04.06.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த உலகிற்கு அப்பாலுள்ள தந்தையை உங்களுக்கு மாத்திரமே மிகச்சரியாகத் தெரியும் என்பதால், உண்மையான அன்புடைய புத்தியை உடைய உங்களையே உண்மையான ஆஸ்திகர்கள் என அழைக்க முடியும்.
கேள்வி:
தந்தையின் பணிகளில் எது பக்தர்களை அவரே காப்பவர் என்பதை நிரூபிக்கின்றது?பதில்:
இராவணனது சிறையிலிருந்து பக்தர்கள் அனைவரையும் விடுவித்து, அவர்களை வளமற்றவர்களில் இருந்து வளமானவர்களாக ஆக்குவது, ஒரேயொரு தந்தையின் பணி மாத்திரமே ஆகும். பழைய பக்தர்களைப் பிராமணர்களாக மாற்றி, பின்னர் அவர்களைத் தேவர்கள் ஆக்குவதே அவரது பாதுகாப்பாகும். தனது பக்தர்கள் அனைவருக்கும் முக்தியையும் ஜீவன்முக்தியையும் கொடுப்பதற்காக பக்தர்களைப் பாதுகாப்பவர் வந்துள்ளார்.பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று வேறு எவரும் தனித்துவமானவர் அல்ல…..ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் யாரது புகழைச் செவிமடுத்தீர்கள்? கடவுளே அதிமேலானவர் என நினைவுகூரப்படுவதுடன் கடவுள் மாத்திரமே தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார். லௌகீகத் தந்தை ஒருவர் தனது படைப்பின் படைப்பாளியாக இருப்பதைப் போன்றே இவரும் இந்த முழு படைப்பையும் படைப்பவர் ஆவார். லௌகீகத் தந்தை முதலில் ஒரு குமாரியை தனது மனைவியாக்கிக் கொண்டு, பின்னர் அவருடன் இணைந்து ஒரு படைப்பைப் படைக்கின்றார். அவருக்கு 5 முதல் 7 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அவரது படைப்பு என்று அழைக்கப்படுகின்றார்கள். லௌகீகத் தந்தையே அவர்களைப் படைப்பவர் ஆவார். அவர் எல்லைக்கு உட்பட்ட படைப்பவர். படைப்புக்களான நீங்கள், படைப்பவரான உங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மக்கள் இரு தந்தையரைக் கொண்டிருக்கின்றார்கள்: ஒருவர் லௌகீகத் தந்தையும், மற்றவர் இந்த உலகிற்கு அப்பாற்பட்டவரும் ஆவார். இந்த ஞானம், பக்தியில் இருந்து வேறுபட்டது என்பதும், அதன் பின்னர் ஆர்வமின்மை உள்ளது என்றும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். ஆனால் ஏனைய அனைவரும் கலியுகத்தில் இருக்கின்றார்கள். அனைவரும் அவரது குழந்தைகளே, ஆனால் நீங்களே முழுப் படைப்பையும் படைத்த எல்லையற்ற தந்தையை அறிந்திருக்கின்றீர்கள். லௌகீகத் தந்தை ஒருவர் இருந்த போதிலும், மக்கள் இவ் உலகிற்கு அப்பாலுள்ள அந்தத் தந்தையை நினைவு செய்கின்றார்கள். சத்தியயுகத்தில், லௌகீகத் தந்தை ஒருவர் இருந்தாலும், எவரும் இவ் உலகிற்கு அப்பாலுள்ள தந்தையை நினைவு செய்வதில்லை. ஏனெனில், அது சந்தோஷ உலகமாகும். துன்பத்தின்போதே அனைவரும் அப்பாலுள்ள தந்தையை நினைவு செய்கின்றார்கள். நீங்கள் இங்கே கற்பிக்கப்படுகின்றீர்கள். இங்கே மனிதர்கள் விவேகமானவர்கள் ஆக்கப்படுகின்றார்கள். பக்திமார்க்கத்தில், மக்கள் தந்தையை அறியாமல் உள்ளார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: ஓ பரமாத்மாவான பரமதந்தையே! ஓ தந்தையான கடவுளே! ஓ துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரே! அதன் பின்னர் அவர்கள் அவரைச் சர்வவியாபி என்றோ அல்லது தூணிலும் துரும்பிலும், கற்களிலும், நாய்கள், பூனைகள் போன்ற அனைத்திலும் உள்ளார் என்றும் கூறுகின்றார்கள்! அவர்கள் பரமாத்மாவான தந்தையை இவ்வாறாக அவதூறு செய்ய ஆரம்பிக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள் என்பதால் நீங்கள் ஆஸ்திகர்கள் ஆகியுள்ளீர்கள். உங்கள் புத்திகள் உண்மையிலேயே தந்தையின் மீது அன்பைக் கொண்டுள்ளன. ஏனைய அனைவரும் தந்தையின் மீது உண்மையான அன்பான புத்தியைக் கொண்டிருப்பவர்கள் அல்ல. பழைய உலகின் விநாசத்திற்கான மகாபாரத யுத்தம் இப்பொழுது உங்கள் முன்னிலையில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். கலியுகமான தூய்மையற்ற உலகம் 5000 வருடங்களுக்கொரு முறை தந்தையினால் ஸ்தாபிக்கப்படுகின்ற சத்தியயுகமான, தூய உலகமாக மாற்றப்படுகின்றது. அவரையே மக்கள் நினைவுசெய்து அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஓ படகோட்டியே, இந்த நச்சுக்கடலில் இருந்து எங்களை வெளியேற்றி, பாற்கடலுக்கு அழைத்துச் செல்லுங்கள்! காந்திஜியும் பாடுவதுண்டு: சீதையின் இராமரே தூய்மையாக்குபவர். ஓ இராமா, இப்பொழுது வந்து சீதைகள் அனைவரையும் தூய்மை ஆக்குங்கள்! நீங்கள் அனைவருமே சீதைகளான, பக்தர்கள் ஆவீர்கள். அவர் கடவுள் என்பதாலேயே அனைவரும் அவரை அழைக்கின்றார்கள். அவர் உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். எங்கும் அவர் உங்களைத் தடுமாற விடவில்லை. அவர் கூறுவதில்லை: தீர்த்த யாத்திரைகளுக்குச் செல்லுங்கள், கும்பமேலாவிற்குச் செல்லுங்கள். இல்லை! அந்த நதிகள் தூய்மை ஆக்குவதில்லை. ஞானக்கடலான தந்தை ஒருவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் ஆவார். எவருமே கடலையோ, நதியையோ நினைவு செய்வதில்லை. அவர்கள் தந்தையையே அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரான பாபாவே, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! நீர் நிறைந்த நதிகள் உலகில் எங்கும் உள்ளன. அவை தூய்மை ஆக்குபவை அல்ல. ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். அவர் வந்தால் மாத்திரமே உங்களைத் தூய்மையாக்க முடியும். பாரதத்தின் புகழ் மிகவும் மகத்துவமானது! சகல சமயங்களுக்கும் பாரதம் யாத்திரை ஸ்தலமாக உள்ளது. சிவனின் பிறந்தநாளும் இங்கேயே நினைவு கூரப்படுகின்றது. தேவர்கள் வாழ்கின்ற சத்தியயுகமே தூய உலகமாகும். ‘நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும், 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள்’ என்ற தேவர்களின் புகழ் நினைவு கூரப்பட்டுள்ளது. சந்திரவம்சம் 14 சுவர்க்கக் கலைகள் நிறைந்தது என்று கூறப்படுகின்றது. அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் இறங்குகின்றார்கள். தந்தை வந்து ஒரு விநாடியில் உங்களை ஏணியில் ஏறச் செய்து உங்களை அமைதிதாமத்;திற்கும் சந்தோஷதாமத்திற்கும் அழைத்துச் செல்கின்றார். அதன் பின்னர் நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்து, ஏணியில் இறங்குகின்றீர்கள். யாராவது ஒருவர் நிச்சயமாக 84 பிறவிகள் முழுவதையும் எடுத்திருக்க வேண்டும். சமயநூல்கள் அனைத்திலும், கீதையே பிரதான இரத்தினமாகும். ஸ்ரீமத் பகவத் கீதை என்றால் கடவுளினால் பாடப்பட்ட கீதை என்று அர்த்தமாகும். எவ்வாறாயினும், தூய்மை அற்றவர்களுக்குக் கடவுள் யார் என்பது தெரியாது. தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதி அளிப்பவரும் ஒரேயொரு அசரீரியான சிவன் மாத்திரமே ஆவார். ஆனால் அவர் எப்பொழுது வருகின்றார் என்பதை எவரும் அறியார்கள். தந்தையே வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். புத்திரர்களும் புத்திரிகளும் ‘பாபா’ எனக் கூறுகின்றார்கள். ‘நீங்களே தாயும் தந்தையும்’ என்றும் பாடப்பட்டுள்ளது. உங்களது இந்த இராஜயோகத்தைக் கற்பதன் மூலம் நாங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெறுகின்றோம்! நீங்கள் இங்கே எல்லையற்ற தந்தையிடம் உங்கள் 21 பிறவிகளுக்கான சுவர்க்க ஆஸ்தியைப் பெறவே வருகின்றீர்கள். சிவனின் பிறப்பு பாரதத்தில் மாத்திரமே கொண்டாடப்படுகின்றது. இராவணனும் பாரதத்தில் மாத்திரமே காட்டப்படுகின்றான். எவ்வாறாயினும், எவருக்கும் அதன் அர்த்தம் தெரியாது. சிவன் எங்களது எல்லையற்ற தந்தை ஆவார். எவருக்கும் அவரைத் தெரியாத போதிலும் தொடர்ந்தும் அவரை வழிபடுகின்றார்கள். முழு விருட்சமும் தமோபிரதான் ஆகும்போதே தந்தை வருகின்றார். பாரதம் புதிய உலகில் சுவர்க்கமாக இருந்தது. பாரதத்தில் சத்தியயுகம் இருந்தது. இப்பொழுது பாரதத்தில் கலியுகம் இருக்கின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: முதலில், நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் 84 பிறவிகளை எடுத்தபின்னர் நரகவாசிகள் ஆகியுள்ளீர்கள். நான் இப்பொழுது உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாகவும் தூய்மை அற்றவரில் இருந்து தூய்மையானவராகவும் ஆக்குகின்றேன். பக்தி என்றால் பிரம்மாவின் இரவும், இந்த ஞானம் என்றால் பிரம்மாவின் பகலும் ஆகும். பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளுமாகிய நீங்கள் இப்பொழுது பகலுக்குள் செல்கின்றீர்கள். இப்பழைய உலகம் இப்பொழுது எரியூட்டப்பட உள்ளது. உண்மையிலேயே மகாபாரத யுத்தம் இடம்பெற உள்ளது. இந்த மகாபாரத யுத்தத்தின் பின்னரே பாரதம் உண்மையிலேயே சுவர்க்கம் ஆகுகின்றது. எண்ணிக்கையற்ற அனைத்துச் சமயங்களும் அழிக்கப்பட்டு, ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்படும். குழந்தைகளாகிய நீங்கள் பாபாவின் உதவியாளர்கள் ஆகி, ஆதி சனாதன தேவதேவியரின் தர்மத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகும்போது, விநாசம் ஆரம்பமாகும். இது சிவபாபாவின் ஞானயாகம் ஆகும். அவரை நீங்கள் சிவன் என்றோ அல்லது உருத்திரன் என்றோ அழைக்கலாம். இது ‘கிருஷ்ணரின் ஞானயாகம்’ என என்றுமே அழைக்கப்படுவதில்லை. சத்தியயுகத்திலோ, திரேதாயுகத்திலோ யாகங்கள் வளர்க்கப்படுவதில்லை. அனர்த்தங்கள் இடம்பெறும்போதே யாகங்கள் வளர்க்கப்படுகின்றன. தானியங்களுக்கான பஞ்சம் ஏற்படும்போதோ அல்லது யுத்தம் இடம்பெற்றாலோ அவர்கள் அமைதியை ஏற்படுத்துவதற்காக யாகம் வளர்க்கின்றார்கள். விநாசம் ஏற்படாமல் பாரதம் சுவர்க்கம் ஆக முடியாது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பாரதத்தின் தாய்மார்களது சிவசக்தி சேனை நினைவுகூரப்பட்டுள்ளது. தூய்மையானவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகின்றது. ஸ்ரீமத்திற்கு ஏற்ப நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்கியதால் தாய்மார்களாகிய உங்களுக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது (வந்தே மாதரம்). தந்தை இப்பொழுது கூறுகின்றார்: மரணம் இப்பொழுது அனைவரதும் தலைமேல் உள்ளது. ஆகையால், இந்த ஒரு பிறவியில் நீங்கள் தூய்மையாகித் தந்தையை நினைவு செய்தால் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் இப்பொழுது சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். இது புதியதொன்றல்ல. இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. ஒவ்வொரு சக்கரத்திலும், 5000 வருடங்களுக்கு ஒருமுறை நரகம் சுவர்க்கம் ஆகுகின்றது. தூய்மையற்ற உலகில் மக்கள் என்ன செயலைச் செய்தாலும் அவை பாவச்செயல்கள் மாத்திரமே ஆகும். தந்தை கூறுகின்றார்: செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச் செயல்களின் தத்துவம் 5000 வருடங்களின் முன்னரும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டது. மீண்டும் ஒருமுறை இப்பொழுது நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையான நான் உங்கள் தந்தை ஆவேன். நான் கடனாகப் பெற்றுள்ள இச்சரீரம் கடவுள் அல்ல. மனிதர்களைத் தேவர்கள் என்றேனும் அழைக்க முடியாது. அவ்வாறாயின் மனிதர்களை எவ்வாறு கடவுள் என்று அழைக்க முடியும்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் 84 பிறவிகளை எடுத்துத் தொடர்ந்தும் ஏணியில் கீழே இறங்குகின்றீர்கள். எவருமே மேலே மீண்டும் திரும்பிச்செல்ல முடியாது. அவர்கள் அனைவரும் தூய்மையற்றவர் ஆகுவதற்கான பாதையையே காட்டுகின்றார்கள். அத்துடன் தாமும் தொடர்ந்தும் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள். ஆகையால், தந்தை கூறுகின்றார்: நான் அவர்களையும் ஈடேற்ற வரவேண்டும். இது இராவண இராச்சியம் ஆகும். நீங்கள் இப்பொழுது இராவண இராச்சியத்தில் இருந்து வெளியேறி உள்ளீர்கள். அனைவரும் நாளடைவில் இதனைப் பற்றி அறிந்து கொள்வார்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகாது, உங்களால் சிவபாபாவிடம் இருந்து எந்த ஆஸ்தியையும் பெற முடியாது. இரண்டு தந்தையர் மாத்திரமே உள்ளார்கள்: ஒருவர் அசரீரியான தந்தை, மற்றவர் லௌகீகத் தந்தை. லௌகீகக் குழந்தைகள் லௌகீகத் தந்தையிடம் இருந்து தமக்கான ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். அசரீரி ஆத்மாக்கள் அசரீரியான எல்லையற்ற தந்தையிடம் இருந்து தமது ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். நீங்கள் இனிமையிலும் இனிமையான சிவபாபாவிடம் இருந்து சந்தோஷ தாமத்திற்குரிய உங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெறவே வந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். யோகசக்தியினூடாக நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஆயுதங்கள் போன்றன எதுவும் இல்லை. எனவே நீங்கள் தந்தையுடன் யோகம் செய்து, உங்கள் பாவங்களை அழித்த பின்னர் விஷ்ணுதாமத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அமரத்துவ உலகிற்குச் செல்வதற்காக அமரத்துவக் கதையைச் செவிமடுக்கின்றீர்கள். அங்கே அகால மரணம் இடம்பெறுவதில்லை. துன்பத்தின் பெயரோ சுவடோ இருப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி அதிமேன்மையான தேவர்கள் ஆகுவதற்கே அவரிடம்; வந்திருக்கின்றீர்கள். இந்த ஞானம் வேறு எந்த சமயநூல்களிலும் இல்லை. பிரம்மா விஷ்ணுவின் தொப்புளில் இருந்து தோன்றினார் என்று காட்டப்பட்டுள்ளது. அவர் தனது கரங்களில் சமயநூலை வைத்திருப்பதைப் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளார். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது பிரம்மாவின் ஊடாக படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை உங்களுக்குக் கூறுகின்றேன். நான் மாத்திரமே ஞானக்கடல் ஆவேன். பாடப்பட்டுள்ளது: ஞானசூரியன் உதிக்கும்போது, அறியாமை இருள் அகல்கின்றது. சத்தியயுகத்தில் அறியாமை இருக்க மாட்டாது. பாரதம் சத்திய உலகமாக இருந்தபோது அது வைரம் போன்று பெறுமதியானதாக இருந்தது. வைரங்களும் இரத்தினங்களும் பதித்த மாளிகைள் இருந்தன. இப்பொழுது மக்களிடம் உண்பதற்குக் கூட போதியளவு இல்லாதுள்ளது. யாரால் வளமற்ற உலகத்தை மீண்டும் வளம் நிறைந்தது ஆக்க முடியும்? இது தந்தையின் பணி மாத்திரமே ஆகும். தந்தைக்குக் கருணை உள்ளது. அவர் கூறுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க வந்துள்ளேன். நான் சாதாரண மனிதனை நாராயணனாகவும் சாதாரணப் பெண்ணை இலக்ஷ்மியாகவும் ஆக்கவே வந்துள்ளேன். பக்தர்களைக் காப்பவர் ஒரேயொரு தந்தையாவார். நான் உங்களை இராவணனின் சிறையிலிருந்து வெளியேற்றிச் சந்தோஷ உலகிற்கு அழைத்துச் செல்கின்றேன். இவ் உலகில் பிராமணர்கள் ஆகுபவர்களே பின்னர் தேவர்கள் ஆகுவார்கள். ‘பிரஜாபிதா பிரம்மா’ என்ற பிரம்மாவின் பெயரும் பிரபல்யமானது. பிராமணர்களாகிய நீங்களே அதிமேன்மையானவர்கள். நீங்கள் பாரதத்திற்கான ஆன்மீகச் சேவையைச் செய்கின்றீர்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதன் மூலமே உங்கள் பாவங்கள் அழியும், தூய்மை ஆகுவதற்கு வேறு வழியேதும் இல்லை. நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதன் மூலமாக மாத்திரமே கலப்படம் எரிக்கப்படும். ஒரு பொற்கொல்லருக்கு உண்மையான தங்கத்தை எவ்வாறு போலியான தங்கம் ஆக்குவது என்பது தெரியும். அவர்கள் அதில் வெள்ளி, செப்பு, இரும்பு போன்றவற்றைக் கலக்கிறார்கள். அதனால் அந்தத் தங்கத்தின் பெறுமதி குறைகின்றது. நீங்களும் சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர் நாளடைவில் மாசு உங்களுக்குள் கலக்கப்பட்டது. இப்பொழுது நீங்கள் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை நீங்கள் சதோபிரதான் ஆக வேண்டும். அப்பொழுதே உங்களால் சத்தியயுகத்திற்குச் செல்ல முடியும். தந்தை கூறுகின்றார்: சரீரதாரிகளை நினைவு செய்யாதீர்கள்! உங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் நீங்கள் வாழ்ந்த போதிலும் ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதிருந்தால், உங்களால் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக முடியும். விஷ்ணு தாமமான சுவர்க்கம் இருந்தது. அது இப்பொழுது இராவணனது உலகமாகி உள்ளது. அது மீண்டும் நிச்சயமாக விஷ்ணுவின் உலகமாகும். நான் சாதுக்கள், புனிதர்கள் அனைவரையும் ஈடேற்றவே வந்துள்ளேன். ஆகையாலேயே கூறப்படுகின்றது: அதர்மம் தழைத்தோங்கும்போது நான் வருகின்றேன். இது பாரதத்தையே குறிக்கின்றது. ஒரேயொரு தந்தையாகிய சிவனான நானே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஆவேன். சிவன், உருத்திரன் போன்றன அனைத்தும் அவருடைய பெயர்களே. அவருக்கு அவர்கள் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: எனது உண்மையான பெயர் சிவன் ஆகும். நான் சிவன், குழந்தைகளாகிய நீங்கள் சாலிகிராம்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்குச் சரீர உணர்வில் இருந்தீர்கள். இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள்! ஒரேயொரு தந்தையை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் அனைத்தையும் அறிந்தவர் ஆகுவீர்கள். நீங்கள் மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆகுகின்றீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தைப் பின்பற்றி அதிமேன்மையான தேவர்கள் ஆகுங்கள். முழு உலகிற்குமான உண்மையான ஆன்மீகச் சேவையைச் செய்யுங்கள். ஆதிசனாதன தேவ தேவியரின் தர்மத்தை ஸ்தாபிப்பதில் தந்தையின் முழுமையான உதவியாளர் ஆகுங்கள்.2. ஆத்மாவை உண்மையான தங்கமாக ஆக்குவதற்குத் தந்தையைத் தவிர வேறு எந்தச் சரீரதாரியையும் நினைவு செய்யாதீர்கள். இவ் உலகிற்கு அப்பாலுள்ள தந்தையின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அமரத்துவ ரூபம் ஆகுவதன் மூலம் ஆன்மீகமாக முன்னேறி, அனைத்துப் பாதகமான சூழ்நிலைகளையும் வெற்றி கொள்வீர்களாக.எப்படி நீங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்திற்காக பல வழிமுறைகளைக் கையாளுகிறீர்களோ, அவ்வாறே, இந்த வழிமுறையையும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துங்கள்: சதா அமரத்துவ ரூபத்தில் ஸ்திரமாக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். தங்களை அமரத்துவ ரூபங்களாக (ஆத்மாக்கள்) கருதிச் செயல்படுபவர்கள், அகால மரணம், பஞ்சம், ஏனைய அனைத்துப் பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். மனக்கவலைகள், மன அழுத்தமான சூழ்நிலைகளை நீக்குவதற்கு, உங்களின் சரீர விழிப்புணர்வு எதையும் தொடர்ந்து நீக்குங்கள்.
சுலோகம்:
நீங்கள் மீண்டும் மீண்டும் ஏதாவது வருவதை உணர்ந்தால், இறுதிப் பரீட்சையில் தோற்றுப் போவீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவமுள்ளவராகவும், சகிப்பவராகவும் இருங்கள்.
சதா மலர்ச்சியாக இருப்பவர்களின் ஞாபகார்த்தம், விஷ்ணுவின் வடிவத்தில் காட்டப்படுகிறது. விஷ்ணு சௌகரியமாக பாற்கடலில் படுத்திருக்கிறார், ஞானத்தைக் கடைந்து மிகவும் மலர்ச்சியாக இருக்கிறார். மலர்ச்சியாக இருப்பதற்கான வழிமுறை, இந்த ஞானத்தைக் கடைவதே ஆகும். எந்தளவிற்கு ஒருவர் இந்த ஞானத்தைக் கடைகிறாரோ, அந்தளவிற்கு அவர் மலர்ச்சியாக இருப்பார். எந்தவொரு பிரதிகூலமான சூழ்நிலையும் அவரின் தைரியம், ஊக்கம் அல்லது உற்சாகத்தைக் குறைக்காது. சகித்துக் கொள்ளும் சக்தியால் அவர் இலகுவாக பிரதிகூலமான சூழ்நிலைகளையும் வெற்றி கொள்வார்.
மாதேஸ்வரி ஜெகதாம்பாளின் பெறுமதிமிக்க மேன்மையான வாசகங்கள்
மக்கள் எவ்வாறு திரான்ஸிற்குள் செல்கின்றார்கள்?
திரான்ஸில் செல்கின்ற தத்துவம் மிகவும் சூட்சுமமானது. அவர்கள் தமது சூட்சுமமான, சுயத்தின் வாகனத்தில் சென்று மீண்டும் திரும்பி வருகின்றனர், அதாவது அது ஒருவர் வெளியில் எங்கோ சுற்றுலா சென்று வருவதைப் போன்றதாகும். அவ்வாறு நீங்கள் சுற்றுலா செல்லும் பொழுது மரணிப்பதில்லை, ஆனால் அங்கே சென்று மீண்டும் அங்கிருந்து திரும்பி வருகின்றீர்கள். இங்கும் அந்த ஆத்மா தனது சரீரத்தில் இருந்து வெளியேறி, தனது சூட்சுமமான, அக சரீரம் என்ற உள்ளே இருக்கின்ற வாகனத்தில் ஒரு சுற்றுலா செல்கின்றார். அந்தக் காலப்பகுதியில், அந்த ஆத்மா பறக்கின்ற ஒரு பறவை போன்று உள்ளார். அவரின் இழையை ஈர்த்து ஒரு தெய்வீகக் காட்சியை அவருக்கு அருள வேண்டியது கடவுளின் கடமையாகும். உதாரணத்திற்கு, இரவு நேரத்தில் ஆத்மாக்களாகிய நாம் எமது சரீரத்தில் இருந்து விடுபட்டு, சந்தோஷ பாதைக்கோ அல்லது கனவு ஸ்திதிக்கு செல்வதைப் போன்றதாகும். அந்த நேரத்தில் சரீரங்கள் அமைதியாக இருப்பதுடன், நாங்கள் எங்கள் சரீரத்தையும் எங்கள் சரீர சமயத்தையும் மறந்து விடுகிறோம். எவ்வாறாயினும், எங்கள் சரீரங்கள் மரணித்து விடுகின்றன என்றில்லை: மீண்டும் விழித்தெழுந்ததும் நாங்கள் இரவு கண்ட கனவை ஞாபகப்படுத்தி அதைப் பற்றிப் பேசுகின்றோம். அவ்வாறே நாங்கள் கடவுளுடன் யோகம் செய்யும் போது, ஆத்மாவை அவர் திரான்ஸில் ஒரு சுற்றுலாவில் அழைத்துச் செல்கின்றார். பின்னர், நீங்கள் திரான்ஸிலிருந்து வெளியே வந்ததும், நீங்கள் கண்ட காட்சியை ஞாபகம் செய்கின்றீர்கள். அதனை நீங்கள் பகிர்ந்து கொண்டு, அங்கே என்ன பார்த்தீர்கள் எனக் கூறுகின்றீர்கள். ஒரு கனவு ரஜோகுணியாகவோ அல்லது தமோகுணியாகவோ இருக்கலாம், ஆனால் இந்த திரான்ஸ் ஒரு சதோகுணி ஸ்திதி ஆகும். திரான்ஸின் போது, சரீரம் மரணிப்பதில்லை. ஆனால் சரீரத்தின் சகல விழிப்புணர்வும் இல்லாமல் போகின்றது. ஒருவருக்கு குளோரோஃபோம் கொடுக்கப்படும் போது, அவர் தனது சரீரத்தின் முழு விழிப்புணர்வையும் மறந்து விடுகின்றார். உதாரணமாக, வைத்தியர்கள் ஒரு நபரது ஒரு பகுதியை செயலிழக்கச் செய்யும் போது, ஒரு ஊசியை அவருக்கு போடுவதன் மூலம் அதனைச் செய்கின்றார்கள். ஆனால் சரீரத்தின் ஏனைய அனைத்து அங்கங்களும் வேலை செய்கின்றன. திரான்சும் அவ்வாறானதே, அதில் ஆத்மா பறந்து சென்று மீண்டும் திரும்பி வருகின்றார். ஆனால் சரீரம் மரணிப்பதில்லை. கடவுளை அன்றி வேறு எந்த மனிதருக்கும் விழிப்புணர்வு இழைகளை இழுத்தெடுக்கும் சக்தி கிடையாது.