05.04.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பொழுது பிறரின் பெயரிலும் வடிவிலும் சிக்கிக் கொண்டிருத்தல் என்ற நோயிலிருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். எந்தப் பிழையான கணக்கையும் உருவாக்காதீர்கள். ஒரேயொரு தந்தையின் நினைவில் மாத்திரம் நிலைத்திருங்கள்.

கேள்வி:
எந்தப் பிரதான முயற்சியைச் செய்வதனால், பாக்கியசாலிக் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் பாக்கியத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள்?

பதில்:
பாக்கியசாலிக் குழந்தைகளாகிய நீங்கள், அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பதற்கான முயற்சியைச் செய்கின்றீர்கள். நீங்கள் ஒருபொழுதும் உங்கள் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் செயல்களாலும் எவருக்கும் துன்பத்தை விளைவிப்பதில்லை. தொடர்ந்தும் அமைதியாகவும் குளிர்மையாகவும் இருந்தால் நீங்கள் தொடர்ந்தும் உங்கள் பாக்கியத்தை உருவாக்குவீர்கள். இது உங்களது மாணவ வாழ்க்கை. நீங்கள் இனியும் மூச்சுத் திணறாது, அளவற்ற சந்தோஷத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

பாடல்:
தாயும் நீங்களே, தந்தையும் நீங்களே.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் முரளியைச் செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் எங்கே முரளியைப் பெற்றாலும், புகழப்படுபவர் ஒரு சரீரதாரியல்ல, அந்தப் புகழுக்கு உரியவர் அசரீரியானவரே என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அசரீரியானவர் இப்பொழுது ஒரு சரீரதாரியின் மூலம் நேரடியாக முரளியைப் பேசுகின்றார். ஆத்மாவாகிய நான் இப்பொழுது அவரைப் பார்க்கின்றேன் என்று உங்களாலும் கூற முடியும். ஓர் ஆத்மா மிகவும் சூட்சுமமானவர். ஓர் ஆத்மாவை இக் கண்களால் பார்க்க முடியாது. ஆத்மாக்கள் சூட்சுமமானவர்கள் என்பதைப் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொள்கின்றார்கள், ஆனால் ஆத்மா என்றால் என்ன என்பதன் முழுமையான புரிந்துணர்வு அவர்களின் புத்தியில் இல்லை. உலகில் உள்ள அனைவருமே கடவுளை நினைவு செய்கின்றார்கள். ஆனால் அவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. உங்களுக்கும் இது தெரியாமல்தான் இருந்தது. அவர் ஒரு லௌகீக ஆசிரியரோ அல்லது உறவினரோ அல்ல என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது உள்ளது. உலகில் உள்ள ஏனைய மனிதர்களைப் போன்றே இந்த தாதாவும் ஒரு மனிதர் ஆவார். ‘நீங்களே தாயும் தந்தையும் ஆவீர்கள்’ என்று நீங்கள் புகழ் பாடி, அவர் மேலே இருக்கின்றார் என்று நம்பினீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது இவருக்குள் பிரவேசித்துள்ளேன். நீங்கள் நினைவு செய்த அவரேதான் நான், இப்பொழுது இவருக்குள் உள்ளேன். முன்னர் நீங்கள் அதிகளவு அன்புடன் புகழ் பாடிய பொழுதிலும், உங்களுக்குப் பயமும் இருந்தது. பாபா இப்பொழுது இச் சரீரத்திற்குள் பிரவேசித்துள்ளார். அசரீரியானவர் இந்தச் சரீரதாரியினுள் பிரவேசித்துள்ளார். அவர் இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் எதனைக் கற்பிக்கின்றார் என்பது உலகில் உள்ள எவருக்கும் தெரியாது. ஸ்ரீகிருஷ்ணரே கீதையின் கடவுள் என்றும், அவரே இராஜயோகம் கற்பிக்கின்றார் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அச்சா, அவ்வாறாயின் தந்தை என்ன செய்கின்றார்? ‘நீங்களே தாயும் தந்தையும் ஆவீர்கள்’ என நீங்கள் பாடிய பொழுதிலும், அவரிடமிருந்து நீங்கள் எதைப் பெற்றீர்கள், அதனை எப்பொழுது பெற்றீர்கள் என்றும் அறியாமலே இருந்தீர்கள். கீதை வாசிக்கப்படுவதைச் செவிமடுக்கும் பொழுது, நீங்கள் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்து இராஜயோகத்தைக் கற்றீர்கள் என்று நீங்கள் நம்பியதுடன், அவர் மீண்டும் எப்பொழுது வந்து அதனைக் கற்பிப்பார் என்றும் காத்திருந்தீர்கள். இந்த நேரத்தில் அதே மகாபாரத யுத்தமே இடம்பெறும் என்பது இப்பொழுது உங்களுக்குப் புரிகின்றது. எனவே இது ஸ்ரீகிருஷ்ணரிற்குரிய காலமாகவும் இருக்க வேண்டும். நிச்சயமாக, அதே வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெற வேண்டும். கீதைக்கான கடவுள் இருக்க வேண்டும் என்பதை மக்கள் நாளடைவில் புரிந்து கொள்வார்கள். மகாபாரத யுத்தம் நிச்சயமாகத் தெரிகின்றது. இந்த உலகம் நிச்சயமாக அழிக்கப்படும். பாண்டவர்கள் மலைக்குச் சென்றார்கள் என்று காட்டப்பட்டுள்ளது. எனவே அழிவு நிச்சயமாக முன்னாலேயே உள்ளது என்பது மக்களின் புத்தியில் புக வேண்டும். எவ்வாறாயினும், ஸ்ரீகிருஷ்ணர் எங்கே இருக்கிறார்? கீதையின் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் அல்ல, சிவனே என்பதை அவர்கள் உங்கள் மூலமாகச் செவிமடுக்கும் வரை, அவர்கள் அவரைத் தேடிக் கொண்டே இருப்பார்கள். இந்த விடயம் உங்கள் புத்தியில் மிகவும் உறுதியாக உள்ளது. அதனை உங்களால் என்றுமே மறக்க முடியாது. கீதையின் கடவுள் சிவனே அன்றி, ஸ்ரீகிருஷ்ணர் அல்ல என்பதை உங்களால் எவருக்குமே விளங்கப்படுத்த முடியும். உங்களைத் தவிர உலகிலுள்ள வேறு எவருமே இவ்வாறு கூற மாட்டார்கள். கீதையின் கடவுள் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்ததால், அவர் நிச்சயமாக மனிதரிலிருந்து நாராயணனை உருவாக்கியிருக்க வேண்டும். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும், அவர் உங்களை மனிதரிலிருந்து நாராயணன் ஆக்குகின்றார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். சுவர்க்கத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமே இருந்தது. அந்தச் சுவர்க்கம் இப்பொழுது இல்லை. ஆகையால் நாராயணனோ அல்லது தேவர்களோ இப்பொழுது இல்லை. படங்களில் இருந்து அவர்கள் முன்னர் இருந்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அவர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். 5000 வருடங்களின் முன்னர் அவர்களின் இராச்சியம் இருந்தது என்பதை நீங்கள் மிகத்தெளிவாக அறிந்துள்ளீர்கள். இப்பொழுது இது முடியும் காலம், யுத்தம் உங்கள் முன்னிலையில் உள்ளது. தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் உங்கள் நிலையங்களில் கற்று, பிறருக்கும் கற்பிக்கின்றீர்கள். பிறருக்குக் கற்பிக்கும் வழிமுறை மிகவும் நல்லது. படங்களைப் பயன்படுத்தி அனைத்தையும் மிகத்தெளிவாகப் விளங்கப்படுத்த முடியும். பிரதானமான விடயம்: கீதையின் கடவுள் யார்? அவர் சிவனா அல்லது ஸ்ரீகிருஷ்ணரா? பெருமளவு வேறுபாடு உள்ளது. சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், மீண்டும் ஒருமுறை ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிப்பவரும் சிவனா அல்லது ஸ்ரீகிருஷ்ணரா? இறுதியில், இந்த மூன்று விடயங்களை வைத்து எடுக்கப்படும் தீர்மானமே பிரதானமான விடயமாகும். பாபா இவற்றை வலியுறுத்துகின்றார். மக்கள் தமது அபிப்பிராயங்களை எழுதி, இது மிகவும் நல்ல விடயம் என்று கூறிய பொழுதிலும், அதில் எப்பயனும் இல்லை. உங்களின் பிரதான விடயங்களை நீங்கள் வலியுறுத்திக் கூற வேண்டும். இதிலேயே உங்கள் வெற்றி உள்ளது. ஒரேயொரு கடவுளே உள்ளார் என்று நீங்கள் நிரூபிக்கின்றீர்கள். கீதையை வாசிப்பவர்களும் கடவுள் என்றல்ல. இராஜயோகத்தின் மூலமும், இந்த ஞானத்தின் மூலமும் கடவுள் தேவ தர்மத்தை ஸ்தாபித்தார். பாபா விளங்கப்படுத்துகின்றார்: சில குழந்தைகள் மாயையினால் தாக்கப்படுகின்றார்கள். எவருமே இன்னமும் கர்மாதீத நிலையை அடையவில்லை. தொடர்ந்தும் முயற்சி செய்வதனால், நீங்கள் இறுதியில் பாபாவின் நினைவில் சதா சந்தோஷத்துடன் இருப்பீர்கள். எந்தச் சோர்வும் இருக்க மாட்டாது. இப்பொழுது உங்கள் தலைகளின் மீது பெரும் பாவச் சுமை உள்ளது. நினைவு செய்வதனால் மாத்திரமே அதனை அகற்ற முடியும். இந்த முயற்சியைச் செய்வதற்கான வழிமுறையை, தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்களை அழிக்க முடியும். நினைவு செய்யாததால், பிறரின் பெயரிலும் வடிவிலும் சிக்கிக் கொண்டுள்ள பல முட்டாள்கள் (புத்துக்கள்) இருக்கிறார்கள். அவர்கள் முகமலர்ச்சியுடன் இருக்கவோ அல்லது ஞானத்தைப் பிறருக்கு விளங்கப்படுத்தவோ சிரமப்படுகின்றார்கள். அவர்கள் இன்று, எவருக்காவது சந்தோஷமாக விளங்கப் படுத்துகின்றார்கள். நாளையே அவர்கள் திணற ஆரம்பிப்பதால் அவர்களுடைய சந்தோஷம் மறைந்து விடுகின்றது. மாயை எப்பொழுது உங்களைத் தாக்குகின்றாள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகையாலேயே நீங்கள் தந்தையை நினைவுசெய்ய முயற்சி செய்ய வேண்டும். அமைதியின்றி அழுது புலம்பாதீர்கள். மாயை உங்களைச் செருப்பால் அடிக்கின்றாள் என்பதைப் புரிந்து கொண்டு பாபாவை நினைவுசெய்ய முயற்சி செய்யுங்கள். தந்தையை நினைவுசெய்வதன் மூலம், நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெறுவதுடன், ஞானமும் உங்கள் உதடுகளிலிருந்து உடனடியாக வெளிப்படும். தூய்மையாக்குபவரான தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! வேறு எந்த மனிதருக்கும் படைப்பவரான தந்தையின் அறிமுகம் இல்லை. மனிதர்களாகிய உங்களுக்கே தந்தையைத் தெரியாது விட்டால், நீங்கள் மிருகங்களை விட மோசமானவர்கள். ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் கீதையில் புகுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின், அவர்களால் எப்படித் தந்தையை நினைவுசெய்ய முடியும்? இதுவே மிகப் பெரிய தவறு, நீங்கள் அதனை அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். சிவபாபாவே கீதையின் கடவுள். அவர் மாத்திரமே உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே முக்தியையும், ஜீவன்முக்தியையும் அருள்பவர். இது ஏனைய சமயத்தினரின் புத்தியில் இருப்பதில்லை. அவர்கள் தமது கர்மக் கணக்கைத் தீர்த்து வீடு திரும்புகின்றார்கள். இறுதியில், அவர்கள் சிறிதளவு அறிமுகத்தைப் பெறுவார்கள், எனினும் அவர்கள் தத்தமது சமயங்களுக்கே திரும்பிச் செல்வார்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது தந்தையை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் மீண்டும் தேவர்கள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், உங்களில் சிலர் இன்னமும் பிழையான செயல்களைச் செய்கின்றீர்கள். சிலர் பாபாவிற்கு எழுதுகின்றார்கள்: ‘இன்று, எனது நிலை வாடிவிட்டது. நான் தந்தையை நினைவு செய்யவில்லை’. நீங்கள் நினைவு செய்யாதிருந்தால், நிச்சயமாக வாடிவிடுவீர்கள். இது சடலங்களின் உலகம்; அனைவரும் ஏற்கனவே இறந்து விட்டார்கள். நீங்கள் தந்தைக்கு உரியவர்கள். ஆகையால், தந்தையின் கட்டளை: என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இச் சரீரங்கள் பழையவையும், தமோபிரதானவையும் ஆகும். இறுதிவரை ஏதோ ஒன்று இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, உங்கள் கர்மாதீத நிலையை நீங்கள் அடையும் வரை, மாயை தொடர்ந்தும் உங்களை அசைப்பாள். அவள் எவரையும் விட்டு வைக்க மாட்டாள். மாயை உங்களை எவ்வாறு தடுமாறச் செய்கின்றாள் என்பதைத் தொடர்ந்தும் சோதித்துப் பாருங்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதனை நீங்கள் ஏன் மறக்க வேண்டும்? தந்தையே உயிரைவிட அதிகளவு நேசிக்கப்படுபவர் என ஆத்மா கூறுகின்றார். அத்தகைய தந்தையை நீங்கள் ஏன் மறக்கின்றீர்கள்? நீங்கள் பிறருக்குத் தானம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தந்தை உங்களுக்கு இந்தச் செல்வத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் கண்காட்சிகளிலும், விழாக்களிலும் அதனைப் பலருக்கும் தானம் செய்யலாம். நீங்களாகவே உங்கள் சொந்த ஆர்வத்தில் இயல்பாகவே அங்கு ஓடோடிச் செல்ல வேண்டும். இப்பொழுது, அங்கு சென்று விளங்கப்படுத்துவதற்கு பாபா உங்களை உற்சாகப்படுத்த வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், அதற்கு முதலில் நீங்கள் இந்த ஞானத்தை மிகவும் நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். சரீர உணர்வுடையோரின் அம்பு இலக்கைத் தாக்க மாட்டாது. பல வகையான வாள்களும் உள்ளன. உங்கள் யோக வாளை நீங்கள் மிகவும் கூராக வைத்திருக்க வேண்டும். பலரிடமும் சென்று, அவர்களுக்கு நன்மை செய்வதற்கான சேவையைச் செய்யும் உற்சாகம்; உங்களுக்கு இருக்க வேண்டும். இறுதியில் உங்களுக்குத் தந்தையைத் தவிர வேறு எவரது நினைவும் இல்லாத வகையில், தந்தையை நினைவு செய்யும் பயிற்சி இப்பொழுது உங்களுக்கு அதிகளவில் இருக்க வேண்டும். அப்பொழுதே உங்களால் இராஜ அந்தஸ்தைக் கோர முடியும். இறுதிக் கணத்தில், அல்ஃபாவினது நினைவும், நாராயணனின் நினைவும் மாத்திரமே இருக்க வேண்டும். தந்தையையும் ஆஸ்தியான நாராயணனையும் மாத்திரமே நினைவுசெய்யுங்கள். எவ்வாறாயினும் மாயை எதிலும் குறைந்தவளல்ல. பலவீனமானவர்கள் முற்றாக விழுந்து விடுகின்றார்கள். நீங்கள் ஒருவரது பெயரிலும் வடிவிலும் சிக்கிக் கொள்ளும் பொழுதே பிழையான செயல்களுக்கான கணக்கு உருவாக்கப்படுகின்றது. அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் குறிப்புக்களைப் பரிமாறிக் கொள்கின்றார்கள். நீங்கள் சரீரதாரியின் மீது அன்பை வளர்த்துக் கொண்டால், பிழையான வகையான கர்மக் கணக்கை உருவாக்குகின்றீர்கள். பாபாவிற்குச் செய்திகள் கிடைக்கின்றன. அவர்கள் பிழையான செயல்களைச் செய்த பின்னர், கூறுகின்றார்கள்: பாபா, இவ்வாறு நடந்தது. ஓ! ஆனால் நீங்கள் ஏற்கனவே பிழையான கர்மக் கணக்கை உருவாக்கிக் கொண்டீர்கள். அனைவரது சரீரமும் தூய்மையற்றதாகும். அதனை நீங்கள் ஏன் நினைவு செய்கின்றீர்கள்? தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால், நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள். இன்று, அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள், நாளை, அவர்கள் சடலங்கள் ஆகுகின்றார்கள். பிறவிபிறவியாக நீங்கள் பிறரின் பெயர்களிலும் வடிவங்களிலும் சிக்கிக் கொண்டிருந்தீர்கள். பிறரின் பெயரிலும் வடிவிலும் சிக்கிக் கொள்ளும் இந்த நோய் சுவர்க்கத்தில் இருக்க மாட்டாது. அங்கே முழுக் குடும்பமும் பற்றிலிருந்து விடுபட்டிருக்கும். தாம் ஆத்மாக்களே அன்றி, சரீரங்கள் அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அது ஆத்ம உணர்வுடைய உலகம். இது சரீர உணர்வுடைய உலகம். பின்னர் நீங்கள் அரைக் கல்பத்திற்கு ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது சரீர உணர்வைத் துறந்து விடுங்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதனால், நீங்கள் மிக இனிமையானவர்களாகவும், குளிர்மையானவர்களாகவும் ஆகுகின்றீர்கள். தந்தையை மறக்காதிருப்பதற்குப் பிறரைத் தூண்டுகின்ற முயற்சியை வெகு சிலரே செய்கின்றார்கள். தந்தை ஒரு கட்டளை பிறப்பிக்கின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! ஓர் அட்டவணை வைத்திருங்கள்! எவ்வாறாயினும் நீங்கள் அட்டவணை ஒன்றை வைத்திருப்பதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. அத்தகைய இனிமையான தந்தையை நீங்கள் அதிகளவு நினைவுசெய்ய வேண்டும். அவர் கணவருக்கெல்லாம் கணவரும், தந்தையருக்கெல்லாம் தந்தையும் ஆவார். நீங்கள் தந்தையை நினைவு செய்வதுடன், பிறரை உங்களுக்குச் சமமாக்குகின்ற முயற்சியையும் செய்ய வேண்டும். இதனைச் செய்வதில் நீங்கள் மிகவும் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். தந்தை, சேவை செய்கின்ற குழந்தைகளை அவர்களின் லௌகீக வேலையை விட்டு விலகச் செய்கின்றார். உங்கள் சூழலைப் பார்க்கும்பொழுது, அவர் கூறுகின்றார்: இந்த வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபடுங்கள். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னிலையில் உள்ளன. பக்தி மார்க்கத்தில் மக்கள் விக்கிரகங்களின் முன்னிலையில் நினைவில் அமர்கின்றார்கள். உங்களை ஆத்மாக்கள் என்று கருதி, தந்தையான கடவுளை நினைவுசெய்ய வேண்டும். சரீரமற்றவராகி, சரீரமற்ற தந்தையை நினைவு செய்யுங்கள். இதற்கு முயற்சி தேவை. உலக அதிபதி ஆகுதல் என்றால் உங்கள் மாமியாரின் வீட்டிற்குச் செல்வதைப் போன்றதல்ல. தந்தை கூறுகின்றார்: நான் உலக அதிபதி ஆகுவதில்லை. நான் உங்களையே அவ்வாறு ஆக்குகின்றேன். அவர் உங்களுக்காக அதிகளவு பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. தகுதியான குழந்தைகள் இயல்பாகவே வேலையில் இருந்து விடுமுறை பெற்று, சேவையில் ஈடுபடும் அக்கறையைக் கொண்டிருப்பார்கள். சில குழந்தைகளுக்குப் பந்தனங்கள் உள்ளன. ஆனால் அவர்களுக்குப் பற்றும் உள்ளது. தந்தை கூறுகின்றார்: உங்கள் நோய்கள் அனைத்தும் வெளிப்படும். தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். எவ்வாறாயினும் மாயை உங்களை அவரிடத்தில் இருந்து விலகியிருக்கச் செய்கிறாள். நினைவே பிரதான விடயம். நீங்கள் படைப்பவரதும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். ஆகையால், உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? பாக்கியசாலிக் குழந்தைகள், அனைவரையும் சந்தோஷப்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றார்கள். அவர்கள் தமது எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் செயல்களாலும் எவரையும் சந்தோஷத்தை இழக்கச் செய்வதில்லை. அவர்கள் சாந்தமாகப் பழகுவதால், தொடர்ந்தும் தங்களின் பாக்கியத்தை உருவாக்கிக் கொள்கின்றார்கள். இதனை ஒருவர் புரிந்துகொள்ளாத பொழுது, அது அவரது பாக்கியத்தில் இல்லை என உணரப்படுகின்றது. இப் பாக்கியம் இருப்பவர்கள் மிகக் கவனமாகச் செவிமடுக்கின்றார்கள். அவர்கள் தாம் என்ன செய்தார்கள் என்ற தமது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: ‘நான் செய்த அனைத்திலும் சீரழிவே இருந்ததை இப்பொழுது நான் புரிந்து கொண்டேன்’. தந்தையை நினைவுசெய்யும் பொழுதே, உங்களால் சற்கதியைப் பெற முடியும். ஒருவர் மிகவும் சிரமப்பட்டே அரை மணித்தியாலத்தில் இருந்து ஒரு மணிநேரம் வரை பாபாவை நினைவு செய்கின்றார். எஞ்சிய நேரத்தில் அவர்கள் திணறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அரைக் கல்பமாக மூச்சுத் திணறிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது தந்தையைக் கண்டு கொண்டிருப்பதால், நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். இது உங்களின் மாணவ வாழ்க்கை என்பதால், நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும் மீண்டும் தந்தையை மறக்கின்றீர்கள். அவர் கூறுகின்றார்: நீங்கள் கர்ம யோகிகள். உங்கள் வியாபாரம் போன்றவற்றில் நீங்கள் ஈடுபட வேண்டும். குறைவாக உறங்குவது மிகவும் நல்லது. இந்த நினைவில் நிலைத்திருப்பதால் நீங்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்கின்றீர்கள். அத்துடன் நீங்கள் சந்தோஷமாகவும் இருக்கின்றீர்கள். நினைவில் அமர்ந்திருத்தல் மிகவும் அவசியம். பகல் பொழுதில் உங்களுக்கு நேரம் இல்லாதிருந்தால், இரவு நேரத்தில் அதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். இந்த நினைவினால் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். உங்களில் எவருக்காவது பந்தனம் இருக்குமாயின், நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற விரும்புகின்றீர்கள் என்றும், அதிலிருந்து எவரும் என்னைத் தடுக்க முடியாது என்றும் அவனுக்கோ அல்லது அவளுக்கோ கூறுங்கள். அரசாங்கத்திடமும் விளங்கப்படுத்துங்கள்: விநாசம் முன்னிலையில் உள்ளது. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாக இருங்கள். ஆகையாலேயே நாங்கள் தூய்மை ஆகுகின்றோம். எவ்வாறாயினும், இந்த ஞானத்தின் போதை இருப்பவர்கள் மாத்திரமே இவ்வாறு கூறுவார்கள். இங்கு வந்த பின்னரும் சரீரதாரிகளை நினைவு செய்கின்றீர்கள் என்றிருக்கக் கூடாது. சரீர உணர்வினால் சண்டை, சச்சரவில் ஈடுபடுதல் என்றால் கோபம் என்ற தீய ஆவியின் பிடிக்குள் சிக்கியுள்ளதைப் போன்றதாகும். கோபப்படுகின்ற எவரையும் பாபா ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சேவை செய்பவர்களின் மீது அன்பு உள்ளது. மற்றவர்களின் செயற்பாடுகளோ சரீர உணர்வுடையதாக உள்ளன. நீங்கள் தந்தையை நினைவு செய்தால் அழகானவர் ஆகுவீர்கள். இதுவே பிரதானமான விடயம். ஒருவரையொருவர் பாருங்கள், ஆனால் தந்தையை நினைவு செய்யுங்கள். சேவைக்காக உங்கள் எலும்புகளையும் கொடுங்கள். பிராமணர்கள் ஒருவரோடொருவர் உப்புநீரைப் போன்றல்லாது, பாலும் சீனியும் போன்று வாழ வேண்டும். அவர்களுக்குப் புரியாததால், அவர்கள் ஒருவர் மீது ஒருவரும், தந்தையின் மீதும் வெறுப்பைக் கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய குழந்தைகள் எத்தகைய அந்தஸ்தைப் பெறமுடியும்? இறுதி நேரத்தில், நீங்கள் செய்தவற்றிற்கான காட்சிகளைப் பெற்று, நீங்கள் செய்த தவறுகளை உணர்வீர்கள். தந்தை கூறுகின்றார்: அது ஒருவரது பாக்கியத்தில் இல்லாதிருந்தால், எவரால் என்ன செய்ய முடியும்? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பந்தனத்திலிருந்து விடுபடுவதற்கு, இந்த ஞானத்தின் மீதான உங்கள் போதையைப் பேணுங்கள். சரீர உணர்வுடைய நடத்தை இருக்கக்கூடாது. ஒருவரோடு ஒருவர் பழகும் பொழுது, உப்பு நீரைப் போன்ற எந்தச் சம்ஸ்காரங்களும் இருக்கக்கூடாது. நீங்கள் சரீரதாரிகளின் மீது அன்பு வைக்கும் பொழுது, உங்களால் பந்தனத்திலிருந்து விடுபட முடியாது.

2. கர்மயோகியாக வாழுங்கள். நிச்சயமாக நினைவில் அமருங்கள். ஆத்ம உணர்வுடையவராகி, மிகவும் இனிமையாகவும், குளிர்மையாகவும் ஆகுகின்ற முயற்சியைச் செய்யுங்கள். சேவைக்காக உங்கள் எலும்புகளையும் கொடுங்கள்.

ஆசீர்வாதம்:
ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலமும், உங்கள் சொந்தக் கட்டளைகளின் அல்லது மற்றவர்களின் கட்டளைகளின் கலப்படத்தை முடிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையான சுய உபகாரி ஆகுவீர்களாக.

உங்களுக்கும், உலகிற்கும் நன்மை செய்வதற்காகவே தந்தை சகல பொக்கிஷங்களையும் குழந்தைகளாகிய உங்களிடம் வழங்கியுள்ளார். அவற்றை வீணாக்குவதோ அல்லது பயனற்ற பணியில் பயன்படுத்துவதோ அல்லது ஸ்ரீமத்துடன் உங்களின் சொந்தக் கட்டளைகளை அல்லது மற்றவர்களின் கட்டளைகளைக் கலப்பது என்றால், நம்பிக்கையுடன் உங்களிடம் வழங்கப்பட்டவற்றில் நீங்கள் கவனமெடுக்காது நேர்மை அற்றிருப்பதாகும். இப்போது, இந்த நேர்மை இன்மையையும் கலப்படத்தையும் முடித்து, ஆன்மீகத்தையும் கருணையையும் கிரகியுங்கள். உங்களிலும் ஏனைய எல்லோரிடமும் கருணை கொள்வதுடன் சுய உபகாரி ஆகுங்கள். உங்களைப் பாருங்கள், அத்துடன் தந்தையைப் பாருங்கள். மற்றவர்களைப் பார்க்காதீர்கள்.

சுலோகம்:
வேறு எங்கேயும் கவரப்படாதவர்களால் மட்டுமே, சதா முகமலர்ச்சியுடன் இருக்க முடியும்.

அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் சதா வெற்றி பெறுபவராக இருங்கள்.

பாபாவும் நானும் ஒன்றிணைந்து இருக்கிறோம். பாபா கரன்கரவன்ஹார் (தூண்டுபவர்), ஆத்மாவான நான் ஒரு கருவி ஆவேன். இதுவே எண்ணத்திற்கு அப்பால்பட்டு இருத்தல், அதாவது, ஒரேயொருவரின் நினைவில் இருத்தல் எனப்படுகிறது. தூய எண்ணங்களைப் பேணுபவர்களால் ஒருபோதும் எந்தவிதமான கவலைகளையும் கொண்டிருக்க முடியாது. தந்தையும் நீங்களும் ஒன்றிணைந்து இருப்பதைப் போல், அந்தச் சரீரமும் ஆத்மாவும் ஒன்றிணைந்துள்ளன. உங்களின் எதிர்கால ரூபமான விஷ்ணுவும் ஒன்றிணைந்த ரூபமே. அதேபோல், உங்களின் சேவையும் ஏனையவர்களின் சேவையும் ஒன்றிணைந்து இருக்கும்போது, நீங்கள் குறைவாகவே சிரமப்பட வேண்டியிருப்பதுடன், பெரிய வெற்றியையும் பெற முடியும்.