05.01.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    17.10.2003     Om Shanti     Madhuban


வருடம் முழுவதும், திருப்தி இரத்தினம் ஆகுங்கள். சதா திருப்தியாக இருந்து, எல்லோரையும் திருப்திப்படுத்துங்கள்.


இன்று, இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் பாப்தாதா, எங்கும் உள்ள தனது ஒவ்வோர் இராஜ, அதியன்புக்குரிய குழந்தைகளை (ராஜ்-துலாரி), அதிகபட்ச அன்பான குழந்தைகளை, தனக்கு முன்னால் இருப்பவர்களையும் அத்துடன் தொலைவில் இருந்தாலும் நெருக்கமாக இருக்கும் குழந்தைகளையும் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் ஒரு இராஜா. அதனால் விசேடமான அன்புக்குரிய, இராஜாக் குழந்தை ஆவார். உலகிலுள்ள வெகு சில ஆத்மாக்களே இறைவனிடமிருந்து இந்த அன்பையும் அரச நேசத்தையும் பெறுகிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் எல்லோரும் இறையன்பிற்கும் இறைவனின் அரச நேசத்திற்குமான உரிமையைக் கொண்டிருக்கிறீர்கள். உலகிலுள்ள ஆத்மாக்களோ, ‘வாருங்கள்! வாருங்கள்!’ என்று அழைக்கிறார்கள். ஆனால் நீங்கள் எல்லோரும் இறையன்பை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் இறைபராமரிப்பால் பராமரிக்கப்படுகிறீர்கள். உங்களின் இந்தப் பாக்கியத்தை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்படுகிறதா? பாப்தாதா உங்கள் எல்லோரையும் இரட்டை இராச்சியத்திற்கு உரிமை உடையவர்களாகவே பார்க்கிறார். நீங்கள் தற்சமயம் சுய இராச்சிய அதிகாரத்தின் உரிமையைக் கொண்டுள்ள அரசர்கள். அத்துடன் எதிர்கால இராச்சியத்தை உங்களின் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் நீங்கள் இரட்டை இராஜாக்கள். நீங்கள் எல்லோரும் இராஜாக்கள்தானே? நீங்கள் பிரஜைகள் அல்ல. நீங்கள் இராஜயோகிகளா? அல்லது, உங்களில் சிலர் பிரஜாயோகிகளா? (பிரஜைகள் ஆகப்போகும் யோகிகள்). பிரஜாயோகிகள் யாராவது இருக்கிறீர்களா? பின்னால் அமர்ந்திருப்பவர்கள், இராஜயோகிகளா? பிரஜாயோகிகள் யாரும் இல்லைத்தானே? உறுதியாகவா? இதைப் பற்றிக் கவனமாகச் சிந்தித்த பின்னர் ‘ஆம்’ எனச் சொல்லுங்கள். உங்களின் இராச்சிய உரிமையைக் கொண்டிருத்தல் என்றால், உங்களின் சூட்சுமமான, பௌதீகமான அங்கங்கள் எல்லாவற்றிலும் உரிமை கொண்டிருத்தல் என்று அர்த்தம். ஏனென்றால், நீங்கள் உங்களுக்கே அதிபதிகள்தானே? எனவே, நீங்கள் சிலவேளைகளில் மட்டும் இராஜாக்கள் ஆகுகிறீர்களா அல்லது சதா இராஜாவாக இருக்கிறீர்களா?

பிரதானமான விடயம்: உங்களின் மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் மீது உங்களுக்கு உரிமையுள்ளதா? சதா உங்களுக்கு அவற்றின் மீது உரிமை உள்ளதா அல்லது சிலவேளைகளில் மட்டும்தானா? சுய இராச்சிய அதிகாரம் என்றால், சதா சுய இராச்சிய அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது, ஒரு நாள் அது உங்களிடம் இருக்கும், அடுத்த நாள் அது இருக்காதா? ஓர் இராச்சியம் என்றால் எல்லா வேளைக்குமானது, அப்படித்தானே? அதனால், சதா சுய இராச்சிய அதிகாரியாக, சுயத்தின் அதிபதியாக இருங்கள். அதாவது, சதா உங்களின் மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் மீது உரிமையைக் கொண்டிருங்கள். இது எல்லா வேளையும் இருக்கிறதா? எல்லா வேளையும் என்று வரும்போது, நீங்கள் ‘ஆம்’ எனச் சொல்கிறீர்கள் இல்லையே. மனம் உங்களைச் சில வேளைகளில் ஆட்சி செய்கிறதா அல்லது நீங்கள் உங்களின் மனதை ஆட்சி செய்கிறீர்களா? சிலவேளைகளில் உங்களின் மனம் உங்களின் அதிபதி ஆகுகிறதா? அப்படி ஆகுகிறதுதானே? அதனால், சுய இராச்சியத்திற்கான உங்களின் உரிமையை எப்போதும் வைத்திருங்கள். அதனால் உலக இராச்சியத்தின் உரிமை உடையவராக இருப்பீர்கள்.

அதனால் இதை சதா சோதியுங்கள். ஏனென்றால், உங்களின் அங்கங்களான மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் மீது எந்தளவு சக்தியுடன் உங்களுக்கு உரிமை உள்ளதோ, அதற்கேற்பவே எதிர்காலத்திலும் நீங்கள் இராச்சிய உரிமையைப் பெறுவீர்கள். இறை பராமரிப்பு, இறை கல்வி, இறை ஸ்ரீமத் என்பவற்றைப் பெறுவதன் அடிப்படையில், சங்கமயுகத்தில் இந்த ஒரு பிறவியில் இந்த உரிமை எப்போதும் உங்களிடம் இல்லாவிட்டால், எப்படி 21 பிறவிகளுக்கு உலக இராச்சிய உரிமையைக் கொண்டவராக உங்களால் ஆகமுடியும்? இந்தக் கணக்கு உள்ளது. இந்த வேளையில் நீங்கள் உங்களுக்கே அதிபதியாக இருந்தால் மட்டுமே, அதாவது, இந்த வேளையில் நீங்கள் ஓர் அரசன் ஆகினால் மட்டுமே, 21 பிறவிகளுக்கு நீங்கள் உத்தரவாதத்தைப் பெறுவீர்கள். ‘நான் யார்? நான் என்னவாகுவேன்?’ தற்சமயம் உங்களிடம் உள்ள உரிமைகளினூடாக, உங்களாலேயே உங்களின் எதிர்காலத்தை அறிந்து கொள்ள முடியும். விசேடமான ஆத்மாக்களான உங்களின் ஆதியான, அநாதியான ஆளுமையும் இராஜரீகமும் எத்தனை மேன்மையானது எனப் பாருங்கள்! நீங்கள் பரந்தாமத்தில் வசித்தபோது ஆத்மாக்களான உங்களின் அநாதியான ரூபத்தைப் பாருங்கள். பிரகாசமாக ஜொலிக்கும் நட்சத்திரங்களாக இருந்தீர்கள். அந்த இராஜரீகத்தினதும் ஆளுமையினதும் பிரகாசத்தின் ஜொலிப்பு எப்படி இருந்தது! உங்களால் அதைப் பார்க்க முடிகிறதா? ஆத்மாக்கள் என்ற வடிவில், நீங்கள் தந்தையுடன் இருப்பீர்கள், நெருக்கமாக இருப்பீர்கள். எப்படி சில நட்சத்திரங்கள் வானத்தில் மிகப் பிரகாசமாக மின்னுகின்றனவோ, அதேபோல், ஆத்மாக்களான நீங்கள் விசேடமாகத் தந்தையுடன் இருப்பீர்கள். அத்துடன் நீங்கள் விசேடமாக மின்னும் நட்சத்திரங்கள் ஆவீர்கள். பரந்தாமத்தில், நீங்கள் தந்தைக்கு நெருக்கமாக இருப்பீர்கள். பின்னர், சத்தியயுக ஆரம்பத்திலும், தேவாத்மாக்களான உங்களின் ஆளுமையும் இராஜரீகமும் மிக உயர்ந்தவை. கல்பம் முழுவதும் சுற்றி வாருங்கள். மதம் சார்ந்த ஆத்மாக்கள் வந்தார்கள், போனார்கள், மகாத்மாக்கள் வந்து போனார்கள், மதங்களின் தந்தையர் வந்தார்கள், போனார்கள், அரசியல் வாதிகள் வந்து போனார்கள், நடிகர்கள் வந்து போனார்கள். சத்தியயுகத்தில் தேவாத்மாக்களான உங்களிடம் இருந்த ஆளுமைகள் இவர்கள் யாரிடமாவது காணப்பட்டனவா? உங்களின் தேவ ரூபங்கள் உங்களின் முன்னால் தோன்றுகிறதுதானே? அவை உங்களின் முன்னால் வருகின்றனவா அல்லது நீங்கள் அவ்வாறு ஆகுவீர்களா இல்லையா என உங்களுக்குத் தெரியவில்லையா? நீங்கள் அத்தகையவர்கள் ஆகுவீர்கள் என்பது உறுதியாக உள்ளதா? பின்னால் அமர்ந்திருப்பவர்களே, இது உறுதியா? உங்களின் தேவ ரூபங்களை உங்களின் முன்னால் கொண்டு வந்து அவர்களைப் பாருங்கள். அந்த ஆளுமைகள் உங்களின் முன்னால் தோன்றுகிறதா? அதிகளவு இராஜரீகம் காணப்படுகிறது! இயற்கையும் ஓர் ஆளுமை கொண்டாதாக மாறுகிறது. பறவைகள், மரங்கள், பழங்கள், பூக்கள் எல்லாவற்றிலும் ஓர் ஆளுமை காணப்படும். அவை இராஜரீகமானவை. ஓகே, இப்போது கீழிறங்கி வந்து, உங்களின் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபங்களைப் பாருங்கள். நீங்கள் பூஜிக்கப்பட்டீர்கள். இரட்டை வெளி நாட்டவர்களான நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகுவீர்களா அல்லது இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அப்படி ஆகுவார்களா? நீங்கள் தேவதேவியர் ஆகினீர்களா? யானையின் தும்பிக்கையை அல்லது வாலைக் கொண்டவர்களாக அல்ல. காளி ரூபம் கொண்ட தேவியர்களை அன்றி, தேவதேவியரின் ஆலயத்தைப் பாருங்கள். உங்களின் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபங்களில் அதிகளவு இராஜரீகமும் ஆளுமையும் காணப்படுகின்றன. 4 அடி அல்லது 5 அடியில் ஒரு விக்கிரகம் இருக்கும், அவர்கள் பெரியதொரு கோவிலைக் கட்டுவார்கள். இது இராஜரீகமும் ஆளுமையும் ஆகும். தற்காலத்தில், அவர்கள் ஒரு பிரதமமந்திரியின் அல்லது ஓர் அரசனின் சிலையைச் செய்து, அந்த அப்பாவி சிலையை வெளியே வெப்பத்தில் வைத்து விடுவார்கள். அதற்கு எதுவும் நடக்கலாம். ஆனால், உங்களின் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபத்தின் ஆளுமை எத்தனை மகத்தானது! இது நல்லதல்லவா? குமாரிகளான நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்தானே? இது உங்களின் இராஜரீகம், அல்லவா? பின்னர், இறுதியில் சங்கமயுகத்திலும் உங்கள் எல்லோருடைய இராஜரீகமும் மிக உயர்வானது! பிராமண வாழ்க்கையின் ஆளுமை மிகவும் மகத்தானது! இறைவனே உங்களின் பிராமண வாழ்க்கைகளை நேரடியாக ஆளுமையாலும் இராஜரீகத்தாலும் நிரப்பியுள்ளார். பிராமண வாழ்க்கையின் ஓவியர் யார்? தந்தையே. பிராமண வாழ்க்கையின் ஆளுமையும் இராஜரீகமும் என்ன? தூய்மை. தூய்மையே இராஜரீகம் ஆகும், அப்படித்தானே? இங்கே அமர்ந்திருக்கும் பிராமண ஆத்மாக்களான உங்கள் எல்லோரிடமும் தூய்மையெனும் இராஜரீகம் உள்ளதல்லவா? ஆம், நீங்கள் ஆமோதித்துத் தலை ௮சைக்கலாம். பின்னால் அமர்ந்திருப்பவர்கள், தமது கைகளை உயர்த்துகிறார்கள். நீங்கள் பின்னால் அமர்ந்திருக்கவில்லை, நீங்கள் பாபாவின் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். பாருங்கள், பாபாவின் பார்வை இயல்பாகவே பின்னால் செல்கிறது. முன்னால் இருப்பவர்களைப் பார்ப்பதற்கு, அவர் விசேட முயற்சி செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அவரின் பார்வை இயல்பாகவே பின்னால் செல்கிறது.

ஆகவே சோதித்துப் பாருங்கள் - என்னிடம் சதா தூய்மையின் ஆளுமை உள்ளதா? எனது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், மனோபாவம், பார்வை, நடத்தையில் தூய்மை உள்ளதா? எண்ணங்களில் தூய்மையைக் கொண்டிருத்தல் என்றால், எப்போதும் எல்லோருக்காகவும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருப்பதாகும். இன்னோர் ஆத்மா எத்தகையவராக இருந்தாலும், தூய்மையின் இராஜரீகத்தைக் கொண்டதோர் ஆத்மா சதா நல்லாசிகள், தூய உணர்வுகள், நன்மை செய்யும் உணர்வுகள், கருணை உணர்வுகள், அருள்கின்ற உணர்வுகள் நிறைந்த எண்ணங்களையே கொண்டிருப்பார். அவர்கள் சுற்றியிருப்பவர்களைப் பார்க்கும்போது, எல்லோரையும் ஓர் ஆத்மா அல்லது அவர்களின் தேவதை ரூபங்களிலேயே சதா பார்ப்பார்கள். மற்றவர் தேவதை ஆகாவிட்டாலும்கூட, எனது பார்வையில், ஓர் ஆத்மாவின் அல்லது தேவதை ரூபத்தினை மட்டுமே நான் பார்க்க வேண்டும். எனது நடத்தையில், அதாவது, எனது தொடர்புகளிலும் உறவுமுறைகளிலும் செயல்பாடுகளிலும் நான் எப்போதும் எல்லோருக்கும் அன்பையும் சந்தோஷத்தையுமே கொடுக்க வேண்டும். மற்றவர்கள் எனக்கு அன்பைக் கொடுத்தாலென்ன கொடுக்கா விட்டாலென்ன, எனது கடமை அவர்களுக்கு அன்பைக் கொடுத்து, அவர்களை அன்பானவர்கள் ஆக்குவதும் அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதும் ஆகும். உங்களிடம் ஒரு சுலோகம் உள்ளது: ‘துன்பத்தைக் கொடுக்காதீர்கள், துன்பத்தை எடுக்காதீர்கள்’. நீங்கள் அதை ஏற்படுத்தவும் கூடாது, எடுத்துக் கொள்ளவும் கூடாது. எதையாவது கொடுக்கின்ற ஒருவரும் சிலவேளைகளில் உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அதையும் சந்தோஷ உணர்வுடன் பாருங்கள். விழுந்துவிட்ட ஒருவரை மேலும் நீங்கள் விழுத்தக்கூடாது. விழுந்தவர்களை நீங்கள் எப்போதும் ஈடேற்றுவீர்கள். அந்த ஆத்மாக்கள், விழுந்து விட்டதனாலும் ஏதாவது புற ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாலும் துன்பத்தைக் கொடுக்கிறார்கள்! ஆகவே, நீங்கள் அவர்களை மேலும் விழச் செய்யக்கூடாது. அந்த அப்பாவிகளை நீங்கள் மேலும் உதைக்கக்கூடாது. இல்லை. அன்புடன் அவர்களை ஈடேற்றுங்கள். இதிலும் முதலில், புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பிக்கிறது. அனைத்திற்கும் முதலில், புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பிக்கிறது, அப்படித்தானே? உங்களின் சகபாடிகள் அனைவரையும் பிராமணக் குடும்பத்தில் உள்ள உங்களின் சேவை சகபாடிகளையும் சகபாடிகளையும் ஈடேற்றுங்கள். அவர்கள் தங்களின் கூடாத பழக்க வழக்கங்களை வெளிப்படுத்தினாலும், நீங்கள் அவர்களின் சிறப்பியல்புகளையே பாருங்கள். அது வரிசைக்கிரமமானதுதானே? பாருங்கள், மாலை என்பது உங்களின் ஞாபகார்த்தம். எனவே, எல்லோருக்கும் ஒரே இலக்கம் இருப்பதில்லை. 108 என்ற இலக்கமும் உள்ளது. அதனால், அது வரிசைக்கிரமமானது. அது அப்படித்தான் இருக்கும். ஆனால் உங்களின் கடமை என்ன? ஓகே, நான் எப்படியோ எட்டில் இல்லை, அதனால் நான் 108 இல் ஒருவர் ஆகக்கூடும். எனவே, நான் 108 இல் கடைசி மணியாகவும் இருக்கக்கூடும். அதனால், எனக்குள்ளும் சில சம்ஸ்காரங்களை நான் கொண்டிருப்பேன்தானே? என நினைக்கக்கூடாது. இல்லை! மற்றவர்களுக்கு சந்தோஷத்தையும் அன்பையும் கொடுப்பதன் மூலம், உங்களின் சம்ஸ்காரங்களும் அன்பும் சந்தோஷமும் உடையதாகும். இதுவே சேவை. இந்தச் சேவையில், புண்ணியம் முதலில் வீட்டிலேயே ஆரம்பம் ஆகுகிறது.

இன்று, பாப்தாதா வியப்பான ஒரு விடயத்தைப் பார்த்தார். அவர் உங்களுக்கு அதைச் சொல்லட்டுமா? பாருங்கள், உங்களுக்கே அது வியப்பாக இருக்கும். பாப்தாதா தொடர்ந்தும் குழந்தைகளான உங்களின் விளையாட்டுக்களைப் பார்க்கிறார். எந்த வேளையிலும், ஒரு விநாடியில் பாப்தாதா தனது தொலைக்காட்சியின் ஆளியை ஒரு நிலையத்திற்கு உரியதைப் போடுகிறார். சிலவேளைகளில் இன்னொரு நிலையத்தின் ஆளியைப் போடுகிறார். சிலவேளைகளில், வெளிநாட்டில் உள்ள நிலையங்கள், சிலவேளைகளில் இந்தியாவில் உள்ள நிலையங்கள். அவர் அந்த ஆளிகளைப் போடுகிறார். ஒவ்வொருவரும் என்ன செய்கிறார் என்பதை அவரால் சொல்ல முடியும். ஏனென்றால், தந்தைக்குக் குழந்தைகளான உங்களிடம் அன்பு உள்ளது. குழந்தைகளான நீங்கள் சொல்கிறீர்கள்: ‘நாங்கள் அவருக்குச் சமமானவர்கள் ஆகவேண்டும்’. நீங்கள் சமமானவர் ஆகவேண்டும் என்பது உறுதியாக உள்ளதல்லவா? குமாரிகளே, நீங்கள் சமமானவர்கள் ஆகப் போகிறீர்களா? அல்லது, நாடகத்தின்படி நீங்கள் எப்படி ஆகினாலும் ஓகேயா? இல்லை. நீங்கள் சமமானவர்கள் ஆகவேண்டும். குமாரிகளான நீங்கள் எல்லோரும் சமமானவர்கள் ஆகவேண்டும். நீங்கள் இறக்க வேண்டியிருந்தாலும், நீங்கள் எதைச் செய்ய வேண்டியிருந்தாலும், கவனமாகக் கருத்தில் கொண்ட பின்னர் உங்களின் கைகளை உயர்த்துங்கள். ஆம், நீங்கள் என்ன செய்ய வேண்டியிருந்தாலும் பரவாயில்லை எனக் கருதுபவர்கள் - நீங்கள் இறக்க வேண்டியிருக்கும், தலைவணங்க வேண்டியிருக்கும், சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும் அல்லது யாராவது சொல்வதைக் கேட்க வேண்டியிருக்கும் - உங்களின் கைகளை உயர்த்துங்கள்! குமாரிகளே, அதைக் கவனமாகக் கருத்தில் கொண்டு உங்களின் கைகளை உயர்த்துங்கள். அவர்களின் புகைப்படங்களை எடுங்கள்! குமாரிகள் பலர் இருக்கிறார்கள். நீங்கள் இறக்க வேண்டி வந்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் தலைவணங்க வேண்டியிருந்தால் என்ன செய்வீர்கள்? பாண்டவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களுக்குக் கேட்கிறதா, நீங்கள் சமமானவர்கள் ஆகவேண்டும்! நீங்கள் சமமானவர்கள் ஆகாவிட்டால் எந்தவிதமான மகிழ்ச்சியும் இருக்காது. அப்போது, பரந்தாமத்திலும் நீங்கள் நெருக்கமாக இருக்க மாட்டீர்கள். பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆகுவதிலும் ஒரு வேறுபாடு காணப்படும். சத்தியயுக இராச்சிய பாக்கியத்திலும் ஒரு வேறுபாடு காணப்படும்.

உங்களுக்குத் தந்தை பிரம்மாவிடம் அன்பு இருக்கிறதல்லவா? இரட்டை வெளிநாட்டவர்களுக்கு அதிகபட்ச அன்பு உள்ளது. தந்தை பிரம்மாவிடம் தமது இதயங்களில் ஆழ்ந்த அன்பைக் கொண்டிருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இரட்டை வெளிநாட்டவர்களான உங்களுக்கு உங்களின் இதயபூர்வமான அன்பு இருக்கிறதா? அச்சா! அது நிஜமான அன்புதானே? இப்போது, பாபா உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறார். யார்மீது நீங்கள் அன்பு வைத்திருக்கிறீர்களோ, நீங்கள் அன்பு வைத்திருப்பவர் செய்வதையே நீங்கள் செய்ய விரும்புவதே, அன்பின் அடையாளம் ஆகும். இருவரின் சம்ஸ்காரங்கள், எண்ணங்கள், சுபாவங்கள் என்பவை ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போகும்போதே, நீங்கள் ஒருவரையொருவர் நேசிப்பீர்கள். உங்களுக்குத் தந்தை பிரம்மாவின் மீது அன்பு இருந்தால், நீங்கள் முதல் பிறவியில் இருந்து 21 பிறவிகளுக்கு அவருடனேயே இருப்பீர்கள். நீங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது பிறவியில் வந்தால் அது நன்றாக இருக்காது. நீங்கள் முதல் பிறவியில் இருந்து கடைசிப் பிறவிவரை அவருடனேயே இருப்பீர்கள். வெவ்வேறு ரூபங்களில் நீங்கள் அவருடன் கூடவே இருப்பீர்கள். எனவே, யாரால் அவருடன் கூடவே இருக்க முடியும்? சமமானவர் ஆகுபவர்களே. அவரே முதல் இலக்க ஆத்மா. எனவே, எப்படி நீங்கள் அவருடனேயே இருப்பீர்கள்? நீங்கள் முதலாம் இலக்கத்தவர் ஆகினால் மட்டுமே, அவருடன் இருப்பீர்கள். எல்லாவற்றிலும் முதல் இலக்கம் - உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், மனோபாவம், பார்வை, நடத்தை. எனவே, நீங்கள் முதல் இலக்கத்தவரா அல்லது வரிசைக்கிரமமானவரா? உங்களுக்கு அன்பிருந்தால், அந்த அன்பினால் எதையும் துறப்பது சிரமமாக இருக்காது. கலியுகத்தின் இறுதியில் கடைசிப் பிறவியில், சரீர உணர்வு அன்பைக் கொண்டவர்களே அந்த அன்பினால் தமது வாழ்க்கைகளையும் தியாகம் செய்கிறார்கள். எனவே, தந்தை பிரம்மாவின் மீதுள்ள அன்பினால் உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுவதில் என்ன சிரமம் இருக்கிறது? இது பெரிய விடயமா? இல்லை. எனவே, இன்றில் இருந்து எல்லோருடைய சம்ஸ்காரங்களும் மாறிவிடுமா? உறுதியாகவா? அறிக்கை ஒன்று அனுப்பப்படும். உங்களின் சகபாடிகள் பாபாவிற்கு எழுதுவார்கள். உறுதியாகவா? தாதிகளும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை வெளிநாட்டவர்கள் தமது சம்ஸ்காரங்கள் மாறிவிட்டன எனக் கூறுகிறார்கள். அல்லது, அதற்கு நேரம் எடுக்குமா? மோகினி, நீங்கள் பாபாவிற்குச் சொல்லுங்கள். அவர்கள் மாறுவர்கள்தானே? அவர்கள் எல்லோரும் மாறுவார்கள்தானே? அமெரிக்காவில் இருப்பவர்கள் மாறுவார்கள். வேடிக்கையான பாகம் விடப்பட்டுவிட்டது.

நீங்கள் அதிகளவு முயற்சி செய்வதாக நீங்கள் எல்லோரும் சொல்வது வேடிக்கையாக உள்ளது. நீங்கள் அதிகளவு முயற்சி செய்வதைப் பார்க்கும்போது பாப்தாதாவிற்கும் கருணை பிறக்கிறது. சிலவேளைகளில், நீங்கள் அதிகளவு முயற்சி செய்யும்போது, என்ன சொல்கிறீர்கள்: ‘எனது சம்ஸ்காரங்கள் அப்படி இருந்தால் நான் என்ன செய்வது?’ நீங்;கள் உங்களின் சம்ஸ்காரங்களை ஒரு சாக்காகக் கூறி, அந்த முறையில் உங்களை நியாயப்படுத்துகிறீர்கள். எவ்வாறாயினும், இன்று நீங்கள் ‘எனது சம்ஸ்காரங்கள்’ எனக் கூறியதைத் தந்தை கண்டார், அவை உண்மையில் உங்களின் சம்ஸ்காரங்களா? நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்மாக்களே. நீங்கள் ஓர் ஆத்மா, அப்படித்தானே? நீங்கள் சரீரம் இல்லையல்லவா? எனவே, ஆத்மாவான உங்களின் சம்ஸ்காரங்கள் என்ன? உங்களின் ஆதி சம்ஸ்காரங்கள் எவை? இன்று உங்களுடையவை என நீங்கள் குறிப்பிடுபவை, அவை உங்களுடையதா அல்லது இராவணனுடையதா? அவை யாருடைய சம்ஸ்காரங்கள்? அவை உங்களுடையவையா? அவை உங்களுடையவை அல்ல. எனவே, அவை உங்களுடையவை என நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்? ‘எனது சம்ஸ்காரங்கள் அப்படிப்பட்டவை’ என நீங்கள் சொல்கிறீர்கள்தானே? ஆகவே, இன்றிலிருந்து, ‘எனது சம்ஸ்காரங்கள்!’ எனச் சொல்லாதீர்கள். இல்லை. சிலவேளைகளில், எல்லா இடங்களில் இருந்தும் குப்பை௧ள் உங்களிடம் பறந்து வருகின்றன, அல்லவா? எனவே, இராவணனின் இந்த விடயமும் உங்களிடம் வருகிறது. எனவே, அவை உங்களுடையவை என எப்படி உங்களால் சொல்ல முடியும்? அவை உங்களுடையவையா? அவை உங்களுடையவை இல்லையல்லவா? எனவே, ஒருபோதும் இப்படிச் சொல்லாதீர்கள். ‘எனது’ என்ற வார்த்தையை நீங்கள் சொல்லும்போதெல்லாம், நீங்கள் யார் என்பதையும் உங்களின் சம்ஸ்காரங்கள் எவை என்பதையும் நினையுங்கள். சரீர உணர்வில் இருக்கும்போது அவை உங்களின் சம்ஸ்காரங்கள். எவ்வாறாயினும், ஆத்மா உணர்வில் இருக்கும்போது, அந்த சம்ஸ்காரங்கள் இருக்கமாட்டாது. அதனால் அந்த மொழியை மாற்றுங்கள். எனது சம்ஸ்காரங்கள் எனக் கூறி, நீங்கள் கவனயீனம் ஆகுகிறீர்கள். அது எனது நோக்கம் அல்ல, ஆனால் அவை எனது சம்ஸ்காரங்கள் மட்டுமே என நீங்கள் சொல்வீர்கள். அச்சா, நீங்கள் பயன்படுத்தும் மற்றைய வார்த்தை என்ன? எனது சுபாவம். சுபாவம் (சுவ - சுயம், பாவ் - உணர்வு) என்ற வார்த்தை மிகவும் நல்லது. ஒருவரின் சுயம் எப்போதும் நல்லது. எனது சுபாவம், எனது நோக்கம் எப்போதும் நல்லதே. அது ஒருபோதும் தீயதல்ல. அதனால், ‘எனது சுபாவம், எனது சம்ஸ்காரங்கள்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அந்த மொழியை மாற்றுங்கள். ‘எனது’ என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம், எனது ஆதி சம்ஸ்காரங்கள் எவை என நினைத்துப் பாருங்கள். யார் இதைக் கூறுவது? ஆத்மாவே, ‘இவை எனது சம்ஸ்காரங்கள்’ எனக் கூறுகிறார். எனவே, இதைப் பற்றிச் சிந்திக்கும்போது, உங்களைப் பார்க்கவே உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். உங்களுக்கு வேடிக்கையாக இருக்குமல்லவா? உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்போது, நீங்கள் உருவாக்கிய சிக்கல்கள் அனைத்தும் முடிந்துவிடும். இது உங்களின் மொழியை மாற்றுதல் எனப்படுகிறது. அதாவது, ஒவ்வோர் ஆத்மாவின் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருத்தல் எனப்படுகிறது. சதா உங்களுக்காக சுயமரியாதையுடன் இருந்து, மற்றவர்களுக்கும் மரியாதையுடன் மதிப்பளியுங்கள். நீங்கள் எல்லோரையும் மரியாதையுடன் பார்க்கும்போது, நீங்கள் விரும்பாத எதுவும் நடக்கும்போது, ஏதாவது சிக்கல்கள் ஏற்படும்போது, நீங்கள் அவற்றை விரும்ப மாட்டீர்கள்தானே? ஒருவரையொருவர் மரியாதையுடன் பாருங்கள். இவர் ஒரு விசேடமான ஆத்மா. இவர் தந்தையிடமிருந்து பராமரிப்பைப் பெற்றுள்ளதொரு பிராமண ஆத்மா. இந்த ஆத்மா பலமில்லியன்களில் வெகுசிலரில் ஒருவர். ஒரு விடயத்தைச் செய்யுங்கள் : உங்களின் கண்களில் புள்ளி கலந்திருக்க வேண்டும், அவ்வளவுதான்! முதலில், புள்ளியால் (கண்மணி) பாருங்கள். இரண்டாவதாக, புள்ளியை உங்களின் கண்களில் அமிழ்த்திவிடுங்கள். அப்போது எந்தவித முரண்பாடுகளும் இடம்பெறாது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆத்மா, ஆத்மாவைப் பார்ப்பதைப் போன்றே இருக்கும். ஆத்மா ஒருவர் ஆத்மாவுடன் பேசுகிறார். ஆத்ம உணர்வு மனோபாவத்தையும் ஆத்ம உணர்வு பார்வையையும் உருவாக்குங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? இப்போது, ‘எனது சம்ஸ்காரங்கள்’ என ஒருபோதும் சொல்லாதீர்கள். நீங்கள் சுபாவத்தை (உங்களின் ஆதி சுபாவம்) பற்றிப் பேசும்போது, உங்களின் சுபாவத்துடன் இருங்கள். இது ஓகேயா?

வருடம் முழுவதும், பருவகாலம் ஆறு மாதங்களாக இருந்தாலும், வருடம் முழுவதும், நீங்கள் எவரைச் சந்திக்கும்போதும், யாரை நீங்கள் சந்தித்தாலும், அது உங்களுக்கிடையே ஆக இருந்தாலும் அல்லது ஏனைய ஆத்மாக்களுடனாக இருந்தாலும், நீங்கள் சந்திக்கும்போது, யாரை நீங்கள் சந்தித்தாலும் அவர்களுக்கு திருப்தியின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். நீங்களும் திருப்தியாக இருக்க வேண்டும், மற்றவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். இந்தப் பருவகாலத்தின் சுயமரியாதை, திருப்தி இரத்தினம் என்பதாகும். எப்போதும் திருப்தி இரத்தினமாக இருங்கள். ஒரு சகோதரரும் மணியே ஆவார். (மணி - பெண்பாலில் இரத்தினம்). ஆண்பால் மனா இல்லை. (மனா - ஆண்பாலில் இரத்தினம்). ஒவ்வோர் ஆத்மாவும் ஒவ்வொரு கணமும் ஒரு திருப்தி மணி ஆவார். நீங்கள் திருப்தியாக இருந்தால், மற்றவர்களையும் திருப்திப்படுத்துவீர்கள். திருப்தியாக இருந்து, மற்றவர்களையும் திருப்திப்படுத்துங்கள். இது ஓகேயா? உங்களுக்கு இது பிடித்துள்ளதா? குமாரிகளே, உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? இதை விரும்புபவர்களும் இதைச் செய்பவர்களும் - அதைக் கேட்பதாக மட்டுமன்றி, செய்ய விரும்புபவர்கள் - எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! கைகள் எல்லாவற்றையும் பார்க்கமுடிகிறது. நீங்கள் பாப்தாதாவின் இதயத்தை மகிழ்வித்திருக்கிறீர்கள். மிகவும் நல்லது. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். என்னதான் நடந்தாலும், உங்களின் சுயமரியாதை என்ற ஆசனத்தில் ஸ்திரமாக இருங்கள். சிலவேளைகளில் ஓர் ஆசனத்திற்கும் சிலவேளைகளில் இன்னோர் ஆசனத்திற்கும் அலைந்து திரியாதீர்கள். இல்லை. உங்களின் சுயமரியாதை ஆசனத்தில் ஸ்திரமாக இருங்கள். உங்களின் சுயமரியாதை ஆசனத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும்போது, ஏதாவது நடந்தாலும் அதை ஒரு கார்ட்டூன் காட்சியைப் பார்ப்பதைப் போல் பாருங்கள். உங்களுக்கு கார்ட்டூன் பார்ப்பது பிடிக்கும்தானே? எனவே, பிரச்சனை என்பது பிரச்சனை அல்ல. ஆனால், அது நடிக்கப்படும் ஒரு கார்ட்டூன் காட்சியாகும். ஒரு சிங்கம் வரும். ஒரு ஆடு வரும். ஒரு தேள் வரும். ஒரு அழுக்கான பல்லி வரும். இது ஒரு கார்ட்டூன் காட்சி. உங்களின் ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது குழப்பம் அடையாதீர்கள். அப்போது நீங்கள் அதை இரசிப்பீர்கள்.

விசேடமான அதியன்பிற்குரிய, இராஜரீகக் குழந்தைகள் எல்லோருக்கும் சமமானவர் ஆகுகின்ற அன்பான, ஒத்துழைக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் தமக்கான மேன்மையான உணர்வுகளையும் தமது ஆதி சம்ஸ்காரங்களையும் தமது ரூபங்களில் வெளிப்படச் செய்யும் குழந்தைகளுக்கும் சதா எல்லோருக்கும் சந்தோஷத்தையும் அன்பையும் வழங்குகின்ற குழந்தைகளுக்கும் திருப்தி இரத்தினமாகி, சதா திருப்திக்கதிர்களைப் பரப்புபவர்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தை பிரம்மாவைப் போல் மாஸ்ரர் அருள்பவராகி, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.

தந்தை பிரம்மாவைப் போல் மாஸ்ரர் அருள்பவர் ஆகுவதற்கு, மூன்று விடயங்களில் இருந்து விடுபட்டிருங்கள் - பொறாமை, வெறுப்பு, விமர்சித்தல். அத்துடன் எல்லோருக்காகவும் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருந்து, தூய, சாதகமான எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள். தங்களுக்குள் பொறாமை எனும் நெருப்பைக் கொண்டிருப்பவர்கள், தங்களை எரிப்பதுடன் மற்றவர்களுக்கும் துயரத்தைக் கொடுப்பார்கள். வெறுப்பைக் கொண்டிருப்பவர்கள், தாங்களும் விழுந்து, மற்றவர்களையும் விழச் செய்வார்கள். நகைச்சுவையாகவேனும் மற்றவர்களை விமர்சிப்பவர்கள், அவர்களுக்கு அதைரியத்தை ஏற்படுத்தி, சந்தோஷமற்றவர்கள் ஆக்குவார்கள். ஆகவே, இந்த மூன்று விடயங்களில் இருந்தும் விடுபட்டிருந்து, தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள். அதனால், அருள்பவரின் குழந்தையாக, ஒரு மாஸ்ரர் அருள்பவர் ஆகுங்கள்.

சுலோகம்:
தமது மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் மீது முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள், சுய அதிபதிகள், அதாவது, சுய இராச்சிய அதிகாரிகள் ஆவார்கள்.

உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.

பிராமணக் குழந்தைகளான நீங்கள் அடிமரம் ஆவீர்கள். மரம் முழுவதும் அடிமரத்தில் இருந்தே சகாஷைப் பெறுகிறது. அதனால் இப்போது, உலகிற்கே சகாஷ் வழங்குபவர்கள் ஆகுங்கள். உங்களின் புத்தியில், 20 நிலையங்கள், 30 நிலையங்கள் அல்லது 200 தொடக்கம் 250 நிலையங்கள் அல்லது உங்களின் பிராந்தியம் இருக்குமாக இருந்தால், உங்களால் எல்லையற்றதற்கு சகாஷ் வழங்க முடியாது. ஆகவே, சதா எந்தவோர் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டிருந்து, எல்லையற்ற சேவை செய்கின்ற பாகத்தை நடியுங்கள். எல்லையற்றதற்குள் செல்வதன் மூலம் நீங்கள் இயல்பாகவே எல்லைக்குட்பட்ட எதில் இருந்தும் விடுபட்டவர் ஆகுவீர்கள். எல்லையற்ற சகாஷ் உடன் மாற்றத்தை ஏற்படுத்துவதே, துரித சேவையின் பெறுபேறு ஆகும்.