04.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பொழுது இந்த தீய உலகம் தீ மூட்டப்படவுள்ளது. ஆகவே, நீங்கள் உங்களுடையது என்று அழைக்கின்ற உங்களுடைய சரீரம் உட்பட அனைத்தையும் மறந்து விடுங்கள். உங்கள் இதயத்தை இவ்வுலகின் மீது பற்று கொள்ளச் செய்யாதீர்கள்.

பாடல்:
நீங்கள் இத்துன்ப உலகின் மீது விருப்பமின்மையைக் கொண்டிருப்பதற்குத் தந்தை ஏன் உங்களைத் தூண்டுகிறார்?

பதில்:
நீங்கள் சாந்தி தாமத்துக்கும் சந்தோஷ தாமத்துக்கும் செல்ல வேண்டும் என்பதால் ஆகும். நீங்கள் இனியும் இந்தத் தீய உலகில் இருக்க வேண்டியதில்லை. ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களிலிருந்து விடுபட்டு வீடு திரும்புவார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள் என்பதால், நீ;ங்கள் ஏன் அச்சரீரங்களைப் பார்க்க வேண்டும்? ஆகவே, உங்களுடைய புத்தி எவருடைய பெயரையோ அல்லது ரூபத்தையோ நோக்கி ஈர்க்கப்படக்கூடாது. தீய எண்ணங்களைக் கொண்டிருப்பதாலும் உங்களுடைய அந்தஸ்து அழிக்கப்படும்.

ஓம் சாந்தி.
சிவபாபா தனது குழந்தைகளான ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகிறார். ஆத்மாக்களாகிய நீங்களே செவிமடுக்கிறீர்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவருமே கொண்டிருக்கிறீர்கள். இந்நம்பிக்கை ஏற்பட்ட பின்னர், எல்லையற்ற தந்தை அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார் என்பதை நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்த வேண்டும். அவர் உங்களைத் துன்ப பந்தனங்களில் இருந்து விடுவித்து, சந்தோஷ உறவுமுறைகளுக்குள் அழைத்துச் செல்கின்றார். உறவுமுறை சந்தோஷம் எனவும் பந்தனமானது துன்பம் எனவும் அழைக்கப்படுகின்றது. இங்கு உங்களுடைய இதயத்தை இப்பொழுது எந்த ஒருவரினதும் பெயரிலோ அல்லது உருவத்திலோ பற்றிக் கொள்ள அனுமதிக்காதீர்கள். உங்களுடைய வீட்டுக்குத் திரும்பிச் செல்லத் தயாராகுங்கள். எல்லையற்ற பாபா ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளார். ஆகவே, உங்களுடைய இதயம் இங்கு எவர்மீதும் ஈர்க்கப்படுவதை அனுமதிக்காதீhகள். இங்குள்ள பந்தனங்கள் அனைத்தும் தீயவையாகும். இப்பொழுது நீங்கள் தூய்மையாகிவிட்டீர்கள் என்பதால், உங்களுடைய சரீரத்தை எவரும் தீய எண்ணங்களுடன் தொடக்கூடாது என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அந்த எண்ணங்கள் அகற்றப்படுகின்றன. தூய்மையாகாமல் உங்களால் வீடு திரும்ப முடியாது. நீங்கள் உங்களைச் சீர்திருத்திக் கொள்ளாதுவிட்டால், தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். இந்நேரத்தில் ஆத்மாக்கள் அனைவரும் சீர்கெட்டுள்ளனர். தங்கள் சரீரங்களினூடாக அவர்கள் தீய செயல்களைச் செய்கின்றனர். அவர்களின் இதயங்கள் தீய சரீரதாரிகளின் மீது பற்றுக் கொண்டிருக்கின்றன. தந்தை வந்து கூறுகின்றார்: அந்தத் தீய எண்ணங்கள் அனைத்தையும் நிறுத்துங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சரீரத்திலிருந்து விடுபட்டு, வீடு திரும்ப வேண்டும். இவ்வுலகம் மிகவும் தீயதாகும். இனியும் தொடர்ந்து இங்கிருக்க நீங்கள் விரும்பவில்லை. உங்களுக்கு எவரையும் பார்க்கும் ஆசையும் கிடையாது. உங்களைச் சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதற்கு தந்தை இப்பொழுது வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். தூய்மையாகுவதற்குத் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களுடைய இதயத்தை சரீரதாரிகள் எவர்மீதும் பற்று வைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். உங்களுடைய பற்றுக்கள் அனைத்தும் முற்றாகவே முடிவடைய வேண்டும். ஒரு கணவனும் மனைவியும் ஒருவர் மீதொருவர் அதிகளவு அன்பு செலுத்துகின்றார்கள்; அவர்களில் ஒருவரில்லாது மற்றவரால் பிரிந்து வாழ முடியாது நீங்கள் இப்பொழுது உங்களைச் சகோதரர்களாக, ஆத்மாக்களாகக் கருத வேண்டும். தீய எண்ணங்கள் எவையும் இருக்கக் கூடாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இப்பொழுது இவ்வுலகம் ஒரு விலைமாதர் இல்லமாக உள்ளது. விகாரங்களின் காரணமாகவே நீங்கள் ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக இறுதிவரை துன்பத்தையே அனுபவம் செய்திருக்கின்றீர்கள். தந்தை உங்களை விருப்பமின்மையைக் கொண்டிருக்கத் தூண்டுகின்றார். நீங்கள் இப்பொழுது ஒரு நீராவிக்கப்பலில் அமர்ந்திருந்து வீடு திரும்பத் தயாராகுகிறீர்கள். இப்பொழுது தந்தையிடம் தான் திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றேன் என்பதை ஆத்மா புரிந்து கொள்கின்றார். இப்பழைய உலகம் முழுவதிலும் நீங்கள் ஆர்வமின்மையைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இனிமேலும் விலைமாதர் இல்லமான, நரகமாகிய இந்த தீய உலகில் இருக்க விரும்பவில்லை. ஆகவே, நஞ்சாகிய தீய எண்ணங்களைக் கொண்டிருப்பது மிகவும் தீங்கானதாகும். உங்களுடைய அந்தஸ்தும் அழிக்கப்பட்டுவிடும். தந்தை கூறுகின்றார்: நான் சந்தோஷ தாமமாகிய, அழகிய உலகுக்கு உங்களை அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளேன். நான் உங்களை இவ் விலைமாதர் இல்லத்திலிருந்து சிவாலயத்துக்கு அழைத்துச் செல்வேன். ஆகவே, இப்பொழுது உங்களுடைய புத்தியின் யோகமானது புதிய உலகத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். எல்லையற்ற பாபாவே உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். எவ்வாறு எல்லையற்ற உலகச் சக்கரம் சுழல்கின்றது என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. உலகச் சக்கரத்தை அறிந்து கொள்வதால், அதாவது, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதால், நீங்கள் பூகோளத்தை ஆள்பவர்கள் ஆகுவீர்கள். உங்களுடைய புத்தியின் யோகம் ஒரு சரீரதாரியுடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்களுடைய அந்தஸ்து அழிக்கப்படும். சரீர உறவுமுறைகள் எவற்றையும் நீங்கள் நினைவுசெய்யக்கூடாது. இது அனைவருக்கும் துன்பத்தை விளைவிக்கின்ற துன்ப உலகமாகும். இந்தத் தீய உலகிலிருந்து தந்தை அனைவரையும் அப்பால் அழைத்துச் செல்கின்றார். ஆகவே, உங்களுடைய புத்தியின் யோகத்தை உங்கள் வீட்டுடன் தொடர்புபடுத்துங்கள். முக்தியடைவே மனிதர்கள் பக்தி செய்கின்றார்கள். நீங்களும் கூறுகின்றீர்கள்: ஆத்மாக்களாகிய நாங்கள் இங்கிருக்க விரும்பவில்லை. நாங்கள் இந்த தீய சரீரங்களைத் துறந்து எங்களுடைய வீட்டுக்குத் திரும்புவோம். இது ஒரு பழைய சப்பாத்து ஆகும். நீங்கள்; தந்தையை நினைவு செய்தவாறே அச் சரீரத்தைத் துறப்பீர்கள். உங்களுடைய இறுதிக் கணங்களில் நீங்கள் தந்தையைத் தவிர எவரையும் நினைவுசெய்யக் கூடாது. நீங்கள் உங்களுடைய சரீரத்தையும் இங்கு நீக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய சரீரத்தை நீக்;கும்பொழுது, அனைத்தையும் துறக்கின்றீர்கள். நீங்கள் உங்களுடையது என்று கூறுகின்ற, உங்கள் சொந்தச் சரீரம் உட்பட அனைத்தையும் மறக்க வேண்டும். இந்த தீய உலகம் தீ மூட்டப்படவுள்ளது. ஆகையாலேயே உங்கள் இதயத்தை அதன் மீது பற்றுக் கொள்ளச் செய்யாதீர்கள். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் உங்களுக்காகச் சுவர்க்கத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்களே அங்கு சென்று வாழ்பவர்கள். இப்பொழுது உங்களுடைய முகங்கள் அத்திசையில் உள்ளன. நீ;ங்கள் தந்தையையும் வீட்டையும் சுவர்க்கத்தையும் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் இத்துன்ப பூமியில் விருப்பமின்மையைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் இச்சரீரங்கள் மீது விருப்பமின்மையைக் கொண்டுள்ளீர்கள். திருமணம் செய்வதற்கான அவசியம் என்ன? திருமணம் செய்வதால் உங்கள் இதயம் சரீரத்தின் மீது பற்று வைக்கின்றது. தந்தை கூறுகின்றார்: அப் பழைய சப்பாத்துக்களில் அன்பு வைக்காதீர்கள். இது ஒரு விலைமாதர் இல்லம். அனைவரும் தூய்மையற்றவர்கள். இது இராவண இராச்சியம் ஆகும். இங்கு உங்கள் தந்தையைத் தவிர எவர்மீதும் உங்கள் இதயத்தில் பற்றைக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்யாதுவிடின், உங்களுடைய எண்ணற்ற பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்பட முடியாது. அவ்வாறாயின், நீங்கள் அதிகளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடுவதுடன் உங்களுடைய அந்தஸ்தும் அழிக்கப்பட்டுவிடும். ஆகவே, அக்கலியுகத்துப் பந்தனங்களை ஏன் துறக்கக் கூடாது? தந்தை இந்த எல்லையற்ற விடயங்களை அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறார். சந்நியாசிகள் இரஜோபிரதானாக இருந்தபொழுது, உலகம் அவ்வளவு தீயதாக இருக்கவில்லை. அவர்கள் காட்டில் வசிப்பது வழக்கம், அனைவரும் அவர்களால் கவரப்பட்டிருப்பார்கள். அங்கே அவர்களுக்கு மக்கள் உணவை எடுத்துச் செல்வார்கள். அங்கு அவர்கள் எப்பயமுமின்றி வசித்தார்கள். நீங்களும் பயமின்றி இருக்க வேண்டும். உங்களுக்கு இதற்கு பரந்த புத்தி தேவையாகும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் வரும்பொழுது சந்தோஷம் அடைகிறீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து சந்தோஷ தாமமாகிய உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொண்டிருக்கின்றீர்கள். இங்கு பெருந் துன்பம் உள்ளது. பல கொடிய நோய்கள் போன்றவை உள்ளன. எத் துன்பமுமற்ற அல்லது வியாதி போன்றவற்றின் எச்சுவடுமற்ற ஓர் இடத்துக்கு அவர் உங்களை அழைத்துச் செல்வார் என்ற ஓர் உத்தரவாதத்தைத் தந்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் உங்களை அரைக் கல்பத்துக்கு ஆரோக்கியமானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் இங்கு உங்கள் இதயத்தில் எவர் மீதாவது பற்று வைத்தால், பெருமளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். மூன்று நிமிட மௌனம் பற்றிப் பேசுபவர்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களை வினவுங்கள்: வெறுமனே மௌனத்தால் என்ன நடைபெறும்? இங்கு, நீங்கள் உங்களுடைய தந்தையை நினைவுசெய்வதன் மூலம் பாவங்கள் அழிக்கப்பட வேண்டும். தந்தையே உங்களுக்கு மௌனத்தின் ஆசீர்வாதத்தைக் கொடுப்பவர் ஆவார். அவரை நினைவுசெய்யாமல், உங்களால் எவ்வாறு அமைதியைப் பெறமுடியும்? அவரை நினைவுசெய்வதால் மாத்திரம் உங்களால் உங்களுடைய ஆஸ்தியைப் பெற முடியும். ஆசிரியர்கள் இக் கற்பித்தல்களைக் கற்பிக்க வேண்டு;ம். நீங்கள் உஷாராக வேண்டும், அப்பொழுது எவரும் எதையும் கூறமாட்டார்கள். நீங்கள் தந்தைக்கு உரியவர்களாகையால், உங்களுடைய வயிற்றுக்கான உணவைப் பெறுவீர்கள். நீங்கள் உங்களுடைய ஜீவனோபாயத்துக்காகப் பெருமளவைப் பெறுவீர்கள். புதல்வி வேதாந்தி ‘கீதையை உரைத்தவர் யார்?’ என்கின்ற வினா இருந்த ஒரு பரீட்சையை எழுதினார். அவர் பதிலளித்தார்: பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனே ஆவார். எனவே அவர் சித்தியடையவில்லை, கிருஷ்ணரின் பெயரை எழுதியவர்களே, சித்தியடைந்தார்கள். குழந்தை உண்மையைக் கூறினார், ஆனால், அவர்கள் இதை அறியாத காரணத்தினால், அவரைச் சித்தியடையச் செய்யவில்லை. பின்னர் அவர் அவர்களுடன் வாதிட வேண்டியிருந்ததுடன் தான் உண்மையையே எழுதியதாக அவர்களிடம் கூறினார். அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையே, கீதையின் கடவுள் ஆவார். அது சரீரதாரியான கிருஷ்ணராக இருக்க முடியாது. எவ்வாறாயினும், இக்குழந்தை ஆன்மீகச் சேவை செய்வதற்கான விருப்பத்தைக் கொண்டிருந்தார், எனவே அவர் கற்பதையே நிறுத்தினார். தந்தையை நினைவுசெய்யும் போதே உங்களுடைய சரீரத்தைத் துறந்து மௌன உலகுக்குச் செல்ல வேண்டும் என்பது உங்களுக்கு இப்பொழுது தெரியும். நினைவுசெய்வதில் நிலைத்திருப்பதால், நீங்கள் ஆரோக்கியம், செல்வம் ஆகிய இரண்டையும் பெறுகிறீர்கள். பாரதத்தில் அமைதியும் செழிப்பும் இருந்தன. குமாரிகளாகிய நீங்கள் அமர்ந்திருந்து இவ்விடயங்களை மக்களுக்கு விளங்கப்படுத்தினால், எவரும் உங்களை விமர்சிக்க மாட்டார்கள். அவர்களில் எவராவது உங்களை எதிர்த்தால், சட்டத்திற்கேற்ப, அவர்கள் மீது உங்களால் வழக்குத் தொடர முடியும். சென்று முக்கியமான அலுவலர்களைப் பாருங்கள். அவர்களால் உங்களை என்ன செய்ய முடியும்? நீங்கள் பட்டினி கிடப்பீர்கள் என்பதல்ல! உங்களால் ஒரு வாழைப்பழத்துடன் அல்லது தயிருடன் ஒரு சப்பாத்தியை உண்ண முடியும். தங்களின் வயிற்றுப்பிழைப்புக்காக மனிதர்கள் பல்வேறு பாவங்களைச் செய்கின்றார்கள். தந்தை வந்து அனைவரையும் பாவாத்மாக்களில்; இருந்து புண்ணியாத்மாக்களாக மாற்றுகிறார். பாவத்தைச் செய்யவோ அல்லது பொய்களைச் சொல்லவோ தேவையில்லை. நீங்கள் சக்கரத்தின் முக்காற் பங்குக்குச் சந்தோஷத்தையும் சக்கரத்தின் ஒரு காற்பங்குக்கு மாத்திரம் துன்பத்தையும் பெறுகிறீர்கள். இப்பொழுது தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள், உங்களுடைய பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். இதற்கு வேறு எந்த வழிமுறையும் கிடையாது. பக்திமார்க்கத்தில் மக்கள் அதிகளவு தடுமாறித் திரிகின்றார்கள். அவர்கள் வீட்டிலும்; சிவனை வழிபட முடியும், இருந்தும் அவர்கள் நிச்சயமாக ஓர் ஆலயத்துக்குச் செல்கின்றார்கள். இங்கு, நீங்கள் தந்தையைக் கண்டு கொண்டீர்கள். நீங்கள் அவருடைய உருவமொன்றை வைத்திருக்கத் தேவையில்லை. உங்களுக்கு பாபாவைத் தெரியும். அவர் உங்களுடைய எல்லையற்ற தந்தையாவார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குச் சுவர்க்க இராச்சியம் எனும் ஆஸ்தியைத் தருகின்றார். நீங்கள் தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைக் கோருவதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். சமயநூல்கள் போன்றவை எவற்றையும் கற்பதற்கான கேள்வி எதுவும் இங்கு கிடையர்து. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். பாபா நாங்கள் உங்களிடம் வரவுள்ளோம். நீங்கள் அந்த வீட்டைவிட்டு நீங்கி எவ்வளவு காலம் ஆகிவிட்டது? சந்தோஷ தாமத்தைக் கடந்து நீங்கள் 63 பிறவிகளை எடுத்தீர்கள். இப்பொழுது தந்தை கூறுகின்றார்: நீங்கள் அமைதி தாமத்துக்கும் சந்தோஷ தாமத்துக்கும் செல்ல வேண்டும். தொடர்ந்து இத் துன்ப தாமத்தை மறந்து விடுங்கள். சந்தோஷ தாமத்தையும் அமைதி தாமத்தையும் நினைவு செய்யுங்கள். இதையிட்டு எச்சிரமமும் கிடையாது. சிவபாபா சமயநூல்கள் போன்ற எவற்றையும் கற்க வேண்டிய அவசியமில்லை. இப் பிரம்மாவே அவற்றைக் கற்றுள்ளார். சிவபாபா இப்பொழுது உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். இப் பிரம்மாவினாலும் கற்பிக்க முடியும். எவ்வாறாயினும், நீங்கள் எப்பொழுதும் சிவபாபாவே உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என்றே கருத வேண்டும். அவரை நினைவுசெய்வதால் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். இவர் மத்தியில் இருக்கின்றார். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது அதிக காலமில்லை, மிகக் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. உங்கள் பாக்கியத்தில் உள்ளவற்றையே நீங்கள் பெறுவீர்கள் என்று எண்ண வேண்டாம். ஒரு பாடசாலையில், நீங்கள் கற்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பாக்கியத்தில் உள்ளவற்றையே நீங்கள் பெறுவீர்கள் என்று நீங்கள் கூறமாட்டீர்கள். இங்கு நீங்கள் கற்காதுவிடின், அங்கு நீங்கள் எண்ணற்ற பிறவிகளுக்கு வேலை செய்ய நேரிடும். உங்களால் ஓர் இராச்சியத்தைக் கோர இயலாதிருக்கும். பின்னர், திரேதாயுகத்தில், நீங்கள் ஒரு கிரீடத்தைப் பெறக்கூடும். தூய்மையாகுவதும் ஏனையோர்களைத் தூய்மையாகுவதற்குத் தூண்டுவதுமே பிரதான விடயம் ஆகும். சத்தியநாராயணனாக ஆகுகின்ற உண்மைக்கதையை ஏனையோருக்குக் கூறுங்கள். இது மிகவும் இலகுவானதாகும். உங்களுக்கு இரு தந்தையர்கள் உள்ளனர்கள் என்பதை முதலில் விளங்கப்படுத்துங்கள். உங்களுடைய எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து நீங்கள் ஓர் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியை பெறுகின்றீர்கள், உங்களுடைய எல்லையற்ற தந்தையிடமிருந்தோ நீங்கள் ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். உங்களுடைய எல்லையற்ற தந்தையை நினைவுசெய்வதால், நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், அதிலும், நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர வேண்டும். ஓர் அந்தஸ்தைக் கோருவதற்கு மக்கள் கடுமையாகச் சண்டையிடுகின்றார்கள். இறுதியில் அவர்கள் ஒருவரையொருவர் குண்டுகளினால் உதவுவார்கள். அங்கு ஒருபொழுதும் பல்வேறு சமயங்கள் இருப்பதில்லை, ஆனால் அவை நீண்டகாலத்துக்கு இருக்கவும் மாட்டாது. நீங்களே இராச்சியத்தை ஆட்சி செய்யப்; போகின்றவர்கள். ஆகவே, உங்கள் மீது கருணை கொண்டிருங்கள்! குறைந்த பட்சம் ஓர்; உயர்ந்த அந்தஸ்தையேனும் கோருங்கள்! சில குழந்தைகள் எட்டு அணாக்களை (ஜம்பது சதம்) கொடுத்தும் கூறுகின்றார்கள்: எனக்காகச் சுவர்க்கத்திற்கென ஒரு செங்கல்லை இடுங்கள். நீங்கள் சுதாமாவின் (குசேலர்) உதாரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்கள்: ஒரு கைப்பிடி அரிசியின் பிரதிபலனாக அவர் ஒரு மாளிகையைப் பெற்றார். ஏழைகள் எட்டணாக்களை மாத்திரம் கொண்டுள்ளதால், அவர்களால் அந்தளவு மாத்திரமே கொடுக்க முடியும். அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, நாங்கள் ஏழைகள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். இங்குள்ள அனைவரினதும் வருமானம் பொய்யானதாகும். அவர்கள் தானம் கொடுத்துப் புண்ணியம் செய்யும்பொழுது, பாவாத்மாக்களுக்கே தானம் செய்கின்றார்கள். ஆகவே, அது புண்ணியமாகுவதற்குப் பதிலாக, ஒரு பாவம் ஆகுகின்றது. பணத்தைக் கொடுத்தவருக்கு அது ஒரு பாவமாகவும் ஆகுகின்றது. அத்தகைய விடயங்களைச் செய்வதால், அனைவரும் பாவாத்மாக்கள் ஆகிவிட்டார்கள். சத்தியயுகத்தில் மாத்திரமே புண்ணியாத்மாக்கள் இருக்கின்றார்கள். அது புண்ணியாத்மாக்களின் உலகம் ஆகும். தந்தையால் மாத்திரமே அவ்வுலகை உருவாக்க முடியும். இராவணனே ஆத்மாக்களைப் பாவிகள் ஆக்குகின்றான். மக்கள் மிகவும் தீயவர்கள் ஆகுகின்றார்கள். இப்பொழுது தந்தை கூறுகின்றார்: தீய செயல்களைச் செய்யாதீர்கள். புதிய உலகில் தீயவை எதுவும் இருக்க மாட்டாது. அதன் பெயரே சுவர்க்மாகும், எனவே, அங்கு வேறு எதுவும் இருக்க முடியாது. “சுவர்க்கம்” என்கின்ற வார்த்தை கூறப்பட்டதுமே ஒருவரின் வாயூறத் தொடங்குகிறது. தேவர்கள் இருந்திருக்க வேண்டும்; அதனாலேயே அவர்களுடைய ஞாபகார்த்தங்கள் உள்ளன. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் ஆவார்கள். எண்ணற்ற நடிகர்கள் உள்ளனர். அவர்கள் எங்கிருந்து தங்களுடைய பாகங்களை நடிப்பதற்கு வந்தார்களோ, அவ்விடத்திலேயே அவர்கள் அமர்ந்திருந்திருக்க வேண்டும். இப்பொழுது கலியுகத்தில் எண்ணற்ற மனிதர்கள் உள்ளார்கள். தேவர்களின் இராச்சியம் இப்பொழுது கிடையாது. ஏனையோருக்கு விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். மீண்டும் ஓரே தர்மம் ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருப்பதுடன் ஏனைய அனைத்தும் அழியப் போகின்றன. நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தபொழுது, அங்கு வேறு எந்த சமயமும் கிடையாது. இராமரின் படத்தில் அவர்கள் அவரை ஒரு வில்லுடனும் அம்புடனும் சித்தரித்துள்ளார்கள். அங்கு வில், அம்புக்கான கேள்வியே கிடையாது. ஒருவர் இப்பொழுது செய்;கின்ற சேவையே, அவர் முன்னைய கல்பத்தில் செய்த சேவையாகும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அதிகளவு சேவை செய்பவர்கள் மீது தந்தை அதிகளவு அன்பு செலுத்துகின்றார். ஒரு லௌகீகத் தந்தை தனது உண்டும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளைவிட, மிக நன்றாகக் கற்கும் குழந்தைகளிடம் மேலதிக அன்பைக் காட்டுவார். சேவை செய்பவர்கள் மீது அதிகளவு அன்பு செலுத்தப்படுகின்றது. இரண்டு பூனைகள் சண்டையிட்ட போது கிருஷ்ணர் அவற்றிடமிருந்து வெண்ணெயை எடுத்து உண்டதைப் பற்றிய கதையொன்று உள்ளது. நீங்களே முழு உலகின் இராச்சியமாகிய வெண்ணெயைப் பெறுபவர்கள் ஆவீர்கள். ஆகவே, கவனயீனமாக இருந்து, அழுக்கடையாதீர்கள். அதனால் உங்களுடைய இராச்சியத்தை இழந்துவிடாதீர்கள். நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள்: நீங்கள் அவரை நினைவு செய்யாதுவிடின், உங்களுடைய பாவச்சுமை தொடர்ந்தும் அதிகரிக்கும். பின்னர் நீங்கள் பெருமளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். நீங்கள் மனம் வருந்திப் பெருமளவு அழுவீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கான ஓர் இராச்சியத்தைப் பெற முடியும். எவ்வாறாயினும், நீங்கள் இதில் சித்தியடையாதுவிடின், பெருமளவு அழுவீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் தந்தையின் வீட்டையோ அல்லது உங்கள் புகுந்த வீட்டையோ நினைவுசெய்யாதீர்கள். உங்களுடைய எதிர்காலப் புதிய வீட்டை நினைவுசெய்யுங்கள். தந்தை கூறுகின்றார்: ஒருவரைக் கண்டு பித்துப் பிடித்தவர் ஆகாதீர்கள்;. நீங்கள் ஒரு மலராக ஆக வேண்டும். தேவர்கள் மலர்களாக இருந்தார்கள். கலியுகத்தில் முட்களே உள்ளன. இப்பொழுது, சங்கமயுகத்தில், நீங்கள் மலர்களாகிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது. நீங்கள் இங்கு அவ்வாறு ஆகுவதால் சத்தியயுகத்துக்குச் செல்வீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய இறுதிக் கணங்களில் ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரையும் நீங்கள் நினைவுசெய்யக் கூடாது. இதனை அடைவதற்கு, உங்கள் இதயத்தை எவர்மீதும் பற்று வைக்க அனுமதிக்காதீர்கள். தீய சரீரங்கள்மீது அன்பு கொண்டிருக்காதீர்கள். உங்களுடைய கலியுக பந்தனங்களைத் துண்டித்து விடுங்கள்.

2. உங்கள் புத்தியைப் பரந்ததாக ஆக்குவதால், பயமற்றவர் ஆகுங்கள். ஒரு புண்ணியாத்மா ஆகுவதற்கு, இப்பொழுது எப்பாவத்தையும் செய்யாதீர்கள். உங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்;காகப் பொய் பேசாதீர்கள். உங்களுடைய கைப்பிடியரிசியை உபயோகமான முறையில் பயன்படுத்தி, ஓர் உண்மையான வருமானத்தைச் சேகரியுங்கள். உங்கள் மீது கருணை கொண்டிருங்கள்.

ஆசீர்வாதம்:
தபஸ்யாவின் சொரூபமாக இருந்து, கடவுளின் மீது உங்களுக்கு இருக்கின்ற அன்பினால், உங்களையும் உலகையும் தடைகளில் இருந்து விடுவிப்பீர்களாக.

ஒரேயொரு கடவுளின் மீது அன்பு கொண்டிருப்பதே தபஸ்யாவாகும். இந்த தபஸ்யாவின் சக்தியின் மூலம் உங்களையும் உலகையும் தடைகளில் இருந்து எக்காலத்திற்குமாக விடுவிக்க முடியும். தடைகளில் இருந்து விடுபட்டிருப்பதும், பிறரை தடைகளில் இருந்து விடுவித்து, ஆத்மாக்கள் அனைவரையும் பலவகையான தடைகளில் இருந்து விடுவிப்பதுமே உண்மையான சேவையாகும். உங்களுடைய தபஸ்யாவின் அடிப்படையில், சேவை செய்கின்ற குழந்தைகளாகிய நீங்கள் ஜீவன்முக்தி பெற்று, இதனை பிறருக்கு வழங்குவதற்கு கருவிகள் ஆகுவதே, தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற ஆசீர்வாதமாகும்.

சுலோகம்:
எங்கும் சிதறி கிடக்கின்ற அன்பை ஒன்றிணைத்து ஒரேயொரு தந்தையிடம் அன்பை கொண்டிருக்கும் போது, நீங்கள் கடினமாக உழைப்பதில் இருந்து விடுபடுகிறீர்கள்.