04.04.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அல்பாவையும் பீற்றாவையும் நினைவு செய்யுங்கள், இதனால் உங்களால் மிகவும் களிப்பூட்டுபவர்களாக முடியும். தந்தை மிகவும் களிப்பூட்டுபவராக இருப்பதனால் நீங்களும் கூடக் களிப்பூட்டுபவராக இருக்க வேண்டும்.

கேள்வி:
ஏன் அனைவரும் தேவர்களின் சிலைகளால் கவரப்படுகின்றார்கள்? அவர்களிடம் இருக்கும் விஷேசமான குணம் யாது?

பதில்:
தேவர்கள் மிகவும் களிப்பூட்டுபவர்களும் தூய்மையானவர்களும் ஆவார்கள். அவர்களின் களிப்பூட்டும் சுபாவங்களால் அவர்களின் உருவங்கள் அனைவரையும் பெருமளவு கவர்கின்றன. தேவர்களிடம் உள்ள விஷேச குணம் தூய்மையாகும், இந்த நற்குணத்தின் காரணமாகவே தூய்மையற்ற மனிதர்கள் தேவர்களின் சிலைகளுக்குத் தலை வணங்குகின்றார்கள். அனைத்துத் தெய்வீகக் குணங்களையும் கொண்டிருப்பவர்களே களிப்பூட்டுபவர்களாக இருப்பதுடன் சதா சந்தோஷமானவர்களாகவும் இருப்பார்கள்.

ஓம் சாந்தி.
பரமாத்மாவினதும் ஆத்மாக்களினதும் சந்திப்பானது மிகவும் அற்புதமானது! அத்தகைய எல்லையற்ற தந்தையின் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் எத்தனை களிப்பூட்டுபவர்களாக இருக்க வேண்டும்! தேவர்கள் களிப்பூட்டுபவர்கள், அல்லவா? எவ்வாறாயினும், இராச்சியமானது மிகப் பெரியது. அனைவரும் ஒரேயளவு களிப்பூட்டுபவர்களாக இருக்க முடியாது, ஆனால் சில குழந்தைகள் நிச்சயமாகவே மிகவும் களிப்பூட்டுபவர்களாக இருக்கின்றார்கள். யாரால் களிப்பூட்டுபவர்களாக இருக்க முடியும்? சதா சந்தோஷமாக இருப்பவர்களாலும்; தெய்வீகக் குணங்கள் கொண்டவர்களாலுமே ஆகும். ராதையும் கிருஷ்ணரும் மிகவும் களிப்பூட்டுபவர்களாகவே இருக்கின்றார்கள், இல்லையா? அவர்கள் பெருமளவு கவர்ச்சியைக் கொண்டிருக்கின்றார்கள். என்ன கவர்ச்சி? தூய்மையின் கவர்ச்சி. ஏனெனில் அவர்களின் ஆத்மாக்களும் சரீரங்களும் தூய்மையாகவே இருக்கின்றன. தூய்மையற்ற ஆத்மாக்கள் தூய்மையான ஆத்மாக்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்குகின்றார்கள். தூய்மையான ஆத்மாக்கள் அதிகளவு வலிமையைக் கொண்டிருக்கிறார்கள். தேவ விக்கிரகங்களின் முன்னால் சந்நியாசிகளும் நிச்சயமாகத் தலைவணங்குகிறார்கள். சிலர் மிகவும் அகங்காரத்துடன் இருந்தாலும், அவர்கள் நிச்சயமாகத் தேவ விக்கிரகங்களின் முன்னாலும், சிவனின் முன்னாலும் தலைவணங்குவார்கள். அவர்கள் இறைவிகளின் விக்கிரகங்களுக்கு முன்னாலும் தலைவணங்குகிறார்கள். தந்தை களிப்பூட்டுகிறார். தந்தை உருவாக்கிய தேவர்களும் களிப்பூட்டுகிறார்கள். அவர்களிடம் அந்த தூய்மையின் ஈர்ப்பு உள்ளது. அவர்களின் அந்த ஈர்ப்பு இன்றும் அனைவரையும் தொடர்ந்து ஈர்க்கிறது. நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று ஆகுகிறீர்கள் என நீங்கள் நினைத்தால், அவர்களிடம் உள்ள ஈர்ப்பினை நீங்களும் கொண்டிருக்க வேண்டும். இந்த நேரத்திற்குரிய உங்களுடைய ஈர்ப்பு அழியாதது ஆகுகின்றது. அனைவரின் ஈர்ப்பும் அழியாதது அன்று. அது வரிசைக்கிரமமானது. எதிர்காலத்தில் உயர் அந்தஸ்தைக் கோர இருப்பவர்களிடம் இங்கே அத்தகைய ஈர்ப்பு இருக்கும். ஏனெனில் அந்த ஆத்மாக்கள் தூய்மையானவர்கள் ஆகுகிறார்கள். குறிப்பாக நினைவு யாத்திரையில் இருக்கும் உங்களிடம் அதிகளவு ஈர்ப்புக் காணப்படுகிறது. ஒரு யாத்திரையின் போது நிச்சயமாகத் தூய்மை கடைப்பிடிக்கப்படுகிறது. தூய்மையில் ஈர்ப்பு காணப்படுகிறது. தூய்மைக்கான ஈர்ப்பு, நீங்கள் கற்கும்போதும் அந்த ஈர்ப்பினை ஏற்படுத்துகிறது. நீங்கள் இந்த வேளையில் அதனைப் புரிந்து கொள்கிறீர்கள். உங்களுக்கு அவர்களின் (இலக்ஷ்மி, நாராயணன்) தொழில் என்னவென்று தெரியும். அவர்களும் தந்தையை அதிகளவில் நினைவு செய்திருப்பார்கள்! அவர்கள் பெற்ற இராச்சியம் நிச்சயமாக இராஜயோகத்தைக் கற்பதனூடாகவே பெறப்பட்டது. நீங்கள் இந்த வேளையில் இங்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்காக வந்துள்ளீர்கள். தந்தை இங்கிருந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். நீங்கள் இந்த நம்பிக்கையை உறுதியாக்கிய வண்ணம் இங்கு வந்துள்ளீர்கள். அவர் அதே தந்தையும், எமது ஆசிரியரும் ஆவார். அவர் எங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வார். நீங்கள் எப்போதும் இந்த நற்பண்புகளைக் கொண்டிருந்து, சதா மலர்ச்சியாக இருங்கள். நீங்கள் தந்தையாகிய அல்பாவின் நினைவில் இருந்தால் மட்டுமே, உங்களால் சதா மலர்ச்சியாக இருக்க முடியும். பின்னர், உங்களால் பீற்றாவை நினைவு செய்யக்கூடியதாக இருப்பதுடன் நீங்கள் மிகவும் களிப்பூட்டுபவராக ஆகுவீர்கள். நீங்கள் இங்கு களிப்பூட்டுபவர்களாக ஆகியுள்ளீர்கள் என்றும், எதிர்காலத்திலும் நீங்கள் களிப்பூட்டுபவர்கள் ஆகுவீர்கள் என்றும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இந்த நேரத்திற்குரிய கல்வி உங்களை அந்த அமரத்துவ தேசத்திற்கு அழைத்துச் செல்லும். உண்மையான பாபா உங்களை உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்க வைக்கிறார். இந்த உண்மையான வருமானம் 21 பிறவிகளுக்கு உங்களுடனேயே செல்லும். பின்னர், பக்திமார்க்கத்தில் நீங்கள் சம்பாதிப்பது எதுவாயினும் அது தற்காலிகச் சந்தோஷத்திற்கே ஆகும். அது உங்களுடன் எல்லா வேளைக்கும் வராது. குழந்தைகளாகிய நீங்கள் இந்தக் கல்வியில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எளிமையானவர்கள் (சாதாரணமானவர்கள்). உங்களுக்குக் கற்பிப்பவரும் மிகவும் எளிமையான (சாதாரணமான) வடிவில் இருக்கிறார். எனவே, கற்பவர்களும் எளிமையாக இருக்க வேண்டும். இல்லாவிடின், அவர்கள் தர்மசங்கடப்படுவார்கள்: நாம் எவ்வாறு அதிக விலையுயர்ந்த ஆடைகளை அணிய முடியும்? எமது மம்மாவும் பாபாவும் மிகவும் எளிமையானவர்கள், எனவே நாமும் எளிமையாக இருப்போம். ஏன் நீங்கள் மிக எளிமையாக இருக்கிறீர்கள்? ஏனெனில் நீங்கள் எளிமைக்குரிய நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். எவரும் இங்கு திருமணம் செய்வதில்லை. இருவர் திருமணம் செய்யும் வேளையில், பெண் எளிமையாக இருப்பார். அவள் பழைய ஆடைகளை அணிந்து, தனது சரீரத்தில் எண்ணெய் தேய்ப்பாள். ஏனெனில் அவள் தனது புகுந்த வீட்டிற்குச் செல்கிறாள். அவள் ஒரு பிராமணத் தரகரினூடாக நிச்சயம் செய்யப்படுகிறாள். நீங்களும் உங்களுடைய புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் இந்த இராவண தேசத்தில் இருந்து இராம தேசத்திற்கு, அதாவது, விஷ்ணு தேசத்திற்குச் செல்ல வேண்டும். எளிமையாக இருக்கும் சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. அதனால் சரீரம் அல்லது ஆடைகளின் எந்தவிதமான அகங்காரமும் இருக்காது. ஒருவரிடம் விலைமலிவான சேலை இருந்து, இன்னொருவரிடம் உள்ள மிக நல்ல சேலையைப் பார்க்கும்போது, அவருக்கு அதனைப் பற்றிய எண்ணங்கள் தோன்றும். அந்த நபர் எளிமையாக இல்லை என இந்தப் பெண்மணி நினைப்பார். எவ்வாறாயினும், நீங்கள் எளிமையாக இருந்து எவருக்காயினும் இந்த மேன்மையான ஞானத்தை, மேன்மையான போதையுடன் வழங்கும்போது, அந்த அம்பு இலக்கைத் தாக்கும். நீங்கள் பாத்திரங்களை அல்லது ஆடைகளைக் கழுவும் போது யாராவது உங்களுக்கு முன்னால் வந்தால், நீங்கள் உடனடியாக அவருக்கு அல்பாவை நினைவூட்டுங்கள். நீங்கள் அந்த போதையுடன் எளிமையான ஆடைகளை அணிந்து மற்றவர்களுக்கு இந்த ஞானத்தை வழங்கும்போது, உங்களுக்கு இத்தகைய மேன்மையான ஞானம் இருப்பதைப் பார்த்து அவர்கள் வியப்படைவார்கள். இதுவே கடவுளால் வழங்கப்பட்ட கீதை ஞானமாகும். இராஜயோகமே, கீதா ஞானம் ஆகும். உங்களுக்கு இத்தகைய போதை உள்ளதா? பாபா தனது சொந்த உதாரணத்தை வழங்குகிறார். உதாரணமாக, நான் சில குழந்தைகளுடன் ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு மாணவர் எனக்கு முன்னால் வந்தால், நான் உடனடியாக அவருக்குத் தந்தையின் அறிமுகத்தை வழங்குகிறேன். யோகசக்தியாலும் வலிமையாலும், அந்த நபர் அங்கு நின்று, இவர் மிக எளிமையாக இருக்கிறார், எனினும் இந்தளவு சக்தியைக் கொண்டிருக்கிறார் என வியப்பார். அவரால் எதனையும் கூற இயலாதிருக்கும். அவரின் உதடுகளில் இருந்து எந்தவிதமான வார்த்தைகளும் வெளிவராது. எவ்வாறு நீங்கள் சத்தத்திற்கு அப்பால் செல்கிறீர்களோ, அவ்வாறே, அவரும் சத்தத்திற்கு அப்பால் செல்வார். நீங்கள் உங்களுக்குள் இந்தப் போதையைக் கொண்டிருப்பீர்கள். யாராவதொரு சகோதரர் அல்லது சகோதரி வரும்போது, அவரை நிற்க வைத்து, உலக அதிபதிகள் ஆகுவதற்கான வழிகாட்டல்களை அவர்களுக்கு வழங்குங்கள். அந்தப் போதை உங்களுக்குள் இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய இந்த ஆழமான அன்பில் ஸ்திரமாக இருக்க வேண்டும். பாபா எப்போதும் கூறுவார்: உங்களுக்கு இந்த ஞானம் உள்ளது, ஆனால் அங்கு யோகசக்தி இல்லை. தூய்மையைப் பேணுவதுடன், நினைவில் இருப்பதன் மூலம் உங்களால் சக்தியை விருத்தி செய்ய முடியும். நீங்கள் நினைவு யாத்திரையினூடாக தூய்மை ஆகுகிறீர்கள். நீங்கள் வலிமையைப் பெறுகிறீர்கள். இந்த ஞானம் செல்வத்திற்குரிய விடயமாகும். கல்வி கற்று ஒரு கலை முதுமானிப் பட்டதாரி அல்லது கலைப்பட்டதாரி ஆகியபின்னர், அதற்கேற்ப சம்பளத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். இங்கு இது வேறுபட்ட விடயமாகும். பாரதத்தின் புராதன யோகம் மிகவும் பிரபல்யமானது. இது நினைவாகும். தந்தையே சர்வசக்திவான். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் இருந்து சக்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மாக்கள் மற்றும் பாபாவின் குழந்தைகள் என்ற உணர்வினை உள்ளே கொண்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் பாபாவைப் போன்று தூய்மையானவர்கள் அல்லர். நீங்கள் இப்போது அவ்வாறு ஆகவேண்டும். இது இப்போது உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் ஆகும். நீங்கள் யோகத்தினூடாகத் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். மிக விசேடமான, அதியன்பிற்குரிய குழந்தைகள் நாள் முழுவதும் இந்த எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். யாராவது வரும்போது, அவர்களுக்குப் பாதையைக் காட்டுவதுடன், அவர்கள் மீது கருணை கொள்ளுங்கள். ஏனெனில் அந்த உதவியற்ற அப்பாவி மக்கள் குருடர்களாக இருக்கிறார்கள். குருடர்கள் வழிகாட்டுவதற்காக ஓர் ஊன்றுகொலைப் பயன்படுத்துகிறார்கள். அந்த மக்கள் அனைவரும் குருடர்கள். அவர்களுக்கு இந்த மூன்றாவது ஞானக்கண் கிடையாது. நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது மூன்றாவது ஞானக்கண்ணைப் பெற்றுள்ளீர்கள். எனவே, இப்போது உங்களுக்கு அனைத்தும் தெரியும். எங்களுக்கு இந்த வேளையில் முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றித் தெரியும். அந்த விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. ‘தீயதைக் கேட்காதீர்கள் அல்லது தீயதைப் பார்க்காதீர்கள்’ என்பதை முன்னர் நீங்கள் அறிவீர்களா? ஏன் அந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன? உலகிலுள்ள எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்போது அதனைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை எவ்வாறு ஞானம் நிறைந்தவரோ, அவ்வாறே அவரின் குழந்தைகளான நீங்களும் உங்களுடைய முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகிறீர்கள். சில குழந்தைகள் மிகவும் போதை கொண்டிருக்கின்றார்கள். ஆஹா! நீங்கள் பாபாவின் குழந்தைகள் ஆகி, ஆனால் பாபாவிடம் இருந்து முழு ஆஸ்தியையும் பெறாவிட்டால், அவரின் குழந்தை ஆகியதில் இருந்து, நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஒவ்வோர் இரவும் உங்கள் அட்டவணையை சோதித்துப் பாருங்கள். பாபா ஒரு வியாபாரி ஆவார். வியாபாரிகள் தமது கணக்கை இலகுவாகப் பேணுவதுண்டு. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எவ்வாறு கணக்கு வைத்திருப்பது என்பதும் தெரியாது, எவ்வாறு பேரம் பேசுவது என்பதும் தெரியாது. வியாபாரிகள் இதனை மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் வியாபாரிகள். உங்கள் இலாப நட்டத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் கணக்குகளை ஒவ்வொரு நாளும் சோதியுங்கள். உங்கள் கணக்குகளைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இலாபமா அல்லது நட்டமா ஈட்டுகிறீர்கள் எனப் பாருங்கள். நீங்கள் வியாபாரிகள், அப்படித்தானே? பாபா, வியாபாரி என்றும் இரத்தின வியாபாரி என்றும் நினைவுகூரப்படுகின்றார். அவர் இந்த அழியாத ஞான இரத்தினங்களுடன் வியாபாரம் செய்கின்றார். நீங்கள், உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக இதனைப் புரிந்து கொள்கிறீர்கள். அனைவருக்கும் கூர்மையான புத்தி உள்ளது என்றில்லை. அவர்கள் ஒரு காதினால் கேட்டு மறு காதினால் வெளியே விட்டுவிடுகிறார்கள். அவர்களின் புத்தியிலுள்ள ஓட்டையால் அது வெளியேறி விடுகிறது. அவர்களால் தமது புத்திகளை நிரப்ப முடியவில்லை. தந்தை கூறுகிறார்: செல்வம் ஒருபோதும் நீங்கள் அதைத் தானம் செய்வதனால் இல்லாமல் போவதில்லை. இவை இந்த ஞானத்தின் அழியாத இரத்தினங்கள் ஆகும். தந்தையே ரூப் மற்றும் பசன்த் ஆவார். அவர் ஓர் ஆத்மா. அவர் தனக்குள் ஞானத்தைக் கொண்டிருக்கிறார். அவருடைய குழந்தைகளாகிய நீங்களும் ரூப் மற்றும் பசன்த் ஆவீர்கள். இந்த ஞானம் அனைத்தும் ஆத்மாவில் பதிந்துள்ளது. ஆத்மா மிகச்சிறியதாக இருந்தாலும் அவருக்கும் ஒரு வடிவம் உள்ளது. அவருக்கு ஒரு வடிவம் உள்ளதல்லவா? எவ்வாறு ஆத்மா உணரப்படுகிறாரோ, அவ்வாறே பரமாத்மாவையும் உணர முடியும். மக்கள் சோமநாதரை (அமிர்தத்தின் பிரபு) வழிபடுகிறார்கள். ஆனால் எவ்வாறு அவர்களால் இத்தகையதொரு சிறிய நட்சத்திரத்தை வழிபட முடியும்? அவர்கள் வழிபடுவதற்காகப் பல இலிங்கங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் கூரையளவிற்கு சிவலிங்கங்களை உருவாக்குகிறார்கள். உண்மையில், அவர் மிகச் சின்னஞ்சிறியவர். ஆனால் அவருடைய அந்தஸ்தோ மிக மேன்மையானது! தவம் செய்வதாலோ அல்லது யாகங்கள் வளர்ப்பதனாலோ எவராலும் எதனையும் அடைய முடியாது எனத் தந்தை சென்ற கல்பத்திலும் உங்களுக்குக் கூறியுள்ளார். இவை அனைத்தையும் செய்த வண்ணம் அவர்கள் தொடர்ந்தும் கீழிறங்கி வந்துள்ளார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி வந்துள்ளார்கள். உங்களுக்கு, இது இப்போது உங்களின் ஏறுகின்ற ஸ்திதியாகும். பிராமணர்களாகிய நீங்கள் முதலாம் இலக்க ஜீனிப்பூதங்கள். தனக்கு எந்தவொரு வேலையும் செய்யத் தராவிட்டால் அனைவரையும் விழுங்கிவிடுவதாகக் கூறிய ஜீனிப்பூதத்தின் கதை ஒன்று உள்ளது. எனவே, ஏணியில் மேலேயும் கீழேயும் செல்லுகின்ற பணி அதற்குக் கொடுக்கப்பட்டது. எனவே, அதற்கு ஏதாவதொரு பணி வழங்கப்பட்டது. பாபாவும் உங்களுக்குக் கூறியுள்ளார்: நீங்கள் இந்த எல்லையற்ற ஏணியில் கீழிறங்கிப் பின்னர் மேலே ஏறுகிறீர்கள். நீங்கள் மட்டுமே ஏணியில் முழுமையாகக் கீழே இறங்கிப் பின்னர் அதன் உச்சிக்கு ஏறுகிறீர்கள். நீங்கள் ஜீனிப்பூதங்கள். வேறு எவரும் இந்த ஏணியில் முழுமையாக ஏறுவதில்லை. நீங்கள் முழு ஏணியினதும் இந்த முழுமையான ஞானத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் பின்னர் மீண்டும் கீழே இறங்கிப் பின்னர் மீண்டும் மேலே ஏறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்கள் தந்தை. நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்கிறீர்கள். நானே சர்வசக்திவான். ஏனெனில் ஆத்மாவாகிய நான், 100 சதவீதம், என்றும் தூய்மையானவர். புள்ளியாகிய நான் அதிகாரி ஆவேன். நான் சகல சமயநூல்களினதும் இரகசியங்கள் அனைத்தையும் அறிவேன். இது ஓர் அற்புதம் ஆகும்! இந்த ஞானம் அனைத்தும் அதி அற்புதமானது! ஆத்மாவில் 84 பிறவிகளின் அழியாத பாகம் பதிந்துள்ளது என்றும், அதனை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் நீங்கள் ஒருபோதும் செவிமடுத்திருக்க மாட்டீர்கள். ஆத்மா அதனை எல்லா வேளையும் தொடர்ந்து நடிக்கிறார். 84 பிறவிச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இந்த ஆத்மா 84 பிறவிகளின் பதிவுகளால் நிறைந்துள்ளார். இத்தகையதொரு சின்னஞ்சிறிய ஆத்மா இந்தளவு ஞானத்தைக் கொண்டுள்ளார்! பாபாவிடம் இந்த ஞானம் உள்ளது. குழந்தைகளாகிய உங்களிடமும் இந்த ஞானம் உள்ளது. நீங்கள் இத்தகைய பெரிய பாகத்தை நடிக்கிறீர்கள்! இந்தப் பாகங்கள் ஒருபோதும் அழிய மாட்டாது. ஆத்மாவைக் கண்களால் காண முடியாது. அது ஒரு புள்ளி வடிவமானது. பாபா கூறுகிறார்: நானும் அவ்வாறே ஒரு புள்ளி ஆவேன். குழந்தைகளாகிய நீங்கள் இதனை இப்போது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் எல்லையற்ற துறவிகளும் இராஜரிஷிகளும் ஆவீர்கள். நீங்கள் அதிகளவு போதை கொண்டவர்களாக இருக்க வேண்டும்! இராஜரிஷிகள் சம்பூரணமாகத் தூய்மையானவர்களாக இருப்பார்கள். இராஜரிஷிகள் சூரிய, சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் நீங்கள் இப்போது செய்வதைப் போன்று, அவர்கள் இங்கேயே தமது இராச்சியத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் இப்போது விடைபெறப் போகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் படகோட்டியின் நீராவிக்கப்பலில் அமர்ந்திருக்கிறீர்கள். இது அதி புண்ணிய சங்கமயுகம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் நிச்சயமாகப் பழைய உலகில் இருந்து புதிய உலகிற்கு அமைதி தாமத்தினூடாகச் செல்ல வேண்டும். குழந்தைகளே, இது சதா உங்களுடைய புத்திகளில் இருக்க வேண்டும். நாங்கள் சத்தியயுகத்தில் இருந்தபோது, வேறு எந்த நாடுகளும் இருக்கவில்லை. எமது இராச்சியம் மட்டுமே இருந்தது. நாம் இப்போது யோகசக்தியால் மீண்டும் எமது இராச்சியத்தைக் கோருகிறோம். யோகசக்தியால் மட்டுமே உலக இராச்சியம் பெறப்படலாம் என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எவராலும் அதனைப் பௌதீகச் சக்தியால் பெற முடியாது. இது எல்லையற்றதொரு நாடகம் ஆகும். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை இந்த நாடகத்தின் விளக்கத்தை அளிக்கிறார். அவர் உலகின் வரலாறு மற்றும் புவியியலை ஆரம்பத்தில் இருந்து உங்களுக்குக் கூறுகிறார். நீங்கள் சூட்சும வதனம் மற்றும் அசரீரி உலகின் இரகசியங்களை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்கிறீர்கள். அவர்களின் இராச்சியம் பௌதீக உலகில் இருந்தது. அதாவது, அது எமது இராச்சியமாக இருந்தது. நீங்கள் எவ்வாறு ஏணியில் கீழிறங்கி வந்தீர்கள் என்பதை நீங்களும் மீள நினைவு செய்கிறீர்கள். ஏணியில் மேலேயும் கீழேயும் செல்கின்ற நாடகம் குழந்தைகளாகிய உங்களுடைய புத்திகளில் உள்ளது. எவ்வாறு உலக வரலாறும் புவியியலும் மீண்டும் நிகழ்கிறது என்பது இப்போது உங்களுடைய புத்திகளில் உள்ளது. நாம் இதில் கதாநாயக, கதாநாயகிப் பாத்திரங்களை ஏற்று நடிக்கிறோம். நாம் தோல்வி அடைந்து, பின்னர் வெற்றியாளர்கள் ஆகினோம். இதனாலேயே நாம் கதாநாயகர்கள், கதாநாயகிகள் என்று அழைக்கப்படுகிறோம். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இப்போது எளிமையான நிலையில் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் மிக எளிமையானவர்களாக (சாதாரணமாக) இருக்க வேண்டும். சரீரம் அல்லது ஆடைகளின் அகங்காரம் சிறிதளவேனும் இருக்கக்கூடாது. எந்தவொரு செயல்களைச் செய்யும்போதும், தந்தையின் நினைவின் மேன்மையான போதை இருக்க வேண்டும்.

2. நீங்கள் எல்லையற்ற துறவிகளும் இராஜ ரிஷிகளும் ஆவீர்கள். இந்தப் போதையில் இருப்பதுடன் தூய்மையானவர்கள் ஆகுங்கள். இந்த ஞானச் செல்வத்தால் நிறைந்து, அதனைத் தானம் செய்யுங்கள். உண்மையாதொரு வர்த்தகராகி, உங்களுடைய நினைவு அட்டவணையைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களை ஒரு சேவையாளராகக் கருதுவதன் மூலம், ஒரு பணிவுள்ள இதயமுள்ள கருவியாகத் தலைவணங்குவதுடன் மற்றவர்களையும் தலைவணங்குவதற்குத் தூண்டுவீர்களாக.

தனது ஒவ்வோர் எண்ணத்தையும் செயலையும் தந்தையிடம் அர்ப்பணிக்கும் ஒருவர், ஒரு கருவி எனப்படுகிறார். நீங்கள் ஒரு கருவி ஆகுவது என்றால், உங்களையே ஒப்படைப்பதாகும். தலைவணங்கும் ஒருவர் பணிவான இதயத்தைக் கொண்டவர் எனப்படுகிறார். உங்களின் சம்ஸ்காரங்களாலும் எண்ணங்களாலும் எந்தளவிற்கு நீங்கள் தலை வணங்குகிறீர்களோ, அந்தளவிற்கு இந்த உலகம் உங்களுக்குத் தலைவணங்கும். தலை வணங்குதல் என்றால், மற்றவர்களையும் தலை வணங்குவதற்குத் தூண்டுவதாகும். மற்றவர்கள் எனக்குத் தலை வணங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. உண்மையான சேவையாளர்கள் எப்போதும் தலை வணங்குவார்கள். அவர்கள் எந்தவிதமான அதிகாரத் தோரணையையும் காட்டுவதில்லை.

சுலோகம்:
இனியும் பிரச்சனைகளின் சொரூபமாக இருக்காதீர்கள், தீர்வுகளின் சொரூபம் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை:மேன்மை ஆகுவதற்கு, இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களைக் கிரகியுங்கள்.

மகாத்மாக்களான நீங்கள் சதா ஏனைய ஆத்மாக்கள் அனைவருக்காகவும் இனிமையான, மகத்தான எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வோர் ஆத்மாவிற்காகவும் தந்தையின் சுபாவம், சதா உபகாரம் செய்வதே ஆகும். அவரிடம் கருணைநிறைந்த உணர்வுகள், அனைவரையும் ஈடேற்றும் உணர்வுகள், இனிமை மற்றும் பணிவான உணர்வுகள் உள்ளன. ஆகவே, உங்களின் சுபாவத்தையும் அதை ஒத்ததாக ஆக்குங்கள். கூர்மையாகப் பேசுதல் அல்லது வலுவைப் பிரயோகித்தல் என்ற சுபாவத்தைக் கொண்டிருத்தல், பிராமண வாழ்க்கையில் பெரியதொரு தடை ஆகும். இப்போது, இத்தகைய சுபாவத்தை மாற்றுங்கள்.