05.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே இப்பழைய உலகில் நீங்கள் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்கும் பொழுது மட்டுமே உங்களால் தந்தையுடன் வீடு திரும்ப முடியும்.

கேள்வி:
கடவுள் சர்வசக்திவானாக இருந்த பொழுதிலும் அவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஞான யாகத்தில் ஏன் தடைகள் ஏற்படுகின்றன?

பதில்:
இராவணன் கடவுளையும் விட பலசாலி என்பதால் ஆகும்! எனவே அவனது இராச்சியம் அபகரிக்கப்படும் பொழுது அவன் நிச்சயமாகத் தடைகளை உருவாக்குவான். நாடகத்திற்கேற்ப ஆரம்பத்தில் இருந்தே இந்த யாகத்தில் தடைகள் இருந்து வருகின்றன, அவை நிச்சயமாகத் தொடரும். நாங்கள் தூய்மையற்ற உலகிலிருந்து தூய்மையான உலகிற்கு மாற்றப்படுகின்றோம். ஆகவே தூய்மை அற்றவர்கள் நிச்சயமாகத் தடைகளை உருவாக்குவார்கள்.

பாடல்:
தொலைதூர தேசப் பயணியே.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலின் ஒரு வரியைச் செவிமடுத்தீர்கள். வேதங்களும் சமயநூல்களும் பக்திமார்க்கத்திற்கு வழிகாட்டுவதைப் போல் இப்பாடலும் சிறிதளவு பாதையைக் காட்டுகின்றது. அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. சமயநூல்களிலுள்ள கதைகளைச் செவிமடுப்பது காதுக்கு இனிமையை மாத்திரமே கொடுக்கின்றது. தொலைதூர தேசப் பயணி என்று அழைக்கப்படுபவர் யார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்களும் தொலைதூர தேசப் பயணிகள் என்பதையும் அமைதி தாமமே உங்கள் வீடு என்பதையும் ஆத்மாக்களான நீங்கள் அறிவீர்கள். மனிதர்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ளாதிருப்பதால் அவர்கள் எதனையுமே புரிந்து கொள்வதில்லை என்பதே அதன் அர்த்தமாகும். தந்தையை அறியாததால் உலகச் சக்கரத்தையும் எவரும் அறியார். “நான் தற்காலிகமான காலப்பகுதிக்கு சரீரத்திலுள்ள வசிக்கும் ஆத்மா ஆகுகின்றேன்” என்று சிவபாபா கூறும்பொழுது ஆத்மா புரிந்து கொள்கின்றார். நீங்கள் எப்பொழுதுமே சரீரத்திலுள்ள ஆத்மாக்களாகவே இருக்கின்றீர்கள். நான் சங்கமயுகத்தில் தற்காலிகமான காலப்பகுதிக்கே சரீரத்திலுள்ள ஆத்மா ஆகுகின்றேன். அப்பொழுதும் அதுவும் உங்களைப் போன்று நான் சரீரத்திற்குள் வருவதில்லை. எனது சொந்த அறிமுகத்தைக் கொடுப்பதற்காக நான் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். வேறு எவ்வாறு நீங்கள் அறிமுகத்தைப் பெறுவீர்கள்? தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: கடவுளான சிவபாபா என அழைக்கப்படுகின்ற ஆன்மீகத் தந்தை ஒரேயொருவரே உள்ளார். வேறு எவருக்கும் அவரைத் தெரியாது. இங்கு தூய்மைக்கான பந்தமும் உள்ளது. சுயத்தை ஓர் ஆத்மாவெனக் கருதுவதே அனைத்திலும் மிகப் பெரிய பந்தமாகும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் நினைவு செய்த, தூய்மையாக்குபவரான தொலைதூர தேசப் பயணியான ஆன்மீகத் தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் உங்கள் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்; நான் எவரையுமே விட்டுச் செல்ல மாட்டேன். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். பிரளயம் ஏற்படாது; பாரத தேசம் எப்பொழுதும் இங்கு இருக்கும். பாரத தேசம் என்றும் அழியாதது. சத்தியயுக ஆரம்பத்தில் பாரத தேசம் மாத்திரமே உள்ளது. சக்கரத்தின் சங்கமயுகத்தில் தந்தை வரும்பொழுது அவர் ஆதிசனாதன தேவதேவியரின் தர்மத்தை ஸ்தாபிக்க வேண்டும். ஏனைய சமயங்கள் அனைத்தும் அழிய உள்ளன. ஆதி சனாதன தேவதேவியரின் தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு நீங்களும் உதவுகின்றீர்கள். நீங்கள் பாடலில் கூறப்படுவதைக் கேட்டீர்கள்: பாபா, உங்களுடன் எங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்! தந்தை கூறுகின்றார்: இந்தப் பழைய உலகில் விருப்பமின்மை ஏற்பட்டால் அன்றி எவராலும் என்னுடன் திரும்பிச் செல்ல முடியாது. ஒரு புதிய வீடு கட்டப்படும் பொழுது இதயம் பழைய வீட்டிலிருந்து அகற்றப்படுகின்றது. இப்பழைய உலகம் அழிய உள்ளதை நீங்களும் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் சதோபிரதான் ஆகாது விட்டால் உங்களால் சதோபிரதான் தேவர்கள் ஆக முடியாது. இதனாலேயே பாபா மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். அனைவருக்கும் சற்கதி அளிக்கின்ற ஒரேயொரு தொலைதூர தேசப் பயணி வந்து விட்டார். உலகத்தினருக்கு அவரைத் தெரியாததால் அவர் சர்வவியாபி என அவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளான நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதை நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக அறிவீர்கள். நீங்கள் இங்கே வரும்பொழுது (மதுவனத்திற்கு) பாப்தாதாவிடமே வருகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். ஆகவே இது ஒரு குடும்பம்; இது கடவுளின் குடும்பமாகும். ஒருவர் பெரியதொரு குடும்பத்தைக் கொண்டிருக்கும் பொழுது அது ஒரு பெரிய குழுவைப் போல் ஆகுகின்றது. பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளுமான சிவபாபாவின் குழந்தைகளும் பெரியதொரு குழுவினரே ஆவர். பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளுமான நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். பாண்டவர்கள் கௌரவர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தங்கள் இராச்சியத்தைப் பணயமாக வைத்தார்கள் எனவும் சமயநூலில் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பாண்டவர்களோ அல்லது கௌரவர்களோ ஓர் இராச்சியத்தைக் கொண்டிருக்கவில்லை. கிரீடங்கள் போன்றனவும் இருக்கவில்லை. அவர்கள் நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் ஒளித்து வைத்தனர் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அவர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகள் ஆகும். பாண்டவ இராச்சியமோ கௌரவ இராச்சியமோ இருக்கவுமில்லை, அவர்கள் தங்கள் மத்தியில் யுத்தம் புரியவும் இல்லை. அவர்கள் சகோதரர்களாக இருந்தனர். எவ்வாறாயினும் அரசர்களுக்கு இடையே யுத்தம் இருந்தது; கௌரவர்களுக்கும் யவனர்களுக்கும் இடையிலேயே யுத்தம் இடம்பெற்றது. சகோதரர்கள் எவ்வாறு ஒருவரையொருவர் அழிக்க முடியும்? பாண்டவர்களும் கௌரவர்களும் யுத்தம் புரிந்ததாகவும் பஞ்ச பாண்டவர்களும் ஒரு நாயும் மாத்திரம் எஞ்சியதாகவும் அவர்கள் சித்தரித்துள்ளார்கள். பின்னர் அவர்களும் மலையில் உருகிப் போனார்கள். எனவே நாடகம் முடிவடைந்து விட்டது. அவ்வாறாயின் இராஜயோகம் என்பதற்கு அர்த்தம் இல்லாது போய்விடும். தந்தை ஒவ்வொரு சக்கரத்திலும் வந்து ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபிக்கின்றார் என்பதை இப்பொழுது குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரான பாபா, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆக்குங்கள். சத்தியயுகத்தில் சூரிய வம்ச இராச்சியம் மாத்திரமே இருக்கின்றது. பிரம்மாவினூடாக விஷ்ணு தாமம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இப்பொழுது தந்தை வந்திருப்பதால் அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்! ஒரு தாமரை போல் தூய்மையாக இருங்கள். குமாரிகளிடம் வீட்டில் ஒரு தாமரை மலர் போல் தூய்மையாக இருங்கள் எனக் கூறப்படுவதில்லை; எவ்வாறாயினும் அவர்கள் தூய்மையானவர்களே. இது இல்லறத்தினருக்கே கூறப்படுகின்றது. குமார்களும் குமாரிகளும் திருமணம் செய்யவும் கூடாது. இல்லாவிட்டால் அவர்களும் இல்லறத்தினர் ஆகிவிடுவார்கள். தூய திருமணம் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. பிறப்பிலிருந்து பிரம்மச்சரியம் காப்பவர்கள் மிகவும் பிரபல்யம் ஆகுகின்றனர். நீங்கள் திருமணம் செய்து விட்டால் அரைப்பங்காளி ஆகுகின்றீர்கள். குமார்கள் தூய்மையாக இருக்குமாறு கேட்கப்படுகின்றார்கள். வீட்டில் தங்கள் குடும்பங்களுடன் வாழ்பவர்கள் தாமரை மலரைப் போலாகுமாறு கூறப்படுகின்றார்கள். அவர்களே முயற்சி செய்ய வேண்டியவர்கள். திருமணம் செய்யாதிருந்தால் எப்பந்தனமும் இருக்க மாட்டாது. ஒரு குமாரி கற்று இந்த ஞானத்தில் மிகவும் உறுதியானவர் ஆக வேண்டும். இன்னமும் தங்கியிருக்கும் இளம் குமாரிகள் இங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் வீட்டில் இருந்தவாறே கற்க முடியும். பெற்றோர் இந்த ஞானத்தில் இருந்தால் அவர்கள் தங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளைத்; தம்முடன் அழைத்து வரலாம். இது ஒரு பாடசாலையும் ஒரு வீடும் சத்தியத்தின் சகவாசமும் (ஓர் ஆன்மீக ஒன்றுகூடல்) ஆகும். சத்தியமானவர் என்றால் ‘தொலை தூரதேசப் பயணி’ என்று கூறப்படுகின்ற, ஒரேயொரு தந்தை ஆவார்! ஆத்மாக்கள் அழகானவர்கள் ஆகுகின்றனர். தந்தை கூறுகின்றார்: பயணியான நான் எப்பொழுதும் அழகானவர். நான் எனது தூய்மையில் நிலைத்து இருக்கின்றேன். நான் வந்து சகல ஆத்மாக்களையும் தூய்மையானவர்களாகவும் அழகானவர்களாகவும் ஆக்குகின்றேன். அவரைப் போன்ற வேறு பயணி இருக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் இராவண இராச்சியத்திற்கே வருகின்றேன். இச்சரீரம் கூட வேறொருவருக்கே சொந்தமானது. ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்: இது எனது சரீரம். பாபா கூறுகின்றார்: இது எனது சரீரமல்ல, இது இவரது சரீரமாகும். இந்தத் தூய்மையற்ற சரீரம் என்னுடையது அல்ல. இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவரில் அவர் பிரவேசிக்கின்றார். முதல் இலக்கத் தூய ஆத்மா, பின்னர் இறுதி இலக்கம் உடையவர் ஆகுகின்றார். அதாவது இறுதியில் அவர் விகாரமுடையவர் ஆகுகின்றார். ஆரம்பத்தில் முதல் இலக்க ஆத்மா பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்திருந்தார். இப்பொழுது கலைகள் எதுவும் எஞ்சவில்லை; அனைவரும் தூய்மை அற்றவர்களாக உள்ளார்கள். ஆகவே தந்தையே தொலைதூர தேசப்பயணி ஆவார். ஆத்மாக்களாகிய நீங்களும் பயணிகளே. உங்கள் பாகங்களை நீங்கள் நடிப்பதற்காக இங்கே வருகின்றீர்கள். எவருக்கும் இவ்வுலகச் சக்கரத்தைத் தெரியாது. ஒருவர் எவ்வளவு சமயநூல்களைக் கற்றிருந்தாலும் வேறு எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் இந்தச் சரீரத்தில் பிரவேசித்து ஆத்மாக்களான உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன். அம்மனிதர்கள் சமயநூல்களின் ஞானத்தையே மனிதர்களுக்குக் கொடுக்கின்றார்கள். அவர்கள் பக்தர்கள். ஒரேயொருவரே சற்கதியை அருள்பவர். அவர் மாத்திரமே ஞானக்கடல். அவரை அறியாததால் மக்களிடம் சரீர உணர்வே உள்ளது. நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும் என அவர்கள் விளங்கப்படுத்துவதில்லை. ஆத்மாக்கள் கற்கின்றார்கள். அவர்களிடம் சரீர உணர்வு இருப்பதால் இதனை எவருமே விளங்கப்படுத்துவதில்லை. சிவபாபாவை மாத்திரமே தொலைதூர தேசப் பயணியென அழைக்க முடியும். நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே உங்கள் சொந்தப் பிறவிகளைப் பற்றி உங்களுக்கே தெரியாது என்பதை நான் 5000 வருடங்களின் முன்னரும் உங்களுக்கு விளங்கப்படுத்தினேன். அவற்றை நான் அறிவேன். கீதையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் ஒரு மூடை மாவில் உள்ள ஒரு துளி உப்பு போன்றவை. இதுவே கீதையின் அதே அத்தியாயமும் அதே மகாபாரத யுத்தமும் “மன்மனாபவ” “மத்தியாஜிபவ” பற்றிய அதே ஞானமும் ஆகும். சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! உண்மையில் ஒரு யுத்தம் இடம்பெற்றது, அதில் பாண்டவர்களே வெற்றி பெற்றனர். விஷ்ணுவின் வெற்றி மாலை நினைவுகூரப்பட்டுள்ளது. சமயநூல்களில் பாண்டவர்கள் உருகிப் போனார்கள் என்று காட்டப்பட்டுள்ளது. அவ்வாறாயின் மாலை எவ்வாறு உருவாக்கப்பட்டது? நீங்கள் விஷ்ணு மாலையில் ஒருவர் ஆகுவதற்கே இங்கே வந்திருக்கின்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். தூய்மையாக்குபவரான தந்தை உச்சியில் உள்ளார். அவருக்கான ஞாபகார்த்தம் இருக்க வேண்டும். பக்திமார்க்கத்தில் ஞாபகார்த்தங்கள் நினைவுகூரப்படுகின்றன. 8, 108, 16108 மணிகளின் மாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலேறும் ஸ்திதியினால் அனைவருக்குமே நன்மை உள்ளது என்று நினைவுகூரப்பட்டுள்ளது. இது உங்கள் மேலேறும் ஸ்திதி என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் எவ்வாறு கீழே வந்து 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதன் இந்த ஞானம் முழுவதும் இப்பொழுது உங்கள் புத்திகளில் உள்ளது. இந்த ஞானத்தை மறந்துவிடக் கூடாது. எங்கள் துன்பம் அனைத்தையும் அகற்றவும் சாபத்திலிருந்து எங்களை விடுவிக்கவும் சந்தோஷம் என்ற எங்கள் ஆஸ்தியை எங்களுக்குக் கொடுக்கவுமே தந்தை வந்துள்ளார். இராவணனின் சாபத்தால் அனைவருமே துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். எனவே இப்பொழுது தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். சூரிய வம்சத்தைச் சேர்ந்த நாங்களே பாரதத்தை ஆட்சி செய்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிவபாபா பாரதத்தில் மாத்திரமே வருகின்றார். பாரதம் மாத்திரமே சுவர்க்கமாக இருந்தது என்பதை மீண்டும் மீண்டும் உங்கள் புத்தியால் நினைவு செய்யுங்கள். 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வராதவர்களால் இதனைக் கிரகிக்கவோ அல்லது பிறரை இதனைக் கிரகிக்கத் தூண்டவோ முடியாது. அவர்கள் 84 பிறவிகளை எடுக்கவில்லை என்பதும் அவர்கள் சுவர்க்கத்திற்கு அல்ல, பின்னரே வந்தவர்கள் என்றும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். முதலில் செல்வது நல்லதாகும். பொதுவாக மக்கள் முதலில் தங்கள் சொந்த புதிய வீட்டில் வாழ்ந்த பின்னரே அதனை வாடகைக்குக் கொடுப்பதுண்டு. ஆகையால் பின்னர் அது இரண்டாம் தரம் ஆகுகின்றது. சத்தியயுகம் புதிய உலகமும் திரேதாயுகம் இரண்டாம் தரமும் ஆகும். நீங்கள் புதிய உலகமான சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள் என்பது இப்பொழுது உங்கள் புத்திகளில் பிரவேசிக்கின்றது. முயற்சி செய்யுங்கள்! பிரஜைகள் தொடர்ந்தும் உருவாக்கப்படுவார்கள். மாலையில் யார் கோர்க்கப்படுவார்கள் என்பது உங்களுக்குத் தெரிய வரும். ஒருவரிடம் நேரடியாக நீங்கள் அதில் ஒருவராக மாட்டீர்கள் எனக் கூறப்பட்டால் அவருக்கு இதயவழுவல் ஏற்படும். இதனாலேயே முயற்சி செய்யுமாறு நீங்கள் கேட்கப்படுகின்றீர்கள். உங்கள் புத்தியின் யோகம் அலைபாயாமல் இருக்கின்றதா என உங்களைச் சோதித்துப் பாருங்கள். சிவபாபாவின் மீது நீங்கள் தொடர்ந்தும் எவ்வளவு அன்பு கொண்டிருக்கின்றீர்கள்? நீங்கள் பாப்தாதாவிடம் செல்கின்றீர்கள் என்றும் தாதாவினூடாக உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்குச் சிவபாபாவிடம் செல்கின்றீர்கள் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். அத்தகைய தந்தையிடம் நீங்கள் பல தடவைகள் செல்ல வேண்டும். எவ்வாறாயினும் உங்கள் இல்லறத்தையும் நீங்கள் நன்றாகப் பராமரித்துக் கொள்ள வேண்டும். சிலர் மிகவும் செல்வந்தர்களாக இருந்தபொழுதும் அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை! அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லாதுள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் ஒவ்வொரு மாதமுமோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோ புத்துணர்ச்சி பெறுவதற்கு வருவார்கள்; மீண்டும் மீண்டும் அதற்கான ஈர்ப்பு இருக்கும். ஓர் ஊசியில் துரு பிடித்திருந்தால் காந்தத்தால் அதனை ஈர்க்க முடியாது. மிகச்சரியான யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் விரைவில் ஈர்க்கப்பட்டு ஓடோடி வருவார்கள். எந்தளவிற்கு அதிகமாகத் துரு அகற்றப்படுகின்றதோ, அந்தளவிற்கு வந்து காந்தத்தைச் (சிவபாபாவை) சந்திக்க வேண்டும் என்ற ஈர்ப்பு இருக்கும். ஒரு பாடலில் கூறப்படுகின்றது: நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை, நீங்கள் என்னை அடித்தாலும் நான் என்றுமே உங்கள் வாசலைத் தாண்ட மாட்டேன். எவ்வாறாயினும் அந்த ஸ்திதி இறுதியிலேயே இருக்கும். துரு அகற்றப்பட்டுள்ள பொழுதே அந்த ஸ்திதி இருக்கும். தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே நீங்கள் வீட்டில் வாழ்ந்தாலும் “மன்மனாபவ” ஆகுங்கள்! இங்கே ஓடிவந்து இங்கேயே தங்கிவிட வேண்டும் என்றில்லை. முகில்களான நீங்கள் கடலிடம் புத்துணர்ச்சி பெற வரவேண்டும், அதன்பின்னர் சேவை செய்வதற்குச் செல்ல வேண்டும். உங்கள் பந்தனங்கள் முடியும்பொழுதே உங்களால் சேவைக்குச் செல்ல முடியும். பெற்றோர் தமது குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து தூய்மையானவர்கள் ஆகுங்கள். தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: இந்த ஞான யாகத்திற்குப் பல வகையான தடைகள் ஏற்படுகின்றன. சிலர் வினவுகின்றார்கள்: கடவுள் சர்வசக்திவான் ஆயின் ஏன் தடைகள் ஏற்படுகின்றன? இராவணன் கடவுளை விடப் பலசாலி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவனது இராச்சியம் அபகரிக்கப்படுவதால் பல வகையான தடைகள் ஏற்படுகின்றன. நாடகத்திட்டப்படி மீண்டும் ஒருமுறை தடைகள் ஏற்படும். ஆரம்பத்தில் இருந்தே தூய்மை அற்றவர்களினால் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. ஸ்ரீகிருஷ்ணருக்கு 16108 அரசிகள் இருந்தனர் என்றும் அவர் பாம்பினால் தீண்டப்பட்டார் என்றும் இராமரின் சீதை கடத்தப்பட்டார் என்றும் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளன. இராவணனால் எவ்வாறு சுவர்க்கத்திற்குள் பிரவேசிக்க முடியும்? பல பொய்கள் உள்ளன! விகாரம் இல்லாமல் எவ்வாறு குழந்தைகள் பிறக்க முடியும் என மக்கள் வினவுகின்றனர். தமது ஆஸ்தியைப் பெற வேண்டியவர்கள் மாத்திரமே வந்து புரிந்து கொள்வார்கள் என்பதை அவர்கள் அறியார்கள். ஆகவே இந்த ஞானயாகத்தில் அசுரர்களால் தடைகள் உருவாக்கப்படும். தூய்மை அற்றவர்களே அசுரர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். இது இராவணனின் சமுதாயமாகும். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் இராவண இராச்சியத்தில் இருந்து விலகியிருந்த பொழுதிலும் இன்னமும் அதன் சில சுவடுகள் எஞ்சியுள்ளன. நீங்கள் இங்கே அமர்ந்திருந்தாலும் இப்பொழுது வீட்டுக்குச் செல்கின்றீர்கள் என்ற ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள் என்ற ஞானத்தை உங்கள் புத்தி கொண்டிருக்கின்றது. ஆனால் இடுகாடாக மாறவுள்ள இந்த அழுக்கான உலகில் விருப்பமின்மையே உள்ளது. அனைத்துமே வெவ்வேறு கருத்துக்களினால் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் “மன்மனாபவ” என்ற ஒரேயொரு கருத்தே உள்ளது. பலரும் கடிதங்கள் எழுதிக் கூறுகின்றார்கள்: பாபா, நான் பந்தனத்தில் உள்ளேன். ஒரேயொரு திரௌபதி மாத்திரமே உள்ளார் என்றில்லை, திரௌபதிகள் ஆயிரக் கணக்கில் உள்ளனர்! நீங்கள் இப்பொழுது தூய்மையற்ற உலகிலிருந்து தூய உலகிற்கு மாற்றப்படுகின்றீர்கள். முன்னைய கல்பத்தில் மலர்கள் ஆகியவர்கள் மீண்டும் வெளிப்படுவார்கள். இங்கேயே அல்லாவின் பூந்தோட்டம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பார்க்கும் பொழுதே நீங்கள் சௌகரியத்தை உணரும் வகையில் சிலர் அத்தகைய அழகிய மலர்களாக இருக்கின்றார்கள். அதன் பெயரே இராஜ மலர்கள் என்பதாகும்; அவற்றை ஐந்து நாட்களுக்கு வைத்திருந்தாலும் அவை நன்றாக மலர்ந்து தொடர்ந்தும் தங்கள் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும். இங்கும் தந்தையைத் தாங்களும் நினைவு செய்து பிறருக்கும் நினைவூட்டுபவர்கள் தொடர்ந்தும் தங்கள் நறுமணத்தைப் பரப்புகின்றார்கள். அவர்கள் சதா சந்தோஷமாக இருக்கின்றார்கள். அத்தகைய இனிமையிலும் இனிமையான குழந்தைகளைப் பார்க்கையில் தந்தை களிப்படைகின்றார். அத்தகைய குழந்தைகளின் முன்னிலையில் பாபா மிகவும் சிறந்த இந்த ஞான நடனத்தைப் புரிகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஞானத்திலும் யோகத்திலும் உறுதியானவர்கள் ஆகுங்கள். உங்களுக்கு எந்தப் பந்தனமும் இல்லாதிருந்தால் தெரிந்து கொண்டே எந்தப் பந்தனத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். பிறப்பிலிருந்து பிரம்மச்சரியம் காத்திடுங்கள்.

2. இப்பொழுது இது எங்கள் மேலேறும் ஸ்திதியாகும். பாபா எங்கள் துன்பம் அனைத்தையும் அகற்றவும் சாபத்தை அகற்றி எங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கவுமே வந்துள்ளார். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்து முடிவற்ற சந்தோஷத்தில் நிலைத்திருங்கள். உங்கள் புத்தியின் யோகம் வேறெங்கும் அலைபாயாமல் உள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஏற்றுக் கொள்ளும் சக்தியாலும் முகங்கொடுக்கும் சக்தியாலும் நீங்கள் செய்யும் சேவையில் வெற்றி பெறுகின்ற ஓர் ஆன்மீக சேவையாளர் ஆகுவீர்களாக.

ஆன்மீக சேவையாளர்களால் சேவை செய்வதைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது. அவர்கள் தமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் ஒரு விநாடியேனும் ஓய்வு எடுப்பதில்லை. இதனாலேயே அவர்கள் மிகச்சிறந்தவர்கள். செய்யும் சேவையில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் சதா ஒரு சுலோகனை நினைவில் வைத்திருக்கிறார்கள்: ஏற்றுக் கொள்வதும் முகங்கொடுப்பதுமே எமது இலக்கு ஆகும். அவர்கள் தமது பழைய சம்ஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு மாயைக்கு முகங் கொடுக்கிறார்கள். தெய்வீகக் குடும்பத்திற்கு அல்ல. இத்தகைய குழந்தைகள் ஞானம் நிறைந்தவர்களாக இருப்பதுடன் கூடவே சக்திசாலிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களே ஆன்மீக சேவையாளர்கள் எனப்படுகிறார்கள்.

சுலோகம்:
சிறிய விடயங்களைப் பெரிதாக்காதீர்கள். சூழலைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

உலக மக்கள் உயிருடன் வாழும்போதே நம்பிக்கை இழந்திருத்தல் என்ற சிதையில் அமர்ந்திருக்கிறார்கள். இத்தகைய ஆத்மாக்களை மரணித்து வாழச் செய்து அவர்களுக்குப் புதிய வாழ்க்கை என்ற தானத்தை அளியுங்கள். உங்களின் மலர்ச்சியான, சந்தோஷமான முகத்தால் எப்படி ஒரு மனித வாழ்க்கை வாழ்வது என்று கற்பியுங்கள். உங்களைப் பார்க்கும்போது அவர்களும் தைரியத்தையும் ஊக்கம் மற்றும் உற்சாகத்தையும் பெற வேண்டும். இதற்கு உங்களின் சுபாவத்தை இலகுவானதாக ஆக்குங்கள். அத்துடன் தாமரை ஸ்திதி என்ற ஆசனத்தில் சதா இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள்.