05.01.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறீர்கள். கீதையின் ஞானமும் இராஜயோகமும் உங்களை முற்றிலும் தூய்மையானவர் ஆக்குகிறது.

கேள்வி:
சத்தியயுகத்தில் அனைத்தும் ஏன் அதி சிறந்ததாகவும் சதோபிரதானாகவும் உள்ளது?

பதில்:
ஏனெனில் அங்குள்ள மனிதர்கள் சதோபிரதான் ஆனவர்கள். மக்கள் சிறந்தவர்களாக இருக்கும் பொழுது, அவர்களைச் சுற்றியுள்ள அனைத்தும் சிறந்ததாக இருக்கிறது, மக்கள் தீயவர்களாக இருக்கும் பொழுது, அவர்களைச் சுற்றியுள்ள அனைத்தும் தீங்கானதாகவே இருக்கிறது. சதோபிரதான் உலகில், அடைய முடியாதது எதுவுமில்லை, நீங்களும் எவரையும் எதற்காகவும் கேட்கத் தேவையில்லை.

ஓம் சாந்தி.
பாபா இச்சரீரத்தினூடாக விளங்கப்படுத்துகிறார். இவர் உயிருள்ளவர் என்று அழைக்கப்படுகிறார், இவரில் ஓர் ஆத்மா உள்ளார். பரமாத்மாவாகிய பரமதந்தையும் இவரில் இருக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் முதலில், இது மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இதனாலேயே இவர் தாதா எனவும் அழைக்கப்படுகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது, நீங்கள் இந்த நம்பிக்கையுடன் முன்னேறுகிறீர்கள். எவரில் தான் பிரவேசித்து அவதரித்திருக்கிறாரோ, அவரையிட்டுத் தந்தை கூறுகிறார்: நான் இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவரில் பிரவேசிக்கிறேன். இதுவே கீதா ஞானம் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, இதுவே சமயநூல்கள் அனைத்தினதும் இரத்தினமாகிய, அதிமேன்மையான சமயநூல் ஆகும். ஸ்ரீமத் என்றால் அதிமேன்மையான வழிகாட்டல்கள் என்பதாகும். அதிமேன்மையான கடவுளிடம் இருந்தே மேன்மையான வழிகாட்டல்கள் வருகின்றன. அவருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறீர்கள். சீரழிந்த மனிதர்களாக இருப்பதில் இருந்து நீங்கள் மேன்மையான தேவர்கள் ஆகுகிறீர்கள். அதனாலேயே நீங்கள் இங்கு வருகிறீர்கள். தந்தையே கூறுகிறார்: நான் உங்களை மேன்மையான, விகாரமற்ற தேவர்கள் ஆக்குவதற்கு வருகிறேன். “மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவது” என்பதன் அர்த்தம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவர் விகாரமுடைய மனிதர்களை விகாரமற்ற தேவர்களாக மாற்றுவதற்கு வருகிறார். சத்தியயுகத்தில் இருப்பவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்களுக்குத் தெய்வீகக் குணங்கள் இருக்கின்றன. இப்பொழுது, கலியுகத்தில், அசுர குணங்களை உடையவர்களே இருக்கிறார்கள். இரு சாராரும் மனித உலகிலேயே வசிக்கின்றார்கள், ஆனால் அம்மக்களுக்குத் தெய்வீகப் புத்தி இருக்கிறது, ஆனால் இம்மக்களுக்கோ அசுர புத்தியே இருக்கிறது. அங்கு ஞானம் இருக்கின்றது, இங்கு நீங்கள் பக்தியைக் கொண்டிருக்கிறீர்கள். ஞானமும், பக்தியும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டதாகும். பக்தியைப் பற்றி எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன எனவும், இந்த ஞானத்தைப் பற்றி எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன எனவும் பாருங்கள். தந்தையே ஞானக்கடல். அவரிடம் ஒரேயொரு புத்தகம் மாத்திரமே உள்ளது. ஒரு சமயத்தை ஸ்தாபிக்கின்ற எவரிடமும் ஒரு சமயநூல் மாத்திரமே இருக்க வேண்டும். அது ஒரு சமயநூல் என அழைக்கப்படுகிறது. கீதையே முதலாவது சமயநூல்: ஸ்ரீமத் பகவத் கீதா. இந்து சமயம் அன்றி, முதலில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே உள்ளது என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இந்து சமயம் கீதையின் மூலமே ஸ்தாபிக்கப்பட்டது எனவும், ஸ்ரீகிருஷ்ணரே கீதையைப் பேசினார் எனவும் மக்கள் நம்புகிறார்கள். நீங்கள் எவரையாவது கேட்டால், தொன்று தொட்ட காலம் முதல் கீதை ஸ்ரீகிருஷ்ணராலேயே பேசப்பட்டது என அவர் கூறுவார். “கடவுள் சிவன் பேசுகிறார்” என எந்தச் சமயநூலிலும் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் “பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பேசுகிறார்” என எழுதியுள்ளார்கள். கீதையைக் கற்றுள்ளவர்களால் இதை இலகுவாகப் புரிந்து கொள்ள இயலும். தந்தை இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கும் இந்தக் கீதா ஞானத்தின் மூலம் மனிதர்கள் தேவர்கள் ஆகினார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அவர் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். அவர் உங்களுக்குத் தூய்மையையும் கற்பிக்கிறார். காமமே கொடிய எதிரி. அதுவே உங்களைத் தோற்கடித்தது. இப்பொழுது அதை வெல்வதால், நீங்கள் உலகை வெல்பவர்கள் ஆகுகிறீர்கள். அதாவது, உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். இது மிகவும் இலகுவானது. எல்லையற்ற தந்தை இங்கே அமர்ந்திருந்து, இவரினூடாக உங்களுக்குக் கற்பிக்கிறார். அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். இவர் மனிதர்கள் அனைவரினதும் எல்லையற்ற தந்தை ஆவார். இவருடைய பெயர் பிரஜாபிதா பிரம்மா. நீங்கள் எவரையாவது பிரம்மாவின் தந்தையின் பெயரை உங்களுக்குக் கூறுமாறு கேட்டால், அவர் குழப்பம் அடைவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் படைப்புக்கள். இம்மூவரினதும் தந்தையாக ஒருவர் இருக்க வேண்டும். எவ்வாறு இம்மூவரின் தந்தையாகவும் அசரீரியான சிவன் இருக்கிறார் என்பதை நீங்கள் காண்பிக்கிறீர்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும உலகத் தேவர்களாகக் காண்பிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மேலே சிவன் உள்ளார். சிவபாபாவின் குழந்தைகளான, ஆத்மாக்கள் அனைவருக்கும் அவர்களுடைய சொந்தச் சரீரங்கள் உள்ளன என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் எப்பொழுதும் அசரீரியான பரமாத்மாவாகிய, பரமதந்தை ஆவார். நீங்கள் அசரீரியான பரமாத்மாவாகிய, பரமதந்தையின் குழந்தைகள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆத்மா சரீரத்தின் மூலம் கூறுகிறார்: பரமாத்மாவாகிய பரமதந்தை. அவை அத்தகைய இலகுவான விடயங்கள். இது அல்பாவும், பீற்றாவும் என அழைக்கப்படுகின்றது. யார் உங்களுக்குக் கற்பிப்பவர்? கீதா ஞானத்தைப் பேசியவர் யார்? அசரீரியான தந்தையே. அவர் கிரீடம் போன்றவற்றை அணிவதில்லை. அவரே ஞானக்கடலும், விதையானவரும், உணர்வுள்ளவரும் ஆவார். நீங்களும் உணர்வுள்ள ஆத்மாக்கள் ஆவீர்கள். மரங்கள் அனைத்;தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றி உங்களுக்குத் தெரியும். நீங்கள் பூந்தோட்டக்கார்களாக இல்லாது விட்டாலும், எவ்வாறு ஒரு விதை விதைக்கப்படுகிறது எனவும், பின்னர் அதிலிருந்து எவ்வாறு ஒரு மரம் வளர்கிறது எனவும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். அவை உயிரற்ற மரங்கள், இதுவோ உயிருள்ள விருட்சம் ஆகும். ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த ஞானம் உள்ளது; வேறெந்த ஆத்மாக்களுக்கும் இந்த ஞானம் இல்லை. தந்தையே உயிருள்ள மனித உலக விருட்சத்தின் உயிருள்ள விதையாவார். ஆகவே, விருட்சம் மனிதர்களை குறிக்கின்றது. இதுவே உயிருள்ள படைப்பு ஆகும். விதையானவருக்கும், படைப்புக்கும் மத்தியில் வேறுபாடு உள்ளது. நீங்கள் ஒரு மாங்கொட்டையை நடும்பொழுது, மரம் மிகப்பெரிதாக வளர்ந்ததும், மாம்பழங்களைப் பெறுகிறீர்கள். அவ்விதமாகவே, மனிதர்களின் விதையில் இருந்து பல்வேறு மனிதர்கள் வளர்கிறார்கள். உயிரற்ற மரங்களுக்கு ஞானம் இல்லை. அவர் உயிருள்ள விதையாவார். அவரிடம் முழு உலகினதும் விருட்சத்தின் ஞானம் உள்ளது. எவ்வாறு விருட்சம் உருவாக்கப்படுகிறது, அது எவ்வாறு பராமரிக்கப்படுகிறது, பின்னர் எவ்வாறு அது அழிக்கப்படுகிறது என்பது அவருக்குத் தெரியும். எவ்வாறு இப்பெரிய விருட்சம் அழிக்கப்பட்டு, பின்னர் எவ்வாறு புதியதொன்று வளர்ந்துள்ளது என்பது அனைத்தும் மறைமுகமானது. நீங்கள் பெறுகின்ற ஞானம் மறைமுகமானது. தந்தையும் ஒரு மறைமுகமான வழியிலேயே வருகிறார். மரக்கன்று நாட்டப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது அனைவரும் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். அச்சா, விதையிலிருந்து வெளிப்படுகின்ற முதலாவது இலை யார்? ஸ்ரீகிருஷ்ணரே சத்தியயுகத்தின் முதலாவது இலை எனக் கூறப்படுவார், இலக்ஷ்மியும் நாராயணனும் அல்ல. ஒரு புதிய இலை முதலில் சிறிதாக இருக்கிறது, பின்னர் அது பெரிதாக வளர்கிறது. ஆகவே அந்த விதையானவரின் அதிகளவு புகழ் உள்ளது. அவர் உயிர் வாழ்கிறார், ஏனைய இலைகள் வெளிப்படுகின்றன. அவர்களும் புகழப்படுகிறார்கள். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கிறீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, அவர்களைப் போன்று ஆகவேண்டும் என்பதே பிரதான விடயம். அவர்களுடைய விக்கிரகங்கள் உள்ளன. உங்களிடம் படங்கள் இல்லாமல் போயிருந்தால், இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்க மாட்டாது. இந்தப் படங்கள் மிகவும் பயனுள்ளவை. பக்தி மார்க்கத்தில், இந்தப் படங்கள் வழிபாடு செய்யப்படுகின்றன. இந்த ஞான மார்க்கத்திலோ நீங்கள் அவர்களைப் போன்று ஆகவேண்டும் என்னும் ஞானத்தைப் படங்களிலிருந்து பெறுகிறீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அவர்களைப் போன்று ஆகவேண்டும் என எண்ணுவதில்லை. பக்தி மார்க்கத்தில் பல்வேறு ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யாருக்கு அதிக ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன? அது நிச்சயமாக விதையானவராகிய, சிவபாபாவுக்கே ஆகும். பின்னர் முதற் படைப்புக்கான ஆலயங்கள் உள்ளன. இலக்ஷ்மியும் நாராயணனுமே முதற் படைப்பு. சிவனுக்குப் பின்னர், அவர்களே அதிகளவு வழிபடப்படுகிறார்கள். தாய்மார்கள் இந்த ஞானத்தைக் கொடுக்கிறார்கள்; அவர்கள் வழிபாடு செய்யப்படுவதில்லை. அவர்கள் கற்பிக்கிறார்கள். தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் எவரையும் வழிபடுவதில்லை. இந்நேரத்தில் உங்களுக்குக் கற்பிப்பவர்களை நீங்கள் வழிபாடு செய்யக் கூடாது. இக்கல்வி முடிவடைந்த பின்னர், இக்கல்வி மறக்கப்படும் பொழுது, வழிபாடு இடம்பெறுகிறது. நீங்கள் அந்த அதே தேவர்களாக ஆகுகிறீர்கள். உங்களை அவர்களைப் போன்று ஆக்குபவரே முதலில் வழிபாடு செய்யப்படுகிறார் எனவும், பின்னர் வரிசைக்கிரமமாக நீங்கள் வழிபாடு செய்யப்படுகிறீர்கள் எனவும் நீங்கள் மாத்திரமே புரிந்து கொள்கிறீர்கள். பின்னர், வீழ்ந்து விடுவதனால், நீங்கள் பஞ்ச தத்துவங்களைக் கூட வழிபட ஆரம்பிக்கிறீர்கள். சரீரங்கள் பஞ்ச தத்துவங்களால் ஆனவை. நீங்கள் பஞ்ச தத்துவங்களை வழிபட்டாலென்ன அல்லது சரீரங்களை வழிபட்டாலென்ன, அது ஒரே விடயமே. இலக்ஷ்மியும் நாராயணனும் முழு உலகினதும் அதிபதிகளாக இருந்தார்கள் என்னும் ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. புதிய உலகில் தேவர்களின் இராச்சியம் இருந்தது, ஆனால் அது எப்பொழுது இருந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை: அவர்கள் நூறாயிரக்கணக்கான வருடங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். நூறாயிரக்கணக்கான வருடங்களின் விடயங்கள் எவருடைய புத்தியிலும் இருக்க முடியாது. இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது அறிந்துள்ளீர்கள். தேவ தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தவர்கள், பின்னர் ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டார்கள். அது இந்து சமயம் என நீங்கள் கூறக்கூடாது. எவ்வாறாயினும், அவர்கள் தூய்மை அற்றவர்கள் என்னும் காரணத்தினால் அவர்களைத் தேவர்கள் என அழைப்பது சரியாக உணரப்படவில்லை. ஒரு தூய்மையற்ற நபரை ஒரு தேவர் என அழைக்க முடியாது. மக்கள் தூய இறைவிகளையே வழிபடுகிறார்கள். எனவே, அவர்கள் நிச்சயமாகத் தூய்மை அற்றிருக்க வேண்டும். இதனாலேயே அவர்கள் தூய்மையானவர்களுக்குத் தலை வணங்குகிறார்கள். பாரதத்தில், அவர்கள் குறிப்பாகக் குமாரிகளை வணங்குகிறார்கள்; அவர்கள் குமார்களை வணங்குவதில்லை. அவர்கள் பெண்களையே வணங்குகிறார்கள். அவர்கள் ஏன் ஆண்களை வணங்குவதில்லை? ஏனெனில் இந்நேரத்தில் தாய்மார்களே முதலில் இந்த ஞானத்தைப் பெறுகிறார்கள் என்பதாலாகும். தந்தை இவரில் பிரவேசிக்கிறார். தான் ஒரு பெரிய ஞான ஆறு என்பதை இவரும் புரிந்து கொள்கிறார். இவர் ஞான ஆறும், ஓர் ஆணும் ஆவார். இவரே மிகப்பெரிய ஆறு ஆவார். கல்கத்தாவுக்கு அருகில் பிரம்மபுத்திரா ஆறு, கடலைச் சந்திக்கிறது; அதுவே மிகப் பெரிய ஆறாகும். அங்கு ஓர் ஒன்றுகூடல் (மேளா) இடம்பெறுகிறது. எவ்வாறாயினும், இதுவே ஆத்மாக்களுக்கும், பரமாத்மாவுக்குமான ஒன்றுகூடல் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அது அவர்கள் பிரம்மபுத்திரா எனப் பெயரிட்டுள்ள நீராலான ஓர் ஆறு மாத்திரமே ஆகும். பிரம்ம தத்துவமே கடவுள் என அவர்கள் கூறியுள்ளார்கள், இதனாலேயே அவர்கள் பிரம்மபுத்திரா ஆற்றை மிகவும் தூய்மையானதாகக் கருதுகிறார்கள். அது மிகப் பெரிய ஆறு, அது நிச்சயமாகத் தூய்மையாகவும் இருக்கும். உண்மையில், கங்கையன்றி, பிரம்மபுத்திராவே தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்பட வேண்டும். இந்த ஆற்றின் ஒன்றுகூடலே நடைபெறுகிறது. இதுவும் கடலினதும், பிரம்மாவான ஆற்றினதும் சந்திப்பு ஆகும். எவ்வாறு பிரம்மாவினூடாகத் தத்தெடுத்தல் நடைபெறுகிறது எனும் ஆழமான விடயங்களே புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்கள். பின்னர் இந்த ஞானம் மறைந்து விடும். இவை மிகவும் இலகுவான விடயங்கள். கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன், பின்னர் இவ்வுலகம் அழிக்கப்படும். சமயநூல்கள் போன்றவை எவையும் எஞ்சியிருக்க மாட்டாது. பின்னர் பக்தி மார்க்கத்திலேயே இச்சமயநூல்கள் மீண்டும் இருக்கும். அவை ஞான மார்க்கத்தில் இருப்பதில்லை. தொன்று தொட்ட காலத்திலிருந்தே சமயநூல்கள் தொடர்ந்து வருகின்றன என மக்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு இந்த ஞானம் இருப்பதில்லை. ஒரு சக்கரத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என அவர்கள் கூறுகிறார்கள், இதனாலேயே அது தொன்று தொட்ட காலத்தில் இருந்து தொடர்ந்து வந்துள்ளது என அவர்கள் கூறுகிறார்கள். அது அறியாமை இருள் என அழைக்கப்படுகிறது. ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை அறிந்து கொள்ள முடிகின்ற, இந்த எல்லையற்ற கல்வியைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கற்கிறீர்கள். இத்தேவர்களின் முழு வரலாறும், புவியியலும் உங்களுக்குத் தெரியும். அவர்கள் வழிபடத் தகுதி வாய்ந்தவர்களாகவும், தூய இல்லறப் பாதைக்கு உரியவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் இப்பொழுது தூய்மையற்ற, வழிபடுபவர்கள் ஆகிவிட்டார்கள். சத்தியயுகத்தில் தூய இல்லறப் பாதை உள்ளது. இங்கு, கலியுகத்தில் தூய்மையற்ற இல்லறப் பாதையே உள்ளது. பின்னர், துறவறப் பாதை உள்ளது. அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது துறவற தர்மம் என அழைக்கப்படுகிறது. அவர்கள் தங்களுடைய வீடுகளையும், குடும்பங்களையும் துறந்து காடுகளுக்குள் செல்கிறார்கள். அது எல்லைக்கு உட்பட்ட துறவறம்; இன்னமும், அவர்கள் அதே பழைய உலகிலேயே வசிக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் எனவும், பின்னர் நீங்கள் புதிய உலகத்துக்குச் செல்வீர்கள் எனவும் புரிந்து கொள்கிறீர்கள். அனைத்தினதும் மிகச்சரியான நேரம், திகதி, விநாடி என்பன உங்களுக்குத் தெரியும். ஒரு சக்கரத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என அம்மக்கள் கூறுகிறார்கள். அதனையிட்டு ஒரு சரியான கணக்கீட்டைச் செய்ய முடியாது. நூறாயிரக்கணக்கான வருடங்களின் எதனையும் எவராலும் நினைவுசெய்ய இயலாது. தந்தை யார், அவர் எவ்வாறு வருகிறார், அவர் எப்பணியைச் செய்கிறார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அனைவருடைய தொழிலும், ஜாதகமும் உங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும், கணக்கிட முடியாத பல்வேறு இலைகள் ஒரு மரத்தில் இருக்கின்றன. இந்த எல்லையற்ற உலக விருட்சத்தில் எத்தனை இலைகள் உள்ளன? 5000 வருடங்களில் 6 பில்லியன் பேர்கள் இருக்கிறார்கள். ஆகவே, நூறாயிரக்கணக்கான வருடங்களில் எண்ணற்ற மனிதர்கள் இருப்பார்கள். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் சத்தியயுகம் இத்தனை வருடங்கள், திரேதாயுகம் இத்தனை வருடங்கள், துவாபரயுகம் இத்தனை வருடங்கள் என எழுதப்பட்டுள்ளதைக் காண்பிக்கிறார்கள். ஆகவே, தந்தை இங்கே அமர்ந்திருந்து இந்த இரகசியங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் ஒரு மாவின் விதையைப் பார்க்கும் பொழுது, ஒரு மாமரம் மனத்தில் வருகிறது. இப்பொழுது மனித உலக விருட்சத்தின் விதையானவர் உங்களின் முன்னிலையில் உள்ளார். அவர் உயிர்வாழ்பவர் என்பதால், இங்கு அமர்ந்திருந்து, விருட்சத்தின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது எவ்வாறு ஒரு தலைகீழான விருட்சமாக உள்ளது என்பதை அவர் காண்பிக்கிறார். உயிருள்ள, உயிரற்ற, இவ்வுலகில் இருக்கின்ற அனைத்தும் அதேபோன்று திரும்பத் திரும்ப இடம்பெறும் என உங்களால் விளங்கப்படுத்த முடியும். இப்பொழுது சனத்தொகை தொடர்ந்தும் அதிகளவுக்கு வளர்கிறது! சத்தியயுகத்தில் அத்தனை மக்கள் இருக்க முடியாது. நீங்கள் கூறுகிறீர்கள்: இப்பொருள் அவுஸ்திரேலியாவில் இருந்து அல்லது ஜப்பானில் இருந்து வந்துள்ளது. அவுஸ்திரேலியாவும், ஜப்பானும் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. நாடகத் திட்டத்துக்கேற்ப, அந்த இடங்களிலிருந்து பொருட்கள் இங்கு வருகின்றன. அமெரிக்காவில் இருந்து தானியம் இறக்குமதி செய்யப்படுகிறது. சத்தியயுகத்தில் வேறு எங்கிருந்தும் எதுவும் இறக்குமதி செய்யப்படுவதில்லை. அங்கு ஒரு தர்மம் மாத்திரமே உள்ளது, அங்கு அனைத்தும் அபரிமிதமாக உள்ளன. இங்கு, எண்ணற்ற சமயங்கள் தொடர்ந்தும் வளர்கின்றன. அத்துடன், பல பொருட்களின் பற்றாக்குறையும் உள்ளது. அவர்கள் சத்தியயுகத்தில் எதையும் இறக்குமதி செய்வதில்லை. எவ்வாறு அவர்கள் இப்பொழுது பல்வேறு இடங்களில் இருந்தும் பொருட்களை இறக்குமதி செய்கிறார்கள் எனப் பாருங்கள். இறுதியில் மனிதர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் வளர்கிறது. சத்தியயுகத்தில் எதற்கும் குறைவில்லை. அங்கு, அனைத்தும் சதோபிரதானாகவும், மிகவும் சிறந்தவையாகவும் இருக்கின்றன் மனிதர்கள் சதோபிரதானாக இருக்கிறார்கள். மனிதர்கள் சிறந்தவர்களாக இருக்கும் பொழுது, அவர்களைச் சுற்றியுள்ள அனைத்தும் சிறந்ததாகவே இருக்கும். மனிதர்கள் தீயவர்களாக இருக்கும் பொழுது, அவர்களைச் சுற்றியுள்ள அனைத்தும் தீங்கானவையாகவே இருக்கின்றன. இவ்வுலகம் முழுவதையும் அழிக்கவுள்ள, அணுகுண்டே விஞ்ஞானத்தின் பிரதான விடயமாகும். அவர்கள் எவ்வாறு அதை உருவாக்கினார்கள்? நாடகத்துக்கேற்ப, அதை உருவாக்கிய ஆத்மாவுக்கு முற்கூட்டியே அந்த ஞானம் இருந்திருக்க வேண்டும். நேரம் வரும்பொழுது, அந்த ஞானம் அவரிலிருந்து வெளிப்படுகிறது. அத்தகைய அறிவுள்ளவர்கள் தொழிற்படுவதுடன், ஏனையோருக்கும் கற்பிப்பார்கள். ஒவ்வொரு சக்கரத்திலும் நடிக்கப்பட்டு வந்துள்ள அதே பாகமே தொடர்ந்தும் நடிக்கப்படுகிறது. இப்பொழுது நீங்கள் மிகவும் ஞானம்-நிறைந்தவர்கள் ஆகுகிறீர்கள். இதை விடவும் மகத்தான ஞானம் கிடையாது; இந்த ஞானத்தினூடாக நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். இதை விடவும் மேன்மையான ஞானம் இல்லை. அது விநாசம் இடம்பெறுகின்ற, மாயையின் ஞானமாகும். அந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்காகச் சந்திரனுக்குச் செல்கிறார்கள். எதுவும் உங்களுக்குப் புதியதல்ல. அவை அனைத்தும் மாயையின் பகட்டாகும். அவர்கள் அவற்றின் ஆழத்துக்குச் சென்று, பெருமளவு வெளிப்பகட்டைக் கொண்டிருக்கின்றார்கள். சில அற்புதங்களைக் காண்பிப்பதற்குத் தங்கள் புத்தியைப் பயன்படுத்துவதற்கு, மக்கள் பலரும் பெரும்பாடு படுகிறார்கள். அதைப் போன்ற பல அற்புதங்களைக் காண்பிப்பதால், அவர்கள் சேதத்தை விளைவிக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் கண்டுபிடிக்கின்ற விடயங்களைப் பாருங்கள்! அவற்றினூடாக விநாசம் இடம்பெறும் என்பதை அவற்றை உற்பத்தி செய்பவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மறைமுகமான இந்த ஞானத்தைக் கடைந்து மலர்ச்சியாக இருங்கள். உங்கள் முன்னிலையில் உள்ள தேவர்களின் படங்களைப் பாருங்கள். அவர்களை வழிபடுவதற்கு அல்லது வந்தனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களைப் போல் ஆகும்பொருட்டு, தெய்வீகக் குணங்களைக் கிரகித்துக் கொள்ளுங்கள்.

2. உலக விதையானவரான தந்தையையும், அவரது உயிருள்ள படைப்பையும் புரிந்து கொண்டு, ஞானம் நிறைந்தவர்கள் ஆகுங்கள். வேறெந்த ஞானமும் இந்த ஞானத்தை விடவும் மகத்தானதல்ல எனும் போதையைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
'ஒரேயொரு தந்தைக்கு அன்றி வேறு எவருக்கும் சொந்தமில்லை' என்ற பாடத்தின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் ஸ்திதியை நிலையானதாகவும் ஸ்திரமாகவும் ஆக்குவதனால் மேன்மையானதோர் ஆத்மா ஆகுவீர்களாக.

நீங்கள் சதா 'ஒரேயொரு தந்தைக்கு அன்றி வேறு எவருக்கும் சொந்தமில்லை' என்ற பாடத்தை எப்பொழுதும் நினைவு செய்தால், உங்கள் ஸ்திதி நிலையாகவும் ஸ்திரமாகவும் ஆகும். ஏனெனில், நீங்கள் இந்த ஞானம் முழுவதையும் பெற்றிருக்கிறீர்கள். பல கருத்துக்கள் உள்ளன. ஆனால், யாராவது ஒருவர் உங்களைக் கீழே இழுக்கும் போது, எல்லா கருத்துக்களையும் கொண்டிருப்பதுடன், புள்ளி வடிவில் ஸ்திரமாக இருப்பதும் ஓர் அற்புதமே ஆகும். சிலவேளைகளில் சூழ்நிலைகள் உங்களை கீழே தள்ளுகின்றன, சிலவேளைகளில் மனிதர்கள் உங்களைக் கீழே தள்ளுகிறார்கள், சிலவேளைகளில் பொருட்கள் உங்களைக் கீழே தள்ளுகின்றன, சிலவேளைகளில் சூழல் உங்களைக் கீழே தள்ளுகிறது. இது எவ்வாறாயினும் நடக்கும், ஆனால் இவ்வாறான அனைத்து விரிவாக்கமும் ஒரு விநாடியில் முடியும் போது மாத்திரமே, உங்களால் நிலையான, ஸ்திரமான ஸ்திதியை கொண்டிருக்க முடியும். அப்பொழுது நீங்கள் மேன்மையானதோர் ஆத்மா என்ற ஆசீர்வாதங்களை பெற்றவர் எனக் கூறப்படுவீர்கள்.

சுலோகம்:
இந்த ஞான சக்தியைக் கிரகிக்கும் போது, தடைகள் உங்களைத் தாக்கினாலும் அவை தோற்கடிக்கப்படும்.

அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து, ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

இப்பொழுது, நீங்கள் அனைவருமே விடுதலை அடைந்து, மாஸ்டர் முக்தியை அருள்பவர்கள் ஆக வேண்டும். அப்பொழுதே ஆத்மாக்கள் அனைவரும், பக்தர்களும், இயற்கையின் பஞ்ச தத்துவங்களும் விடுதலை அடைகின்றன. தந்தை பிரம்மா இப்பொழுது இந்த ஒரு விடயத்தை இட்டு திகதிக்கான உணர்வைக் கொண்டுள்ளார்: எப்பொழுது எனது ஒவ்வொரு குழந்தையும் ஜீவன்முக்தி அடைவார்? இறுதியிலேயே நீங்கள் ஜீவன்முக்தி அடைவீர்கள் என நினைக்காதீர்கள், இல்லை. இப்பொழுது ஜீவன்முக்தி ஸ்திதியை நீங்கள் நீண்டகாலம் அனுபவம் செய்தாலே, நீண்டகாலம் ஜீவன்முக்திக்கான உரிமை உடையவர்கள் மற்றும் இராச்சிய பாக்கியத்தைக் கொண்டிருப்பவர்கள் ஆகுவதற்கு அது உதவும்.