும் செய்யும்போதும் தூய்மையாக இருங்கள். பின்னர் சக்கரத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுகிறீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தர்மராஜின் தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுவதற்கு எவருடைய சரீரத்தையும் நினைவு செய்யாதீர்கள். உங்கள் பௌதீகக் கண்களால் அனைத்தையும் பார்க்கும்போதும் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். சரீரமற்றவர் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள். தூய்மை ஆகுங்கள்.2. அனைவருக்கும் முக்தி ஜீவன் முக்திக்கான பாதையைக் காட்டுங்கள். இப்பொழுது நாடகம் முடிவடைவதனால் நீங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். இந்த உணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் எல்லையற்ற வருமானத்தை உங்களால் சேமிக்க முடியம்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு விநாடிக்குரிய பேரத்தைச் செய்வதன் மூலம் கல்பம் முழுவதற்கும் உங்களின் பாக்கியத்தை உருவாக்கி மகாபாக்கியசாலி ஆகுவீர்களாக.இந்தச் சங்கமத்தில் நீங்கள் விரும்பிய அளவு, விரும்பிய விதத்தில் பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளும் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள். ஏனென்றால் பாக்கியத்தை அருள்பவரான தந்தை உங்களின் பாக்கியத்தை உருவாக்கும் சாவியை உங்களின் கைகளிலேயே தந்துள்ளார். கடைசியாக வந்திருப்பவர்களாலும் வேகமாகச் சென்று முதலாவதாக வரமுடியும். இதற்கு சேவை செய்யும் விரிவாக்கத்துடன் கூடவே ஒரு விநாடியில் உங்களின் ஸ்திதியை அதன் சாரத்திற்குக் கொண்டு வரும் பயிற்சியையும் செய்யுங்கள். ஒரு விநாடியில் மாஸ்ரர் விதை ஆகுவதற்கான வழிகாட்டலைப் பெற்ற கணமே உங்களுக்கு அதிக நேரம் எடுக்கக்கூடாது. ஒரு விநாடிக்கான இந்தப் பேரத்தைச் செய்வதன் மூலம் உங்களால் கல்பம் முழுவதற்குமான உங்களின் பாக்கியத்தை உருவாக்க முடியும்.
சுலோகம்:
உங்களின் இரட்டைச் சேவையால் சூழலைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். சடப்பொருளின் மூலக்கூறுகள் அனைத்தும் உங்களின் பணியாளர்கள் ஆகிவிடும்.ஏகாந்தத்தில் அன்பு வைத்து ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
பல மரங்களின் கிளைகளும் இப்போது ஒரு சந்தனமரமாக ஆகியுள்ளன. மக்கள் கூறுகிறார்கள்: இரண்டு, நான்கு பெண்களால் ஒன்றாக வாழவே முடியாது. ஆனால் பெண்களான நீங்களோ இப்போது உலகில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குப் பெண்களான நீங்களே கருவிகள் ஆகியுள்ளீர்கள். வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்தாலும் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்டிருந்தாலும் நீங்கள் வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்தி உள்ளீர்கள்.