05.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்களது யோக சக்தியால் இப்பழைய உலகை மாற்றிப் புதியதாக ஆக்குகின்றீர்கள். நீங்கள் ஆன்மீக சேவை செய்வதற்காகவே பிறந்திருக்கின்றீர்கள்.
கேள்வி:
நேர்மையான, உண்மையாக முயற்சி செய்கின்ற குழந்தைகளின் அடையாளங்கள் யாவை?பதில்:
நேர்மையான குழந்தைகள் ஒருபோதும் தங்கள் தவறுகளை மறைப்பதில்லை. அவர்கள் உடனடியாகவே பாபாவிடம் கூறிவிடுவார்கள். அவர்கள் மிகவும் அகங்காரம் அற்றவர்கள். தாங்கள் செய்வதையே மற்றவர்களும் செய்வார்கள் என்ற விழிப்புணர்வை அவர்களின் புத்தி சதா கொண்டிருக்கும். அவர்கள் எவரேனும் செய்த அவச்சேவையைப் பற்றிய செய்தியை ஒருபோதும் பரப்பமாட்டார்கள். அவர்கள் தங்களின் சொந்த சேவை செய்வதில் மும்முரமாக இருப்பார்கள். அவர்கள் எவரின் பலவீனங்களையும் பார்த்து, ஒருபோதும் தங்கள் புத்தியை சீரழித்துக் கொள்ள மாட்டார்கள்.பாடல்:
ஓ மனமே பொறுமையாக இரு! உனது சந்தோஷ நாட்கள் வரப்போகின்றன…ஓம் சாந்தி.
ஒரு லௌகீகத் தந்தை பொறுமையைக் கொடுப்பது போன்று, ஆன்மீகத் தந்தையும் இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளுக்குப் பொறுமையைக் கொடுக்கின்றார். எவராவது நோய்வாய்ப்பட்டால் அவருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுக் கூறப்படுகின்றது: நோயால் கஷ்டப்படும் நாட்கள் மாறி, சந்தோஷ நாட்கள் வரும். எல்லைக்கு உட்பட்ட தந்தை எல்லைக்கு உட்பட்ட பொறுமையையே உங்களுக்கு கொடுக்கிறார். எல்லையற்ற தந்தையாகிய அவரோ குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற பொறுமையைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, உங்களின் சந்தோஷ நாட்கள் இப்பொழுது வரப்போகின்றன. இன்னமும் ஒருசில நாட்களே எஞ்சியுள்ளன. இப்போது தந்தையின் நினைவில் நிலைத்திருந்து ஏனையோருக்கும் கற்பியுங்கள். நீங்கள் சிவசக்திகள். சிவபாபாவின் சக்தி சேனை மீண்டும் ஒருமுறை உருவாக்கப்படுகிறது. கோபியரான இந்த சகோதரர்களும் ஆத்மாக்களே. அவர்கள் அனைவரும் சிவனிடம் இருந்தே சக்தியைப் பெறுகிறார்கள். நீங்களும் சக்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இதில் கருணை அல்லது ஆசீர்வாதம் என்ற கேள்விக்கு இடமில்லை. நினைவில் நிலைத்திருந்து தொடர்ந்தும் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழியும். அத்துடன் நீங்கள் தொடர்ந்தும் சக்திசாலிகள் ஆகுவீர்கள். பழைய உலகைப் புதியதாக மாற்றும் அளவிற்குச் சிவனின் சக்தி சேனை சக்திவாய்ந்ததாக இருந்தது. நீங்கள் யோக சக்தியால் இப்பழைய உலகைப் புதியதாக ஆக்குகிறீர்கள் என்பதை அறிவீர்கள். “கடவுளான அல்லாவை நினைவு செய்யுங்கள்!” என்று மக்கள் தங்கள் விரலை மேல் நோக்கி சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கல் மலைகள் அதாவது பழைய உலகம் தந்தையின் நினைவின் மூலம் மாற்றப்படும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் இப்போது தேவதைகளின் உலகை ஸ்தாபிக்கிறோம். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: கண்காட்சிகளில் அதிகளவு சேவை செய்யுங்கள். முயற்சி செய்யுங்கள்! உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அமர்ந்திருந்து கற்றிடுங்கள். இது மிகவும் இலகுவானது. குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் எல்லா வகையான கற்பித்தல்களையும் பெறுகிறீர்கள். ஒவ்வொருவரின் செயல்களுக்கும் கணக்கு உள்ளது. குமாரிகளின் செயல்கள் நல்லவை. திருமணமானவர்கள் கூறுகிறார்கள்: இந்நேரத்தில் நான் ஒரு குமாரியாக இருந்திருந்தால், இந்தச் சங்கிலிகள்(பந்தனங்கள்) அனைத்தில் இருந்தும் விடுபட்ட சுதந்திரப் பறவையாக இருந்திருப்பேன். குமாரிகள் சுதந்திரப் பறவைகள். எவ்வாறாயினும் அவர்கள் தீய சகவாசத்தைக் கொண்டிருக்கும்போது பாதிப்படைகிறார்கள். திருமணமான பெண்ணுக்கு கணவன், குழந்தைகள் போன்ற பல சங்கிலிகள் உள்ளன. வழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் என்ற பந்தனங்களும் பல உள்ளன. குமாரிகளுக்கு எவ்வித பந்தனமும் இல்லை. பம்பாயில் குமாரிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் எங்களின் மாநிலத்தைப் பார்த்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் தங்களின் சொந்த மாநிலத்திற்காக பெருமளவு முயற்சி செய்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: எங்கள் குஜராத், எங்கள் உத்தர பிரதேசம். நீங்கள் இப்போது உங்கள் சுயராச்சிய உரிமையைப் பெறுகிறீர்கள். “நான் இன்ன மாநிலத்தைச் சேர்ந்த இன்னார்” என்ற உணர்வே இருக்கக் கூடாது. நீங்கள் எவர் மீதும் பொறாமைப்படக் கூடாது. எவரது பலவீனத்தைக் கண்டும் நீங்கள் உங்கள் புத்தியை சீரழித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் எத்தனை ஆத்மாக்களுக்கு, அதாவது சகோதர, சகோதரிகளுக்கு சந்தோஷப் பாதையைக் காட்டியிருக்கின்றீர்கள் என உங்களையே பாருங்கள். நீங்கள் எவருக்கும் பாதையைக் காட்டி இருக்காவிட்டால், உங்களால் எந்தப் பயனும் இல்லை. அத்துடன் உங்களால் பாபாவின் இதயத்தில் இடம்பிடிக்கவும் முடியாது. நீங்கள் பாப்தாதாவின் இதயத்தில் அமராவிட்டால், உங்களால் சிம்மாசனத்திலும் (எதிர்காலத்தில்) அமரமுடியாது. சில குழந்தைகளுக்குச் சேவை செய்வதில் அதிக ஆர்வம் இருப்பதை பாபா அறிவார். அவர்களிடம் சரீர அகங்காரம் சிறிதளவேனும் இல்லை. மற்றவர்கள் அதிக அகங்காரம் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் தந்தைக்குத்தான் உதவி செய்கின்றோமே அன்றி, தமக்கல்ல என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் ஒருபோதும் எவரது பலவீனத்தையும் பார்க்கக்கூடாது. “இன்னார் இன்னார் இவ்வாறானவர், அவர் இன்ன இன்னதைச் செய்கிறார்” என்று பிறர் செய்த அவச்சேவையைப் பற்றிய செய்தியைப் பரப்புகின்ற சில கெட்டிக்காரக் குழந்தைகள் தற்போது உள்ளனர். “இன்ன இன்னார் இவ்வாறு செய்கிறார், அவர் இப்படிப்பட்டவர்!” நீங்கள் உங்கள் சொந்த சேவையைச் செய்யுங்கள். உங்களைச் சேவையில் மும்முரமாக்கிக் கொள்வதே பிராமணர்களாகிய உங்கள் கடமை ஆகும். தந்தை இங்கிருந்து செய்திகள் அனைத்தையும் பெற்றுக் கொள்கிறார். தந்தை ஒவ்வொருவரின் ஸ்திதியையும் அறிவார். அவர்கள் செய்கின்ற சேவையைப் பார்த்து அவர்களைப் புகழவும் செய்கிறார். சேவை செய்வதில் குழந்தைகளாகிய நீங்கள் உற்சாகத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஆன்மீக சேவை செய்வதன் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு நன்மை பயக்க வேண்டும். பிறவிபிறவியாக நீங்கள் அந்த வியாபாரம் போன்றவற்றையே செய்து கொண்டிருந்தீர்கள். அரிதாக ஒரு சில வியாபாரிகளே இந்த வியாபாரத்தைச் செய்கின்றனர். சேவை செய்வதற்கு மிக இலகுவான வழியொன்றைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எவரையும், ஒருபோதும் இகழாதீர்கள்! பலர் இவ்வாறு செய்கிறார்கள். மாயை நல்ல மகராத்திகளின் மூக்கைக்கூடப் பிடித்து விடுகிறாள். நீங்கள் பாபாவை நினைவு செய்யாவிட்டால், மாயை உங்களைப் பிடித்துக் கொள்வாள். தந்தை கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண சரீரத்தினுள் பிரவேசிப்பதால், அவர்களால் என்னை இனங்கான முடியாமல் உள்ளது. சிலர் பாபாவிற்கே ஆலோசனை கூறுகிறார்கள்: பாபா, நீங்கள் இன்ன இன்னதைச் செய்யவேண்டும்! பாபா ஒரு சிறிய விடயத்தைக் கூறிவிட்டாலும் அவர்கள் துரோகிகள் ஆகுமளவிற்கு, அவர்களின் ஸ்திதி உள்ளது. அவர்கள் தங்கள் சொந்தக் கட்டளைகளையே பாபாவிடம் கூறுகிறார்கள். சிறு மஞ்சள் துண்டைக் கண்ட எலி, தான் ஒரு பெரிய பலசரக்கு வியாபாரி என்று எண்ணியதாகக் கூறப்படுகிறது. தாங்கள் அவச்சேவை செய்வதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. பலர் தொடர்ந்தும் தவறுகளைச் செய்கிறார்கள். அவர்களின் ஸ்திதி சிலவேளைகளில் மேன்மையானதாகவும், சிலவேளைகளில் தாழ்ந்ததாகவும் உள்ளது. இது எல்லா நேரங்களிலும் தொடர்ந்திருக்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த ஸ்திதியைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நேர்மையான குழந்தைகள் தங்களின் ஸ்திதியைப் பற்றி உடனுக்குடன் பாபாவிடம் கூறிவிடுகிறார்கள். சிலர் தங்கள் தவறுகளை மறைத்து விடுகிறார்கள். நீங்கள் இதனையிட்டு அகங்காரம் அற்றவர்களாக இருக்க வேண்டும். சேவையை அதிகரிப்பதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். “நான் எதைச் செய்கின்றேனோ, அதைப் பார்ப்பவர்களும் அவ்வாறே செய்வார்கள்” என்ற விழிப்புணர்வை எப்போதும் கொண்டிருங்கள். நான் எவரையாவது இகழ்ந்தால், மற்றவர்களும் அவ்வாறு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பலர் இதைப்பற்றிச் சிந்திப்பதுகூட இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் சொந்த சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிடில், நீங்கள் பெருமளவில் வருந்த நேரிடும். சிலர் எதிரிகளாகவும் ஆகுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது சூத்திரர்களில் இருந்து பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்கள் ஆக்கப்பட்டுள்ளீர்கள். ஐந்து விகாரங்களையும் கொண்டவர்கள் அசுர சமுதாயத்தவர்கள் எனப்படுகின்றனர். நீங்கள் தேவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் தேவர்கள் ஆகுவதற்காக ஐந்து விகாரங்களையும் வெற்றி கொள்கின்றீர்கள். தேவர்கள் இங்கு இருப்பதில்லை. தேவர்கள் சத்திய யுகத்திலேயே உள்ளனர். நீங்கள் இப்பொழுது தேவ சமுதாயத்தவர்கள் ஆகுகின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது மற்றவர்களுக்கு விளக்குவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் கண்காட்சிகளில் விளங்கப்படுத்துங்கள். கண்காட்சிகளிலும் ஒன்றுகூடல்களிலும் ஒவ்வொருவரது நாடித்துடிப்பையும் உங்களால் உணர முடியும். நீங்கள் புரொஜெக்டரைப் பயன்படுத்தி, எவருக்கும் விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் தனிப்பட்ட முறையில் நேருக்கு நேராக விளங்கப்படுத்தும்போதே மக்களால் விளங்கிக் கொள்ள முடியும். கண்காட்சிகளும், ஒன்றுகூடல்களும் மிகவும் சிறந்தவை. நீங்கள் சுவரொட்டிகளில் எழுதியும் வைத்திருக்கலாம். கண்காட்சிகளையும் ஒன்றுகூடல்களையும் ஒழுங்கு செய்வதில் நீங்கள் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் தினசரி ஒழுங்காகக் கற்கும்போது உங்கள் போதை அதிகரிக்கும். நீங்கள் பந்தனத்தில் இருந்தால், வீட்டில் இருந்தவாறே தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் அழியும். வீட்டில் இருக்கும்போதும் தந்தையை நினைவு செய்வது நல்லது. எவ்வாறாயினும் பாபாவை நினைவு செய்வது குழந்தைகளுக்கு சிரமமான விடயமாகி விட்டது. 21 பிறவிகளுக்கு யாரிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்களோ அந்தத் தந்தையை நீங்கள் நினைவு செய்வதில்லை. மிக நன்றாகச் சொற்பொழிவு ஆற்றுகின்ற மகாரத்திகள்கூட தந்தையை நினைவு செய்வதில்லை. அவர்கள் அதிகாலையில் விழித்தெழுவதும் இல்லை. அவ்வாறு எழுந்து விட்டாலும்கூட, அவர்கள் தூங்கி விழுகிறார்கள். அதிகாலை வேளையே நினைவு செய்வதற்கு மிகச் சிறந்த நேரமாகும். பக்திமார்க்கத்திலும்கூட, மக்கள் அதிகாலையில் எழுந்து நினைவு செய்வதில் தங்களை மும்முரமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். எவ்வாறாயினும் அவர்களின் ஸ்திதியோ இறங்கும் ஸ்திதி ஆகும். இங்கோ இது ஏறுகின்ற விடயம் ஆகும். மாயை பல தடைகளை ஏற்படுத்துகிறாள்! நீங்கள் அதிகாலையில் எழுந்து தந்தையை நினைவு செய்யாவிட்டால் உங்களால் எவ்வாறு இந்த ஞானத்தைக் கிரகிக்க முடியும்? உங்கள் பாவங்கள் எவ்வாறு அழியும்? எவ்வாறாயினும், முரளி வகுப்பு நடாத்துவதைப் பொறுத்தவரை, சிறு குழந்தைகள் கூட அதனைக் கற்று ஏனையோருக்கு விளங்கப்படுத்த ஆரம்பிக்கலாம். இக்கல்வி பெரியவர்களுக்கானது. இது பெரியதொரு பல்கலைக்கழகம் ஆகும். தங்களுக்கு கற்பிப்பவர் யார் என்ற போதை சில குழந்தைகளிடம் இருப்பதில்லை. மாயை ஒருவரை ஏமாற்றும்போது அவரையே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்காது, தொடர்ந்தும் உங்களின் சேவையைச் செய்யுங்கள். தந்தை தொடர்ந்தும் அனைத்துச் செய்திகளையும் பெறுகின்றார். சிலர் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுவதால் “இவர் இதைச் செய்கிறார், அவர் அதைச் செய்கிறார்” என்று நினைக்கிறார்கள். மற்றவர்களை இகழ்வதில் அவர்கள் தங்கள் நேரத்தை வீணாக்குகிறார்கள். சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதே உங்களின் கடமையாகும். ஏதாவது நடந்தால், தந்தைக்கு சமிக்ஞை கொடுங்கள், அவ்வளவுதான். மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இரவு பகலாக சேவை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். இதுவே உங்களின் தொழில் ஆகும். தினமும் கண்காட்சிகளில் விளங்கப்படுத்துங்கள்: இவர் சிவபாபா, இவர் பிரஜாபிதா பிரம்மா. பிரஜாபிதா பிரம்மா முன்னைய கல்பத்திலும் நினைவுகூரப்பட்டுள்ளார். “இந்த மனித உலகம் பிரஜாபிதா பிரம்மா மூலமே உருவாக்கப்படுகிறது” மனிதர்கள் இருக்கவே மாட்டார்கள் என்றில்லை! கடவுளே மனித உலகைப் படைக்கின்றார், அதாவது அவர் முட்களை மலர்கள் ஆக்குகிறார். அவர் பிரம்மாவின் மூலம், உலகைப் படைத்தாலும், அதை அவர் மேலே இருந்தவாறு செய்வதில்லை. பிரம்மா இங்கேயே இருக்க வேண்டும். இது மிகத்தெளிவாக உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது! தந்தை கூறுகிறார்: நான் இவரின் பல பிறவிகளின் இறுதிப்பிறவியில், இவரினுள் பிரவேசித்து மனிதர்களை தேவர்களாக மாற்றுகிறேன். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் கடினமாக இயங்கி, இரவுபகலாக சேவை செய்யவேண்டும். உங்கள் தொழிலில் இருந்து சிறிது நேரத்தை ஒதுக்கி, இந்தச் சேவை செய்வதில் ஈடுபடுங்கள். உங்களுக்கு, நேரமில்லை என்று நீங்கள் கூறக்கூடாது. நீங்கள் நோய்வாய்ப்பட்டால், உங்களுக்கு நேரமில்லை எனக் கூறுவீர்களா? நீங்கள் முயற்சி செய்தாக வேண்டும். தூண்டுதலினால் எதையுமே செய்ய முடியாது. கடவுளால்கூட தூண்டுதலினால் எதையும் செய்ய முடியாதபோது, ஏனையவர்களால் எவ்வாறு செய்யமுடியும்? கடவுளால் செய்ய முடியாததென எதுவுமே இல்லை என்றும் அவரால் இறந்தவரைக்கூட உயிர்ப்பிக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஓ! ஆனால் நீங்களோ கடவுளிடம் கூறுகிறீர்கள்: தூய்மையாக்குபவரே வந்து, தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! வேறு எதையும் நீங்கள் கூறுவதில்லை! வந்து, இறந்தவருக்கு உயிர் கொடுங்கள்! என நீங்கள் கூறுவதில்லை. அவரே தூய்மைக்குபவர். பாரதம் தூய்மையாக இருந்தது. தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வெரு கல்பத்திலும் வந்து உங்களைத் தூய்மை ஆக்குகிறேன். பின்னர் மாயை வந்து உங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகிறாள். மீண்டும் ஒருமுறை உங்களைத் தூய்மையாக்கவே நான் இப்போது வந்திருக்கிறேன். நான் உங்களுக்கு மிகவும் இலகுவான விடயங்களையே கூறுகிறேன்! மூலிகை வைத்தியர்கள் மூலிகைகளைக் கொடுத்து, கடுமையான நோய்களைக்கூட, சுகப்படுத்துவதால் அவர்கள் புகழப்படுகிறார்கள். ஒருவருக்கு குழந்தை கிடைத்தாலோ அல்லது அவர் செல்வத்தைப் பெற்றுக் கொண்டாலோ, தனது குருவினால் தான் ஆசீர்வதிக்கப்பட்டதாக அவர் கூறுவார். ஓகே, குழந்தை மரணித்து விட்டால், அவர் கூறுவார்: அதுவே தலைவிதி! குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்கள் யாவற்றையும் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். சந்நியாசிகள் தூய்மை ஆகுவதால், அவர்களுக்கு மரியாதை வழங்கப்படுகின்றது. அவர்கள் ஹத்தயோகிகள். அவர்களால் இராஜ யோகம் கற்பிக்க முடியாது. அவர்கள் சந்நியாசிகள், மக்களோ இல்லறத்தவர்கள். ஆகையால் “நாங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்கள்” என்று அவர்களால் எவ்வாறு கூறமுடியும்? தந்தை கூறுகிறார்: குழந்தைகள் நீங்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மன்மனாபவ! என்னை நினைவு செய்தால், நீங்கள் தூய்மையாவதுடன் என்னுடன் வீடு திரும்பவும் முடியும். நான் என்றும் தூய்மையானவர். மனிதர்கள் உங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகிறார்கள். பின்னர் தந்தை வந்து உங்களைத் தூய்மை ஆக்குகிறார். அவரே தூய்மை, அமைதி, சந்தோஷம் ஆகியவற்றின் கடல் ஆவார். அவர் உங்களையும் அவ்வாறே ஆக்குகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் யோக சக்தியால் உங்களைத் தூய்மை ஆக்குகிறீர்கள். நீங்கள் முதற்தரமான சரீரத்தைப் பெறுவீர்கள் என்பதை அறிவீர்கள். மனிதர்கள் நடைமுறையில் தேவர்களாக மாற்றப்பட வேண்டும். அதற்காக நீங்கள் தேவர்களின் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்பதல்ல, உங்கள் மீதும் நீங்கள் முழுக் கவனம் செலுத்த வேண்டும். சரீர உணர்வு இருக்கக்கூடாது. பாபா, உங்களிடம் இருந்து நான் எனது ஆஸ்தியை நிச்சயமாகப் பெறுவேன். நாங்கள் பாரதத்தை நிச்சயமாக மேன்மையடையச் செய்வோம் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். நம்பிக்கை உடையவர்கள் மாத்திரமே இவ்வாறு கூறுகிறார்கள். சிலர் கூறுகிறார்கள், “ஒரு குறுகிய காலத்தில் எவ்வாறு இவை யாவற்றையும் செய்து முடிப்பது?” உண்மையில் உங்களுக்கு இவ்வாறான எந்த சந்தேகமும் ஒருபோதும் இருக்கக்கூடாது. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உங்கள் சேவையில் நீங்கள் பின்னடைவீர்கள். இன்னும் சிறிது காலமே எஞ்சியுள்ளது! இயன்றளவு முயற்சி செய்யுங்கள். பாருங்கள், யுத்தம் போன்றவற்றால் சிறிதளவு குழப்பம் ஏற்பட்டதுமே அனைவரும் முயற்சி செய்ய ஆரம்பிப்பார்கள். நீங்கள் முழுமையான நினைவில் நிலைத்து இருக்காவிட்டால் உங்களுக்குள் போராட வேண்டி இருப்பதுடன் உங்களால் நினைவையும் கொண்டிருக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அந்நேரத்தில் பல அனர்த்தங்கள் இடம்பெறும். இதனாலேயே தந்தை கூறுகிறார்: இயன்றவரை தொடர்ந்தும் பாய்ந்து செல்லுங்கள். இது ஆத்மாக்களின் ஓட்டப் பந்தயம் ஆகும். தந்தை உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார்! உங்கள் இலக்கை, அதாவது தந்தையின் வீட்டைச் சென்றடையுங்கள். அதன் பின்னர், புதிய உலகுக்குக் கீழிறங்கி வாருங்கள். இது மிகச் சிறந்த ஓட்டப்பந்தயம் ஆகும். தந்தை கூறுகிறார்: என்னைத் தொடுங்கள், அதாவது, அசரீரி உலகுக்குச் செல்லுங்கள், பின்னர் மீண்டும் இங்கே கீழிறங்கி வாருங்கள். யோகத்தில் ஆழ்ந்திருப்பவர்களே அனைவருக்கும் முதலில் வருவார்கள். நீங்கள் முக்தி தாமம் செல்ல விரும்புகிறீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்தால் உங்களால் அங்கு செல்ல முடியும்! அனைவரும் முக்திதாமத்தை விரும்புகின்றனர். பின்னர் நீங்கள் உங்கள் பாகத்தை நடிக்க கீழிறங்கி வருவீர்கள். எவருமே அநாதியான முக்தியைப் பெறுவதில்லை. “அநாதியான முக்தி” என்ற வார்த்தை, கடவுளின் வரலாற்றிலும் புவியியலிலும் இடம்பெறுவதில்லை. நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன் முக்தியைப் பெறுகிறீர்கள். ஏனைய அனைவரும் முக்தி அடைகிறார்கள். அனைவரும் இராவண இராச்சியத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். முயற்சி செய்பவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிக இனிமையானவர்கள் ஆகவேண்டும். உங்களின் சுபாவம் மிகவும் இனிமையானதாக இருக்க வேண்டும். நீங்கள் கோபப்படக் கூடாது. துர்வாச முனிவர் நினைவு கூரப்படுகின்றார். இராஜ ரிஷிகளிலும் அவ்வாறான சிலர் உள்ளனர். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றும், அவ்வாறு செய்வதால் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்றும் எப்பொழுதும் உங்கள் இதயத்தில் கை வைத்துப் பாருங்கள். நீங்கள் சேவை செய்யாமலும், மற்றவர்களை உங்களைப் போன்று ஆக்காமலும் இருந்தால் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள்? நீங்கள் சிறிதளவுடன் சந்தோஷம் அடைந்துவிடக் கூடாது. தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு முழு இராச்சிய உரிமையையும் கொடுக்கவே வந்துள்ளேன். எனவே, தைரியசாலிகளாக இருந்து, நடைமுறையில் செய்து காட்டுங்கள். வெறுமனே பேசிக் கொண்டிருப்பதால் இது சாத்தியமாகாது. தந்தையின் சேவைக்காக உங்கள் எலும்புகளையும் நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். சிலர் அனைத்தையும் செய்கின்ற போதிலும், சிலவேளைகளில் சரீர உணர்வு உடையவர்களாகி, போதையடைந்து, பின்னர் வீழ்ந்து விடுகிறார்கள். மாயை எந்த விதத்திலும் சக்தி குறைந்தவள் அல்ல! நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றாத போது, மாயை உங்களைத் தாக்குவதால், நீங்கள் தந்தையை விவாகரத்து செய்கிறீர்கள். தந்தை உங்களை சந்தோஷ உலகிற்கு அதிபதிகள் ஆக்குகிறார். எனவே உங்கள் மீது நீங்கள் கருணை காட்ட வேண்டும். தந்தை உங்களுக்கு மிகவும் எளிமையான ஆலோசனைகளைக் கொடுக்கிறார். மாயையின் பல புயல்கள் வரும். எனினும் நீங்கள் மகாவீரர்கள் ஆக வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சேவை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்து, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். எவரினதும் அவச்சேவை பற்றிய செய்திகளை ஒருபோதும் பரப்பாதீர்கள். மற்றவர்களைப் பற்றிச் சிந்திப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.2. நேர்மையானவர்களாகவும், அகங்காரம் அற்றவர்களாகவும் இருந்து, சேவையை அதிகரியுங்கள். அதிகாலையில் எழுந்திருந்து பெருமளவு அன்புடன் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் செயல்கள் உங்கள் வார்த்தைகளுக்குச் சமனானவையாக இருக்க வேண்டும்.
ஆசீர்வாதம்:
மன்மனாபவ என்ற ஸ்திதியால் ஒவ்வொருவரின் மனதின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதனால் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.மன்மனாபவ என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் குழந்தைகளால் மற்றவர்களின் மனங்களின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும். அவர்களின் வார்த்தைகள் எத்தகையதாக இருந்தாலும் அவர்களின் உணர்வுகளும் நோக்கங்களும் என்னவென்று புரிந்து கொள்ளும் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் மனதிலும் உள்ள உணர்வுகளைப் புரிந்து கொள்வதன் மூலம் உங்களால் பேறுகளுக்காக அவர்களுக்குள் உள்ள தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இதன் மூலம், அவர்கள் சதா முயற்சியாளர்கள் ஆகுவார்கள். பின்னர், குறுகிய காலத்திற்குள், சேவையில் மகத்தான வெற்றியை நீங்கள் காண்பீர்கள். ஒரு முயற்சியாளராக இருப்பதற்குப் பதிலாக, நீங்கள் வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.
சுலோகம்:
நித்திரைக்குச் செல்லும்போது, தந்தையிடம் அனைத்தையும் கையளித்துவிட்டு, வெறுமை ஆகுங்கள். உங்களுக்குள் எந்தவிதமான வீணான அல்லது விகாரமான கனவுகள் தோன்றாது.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
ஆத்மாக்களான நீங்கள் உங்களின் சரீரங்களையும் சடப்பொருளையும் தூய்மை ஆக்கும் வகையில் உங்களின் பிராமண வாழ்க்கையில் நீங்கள் மிகவும் தூய்மை ஆகுகிறீர்கள். ஆகவே, உங்களின் சரீரமும் தூய்மை ஆகுகிறது, ஆத்மாவான நீங்களும் தூய்மை ஆகுகிறீர்கள். முழுமையான தூய்மை என்றால், தூய்மை இன்மையின் சிறிதளவு சுவடேனும் இருக்கக்கூடாது. இது ஏனென்றால், நீங்கள் தூய்மை ஆகும் அளவிற்கு, பிராமண வாழ்க்கையின் ஆளுமையைக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்குள் ஏதாவது தூய்மை குறைவாக இருந்தால், இந்த ஆளுமையும் குறைவாகவே இருக்கும். இந்தத் தூய்மை என்ற ஆளுமை இலகுவாக நீங்கள் செய்யும் சேவையில் வெற்றி பெறச் செய்கிறது.