05.02.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் நிச்சயமாக உங்கள் சரீரங்களாகிய ஆடையை இங்கேயே விட்டுவிட வேண்டும். ஆகவே, அதனுடனான உங்கள் பற்றை முடித்துவிடுங்கள். உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு செய்யாதீர்கள்.

கேள்வி:
யோக சக்தியைக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய விடயங்கள் எவை?

பதில்:
அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் சிறிதளவேனும் குழப்பம் அடைய மாட்டார்கள். அவர்கள் எவரிலும்; பற்றைக் கொண்டிருப்பதில்லை. உதாரணமாக, இன்று ஒருவர் சரீரத்தை நீக்;கினாலும் அவர்கள் துன்பப்பட மாட்டார்கள். ஏனெனில் அந்த ஆத்மா நாடகத்தில் அந்தளவு பாகத்தையே கொண்டிருந்தார் என்பதும், ஆத்மாக்கள் தங்களின் சரீரங்களைக் கைவிட்டு இன்னுமொன்றை எடுக்கின்றார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

ஓம் சாந்தி.
இந்த ஞானம் மிகவும் மறைமுகமானது. நீங்கள் “நமஸ்தே” என்று கூறவும் வேண்டியதில்லை. உலகிலுள்ள மக்கள் ஒருவரையொருவர் வாழ்த்தும்பொழுது “நமஸ்தே” அல்லது ‘இராம்-இராம்’ என்று கூறுகிறார்கள். இது ஒரு குடும்பம் என்பதால், அவ்விடயங்கள் எதுவும் இங்கு இடம்பெற முடியாது. ஒரு குடும்பத்தில் “நமஸ்தே” அல்லது “காலை வணக்கம்” என்று கூறுவது சரியல்ல. ஒரு வீட்டில், ஒருவர் உண்டு, அலுவலகத்திற்குச் சென்று, திரும்பி வருகிறார். இது எல்லா வேளையிலும் தொடர்கிறது. “நமஸ்தே” என்று கூறத் தேவையில்லை. “காலை வணக்கம்” என்று கூறும் நாகரிகம் ஐரோப்பியரால் ஆரம்பிக்கப்பட்டது. முன்னர் அவ்வாறு எதுவும் இருக்கவில்லை. பக்தி மார்க்க ஒன்றுகூடல்களில், மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது, அவர்கள் “நமஸ்தே” என்று கூறி, ஒவ்வொருவரின் பாதங்களிலும் வீழ்ந்து வணங்குகிறார்கள். ஒருவரின் பாதங்களை வணங்கும் இச்சம்பிரதாயம் பணிவுக்காகவே கற்பிக்கப்படுகிறது. இங்கு, குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக வேண்டும். ஓர் ஆத்மாவானவர் ஓர் ஆத்மாவுக்கு என்ன செய்வார்? எனினும், இது கூறப்பட வேண்டும். உதாரணமாக, நீங்கள் பாபாவுக்கு “நமஸ்தே” என்று கூறுவீர்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: பிரம்மாவின் சாதாரண சரீரத்தினூடாக நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். நான் அவரினூடாக ஸ்தாபனையை மேற்கொள்கிறேன். எவ்வாறு? தந்தை நேரடியாக உங்கள் முன்னிலையில் வரும்பொழுது மாத்திரமே, அவரால் விளங்கப்படுத்த முடியும். இல்லையேல், எவ்வாறு எவராலும் புரிந்துகொள்ள முடியும்? இங்கு தந்தை உங்கள் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார், குழந்தைகளாகிய நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். இருவருக்கும் நீங்கள் “நமஸ்தே” என்று கூற வேண்டும் - பாப்தாதா நமஸ்தே. இதை மற்றவர்கள் கேட்க நேரிட்டால், அவர்கள் குழப்பமடைந்து விடுவதுடன், நீங்கள் ‘பாப்தாதா’ என்று கூறும்பொழுது, நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்பார்கள். பல மனிதர்களுக்கு இரண்டு பெயர்கள் உண்டு. உதாரணமாக, இலக்ஷ்மி-நாராயணன், இராதாகிருஷ்ணர் என்ற பெயர்களும் உண்டு. அது ஆணும் பெண்ணும் இணைந்திருப்பது போன்றதாகும். இப்பொழுது, இங்குள்ள இவர் பாப்தாதா ஆவார். குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். தந்தை நிச்சயமாக மகத்தானவர். அவர்களுக்கு இரண்டு பெயர்கள் இருப்பினும், அவர் ஒரு நபரே ஆவார். ஆகவே, ஏன் அவர்கள் இரு பெயர்களை வைத்துள்ளார்கள்? அப்பெயர்கள் தவறானவை என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். வேறு எவரும் பாபாவை இனங்கண்டு கொள்ள முடியாது. ‘நமஸ்தே பாப்தாதா’ என்று நீங்கள் கூறுகிறீர்கள். பௌதீக, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு நமஸ்தே என்று தந்தை பதிலளிப்பார். அத்தகையதொரு நீண்ட வாழ்த்து பொருத்தமாக இல்லாவிட்டாலும் வார்த்தைகள் சரியானவையே ஆகும். நீங்கள் அனைவரும் பௌதீகக் குழந்தைகளும், ஆன்மீகக் குழந்தைகளும் ஆவீர்கள். சிவபாபாவே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். பின்னர் பிரஜாபிதாவும் தேவைப்படுகிறார். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் சகோதரர்களும் சகோதரிகளும் ஆவார்கள். இது ஓர் இல்லறப் பாதை ஆகும். நீங்கள் அனைவரும் பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் ஆவீர்கள். பிரம்மாகுமாரர்களும் குமாரிகளுமாகிய உங்கள் காலத்திலேயே பிரஜாபிதா பிரம்மாவின் காலமும் இருந்துள்ளது என நிரூபிக்கப்படுகின்றது. இது குருட்டு நம்பிக்கைக்குரிய ஒரு விடயமல்ல. தந்தையிடமிருந்தே பிரம்மா குமாரர்களும் குமாரிகளும் ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார்கள் என்று அவர்களிடம் கூறுங்கள். அவர்கள் அதைப் பிரம்மாவிடமிருந்து பெறுவதில்லை. பிரம்மாவும் சிவபாபாவின் குழந்தையே ஆவார். சூட்சும வதனத்தில் வசிப்பவர்களாகிய, பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஒரு படைப்பு ஆவார்கள். அவர்களைப் படைப்பவர் சிவன். சிவனைப் படைப்பவர் யார் என்று எவரும் கேட்க முடியாது. எவரும் சிவனைப் படைப்பவராக இருக்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் படைப்பின் ஒரு பகுதி ஆவர். அவர்களிலும் பார்க்க அதி மேலானவர், சிவன். அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையும் ஆவார். இப்பொழுது, அவர் படைப்பவராக இருந்தால், அவர் எப்பொழுது படைத்தார்? எனும் கேள்வி எழுகிறது. இல்லை! இப்படைப்பு அநாதியானதாகும். பல ஆத்மாக்களை அவர் எப்பொழுது படைத்தார்? எனும் கேள்வி எழ முடியாது. இந்த அநாதியான நாடகம் தொடர்கிறது. அது முடிவற்றது. அது ஒருபொழுதும் ஒரு முடிவுக்கு வருவதில்லை. இவ்விடயங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்களில் வரிசைக்கிரமமாக உள்ளன. இது மிகவும் இலகுவானதாகும். ஒருவர் வாழ்ந்தாலென்ன அல்லது மரணித்தாலென்ன, ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரிடமும் உங்களுக்குப் பற்று இருக்கக்கூடாது. ஒரு பாடல் உள்ளது: உங்கள் தாய் மரணித்தாலும், அல்வா உண்ணுங்கள். உதாரணமாக, ஒருவர் இறந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. நாடகத்துக்கேற்ப, அந்நேரத்திலேயே அவர் செல்ல வேண்டும். அதைப் பற்றி எவராலும் என்ன செய்ய முடியும்? துயரப்பட வேண்டிய அவசியமில்லை. இது யோக சக்தியின் ஸ்திதி ஆகும். நீங்கள் சிறிதளவேனும் குழப்பம் அடையக்கூடாது என்று நியதி கூறுகிறது. ஒவ்வொருவரும் நடிகரே. ஒவ்வொருவரும் தங்களின் சொந்தப் பாகத்தைத் தொடர்ந்தும் நடிக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். அவர்கள் தந்தையிடம் கூறுகிறார்கள்: ஓ பரமாத்மாவாகிய, பரம தந்தையே, வந்து எங்களை அழைத்துச் செல்லுங்கள்! இச்சரீரங்கள் அனைத்தையும் அழித்து, ஆத்மாக்கள் அனைவரையும் அவருடன் மீண்டும் அழைத்துச் செல்வது ஒரு மிகப் பெரிய தொழிலாகும். இங்கு, ஒருவர் மரணித்தால், மக்கள் 12 மாதங்களுக்குத் தொடர்ந்தும் அழுகிறார்கள். தந்தை ஆத்மாக்கள் பலரையும் தன்னுடன் மீண்டும் அழைத்துச் செல்வார். அனைவரும் சரீரத்தை இங்கேயே விட்டுச் செல்ல வேண்டும். மகாபாரத யுத்தம் ஆரம்பமாகும் பொழுது, நுளம்புக் கூட்டங்களைப் போன்று அவர்கள் தொடர்ந்தும் செல்வார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இயற்கை அனர்த்தங்களும் வரவுள்ளன. இந்த முழு உலகமும் மாற்றப்பட வேண்டும். இங்கிலாந்து, ரஷ்யா போன்றவற்றின் சனத்தொகை இப்பொழுது எவ்வளவு பெருகியுள்ளது என்று பாருங்கள்! அவர்கள் அனைவரும் சத்தியயுகத்தில் இருந்தார்களா? எங்கள் இராச்சியத்தில் அவர்களில் எவரும் இருக்கவில்லை என்பது உலகில் எவரின் புத்தியிலும் உட்புகவில்லை. அங்கு, ஒரு தர்மமும் ஓர் இராச்சியமுமே இருந்தன. இதைப் புத்தியில் மிக நன்றாக வைத்திருப்பதில், நீங்களும் வரிசைக்கிரமமானவர்களே. இதை நீங்கள் கிரகித்தால், உங்கள் போதை எப்பொழுதும் உயர்ந்திருக்கும். அத்தகைய உயர்ந்த போதையைச் சிலர் மாத்திரமே, பெருஞ் சிரமத்துடன் பேணுகிறார்கள். ஒருவரின் நினைவை நண்பர்கள், உறவினர்கள், ஏனையோரிடம் இருந்து அகற்றி, எல்லையற்ற சந்தோஷத்தில் ஸ்திரமாக்குவது ஒரு மகத்தான அற்புதமே. ஆம், இதுவும் இறுதியில் நிகழும். இறுதியிலேயே கர்மாதீத ஸ்திதி அடையப்படும். சரீர உணர்வும் துண்டிக்கப்படும். அவ்வளவுதான்! இப்பொழுது நாங்கள் வீட்டுக்குச் செல்கின்றோம். இது பொதுவானதாகி விட்டது. ஒரு நாடகத்தில் நடிகர்கள் தங்கள் பாகங்களை நடித்து முடித்ததும் அவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். நீங்கள் இங்கேயே சரீரமாகிய ஆடையை விட்டுவிட வேண்டும். நீங்கள் அந்த ஆடைகளை இங்கேயே ஏற்றுக் கொண்டு, நீங்கள் இங்கேயே அவற்றை விட்டுவிட வேண்டும். இப்புதிய விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளன. அது வேறு எவரது புத்தியிலும் இல்லை. அல்பாவும் பீற்றாவும். அல்பா அனைவரிலும் அதி மேலானவர்; கூறப்பட்டுள்ளது: ஸ்தாபனை பிரம்மாவினூடாகவும், விநாசம் சங்கரரினூடாகவும், பராமரிப்பு விஷ்ணுவின் ஊடாகவும் நடைபெறுகிறது. நல்லது, ஆகவே, சிவனின் பணி என்ன? அதிமேலான சிவபாபாவை எவரும் அறியார். அவர் சர்வவியாபி எனவும், அவைகள் அனைத்தும் அவரின் வடிவங்கள் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். உலகிலுள்ள அனைவரின் புத்தியிலும் இது உறுதியாகி விட்டது. இதனாலேயே அவர்கள் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். தந்தை கூறுகிறார்: முழு உலகும் சீரழிந்துள்ளது. பின்னர், நானே வந்து அனைவருக்கும் சற்கதியை வழங்குகிறேன். அவர் சர்வவியாபியாக இருந்திருப்பின், அனைவரும் கடவுள் என்றும், கடவுள் மாத்திரமே இருக்கிறார் என்றும் ஆகிவிடும். ஒரு புறத்தில், அனைவரும் சகோதரர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், பின்னர் மறுபுறத்தில் அனைவரும் தந்தையே என்றும் கூறுகிறார்கள். அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பாபா கூறுகிறார்: இந்த தாதாவையேனும், மம்மாவையேனும் நினைவு செய்யக் கூடாது. தந்தை கூறுகிறார்: மம்மாவோ அல்லது பாபாவோ, புகழப் படக்கூடாது. சிவபாபா இல்லாவிடின், பிரம்மா என்ன செய்வார்? இவரை நினைவு செய்வதால், என்ன நிகழும்? ஆம், நீங்கள் இவரினூடாகத் தந்தையிடமிருந்து ஆஸ்தியைக் கோரிக் கொள்கிறீர்கள். இவரிடமிருந்து அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இவரும் அந்த ஒரேயொருவரிடம் இருந்தே ஆஸ்தியைக் கோருகிறார், எனவே நீங்கள் அந்த ஒரேயொருவரையே நினைவு செய்ய வேண்டும். இவர் இடையில் இருக்கும் ஒரு முகவரே ஆவார். ஒரு தம்பதிக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதும், அவர்கள் ஒருவரையொருவர் நினைவு செய்கிறார்கள். திருமணத்தை ஏற்பாடு செய்பவர், இடையிலுள்ள முகவரே ஆவார். அவருடனான உங்கள் நிச்சயதார்த்தத்தைத் தந்தை இவரினூடாக ஏற்பாடு செய்துள்ளார். இதனாலேயே புகழ் உள்ளது: நான் சற்குருவை முகவரின் ஊடாகக் கண்டு கொண்டேன். சற்குரு முகவர் அல்லர், சற்குரு அசரீரியானவர். அவர்கள் கூறலாம்: குரு பிரம்மா, குரு விஷ்ணு, ஆனால் அவர்கள் குருமார்கள் அல்லர்! ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற சற்குரு ஆவார். தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். பின்னர் நீங்கள் ஏனையோருக்குப் பாதையைக் காண்பித்து, அவர்களுக்குக் கூறுங்கள்: பார்த்தும் பார்க்காதீர்கள்! உங்கள் புத்தியை சிவபாபாவுடன் இணைத்துக் கொள்ளுங்கள். அக்கண்கள் மூலம் நீங்கள் பார்ப்பவை அனைத்தும் ஒரு மயான பூமியாகப் போகின்றது. ஒரேயொரு தந்தையையே நினைவு செய்யுங்கள், இவரை அல்ல. புத்தி கூறுகிறது: நான் இவரிடமிருந்து ஆஸ்தியைப் பெற முடியாது. ஆஸ்தி தந்தையிடமிருந்தே பெறப்படும். நீங்கள் தந்தையிடம் செல்ல வேண்டும். ஒரு மாணவர் ஒரு மாணவரை நினைவுசெய்ய மாட்டார். ஒரு மாணவர் நிச்சயமாக ஆசிரியரையே நினைவு செய்வார். பாடசாலையில் திறமைசாலிக் குழந்தைகள் ஏனையோரை ஈடேற்ற முயற்சி செய்வார்கள். தந்தை கூறுகின்றார்: ஒருவரையொருவர் ஈடேற்ற முயற்சி செய்யுங்கள்! எவ்வாறாயினும், அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர்கள் முயற்சி செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சிறிதளவுடன் திருப்தி அடைகிறார்கள். நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்த வேண்டும். பலர் கண்காட்சிகளுக்கு வருகிறார்கள். பலருக்கும் விளங்கப்படுத்துவதால், பெருமளவு முன்னேற்றம் இருக்க முடியும். அழைப்பிதழ்களை அனுப்பி, அவர்களை அழையுங்கள். பின்னர் பல பிரமுகர்களும், விவேகிகளும் வருவார்கள். பல்வகை மக்களும் ஓர் அழைப்பிதழ் இல்லாமலே வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் தவறான விடயங்களைக் கூறுகிறார்கள்! இராஜரீகமான மக்களின் நடத்தையும் இராஜரீகமாகவே இருக்கும். இராஜரீகமானவர்கள் ராஜரீகத்துடன் பிரவேசிக்கின்றார்கள். அவர்களின் நடத்தையிலும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. ஏனையோர்கள் நடந்துகொள்ளும் விதத்திலும், மற்றவர்களுடன் பேசும் விதத்திலும் பண்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள். அனைத்து வகையினரும் ஒன்றுகூடல்களில் (மேளாக்கள்) வருகிறார்கள். எவருக்கும் அனுமதி மறுக்கப்படுவதில்லை. ஆகவே, மக்கள் கண்காட்சிகளுக்கு வருவதற்கென ஓர் அழைப்பிதழை நீங்கள் அவர்களுக்கு அனுப்பினால், பல சிறந்த, ராஜரீகமானவர்களும் வருவார்கள். பின்னர், அவர்கள் சென்று ஏனையோருக்கும் கூறுவார்கள். சில வேளைகளில், நீங்கள் பெண்களுக்காக மாத்திரம் ஒரு நிகழ்ச்சியை நடத்துங்கள். அதில் பெண்கள் மாத்திரம் வந்து பார்க்க முடியும். ஏனெனில் பல இடங்களில் பல பெண்கள் திரைக்குப் பின்னாலேயே இருக்கிறார்கள். ஆகவே, பெண்களுக்காக மாத்திரம் ஒரு நிகழ்ச்சியை நடத்துங்கள். ஆண்கள் உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. பாபா உங்களுக்குக் கூறியுள்ளார்: அனைத்திற்கும் முதலில், சிவபாபா அசரீரியானவர் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். சிவபாபா, பிரஜாபிதா பிரம்மா இருவருமே பாபாக்கள். இருவரும் ஒன்றாக முடியாது. ஆகவே நீங்கள் இரண்டு பாபாக்களிடமிருந்தும் ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. பாட்டனாரிடமிருந்து அல்லது தந்தையிடமிருந்தே நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுவீர்கள். ஒருவருக்குப் பாட்டனாரின் சொத்துக்கு ஓர் உரிமை உள்ளது. ஒரு குழந்தை எவ்வளவுக்குத் தகுதியற்றவராக இருப்பினும், அவர் தன்னுடைய பாட்டனாரின் ஆஸ்தியைப் பெறுவார். இங்கும் அந்தச் சட்டமே உள்ளது. சிலர் அப்பணத்தைப் பெறும்பொழுது, அவர்கள் அதை ஒரு வருடத்துக்குள்ளேயே வீண்செலவு செய்வார்கள் என்பதும் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் அது கையளிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் சட்டம் ஆகும். அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது. எவ்வாறாயினும், பாபா, இதில் அனுபவம் வாய்ந்தவர். 12 மாதங்களில் 10 மில்லியன் ரூபாய்களை வீண்செலவு செய்த ஓர் அரசனின் குழந்தையும் இருந்தார். அதைப் போன்று சிலர் உள்ளார்கள். அவர் அத்தகையவர்களைப் பார்த்துள்ளார் என்று சிவபாபா கூற மாட்டார். இவர் (பிரம்மா) கூறுவார்: அத்தகைய பல உதாரணங்களை நான் பார்த்துள்ளேன். இவ்வுலகம் மிகவும் அழுக்கானது. இது ஒரு பழைய உலகம், பழைய வீடு ஆகும். வழக்கமாக ஒரு பழைய வீடு அழிக்கப்பட வேண்டும். இலக்ஷ்மி நாராயணனின் இராஜ மாளிகைள் எவ்வளவு முதற்தரமானவை என்று பாருங்கள்! இப்பொழுது உங்களுக்குத் தந்தையால் புரிந்துணர்வு கொடுக்கப்படுவதுடன் நீங்கள் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுகிறீர்கள். இதுவே சத்திய நாராயணனின் கதை ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் இதை விளங்கிக் கொள்கிறீர்கள். உங்கள் மத்தியிலும், இன்னமும் சிலர் முழுமையான மலர்கள் ஆகவில்லை. நீங்கள் இதில் மிகவும் சிறந்த இராஜரீகத்தைக் கொண்டிருப்பது அவசியம். நாளுக்கு நாள், நீங்கள் தொடர்ந்தும் முன்னேறுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்தும் மலர்கள் ஆகுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அன்புடன் கூறுகிறீர்கள்: பாப்தாதா. உங்கள் மொழி புதியது. அது ஏனைய மனிதர்களால் விளங்கிக் கொள்ள முடியாதது. உதாரணமாக, பாபா எங்காவது செல்லும்பொழுது, குழந்தைகள் ‘பாப்தாதா, நமஸ்தே’ என்று கூறுகையில், பாபா ‘ஆன்மீக, பௌதீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு நமஸ்தே’ என்று பதில் அளிக்கிறார். அவர் அவ்விதமாகப் பதிலளிக்க வேண்டும். ஏனையோர்கள் இதைக் கேட்டிருப்பார்களாயின், இது புதியதொன்று என்று அவர்கள் கூறுவார்கள். எவ்வாறு பாப்தாதாவை ஒருவர் என்று கூற முடியும்? பாபா, தாதா இருவரும் எப்பொழுதாவது ஒருவராக இருக்க முடியுமா? ஒவ்வொருவருடைய பெயரும் வெவ்வேறானவை. நீங்களே சிவபாபா, பிரம்மாதாதா இருவரின் குழந்தைகள். சிவபாபா இவரில் அமர்ந்துள்ளார் என்பதும் நீங்கள் பாப்தாதாவின் குழந்தைகள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உங்கள் புத்தி இந்தளவையேனும் நினைவுசெய்தால், உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். நீங்கள் நாடகம் குறித்து ஸ்திரமாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் சரீரத்தை விட்டு நீங்கும் பொழுது, அவர் சென்று இன்னுமொரு பாகத்தை நடிப்பார். ஒவ்வோர் ஆத்மாவும் ஓர் அநாதியான பாகத்தைப் பெறுகிறார். இதைப் பற்றிய எந்த எண்ணங்களையும் கொண்டிருக்கத் தேவையில்லை. அவர் சென்று இன்னொரு பாகத்தை நடிக்க வேண்டும். அவரைத் திரும்பவும் அழைக்க முடியாது. இது ஒரு நாடகம் ஆகும். எதைப் பற்றியும் அழத் தேவையில்லை. அத்தகைய ஸ்திதியை உடையவர்கள் மாத்திரம் சென்று பற்றற்ற அரசர்கள் (நிர்மோகி இராஜா) ஆகுவார்கள். சத்தியயுகத்தில் அனைவரும் பற்றின்றி உள்ளார்கள். இங்கு, ஒருவர் மரணிக்கும்பொழுது, அவர்கள் அதிகளவு அழுகிறார்கள். நீங்கள் தந்தையைக் கண்டுகொண்டால், அழ வேண்டிய அவசியமில்லை. அத்தகையதொரு சிறந்த பாதையை பாபா உங்களுக்குக் காண்பிக்கிறார். குமாரிகளுக்கு, அது மிகவும் நல்லது. உங்கள் தந்தை பணத்தை வீணாகச் செலவழிப்பார், நீங்கள் நரகத்தில் வீழ்வீர்கள். இதற்குப் பதிலாக, அவருக்குக் கூறுங்கள்: அப்பணத்தின் மூலம் நான் ஓர் ஆன்மீகப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த வைத்தியசாலையைத் திறப்பேன். நான் பலருக்கும் நன்மையைக் கொடுத்தால், அது உங்களுக்கும் எங்களுக்கும் புண்ணியமாகும். குழந்தைகளே, நீங்களே பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்கு, சரீரம், மனம், செல்வம், அனைத்தையும் செலவிடுவதற்கு உற்சாகமாக இருக்க வேண்டும். அதிகளவு உற்சாகத்துடன் இருக்க வேண்டும்! நீங்கள் அதைக் கொடுக்க விரும்பினால், கொடுங்கள்! விரும்பாவிட்டால், கொடுக்க வேண்டாம்! நீங்கள் உங்களுக்கும் ஏனைய பலருக்கும் நன்மையைக் கொண்டு வர விரும்பவில்லையா? இந்தளவுக்குப் போதை இருக்க வேண்டும். விசேடமாகக் குமாரிகள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் செயற்பாடும் நடத்தையும் மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும். நற் பண்புகளுடன் பேசுங்கள். பணிவு என்னும் நற்குணத்தைக் கிரகித்துக் கொள்ளுங்கள்.

2. அக்கண்கள் மூலம் நீங்கள் பார்க்கும் அனைத்தும் மயான பூமியாக மாறப் போகின்றது. ஆகவே, பார்க்கும் பொழுது, பார்க்காதீர்கள். சரீரதாரியை அன்றி சிவபாபாவையே நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பொம்மை விளையாட்டுக்களை முடித்து, இந்த ஞானத்தில் மாஸ்ரர் கடல் ஆகுவதன் மூலம் விழிப்புணர்வின் சொரூபமாகவும் அதனால் சக்தி சொரூபமாகவும் ஆகுவீர்களாக.

பக்தி மார்க்கத்தில், அவர்கள் விக்கிரகங்களைச் செய்து, அவற்றை வழிபட்டுப் பின்னர் நீரில் மூழ்கடிப்பார்கள். அதைப் பொம்மை வழிபாடு என்று நீங்கள் அழைக்கிறீர்கள். அதேபோல், சாரமே இல்லாத, பொறாமை, கற்பனை, வலிமையைப் பிரயோகித்தல் போன்ற உயிரற்ற சூழ்நிலைகள் உங்களுக்கு முன்னால் வருகின்றன. நீங்கள் அவற்றை விரிவாக்குகிறீர்கள். பின்னர் நீங்களே அவற்றை உண்மை எனக் கருதுவதுடன் மற்றவர்களும் அதை உண்மை எனக் கருதச் செய்கிறீர்கள். எனவே, அது அந்தச் சூழ்நிலைகளுக்கு உயிர் கொடுப்பதைப் போன்றதாகும். ஆகவே, ஞானக்கடலான தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம், உங்களால் கடந்ததைக் கடந்தது ஆக்கிவிட்டு, அதை சுய முன்னேற்றம் என்ற அலைகளில் மூழ்கடிக்க முடியும். எவ்வாறாயினும், அதிலே நேரம் வீணாக்கப்படுகிறது. அதனால், முன்கூட்டியே, இந்த ஞானத்தின் மாஸ்ரர் கடலாகி, விழிப்புணர்வு மற்றும் சக்தியின் ஆசீர்வாதங்களுடன் அந்தப் பொம்மை விளையாட்டுக்களை முடித்துவிடுங்கள்.

சுலோகம்:
தேவைப்படும் நேரத்தில் ஒத்துழைப்பவர்கள், ஒன்றுக்காகப் பலமில்லியன் மடங்கு பலனைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஏகாந்தத்தில் அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.

சகல மதங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தூய்மையினதும் ஒற்றுமையினதும் அனுபவத்தைக் கொடுங்கள். அவர்களிடம் இவை இல்லாததாலேயே, அந்த இரண்டு அதிகாரங்களும் பலவீனமாக உள்ளன. மதத்தின் அதிகாரத்தை இதில் இருந்து விடுபடச் செய்வதற்கான விசேடமான வழிமுறை, தூய்மையை நிரூபிப்பதே ஆகும். அத்துடன் அரசியல் அதிகாரத்திற்கு ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும்.