04.10.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களை அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆக்குவதற்காக, கடவுளே உங்களுக்கு அதிமேலான வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார், இதன்மூலம் நீங்கள் நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகளாக மாறுகின்றீர்கள்.

கேள்வி:
தேவர்களாகப் போகின்ற குழந்தைகள் எவ் விடயங்களில் விசேட கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:
எந்த விடயத்தையிட்டும் ஒருபொழுதும் முகங்கோணாதீர்கள், ஒருபொழுதும் ஒரு சடலத்தின் முகத்தைப் போன்று உங்கள் முகத்தை ஆக்கிக் கொள்ளாதீர்கள். ஒருபொழுதும் எவருக்கும் துன்பத்தைக் கொடுக்காதீர்கள். தேவர்கள் ஆகுவதற்கு, உங்கள் உதடுகளில் இருந்து மலர்கள் மாத்திரமே சதா வெளிப்பட வேண்டும். கற்களோ அல்லது முட்களோ வெளிப்படின், நீங்களும் ஒரு கல்லாகவே இருப்பீர்கள். மிக நன்றாக தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் இங்கேயே அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் ஆக வேண்டும். நீங்கள் தண்டனையை அனுபவம் செய்ய நேரிடின், உங்களால் நல்லதோர் அந்தஸ்தைப் பெற முடியாது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை புதிய உலகிற்கு அதிபதிகளாகப் போகும் ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். உங்கள் எல்லையற்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காக இப்பொழுது தந்தை வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் தகுதி அற்றவர்களாகவே இருந்தோம். அவர்கள் கூறுகிறார்கள்: ஓ பிரபு! நான் தகுதியற்றவன்! என்னைத் தகுதிவாய்ந்தவர் ஆக்குங்கள்! தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்களும் மனிதர்கள், தேவர்களும் மனிதர்களே. ஆனால் அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் உள்ளன. அவர்கள் உண்மையான மனிதர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். இப்பொழுது மனிதர்கள் அனைவரும் அசுர குணங்களையே கொண்டுள்ளார்கள், இதனாலேயே அவர்கள் மனிதத்தன்மை அற்றவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களின் செயற்பாடு மிருகங்களுடையதைப் போன்றுள்ளது. ஒருவர் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கவில்லை எனின், அவர் அசுர குணங்களைக் கொண்டவர் எனக் கூறப்படுகின்றது. தந்தை வந்து உங்களை மேன்மையான தேவர்கள் ஆக்குகின்றார். இலக்ஷ்மியும் நாராயணனுமே உண்மையான மனிதர்கள், அவர்கள் சத்திய உலகில் வாழ்கின்றார்கள். அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள், அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் உள்ளன. மக்கள் ‘ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்’ என்று கூறிய பொழுதிலும், எவ்வாறு அந்த அரசர்கள் தூய்மையானவர்கள் ஆகுகின்றார்கள், அவர்கள் எவ்வாறு தூய்மையற்ற அரசர்கள் ஆகுகின்றார்கள் என்ற இரகசியத்தை எவரும் அறியமாட்டார்கள். அது பக்தி மார்க்கமாகும். வேறு எவரும் இந்த ஞானத்தை அறிய மாட்டார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி, உங்களை அவர்களைப் (இலக்ஷ்மி நாராயணன்) போன்றவர்கள் ஆக்குகின்றார். சத்தியயுகத்தில் தேவர்கள் செயல்களைச் செய்த பொழுதிலும், அவர்கள் அவர்கள் தூய்மையான முறையில் செயல்படுகிறார்கள், அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் உள்ளன. சுவர்க்கத்தில் வசிப்பவர்கள் மாத்திரமே எவ்வித தீய செயல்களையும் செய்யாதவர்கள். மாயை நரகவாசிகளை தீய காரியங்களைச் செய்ய வைக்கின்றாள். இப்பொழுது கடவுள் இங்கே அமர்ந்திருந்து எவ்வித தீய செயல்களையும் செய்யாதீர்கள் என்ற மேன்மையான வழிகாட்டலைக் கொடுத்து, உங்களை மேன்மையான செயல்களைச் செய்பவர்கள் ஆக்குகின்றார். உங்களை அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆக்குவதற்காக அனைத்திலும் அதிமேன்மையான வழிகாட்டல்களை அவர் உங்களுக்குக் கொடுக்கின்றார். தேவர்களே அதிமேன்மையானவர்கள். அவர்கள் சுவர்க்கமாகிய, புதிய உலகில் வாழ்கின்றார்கள். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப நீங்கள் இதைப் புரிந்து கொள்வதில் வரிசைக்கிரமமானவர்கள். இதனாலேயே எட்டு, 108, 16,108 மணிமாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களில் எத்தனைபேர் அவ்வாறானவர்கள்? பில்லியன் கணக்கான மனிதர்கள் இருக்கின்றார்கள். ஆகவே அவர்களிலிருந்து 16,000 பேர் தோன்றி உள்ளார்கள் என்றால், அது எத்தனை பேர்? அது ஒரு சதவீதத்தின் கால்வாசி கூட இல்லை. தந்தை குழந்தைகளை அதிமேன்மையானவர்கள் ஆக்குகின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குத் தினந்தோறும் விளங்கப்படுத்துகின்றார்: எந்தப் பாவச் செயலையும் செய்யாதீர்கள். நீங்கள் அத்தகையதொரு தந்தையைக் கண்டுகொண்டுள்ளீர்கள். ஆகவே நீங்கள் அத்தகைய மகத்தான சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தையே உங்களைத் தத்து எடுத்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இப்பொழுது நாங்கள் அவருக்கு உரியவர்கள். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். ஆகவே அத்தகைய சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவதற்கு நீங்கள் தகுதிவாய்ந்தவர்களாகவும், அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்களாகவும் ஆக வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனும் அனைத்துத் தெய்வீக குணங்களும் நிறைந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய தகுதிவாய்ந்த தன்மை புகழப்படுகின்றது. 84 பிறவிகளை எடுத்ததனால் இப்பொழுது அவர்கள் தகுதியற்றவர்கள் ஆகியுள்ளார்கள். அவர்கள் கீழிறங்கும் பொழுது ஒரு பிறவியிலேயே அவர்களுடைய கலைகள் குறைவடைகின்றன. இவ்வாறு தொடர்ந்தும் அவை படிப்படியாகக் குறைவடையத் தொடங்குகின்றன. நாடகம் ஒரு பேனைப் போன்று நகர்வது போல, நீங்களும், படிப்படியாகக் கீழிறங்குகின்றீர்கள். 1250 வருடங்களின் பின்னர் இரு கலைகள் குறைவடைகின்றன. பின்னர் இராவண இராச்சியத்தில், கலைகள் தொடர்ந்தும் வேகமாக குறைவடைகின்றன. சூரியனும் சந்திரனும் கிரகணத்தால் பீடிக்கப்படுவதைப் போல், ஆத்மாக்களும் கிரகணத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஆகுகின்றார்கள். சந்திரனும், நட்சத்திரங்களும் ஒருபோதும் கிரகணத்தால் பீடிக்கப்படுவதில்லை என்று இல்லை, அனைவரும் முற்றாகவே கிரகணத்தால் பீடிக்கப்படுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே உங்களின் கிரகணம் கடந்து செல்லும். எந்தப் பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். சரீர உணர்வே முதல் இலக்கப் பாவமாகும். இதுவே மிகக்கொடிய பாவமாகும். இப்பொழுது உலகம் மாற்றம் அடைய உள்ளதால் இந்த ஒரு பிறவியில் மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் இந்தக் கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள். அத்தகைய கற்பித்தலை நீங்கள் மீண்டும் பெறமாட்டீர்கள். நீங்கள் பிறவிபிறவியாக, சட்டத்தரணி ஆகுவதற்கான கற்பித்தல்களைப் பெற்று வருகின்றீர்கள். அந்தப் பாடசாலைகள் போன்றவை எல்லா நேரத்திலும் இருக்கின்றன. ஆனால் நீங்கள் ஒருமுறை மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அவ்வளவுதான். ஞானக்கடலான தந்தை ஒருமுறை மாத்திரமே வருகின்றார். அவர் உங்களுக்கு தன்னைப் பற்றியும், தனது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றிய ஞானம் அனைத்தையும் வழங்குகின்றார். தந்தை அனைத்தையும் மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் நடிகர்கள். ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காகத் தங்கள் வீட்டிலிருந்து இங்கே வருகின்றார்கள். அது முக்திதாமம் என அழைக்கப்படுகின்றது. சுவர்க்கம் ஜீவன்முக்தி தாமமாகும். இங்கு பந்தன வாழ்க்கையே உள்ளது. இந்த வார்த்தைகள் மிகச்சரியாக நினைவுகூரப்பட வேண்டும். அநாதியான முக்தி என்பது ஒருபொழுதும் கிடையாது. மனிதர்கள் அநாதியான முக்தியை வேண்டுகின்றார்கள். அதாவது, அவர்கள் வருவதும் போவதுமாக இருக்கும் சக்கரத்திலிருந்து வெளியேற விரும்புகின்றார்கள். எவ்வாறாயினும் எவருமே நாடகத்தில் தனது பாகத்தை நடிப்பதிலிருந்து விலகிவிட முடியாது. இது ஆதியும், அநாதியுமான ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். உலகின் வரலாறும் புவியியலும் அதேபோன்று மீண்டும் மீண்டும் நிகழும். அதே தேவர்கள் சத்திய யுகத்திற்குள் பிரவேசிப்பார்கள். பின்னர் இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் போன்றோரும் வருவார்கள். இது மனித விருட்சமாக ஆகும். இந்த விருட்சத்தின் விதையானவர் மேலே உள்ளார். தந்தையே மனித உலக விருட்சத்தின் விதை ஆவார். மனிதர்களின் சனத்தொகை எல்லா நேரமும் இருக்கின்றது, ஆனால் சத்தியயுகத்தில் இது மிகக்குறைவாக இருக்கின்றது. பின்னர் இது படிப்படியாகத் தொடர்ந்தும் பெருமளவுக்கு வளர்ந்து செல்கின்றது. நல்லது. அது எவ்வாறு மீண்டும் சிறியதாக ஆகுகின்றது? தந்தை வந்து தூய்மை அற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். மிகக் குறைவானவர்களே தூய்மையானவர்கள் ஆகுகின்றார்கள். பல மில்லியனில் ஒரு கைப்பிடியளவினர் மாத்திரமே வெளிப்படுகின்றார்கள். அரைச்சக்கரத்திற்கு வெகுசிலரே உள்ளார்கள். பின்னர் அடுத்த அரைச்சக்கரத்திற்கு அதிகளவு வளர்ச்சி உள்ளது. தேவ சமூகத்தினர் ஆரம்பத்திலேயே வந்ததால், அவர்களே அதிகளவான சனத்தொகையைக் கொண்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், தந்தையை மறந்ததனால், அவர்கள் ஏனைய சமயங்களுக்குள் சென்றனர். இது ஒரு தவறைப் பற்றிய நாடகம் ஆகும். அவரை மறந்ததனால், அவர்கள் ஏழைகள் ஆகினார்கள். அவர்கள் சிறிதுசிறிதாக மறந்து, இப்பொழுது முழுமையாக மறந்து விட்டார்கள். முதலில் வழிபாடும் ஒருவருடையதாகவே இருந்தது, ஏனெனில் ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஆவார். ஏன் வேறொருவர் வழிபாடு செய்யப்பட வேண்டும்? சிவனே அவர்களை இலக்ஷ்மி நாராயணனாக ஆக்குகிறார். எவ்வாறு அவர்களை அவ்வாறு ஆக்கியவர் ஸ்ரீகிருஷ்ணராக இருக்க முடியும்? அது சாத்தியமல்ல. உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிப்பவர் எவ்வாறு ஸ்ரீகிருஷ்ணராக இருக்க முடியும்? அவர் சத்தியயுகத்து இளவரசர் ஆவார். மக்கள் அவ்வாறான பெரிய தவறொன்றைச் செய்துள்ளனர்! இது அவர்களது புத்தியில் இருப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவு செய்வதுடன், தெய்வீகக் குணங்களையும் கிரகித்துக் கொள்ளுங்கள். சொத்துக்கள் மீது ஏதாவது சச்சரவுகள் இருந்தால், அதை முடித்து விடுங்கள். இல்லாவிட்டால், சச்சரவுகள் இருக்கும் பொழுதே, நீங்கள் உங்கள் சரீரத்தை நீக்க நேரிடும். தந்தை கூறுகின்றார்: இவர் அனைத்தையும் துறந்து விட்டார், அவர் யாருடனும் சச்சரவு செய்யவில்லை. உங்களுக்குச் சிறிதளவு கிடைத்தால் கூட அதை நீங்கள் விட்டுவிடுகின்றீர்கள். அதன் பிரதிபலனாக நீங்கள் அவ்வாறானதோர் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். விநாசத்திற்கும் இராச்சியத்திற்குமான காட்சிகளைக் கண்டபொழுது, தான் எவ்வளவு சந்தோஷத்தை அனுபவித்தார் என பாபா கூறுகின்றார். “நான் பெறப் போகின்ற இராச்சியத்துடன் ஒப்பிடும் பொழுது, இவை எல்லாம் என்ன?” எவரும் பட்டினி இருக்கப் போவதில்லை. பணம் எதனையும் கொண்டிராதவர்கள் கூட தங்கள் வயிறுகளை நிரப்பிவிட முடியும். மம்மா எதையாவது கொண்டு வந்தாரா? மம்மா அதிகளவு நினைவு கூரப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: அவரை நினைவுசெய்வது நல்லதுதான், ஆனால் இப்பொழுது அவரது பெயரையோ அல்லது ரூபத்தையோ நினைவு செய்யாதீர்கள். அவர் கொண்டிருந்த தெய்வீகக் குணங்களை நாங்களும் கொண்டிருக்க வேண்டும். மம்மாவைப் போன்று நாங்களும் நல்லவர்களாகி, சிம்மாசனத்திற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகவேண்டும். அவரைப் புகழ்வதன் மூலம் அது நடக்க மாட்டாது. தந்தை கூறுகின்றார்: சதா என்னை நினைவு செய்யுங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். மம்மாவைப் போன்று அவ்வாறாகவே இந்த ஞானத்தைக் கூறுங்கள். நீங்கள் அத்தகைய புகழுக்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகும்பொழுது மாத்திரமே உங்களுக்கு மம்மாவின் புகழுக்குரிய அத்தாட்சி வழங்கப்பட முடியும். “மம்மா, மம்மா” எனக் கூறுவதன் மூலம் உங்கள் வயிறு நிரப்பப்பட மாட்டாது (நீங்கள் திருப்தி அடைய மாட்டீர்கள்). உங்கள் வயிறும் முதுகும் ஒட்டிவிடும். சிவபாபாவை நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் வயிறு நிரப்பப்படும். இந்த தாதாவை நினைவு செய்தாலும் உங்கள் வயிறு நிரம்ப மாட்டாது. ஒரேயொருவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள். மகத்துவம் ஒரேயொருவருடையதே ஆகும். சேவை செய்வதற்கு வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். உங்கள் உதடுகளிலிருந்து சதா மலர்கள் மாத்திரமே வெளிவர வேண்டும். கற்கள் அல்லது முட்கள் வெளிவருமாயின் நீங்கள் கற்களைப் போன்று இருப்பீர்கள். தெய்வீகக் குணங்களை நன்றாகக் கிரகியுங்கள். இங்கு அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் ஆகுங்கள். நீங்கள் தண்டனையை அனுபவம் செய்ய நேரிட்டால் சிறந்த அந்தஸ்தைப் பெற மாட்டீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நேரடியாகச் செவிமடுக்கவே இங்கு வருகின்றீர்கள். இங்கு, பாபா புத்துணர்வுடனான போதையை உங்களுக்குக் கொடுக்கின்றார். நிலையங்களில் நீங்கள் போதை உடையவர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் உறவினர்களைப் பார்க்கும் பொழுது, அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. இங்கு நீங்கள் பாபாவின் குடும்பத்தில் இருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். அங்கு அது தூய்மையற்ற குடும்பமாகும். அதில் அதிகளவு சண்டைகள் போன்றவை இருக்கின்றன. நீங்கள் திரும்பிச் சென்றவுடன், குப்பையில் வீழ்கின்றீர்கள். இங்கு நீங்கள் தந்தையை மறக்கக்கூடாது. உலகிலுள்ள எவருமே உண்மையான அமைதியைப் பெற முடியாது. தந்தையை தவிர வேறு எவராலும் தூய்மை, சந்தோஷம், அமைதி செழிப்பு என்பவற்றைக் கொடுக்க முடியாது. தந்தை ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றார் என்பதில்லை: நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக! நீங்கள் பல குழந்தைகளைப் பெறுவீர்களாக! இல்லை. நீங்கள் ஆசீர்வாதங்கள் போன்றவற்றைப் பெறுவதன் மூலம் எதனையும் அடையப் போவதில்லை. மனிதர்களாலேயே அந்தத் தவறு செய்யப்பட்டுள்ளது. சந்நியாசிகளாலுமே ஆசீர்வாதம் கொடுக்க முடியாது. இன்று, அவர்கள் உங்களை ஆசீர்வதித்துவிட்டு, நாளை, அவர்களே மரணித்து விடுகின்றனர்! எத்தனை பாப்பாண்டவர்கள் இருந்து சென்றுள்ளனர் எனப் பாருங்கள். குருமார்களின் சிம்மாசனங்களும் இருக்கின்றன. குரு ஒருவர் இளம்வயதில் மரணித்து விட்டால் வேறொருவர் அல்லது ஓர் இளம் சீடர் குருவாக ஆக்கப்படுகின்றார். இந்த பாப்தாதாவே அருள்பவர் ஆவார். அவருக்குக் கொடுக்கப்படுவதை அவர் என்ன செய்வார்? தந்தை அசரீரியானவர். சரீரதாரியே அவற்றை எடுத்து கொள்ள முடியும். இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் ஆகும். சிவபாபாவுக்கு நான் ஏதாவது ஒன்றைக் கொடுத்தேன் என்று ஒருபொழுதும் கூற வேண்டாம். இல்லை, நாங்கள் பலமில்லியன்களை சிவபாபாவிடம் இருந்து பெறுகின்றோம். நாங்கள் எதையுமே கொடுப்பதில்லை. பாபா உங்களுக்குக் கொடுப்பவை அனைத்தும் கணக்கிட முடியாதவை. சிவபாபா அருள்பவர்; எவ்வாறு நீங்கள் அவருக்குக் கொடுக்க முடியும்? நீங்கள் “நான் இதனைக் கொடுத்தேன்” என்று சிந்திக்கும் பொழுது, சரீர உணர்வு வருகின்றது. நாங்கள் சிவபாபாவிடம் இருந்தே பெறுகின்றோம். இங்கு வந்து தங்குகின்ற பல குழந்தைகள் பாபாவுக்கு உள்ளார்கள், ஆகவே அவர்களுக்கு அதிகளவான வசதிகள் தேவையாக உள்ளன. அப்படி என்றால் நீங்கள் உங்களுக்கே கொடுக்கின்றீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். அவர் தனக்கென எதனையும் செய்ய வேண்டிய தேவையில்லை. அவர் உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்கின்றார். இதனால் தான் நீங்கள் அனைத்தையும் செய்கின்றீர்கள். அவர் உங்களைத் தன்னை விடவும் மேலானவர் ஆக்குகின்றார், இருந்தும் நீங்கள் அத்தகைய தந்தையை மறந்து விடுகின்றீர்கள்! அரைக்கல்பத்திற்கு நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும், அரைக் கல்பத்திற்குப் பூஜிப்பவர்களாகவும் உள்ளீர்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதனால், நீங்கள் சந்தோஷ உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பூஜிப்பவர்கள் ஆகுவதனால், நீங்கள் துன்ப உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். தந்தை எப்பொழுது வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார் என்பது எவருக்குமே தெரியாது. சங்கமயுக பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே இவ்விடயங்கள் தெரியும். பாபா அனைத்தையும் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். இருப்பினும் அது உங்கள் புத்தியில் பதிவதில்லை. பாபா விளங்கப்படுத்துவதைப் போன்று நீங்களும் சாதுரியமான முறையில் விளங்கப்படுத்த வேண்டும். முயற்சி செய்து அவர்களைப் போன்று மேன்மையானவர் ஆகுங்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களை நன்றாகக் கிரகிக்க வேண்டும் என பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எந்த விடயத்தையிட்டும் ஒருபொழுதும் முகங் கோணாதீர்கள். உங்கள் முகத்தை ஒருபொழுதும் ஒரு சடலத்தின் முகத்தைப் போன்று ஆக்கிக் கொள்ளாதீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது அத்தகைய செயல்களைச் செய்யாதீர்கள். சண்டிகா தேவிக்கு (சுடலையம்மன்) ஒரு மேலா உள்ளது. தந்தையின் வழிகாட்டலைப் பின்பற்றாதவர்கள் சண்டிகா என்றே அழைக்கப்படுகின்றார்கள். துன்பத்தைக் கொடுக்கின்ற அத்தகைய சண்டிகாவுக்கும் ஒரு விழா உள்ளது. மனிதர்கள் அறியாமையில் உள்ளார்கள். அவர்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. எவரிடமும் எவ்விதச் சக்தியும் கிடையாது. அவர்கள் உள்ளுர முற்றிலும் வெறுமையாக உள்ளார்கள். நீங்கள் பாபாவை மிக நன்றாக நினைவுசெய்யும் பொழுது தந்தையிடம் இருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் இங்கிருக்கின்ற பொழுதிலும், உங்களில் பலரது புத்தி வெளியில் அலை பாய்கின்றது. இதனாலேயே பாபா கூறுகின்றார்: படங்களுக்கு முன்னால் அமர்ந்திருங்கள், அப்பொழுது உங்களுடைய புத்தியானது அவற்றுடன் மும்முரமாகி விடும். சக்கரம் மற்றும் ஏணிப்படத்தை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுது, அவர்களுக்குக் கூறுங்கள்: சத்தியயுகத்தில் வெகுசில மனிதர்களே இருக்கின்றார்கள். இப்பொழுது அதிகளவான மனிதர்கள் இருக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் பிரம்மாவின் மூலம் புதிய உலகின் ஸ்தாபனையையும், பழைய உலகின் விநாசத்தையும் தூண்டுகின்றேன். அமர்ந்திருந்து இவ்விதமாகப் பயிற்சி செய்யுங்கள். இயல்பாகவே உங்கள் வாய் திறந்துவிடும். எவையெல்லாம் உள்ளே செல்கின்றனவோ, அவை நிச்சயமாக வெளியே வரவேண்டும். நீங்கள் ஊமைகள் அல்ல. நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது, சத்தமாகப் பேசுவதற்கு உங்கள் வாய் திறக்கின்றது, இருப்பினும் இந்த ஞானத்தைப் பேசுவதற்கு உங்களால் அதனைத் திறக்க முடியவில்லை. அனைவருக்கும் இப்படங்களைக் கொடுக்க முடியும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு நன்மை செய்வதற்கு உங்களுக்குத் தைரியம் இருக்க வேண்டும். உங்கள் அறையைப் படங்களால் அலங்கரியுங்கள், நீங்கள் மும்முரமாக இருப்பீர்கள். அது உங்கள் நூலகத்தைப் போல் ஆகிவிடும். மற்றவர்களுக்கு நன்மையை ஏற்படுத்துவதற்காக இந்தப் படங்களை நீங்கள் போட வேண்டும். யார் வந்தாலும் அவர்களுக்கு விளங்கப்படுங்கள், உங்களால் பெருமளவு சேவை செய்ய முடியும். அவர்கள் சிறிதளவு இந்த ஞானத்தைச் செவிமடுத்தாலும் அவர்களால் பிரஜைகள் ஆக முடியும். பாபா நீங்கள் முன்னேறுவதற்கு அதிகளவு வழிகளைக் காட்டுகின்றார். தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இல்லையெனில் நீங்கள் கங்கையில் மூழ்கினாலும் உங்கள் பாவங்களை அழிக்க முடியாது. அவை அனைத்தும் குருட்டு நம்பிக்கையாகும். ஹரித்துவாரில் முழு நகரத்தினதும் குப்பைகள் கங்கையில் சென்று விழுகின்றன. அதிகளவான குப்பைகள் கடலுக்குள் விழுகின்றன. ஆறுகளிலும் அதிகளவான குப்பைகள் உள்ளன. எவ்வாறு அதில் எவரும் தூய்மையாக முடியும்? மாயை அனைவரையும் முற்றிலும் விவேகம் அற்றவர்கள் ஆக்கிவிட்டாள்! தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்களும் என்னை அழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள். நீங்கள் உங்கள் சரீரங்களுக்கான பௌதீகத் தந்தையர்களைக் கொண்டிருக்கிறீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் ஆவார். நீங்கள் இப்பொழுது உங்களைத் தூய்மை ஆக்குகின்ற தந்தையை நினைவுசெய்ய வேண்டும். ஒரேயொருவரே சற்கதியை அருள்பவர் அன்றி, வேறு எவருமல்ல. அத்தகைய இலகுவான விடயங்களின் அர்த்தத்தை எவரும் புரிந்து கொள்வதில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் உதடுகளிலிருந்து இந்த ஞான இரத்தினங்கள் மாத்திரம் வெளிப்பட அனுமதிப்பதைப் பயிற்சி செய்யுங்கள். அவற்றிலிருந்து கற்களோ அல்லது முட்களோ வெளிப்பட ஒருபொழுதும் அனுமதிக்காதீர்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நன்மை செய்வதற்கு, உங்கள் வீட்டைப் படங்களால் அலங்கரியுங்கள். இந்த ஞானக்கடலைக் கடையுங்கள், ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதற்குப் படங்களைப் பயன்படுத்துங்கள். இதனைச் செய்வதில் மும்முரமாக இருங்கள்.

2. தந்தையிடம் இருந்து ஆசீர்வாதங்களைக் கேட்பதற்குப் பதிலாக, அவரது மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். சிவபாபாவினதே மகத்துவம்! ஆகவே அவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள். பாபாவிற்கு அதிகம் கொடுத்ததைப் பற்றிய அகங்காரம் எதனையும் கொண்டிராதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தைக்குச் சமமாக இருக்கும் உங்களின் ஸ்திதியால் நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வருவதன் மூலம் ‘அது உங்களுக்கும் உரித்தாகுக’ என்ற ஆசீர்வாதத்தைக் கொண்டவர்கள் ஆகுவீர்களாக.

‘நான்’ என்ற எந்தவித உணர்வையும் முடிப்பதெனில், தந்தைக்குச் சமமான ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதுடன் காலத்தை நெருக்கமாகக் கொண்டு வருதல் என்று அர்த்தமாகும். உங்களின் சரீரம் அல்லது ஏதாவது உடமையானது உங்களுக்குச் சொந்தமானது என்று நீங்கள் உணர்ந்தால், சமநிலையில் ஒரு சதவீதம் உள்ளது. சதவீதம் என்றால், குறைபாடு என்று அர்த்தம். இத்தகைய குறைபாடுகளைக் கொண்டவர்களால் ஒருபோதும் முழுமை அடைய முடியாது. முழுமை அடைவதற்கு, சதா தந்தையின் அன்பிலே திளைத்திருங்கள். சதா அன்பிலே திளைத்திருப்பதன் மூலம் உங்களால் இலகுவாக மற்றவர்களை உங்களுக்குச் சமமாகவும் அத்துடன் தந்தைக்குச் சமமாகவும் ஆக்க முடியும். அன்பிலே திளைத்திருக்கும் தனது அன்பான குழந்தைகளுக்கு பாப்தாதா, ‘அது உங்களுக்கும் உரித்தாகுக’ என்ற ஆசீர்வாதத்தை வழங்குகிறார்.

சுலோகம்:
ஒருவர் மற்றவரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் போது உங்கள் பதிவேடு நல்லதாக ஆகும்.

அவ்யக்த சமிக்கை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.

நீங்கள் உங்களின் மனதால் சேவை செய்வதற்கு, உங்களின் மனமும் புத்தியும் வீணான எண்ணங்களைச் சிந்திப்பதில் இருந்து விடுபட்டு இருக்க வேண்டும். மன்மனாபவ என்ற மந்திரத்தின் எளிதான ரூபம் இருக்க வேண்டும். சக்திவாய்ந்த எண்ணங்களையும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்கும் இத்தகைய மேன்மையான ஆத்மாக்களால் தமது மனங்களால் சக்திகளின் தானத்தை வழங்க முடியும்.