04.10.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 31.12.2011 Om Shanti Madhuban
புது வருடத்தில், ‘நீங்கள் தீவிர முயற்சியாளர் ஆகுவீர்களாக’ என்ற ஆசீர்வாதத்துடன் உங்களின் முகத்தில் உங்களின் தேவதை ரூபத்தைக் காட்டுங்கள். உங்களின் ஒளி மற்றும் சக்தி ரூபத்தின் எரிமலை யோகத்தால் வீணானவை அனைத்தையும் எரித்து, சந்தோஷம் அற்றுள்ள, அமைதி அற்றுள்ள ஆத்மாக்களுக்கு சக்திகளைத் தானம் செய்யுங்கள்.
இன்று, பிராமணக் குடும்பத்தைப் படைப்பவர் எங்கும் உள்ள தனது குடும்பத்தைப் பார்க்கிறார். இது சிறியதொரு குடும்பம், சிறியதோர் உலகம். ஆனால் மிகவும் அழகானது. ஏனென்றால், இது பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரைக் கொண்டது. ஏன் அவர்கள் அழகானவர்கள்? ஏனென்றால் அவர்கள் தந்தையை இனங்கண்டுள்ளார்கள். அவர்கள் தந்தையின் ஆஸ்திக்கான உரிமையைக் கோரியுள்ளார்கள். எவ்வாறு தந்தை அழகானவரோ, இந்த பிராமணக் குடும்பமும் அழகானது. பாப்தாதா உங்களின் பிறப்பில் இருந்தே உங்களின் நெற்றிகளில் பாக்கிய நட்சத்திரம் பிரகாசிக்கச் செய்தார். இதனாலேயே, இந்தச் சிறிய உலகம் அதிகபட்சம் அழகானது. உங்கள் அனைவருக்கும் உங்களின் இந்த சுயமரியாதையைத் தெரியும் அல்லவா? பாப்தாதா ஒவ்வொரு குழந்தையைப் பார்க்கும்போதும் மிகவும் களிப்படைகிறார். எனவே, அவர் என்ன பாடலைப் பாடுகிறார்? ஆஹா குழந்தைகளே! ஆஹா!
இன்று, நீங்கள் அனைவரும் இந்த மகத்தான தினத்தில் தந்தையைச் சந்திப்பதற்காக வந்துள்ளீர்கள். இன்று, சங்கமத்தின் நாள் ஆகும். இது விடை பெறுவதற்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்குமான தினம் ஆகும். எப்படியும் சங்கமத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. எங்கே கடலும் ஆறும் கலக்கும் இடம் இருக்கிறதோ, அது மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இன்றைய நாளின் முக்கியத்துவம் புகழத்தகுதி வாய்ந்தது. இந்தப் பழைய வருடம் முடிவடையப் போகிறது, புதிய வருடம் ஆரம்பம் ஆகப் போகிறது. இந்தத் தினத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் வருகின்ற வருடத்திற்காக உங்களின் இதயத்தில் அதிகளவு உற்சாகத்தைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எதைத் துறக்க வேண்டும், நீங்கள் என்னவாக வேண்டும் என்று உங்களின் இதயத்தில் திட்டம் இட்டுள்ளீர்கள். நீங்கள் இரண்டு திட்டங்களையும் செய்துள்ளீர்களா? செய்துள்ளீர்களா? வருகின்ற வருடத்தில் நீங்கள் முன்னேறுவதற்கும் தீவிர முயற்சி செய்வதற்கும் திட்டத்தைச் செய்துள்ளவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் திட்டம் இட்டுள்ளீர்களா? பாராட்டுக்கள்! பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் என்ன விரும்புகிறார் என்பதை அனைவரும் அறிவார்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்காகவும் தூய விருப்பத்தைக் கொண்டுள்ளார்: ஒவ்வொரு குழந்தையும் தந்தையைப் போல் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகவேண்டும். இப்போது, காலமும் உங்களுடன் ஒத்துழைக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் மனதில் உங்களுக்காக ஒரு புதிய திட்டத்தைச் செய்துள்ளீர்கள், அல்லவா? நீங்கள் எதையாவது துறக்க வேண்டும், அத்துடன் நீங்கள் சிறிதளவு முன்னேற வேண்டும். எனவே, நீங்கள் எதைத் துறக்கப் போகின்றீர்கள்? இந்தப் பழைய உலகையும் பழைய உறவுமுறைகளையும் துறப்பதைப் பொறுத்தவரை நீங்கள் அனைவரும் இந்த முயற்சியில் கவனம் செலுத்துவதை பாப்தாதா பார்த்துள்ளார். நீங்கள் அனைவரும் துறக்க விரும்பும் ஒரு விடயம் உள்ளது. ஆனால் இதுவரை, பழைய சம்ஸ்காரங்களைத் துறப்பதற்கு உங்களுக்குச் சிறிதளவு முயற்சி தேவைப்படுவதை பாப்தாதா பார்த்தார். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் புதிய வருடத்தில் உங்களின் சொந்த சம்ஸ்காரங்களைத் தகனம் செய்ய வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். நீங்கள் அனைவரும் இந்த எண்ணத்தை நிறைவேற்ற விரும்புகிறீர்கள், அல்லவா? பழைய சம்ஸ்காரங்களையே நீங்கள் உங்களின் சுபாவம் என்று குறிப்பிடுகிறீர்கள். ‘அது எனது நோக்கம் இல்லை, ஆனால் அது எனது சுபாவம்!’ எனவே, அது இந்த பிராமணப் பிறவியின் சுபாவம் அல்ல, ஆனால் அது பழைய சுபாவம் ஆகும். இந்த நாளில், அந்தப் பழைய சம்ஸ்காரத்தைத் தகனம் செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே அறிவீர்கள். எனவே இன்று, வருடத்திற்கு விடை கொடுப்பதுடன் கூடவே, அந்த சம்ஸ்காரத்தையும் துறப்பதற்கான திடசங்கற்பமான எண்ணத்தை உங்களால் ஏற்படுத்த முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியுமா? நீங்கள் அதை விரும்புகிறீர்கள். அதை நீங்கள் விரும்பவில்லை என்றில்லை. ஆயினும் அதே சம்ஸ்காரமே உங்களின் முயற்சிகளில் தீவிரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு, மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிமுறைகளில் தடைகளை உருவாக்குகிறது. எனவே, வருடத்திற்கு விடை கொடுப்பதுடன் கூடவே, இந்த நாளில், நீங்கள் அந்த சம்ஸ்காரத்திற்கும் விடை கொடுக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். அதற்கு நீங்கள் தயாரா? இதற்குத் தயாராக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அதற்காக நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்காக நீங்கள் ஒரு திட்டத்தை யோசித்தீர்களா? அதற்கான சிறந்த விடயம், ஒரு திடசங்கற்பமான எண்ணமே. அது நடக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் உங்களின் எண்ணங்களில் அந்தத் தீவிரத்தன்மை (விசை) இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பிராமணர் ஆகிய உடனேயே, தூய்மையற்ற உணவு எதுவும் உண்ணப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்தீர்கள். உங்களின் திடசங்கற்பமான எண்ணங்களால் உங்களில் பெரும்பாலானோர் இதில் சித்தி அடைந்திருப்பதை பாப்தாதா பார்த்தார். உங்களின் சரீரத்திற்கு தூய்மையற்ற உணவை எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தை நீங்கள் கொண்டிருந்ததைப் போல், நீங்கள் அதை நடைமுறையில் செய்கிறீர்கள், அதேபோல், நீங்கள் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தை உங்களின் மனதிற்காகவும் கொண்டிருக்க வேண்டும்: நீங்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் எவருக்காயினும் அல்லது எதற்காயினும் வீணான எண்ணங்களை ஒருபோதும் கொண்டிருக்க மாட்டீர்கள், நீங்கள் நிச்சயமாக ஒவ்வோர் ஆத்மாவிற்காகவும் சதா நல்லாசிகளையும் தூய உணர்வுகளையுமே கொண்டிருப்பீர்கள். எண்ணங்களே மனதின் உணவு. அதனால் உங்களில் பெரும்பாலானோர் சரீரத்தின் அக்கறையில் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பதைப் போல், உங்களால் வீணான எண்ணங்களையும் தூய்மையற்ற உணர்வுகளையும் அழித்துவிட முடியாதா? உங்களின் மனதில், ஒவ்வோர் ஆத்மாவிற்காகவும் உங்களின் இதயபூர்வமான அன்பையும் ஒத்துழைப்பையும் கொண்டிருக்க முடியாதா?
எனவே, இன்று இந்தப் பழைய வருடத்துடன் கூடவே, ஒவ்வொரு குழந்தையும் அந்தப் பழைய மனோபாவத்திற்கும் பார்வைக்கும் விடை கொடுக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தை உங்களால் கொண்டிருக்க முடியுமா? முடியுமா? பேசுங்கள்! தாய்மார்களும் ஆசிரியர்களும் சகோதரர்கள் அனைவரும் இதையே விரும்புகிறார்கள். ஆம், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நாளையில் இருந்து, உங்களுக்குள் எந்தவோர் ஆத்மாவிற்காகவும் வீணானவை, வீணான உணர்வுகள் அல்லது வீணான நோக்கங்கள் ஏற்பட்டால், நீங்கள் இன்றே நிறைவு விழாவைக் கொண்டாட விரும்புகிறீர்கள், அல்லவா? கூறுங்கள்! ஆசிரியர்களான நீங்கள் அனைவரும் தயாரா? ஆசிரியர்களே, உங்களின் இரண்டு கைகளையும் உயர்த்துங்கள்! அவற்றை உயர்த்துங்கள்! அச்சா. உங்களின் கைகளை உயர்த்தாதவர்கள், அவற்றை உயர்த்துங்கள்! உங்களின் கைகளை உயர்த்தாதவர்கள், எழுந்து நில்லுங்கள்! நல்லது. நீங்கள் முயற்சி செய்வீர்கள், ஆனால் திடசங்கற்பமான எண்ணங்கள் இல்லை என்று நினைப்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா? எழுந்து நின்றவர்கள், நீங்கள் இந்த இலட்சியத்தை வைத்திருந்து முயற்சி செய்வீர்கள் என்றால் உங்களின் கைகளை உயர்த்துங்கள். காலத்தின் மீது உங்களின் கவனத்தை வைத்திருந்த வண்ணம் சிந்தியுங்கள்: நீங்கள் எதிர்காலத்திற்காக, சங்கம யுகத்திற்கான இந்த வேளையில், நீண்ட காலத்திற்கு வெற்றி பெற வேண்டும். நீங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கோர வேண்டும். எனவே, இந்த ஒரு பிறவிக்கும் 21 பிறவிகளுக்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது. இந்த ஒரு பிறவியில், நீங்கள் நீண்ட காலத்திற்குத் தீவிர முயற்சியைச் செய்ய வேண்டும். அப்போது மட்டுமே உங்களால் நீண்ட காலத்திற்கான பேறுகளைப் பெற முடியும். உங்களுக்குத் தந்தையின் மீது அன்பு உள்ளது. எனவே, நீங்கள் அவருடன் இருக்க விரும்புகிறீர்கள், அல்லவா? நீங்கள் அவருக்கு நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்கள், அல்லவா? நீங்கள் தந்தை பிரம்மாவின் சகபாடிகளாகி இராச்சிய உரிமையைப் பெற விரும்புகிறீர்கள்தானே? ஆகவே, இப்போதும் நீங்கள் அந்தளவு காலத்திற்குத் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும். தந்தை பிரம்மா ஒவ்வொரு குழந்தையின் மீதும் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை நீங்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்துள்ளீர்கள். ‘எனது பாபா, பாபா என்மீது வைத்திருப்பதைப் போன்ற அன்பை வேறு எவர் மீதும் வைத்திருக்கவில்லை. அவர் என்மீதே அன்பு வைத்திருக்கிறார்!’ என்றே ஒவ்வொருவரும் சொல்கிறீர்கள். எனவே, நீங்கள் இந்தப் பிறவியில் பாபா, தாதா இருவருடைய அன்பையும் அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கும் ஒருபோதும் உங்களால் இல்லை என்று சொல்ல முடியாது. எனவே, உங்கள் அனைவருக்கும் தந்தை பிரம்மாவின் மீது அன்பு உள்ளது. உங்களுக்கு எவ்வளவு அன்பு உள்ளது? உங்களுக்கு அதிகளவு அன்பு உள்ளது. உங்களால் அதைக் காட்ட முடியாதிருக்கலாம். ஆனால் குழந்தைகள் அனைவருக்கும் அவரின் மீது அன்பு உள்ளது என்பதைத் தந்தை அறிவார். இது வரிசைக்கிரமமானது. ஆனால் பாப்தாதா அவரை நேசிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சான்றிதழை வழங்குகிறார். உங்களுக்கு அவரின் மீது அன்பு இருக்கிறது. ஆனால் சிலவேளைகளில் நீங்கள் விஷமத்தனம் செய்வதைத் தந்தை பார்த்தார். எனவே, அந்த வேளையில் தந்தை என்ன செய்வார்? அவை அனைத்தையும் பார்க்கும்போது, தந்தை தொடர்ந்து விசேட சக்தியை வழங்குகிறார். ஏனென்றால், தனது ஒவ்வொரு குழந்தையும் ஓர் அரச குழந்தை ஆகவேண்டும் என்றே அவர் விரும்புகிறார். உலகில், குறிப்பாக அன்பிற்கினிய குழந்தையை ‘ராஜா-பச்சா!’ (இராஜ, அரச குழந்தை) என்று அழைப்பார்கள். அவர் அரசன் கிடையாது, ஆனாலும் அவர் இராஜா என்று அழைக்கப்படுவார். நீங்கள் அனைவரும் இப்போது பாப்தாதாவின் அரச குழந்தைகள் ஆவீர்கள். எதிர்காலத்திலும் நீங்கள் அரச குழந்தைகளாக இருப்பீர்கள். தற்சமயம், உங்களுக்கு சுயமரியாதையும் சுய இராச்சிய அதிகாரமும் உள்ளது. இப்போது ஆத்மாக்களான நீங்கள் உங்களின் பௌதீகப் புலன்கள் அனைத்தையும் ஆட்சி செய்கிறீர்கள். அதனால் தற்சமயம், நீங்கள் உங்களுக்கே அதிபதிகளாக இருக்கிறீர்கள். அத்துடன் எதிர்காலத்திலும் நீங்கள் இராச்சிய உரிமை உள்ளவர்கள் ஆகுவீர்கள். எனவே, நீங்கள் அரச குழந்தைகள்தானே? நீங்கள் இத்தகையவர்கள் என்றால் தலையை அசையுங்கள்!
எனவே இன்று அமிர்தவேளையில், பாப்தாதா இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் எங்கும் சுற்றுலா சென்றார். அவர் எதைக் கண்டார்? உங்களில் பெரும்பாலானோர் அமிர்தவேளை யோகத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அன்புடன் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் பாப்தாதாவுடன் உரையாடுகிறீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வின் விழிப்புணர்வில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் பாப்தாதாவிடம் இருந்து சக்தியையும் எடுத்துக் கொள்கிறீர்கள். எவ்வாறாயினும், வருகின்ற புதிய வருடத்தில் புதுமை வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார். ஏனென்றால் நாளுக்கு நாள், காலம் மேலும் மேலும் இக்கட்டானதாக ஆகப் போகிறது. இத்தகைய வேளையில், நீங்கள் இப்போது எரிமலை யோகம் (தீவிரம்) செய்ய வேண்டிய தேவை உள்ளது. இப்போது எரிமலை யோகம் செய்ய வேண்டியது அவசியம். எரிமலை யோகம் என்றால், ஒளி மற்றும் சக்தி என்ற சக்திவாய்ந்த ரூபத்தில் இருத்தல் என்று அர்த்தம். ஏனென்றால், காலத்திற்கேற்ப, இப்போது துன்பம், அமைதி இன்மை மற்றும் குழப்பம் அதிகரிக்கப் போகிறது. இதனாலேயே, நீங்கள் இப்போது உங்களின் விசேடமான எரிமலை யோகத்தால் அந்த சந்தோஷம் அற்றுள்ள குழப்பத்திற்கு உள்ளாகியுள்ள ஆத்மாக்களுக்கு சக்திகளைக் கொடுக்க வேண்டியது அவசியம். அவர்களின் துன்பம் மற்றும் அமைதி இன்மைக்குப் பதிலாக, உங்களின் மனதின் சேவையால் அவர்களுக்கு ஏதாவது சக்திகளையும் அமைதியையும் கொடுக்க வேண்டும். நீங்கள் தற்சமயத்திற்காக ‘ஒரே குடும்பம்’ என்ற தலைப்பை வைத்துள்ளீர்கள். இப்போது, இது ஒரே குடும்பமாக இருப்பதனால், அதற்கேற்ப, அமைதி இழந்துள்ள ஆத்மாக்களுக்கு ஏதாவது ஒன்றின் ஒரு துளியை வழங்க வேண்டும். ஆகவே, குறிப்பாக வருகின்ற புதிய வருடத்திற்காக எரிமலை யோகத்தின் தேவையில் உங்களின் கவனத்தை பாப்தாதா ஈர்க்கிறார். இப்போது எரிமலை யோகத்திற்கான தேவை உள்ளது. உங்களின் எரிமலை யோகத்தால் மட்டுமே எஞ்சியுள்ள சம்ஸ்காரங்கள் எரிக்கப்படும்.
இப்போது, முன்னோடிக் குழுவில் உள்ள உங்களின் சகபாடிகள், காலத்தையும் காலத்தின் நிறைவையும் அனைவரின் முன்னாலும் நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். இப்போது திரும்பிச் செல்லும் பயணத்தை நினைவு செய்யுங்கள். உங்களின் தீதி (தீதி மன்மோகினி) உங்களுக்கு நினைவூட்டுகிறார்: ‘நாம் இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டும், நாம் வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்பதை நான் எப்போதும் நினைப்பதுண்டு. உங்களின் தாதி உங்களுக்கு நினைவூட்டுகிறார்: ‘நாங்கள் அனைவரும் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகவேண்டும் என்பதை நான் எப்போதும் நினைவு செய்வேன், எனக்கு எப்போதும் இந்த ஆழமான அக்கறை இருந்தது’.
எனவே இன்று, குறிப்பாக அமிர்த வேளையில் பாப்தாதாவுடன் சந்திப்பைக் கொண்டாடும்போது அவர்கள் சொன்னார்கள்: இப்போது எங்கள் அனைவரின் சார்பாகவும் சென்றுள்ள தாதிகள் அனைவரும் ஒன்றாகக் கூறுகிறார்கள்: இப்போது எரிமலை யோகத்திற்கான பெரும் தேவை உள்ளது. இது மற்றவர்களுக்கு அமைதியைக் கொடுப்பதற்கோ அல்லது பிராமணக் குடும்பத்தை சம்பூரணம் ஆக்குவதற்கோ பயன்படுத்த வேண்டும். நீங்கள் இப்போது காலத்தை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான கருவிகள் ஆவீர்கள். எனவே, வருகின்ற வருடத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் குறிப்பாக என்ன செய்வீர்கள்? ஒருவரோடு ஒருவர் அன்பாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும் அதேவேளை, ஒவ்வொரு நிலையமும் எரிமலை யோகத்தின் அதிர்வலைகளை உருவாக்க வேண்டும். ஒருவரோடு ஒருவர் அன்பாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும் அதேவேளை, ஒவ்வொருவரும் செயல்களைச் செய்யும்போது கவனம் செலுத்துவார்கள். இன்னமும் எஞ்சியுள்ள பலவீனங்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பை வழங்குவீர்கள். ஏனைய ஆத்மாக்கள் பலருக்கு உங்களின் மனதால் சேவை செய்யுங்கள். குறிப்பாக உங்களின் ஒத்துழைப்பால் பிராமண சகபாடிகளுக்குச் சேவை செய்யுங்கள். அப்போது மட்டுமே அவர்களின் இதயங்களின் ஆசைகள் பூர்த்தியாகும்.
எனவே இன்று, சூட்சும வதனத்தில் இருந்து உங்களுக்கு நினைவூட்டுவதுடன் வருகின்ற வருடத்திற்காக அவர்களின் இதயங்களில் உள்ள எதிர்பார்ப்புக்களையும் உங்களுக்குக் கூறுகிறார்கள். எனவே, கூறுங்கள்! நீங்கள் ஏற்கனவே பாப்தாதாவின் எண்ணத்தைக் கேட்டீர்கள். அத்துடன் கூடவே, வருகின்ற வருடத்திற்காக உங்களின் தாதிகளின் தூய உணர்வுகளையும் நீங்கள் கேட்டீர்கள்தானே? பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் நீங்கள் பலவீனமாக இருந்தாலென்ன அல்லது தீவிர முயற்சியாளர்களாக இருந்தாலென்ன, மூன்று வகையான பாராட்டுக்களை வழங்குகிறார். 1) உங்களின் புதிய வாழ்க்கைக்குப் பாராட்டுக்கள். 2) புதிய வருடத்திற்காக வாழ்த்துக்கள். 3) புதிய உலகிற்கு ஒரு சகபாடியாகத் திரும்பிச் செல்வதற்குப் பாராட்டுக்கள்.
அத்துடன் பாப்தாதா கூறினார்: நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கான நேரத்தை நிச்சயம் செய்து கொள்ள வேண்டும்: நான் எப்போது என்னைத் தந்தைக்குச் சமமானவர் ஆக்குவேன்? இதை உங்களுக்குள்ளே நிச்சயம் செய்து கொள்ளுங்கள். இதை எவ்வாறு நிச்சயம் செய்வது என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? இன்று, ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கும்போது, பாப்தாதா ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: ‘அடுத்த வருடம், ஒவ்வொரு குழந்தையும் ஒரு தீவிர முயற்சியாளர் ஆகுவதாக!’ அமிர்த வேளையில், நீங்கள் நினைவிற்காக அமர்ந்திருக்கும் போதும் நீங்கள் எழுவதற்கான நேரத்தின் போதும் உங்களின் இதயத்தில் பாப்தாதாவின் இந்த ஆசீர்வாதம் நினைவில் இருக்க வேண்டும்: ‘நீங்கள் ஒரு தீவிர முயற்சியாளர் ஆகுவீர்களாக!’ ஆரம்பத்தில் பாப்தாதா இரண்டு விடயங்களில் உங்களின் கவனத்தை ஈர்த்தார். ஏனென்றால், சங்கமயுகத்தின் காலம் சடுதியாக முடிவடையப் போகிறது. 1) காலம். 2) உங்களின் எண்ணங்கள். ஒவ்வொரு கணமும் இந்த இரண்டிற்கும் கவனம் செலுத்துங்கள். இவையே பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்காகவும் கொண்டிருக்கும் தூய உணர்வுகள் ஆகும்: இந்த வருடம் ஒவ்வொரு குழந்தையும் என்னவாக வேண்டும்? நீங்கள் என்னவாக ஆகுவீர்கள்? யார் உங்களின் முகத்தைப் பார்த்தாலும் அவர்கள் உங்களின் தேவதை ரூபத்தை உங்களின் முகத்தில் காண வேண்டும். ‘நான் இன்னார், இன்னார்’ என்பதல்ல. அவர்கள் உங்களை ஒரு தேவதையாக அனுபவம் செய்ய வேண்டும். எனவே இதற்கு, நீங்கள் எரிமலை யோகம் செய்ய வேண்டும். எதுவும் வீணாக்கப்படக் கூடாது! உங்களின் ஒளி மற்றும் சக்தி ரூபத்தின் யோகத்தால் வீணானவற்றை எரியுங்கள். அவர்கள் யாரைப் பார்த்தாலும் ஒரு சக்திவாய்ந்த தேவதையை மட்டுமே காணக்கூடியதாக இருக்க வெண்டும். ஏனென்றால், நீங்களே நீண்ட காலம் தொலைந்திருந்து இப்போது கண்டெடுக்கப் பட்டுள்ள தந்தையின் குழந்தைகள், அல்லவா? தந்தை விசேடமாக உங்களை வெவ்வேறு பல இடங்களில் இருந்து தேர்ந்தெடுத்து தனக்குச் சொந்தமாக ஆக்கியுள்ளார். ஆகவே இந்த இலட்சியத்தை வைத்திருங்கள்: நான் ஒரு தேவதை ஆகப் போகின்ற ஒரு பிராமணர். எனவே அமிர்த வேளையில், உங்களின் நேர அட்டவணையில் இதை நினைவில் வைத்திருங்கள்: நான் ஒரு பிராமணர், தேவதை ஆகப் போகின்றேன். நீங்கள் தொடர்ந்து முன்னேறும்போது, உங்களின் தேவதை ரூபத்தில் இருங்கள். நீங்கள் தேவதை ரூபத்தை விரும்புகிறீர்கள், அல்லவா? தந்தை பிரம்மா ஒரு தேவதை ஆகினார், எனவே தந்தையைப் பின்பற்றுங்கள்!
உங்களுக்கு இந்த வருடத்திற்காக ஆசீர்வாதம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தீவிர முயற்சியாளர், சாதாரணமான முயற்சியாளர் இல்லை. நீங்கள் சாதாரண முயற்சியைச் செய்தால், நீங்கள் இராச்சியத்தில் சகபாடி ஆகமாட்டீர்கள். தந்தையின் விருப்பம்: முரளியைக் கற்கின்ற எத்தனை மாணவர்கள் இருந்தாலும் எத்தனை இறை மாணவர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் என்ன ஆகுவார்கள்? தேவதைகள். சுமைகள் அனைத்தும் நீக்கப்படும். எந்தவொரு சம்ஸ்காரத்தின் சுமையும் முடிவடையும். எனவே, இந்த வருடத்திற்கான வீட்டுவேலை என்ன? தேவதை ரூபத்தில் இருங்கள் என்பதே ஆகும். இது தீவிர முயற்சி எனப்படுகிறது. இப்போது, ஒவ்வொரு நிலையமும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாணவரினதும் பெறுபேற்றைப் பார்க்க வேண்டும்: அவர்கள் தீவிர முயற்சியாளர்களா? ஏதாவது சூழ்நிலை வந்தாலும் ஒத்துழையுங்கள், அன்புடன் தைரியத்தைக் கொடுங்கள். அந்த நிலையத்தையும் அதிலுள்ள மாணவர்களையும் தீவிர முயற்சியாளர்கள் ஆக்குங்கள். ஒவ்வொரு வாரமும் பெறுபேற்றைப் பாருங்கள். ஏனென்றால், காலம் நிச்சயமாக ஆட்டங்காணும்.
எனவே இன்று, சங்கமத்திற்குரிய இந்த நாளில், விடைபெறுகின்ற மற்றும் வாழ்த்துக்களுக்கான இந்தத் தினத்தில், எங்கும் உள்ள குழந்தைகளான நீங்கள் அனைவரும் எங்கே அமர்ந்திருந்தாலும் குழந்தைகளான நீங்கள் அனைவரும் அனைத்தையும் விஞ்ஞானத்தின் வசதிகளின் ஊடாகப் பார்ப்பதையும் நீங்கள் எவ்வாறு மிகுந்த சந்தோஷம் உடையவர்கள் ஆகுவதையும் பாப்தாதா பார்க்கிறார். பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் விசேடமான ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: நீங்கள் சதா திருப்தி இரத்தினம் ஆகுவீர்களாக! சதா திருப்தியாக இருப்பதுடன் மற்றவர்களையும் திருப்திப்படுத்துவீர்களாக. அச்சா.
இப்போது, தாதிகள் ஒன்றுகூடி ஒரு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? (தாதி ஜான்கி கூறினார்: பாபா, ஜனவரி மாதம் மிகவும் முக்கியமானது. ஜனவரி மாதத்தில் அனைவரும் ஒன்றுகூடி முயற்சி செய்தால், ‘எனது பாபா’ என்பது அனைவரின் இதயங்களின் ஆழத்தில் இருந்து வெளிப்படும் சேவைக்கான திட்டத்தைச் செய்தால் என்ன... இதுதான் எனது உணர்வு)
பாப்தாதா புது வருடத்தில் ஏதாவது புதுமை ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார். அதே சம்ஸ்காரங்களை அவர் விரும்பவில்லை. ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்குச் சமமானவராகத் தென்பட வேண்டும். தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். தந்தையின் முன்னாலும் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் வந்தன. ஆனால் அப்படி இருந்தும் அவர் ஒரு தேவதையாக ஆகினார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காக இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும்: நான் ஒரு தேவதை ஆகவேண்டும். நீங்கள் உங்களுக்காக இந்த எண்ணத்தைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இதில் கவனம் செலுத்துவீர்கள்: நான் இவ்வாறு ஆகவேண்டும். நீங்கள் இவ்வாறு ஆகும்போது, அந்த அதிர்வலைகள் இயல்பாகவே பரவும். எனவே, இப்போது நீங்கள் என்ன இலட்சியத்தை வைத்திருக்கிறீர்கள்? நான் ஒரு தேவதை ஆகவேண்டும். கூறுங்கள்! இது உறுதியாக உள்ளதா? அச்சா. உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமாக அதிக, அதிக அன்பும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரேயொரு தந்தையுடன் சகல கணக்குகளையும் சகல உறவுமுறைகளையும் கொண்டுள்ள இலேசாகவும் ஒளியாகவும் உள்ள தேவதை ஆகுவீர்களாக.டபிள் லைற் தேவதைகள் ஆகுவதற்கு, சரீரங்களின் உணர்விற்கு அப்பாற்பட்டு இருங்கள். ஏனென்றால், சரீர உணர்வானது சேறு ஆகும். அந்தச் சுமை உங்களுக்கு இருந்தால், கனமாக இருக்கும். தேவதைகள் தமது சொந்த சரீரங்களுடனேயே உறவுமுறையைக் கொண்டிராதவர்கள். தந்தை உங்களுக்குக் கொடுத்த சரீரத்தை நீங்கள் தந்தைக்கே கொடுத்து விட்டீர்கள். உங்களுடையது எதையும் ஒருதடவை நீங்கள் யாராவது ஒருவருக்குக் கொடுத்து விட்டால், அதனுடன் உங்களின் உறவுமுறை முடிந்து விடுகிறது. உங்களின் கணக்கு வழக்குகள், கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் இப்போது தந்தையுடனேயே உள்ளன. ஏனென்றால், கடந்தகாலத்தின் கணக்குகள் மற்றும் உறவுமுறைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இத்தகைய சம்பூரணமான பிச்சைக்காரர்களால் மட்டுமே டபிள் லைற் தேவதைகள் ஆகமுடியும்.
சுலோகம்:
உங்களின் சிறப்பியல்புகளைப் பயன்படுத்துங்கள், நீங்கள் ஒவ்வோர் அடியிலும் முன்னேற்றத்தை அனுபவம் செய்வீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
மற்றவர்களிடம் இருந்து எதையாவது பெற்ற பின்னர் மட்டுமே அவர்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிராதீர்கள். உங்களின் எண்ணங்களிலேனும் இது தோன்றக் கூடாது: இவர் இதைச் செய்தால், நான் இதைச் செய்வேன். இவர் மாறினால், நானும் மாறுவேன். அவர்கள் சிறிதளவு மாறினால் மட்டுமே நானும் சிறிதளவு மாறுவேன். பிச்சைக்காரர்களையும் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பச் செய்பவர்களாலும் தங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுபவர்களாலும் மட்டுமே மற்றவர்களை ஈடேற்றும் உணர்வுகளால் நிரம்பியிருக்க முடியும்.